Monday, August 26, 2013

ஆஞ்சநேயா....அரசாங்கம் கையகப் படுத்திய ஆஞ்சநேயரை ( ! ) குடும்பத்துடன் தரிசனம் செய்தோம்!

மாட்டிய நாளில், இருபத்திரண்டு ஆண்டுகளாக ஒருவரிடம் ஒருவர் மாட்டிக் கொண்டிருக்கும் கஷ்டங்களை அவரிடம் புலம்பி விட்டு வந்தோம்! ஆஞ்ஜி புன்னகையுடன் கை கூப்பியவண்ணம் எங்களைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார்! உண்டியல் வைத்திருப்பது புதிதாக இருந்தது என்று நினைக்கிறேன். பணத்தை உண்டியலில் போடவும் படிக்கும்போதே 'உண்டியலில்' என்ற வார்த்தையில் அழுத்தம் தொனித்தது!

                                                       
Photo
 
கோதண்டராமர் சன்னதியில் இருந்த பட்டர் ஏதோ பூஜை செய்வது போலவே ஆயத்தங்கள் செய்கிறாரே என்று நின்ற கூட்டத்துடன் நாங்களும் நின்றோம். வெளியில் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த எங்களைப் பார்த்த பட்டாச்சாரியார் நிலைமையை உணர்ந்து உடனே உள் சன்னதியிலிருந்து வெளி சன்னதிக்கு வந்து ஓரமாக சும்மா நின்று,'தான் எதுவும் செய்யப் போவதில்லை' என்று குறிப்பால் உணர்த்தினார்! நகர்ந்தோம். இந்த பட்டர்கள் எல்லாம் நியூ அப்பாய்ண்ட்மெண்ட்டா, பழைய ஆட்களேதானா என்று கோவிலின் ரெகுலர் பக்தர்கள்தான் சொல்ல வேண்டும்.

ஆஞ்ஜி உம்மாச்சி பிரம்மாண்டமாய் நின்று அருள் பாலித்துக் கொண்டிருந்தார். வலதுபக்கத் தூணில் பெரிய ஆஞ்ஜி உம்மாச்சி படம் மாட்டப் பட்டிருந்தது. அதில் பக்தர்கள் தங்கள் கையால் துளசி வைத்து பயனடைந்தார்கள். சுமார் ஒரு 23 வயது பச்சை சுடிதார் பெண்ணொருத்தி கண்களில் நீர் வடிய பரபரப்பாக சன்னிதியைச் சுற்றிக் கொண்டிருந்ததை இளையவன் சுட்டிக் காட்டினான்.

"அவள் துன்பத்துக்கு அவளேதான் காரணமாக இருக்கும். ஆனால் அதை அறியாமல் சுற்றுகிறாள்" என்றேன்.

"எப்படிச் சொல்றே?"

"படபடப்பாக இருக்கிறாள். பொறுமையாகப் பிரகாரத்தைச் சுற்றாமல் அவசரமாக ஒன் பாத்ரூம் வந்ததும் ஓடுவது போல வேகமாகச் சுற்றுகிறாள். அவள் வாய் அசைவதைப் பார்த்தால் மந்திரம் சொல்வது போல இல்லை.."

"அது எப்படிச் சொல்றே?"

"ஒரு யூகம்தான்.."

"சாமியைப் பாருங்க... " என்று அ(இ)டித்து விட்டு 'அடிப்ரதட்சணம்' செய்தாள் சகதர்மிணி!

வேணுகோபால ஸ்வாமி சன்னதியில் தூரத்தில் கற்பூரத் தட்டு வைக்கப் பட்டிருந்தது. தட்டில் சில்லறைகள் தென்பட்டன. இங்கும் பட்டர் செல்ஃப் சர்வீஸ் கவுண்டரில் நிற்கும் சேல்ஸ்மேன் போல ஓரமாக. அசுவாரஸ்யமாக நின்று கொண்டிருந்தார்.

                                                      
Photo
 
அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னும் பொங்கல் அதே தரத்தில் இருந்தது ஆச்சர்யம். புளியோதரை இன்னும் நன்றாக இருக்குமாம். எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு சக பக்தர் சொன்னார்.

கோவில் காவலர்கள் ஆங்காங்கே நின்றுகொண்டு 'யார் என்ன தப்பு செய்கிறார்கள்' என்று ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

செருப்பு வைக்குமிடம் காணாமல் போயிருந்தது. அதேபோல பொங்கல் சாப்பிட்டு கைகழுவ, பக்கவாட்டில், கோவிலைச் சேர்ந்த திருமண மண்டபம் தாண்டி நடக்க வைத்திருக்கிறார்கள்.

