வெள்ளி, 31 மே, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130531


டான்ஸ் பாடல்  1

"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்..."

ஆரம்பதாளம் 'ஆஹா' என்று உங்களையும் ஆட வைக்கும். முடியும்போதும் அப்படியே! "அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை என்று ஆரம்பத்தில் வரும்போது அபிநயத்தைக் கவனியுங்கள்!!  ஒல்லி கன்னடத்துப் பைங்கிளி!  TMS குரலில் துள்ளல்!


18 கருத்துகள்:

 1. வாத்யார் போடும் அலட்டிக்காத ஜென்டில் ஸ்டெப்ஸும், அ.ச. சரோஜாதேவியின் டான்ஸும், டி.எம்.எஸ்.ஸின் துள்ளலான குரலுமாக எனக்கு மிகப் பிடித்த பாடல்கள் லிஸ்டில் முக்கிய (முக்காத) இடம் இந்தப் பாட்டுக்கு உண்டு!

  பதிலளிநீக்கு
 2. எனக்கு பிடித்த அருமையான பாடல்
  இந்தப்பாடல் காட்சியின் போது உணர்ச்சி மேலிட
  தன்னையும் அறியாமல் ஒரு பொறியாளர்
  அருகில் இருந்த பெண்ணைக் கட்டிப்பிடிக்க
  அன்று தியேட்டரில் நடந்த களேபரம்
  இப்பாடலைக் கேட்க மீண்டும்
  நினைவில் வந்து போனது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. ஹிஹிஹி, எம்ஜிஆர் படத்துப் பாடல்களும் அவரின் படங்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் இல்லையா? முக்கியமாய் ட்யூன்! அனைத்துமே ரசிக்க வைக்கும். எனக்குப் பிடிச்ச எம்ஜிஆர் படப்பாடல்

  இந்தப் பச்சைக்கிளிக்கு ஒரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக்கட்டி வைத்தேன். அதில் பட்டுத்துகிலுடன் அன்னச் சிறகினை மெல்லென இட்டு வைத்தேன். நான் ஆராரோ என்று தாலாட்ட, இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட! :))))

  பதிலளிநீக்கு
 4. ஜிவாஜி படங்கள் மாதிரியே வாத்தியார் படங்களும் பார்த்திருக்கேன் என்றாலும்.................ஹிஹிஹிஹி நான் ஒளிஞ்சுக்கறேன்.

  பதிலளிநீக்கு
 5. அ.ச. சரோஜாதேவியா? கணேஷ் என்ன அர்த்தம்.:)

  இப்படி எல்லோரும் வார்த்தைகளைச் சுருக்கினால் என் மாதிரி ஆனா சனா டூனாவுக்குப் புரியாது!!
  எம்ஜிஆர் வளைக்கும் வளைப்புக்கெல்லாம் சரோஜாதேவி ஈடு கொடுப்பது அழகு. இருவரின் முகபாவமும் எப்பொழுதும் ஒத்துப் போகும்.அந்த விஷயத்தில் சரோஜாம்மா அபிநய சுந்தரிதான்.
  எங்கள் காலத்தில் ஆட்டம் போடவைத்த பாடல்:)நன்றி எங்கள் ப்ளாக்.

  பதிலளிநீக்கு
 6. ஆரம்பத்தில் அடி (இசை) செம ஆச்சே... எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் அலுக்காத பாடல்களில் ஒன்று...!

  பதிலளிநீக்கு
 7. //எதுவானாலும் தயங்காம சொல்லுங்க!//

  wonderful.


  அந்த அபிராமி பட்டர் சந்திரனைப்பார்த்தார் என்பதற்கே அந்த ஆட்டம் போட்டவர்,

  ஒரு பெண்ணைப் பார்த்தேன். நிலவைப் பார்த்தேன். அப்படின்னு கேட்டு என்ன ஆட்டம் போடுறாரோ அப்படின்னு
  எட்டிப்பார்த்தேன். நல்ல வேளை.

  ஸ்வாமி !

  இதுவும் ஹலூசினேஷனோ என்று பாட்டை கோட்டை விடாதீயும்.

  ஒரே ஒரு லைஃப் தான் எல்லாருக்கும். அது முடியறதுக்குள்ளே,
  ஒரு பெண்ணைப் பார்க்கலாம். ஒரு நிலவைப் பார்க்கலாம்.
  இது மாதிரி ஒரு பாட்டு எழுதமுடியுமோ !!

  நிலவை நன்னா பாத்துப்போம். ( அதைத் தான் சரியா பார்க்க முடியவில்லை. ஹி...ஹி.. )

  சுப்பு தாத்தா.

  www.subbuthatha.blogspot.in
  www.movieraghas.blogspot.in

  பதிலளிநீக்கு
 8. அ.ச. சரோஜாதேவியா? கணேஷ் என்ன அர்த்தம்.:)//

  அதான் அப்பாதுரை சொல்லி இருக்காரே வல்லி, அபிநய சரஸ்வதி! :))) ஹிஹிஹிஹி, அவங்க டான்ஸை இப்போப் பார்த்தால் இன்னமும் ஹிஹிஹிஹிங்கணும்! சிப்பு சிப்பா வருது! நான் கிளம்பறேன் யாரானும் கம்பைத் தூக்கறதுக்குள்ளே! :)))))

  பதிலளிநீக்கு
 9. டி.எம்.எஸ் அவர்களி ன்பின்னனி குரல் குரல் அப்படியே எம்.ஜி.ஆர் அவர்கள் பாடுவதுபோலவே இருக்கும்.நல்ல பாடல் பகிர்வு.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. அந்தக் காலத்துப் பாடல் இப்போது கேட்டாலும் ரசிக்க வைக்கிறது.
  டிஎம்எஸ் போல கணீர் குரல் யாருக்கும் வராது.

  பதிலளிநீக்கு
 11. பொதுவாகவே எனக்கு எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருமே ஒரு அல்ர்ஜி! ஆனாலும் பாடல்கள் கேட்பதில் நிச்சயம் விருப்பம் உண்டு. இந்தப் பாடலும் நான் ரசித்த்/ரசிக்கும் பாடல் தான்.

  காணொளியைக் காணாது பாடலைக் கேட்டு ரசித்தேன்! :)

  பதிலளிநீக்கு
 12. //பொதுவாகவே எனக்கு எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருமே ஒரு அல்ர்ஜி!//

  ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா, ஜாலி, ஸ்வீட் எடு, கொண்டாடு, ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்! :))))))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!