வியாழன், 29 டிசம்பர், 2011

இரண்டிரண்டாக....காட்சியும் கானமும்...



இது சாரமதியில் எம் கே டி பாவகத்ர், ச்சே...பாட்டு போட்டாலே ஸ்லிப் ஆஃப் தி டங் வந்துடுது......பாகவதர் பாடிய பாடல். காட்சியோடு கிடைக்காதது என் குற்றமல்ல...!



இது சிந்துபைரவியில் கே ஜே யேசுதாஸ் அதே ராகத்தில் பாடும் பாடல். இளையராஜா இதில் செய்திருக்கும் புதுமை 'மரி மரி நின்னே' என்கிற இந்தப் பாடல் ஒரிஜினலாக வேறு ராகம். அதை இளையராஜா சாரமதியில் போட்டிருக்கிறார்.



தெலுங்கில் வெளிவந்த ஏக் துஜே கேலியே.....கமல் இளமையில் இந்தப் பாடலில் எப்படி இருக்கிறார்...? சரிதாவுக்கு இதுதான் முதல் படம் என்று நினைவு! சிவரஞ்சனி ராக பேஸ்!


இது ஹிந்தியில் வெளிவந்த மரோ சரித்ரா....அதே காட்சி. அதே நடிகர். மத்தியவயது கமல்! சரிதாவின் இடத்தில் ரத்தி அக்னிஹோத்ரி. அதே சிவரஞ்சனி ராக அடிப்படையில்...


டிஸ்கோ டான்சர் படத்தில் கேமி கேமி பாடல் தெரிவு செய்தேன். காட்சியில் அதன் தமிழ்ப் பாடல் கிடைக்காததால் கிடைத்ததைப் பகிர இந்தப் பாடல்! ஹிந்தியில் மித்துன்...



தமிழில் ஆனந்த் பாபு...நாகேஷ் மகன்... 

23 கருத்துகள்:

  1. ஏக்துஜே கேலியேவில் நடிக்கும் போது கமலுக்கு மத்திய வயதா? இருபத்தி ஏழு வயது தானே.

    பதிலளிநீக்கு
  2. //இது சாரமதியில் எம் கே டி பாவகத்ர், ச்சே...பாட்டு போட்டாலே ஸ்லிப் ஆஃப் தி டங் வந்துடுது......பாகவதர் பாடிய பாடல்..//

    அந்தக் காலத்தில் பாடத் தெரிவது கதாநாயகனுக்கான ஸ்பெஷல் தகுதி! அதனால் தான் பெரும்பாலான கதாநாயகர்கள் பின்குரல் இன்றி தாங்களே பாடவும் செய்தார்கள்.

    பாகவதர் பாட்டு என்று தான் சொல்றதே வழக்கமாக இருந்தது.
    அதனால் சாரமதியில் பாகவதர் பாட்டு என்று நீங்கள் எழுதியிருந்தாலும் சரியே. பாடலாசிரியர் யாராயிருந்தாலும், அவரே பாடியிருப்பதால் இப்படி அழைத்ததும் ஓரளவுக்குப் பொருத்தமாகத் தான் இருந்தது.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பாடல்கள் தொகுப்பு. எம்.கே.டி.யின் இந்தப் பாடல் வீடியோவுடன் என் சித்தப்பாவின் பிசியில் பார்த்த நினைவு ஸ்ரீராம் சார். கிடைத்தால் புத்தாண்டில் தருகிறேன். என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு...

    பதிலளிநீக்கு
  4. ராகம் தெரியாவிட்டாலும் ரசித்த பாடல்கள். மரோசரித்ரா மட்டும் கேட்டதில்லை. நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பாடல்கள்.அத்தனையும் மனதில் நிற்பவை.

    பதிலளிநீக்கு
  7. சிந்துபைரவி ராகத்தை காதை மூடிக் கொண்டு கேட்கப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  8. சிவரஞ்சனி ரெண்டு தெரு தள்ளி நின்னு கேட்கப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  9. ஆனந்த்பாபுவா? டான்ஸ் மிதுனை விட நல்லா இருக்கு.

    பிள்ளையின் திறமையை தந்தையின் திறமையுடன் ஒப்பிடுவது முறையில்லை என்றாலும் தவிர்க்க முடியவில்லை. தலைமுறை நடிப்பு என்று வரும்பொழுது.. கார்த்திக் ஓரளவுக்கு முத்துராமனைத் தொட்டார் என்றாலும், better என்று சொல்லமுடியுமா தெரியவில்லை. மூத்தவரை விட இளையவர் மேலென்று சொல்லும்படி நட்சத்திரங்கள் யாராவது இருக்கிறார்களா?

    பதிலளிநீக்கு
  10. ஆனந்த்பாபு வையும் நாகேஷையும் ஒப்பிடக் கூடாது. நாகேஷ் பாபுவைக் கசரத் வாங்குவதை நான் பார்த்திருக்கிறேன். சவேரா ஸ்விம்மிங்க் பூல் என்று நினைவு.
    திருப்பித் திருப்பி நீந்த வைப்பார்.
    அதேபோல முத்துராமனின் திறமையே தனி. கார்த்திக் மன முதிர்க்சி பெறுவதற்கே அவருக்கு வருடங்கள் பிடித்திருக்கும்.சிவாஜி...பிரபு இதே போலத்தான்.
    எல்லா அப்பாக்களும் பாடுபட்டு முதலிடம் பிடித்தார்கள்.
    பிள்ளைகள் காலம் வேறாகிவிட்டது. பசிக்கிற வயிற்றுக்குத் தானே
    தேவை அதிகம்.!!