                                                      
Photo
 
அங்கு ஒரு வெளியாள் கைகழுவக் காத்திருந்தவர்களை லட்சியம் செய்யாமல் நான்கு 2 லிட்டர் பாட்டில்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.

எதிர்த்த கடையில் வாழைக்காய் காரச் சிப்ஸும், பச்சை மிளகாய் ஊறுகாயும் வாங்கிக் கொண்டு திரும்பினோம்.
[ முகநூலில் பகிர்ந்தது ]

25 comments:

Geetha Sambasivam said...

கொஞ்சநேரம் முன்னாடி கூடப் பதிவே இல்லை. இப்போ எப்படி வந்தது? அமாநுஷ்ய அனுபவமோ?

Geetha Sambasivam said...

நல்ல வேளையா அரசாங்கம் எடுத்துக்கிறதுக்கு முன்னாடியே போன வருஷம் ஆகஸ்டில் பார்த்தோம். அன்னிக்கு வெண் பொங்கல். :))))

துளசி கோபால் said...

எந்தூரு ஆஞ்ஜி? ஙே:(

ராஜி said...

எந்த ஊரு ஆஞ்சின்னு சொன்னா நல்லா இருக்குமே!

Ranjani Narayanan said...

நங்கநல்லூராரா?

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் ஸ்ரீராம் இன்னும் நிறைய ஆண்டுகள் இடிக்கும் சகதர்மிணியுடன்
இனிதே வாழ இனிய மணநாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நங்கை நல்லூரேதான்:)

ஜீவி said...

//"அவள் துன்பத்துக்குக் காரணம் அவளேதான் காரணமாக இருக்கும். ஆனால் அதை அறியாமல் சுற்றுகிறாள்" என்றேன்.

"எப்படிச் சொல்றே?" //

'இந்த 'எப்படிச் சொல்றே' அருமையான வியாக்கியான தொடர்க் கேள்வி.

முன்னாடி சொல்லும் விஷயம் வெகு சாதாரண உண்மையாய் இருந்தாலும், அதற்கு ஒரு தத்துவ விசாரத் தோற்றம் கொடுக்கும்.

ஒரு காரணத்தை நீக்கி விடலாமே!

மாதேவி said...

இனிய வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... நன்றி.....

T.N.MURALIDHARAN said...

என்ன ஆச்சர்யம்! இதைப் பற்றிய பதிவை அடுத்த பெட்டிக கடையில் எழுத நினைத்தேன். அதுவும் புளியோதரை பொங்கல் சுவை மாறாமல் இருக்கிறதா என்பதையும் கேட்க நினைத்தேன்.
ஆஞ்சநேயர் தன்னை அறநிலையத் துறைக்கு மாற்றம் செய்த பின் கோவில் பக்கம் செல்லவில்லை.

T.N.MURALIDHARAN said...

மண நாள் வாழ்த்துக்கள்

குட்டன் said...

அவருக்கே இந்த நிலை

சே. குமார் said...

அஞ்ச நேயரைவிட சுற்றுப் புறத்தையும் உங்கள் எழுத்தில் அறிந்து கொண்டோம்...

சாமி கும்பிட வந்த பெண்ணை கவனிச்சுப் பேசினா கொஞ்சுவாங்களா வீட்டுல...

நல்ல பதிவு அண்ணா.

கோமதி அரசு said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.
வாழ்க வளமுடன்.
ஆஞ்சநேயர் மாட்டிக் கொள்ளாதவர் அவரிடம் சொன்னதை(புலம்பியதை)கேட்டு அது தான் நான் மாட்டிக்கவில்லை என்று நினைத்து இருப்பாரோ!

பழனி. கந்தசாமி said...

நங்கை நல்லூர் எந்த ஊரில் இருக்கிறது?

ராமலக்ஷ்மி said...

இனிய மணநாள் வாழ்த்துகள்:)!

rajalakshmi paramasivam said...

திருமணநாள் வாழ்த்துக்கள்!
ஆஞ்சி அருள் கிடைக்கட்டும். உங்களுக்கும், நம் எல்லோருக்கும்.

Geetha Sambasivam said...

இனிய மணநாள் வாழ்த்துகள்:)!//


அட????????????????? இதைக் கவனிக்கவே இல்லையே! தாமதமான மணநாள் வாழ்த்துகள். விரைவில் வெள்ளிவிழா, பொன்விழாக் கண்டு ப்ளாட்டினம் விழாவும் காண மனமார்ந்த வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

அது ஏங்க எல்லாருமே மாட்டிண்டதாச் சொல்லிக்கறீங்க? நாங்க யாரானும் அப்படிச் சொல்லிக்கறோமா? :)))))

இமா said...

