Agada Vigadam 170710 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Agada Vigadam 170710 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.7.10

அகட விகடம் 170710

ஆத்தூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல். 
ஆத்தூரிலேயே நீர் இல்லை என்றால், மக்கள் 'ஆற்றாமை' கொள்வது சரிதான்.

கூட்டுப் படைகளை எதிர்கொள்ள தயார்: மாவோயிஸ்ட்.
இப்படி சொன்னால் கூட்டுப் படையினர் குழம்பிப் போய்விடுவார்களோ?


கம்ப்யூட்டரில் இந்திய ரூபாய் குறியீடு.
இந்திய ரூபாயின் மதிப்புக் குறையாமல் ஈடு செய்வதில் குறியாக இருந்தால் நலம்


புதுடில்லியில் டெங்கு காய்ச்சல்.
(வாசகர்கள் கமெண்டுக்கு )



விருதுநகர் கேந்திரிய வித்யாலயாவில் மாணவர்சேர்க்கை.
* மாணவர்கள் படிப்போடு டூ விடாமல், சேர்க்கையாக இருந்தால் சரி. 
** சேர்க்கை சரியில்லை என்று பிறகு பெற்றோர் சொல்லாமல் இருக்கவேண்டும். 


ஊழல் வழக்கு: எச்.பி.சி.எல்., இயக்குநர் கைது.
மற்றவர்கள் தப்பிவிட்டார்களோ? 

வான்வழி தாக்குதலில்: 17 தாலிபான்கள் பலி.
தாலிபான்களுக்கு பலி கொடுத்துதானே பழக்கம்? 


மதுரை விமான நிலைய புதிய டெர்மினல்15 நாளில் திறப்பு.
(வாசகர்கள் கமெண்டுக்கு )


குப்பையில் தபால்கள் : மக்கள் அதிர்ச்சி.
* junk mail என்று தபால்காரர் நினைத்துவிட்டார் போலிருக்கு. 
** பழிக்குப் பழி என்று மக்கள், தபால் பெட்டியில் குப்பை போடாமல் இருந்தால் சரி. 


சரக்கு அடித்துவிட்டு, லாரியை தண்டவாளத்தில் ஓட்டி சென்ற லாரி டிரைவர்! 
அப்போ ஒரு சரக்கு ரயில் வந்து லாரியில் மோதிடிச்சோ? 


வாக்காளர் பட்டியல் திருத்தம் : நரேஷ்குப்தா தகவல். 
என்ன மார்க்?  அது பற்றிய தகவல் உண்டா?


+2 போலி சான்றிதழ் தயாரிக்க ரூபாய் பத்தாயிரம்.
அடேங்கப்பா - படிச்சு மார்க் வாங்கறது சிக்கனமா இருக்கும் போலிருக்கு. 

ஐநூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மரத்திற்கு, தொல்காப்பியர் பெயர்.
தொல்காப்பியர் காலம் இரண்டாயிரத்து எண்ணூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பு. (May 1, 865 BC says Wiki) நமக்கு ரொம்ப தெரிஞ்ச தமிழ் உரை, 'கோனார் தமிழ் உரை' என்பதால், அவர் பெயரை வைத்திருக்கலாம் என்கிறார் எஸ் எஸ் எல் சி பரீட்சை இன்னும் எழுதிக் கொண்டிருக்கும் என் தாத்தா. 


அணையை பார்வையிடச் சென்ற முன்னாள் முதல்வர் கைது.
அவரே 'அன்னை'யை பார்க்க சென்றிருந்தால், வரவேற்பு கிடைத்திருக்கும். 


நித்யானந்தா பக்தர்கள் பெங்களூருக்கு பாத யாத்திரை.
மாளவிகா போன்ற பக்தைகளை தரிசனம் செய்யவோ?


போலி என்கவுண்டர் வழக்கில் 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை.
12 பேரும் ஏதாவது போலி டாக்டரிடம் போலி சான்றிதழ் பெற்று, Poly கிளினிக்ல அட்மிட் ஆகி தப்பிப்பார்களாகுக!


மன வேதனையை விலக்க படம் பார்த்தார் எடியூரப்பா.
சுறா பார்த்திருந்தா மன வேதனை இன்னும் அதிகரித்திருக்கும். 


கபில் தந்த உலகக் கோப்பை! ஸ்ரீக்காந்த் பெருமிதம்.
கபில் தந்ததா? International Cricket Council தந்தது இல்லையா?