Saturday, August 24, 2013

சென்ற வார பாசிட்டிவ் செய்திகள்


1) நாயைக் கண்டாலே கல்லை எடுக்கும் மனிதர்களிடையே அனாதையாகத் திரியும் நாய்களுக்கு உணவளிக்கும் மனிதர்.

                                        
                             
 
2) முகநூல் உதவியுடன் திருச்சியில் குளத்தைத் தூர்வார ஏற்பாடு செய்த  மாணவர் (இந்தச் செய்தியின் சுட்டி வேலை செய்யவில்லை. மன்னிக்கவும்) மற்றும் ஈ வேஸ்ட் கழிவுச் செய்தி   விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாணவி...Cherub Crafts கொடுத்துள்ள சுட்டி     நன்றி.                                     
         

3)  வறுமை, பாலியல் வன்கொடுமை மற்றும் அனாதையாக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு, பாதுகாப்பு மற்றும் கல்வியறிவு தரும், கவுதமன் சொல்வது :

[குறிப்பு : தினமலர் நாளிதழில் ஸ்பெஷல் கட்டுரையாக வெளிவரும் சில செய்திகளுக்குச் சுட்டி தரும்போது அவை அங்கு அடுத்த நாள் அதே பகுதியில் காணப்படும்/வெளிவரும் வெவ்வேறு செய்திகளுக்கு அழைத்துச் செல்கிறது. எனவே இதற்கு மாற்று ஏற்பாடு அடுத்த வாரம் முதல் முயற்சிக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்]
                              
4) சிறுநீரகக் கோளாறால் அவதியுறும் வசதியில்லா நோயாளிகளுக்கு செய்யும் அமைப்பு ஒன்று பற்றியும்,  எந்த நோயால் அவதிப்படுவோருக்கும் மருத்துவ ஆலோசனை,  ஆரம்ப நிலையிலிருந்து, எல்லாக் கட்டத்துக்கும் வழங்கி வழிகாட்டும் சேவை அமைப்பு ஒன்று பற்றியும் திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் பகிர்ந்துள்ளார்கள். அதை இங்கு படிக்கலாம், பயன் பெறலாம், இது மாதிரி உதவி தேவைப்படும் தெரிந்தவர்களுக்குச் சொல்லலாம்.

5) மதுரையில் ஆட்டோ ஓட்டும் மதன் பட்டப்படிப்பு முடித்தவர். பெண்களிடம் சகோதரனாகப் பழகுவது, நியாயமான விலை, ஆட்டோ காலியாகப் போனால் நடந்து போகும் முதியவர்களை இலவசமாக ஏற்றிச் செல்வது என இவரிடம் படிக்க ஏராளமான பாசிட்டிவ் பாடங்கள்.

                                       
 6)  ஒரு புகழ்பெற்ற நடிகராக இருந்தாலும் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறி என்று இல்லாமல் நடிகர் அஜீத் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை, விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தச் செய்யும் செயல் பாராட்டுக்குரியது.

                                                          

7) மத்தியப் பிரதேசம் கடியாஹார் என்ற ஊரில் வசிக்கும் 56 வயது மகேஷ் என்பவருக்கு 12,672 பெண்கள் "ராக்கி" கட்டி தம் சகோதரராக ஏற்றனர். கடந்த 21 ஆண்டாக சகோதரர் இல்லாப் பெண்களின் திருமணங்களுக்கு சகோதரர் செய்ய வேண்டிய மரியாதை செய்ததால் இந்த கௌரவம் கிடைத்துள்ளது

8) போலீசார் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க பலவகைகளில் சோதனைகள் மேற்கொள்ளும் அதிகாரி பற்றி...
                                        9)  முன்னாள் காவல்துறை அமைச்சர் கக்கனின் பேத்தி, இந்நாள் தீயணைப்புத்துறை அதிகாரி திருமதி மீனாட்சி அவர்களின் பன்முகத் திறமை. திரு. வெ. நீலகண்டனால் குங்குமம் தோழியில் எழுதப்பட்டு, முகநூலில் பகிரப்பட்டது.
                                         

29 comments:

சீனு said...

