கடைத் தெருவில் என் நண்பனைப் பார்த்த போது மிகுந்த ஆச்சர்யமேற்பட்டது. நண்பனைப் பார்ப்பதில் இல்லை ஆச்சர்யம். அவன் கடை! புதிதாய் ஒரு கடை வைத்திருந்தான். கடை வைத்திருந்ததில் இல்லை ஆச்சர்யம். என்ன கடை வைத்திருந்தான் என்பதில்தான்...!
அவன் திறந்திருந்த கடை 'செல்ஃபோன் சர்விஸ் சென்டர்'. அதுவும் இன்னொரு பெரிய சர்விஸ் கடை, இரண்டு கடைகள் தளளி இருக்கும்போது இவனும் ஒன்று இங்கே...
ரீசார்ஜ் விளம்பரங்களும் தொங்கின என்றாலும் முன்னால் கண்ணாடிப் பெட்டியில் சர்வீசுக்கு வந்திருந்த அலைபேசிகள் நிறைய கண்ணில் பட்டன.
உட்கார்ந்து பந்தாவாக ஈ புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். முன்னால் லென்ஸ் போல திருகாணி போல என்று கண்ணில் பட்டன.
என்ன தெரியும் இவனுக்கு இதில் என்று கடை திறந்து விட்டான்? இவனே இவன் செல் சரியாக இல்லை என்றால் என்னிடம் கொண்டு வருவான்... ஏதாவது ஷார்ட் டர்ம் கோர்ஸ் எங்காவது படித்து வந்து விட்டானா?
கேட்டபோது இல்லை என்றான். "அப்புறம் எப்படிடா?" என்றேன்.
"அது ஒண்ணுமில்லடா மாப்பிள்ளே.. உன்கிட்ட என் செல் ரிப்பேர்னு கொண்டு வரும்போது நீ சொல்லுவே இல்லே...அதேதான்..."
"என்னடா செய்வே.."
"வாங்கி வச்சிக்கிட்டு மறுநாள் வரச் சொல்வேன். அதற்குள் அதை சுத்தமாக் கழற்றி துடைத்து திருப்பிப் போடுவேன்...பெரும்பாலும் அதுலயே சரியாயிடும்..மேலும் காசு போட்டு செல் வாங்கினவனுக்கு அதைப் பிரித்துப் பார்க்க தயக்கம் இருக்குடா மாப்பிளே...கடைல கொடுத்து வாங்கிடுவோம் 'நாம ஏதாவது செய்து ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிட்டா'ன்னு பயப்படறாங்க..நமக்கு என்ன பயம், தயக்கம்? அது நம்ம செல்லா என்ன?"
"அடப் பாவி .. .அப்புறம்..அதை நம்பி உன் கிட்ட எப்படிக் கொடுக்கறாங்க...அதுவும் ஒரு பெரிய கடையை பக்கத்துல வச்சிக்கிட்டு..."
"விஷயமே அதாண்டா மாப்பிள்ளே..அவங்க நூத்தைம்பது ரூபாய் சார்ஜ் பண்றாங்க. நான் நூறு ருபாய் சார்ஜ் பண்றேன். அதுவும் நூற்று பதினைத்து இருபதுன்னு சொல்லி நூறுக்கு குறைப்பேன்.."
"சரிடா...அதுல சரியாகலைன்னா..."
"ஒரு வாரம் கழிச்சி வாங்கன்னு சொல்லுவேன்.. அதற்குள் நானே அந்தப் பெரிய கடையில் ரிப்பேருக்குக் குடுத்து வாங்கிடுவேன்... கொஞ்சம் வேலை ஜாஸ்தி இழுத்துடிச்சின்னு சொல்லி எக்ஸ்ட்ரா பணம் வாங்கிடுவேன்.."
"அடப் பாவி பொழைச்சிடுவே போ..."
"அதை விடுறா மாப்பிளே... அபபடி அந்தப் பெரிய கடைல செல்லைத் தரும் போது அவங்க என்ன செய்யறாங்கன்னு பார்த்தேன்..."
"பரவால்லையே...கத்துக்கற ஆர்வம்...சபாஷ்...இப்போ அங்கேருந்து கொஞ்சம் கத்துகிட்டேன்னு சொல்லு.."
