வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130823:: நேற்று சென்னை தினம்!


          
                      

8 கருத்துகள்:

 1. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்...
  மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்...

  மெதுவாப் போறவுக யாருமில்லே...
  இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே...
  ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் வித்தியாசம் தோணல்லே...
  அநியாயம் ஆத்தாடியோ...!

  மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்...
  மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்...

  சீட்டுக்கட்டுக் கணக்காக...
  இங்கே வீட்டக் கட்டி இருக்காக...!
  வீட்டக் கட்டி இருந்தாலும்...
  சிலர் ரோட்டு மேலே படுக்காக...!
  பட்டணத்துத் தெருக்களிலே...
  ஆளு நிக்க ஒரு நிழலில்லையே...!
  வெட்டவெளி நிலமில்லையே...
  நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே...!
  அடி சக்கே...

  வைக்கேலாலே கன்னுக் குட்டி மாடு எப்போ போட்டுது...?
  கக்கத்திலே தூக்கி வச்சாக் கத்தலையே என்னது...?
  ரொக்கத்துக்கு மதிப்பில்லையே - இங்கு
  வெக்கத்துக்கு விலையில்லையே...

  மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்...
  மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்...

  ஊரு கெட்டுப் போனதுக்கு...
  மூரு மாருக்கெட்டு அடையாளம்...
  நாடு கெட்டுப் போனதுக்கு மெட்ராஸு நாகரிகம் அடையாளம்...!

  தேராட்டம் காரினிலே ரொம்பத் திமிரோடு போறவரே - எங்க
  ஏரோட்டம் நின்னு போனா உங்க காரு ஓட்டம் என்னவாகும்...?
  ஹேஹே

  காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்து நிக்கும் கூட்டமே...
  நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வூட்டிலே...?
  கெட்டுப்போன புள்ளிகளா வாழப் பட்டணத்தில் வந்தீகளா...?

  மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்...
  மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்...

  அடி ஆத்தாடியோ...!

  பதிலளிநீக்கு
 2. முத முதல்லே சென்னைக்கு வந்தது 63 ஆம் வருஷம், என் அண்ணா பூணூல் கல்யாணம் திருப்பதியில் நடந்தது. அதன் பின்னர் சென்னை வந்து சுற்றிப் பார்த்துவிட்டு மதுரை சென்றோம். எனக்குப்பத்து அல்லது பதினோரு வயசுக்குள் தான். அப்போ முதல்லே மெரினா பீச்சைப் பார்த்தப்போவும் சரி, மற்ற இடங்கள் பார்த்தப்போவும் சரி என்னமோ மனசில் ஒரு உற்சாகமே இல்லை. பீச்சில் உட்கார்ந்து கொண்டு (இத்தனைக்கும் அப்போல்லாம் இவ்வளவு கூட்டம் இருக்காது) சுண்டல் சாப்பிட்டுக் கொண்டே, "சே என்ன மெட்ராஸ், எனக்கு ஒண்ணும் பிடிக்கவே இல்லை!"னு நான் சொன்னதும் திருவல்லிக்கேணியில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்து கொண்டிருந்த என் பெரியப்பா உட்பட அனைவரும் சிரித்ததும் இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கு. :))))

  பதிலளிநீக்கு
 3. இப்போவும் மனதளவில் சென்னை பற்றின கருத்தில் மாற்றம் இல்லைனாலும் கல்யாணம் ஆகி இருபது வருடங்கள் சென்னை வாசம் செய்தாச்சு! :)))))இப்போவும் நம்ம ரங்க்ஸுக்கு மனதின் ஒரு ஓரத்தில் என்ன இருந்தாலும் சென்னை சென்னைதான் என்ற கருத்து உண்டு. :))) எனக்கு இன்னமும் "சே, என்ன ஊர் இது!" என்ற கருத்து மாறவில்லை. :))) மாற மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறதா எல்லாரும் சொல்றாங்க. :))))

  ஆனால் பல விஷயங்களில் மாறி இருக்கேன் தான். அது தனியா வைச்சுப்போம். இந்தச் சென்னை பத்தி மட்டும் ஒரு பத்து, பதினைந்து பதிவு போட்டுடலாம். அவ்வளவு விஷயம் இருக்கு! :)))))

  பதிலளிநீக்கு
 4. தங்கியிருந்த நாள் சில நாள் என்றாலும் நினைவு நூறல்லவா நினைவு நூறல்லவா..

  பதிலளிநீக்கு
 5. தங்கியிருந்த நாள் சில நாள் என்றாலும் நினைவு நூறல்லவா நினைவு நூறல்லவா

  பதிலளிநீக்கு
 6. இன்றும் சென்னையில் தினம்! இல்லை, தினம்-தினம் சென்னையில்.

  எனது இளம் பிராயத்தில் வாராவாரம் விகடனில் தேவனின் 'ஸி.ஐ.டி. சந்துரு' படிக்கையில், சென்னையின் மீது அளப்பரிய காதல்! சென்னை போகும் பொழுது தவறாது பார்க்க வேண்டுமென்று அந்தத் தொடர்கதையில் வந்த அந்த காலத்து சென்னைப் பகுதிகளை-- எஸ்பிளனேட், சைனாபஜார், தங்கச்சாலை, ஜார்ஜ் டவுன், கொத்தவால் சாவடி, மிண்ட் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்வேன். சென்னையை பார்க்காமலேயே அந்த வயதிலேயே சென்னையை களமாக வைத்து கதைகள் எழுதியிருக்கிறேன்! பத்திரிகைகளுக்கும் அனுப்பியிருக் கிறேன்!

  பதிலளிநீக்கு
 7. நல்ல பாடல் பகிர்வு.
  அப்போது பார்த்த சென்னைக்கும், இப்போதைய சென்னைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அப்பாவுடன் என் அக்கா மாதவரத்தில் இருந்த போது போய் இருக்கிறேன் சிறு வயதில். இப்போது பார்க்கும் போது நிறைய மாற்றங்கள்.

  பதிலளிநீக்கு
 8. வெயில், தண்ணீர் கஷ்டம், மின்சார தட்டுப்பாடு என்று எத்தனை குறைகள் இருந்தாலும் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் தான்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!