செவ்வாய், 7 மே, 2013

அலேக் அனுபவங்கள் 20:: புதிர் மனிதர்கள்!


அலேக் அனுபவங்கள் தொடரை படிப்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு: இது தொடர் அல்ல, அதனால்தான் நான் ஒவ்வொரு பதிவின் கடைசியிலும் 'தொடரும்' என்று எல்லாம் எதுவும் போடுவது கிடையாது. ஆனால் தொடர்ந்து அடிக்கடி வரும். 
யார் எந்தப் பகுதியையும் எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம், அல்லலுறலாம்! 
ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத கட்டுரைகள். அப்படி தப்பித் தவறி முந்தைய கட்டுரை எதற்காவது தொடர்பு இருந்தால், அந்த இடத்திலேயே சுட்டி கொடுத்துவிடுவேன், முந்தைய கட்டுரைக்கு. 
*****************************************  
    
எனக்கு ஆரம்பப் பள்ளி நாட்களிலிருந்து மிகவும் பிடித்த விஷயம், புதிர் கணக்குகள், அறிவை தீட்டிப் பார்க்கின்ற வினோத கணக்குகள் போன்றவை. 

அதனால்தான் வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் பதிவில் (முன்பு) கேட்கப்பட்ட புதிர்க் கேள்விகள் எல்லாவற்றிற்கும் விடைகள் பதிந்தேன். 

என்னுடைய அப்பா நிறைய கேள்விகள் கேட்பார். எங்களை எல்லாம் சிந்திக்கத் தூண்டுவார். புகழ் பெற்ற காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் வாழைக்காய் - என்றால் காசுக்கு எவ்வளவு வாழைக்காய் என்ற கேள்வி, 

ஒரு குளத்தில் சில தாமரைப் பூக்கள் இருந்தன. சில குருவிகள் அங்கு பறந்து வந்தன, ஒவ்வொரு பூவிலும் ஒரு குருவி உட்கார்ந்தது. அப்போ ஒரு குருவிக்கு உட்கார பூ கிடைக்கவில்லை, எனவே ஒவ்வொரு பூவிலும் இரு குருவிகள் உட்கார்ந்தன, அப்படி உட்கார்ந்தால், ஒரு பூவிற்கு குருவி ஆசனம் ஆகின்ற பாக்கியம் இல்லை. எவ்வளவு பூ, எவ்வளவு குருவிகள் - என்பது போன்ற கேள்விகள் பல அவர் கேட்டு, நாங்கள் பதில் சொன்னது உண்டு. 

என்னுடைய நான்கு அண்ணன்களில் இருவர், புதிர் கேள்விகளுக்கு விடை காண்பதில் பயங்கரக் கில்லாடிகள். புதிர் கேள்விகளுக்கு விடை காண்பது மட்டும் இல்லை, அவர்கள் அந்த வகை கேள்விகளுக்கு, எக்ஸ் ஒய் எல்லாம் உபயோகித்து, விடையை எப்படி கண்டு பிடிக்கலாம் என்று உதாரணங்கள் மூலம் விளக்கிக் கூறுவார்கள். 
  
அசோக் லேலண்டில், கியர் ஷாப் என்ற இயந்திரப் பகுதி. வண்டியில் பொருத்தப் படுகின்ற பல்சக்கரங்களை உருவாக்குகின்ற எந்திரங்கள் உள்ள பகுதி. இந்தப் பகுதியில் இன்ஸ்பெக்ஷன் பகுதியில் பல இளைஞர்கள் அந்தப் பகுதி பல் சக்கர வேலை உட்பட மற்றும் பல் வேறு துறை ஆர்வம் மிக்கவர்களாக இருந்தார்கள். அந்தப் பகுதியில் ஆர் முரளி என்ற ஒரு நண்பரை சந்தித்தேன். அவர் ஆல் இந்தியா ரேடியோவில் நிலைய வீணை வித்வானாக பணிபுரிந்த திரு ராகவன் என்பவருடைய பையன். ஆர் முரளி, எம் எஸ் கோபாலகிருஷ்ணன் வாசிப்பது போலவே வயலின் வாசிக்கக் கூடியவர். 
    
