திங்கள், 12 டிசம்பர், 2011

அலுவலக அனுபவங்கள் 2:: பச்சை கலர் ஜிங்குச்சா!

                       
விசு என்கிற விஸ்வநாதன் பரபரப்பாக இருந்தான். 
  
திடீரென செக்கிங் வந்து விட்டார்கள். இது அவ்வப்போது 'வழக்கமாக' நடைபெறும் 'சர்ப்ரைஸ்' செக்கிங்! என்ன முரண்.... இல்லை?

முதல் கட்ட சம்பிரதாயங்கள் முடிந்து அவர்கள் வருவதற்குள் தயார் செய்து கொள்ள வேண்டியவை இருந்தன. முதற்கட்டமாக பணக்கணக்கை எடுத்து சரி பார்த்தான். ஆயிரத்து முன்னூற்றி சொச்சம் தேவையாயிருந்தது.

இதைச் சமாளிக்க அவர்கள் அலுவலகத்தில் ஒரு அவசர, ரகசிய நடைமுறை வைத்திருந்தார்கள்!
   
வேகமாக ஒரு பச்சைத் துண்டையும் சிகப்புத் துண்டையும் ஜன்னலில் எடுத்துக் காயப் போடுவது போலப் போட்டு விட்டு அடுத்த 'தயார்'களில் இறங்கினான்!
**************
       
பக்கத்து தபாலாபீஸ். ஜன்னலை ஒட்டி இருந்த ஈஸ்வர் பரபரப்பானான்.

"சார்!  பக்கத்து ஆபீஸ் ஜன்னல்ல பச்சை சிகப்பு ரெண்டு துண்டும் தொங்குது சார்.... ஜல்தி.. ஜல்தி...."

பச்சைத் துண்டு தொங்கினால் 'செக்கிங் வந்துள்ளார்கள், ஆயிரம் ரூபாய் வேண்டும்' என்றும் சிகப்புத் துண்டு தொங்கினால் 'ஐநூறு ரூபாய் வேண்டும்' என்றும் இரு அலுவலகங்களுக்குள்ளும் 'கோட்'! அதே போல இங்கும் சிகப்புப் பச்சைத் துண்டுகள் உண்டு...!!

'உன் கிட்ட எவ்வளவு இருக்கு, என் கிட்ட இவ்வளோ இருக்கு' என்று பரபரப்பாகப் பேசி, 'சீக்கிரம், சீக்கிரம்' என்று அவசரப் படுத்தி ஆயிரத்து ஐநூறு ரூபாய் திரட்டிக் கொண்டு ஈஸ்வரன் பக்கத்து ஆபீஸ் ஜன்னலை அடைந்தான். "உஷ்..." என்று பாம்பு போல் சீறி விட்டு கையைப் பணத்துடன் உள்ளே நுழைத்தான். விசு அதை 'லபக்கிக்' கொள்ள ஈஸ்வர் காணாமல் போனான்.

அன்று மாலை 'பாரி'ல் சந்திக்கும்போது பேசிச் சிரிக்க நிறைய விஷயங்கள் இருந்தன இரு அலுவலக நண்பர்களுக்கும்.
*************************
         
மறுநாள்.
  
சென்னையிலிருந்து டைரக்டர் வருகை தந்தார். இவர் மட்டும் வரும்போது செக்கிங் எல்லாம் இருக்காது. வெறும் அலுவலக விசாரணைகளுடன்  குறை தீர்க்கும் நாள் போல இருக்கும்!

விஸ்வநாதன் அருகில் இருந்து உதவிக் கொண்டிருக்க, பக்கத்து ஹோட்டலிலிருந்து தருவிக்கப் பட்டிருந்த போண்டாவை ருசித்து விட்டு 'டீ'க்கு வருமுன் கை கழுவி இங்கே அங்கே பார்த்தவர் அருகில் நாற்காலியில் இருந்த பச்சைத் துண்டை உருவிக் கையைத் துடைத்துக் கொண்டவர் ஜன்னலில் காயப் போட்டார். 
  
விசு பேப்பர்கள் அடுக்குவதில் கவனமாக இருந்தான். 
           
"என்னது... யார் நீ... என்ன வேணும்... இங்க ஏன் பணம் கொடுக்கறே.... யார்யா நீ..." டைரக்டரின் 'சிடு சிடு' குரல் கேட்டு நிமிர்ந்தான். 
             
ஜன்னலில் ஈஸ்வர்! அவன் கையில் பணம்! 
               
"அதோ அவர் கிட்டக் கொடுங்க  சார்..." விஸ்வநாதனைக் காட்டினான் ஈஸ்வர். 
            
"உங்களுக்குத் தெரியாது.... அவர் கிட்டக் கொடுங்க.." மறுபடியும் வலியுறுத்தி விட்டு, பணத்தை டைரக்டர் கையில் திணித்து விட்டு நொடியில் மறைந்தான்!
                   
ஜன்னலில் பச்சைத் துண்டைப் பார்த்த விசுவுக்கு 'ஸீன்' புரிந்து விட்டது. 
    
'அவ்வவ்வவ்.....'
            
அ.எ.ந.எ.சொ.வே....?!!
               

11 கருத்துகள்:

  1. ராஜதந்திரம் - சில நேரம் காலை வாரி விட தவறுவதே இல்லை.

    பதிலளிநீக்கு
  2. அடப்பாவமே! மாட்டிக்கிட்டாங்களா??

    பதிலளிநீக்கு
  3. அ.எ.ந.எ.சொ.வேண்டாம்.

    இது கூடவா தெரியாமப் போயிடும்.

    பதிலளிநீக்கு
  4. ஜன்னலில் பச்சைத் துண்டைப் பார்த்த விசுவுக்கு 'ஸீன்' புரிந்து விட்டது./

    nice 'ஸீன்' Super 'ஸீன்'!

    பதிலளிநீக்கு
  5. இப்பிடியெல்லாம் சிக்னல் போடுறாங்களா !

    பதிலளிநீக்கு
  6. ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டுக்குள்ள ஒளிஞ்ச மாதிரின்னு ஒரு சொலவடை (என்ன வடை?) கேள்விப் பட்ருக்கேன் ஸ்ரீராம் சார்... அதமாதிரி எம்டி கிட்ட மாட்டிக்கிட்டாங்களா... ஹி... ஹி... சூப்பரு!

    பதிலளிநீக்கு
  7. அ.எ.ந.எ.சொ.வேண்டாம்.

    இது கூடவா தெரியாமப் போயிடும்.//


    athane?

    பதிலளிநீக்கு
  8. நல்ல ஸீன் சார்,அவ்வவ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  9. சூப்பர்.அப்புறமா என்ன நடந்தது சொல்ல வேணும் சார்:)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!