"போடா..அவங்களும் இதையேதான் செய்யறாங்க...முடியாத பட்சத்துல ஒண்ணு வேற பெரிய கடைல கொடுத்து வாங்கறாங்க..அல்லது உள்ளே ஏதாவது ஒண்ணைக் கெடுத்துட்டு 'இது இனி வேலைக்கு ஆவாது சார்...ரொம்ப வேலை வாங்கிடிச்சி...வேற புது செல்தான் இனிமே...நம்ம கிட்டயே இருக்கு பார்க்கறீங்களா'ங்கறாங்க."
"அட...அப்போ அவங்க கொடுக்கற அந்த இன்னொரு பெரிய கடைல..." என்று ஆரம்பித்தவன் 'வேண்டாம், இதற்கும் ஏதாவது வியாக்யானம் தயாராக இருக்கும்..அப்புறம் பார்த்திபன் கிட்ட மாட்டின வடிவேலு கதையாகி விடும்' என்று "சரி மாப்பிளே, அப்புறம் வர்றேன்.." என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன்.
சில மாதங்களுக்கு முன்பு எனக்கு செல்போன் சர்வீஸ் கற்று கொள்ள ஆசை வந்தது. தெரிந்தவர் ஒருவர் கற்று தருகிறேன் என்றார். போனேன். பக்க பக்கமாக இருந்த சர்க்யூட் போர்ட் படங்கள் தலையை சுற்ற கற்று கொள்ளாமலே வந்துவிட்டேன். இனி, சர்வீஸ் சென்டர் வைத்து, உங்க நண்பரின் methodஐ பாலோ பண்ண வேண்டியது தான்.
பதிலளிநீக்குசெல் போன் மட்டுமல்ல பல எலெக்ட்ரானிக் செர்விஸ் செண்டர்களும் இப்படிதான். ஒவ்வொரு நிறுவனமும் அங்கீகரிக்கப் பட்ட சர்விஸ் சென்டர் லிஸ்ட் தருவாங்க. அவங்களை தொடர்பு கொள்வது சிறந்த முறை
பதிலளிநீக்குஅனைவரும் அவசியம் படிக்கவேண்டிய படைப்பு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
ஒக்கே.. ஒக்கே.. கைவசம் ஒரு தொழில் சொல்லிக் கொடுத்திட்டீங்க..
பதிலளிநீக்குநன்றி..
இந்த மாதிரி வேறு ஏதாவது ஐடியா இருந்தால் உடனே கொடுக்கவும். கடை திறக்க தயாராய் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குகொஞ்சம் வித்தியாசமா யோசிச்சு நா, ஒரு ஐடியா கண்டு பிடிச்சிட்டேன்..
பதிலளிநீக்குவந்து படிச்சிப் பாத்திட்டு அப்புறம் சொல்லங்க ஐடியா எப்படின்னு...
:-)
பதிலளிநீக்குகதையல்ல - நிஜம்!
பதிலளிநீக்குமுதல் படத்தில், மூன்றாவது ரோவில், மூன்றாவது படம் யாருங்க? உங்கள் ஆசிரியர் குழுவில் பார்த்தாற்போல் இருக்குதே?
பதிலளிநீக்குஅட....இப்பிடியெல்லாமா !
பதிலளிநீக்குsuper! :)
பதிலளிநீக்குஅதனால தான் என் செல் ரிப்பேர் ஆச்சுனா நானே ரிப்பேர் செஞ்சுட்டு வேற செல் வாங்கிடுவேன் :) இது வரை ஆறு செல் அப்படிதான்
பதிலளிநீக்குதமிழ் உதயம், மின்னணுப் பொருட்களை பழுது பார்க்கக் கற்றுக் கொள்பவர்கள், செய்யக் கூடாதது, சர்கியூட் டையாக்ரம்களைப் பார்ப்பது. அந்த வரைபடங்கள் வரைந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் சரியாகப் புரியாது.
பதிலளிநீக்குஎல் கே, அங்கீகரிக்கப்பட்ட சர்விஸ் சென்டர்கள் கூட சில சமயங்களில் சரியான சேவை அளிப்பதில்லை.
ரமணி சார் பல பதிவுகளில் விதைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள். நிறைய அறுவடை செய்ய எங்கள் வாழ்த்துக்கள்.
நன்றி மாதவன், ஹெச் வி எல், கோபி, சித்ரா, ஹேமா, மீனாக்ஷி.