அவர் அறிமுகப்படுத்தி, அவருடைய மற்ற நண்பர்களும் எனக்கு அறிமுகம் ஆனார்கள். 
   
அந்த நண்பர்களில் ஒருவர், ஐ ஏ எஸ் தேர்வுக் கேள்விகள் சில கேட்டார். என்னால் சிலவற்றிற்கு விடை கூற முடிந்தது. பல பதில்கள் தெரியவில்லை! 
   
அவர் ஒரு நாள் என்னிடம் கேட்ட கேள்வி : 

A is the father of B. But B is not A's son. Who is B? 

கொஞ்சம் யோசித்து, பி இஸ் டாட்டர் ஆப் ஏ. என்றேன். 
இந்த பதிலுக்காகவே காத்திருந்தவர் போல, அவர், ஒரு காகிதத்தில், 

Shivaji is father of Shambaji.
Shivaji is Shambaji's father's --------------------

என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். கோடிட்ட இடத்தில் ஒரே வார்த்தைதான் எழுதவேண்டும் என்று ஒரு கண்டிஷன் மட்டும் போட்டுவிட்டுப் போனார். 

என்னால் உடனே அதற்கு அப்பொழுது விடை எழுத முடியவில்லை. பல மணி நேரங்களுக்குப் பின் விடை கண்டு பிடித்தேன். 

********************************************
இண்டஸ்ட்ரியல் எஞ்சினீரிங் டிப்பார்ட்மெண்டில் எனக்கு பி ராஜேந்திரன் என்று ஒரு நண்பர். புதிர்க் கணக்கு என்று எதை சொன்னாலும் ஆர்வத்துடன் கேட்டுக் கொள்வார். கேள்வி கேட்டதும், சற்றும் தாமதியாமல், "விடையையும் நீயே சொல்லிடுப்பா" என்பார்! (சென்ற ஞாயிறு பதிவின் முதல் கருத்துரையைப் பார்த்ததும் எனக்கு நண்பர் பி ராஜேந்திரனின் ஞாபகம் வந்தது) 
**********************************************
     
புதிர்கள், விடுகதைகள் என்று எதைப் பார்த்தாலும் அவற்றை விடுவிக்கும் பெரு முயற்சியில் ஈடு படுகின்ற என்னை இடறி விழ வைத்தது, இந்தப் புதிர்:    
ஆனால் இதனுடைய விடையை. எனக்கு முன்பாக என்னுடைய திருமதி கண்டுபிடித்துவிட்டார்!  
                  

30 கருத்துகள்:

 1. மண்டையைப் பியித்துக் கொண்டுள்ளேன்.. அப்பாதுரை சார் வராமலாப் போய்விடப் போகிறார்.. அவரது விஜயத்திற்குப் பின் வருக்றேன் :-)

  பதிலளிநீக்கு
 2. செம கணக்கு! நான் ரெண்டு நாள் லீவு! உடம்பு சரியில்ல....

  அப்புறம் வரேன் :)

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. அதுக்குள்ள பாத்துட்டீங்களா kgg?
  100/100னு நம்பறேன் - ஏன்னா அம்பதுக்கு ரெண்டு பக்கம் உண்டு.

  பதிலளிநீக்கு
 6. மீண்டும் சிண்டுகள் பிய்க்கப்படவேண்டுமா?

  பதிலளிநீக்கு
 7. அதுல முப்பதா அறுவதானு புரியாம சிண்டுபிடி.. அதனால கமல்ஹாசன். இதுல அப்படியில்ல.. எம்ஜிஆர்னு சொல்லலாமா?

