Tuesday, May 21, 2013

துள்ளித் திரிந்ததொரு காலம்


குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்
கொடுக்காப்புளி புளியங்காய்
திருட்டு மாங்காய்ச் சுவையும்
குட்டிப் போடும் என்று காத்திருந்த
மயிலிறகும்

சீவிய பென்சில் துகள்களைப்
பாலில் ஊற வைத்து
ரப்பராகக் காத்திருந்ததும்
சாணி மிதித்த நண்பன்
தொட்டால் தீட்டு என
கொடுக்கு வைத்துக் கொண்டு
வெறுப்பேற்றிய நாட்களும்

பள்ளி விட்டு
நடந்து வந்த பாதையில்
நண்பன் கையில் கடிகாரம் கண்டு
நேரம் கேட்ட
கல்லூரி ஏந்திழைக்கு
வெட்க பதில் சொன்ன
நண்பனை
அதைச் சொல்லியே 
அழவைத்த நினைவுகளும்

சீரான இடைவெளியில்
வீட்டை விட்டு
ஓடிப் போய் விடும்
நண்பனும்
தற்கொலை செய்து கொள்ள
யோசனையும்,
'சாகும்வரை கூடப் படு'
என்று துணையும்,
கேட்ட நண்பனுக்குத் 'துணை'
ஏற்பாடு செய்த நினைவுகளும்

நூலகத்தில் 'அவள்'
எந்தப் புத்தகம் கையில் எடுத்தாலும்,
'நீங்க படிச்சுட்டு எனக்கு'
என்று அருகிலேயே
பார்வையால் வருடிக்
காத்திருந்த நாட்களும்,
காலனி சினிமாவில்
கன்னியவள் அருகிலேயே
இடம்பிடிக்க ஓடி
நண்பர்களின் கிண்டல்,
விரோதம் தேடிய நாட்களும்,

பள்ளிப்பணம் கட்ட வழியின்றி
மாதா கோவில் பின்புறம்
பாடி இருந்த நாட்களும்,
காய்கறி அடுப்புக்கரி
வாங்குவதில்
கமிஷனும்
குச்சி ஐஸ் பால் ஐஸ் வாங்கிக்
கையொழுக நக்கியதும்.........துள்ளித் திரிந்ததொரு காலம்....


***************************************************

 நினைப்பாயா அம்மா...

கடுத்த தோசையும்
கசப்புக் காஃபியும்
எப்போது சுவைத்தாலும்
வந்து விடுகிறது
அம்மாவின் நினைவு...

சொர்க்கத்தில்
அடை அவியலும் தவலை வடையும்
கிடைத்தால்
அம்மாவும் நினைக்கக் கூடும்
என்னை...

25 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைத்தது துள்ளித் திரிந்ததொரு காலம்...

மறக்கவே முடியாதது அம்மாவின் நினைவு...

வாழ்த்துக்கள்...

Geetha Sambasivam said...

//குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்//

குருவி ரொட்டி?? சாப்பிட்டதில்லை! :(


//கொடுக்காப்புளி //

கொடுக்காப்புளி சாப்பிட்டிருக்கேன்

//புளியங்காய்
திருட்டு மாங்காய்ச் சுவையும்//

ம்ஹூம், சான்ஸே இல்லை. :)))

//குட்டிப் போடும் என்று காத்திருந்த
மயிலிறகும்//

ஆமாம், காத்திருந்திருக்கேன். :))))

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, பி.தொ. க்ளிக் செய்ய வரலை! :)))))//

அடுத்த ரெண்டு பத்தி நோ சான்ஸ்!:))))

Geetha Sambasivam said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இன்னமும் க்ளிக் பண்ண முடியலை. :((((//

//சீரான இடைவெளியில்
வீட்டை விட்டு
ஓடிப் போய் விடும்
நண்பனும்
தற்கொலை செய்து கொள்ள
யோசனையும்,
'சாகும்வரை கூடப் படு'
என்று துணையும்,
கேட்ட நண்பனுக்குத் 'துணை'
ஏற்பாடு செய்த நினைவுகளும்//

இதைப்பத்தி குறித்த ஒரு உண்மையானதொரு நிகழ்வே இருக்கு!

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, "இதைக் குறித்த"னு வந்திருக்கணும். :))))

Geetha Sambasivam said...

அடுத்த ரெண்டுக்கும் சான்சே இல்லை!

Geetha Sambasivam said...

//பள்ளிப்பணம் கட்ட வழியின்றி
மாதா கோவில் பின்புறம்
பாடி இருந்த நாட்களும்,//

ஸ்கூல்லே ஃபீஸே இல்லை!


//காய்கறி அடுப்புக்கரி
வாங்குவதில்
கமிஷனும்//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை. அப்பா, அம்மா தவிர அண்ணன், தம்பி கூடப் போய் வாங்க முடியாது! :))))))


//குச்சி ஐஸ் பால் ஐஸ் வாங்கிக்
கையொழுக நக்கியதும்.........//

ஹிஹிஹி, தெரியாமல் வாங்கிச் சாப்பிட்டது. ஸ்கூல் பஸ்ஸுக்குக் கொடுக்கும் காசில் மிச்சம் பிடிச்சு, ஸ்கூல்லே இருந்து நடந்தே வந்து, காசை மிச்சம் பிடிச்சு வழியில் ஸ்டேட் ஐஸ் பால் ஐஸ் வாங்கித் தின்ன அனுபவம் உண்டு.

Geetha Sambasivam said...

கடுத்த தோசை//

புளியா தோசையா???

