புதன், 1 டிசம்பர், 2010

அமுதசுரபி தீபாவளி மலர்






மாட்டுக்கார வேலன் படப் பிடிப்பில் கூட்டத்தில் சிக்கித் தடுமாறிய ஒரு வயதான பெண்மணியை எம் ஜி ஆர் தன்னருகே கூட்டி வரச் செய்து யார் என்ன என்று விசாரித்தாராம். கொளுத்தும் வெய்யிலில் 'யார்கூட வந்தீங்க? பிள்ளைங்க கூடவா' என்று கேட்க 'இல்லை' என்று மறுத்த கிழவி தனக்கு ரெண்டு மகன்கள் என்றாராம். எங்கே இருக்கிறார்கள் என்று எம் ஜி ஆர் கேட்க, ஒருவன் பட்டாளத்துலயும், இன்னொருவன் சினிமாவிலும் இருப்பதாகக் கூற யார், எங்கே இருக்கிறான் உன் மகன், சொல்லு கூடி வரச் செய்கிறேன் என்று பரபரத்த எம் ஜி ஆரைக் கை காட்டிய கிழவி 'நீதான் ராசா' என்றாராம். லா ரா சப்தரிஷி எம் ஜி ஆர் பற்றி எழுதிய பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது. இன்னொரு ரசிகர் எம் ஜி ஆர் இறந்து போன நாள் முதல் பேசுவதையே நிறுத்தி விட்டாராம்.

அந்தக் காலத்தில் மிக அதிகம் சம்பளம் வாங்கிய கலைஞர் கே பி எஸ். ஒரு லட்ச ரூபாய். கிட்டப்பா காலமானவுடன் ஒதுங்கி இருந்தவரை நந்தனார் சரித்திரத்தில் நடிக்கவைக்க அழைத்தபோது அதைத் தவிர்க்க எண்ணி அவர் சொன்ன சம்பளம் அது. பின்னர் சிறப்பாகப் பாடி நடித்துக் கொடுத்தாராம். பாடல்கள் மிக மிக அருமையாக வந்திருந்தனவாம். வயித்தெரிச்சல் என்னவென்றால் அந்தப் படம் ரிலீசாகும் முன்பு தீக்கிரையாகி யாருக்கும் உதவாமல் போனதுதான். யாரும் பார்க்காமல், யாரும் கேட்காமல் அத்தனை உழைப்பும் வீணாய்ப் போனதாம். எஸ் வி ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டுள்ளது இது. பிறகு எம் எம் தண்டபாணி தேசிகர் நடித்து வெளிவந்த நந்தனார் சரித்திரம் சூப்பர் ஹிட் ஆயிற்று!
              
கபாலீஸ்வரர் கோவில் பற்றிய அதிசயத் தகவல். 1500 களில் கடற்கரையில் இருந்த கோவிலை அப்படியே பெயர்த்தெடுத்து மயிலையில் மாறாமல் கட்டினார்களாம். நல்லி செட்டியாரின் தகவல் இது.    


புலவர் கீரனுடன் சேர்ந்து அ.ச.ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் பேசியது முதல், உத்திராட்ச மாலையில் சிலுவை கோர்த்து போட்டிருப்பது வரை (பழைய குன்றக் குடி அடிகளார் கொடுத்ததாம்) சாலமன் பாப்பையாவின் சுவாரஸ்யமான பேட்டி.

எதில் இதெல்லாம் என்கிறீர்களா?

டிவி இல்லாத கணினி இல்லாத முந்தைய தீபாவளிகளில் பதின்ம வயது நினைவுகளையும் பட்டாசுகளையும் பட்சணங்களையும் தவிர்த்து விசேஷம் ஒன்று உண்டென்றால் அது தீபாவளி மலர்கள்.

கலைமகள், அமுதசுரபி, ஆனந்த விகடன், கல்கி, என்று குண்டு குண்டாக தீபாவளி மலர்கள் வரும். குண்டூசி என்று கூட புத்தகம் வந்தது. அதற்கும் தீபாவளி மலர் வரும்.