  பதிலளிநீக்கு
 8. ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் (எனக்கு) தோன்றுவதால் எம்ஜிஆர். சிண்டு பிழைக்கட்டும். தொப்பிக்காக. அதான் வாபஸ்.

  பதிலளிநீக்கு
 9. //This comment has been removed by the author.// இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 10. // Shivaji is father of Shambaji.
  Shivaji is Shambaji's father's -------------------- //

  வகுப்பறையில்
  ஆ'சிரி'யர் : உங்கப்பா பேரு என்ன ?
  மாணவன் : ஜான்
  ஆ'சிரி'யர் : உன் பேரு ?
  மாணவன் 1 : ஜான்'சன்'
  வேறொரு மாணவனிடம்
  ஆ : உன் பேரு என்ன ?
  மாணவன் 2 : ராஜா.
  ஆ : உங்கப்பா பேரு ?
  மாணவன் 2 : ராஜாஃபாதர்

  பதிலளிநீக்கு
 11. மாதவன் ஶ்ரீநிவாச கோபாலன், (எம்புட்டுப்பெரிய பேருங்க) உங்களோட பதில் தான் சூப்பர், ரொம்பப் பிடிச்சது!

  அது சரி, என்னமோ கேள்வியாமே, புதிராமே, என்னாது அது??? எங்கே இருக்குங்கோ?

  பதிலளிநீக்கு
 12. ஒரு மாதிரி, ஒரு மாதிரி தான் விடையைக் கண்டு பிடிச்சு வைச்சிருக்கேன். ஹிஹி, யாரானும் சொல்லட்டும், வந்து சரி பார்த்துக்கறேன். (பின்னே எப்படிச் சமாளிக்கிறதாம்?)

  பதிலளிநீக்கு
 13. சிந்திக்க வைக்கும் கேள்விகள்! ஆனா நான் கணக்குல கொஞ்சம் வீக்! ஸோ! எஸ்கேப்!

  பதிலளிநீக்கு
 14. பொதுவாகவே புதிரவிழ்க்கும் விளையாட்டு பிடிக்கும் என்பதால் நேற்றிலிருந்து முயன்றுகொண்டேயிருந்தேன். சிலபல ஆய்வுகளுக்கும் யூகங்களுக்கும் பிறகு கண்டுபிடித்த விடை 16. விடை சரியென்றால் எப்படிக் கண்டுபிடித்தேன் என்று சொல்கிறேன்.

  Shivaji is father of Shambaji.
  Shivaji is Shambaji's father's name. Am I correct?

  மூளைக்கு நல்ல வேலை... நன்றி.

  பதிலளிநீக்கு
 15. மன்னிக்கவேண்டும். முந்தைய பதிலில் புதிரின் விடை 8 என்றிருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 16. கீதமஞ்சரி 50/100. மீதி இரண்டு பதில்களும் சரியல்ல.

  பதிலளிநீக்கு
 17. அச்சச்சோ... தப்பாயிடுச்சே...

  சரியான விடை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

  பதிலளிநீக்கு
 18. மூன்று தூண்களிலும் காணப்படும் இரட்டைப்படை இலக்க எண்களின் கூட்டுத் தொகையிலிருந்து, ஒற்றைப் படை எண்ணைக் கழித்தால் வருகின்ற எண் மாற்றமில்லாமல் இருக்கின்றது. அந்த வகையில், விட்டுப் போன எண் _ . நீங்கள் இனி சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம்!

  பதிலளிநீக்கு
 19. சாரி. இன்றுதான் நான் பார்த்தேன். என் மகள் சொல்றா, 8 தான் பதில் என்று. If you add vertically, 29, 37, 13+. If you add horizondally, 21, 29. So if the number is 8, both horizondal and vertical total will be same.

  பதிலளிநீக்கு
 20. நெல்லைத் தமிழன் மே 15 ல் நான் கொடுத்துள்ள க்ளூவை கவனிக்கவும் . தூண். = column. 8 is not right.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!