அடையே இப்போல்லாம் பண்ண முடியலை. :))))
தவலை வடை போன மாசம் பண்ணினேன். நம்ம சாப்பிட்டலாம் வாங்க பதிவிலே ரெசிபி இருக்கு, பாருங்க. :)))))

s suresh said...

இரு வேறுபட்ட சுவைகளில் இருவேறு கவிதைகள்! இரண்டும் அருமை! வாழ்த்துக்கள்!

இளமதி said...

துள்ளித் திரிந்த காலத்தில்
அள்ளி அனுபவித்த அத்தனையும்
சொல்லிய சுகம் சேர்த்ததுடன்
நுள்ளியதோ தாயின் கைபக்குவமே...

அருமை இரண்டு கவிதைகளும்! வாழ்த்துக்கள்!

T.N.MURALIDHARAN said...

எங்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டது உங்கள் துள்ளித் திரிந்த காலம்.

பால கணேஷ் said...

Amma kavithai negizhvu. Thulli tirintha kalammm rasanai. Both are super.

கோமதி அரசு said...

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்
கொடுக்காப்புளி புளியங்காய்

குட்டிப் போடும் என்று காத்திருந்த
மயிலிறகும்

சீவிய பென்சில் துகள்களைப்
பாலில் ஊற வைத்து
ரப்பராகக் காத்திருந்ததும்
என் சிறு வயதிலும் உண்டு .
அந்தக் கால பிள்ளைப்பருவம் கவலை இல்லாமல் துள்ளி திரிந்தகாலம் மகிழ்ச்சிகரமானது.

அம்மாவின் கை பக்குவத்தை தேடும் கவிதை நெகிழ வைத்துவிட்டது.

rajalakshmi paramasivam said...

எனக்கும் அந்த நாள் நினைவுகள் வந்ததே நண்பரே

ஸாதிகா said...

பழைய நினைவுகளை உங்கள் கவிதை வரிகள் மீட்டெடுத்து விட்டன.

Ilham Pratama said...

Thank you for making this interesting article. I'm happy to visit here

Ranjani Narayanan said...

துள்ளித் திரிந்த காலத்தின் நினைவுகள் எங்களையும் அந்தக் காலத்திற்கு கூட்டிக் கொண்டு போனது.

சீனு said...

//கொடுக்காப்புளி கொடுக்கு கையொழுக நக்கியதும்.........//
துள்ளித்திரிந்த காலத்தின் மீது மீண்டும் ஏக்கம் பொங்குகிறது... நிச்சயமாய் மீண்டும் கிடைக்கப் பெறா தருணங்கள்

Anonymous said...

எதைப் பற்றியும் கவலைப்படாத காலம்..கொடி ஆப்பிள் தெரியுமா?

வல்லிசிம்ஹன் said...

புளியங்காய் உண்டு.
கொடுக்காப்புளி உண்டு.
திருட்டுப் புளிஉப்பு சாம்பார் உண்டு.
மயிலறகு ஆமாம். லேபல் கலெக்ஷன் இல்லையா.(புலி , சீட்டா)
கடுத்த மாவு தோசை ம்ம் உண்டு உண்டு.
அம்மா கைமணம் எதிலும் யாருக்கும் வராது.
நன்றி ஸ்ரீராம். அருமையான பாடல்.

ராமலக்ஷ்மி said...

துள்ளித் திரிந்ததொரு காலம்... எத்தனை இனிய நினைவுகள்:)!

இரண்டாவது கவிதை நெகிழ்வு.

ரூபக் ராம் said...

//குச்சி ஐஸ் பால் ஐஸ் வாங்கிக்
கையொழுக நக்கியதும்.........//
உங்கள் கவிதை நான் துள்ளித் திரிந்த காலத்தின் நினைவுகளுக்கு என்னை கொண்டு சென்று விட்டது.

ezhil said...

இரண்டு நினைவுகளுமே மறக்க இயலாதவை.. இன்றைய தலைமுறைக்கு இப்படியான துள்ளித் திரிந்த காலம் உண்டா? யோசித்தால் வருத்தமே மிஞ்சுகிறது..

இமா said...

ரசித்தேன் உங்கள் எழுத்தை. :)
// சீவிய பென்சில் துகள்களைப்
பாலில் ஊற வைத்து
ரப்பராகக் காத்திருந்ததும்// நிஜமாவா!! :)
'நினைப்பாயா அம்மா?' மனதைத் தொட்டது.
இரண்டு கவிதைகளுமே அருமை.

ஸ்ரீராம். said...

DD, நன்றி!

கீதா மேடம், குருவி, நாய், பூனை என்ற வடிவங்களில் இருக்கும் பிஸ்கட்டுகள். //இதைக் குறித்த ஒரு உண்மையானதொரு நிகழ்வே இருக்கு!// உங்களுக்கும் தெரியுமா? நான் சொல்லியிருப்பதும் உ,நி தான்!

நன்றி 'தளிர்' சுரேஷ்.

நன்றி இளமதி.

நன்றி TRM,

நன்றி பால கணேஷ்,

நன்றி கோமதி அரசு மேடம்,

நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்,

நன்றி ஸாதிகா,

நன்றி ilham pratama,

நன்றி ரஞ்சனி நாராயணன் மேடம்,

நன்றி சீனு,

நன்றி புதுவை கலியபெருமாள்,

நன்றி வல்லிம்மா, (லேபல் கலெக்ஷன் இல்லை. சிகரெட் அட்டைகள் உண்டு!!)

நன்றி ராமலக்ஷ்மி,

நன்றி ரூபக் ராம்,

நன்றி எழில்,

நன்றி இமா.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!