இந்த தீபாவளி மலர்களுக்கு பொதுவான தன்மை உண்டு. வழு வழுப்பான அட்டை. அதில் பிரபல ஓவியர்களின் அழகிய படங்கள். உள்ளே விளம்பரப் பக்கங்களைத் தொடர்ந்து அல்லது இடையில் சுவாமி படங்கள், மகான்கள், மகாப் பெரியவரின் படம் மற்றும் அவரின் அமுத மொழிகள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஜோக்ஸ்....(குமுதம் தீபாவளி மலர், குனேகா சென்ட் வாசனையுடன் வந்த, வாச மலர்!)   

எந்தெந்த பிரபல எழுத்தாளர்களின் கதைகள் வந்திருக்கின்றன என்று பார்ப்பதில் ஓர் ஆர்வம் இருக்கும். உலகத் தொலைக் காட்சிகளில் முதன்முறையாக'க்கள் இல்லாத காலத்தில் இவைதான் அது போன்ற சுவாரஸ்யத்தைத் தந்தன. சுஜாதா, பாலகுமாரன் கதைகள் இருக்கிறதா என்று தேடிய அனுபவங்கள்...

இதெல்லாம் எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் சமீபத்தில் தீபாவளி மலர்கள் பார்ப்பதில்லை. வாங்கும் சுவாரஸ்யம் இருப்பதில்லை. ஒரே மாதிரி இருப்பதில் அலுப்பா அல்லது விரும்பும் எழுத்தாளர்கள் கதை படிக்கும் ஆர்வம் போய் விட்டதா, அல்லது டிவி கணினி சலனங்கள் காரணமா...இந்த நிலையில் ஓசியில் அமுதசுரபி தீபாவளி மலர் கிடைத்தது. பேப்பர்களில் தீபாவளி மலர்கள் விமர்சனம் படித்திருக்கிறேன்...எனக்குக் கிடைத்த அமுத சுரபி தீபாவளி மலர் பற்றி கொஞ்சம் சொல்லலாம் என்று.....! அட்டையில் பழம்பெரும் ஓவியர் கோபுலுவின் கைவண்ணம். 328 பக்கங்கள்.                                   
  
கொத்தமங்கலம் சுப்பு பற்றி, அவர் மகனின் நினைவோடை. தில்லானா மோகனாம்பாள் எழுதிய அனுபவம் பற்றியும்...          
சாவி, தி.ஜானகிராமன், கல்கி, கண்ணதாசன், பி.எஸ் ராமையா, லக்ஷ்மி பற்றியெல்லாம் நினைவோடைகள்...         
           
ராமதாசு, இல கணேசனின் கட்டுரைகள்...
               
இந்திரா பார்த்தசாரதி, ஜோதிர்லதா கிரிஜா, பா. ராகவன், வாஸந்தி போன்ற பிரபல எழுத்தாளர்கள் கதைகள்...
              
சிவாஜி பற்றி தயாரிப்பாளர் கிருஷ்ணஸ்வாமி...
                        
சுவாரஸ்யம்தான்.    
               

17 கருத்துகள்:

  1. செய்திகள் சுவாரஸ்யம்தான். மயிலாப்பூர் கோயில் கதை முன்பே கேட்டிருக்கிறேன். எம்.ஜி.ஆர். பக்தர்கள் கதை எப்போதுமே பரவசத்தில் ஆழ்த்துபவைதான். ;-)

    பதிலளிநீக்கு
  2. சுவாரசியமான பதிவு. எங்கள் வீட்டில் அப்பா வாங்கிய ஒரே வார இதழ் கல்கிதான். வேறு எந்த வார இதழும் வாங்கவே மாட்டார். விகடன், குமுதம் எல்லாம் ஓசியில்தான் படிப்போம். கல்கி தீபாவளி மலர் தவறாமல் வாங்குவார். நீங்கள் எழுதி இருப்பது போல் வழு வழு அட்டையுடன், வண்ண வண்ண படங்களில் வரும் தீபாவளி மலரை கருமமே கண்ணாயினார் என்று படித்து முடித்து விட்டுதான் மறு வேலை பார்ப்பேன். அப்பொழுதெல்லாம் படிப்பதில் அவ்வளவு சுவாரசியம் இருந்தது. சமீபத்தில் தீபாவளி மலர்களை பார்த்தே பல வருடம் ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  3. //முந்தைய தீபாவளிகளில் பதின்ம வயது நினைவுகளையும் பட்டாசுகளையும் பட்சணங்களையும் தவிர்த்து விசேஷம் ஒன்று உண்டென்றால் அது தீபாவளி மலர்கள்.//

    உண்மைதான் மலரும் நினைவுகளைக் கிளப்பி விட்டது பதிவு.