க வி போ பி ப? ரொம்ப யோசித்தோம். கண்ணுல விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு பிளாக் படிப்பவர் போலிருக்கு. உங்க பார்வை ரொம்பக் கூர்மைதான்.
பத்மா வாங்க, வாங்க. ரொம்ப நாளாகக் காணோம்! இன்னும் ஒரு பாட்டுப் பாடி எம் பி 3 எங்களுக்கு அனுப்புங்க நம்ம ஏரியா வுல (engalcreations.blogspot.com) போடலாம் என்று கேட்டுக் கொண்டே இருக்கின்றோம். நீங்க காதிலேயே போட்டுக்க மாட்டேன் என்கிறீர்கள்!
செல் போன் ரிப்பேர் ஆகிற அளவுக்குப் பயன் படுத்துவதில்லை:)
பதிலளிநீக்குபசங்களுக்கு நாங்க எங்கயாவது தொலஞ்சு போயிடுவோம் என்கிற பயத்துக்காக வைத்திருக்கிறோம்.
நீங்க எழுதி இருக்கிறதைப் பார்த்தால் நல்ல பிரயோஜன்மான தொழிலைக் கத்துக்கலாம் போல இருக்கே. எனக்கு பழைய ரேடியோ ரிப்பேர் தெரியும். நான் ரிப்பேஎர் செய்தால் ஒரே ஒரு ஸ்டேஷன் மட்டும் கேட்கும்:)
கம்பெனிக்காரர்களே செல்போனையும் தந்து விடுகிறார்கள். இந்தந்த கட்டணத்திற்கு இந்தந்த மாடல் என்கிற மாதிரி. நாம் செலுத்துவது உபயோகிப்பாளரின் கட்டணம் மட்டுமே. உபயோகிக்கும் காலகட்டத்தில் தந்த செல்போன் வேலை செய்யவில்லை என்றால் இலவசமாகவே வேறொன்று. எப்படியும் மூன்று வருட தொடர்ச்சியான உபயோகத்திற்குப் பிறகு புதுசாக வேறொன்று கொடுத்து விடுவார்கள். பழசு யூஸ் அண்டு த்ரோ தான். மொத்தத்தில் தனியாக செல்போன் மட்டும் வாங்க வேண்டிய தேவையே இல்லை.
பதிலளிநீக்குஇப்படி ஒரு தேசத்தில். பொதுவாகப் பதிவுகளைப் பல தேசங்களில் வசிப்பவர்களும் படிப்பதால், இது எந்த தேசத்தில் என்று படிப்பவரே சொல்லட்டும்.
// வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு...... எனக்கு பழைய ரேடியோ ரிப்பேர் தெரியும். நான் ரிப்பேஎர் செய்தால் ஒரே ஒரு ஸ்டேஷன் மட்டும் கேட்கும்:)//
இது பரவாயில்லையே! நாங்க ரேடியோ ரிபேர் செய்தால், ஒரே டியூன் பாயிண்டில், பல ஸ்டேஷன்கள் கேட்கும்!
// ஜீவி said...
பதிலளிநீக்கு..........
இப்படி ஒரு தேசத்தில். பொதுவாகப் பதிவுகளைப் பல தேசங்களில் வசிப்பவர்களும் படிப்பதால், இது எந்த தேசத்தில் என்று படிப்பவரே சொல்லட்டும்.
..........
தேசம் என்று பார்த்தால் எங்களுக்கு 'காதல் தேசம் & தண்ணீர் தேசம்' இரண்டு மட்டும்தான் தெரியும்!
'எபி' வேலைவாய்ப்புத் திட்டமா?
பதிலளிநீக்குசரியாப் போச்சு!
பதிலளிநீக்குநாடு என்று வேண்டுமானால் கொள்ளுங்கள்.
நீங்கள் குறிப்பிட்டிருக்கிற அந்த இரண்டு தேசங்கள் மட்டும் நிச்சயம் இல்லை!
இது பரவாயில்லை சாமி, ஐ.போன் என்று ஒன்று - யானையை விட அங்குசம் ஜாஸ்தி என்பது போல். ஏண்டா வாங்கினோம் என்று.