தொடர்புடைய சுட்டிகளை இணைத்திருப்பதும் வரவேற்க்கத்தக்க மாற்றம் சார்... விரும்புபவர்கள் நிச்சயம் கிளிக்கிப் படிப்பார்கள் :-)))))

எங்க தல கூட பாசிடிவ் செய்திகளில் :-) தல தல தல :-))))))

Rathnavel Natarajan said...

அருமையான செய்தித் தொகுப்பு.
நன்றி. வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஏராளமான பாசிட்டிவ் பாடங்கள்....

வாழ்த்துக்கள்...

sury Siva said...

நாய்கள் அனைத்துமே ஒரு கருணை உள்ளத்துடன் பார்க்கபடவேண்டியவை.
உணவு புகட்டுப்படவேண்டியவை. சில மனித உள்ளங்களை விட நாய்கள் மேலானவை. மறுக்க இயலாதது தான்.
நம்மை ஒரு தரம் கூட கடிக்காதவரை.
அது சரி. ஊரில் உள்ள நாய்களுக்கெல்லாம் ரேபீஸ் இருக்கிறதா என்று பார்க்க முடியுமானால், நீங்கள் சொன்னபடி நானும் தைரியமாக, எங்கள் காலனிக்கு முன்னால், தினசரி ஓடி விளையாடி, பல லீலைகள் புரிந்து பரவசமாய் இருக்கும் நாய்களுக்கு, , இது இரண்டும் என்ன தாத்தா செய்யறது அப்படின்னு கேட்கும் பேரனுக்கும் பதில் சொல்லிக்கொண்டே , பிஸ்கட் வாங்கி போடலாம். ஆட்சேபனை இல்லை.
மறைந்த திரு கக்கன் அவர்களைப் பற்றி ஒரு நிகழ்வு.

1976 அல்லது 1977 ஆக இருக்கலாம். சரியாக நினைவு இல்லை.

சென்னைக்கு ஏதோ அலுவலக வேலையில் வந்திருந்தேன். எனது அலுவலக வேலை முடிந்ததும், எனது அலுவலக வாயில் எல்.ஐ.சி. பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தேன், எனது பஸ் வருகையை எதிர்பார்த்து.

பக்கத்தில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை எங்கோ பார்த்தது போன்ற உணர்வு . ஆயினும் உடன் நினைவுக்கு வரவில்லை.

அவர் ஒரு பஸ்ஸில் ஏறிச் சென்ற பின் தான் பக்கத்தில் ஒருவர் சொன்னார்.

அவரு கக்கன் சார். என்றார்.

இன்றைய மாஜி அமைச்சர்கள் ???

சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com

rajalakshmi paramasivam said...

செய்திகளுக்கு சுட்டி கொடுத்து அசத்தி விட்டீர்கள். சார்.
சுப்பு தாத்தாவின் கருத்தைப் படித்ததிலிருந்து தலை ஒரேயடியாக சுற்றுகிறது. நிஜமாகவே அப்படி நடந்திருக்குமா என்ற ஆச்சர்யத்திலிருந்து இன்னும் மீளவில்லை.

உங்கள் பாசிட்டிவ் செய்திகள் அருமை.

middleclassmadhavi said...

thanks for the glucon-d!! Instant energy from +ve news!

வல்லிசிம்ஹன் said...

போலீஸ் அதிகாரியின் சுட்டி திறக்கவில்லை,
மற்றபடி கக்கஞியின் பேத்தியைப் பற்றிப் படித்தது மிகவும் மகிழ்ச்சி.
ஆட்டோ ட்ரைவரும் மனதை நெகிழ்விக்கிறார்.
இ வேஸ்ட் மிக முக்கியமான நிகழ்வு. பாராட்டுகள் இந்த மாணவிக்கு.

நாய்களுக்க்ம் பறவைகளுக்கும் தினம் ரொட்டித் துண்டுகள் கொண்டுவரும் நல்ல மனிதரைத் தினமும் பார்த்திருக்கிறேன்.
மனோ அவர்களின் சுட்டியை விரைந்து படிக்கிறேன்
நன்றி எபி.

ராஜி said...

எவ்வளவு நல்ல மனிதர்கல் வாழும் நாட்டில் நாம வாழுறோம்ன்னு நினைக்கும்போது பெருமைய இருக்கு. கூடவே நாமளும் எதாவது செய்யனும்ன்னு தோணுது!!

கவியாழி கண்ணதாசன் said...

மகிழ்ச்சியான அவசியமான நல்ல தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி

Anonymous said...