தாமதமானாலும்... இனிய மணநாள் வாழ்த்துக்கள்.

ஜீவி said...

//மாட்டிய நாளில், இருபத்திரண்டு ஆண்டுகளாக ஒருவரிடம் ஒருவர் மாட்டிக் கொண்டிருக்கும் கஷ்டங்களை அவரிடம் புலம்பி விட்டு வந்தோம்!//

'மாட்டியதை' நகைச்சுவையாக சொல்கிறீர்களாக்கும் என்று நினைத்தால்.. அந்த வரிகளுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதோ?..
அப்படியாயின், வாழ்த்துக்கள், ஸ்ரீராம்!

ஹுஸைனம்மா said...

//மாட்டிய நாளில், இருபத்திரண்டு ஆண்டுகளாக//

பின்னூட்டங்கள் வாசித்தபின்புதான் புரிந்தது. (எழுதினது ஸ்ரீராம் சார்தானே?) இருபத்திரண்டு வருஷம்தான் ஆச்சா? ஒரு முப்பது முப்பந்தச்சு வருஷமாகிருக்கும்னு நினைச்சுகிட்டிருந்தேன்... (உங்க எழுத்து அப்படி நினைக்க வச்சது) :-))))))))

இனிய மணநாள் வாழ்த்துகள். இன்னும் பற்பல இருபதாண்டுகள் இணைந்து காண என் பிரார்த்தனைகள். (இப்பத்தான் ரொம்ப சந்தோஷமா இருக்கும், இல்லியா?) :-)

அமைதிச்சாரல் said...

இனிய மண நாள் நல்வாழ்த்துகள்.

மாட்டிக்கிட்டவங்கல்லாம் புலம்புறதைக் கவனிச்சப்புறம் 'நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்'ன்னு பாடியிருப்பாரோ.

ஒவ்வொரு ஜென்மத்திலும் இதே இடிக்கும் சகதர்மிணி வாய்க்க வாழ்த்துகள் :-))

ஸ்ரீராம். said...


நன்றி கீதா மேடம்...

ஆஞ்சநேயர் பெயர் போடும்போதே துளசி மேடம் வரும் வாய்ப்பு என்று எதிர்பார்த்தேன். வருகைக்கு நன்றி துளசி மேடம். நங்கநல்லூர் ஆஞ்சநேயர்தான்.

நன்றி ராஜி.... நங்கநல்லூர் ஆஞ்சிதான்!

நன்றி ரஞ்சனி மேடம்... உங்கள் கேள்விக்கு பதில்.. 'ஆம்'

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வல்லிம்மா.

நன்றி ஜீவி ஸார்.. நீங்கள் எடுத்துக் காட்டிய பிறகுதான் ஒரு காரணம் போதும் என்று பட்டது! வாழ்த்துக்கும் நன்றி.

மாதேவி.... நன்றி.

DD.... நன்றி.

நன்றி முரளிதரன். நான் முந்திக் கொண்டேன் போல! வாழ்த்துகளுக்கு நன்றி.

நன்றி குட்டன்.

நன்றி சே. குமார். சும்மா ஒரு சுவாரஸ்யம்தான்.

//அது தான் நான் மாட்டிக்கவில்லை என்று நினைத்து இருப்பாரோ!// ஹா..ஹா.. நன்றி கோமதி அரசு மேடம். வாழ்த்துக்கும் நன்றி.

நன்றி பழனி. கந்தசாமி ஸார். நங்கநல்லூர் தென் சென்னையில் கிண்டி தாண்டி இருக்கிறது.

நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்.

கீதா மேடம்... நாங்கள் இருவரும் ஒருவரிடம் ஒருவர் அன்பின் பிடியில் மாட்டிக் கொண்டிருக்கிறோமாக்கும்..! வாழ்த்துகளுக்கு நன்றி.

நன்றி இமா.

நன்றி ஹுஸைனம்மா... //(உங்க எழுத்து அப்படி நினைக்க வச்சது)// அவ்வளவு ஓல்ட் ஆகவா இருக்கிறது?!! நன்றி, வாழ்த்துகளுக்கு!

நன்றி அமைதிச்சாரல். உங்கள் வாழ்த்து பலிக்கட்டும். எங்கள் பிரார்த்தனையும் அதுதான்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!