வெள்ளி, 23 ஜூலை, 2010

என்ன என்ன வார்த்தைகளோ? எண்காலி 03

டிர்ரிங்........ டி ர்ர்ர் ர்ரிங் ....

"ஹலோ இந்தப்பக்கம் கோடீஸ்வரன் கோணச்சாமி. அந்தப்பக்கம் யாரு?"

"உம்? கேடி கேனையன்! கோடீஸ்வரன் கோணச்சாமியா?  - இது  யாரு கொடுத்த பட்டம்டா?"

"பட்டமா? போடா போடா புண்ணாக்கு, போடாத தப்புக் கணக்கு! நான் இப்போ மெய்யாலுமே கோடீஸ்வரன். தெரியுமா? விளம்பரம் எங்கள் ப்ளாக் ல போட்டுட்டாங்கடா. பார்த்த உடனேயே எல்லா பத்திரிக்கை ஆபீஸ்லேயிருந்தும் ஏகப்பட்ட கால். எல்லோரும் இந்த விளம்பரத்தை இலவசமாகவே போடுகிறோம், என்கிறார்கள்"

" நீ என்ன சொன்னே? "

" பார்ட்னருடன் கலந்தாலோசித்து பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டேன்."

" வெரி குட் - இப்ப என்னுடைய ஆலோசனை தேவையா?"

"உன்னுடைய ஆலோசனை எவனுக்கு வேணும்? நான் என்னுடைய பார்ட்னரை கலந்தாலோசித்து அப்பவே ஓ கே சொல்லிட்டேன்."

"யாருடா அந்த பார்ட்னர்?"

"பால்."

"அடப்பாவி!"

"அடப்பாவி இல்லேடா, அஷ்ட காலி, என் அதிர்ஷ்ட காலி."

" டேய் பால் ஜோசியம் பற்றி ஐடியா நான்தானே கொடுத்தேன்? விளம்பர ஐடியா வரையிலும்  நான்தானே உனக்குப் பார்ட்னர்? அதற்கு எனக்கு ஃபீஸ் எதுவும் கிடையாதா?"

"எவ்வளவு வேண்டும்?"

" ஒரு கோடி."

" இன்னும் அரை மணி நேரத்தில் குரியர்ல உனக்கு செக் அனுப்புகிறேன்."

" வாவ்! ஒரு கோடி ரூபாய்க்கா?"

" இல்லை, 10000000 - 900 = 9999100 ரூபாய்க்கு. நீ இந்த பதிவில் இதுவரை ஒன்பது கேள்வி கேட்டிருக்கிறாய். அது எல்லாவற்றிற்கும் நான் பதில் சொல்லிவிட்டேன். ஒவ்வொரு கேள்விக்கும் நூறு ரூபாய் கழித்தாயிற்று."

'டமால்!'

"ஹல்லோ? ஹல்லோ ?? அடப்பாவி! கொஞ்ச நேரம் விளையாடிப் பார்த்தேன், அதுக்குள்ள மயக்கம் போட்டு விழுந்துவிட்டான் போலிருக்கே!"
* * * * *
பி ஏ வின் இடது கை மயக்கம் தெளிந்து எழுவதற்குள், பாலிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளையும், பதில்களையும், அதற்கு பால் சார்பில் போடப்பட்ட கட்டண விவரத்தையும் பார்ப்போம். சில கேள்விகள் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டன. அவைகளை முழுவதுமாக இங்கு வெளியிடவில்லை. (ஆனால் கட்டணம் எல்லோரிடமும் விடாமல் வசூல் செய்யப்பட்டது!)

? ஹல்லோ, நான் பால் கிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா?
! கேட்கலாம்!. (ரூ நூறு)

? இது ஜெர்மனியிலிருந்து வந்த எண்காலி, பாலா?
! ஆமாம்! (ரூ நூறு)

? நீங்க செய்யறது உங்களுக்கே நல்லா இருக்கா?
! இருக்கு! (ரூ நூறு)

? எனக்கு, சின்னவீடு அமையுமா?
! அமையும். அப்புறம் அதை இடிச்சு பெரிய வீடா கட்டிக்குவீங்க. (ரூ ஆயிரம்)

? ஊரைவிட்டு ஓடிப்போன என் (ஃபைனான்ஸ் கம்பெனி)  கணவர், எனக்குத் திரும்பக் கிடைப்பாரா?
! முதலில் போலீசுக்குக் கிடைக்கட்டும். (கட்டணம் இல்லை, இலவசம்)

? எங்க மாமா சொத்தை நான் எப்படி அடைவது?
! அவரைப் போன்றே ஸ்வீட் சாப்பிட்டு! (ரூபாய் நூறு)

? வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் நின்றால் எனக்கு வெற்றி கிட்டுமா?
! வெற்றி உங்களுடையதே, நிறைய தர்ம காரியங்கள் செய்தால்! (ரூபாய் ஒரு லட்சம்)

? தர்ம காரியங்கள் என்றால் என்ன? 
! வோட்டுக்கு துட்டு, ஆரத்தி தட்டிலே துட்டு, அடியாட்களுக்கு துட்டு, இப்படி நிறைய இருக்கு. (ரூபாய் ஐநூறு)

