செவ்வாய், 20 டிசம்பர், 2011

வாசகர்களுக்குக் கேள்விகள் 1

                          
பத்திரிகைகளில் கேள்வி பதில் பகுதி வரும். வாசகர்கள் கேள்விகளுக்கு பத்திரிகை ஆசிரியர்கள் பதில் சொல்வார்கள்.
                
இங்கு ஒரு மாறுதல்.   
                
நீங்கள் பதில் சொல்ல இங்கு கேள்விகள்.
              
1)  இதுவரை எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்து விட்டன. இன்னும் பத்து வருடங்களில் வரும் என்று எதிர்பார்க்கும் அல்லது வரவேண்டும் என்று நீங்கள் விரும்பும் ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு என்ன?
 
              
2) வாழ்வில் ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் நபரும், அவரிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கும் கேள்வியும்... (அல்லது கேள்விகளும்) 
          
3)  இன்றைய இளைய தலைமுறையிடம் இல்லாத ஆனால் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் விஷயம் என்ன?   
                    

25 கருத்துகள்:

 1. 2.ஆங் சான் சூகி .கேள்வி:எப்படி உணர்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
 2. இன்றுள்ளவர்களிடம் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் சுத்தமாக அற்றுப்போனது. அவர்களுக்கு மீண்டும் வாசிக்கும் பழக்கம் வரவேண்டும் என்று ஆசை படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. மனித மனங்களை அறிய ஒரு இயந்திரம்,கடவுளைக் காண ஆசை,இன்றைய தலைமுறையினருக்கு பெரியவர்களை மதிக்கும் குணம் வேண்டும் !

  பதிலளிநீக்கு
 4. 1. எரிபொருள்-மாற்றுக் கண்டுபிடித்தே தீரணும். ஏற்கெனவே விலை ஏற்றம் அதிகம்.

  2. கடவுள்-- எப்படி இப்படில்லாம்???????


  3.இளைய தலைமுறைக்கு மாரல் சைன்ஸும், சிவிக் சென்ஸும் தேவை.

  பதிலளிநீக்கு
 5. 1. விலைவாசி, பத்துவருடங்களிலாவது குறையுமா?

  2. கடவுள், அரசியல்வாதிங்க நேர்மையா எப்போ மாறுவாங்கனு கேட்பேன். பாவம் நல்லா மாட்டிப்பார். சும்மாப் பிச்சு உதறிட மாட்டோமா!

  3. அது எப்படிங்க சினிமா ஷ்டாருங்களைப் பத்தின உடனே பதில் வேகமா வருது! மத்ததுக்கெல்லாம் பதிலே வரதில்லை? :P

  பதிலளிநீக்கு
 6. 1. பத்துவருடங்களுக்குப் பின்னரும் இதே கூட்டணி அரசுதான் தொடருமா?>

  2. கடவுள், அதுக்குள்ளே என்னைக் கூப்பிட்டுக்கோப்பா!

  3. இளையதலைமுறையே, உங்களை நீங்களே பார்த்துண்டாத் தான் உண்டு.

  பதிலளிநீக்கு
 7. 1. பத்து வருடங்களிலாவது எங்க காலனியிலே சாலைகள் போடப்படுமா?

  2. பாதாளச் சாக்கடைத்திட்டம் அடுத்த பத்துவருடங்களிலாவது செயல்படுமா? அதைப் பார்க்க நான் இருப்பேனா?

  3. இளைய தலைமுறைக்காவது இந்த வசதியெல்லாம் கிட்டி சந்தோஷமா இருக்குமா? இளைய தலைமுறை அதற்கேற்றவாறு சுத்தமும், சுகாதாரமும் கற்குமா?

  பதிலளிநீக்கு
 8. நீங்க பதிலே சொல்றதில்லை. நாங்க மட்டும் கேள்வி கேட்கணுமாக்கும்! முடியாத், போங்க.

  பதிலளிநீக்கு
 9. 1. மற்றவர்களின் எண்ணங்களை அறியச் செய்யும் ஒரு மிஷின்.
  2. ஐரோம் ஷர்மிளா: கேள்வி: உங்களால் எப்படி சாத்தியமானது?
  3. நேரத்தை மதிக்க வேண்டும். நேர நிர்வாகம் என்ற ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 10. //ஹேமா said...

  மனித மனங்களை அறிய ஒரு இயந்திரம்,//

  //கணேஷ் said...

  1. மற்றவர்களின் எண்ணங்களை அறியச் செய்யும் ஒரு மிஷின்.//


  இதோ வந்துகிட்டேயிருக்கு!!

  Mind reading devices on their way

  பதிலளிநீக்கு
 11. ஹேமா சொன்ன பதில்களை காப்பி அடித்து கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. //வரவேண்டும் என்று நீங்கள் விரும்பும் ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு//

  பத்து வருஷம் கழிச்சு இல்லை, இப்பவே வேணும். நான் மனசுல நினைக்க நினைக்க, கண்ணுக்குத் தெரியாத அளவு சின்னதா இருக்கிற அந்த மெஷின் டைப் பண்ணிகிட்டே இருக்கணும் - பதிவுகளை.