அருமையான தகவல்கள். தலைப்பிடும் போது, ஒரு செய்தியை எடுத்து பதிவின் தலைப்பாய் வைத்தால் கவரும். வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

நாய்களுக்கு உணவு அளிக்கிறார் சரி. எனக்கும் ஆசை தான். தெரியாத்தனமா நாலைந்து நாய்களுக்குக் கூப்பிட்டுச் சாப்பாடு போட்டுட்டுத் தெருவில் நடக்க முடியாமல் பட்ட கஷ்டம் இருக்கே! :))) இத்தனைக்கும் வீட்டில் நாலைந்து நாய்களை வளர்த்துக் கொண்டிருந்தோம். ஒரே சமயம் அல்ல. இடைவெளிகள் விட்டுத்தான் , ஒரு நாய் போனதும் இன்னொன்று என்றவாறு. கடைசியாய் மோத்தி. அவனுக்கு அப்புறம் நோ நாய்னு வைச்சாச்சு!

Geetha Sambasivam said...

மிச்சம் சாப்பாட்டையும், வீணாகும் மோர், பால், குழம்பு, கழுநீர் போன்றவற்றையும் ஒரு வாளியில் கொட்டி இரண்டு பசுமாடுகளுக்கு வைத்துக் கொண்டிருந்தேன். எல்லாம் கதவுக்கு அப்புறமா. ஒரு நாள் கடைத்தெருவில் காய் வாங்கிக் கொண்டிருக்கையில் முதுகில் ஒரு பலமான முட்டல். வலி தாங்கலை, என்னவோ, ஏதோனு திரும்பிப் பார்த்தா அந்த இரண்டு மாடுகளும் என் பின்னாடி வந்து என்னை அடையாளம் கண்டு கொண்டு செல்லம் கொஞ்சுகின்றன. புதுசாய் வாங்கின காய்களை அப்படியே கொடுக்கணுமாம். அதுதான் போகுதுனா, வீட்டுக்குப் போகவிடாமல், வழி மறித்துக் கொண்டு நல்ல வேளையா கூர்மையான கொம்பில்லையோ பிழைச்சேன்.

Geetha Sambasivam said...

மாடு, நாய், பூனை, சிட்டுக்குருவிங்கனு ஏராளமான அநுபவங்கள் இருக்காக்கும். :)))

Geetha Sambasivam said...

ஆட்டோ மதனைப் போல் இருவர் சென்னையிலும் இருக்கின்றனர். :))))

Geetha Sambasivam said...

செய்திகள் அனைத்தும் தெரிந்தவையே! வன்கொடுமை பத்திப் போட்டிருக்கீங்க. முந்தாநாள் மும்ஐயில் அக்கிரமம் நடந்திருக்கு. :(( எப்போ மாறுவாங்கனு புரியலை!:((( அதுவும் பெண்களைப் பார்த்தாலே இதான் தோணுமானு கோபமாக வருகிறது.

Cherub Crafts said...

//மாடு, நாய், பூனை, சிட்டுக்குருவிங்கனு ஏராளமான அநுபவங்கள் இருக்காக்கும். :)))//

Geetha Mam ..share them with us tooo:).love to read them ..

Cherub Crafts said...

அனைத்துமே அருமையான செய்திகள் ..திருச்சி குளம் தூர் வாறல் நானும் பார்த்தேன் சுட்டி கிடைத்தா தரேன் ..

Cherub Crafts said...

http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/will-mavadi-kulam-be-a-beacon-for-dying-lakes/article4916883.ece

இந்த சுட்டியான்னு பாருங்க ..

ஸ்ரீராம். said...


Cherub Crafts.. நன்றி. தமிழில் படித்தபோது ஒரு மாணவனை முன்னிலைப் படுத்திப் போடப்பட்டிருந்தது. எனினும் இதுதான் அந்தச் செய்தி என்று நினைக்கிறேன். இதை பதிவில் இணைத்து விடுகிறேன்.

Cherub Crafts said...

அவர் பெயர் வினோத் ராஜ் seshan..அவர் fb லிங்க் அனுப்பியிருக்கேன் பாருங்க ஸ்ரீராம் .மெயிலில்
..btw ....நான் Angelin .....ப்ளாக் பெயரோடு உலாவரேன் :))

ராமலக்ஷ்மி said...