பதிலளிநீக்குஅமெர்க்காவில் வீடு வாங்கலாம், செல் போன் வாங்கலாம் ஆனால் இந்தியா நகரங்களில் இனி கஷ்டம் போலிருக்கே. என் அக்கா மகள் "சாய் மாமா, நீங்கள் இந்த மாடல் தான் வைச்சிருக்கியா - இது ரொம்ப சீப் என்று சொல்லும் அளவு இந்தியாவில் செல் போன் / மற்றும் மாடல்கள் ஏராளம். அதனால் இதைப்போல் ஏமாற்றும் வர்க்கமும் ஏராளம்.
இந்தியாவில் 1996-97 பி.பி.எல். நிறுவனத்துக்கும் / நோக்கியா நிறுவனத்திற்கும் என்னுடைய சாப்ட்வேர் டீம் Customer Order Processing System / Customer Compliant & Resolution System (BPL மொபைல், மும்பை) and After Market Service Automation (AMSA for Nokia) என்ற கணிப்பொறி சிஸ்டம் செய்தோம். அப்போது 100,000 connection வந்ததற்கே கொண்டாடினார்கள். முதல் முறையாக சாப்ட்வேர் product விட்டு செர்விசெஸ் விற்கவும் / டெலிவரி செய்யவும் வந்த வாய்ப்பு அது. மறக்க முடியாத அனுபவம்.
//தமிழ் உதயம் said... சில மாதங்களுக்கு முன்பு எனக்கு செல்போன் சர்வீஸ் கற்று கொள்ள ஆசை வந்தது. தெரிந்தவர் ஒருவர் கற்று தருகிறேன் என்றார். போனேன். பக்க பக்கமாக இருந்த சர்க்யூட் போர்ட் படங்கள் தலையை சுற்ற கற்று கொள்ளாமலே வந்துவிட்டேன். //
பதிலளிநீக்குரமேஷ், அது பெட்டெர்.
இங்கே ஒன்பதாம் வகுப்பிலையே என் பெரியவன் எலெக்ட்ரானிக் சர்க்யுட் எல்லாம் கத்துக்கறேன் என்று
லேப்டாப் மெமரி / செல் போன் ரிப்பேர் என்று நொண்டி வைப்பான். இப்போ கொஞ்சம் கொஞ்சம் சொல்லி பண்ணுவதில்லை.
நானும் நொண்டு சுப்பன் தான் - ஆனால் எங்கள் வீட்டில் அந்தக்காலத்தில் எனக்கென்றே ஒரு பாடாத பெரிய ரேடியோ இருக்கும் அதை எனக்கு தார வார்த்துக் கொடுத்து விட்டார்கள்.
அடப் பாவிங்களா.
பதிலளிநீக்குநேத்து தான் சார்ஜ் ஆக மாட்டேங்குதுன்னு கொடுத்தேன். ஒரு பின் மாத்திட்டு 250 ரூபாய் பிடுங்கிட்டான் நோக்கியா கேரில. வெளியில விசாரிச்சா 20 ரூபாய்க்கு மாத்தலாம் சார்-ங்கறான் .
எப்படியெலாம் ஏமாத்துறாங்க.
அப்பாதுரை சார், ஆமாம்!
பதிலளிநீக்குஎ பி வேலை வாய்ப்பு திட்டம்தான்.
ஏ பி வேலை இல்லை.
ஜீவி, அந்த நாட்டின் பெயர் U என்று ஆரம்பிக்கும். சரியா?
சாய் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
சிவகுமாரன் சார், இப்போ ஊருக்கு ஊரு, தெருவுக்குத் தெரு கிடைக்கின்ற USB cable (Std A to mini B) ஆறு வருடங்களுக்கு முன்பு நான் SONY ஷோ ரூமில், என் காமிராவிற்காக வாங்கினேன். விலை ரூ 1200.
//வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்குபசங்களுக்கு நாங்க எங்கயாவது தொலஞ்சு போயிடுவோம் என்கிற பயத்துக்காக வைத்திருக்கிறோம்.//
:-)))))))
நல்லதொரு நகைச்சுவையான பதிவு.
பதிலளிநீக்குஉண்மையான நாட்டு நடப்பாகக் கூட இருக்கலாம். தங்கள் நண்பர் செய்வதும் ஒரு விதமான தொழில்நுட்பம் தான். எது எப்படியோ, பிழைக்க வழி தெரிந்தால் சரி. தைர்யம் புருஷ லட்சணம்.