செவ்வாய், 30 நவம்பர், 2010

பதில் சொல் நண்பனே...


திகில் கதை!
எஸ் எம் எஸ்ஸில் என் நண்பன் கேட்ட கேள்வி என்னை உலுக்கி விட்டது! அவனை யார் கேட்டார்களோ? பாவம்.
சரி உங்களையும் அந்தக் கேள்வியைக் கேட்டு வைக்கலாமே என்று கொஞ்சம் நீட்டி முழக்குகிறேனே..

இரவு மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் சமயம்.
மழை சுழன்று சுழன்று அடிக்க, காற்று 'உயங்' என்று பிய்த்து வாங்கிக் கொண்டிருந்தது.

கையில் பட்ட அடியை விட காலில் பெரிய அடி. நடப்பதே சிரமமாக இருந்தது. தெரிந்த ஏரியாதான். இன்னும் சற்று நடந்தால் என் நண்பன் வீடு வந்து விடும்.

அவன் வீட்டில் யாரும் இல்லை. எல்லோரும் ஊர் சென்றிருக்கிறார்கள். வீட்டில்தான் இருக்கிறானா என்று பார்க்க வேண்டும். முகத்தில் மழையோடு சேர்ந்து ரத்தத்தின் பிசு பிசுப்பும் தெரிந்தது.
வீடு உள் பக்கம்தான் தாழிடப் பட்டிருந்தது. பெருமூச்சு விட்டபடி காலிங் பெல் அழுத்தினேன்.

கதவைத் திறந்த நண்பன் என் கோலம் கண்டு பதறிப் போனான். "என்னடா ஆச்சு?"
சொன்னேன்.

மாடிக்கு சென்றோம். 'சட்'டென மின்சாரம் தடைப் பட்டது.

ஒரே இருள்.

நண்பன் டார்ச் லைட்டை எடுத்து இயக்கினான். எரிந்த உடனேயே உயிரை விட்டது அது.

பல்ப் அவுட்.

"இரு...கீழே போய் எமெர்ஜென்சி லேம்ப் எடுத்துகிட்டு, உனக்கு பேண்டேஜ், மருந்தும் எடுத்து வருகிறேன்" என்றபடி தடவிக் கொண்டே கீழே போனான்.

கொஞ்ச நேரம் ஆயிற்று. கரண்ட் வந்த பாடில்லை. கீழே ஏதோ உருளும் சத்தம் கேட்டது. கூடவே லேண்ட் லைன் தொலைபேசியும் அடிக்கத் தொடங்கியது.
ஃபோனை எடுத்தான் நண்பன். எதிர்முனையில் என் வீட்டிலிருந்து பேசுகிறார்கள் என்று தெரிந்தது. ஒரு சாலை விபத்தில் நான் இறந்து விட்டேன் என்று அவர்கள் அவனிடம் சொன்னார்கள்.

ஃபோனைக் கீழே வைத்தான் நண்பன்.

நண்பா,
நீ
இப்போது
என்னைப் பார்க்க
மேலே வருவாயா,
மாட்டாயா....?

20 கருத்துகள்:

 1. நல்லா கிளப்புறாங்க பீதியை!

  பதிலளிநீக்கு
 2. நல்லா இருந்தது..
  ஏற்கனவே அந்த மாதிரி படிச்சிருந்தாலும்.. என்னால சரியா எச்க்பெச்ட் பண்ண முடியல.. (மறந்திட்டோனே என்னவோ..)

  பதிலளிநீக்கு
 3. நல்லா இருந்தது கதை. ஆரஞ்சு கமெண்ட்தான் புரியவில்லை.

  பதிலளிநீக்கு
 4. //மேலே வருவாயா//

  மேலே வந்தால், “மேலே”யும் வந்துவிடுவேனே!! அதனால் வரமாட்டேன். :-))))

  பதிலளிநீக்கு
 5. /இப்போது
  என்னைப் பார்க்க
  மேலே வருவாயா,/

  எந்த மேலே:))

  பதிலளிநீக்கு
 6. நீங்க செத்துபோய் ஆவியா இருக்கீங்கன்னு தெரிஞ்சப்பறம் யார்தான் மேல வருவாங்க?

  கதை ரொம்ப பயமா இருக்கு!

  பதிலளிநீக்கு
 7. Chitra said...
  நல்லா கிளப்புறாங்க பீதியை!

  ஹாஹாஹா செம த்ரில்... அப்புறம் இது எந்த ட்ராமால..

  பதிலளிநீக்கு
 8. ஸ்ரீராம் அவர்களே தனியாக இருப்பவர்களை நினைத்து இனி வரும் காலங்களில் கதை எழுதும்படி தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் !

  இப்பிடிப் பயமுறுத்திறீங்க.
  யாராச்சும் இனி உண்மையா ராத்திரில வந்தாக்கூட பேசாமத்தான் வரணும் !

  பதிலளிநீக்கு
 9. அடிப்பட்டது காலில். அதுவும் அடைமழை வேறே.
  முதலில் அவசர அவசரமாக ஒரு பாண்டேஜ் தேவை. அது போட்டுக் கட்டி விட்டால் போதும். பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.
  வீடு ரொம்ப தூரம் இருக்கே. ரொம்ப அவசரம் ஆயிற்றே.
  நல்ல வேளை, அந்த வேதனையிலும் நினைவுக்கு வந்தது; அருகிலிருக்கும் நண்பனின் வீட்டுக்கு எப்படியாவது உடனே போய் ஆகவேண்டும்.
  எப்படியாவது... தத்தித் தடுமாறி எப்படியாவது...
  ஒரு வழியாக போயாச்சு; போனதற்குப் பிறகு நடந்தது தான் உங்களுக்குத் தெரியும்.
  ஓ.. அந்த போன் சமாச்சாரமா?..
  அது ஒன்றுமில்லை. மின்சாரம் போயிற்றா?..
  நேற்று நண்பனும் நானும் சேர்ந்து பார்த்த சினிமா காட்சி ஒன்று நினைவுக்கு வந்தது.
  சினிமாவிலும் இப்படி மழைதான். இதே மாதிரி இருட்டு தான். இதே மாதிரி போன் கால் தான்.

  அந்தக் காட்சியை ரசனையுடன் நாங்கள் பரிமாறிக் கொண்டது, சொந்த சமாச்சாரத்தைச் சொல்ல வந்ததுடன் கிளாஷ் ஆகி விட்டது.. ஸாரி..

  பதிலளிநீக்கு
 10. படிச்சு முடிச்ச உடனே.. முதுகுல எதோ ஊர்ற மாதிரி இருக்கு. சரி திகில்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!