Monday, December 6, 2010

பயோ டீசல்

வரமாய் வந்த புன்னை! டீசலுக்கு மாற்றாக, புன்னை எண்ணெய் மூலம் மாற்று எரிபொருளை கண்டுபிடித்திருக்கும் ராஜசேகர்: என் சொந்த ஊர், தஞ்சை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள கண்டியங்காடு கிராமம். அப்பா விவசாயி என்பதால், எனக்கும் விவசாயத்தில் ஆர்வம் அதிகம். இயற்கையான சில வழிகளைக் கையாண்டு, புதிதாக நிறைய முயற்சி செய்து, 50 மரங்களின் கிளைகளை வெட்டி, ஒரு மரத்தில் ஒட்டுக்கட்டி, ஒரே மரத்தில் 50 வித மாங்காய்களை காய்க்க வைத்தேன்.விதவிதமான மரங்களை நட்டு, தோட்டத்தின் சூழலை மாற்றியபோது, பல இடங்களில் புன்னை மரங்கள் தானாக வளர ஆரம்பித்தன. அவற்றின் பயன்பாடு அப்ப தெரியல. ஒருமுறை, தேங்காய் எண்ணெயை வெயிலில் காய வைக்கும் போது, எலி விழுந்து வீணானது; அதை இஞ்சினில் ஊற்றியதில் நன்றாகவே ஓடியது. பின், புன்னை மரத்தில் இருந்து எண்ணெய் எடுப்பது குறித்து ஆராய்ந்தேன். ஒரு லிட்டர் டீசல் 35 ரூபாய். ஆனால், ஒரு லிட்டர் புன்னை எண்ணெயில் பயோ டீசல் தயாரிக்க, 10 ரூபாய் தான் செலவாகிறது. புன்னை விதையில் உள்ள பருப்பு தான், பயோ-டீசல் தயாரிக்க பயன்படுகிறது. இந்த டீசலை பயன்படுத்துவதால், இன்ஜின் துருப் பிடிக்காது; சத்தமும் குறைவாதான் கேட்கும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கரும்புகை வராது. அதன் புகையே, மூலிகை வாசனை போல் தான் வரும்.புன்னை எண்ணெயால், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வாய்ப்பு அதிகம். தமிழக தட்ப வெப்பத்திற்கு ஏற்ப புன்னை மரத்தை முறையாகப் பயன்படுத்தினால், எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடே வராது.
(நன்றி: தினமலர் 06-12-2010)


வாசகர்களே! டீசல் விலை திடீரென்று லிட்டருக்குப் பத்து ரூபாய் என்று ஆனால், என்னென்ன நன்மைகள் விளையும்? கற்பனைக் குதிரையை ஓட்டி, கருத்துரையுங்கள். 

10 comments:

அஹ‌ம‌து இர்ஷாத் said...

எரிபொருளுக்கு இது உக‌ந்த‌துதான்..இதை எப்போ ந‌டைமுறைப்ப‌டுத்த‌ போறாங்க‌ளோ..

Chitra said...

என்னென்ன நன்மைகள் விளையும்? கற்பனைக் குதிரையை ஓட்டி, கருத்துரையுங்கள்.


.....கற்பனை குதிரை - கற்பனை மாட்டு வண்டியை தட்டி விட்டு யோசிப்பதற்கு பதிலாக, கற்பனை காரை தட்டி - சாரி - ஸ்டார்ட் செய்து யோசிப்பேன். ஹி,ஹி,ஹி,ஹி....

Madhavan Srinivasagopalan said...

// வாசகர்களே! டீசல் விலை திடீரென்று லிட்டருக்குப் பத்து ரூபாய் என்று ஆனால், என்னென்ன நன்மைகள் விளையும்? கற்பனைக் குதிரையை ஓட்டி, கருத்துரையுங்கள். //

அட நம்ம வண்டிக்கு பெட்ரோல் தான் தேவை..
ச்சே.. சமத்துல அயோத்யா சக்ரவத்த்தி பேரு கூட ஞாபகத்துல வருது.. ஏன் தான்னு புரியல..

RVS said...

//கருத்துரைத்தவர்கள் டாப் 20// இதை கொஞ்சம் பழுது பாருங்க... நான் நிச்சயம் முப்பதுக்கு மேல் கருத்துரைச்சிருப்பேன். ;-)

எங்கள் said...

// RVS said...
கருத்துரைத்தவர்கள் டாப் 20 இதை கொஞ்சம் பழுது பாருங்க... நான் நிச்சயம் முப்பதுக்கு மேல் கருத்துரைச்சிருப்பேன். ;-)//

அது கூகிள செய்யும் கணக்கு. கடந்த ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதங்களோ கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்று நினைக்கின்றோம். மீண்டும் சரி பார்த்தோம். தவறு ஒன்றும் புலப்படவில்லை.

தமிழ் உதயம் said...

அரசாங்கம் அப்படி குறைய விடாம்ம, நிச்சயம் புதிய வரி விதிக்க தான் வாய்ப்பு இருக்கு.

Gopi Ramamoorthy said...

இது நீண்ட காலத்திற்கான தீர்வு என்று அனுமானித்துக் கொள்கிறேன்.

நான் நிறைய புன்னை மரங்கள் உள்ள தோப்புகளை வாங்குவேன்.

பெட்ரோல் கார்கள் மலிவாகிவிடும்

அரசாங்கம் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தப் புது வரிகள் போடலாம்

இது ஒரு புதுத் தொழிலாக உருவாகும். நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும்

க.மு.சுரேஷ் said...

நல்ல பதிவு நன்றி.
காட்டுஆமனக்கு,சூரியகாந்தி,கடலை போன்றவற்றில் இருந்து எடுக்கும் எண்ணெய் விலை டீசல் விலையைவிட அதிகம்.
டீசல் விலை ரூ.37
ஆனால் கடலை எண்ணெய் ரூ.???
விளக்கு எண்ணெய் ரூ.???

"நான் எனது தோட்டத்தில் புன்னை பயிரிட முயற்சி செய்கிறேன்."

மோ.சி. பாலன் said...

வடை சுட்டு - சுட்ட எண்ணெய்யை காரில் ஊற்றி - வடை சாப்பிட்டுக் கொண்டே காரை ஓட்டுவேன்.

சாய் said...

//மோ.சி. பாலன் said... வடை சுட்டு - சுட்ட எண்ணெய்யை காரில் ஊற்றி - வடை சாப்பிட்டுக் கொண்டே காரை ஓட்டுவேன்.//

காரில் அப்படி செய்தால் நீங்களும் / மெகானிக் சேர்ந்து அதை சுத்த வேண்டும் !!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!