    பதிலளிநீக்கு
  11. துரை , எடுத்த தொழிகள் வேறாக இருந்தாலும், ஸ்ரீவித்யாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அம்மாவுக்கும் மேல்.:)
    இன்ஃபாக்ட் அப்பா குறுக்கீடில்லாமல் தனியாக வந்தவர்கள் திரையுலகில் முன்னேற சந்தர்ப்பங்க்கள் அதிகம்.

    பதிலளிநீக்கு
  12. எனக்கும் ஸ்ரீவித்யா நினைவுக்கு வந்தார். class act!

    பதிலளிநீக்கு
  13. அப்பாவுக்கு மிஞ்சின பிள்ளை என்று பார்த்தால், எனக்கு சில சமயம் பிரபு சிவாஜிக்கு மிஞ்சி இயற்கையாக நடிப்பதாகத் தோன்றும். சிவாஜி மட்டுமல்ல எல்லா லேஜெண்டுகளுக்கும் ஸ்டார் பிரசன்ஸ் என்ற காம்ப்ளெக்ஸ் உண்டு, இருக்கும். " ஏண்டா சாந்தி தியேட்டர் எனக்கே காட்டுகிறாயா " என்று ஒரு வசனம் ஏதோ ஒரு படத்தில் சிவாஜிக்கு வைத்திருந்து அவரும் அதை ரசித்துப் பேசுவார். அண்ணே, நீங்க தனி அண்ணே, உங்களை மாதிரி வராது என்று எலாம ஜால்ரா வசனங்கள் நினைவுக்கு வரவில்லையா?

    பதிலளிநீக்கு
  14. ஶ்ரீவித்யாவின் கண்ணே போதுமே. அது நடிக்காத நடிப்பா! பாடவும் செய்வார்; ஆடவும் செய்வார். பாவம்! :(

    பதிலளிநீக்கு
  15. எவ்வளவு நல்லா நடிச்சிருந்தாலும் கமல் எனக்குப் பிடிச்ச ஹீரோ இல்லை. முத்துராமனை கார்த்திக்கோடு கம்பேர் செய்யவே முடியாது! கார்த்திக் வேறே ரகம்; அதே மாதிரித் தான் சிவாஜி, பிரபுவும்.

    பதிலளிநீக்கு
  16. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒருத்தரே எத்தனை ஓட்டு வேணாலும் போடலாம்னு சொன்னீங்க! ஆனால் எனக்கு ஒரு ஓட்டுக்கு மேலே போடமுடியலை! :P மறுபடி பார்க்கணும். கீதா சந்தானத்துக்கு இப்போவே வாழ்த்துகளைச் சொல்லிடறேன். அவங்க அண்ணா எத்தனை ஓட்டுப் போட்டாரோ! :)))))))))

    இங்கே பதிவுலகில் இருக்கும் அண்ணாக்கள் எல்லாம் எனக்காக ஓட்டக் கூடாதா?
    அது சரி, எங்கள் ப்ளாக், கான்வாசிங் இல்லையா? கான்வாஸ் செய்து பார்க்கிறேனே!

    பதிலளிநீக்கு
  17. எங்கள் ப்ளாக்5 ஜனவரி, 2012 அன்று 7:35 AM

    கீதா சாம்பசிவம் மேடம் - கான்வாசிங் உண்டு. நீங்க உங்கள் தரப்பு வாதங்களை, உங்களுக்கு வோட்டுப் போட்டால் வாக்காளப் பெருமக்களுக்கு என்ன இலவசம் கொடுப்பீர்கள் என்று எழுதி engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். ஜனவரி பதினான்காம் தேதி வரை வாக்குப் பதிவு இருக்கின்றது. ஒரு கை பார்த்துவிடலாம்!

    பதிலளிநீக்கு
  18. கீதான்னு 2 பேர் இருப்பதால் வந்த குழப்பமாக இருக்கலாம். நான் உங்களுக்கு தான் போட்டேனுங்க!

    பதிலளிநீக்கு
  19. சூர்யா சிவகுமாரை விட versatile.

    பதிலளிநீக்கு
  20. ஒரு ஓட்டுக்கு ஒரு ஆடு, ஒரு ரெப்ரெஜிரேடர், ஏசி கார் இலவசம். இன்னும் நிறைய இலவசத் திட்டங்கள் வருகின்றன. சைனாவில் ஆர்டர் கொடுத்து செய்ய வேண்டியிருப்பதால் தாமதமாகிறது. அதற்காக ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  21. சூர்யா பற்றி இன்னொரு நண்பரும் சொன்னார்.. அவருக்கு சிவகுமார் பிடிக்காது என்பது தெரிந்ததால் நான் எதுவும் சொல்லவில்லை :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!