நல்ல செய்திகள். தொகுப்புக்கு நன்றி. குங்குமம் தோழி கட்டுரை வாசித்திருந்தேன். ஆட்டோ ட்ரைவர், போலீஸ் அதிகாரி, நாய்களுக்கு உணவு அளிக்கும் நல்ல மனிதர் என அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.

கோமதி அரசு said...

எல்லாமே நல்ல பாஸிடிவ் செய்திகள்.
நாய்கள் மனிதனையும், பூனை வீட்டையும் நம்பி வாழும் என்பார்கள்.
கீதா சொல்வது போல் நாய்க்கு இரண்டு நாள் உணவு அளித்தவுடன் அது எங்கள் வீட்டின் வாசலில் வந்து படுத்து கொண்டது. அக்கம் பக்கத்தில் அதை விரட்ட வேண்டும் என்று சொல்லி சாப்பாடு போடாதீர்கள் என்னை திட்டினார்கள். பின் வாட்ச்மேன் கம்பால் அடிப்பது போல் கீழே வேகமாய் தட்டி பயமுறுத்தி போக வைத்தார்.
(ஒருவாரம் போராடினர்)
காக்கை குருவிகளுக்கும் ஊரில் உணவளிப்பேன். இப்போது மகன் ஊரிலும் அவர்கள் நினைப்புதான்.
இங்கு வைத்தால் சாப்பிட வர மாட்டேன் என்கிறது.

திரு கக்கன் அவர்களைப்பற்றி படித்து இருக்கிறேன். மிகவும் எளிமையானவர் என்று.

மதுரை சென்றால் ஆட்டோகாரர் மதனை பாராட்ட வேண்டும்.

அஜீத் செய்யும் தலைகவசம் உயிர் கவசம் விழிப்புணர்வு பயணம் மிகவும் நன்று. நடிகரிகளிடம் எதைஎதையோ கற்று கொள்ளும் ரசிகர்கள் நல்லவற்றைக் கற்றுக் கொள்ளட்டுமே!
தலைக்கவசம் அணியாமல் சென்ற உடன்பிறப்பை இழந்து வாடும் எனக்கு அதன் வலி தெரியும்.

அனைத்து நல்ல செய்திகளை கொடுத்த உங்களுக்கு நன்றி.Ranjani Narayanan said...

நீங்கள் கொடுத்திருக்கும் எல்லா சுட்டிகளையும் போய் படித்துவிட்டு வந்தேன்.
நாய்களுக்கு எங்கள் எதிர் வீட்டுக் காரர் தினமும் உணவளிக்கிறார். ஆனால் இரவில் அவை போடும் சண்டை தூக்கமே போய்விடுகிறது. அதேபோல அந்தப் பக்கம் போகும் குழந்தைகளின் மேலும், வீட்டு வேலை செய்யும் பெண்களின் மேலும் அவை பாயும் பாய்ச்சல் ரொம்பவும் பயமாக இருக்கிறது.அவை கடித்துவிடுமோ என்று தெருவில் போகும்போதெல்லாம் பயம் தான்.

அந்தக் காலத்து மந்திரிகள் எல்லோருமே அப்படி எளிமையாகத்தான் இருந்தார்கள்.

ஆட்டோகாரர்களில் திரு மதனைப் போல இன்னும் நிறைய பேர் மாறணும்.

அஜீத் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்.

போலீஸ் அதிகாரி பற்றிய சுட்டியும் வேலை செய்யவில்லை.
தீயணைப்புத்துறை அதிகாரி மீனாட்சி அவர்களுக்குப் பாராட்டுக்கள். திரு கக்கனின் பெயரை நிலை நாட்டியுள்ளார்.

திருமதி மனோ அவர்களின் பதிவையும் படித்து தகவல்களை சேமித்துக் கொண்டேன்.

உங்கள் பாசிடிவ் செய்திகள் நாளுக்கு நாள் அதிகமாகட்டும்.Ranjani Narayanan said...

நீங்கள் அடிக்கடி மேயும் பதிவுகளில் என் வலைத்தளத்தையும் சேர்த்ததற்கு நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை! நான் பதிவு செய்திருந்த உபயோகமான தகவல்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு அன்பு நன்றி!!

ஸ்ரீராம். said...