? ஐநூறு ரூபாயா? எப்படி?
! இந்த இரண்டு கேள்விகளுக்கும் சேர்த்து. (கட்டணம் - ஏற்கெனவே சொல்லியாயிற்று)

? நான் காதலிக்கும் பெண்ணை மணக்க முடியுமா?
! இதை அவர் காதலிக்கும் ஆளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். (இலவசம். ஐயோ பாவம்) 

? இரண்டாயிரத்துப் பன்னிரெண்டில் உலகம் அழியுமா?
! அழியாது. (ரூபாய் நூறு)

? அப்ப, எப்பத்தான் உலகம் அழியும்?
! உலகத்தை விடப் பெரிய அழி ரப்பர் உருவாகும் பொழுதுதான் உலகத்தை அழிக்கமுடியும்! (கட்டணம் கிடையாது. ஜோக் எழுத சந்தர்ப்பம் கொடுத்ததற்கு நன்றி)
********

பி ஏ வின் இடது கை மயக்கம் தெளிந்து எழுந்து, " ஹா! நான் எங்கே இருக்கிறேன்?"
ஃபோனில் (இன்னும் தொடர்பு துண்டிக்கப்படாததால்) ..."நீங்க எங்கே மயக்கம் போட்டு விழுந்தீங்களோ அதே இடத்தில்தான் ! (கட்டணம் ரூ நூறு)"
இதை கேட்ட பி ஏ இடது கை மீண்டும் மயக்கம் வருவது போல உணர்வுடன் .......
(தொடரும்) 

பின் குறிப்பு. சொப்பன சுந்தரி அனுப்பி வைத்த அவருடைய மேக் அப்புடன் உள்ள ஃபோட்டோ அடையாளம் தெரியாத இருவரால் கடத்தி செல்லப்பட்டுவிட்டது. கடத்த வந்தவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் Father என்றும், Lord என்றும் அழைத்துக்  கொண்டனர் என்று கேள்விப் பட்டோம்.  

15 கருத்துகள்:

  1. அநியாயத்துக்கு போட்டு தாக்குறீங்க:))

    பதிலளிநீக்கு
  2. நாங்களும் கேள்வி கேக்கலாமோ ?

    எவ்வளவு காசு குடுக்க வேணும் ?

    அட..ச்சீ.இப்போ ரெண்டு கேள்வியாப்போச்சோ ?

    பதிலளிநீக்கு
  3. நன்றி மீனாக்ஷி, மாதவன், வானம்பாடிகள்.
    ஹேமா - மூன்று கேள்விகள் ஆயிடுச்சு!

    பதிலளிநீக்கு
  4. எங்கள் ப்ளாக் வாசகர்களுக்குக் கட்டணம் கிடையாது. இலவச பதில்கள் அளிக்கப்படும்.

    பதிலளிநீக்கு
  5. // தமிழ் உதயம் said...
    பாதி புரியுது....//

    கேள்வியிலா அல்லது பதிலிலா?

    பதிலளிநீக்கு
  6. ? நான் காதலிக்கும் பெண்ணை மணக்க முடியுமா?
    ! இதை அவர் காதலிக்கும் ஆளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். (இலவசம். ஐயோ பாவம்)


    ...... அது! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... தொடர்ந்து கலக்குங்க!

    பதிலளிநீக்கு
  7. சொப்பன சுந்தரி திரும்பணுமுன்னா கேள்வி பதில் வருமானத்தில இருபத்து மூணு பர்சென்ட் தள்ளச் சொல்லுங்க... இதைப் பத்தி பால் கிட்டே கேள்வி கேட்டீங்கன்னா திரியும் சே தெரியும் சேதி.

    பதிலளிநீக்கு
  8. loordu feather! இட ஒதுக்கீடு முப்பத்து மூன்று சதவிகிதம் ஆகியாச்சே? இருபத்துமூன்று எல்லாம் சரிப்பட்டு வருமா?

    பதிலளிநீக்கு
  9. //எனக்கு, சின்னவீடு அமையுமா?
    ! அமையும். அப்புறம் அதை இடிச்சு பெரிய வீடா கட்டிக்குவீங்க. (ரூ ஆயிரம்)//

    ஹா ஹா ஹா.. சூப்பர் சூப்பரோ சூப்பர்.. :D :D

    எல்லா கேள்வி பதிலுமே சூப்பர்..
    சிரிச்சி முடியல.. இதுல தொடரும் வேறையா??

    சரி வந்தது வந்தேன்.. நா ரெண்டு கேள்வி கேட்டுட்டு போகவா..? இல்ல அதுக்கும் சார்ஜ் ஆகுமா??

    பதிலளிநீக்கு
  10. ஆனந்தி - மேலே ஏற்கெனவே சொல்லிவிட்டோமே - எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு கேள்விக்கு கட்டணம் கிடையாது.

    பதிலளிநீக்கு
  11. எல் கே : பதிவுலகம் என்றைக்குத் திருந்தும்?
    பால் : பதிவர்கள் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா சப்ஜெக்டிலும் பரிட்சைகள் முடிந்தவுடன் திருத்த ஆரம்பிக்கலாம்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!