திங்கள், 5 டிசம்பர், 2011

தேவ் ஆனந்த்


ஹிந்தித் திரையுலகின் காதல் மன்னன், என்றும் பதினாறு, மார்க்கண்டேயன் என்றெல்லாம் அழைக்கப் பட்ட தேவ் ஆனந்த் நேற்று தனது எண்பத்தெட்டாவது வயதில் லண்டனில் காலமானார். இந்த வருடம் கூட 'சார்ஜ்ஷீட்' என்ற பெயரில் ஒரு படம் வெளியிட்டு விட்டு அடுத்த படத்தை யோசிப்பதற்காக ஒரு சிறிய இடைவெளி ஏற்படுத்திக் கொண்டு லண்டன் சென்றாராம்.

தமிழ்நாட்டிலும் எங்களைப் போன்ற பல ரசிகர்கள் அவர் நடித்த படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறோம். அவர் படங்களில் இடம்பெற்ற சில பாடல்களைப் பதிவில் காட்டி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.


இந்தப் பாடலைக் கேட்ட நினைவு உள்ளதா....? தமிழில் இந்த மெட்டை சூட்டோடு சூடாக காபி செய்து விட்டார்கள்! 
     
இப்போது பார்த்த பாடல் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படத்தில் வரும் பாடல். இதில் வரும் வேறு இரு பாடல்கள் எங்கள் ப்ளாக் பதிவில் ஏற்கெனவே வந்து விட்டதால் இந்தப் பாடலை இணைக்கிறோம்.

தேவ் ஆனந்த் மிசா காலத்தில் இந்திரா காந்தியை எதிர்த்து கிளர்ச்சிகள் செய்ததும் ஒரு கட்சி ஏற்படுத்திக் கலைத்ததையும் செய்திகள் சொல்கின்றன.


ரஃபியின் குரலில் ஒரு இனிய பாடல். இது கூட தமிழில் நகல் எடுக்கப் பட்டுள்ளது. அதுவும் சமீபத்தில் என்ன பாடல் தெரியுமோ....? 

'கைட்' திரைப் படத்தில் வரும் பாடல். எவர் க்ரீன் ஹீரோ தேவ் ஆனந்த் போல எவர் க்ரீன் பாடல் இது. கிஷோரின் இனிய குரலும் எஸ் டி பரமனின் இசையும் மயக்கும் தன்மை கொண்டது.


இந்தப் பாடலைக் கூட தமிழில் திறமையாக காபி செய்திருக்கிறார்கள். சரணத்தில் காபி செய்த பாடல் நினைவுக்கு வரும். இந்தப் படத்தில் 'பன்னா கி தமன்னா' பாடலை பதிவில் இணைக்க நினைத்திருந்தும் இந்தத் தகவலுக்காக இந்தப் பாடலை இணைத்துள்ளோம்!

1946  முதல் நடித்து வந்தாலும் 110 படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது ஒரு ஆச்சர்யம்.
      

10 கருத்துகள்:

 1. பல நினைவுகளைக் கீறிய வருத்தமான செய்தி. தேவ் ஆனந்த் எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ. தன் நிலையை என்றைக்கும் விட்டுக்கொடுக்காத, நன்றாக வாழ்ந்த, திறமைசாலி. மறக்க முடியாத கலைஞர். தனிப்பாணிக் கலைக்கண் இருந்தும் அதை முழுமையாக வெளிக்கொணராமல், இயக்குனரின் கலைஞராகவே பெரும்பாலும் பிரகாசித்தவர். தேவ் ஆனந்தின் புன்னகை கோடி பெறும். தலைமுறை நழுவுவதைத் துல்லியமாக உணர வைக்கும் சில மரணங்களுள் ஒன்று.

  பாடல்களுக்கு நன்றி. நல்ல அஞ்சலி.

  பதிலளிநீக்கு
 2. தேவ் ஆனந்த் எனக்கு மிகவும் பிடித்த அழகான ஹீரோ. நீங்கள் எழுதி இருப்பது போல் இவர் என்றும் பதினாறு தான். இவர் நடித்த படங்களின் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும். இவருடைய 'gaata rahe mera dil' பாடல்தான் நான் முதன் முதலில் கேட்ட ஹிந்தி பாடல். அப்படியே என் மனதை அள்ளிக் கொண்டு சென்று விட்ட பாடல் இது. பைத்தியம் பிடித்ததுபோல் பலமுறை கேட்டிருக்கிறேன் இந்த பாடலை. இதை தொடர்ந்துதான் நான் ஹிந்தி பட பாடல்களையே மிகவும் விரும்பி கேட்க தொடங்கினேன். இவர் மறைவு ஒரு பெரும் இழப்புதான். அருமையான பாடல்களை தொகுத்து அஞ்சலை செய்திருகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 3. இளம் வயது நினைவுகளைக் கிளறி விட்டு விட்டீர்கள்! தேவ் ஆனந்தின் ' தேரே மேரே சப்னே', 'அபி அபி' பாடல்கள் அழியாப்புகழ் பெற்றவை!! உருகி உருகி கேட்டது நினைவுக்கு வருகின்றது!!
  அருமையான பதிவிற்கு நன்றி!!

  பதிலளிநீக்கு
 4. எனக்கு பிடித்த சில இந்தி ஹீரோக்களில் தேவ் ஆனந்த்தும் ஒருவர். பாடல்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. எனக்கு பிடித்த ஹிந்தி நடிகர்.அவருடைய guide படத்தை என்னால் மறக்கவே முடியாது.
  ஆங்கில நடிகர் Gregory peck சாயல் இருக்கும் அவரிடம். அதனாலேயே எனக்கு அவர் படங்கள் மிக பிடிக்கும்.

  நல்ல அஞ்சலி பதிவு. பாடல்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. இனிமையான பாடல்களுடன் நல்லதொரு நினைவஞ்சலி.. வயசாகாம இளமையாவே எப்பவும் இருக்கறது எப்படீன்னு இவர்கிட்டத்தான் கத்துக்கணும்.

  பதிலளிநீக்கு
 7. நல்லதொரு நினைவஞ்சலி. பாடல் பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அருமையான பகிர்வு
  இந்த காப்பியடித்தல் பல காலமா தொடருது பொல இருக்கே

  பதிலளிநீக்கு
 9. இனிமையான பாடல்கள்.ஹிந்தி அறிமுகங்கள் மிகக்குறைவானாலும் இவரைக் கண்டிருப்பதாக ஞாபகம்.நடிகருக்கு என் அஞ்சலிகள் !

  பதிலளிநீக்கு
 10. மகத்தான கலைஞனுக்கு சிறப்பான அஞ்சலி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!