  வேலைகள் செஞ்சுகிட்டிருக்கும்போது இத எழுதலாமே, அத எழுதலாமேன்னு மனசுல ஓடுது.. ஆனா, கீ போர்ட் முன்னாடி உக்காந்தா... வார்த்தை வரமாட்டேங்குது... எக்ஸாம் ஹால்ல உக்காந்த மாதிரி. :-(((

  (ஆடியோ ரிகார்டர் வெச்சுக்கலாமேன்னு கேக்காதீங்க... வேல செஞ்சுகிட்டே சம்பந்தமில்லாம எதாவது பேசிகிட்டிருந்தா, கூட இருக்கவங்க நம்மளை.. ஸாரி, என்னை, “லூஸு”ன்னு டவுட்டை கன்ஃபர்ம் பண்ணிட மாட்டாங்க? அதான் சத்தமில்லா இனிமை கேட்டேன்... :-)) )

  பதிலளிநீக்கு
 13. //இன்றைய இளைய தலைமுறையிடம் இல்லாத ஆனால் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் விஷயம் என்ன?//

  அம்மா, அப்பா சொல்றதை, (சாப்பிட வான்னு சொன்னாகூட) ஆர்க்யூ பண்ணிகிட்டேஏஏஏஏ இருக்காம, புரிஞ்சு ஏத்துகிட்டு நடக்கிற நல்ல புத்தி.

  (நான் குழந்தையா இருக்கச்சே, எங்கம்மாவும் இதத்தான்

  .... கேட்டிருப்பா... !!!!)

  பதிலளிநீக்கு
 14. 1. கொடிய நோய்களைத் தீர்க்க வல்ல இயந்திரம்.

  பதிலளிநீக்கு
 15. அதிசய கண்டுபிடிப்பு அல்ல, அவசிய கண்டு பிடிப்பு.. சூரிய சக்தியில் ஓடும வண்டிகள், சூரிய ஒளியில வீட்டுக்கு மின்சாரம்.

  ஊழல பெருச்சாளிகளில் ஒருவரை நேரில் பார்த்து கேட்க விரும்பும் கேள்வி: இவ்வளவு பணத்தையும் எப்படி செலவிடுவீர்கள்? இன்னும் ஏன் சம்பாதிக்க ஆசை?

  இளைய தலைமுறையினருக்கு முந்தைய தலைமுறையினர் பால் சற்று பொறுமை வேண்டும் என்று எண்ணுகிறேன்.

  பதிலளிநீக்கு
 16. 1. தண்ணியில்லாமல் துணி துவைக்கும் இயந்திரம்/ பெட்ரோலுக்கு மாற்று சக்தி.
  2. புத்தகம் படிக்கும் வழக்கம்.

  பதிலளிநீக்கு
 17. எனக்குக் கேள்வி கேட்கவும் தெரியாது.பதில் சொல்லவும் தெரியாது!

  பதிலளிநீக்கு
 18. கீதா சாம்பசிவம் கேள்வியின் நாயகியா? இந்தப் பின்னு பின்றாங்களே?

  பதிலளிநீக்கு
 19. வரும் என்று எதிர்பார்ப்பது பக்கவிளைவில்லாத பசியடக்கும் என்சைம்.
  வரவேண்டும் என்று விரும்புவது குறைந்த செலவில் அதிகமாகத் தயாரித்து வினியோகிக்கக் கூடிய செயற்கை அரிசிக்கான என்சைம்.

  வரும் என்று எதிர்பார்ப்பது இணைய வர்த்தகத்துக்கானப் பொதுப் பணம்.
  வரவேண்டும் என்று விரும்புவது இணைய வழியே உலகத்தரக் கல்வி.

  வரும் என்று எதிர்பார்ப்பது தண்ணீர் தேவைப்படாத சலவை எந்திரம்
  வரவேண்டும் என்று விரும்புவது சலவை தேவைப்படாத துணி.

  வரும் என்று எதிர்பார்ப்பது தினசரி உபயோகத்துக்கான வயர்லெஸ் மின்சாரம்.
  வரவேண்டும் என்று விரும்புவது தினசரி உபயோகத்துக்கான மின்சாரம்லெஸ் சாதனங்கள்.

  வரும் என்று எதிர்பார்ப்பது கேன்சருக்கு சிங்கில் டோஸ் மருந்து.
  வரவேண்டும் என்று விரும்புவது தலைவலிக்கு சிங்கில் டோஸ் மருந்து.

  ஒரு முறையாவது சந்திக்க எண்ணும் நபர்: பில் கேட்ஸ். கேட்க விரும்பும் கேள்வி: ஒரு ரூபாய்க்கு சில்லறை இருக்குமா?

  இளைய தலைமுறையினரிடம் இல்லாத, ஆனால் இருக்க வேண்டும் என்று விரும்புவது: மூத்த தலைமுறையின் தவறுகளை அறியும் திறன், மூத்த தலைமுறையின் குறைகளை மன்னித்து மறக்கும் பக்குவம்.

  பதிலளிநீக்கு
 20. அப்பாதுரை சார்... பல வருஷ ஆய்வுக்கு தேவைப்படும் கருத்துகளை பின்னுட்டத்தில போட்டுடீங்க..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!