    அமுதசுரபி மலர் பற்றிய பகிர்வும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  4. இந்தக் காலத்தில் தீபாவளி மலரைப் பார்க்க முடிகிறதா(?). 'தீபாவளி மலர் பாத்தியா?' என்று ந்யூ காலனிப் பக்கம் கேட்டால் அதற்கு அர்த்தம் வேறே.

    அமுதசுரபி பத்திரிகை இன்னும் வருகிறதா?!! விவரங்களும் பதிவும் சுவை.

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு. MGR செய்தி அருமை. இதை hero worship என்று சொல்ல முடியவில்லை. இதுதான் தாய்மை!
    வாழ்க்கையில் miss பண்ணிய விஷயங்களில் தீபாவளி மலர்களையும் சேர்த்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. நானும் ` சுஜாதா` படிக்க மலர்கள் வாங்க பறப்பேன்..

    தகவல்கள் அனைத்தும் தேர்ந்தெடுத்த சுவாரஸ்யங்கள்..

    அமுதசுரபியின் சிறப்பு மலர் படிக்கும் ஆர்வம் வருகிறது...

    பதிலளிநீக்கு
  7. தீபாவளி மலர் பற்றிய நினைவுகள் அருமை. இப்போதும் நான் ஆனந்த விகடன் தீபாவளி மலர் வாங்குகிறேன். ஆனால் பழைய தீபாவளி மலர் போல் ஸ்வாரஸ்யமாக இல்லை.
    நீங்கள் scan செய்து போட்டிருக்கும் பக்கங்களைப் பெரிதுபடுத்தும் option இருந்தால் அந்த விவரங்களைப் படிக்கலாம்

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. சுவாரசியமான பகிர்வு. நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  10. எத்தனை பெரிய நல்ல மனிதர்கள்.
    வாசிக்க சுவாரஸ்யமா இருக்கு !

    பதிலளிநீக்கு
  11. ஒரு தீபாவளி மலரை காணும் போது, அதன் பின்னே உள்ள, தயாரிப்பதறாகான உழைப்பு பிரமிக்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
  12. //ஒரு தீபாவளி மலரை காணும் போது, அதன் பின்னே உள்ள, தயாரிப்பதறாகான உழைப்பு பிரமிக்க வைக்கும்.//

    Those days are all gone - Now it is all cut and paste with a lot of discount coupons for all and sundry items and many a friend of mine reads all those coupons better than the articles and stories presented.

    பதிலளிநீக்கு
  13. ரெண்டு நாளைக்கு முன்னர், தீபாவளிமலரை வைத்து ஏதாவது பதிவு போடலாமேனு நெனைச்சேன்.. நீங்க செஞ்சிட்டீங்க..
    "frequency matching"

    பதிலளிநீக்கு
  14. /இதெல்லாம் எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் சமீபத்தில் தீபாவளி மலர்கள் பார்ப்பதில்லை. வாங்கும் சுவாரஸ்யம் இருப்பதில்லை. ஒரே மாதிரி இருப்பதில் அலுப்பா அல்லது விரும்பும் எழுத்தாளர்கள் கதை படிக்கும் ஆர்வம் போய் விட்டதா,/

    ஹூம். நீங்களுமா? அதுக்கு போட்ட போட்டியெல்லாம் கனாக்காலம்.:(

    பதிலளிநீக்கு
  15. தமிழ் வலைப்பதிவர்களே!
    புதிய தமிழ் திரட்டியான தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளை இனைத்துபயன் பெறுங்கள்.
    ‍தமிழ்புக்மார்க்
    http://tamilbookmark.co.cc

    பதிலளிநீக்கு
  16. Very nice flow.Good article
    Very nice flow.Good article
    Very nice flow.Good article

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!