திங்கள், 19 டிசம்பர், 2011

புலிகளைப் பார்த்துப் போட்டுக் கொண்ட சூடு...


Pit போட்டிக்கு முதல் முறையாக கலந்து கொண்ட முயற்சி. ஆர்வத்தையும் ஊக்கத்தையும் முத்துச்சரம் ராமலக்ஷ்மி கொடுத்தார்! Thanks madam.    


அவருடைய மேஜிக் கேமிரா எடுக்கும் புகைப் படங்களை பார்த்து ரசித்து உள்ளுக்குள் ஊறிய ஆர்வத்தில் கலந்து கொண்ட போட்டி! தீம் 'உன்னைப்போல ஒருவன்'. ஒன்றைப் போல இன்னொன்று. ஆனால் போட்டோஷாப் வேலைகள், மிரர் இமேஜ் கூடாது என்று கண்டிஷன்கள்.     
அவர் பல்வேறு இடங்களுக்கும் அலைந்து பலவித அற்புத புகைப்படங்களை எடுத்துத் தள்ளுகிறார். அவர் கையில் என்னதான் மாயமோ... துல்லியங்களின் அரசி! கலந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு பதினாலாம் தேதிதான் முயற்சியே தொடங்கினேன். பதினைந்து கடைசித் தேதி.     

எதை எடுப்பது என்ன எடுப்பது என்று குழம்பி கையில் கிடைத்ததை எல்லாம் அவசர கதியில் எடுத்து, (நிதானமாக எடுத்தாலும் இவ்வளவுதான் வரும் என்பது வேறு விஷயம்!) எடுத்தவற்றை அலசி ராமலக்ஷ்மி மற்றும் பலர் எடுத்த புகைப் படங்களைப் பற்றி எண்ணாமல், யோசிக்காமல் (மூட் அவுட் ஆயிடும்! நம்ம படத்தை அனுப்பவே தோன்றாது!) ஒன்றை அனுப்பியாகி விட்டது. அனுப்பிய பின்னும் இதை அனுப்பியிருக்கலாமோ என்று வேறொன்றி நினைத்துக் குழம்பவும் தவறவில்லை!     

எடுத்தவற்றையும், அனுப்பியதையும் ப்ளாகில் பகிர்வது கட்டாயமா, அந்த 'லிங்க்'கும் அனுப்ப வேண்டுமா என்றும் தெரியவில்லை. ஆனால் எடுத்த மற்ற புகைப் படங்களைப் பகிர்வதில் இரண்டு விஷயம் பூர்த்தியாகிறது!    
ஒன்று........... அனுப்ப விட்ட மற்ற புகைப் படங்களைப் 'படம் காட்டலாம்'.    

இரண்டு...... ஒரு பதிவு தேத்தலாம்!!   

படங்களைப் பார்த்து சிரிக்கக் கூடாது. புன்னகைக்க அனுமதி உண்டு!! 
         (இப்படிக்கு ..... பூனை!) 
                     

7 கருத்துகள்:

 1. ரெம்ப ஈஸியா வேலையை முடிச்சிட்டிங்க. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. வித்யாசமான யோசனை, படங்கள் நன்றாக இருக்கு.

  பதிலளிநீக்கு
 3. haahaa nalla ve irukkar unnaii pol oruvar.
  இங்கேநம்மாளுங்களைப்பார்க்கலாம். ஆனால் இவங்க மூணு வருஷம் முன்னாடி போஸ் கொடுத்தவங்க!போட்டிக்கெல்லாம் அனுப்பறதில்லை. நம்ம திறமையோட அவங்களாலே எல்லாம் போட்டி போட முடியாதாக்கும்! :)))))))

  பதிலளிநீக்கு
 4. ராமலஷ்மி அக்கா அளவுக்கு இல்லன்னாலும் ஏன் இந்தப் படங்களுக்கு என்ன குறை.சத்தியமா சிரிக்கல.ரசிச்சேன் !

  பதிலளிநீக்கு
 5. பரவாயில்ல சார் நல்லாத்தான் இருக்கு! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. எல்லாம் நல்லாவே இருக்கு. ஹேமா சொன்ன மாதிரி சிரிக்காம, ரசிச்சு பாத்தேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!