நன்றி சீனு. இந்த மாற்றங்கள் வந்து இரண்டு வாரங்களாகின்றன. தலைப் பாதுகாப்பின் அவசியத்தை தல சொல்லாமல் யார் சொல்வார்கள்! :)))

நன்றி ரத்னவேல் நடராஜன் ஸார்.

நன்றி DD.

நன்றி சூரி சிவா ஸார். ரேபிஸ் தாக்கிய நாய்களைத் தனியாக அடையாளம் தெரியுமே... தெருவில் இருக்கும் எல்லா நாய்களும் ஆபத்து இலையே... கக்கன்ஜி பற்றிய .பகிர்வுக்கு நன்றி.

நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம். கக்கன்ஜி எளிமையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?

நன்றி middleclassmadhavi.

நன்றி வல்லிம்மா. இன்னும் சிலர் கூட போலீஸ் செய்தி பற்றிய சுட்டி திறக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். நான் செக் செய்யும்போதெல்லாம் திறக்கிறது. எனினும் மறுபடி சுட்டியை இணைத்துப் பகிர்ந்தேன்.

நன்றி ராஜி.

நன்றி கவியாழி கண்ணதாசன்.

நன்றி இக்பால் செல்வன். நீங்கள் சொல்வது போல துணைத்தலைப்புகள் கொடுக்கலாம். மறுபடியும் பதிவு ஏதோ ஒருவகையில் நீண்டால் வாசகர்கள் ஸ்கிப் செய்யும் வாய்ப்பு! சனிக்கிழமைதோறும் ரெகுலராக வெளியாகும் பதிவு என்பதால் ஒரே தலைப்பில்! நன்றி இ.செ.

நன்றி கீதா மேடம்... மாடு பற்றிய செய்தி சுவாரஸ்யம். பாவம், அதற்கென்ன தெரியும்? நானும் சிறிய வயதில் வீட்டுக்கு வந்த மாட்டுக்குக் கீரை கொடுத்து, தினசரி மணி பார்த்துவிட்டு வருவது போல குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதைப் பார்த்திருக்கிறேன். கீரை கொடுக்காமல் உள்ளே சென்றால் கொல்லைக் கதவுக்கு வரும். அங்கிருந்து மறுபடி உள்ளே வந்தோம் என்றால் வீட்டை மறுபடி சுற்றிக் கொண்டு வாசலுக்கு வரும்!

வருகைக்கும், தகவலுக்கும், சுட்டி உதவிக்கும் நன்றி ஏஞ்சலின்!

நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி கோமதி அரசு மேடம். நாய் பாவம். பழகி விட்டால் அருமையான, அன்பான நண்பன்.

நன்றி ரஞ்சனி மேடம். போலீஸ் அதிகாரி சுட்டி எங்களுக்கு திறக்கிறது. குழப்பம் என்னவென்று தெரியவில்லை. மற்றவர்களுக்கு யாருக்காவது அந்தச் சுட்டி திறந்ததா என்று தெரிந்து கொள்ள ஆசை.

நன்றி மனோ சாமிநாதன் மேடம். உங்கள் தளத்திலிருந்து இரண்டாவது முறை பாஸிட்டிவ் செய்தி பகிர்ந்திருக்கிறேன்!

ராமலக்ஷ்மி said...

போலீஸ் குறித்த சுட்டி திறந்தது. வாசித்து விட்டுதான் பாராட்டியிருந்தேன். இப்போதும் வேலை செய்கிறதே.

Ranjani Narayanan said...

நேற்று பேஸ்புக் அக்கௌன்ட் லாக்-இன் செய்யாததால் திறக்கவில்லையோ என்னவோ. இப்போது திறந்தது. படித்துவிட்டேன்.
நன்றி!

T.N.MURALIDHARAN said...

பொதுவாக ஆட்டோக்காரர்கள் பற்றி நல்ல அபிப்ராயம் பொதுமக்களிடத்தில் இல்லை. ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது என்பதை பாசிடிவே செய்திகள் உணர்த்துகின்றன.
நாய்கள் பிழைக்கத் தெரிந்தவை, நம்மை க்ருருவென்று பார்த்து, வாலாட்டி, முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, அலுவலகம் விட்டு வரும்போதெல்லாம் எட்டிப்பார்த்து, .... ஏதேனும் வாங்காமல் செல்வதில்லை.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!