Saturday, August 17, 2013

பாஸிட்டிவ் செய்திகள் கடந்தவாரம் ...


1) ஆட்டோவுக்கு பதிலாக வரப்போகும் குவாட்ரிசைக்கிள் பற்றிய செய்தி 

                                      


2) சிறுவயதில் வீட்டை விட்டு ஓடி, பல்வேறு அனுபவங்களின் மூலம் 'வாழ்க்கையை'ப் படித்து, இன்று முன்னேறியிருக்கும் திரு பிரேம் கணபதி.
                                          


உலக அளவில் முதல் முறையாக, இரைப்பை புற்றுநோய்க்கு காரணமான மரபணுவை கண்டுபிடித்துள்ள, எம்.எஸ். சந்திரமோகன்

                                                                            
 
4) தனிமனிதராய் ஒரு காட்டியே உருவாக்கிய திரு ஜாதவ் பயேங் பற்றிப் படிக்க...
                                                                 


5) விளக்கம் தேவையில்லை அல்லவா!

                                    

6) உலகிலேயே மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் உ.பியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஸ்ருதி பாண்டே.

ஜன்சி நகரில் உள்ள பிரமானந்த் சரஸ்தி தாம் என்ற ஆசிரமத்தில் தினசரி காலை 5.30 மணிக்கு தனது யோகா வகுப்பை தொடங்கி சொல்லிக் கொடுக்கிறார் இந்த குட்டி ஆசிரியை.

கடந்த 2 வருடங்களாக யோகா சொல்லிக் கொடுத்து வருகிறார் ஸ்ருதி. அதாவது தனது 4 வயது முதலே அவர் யோகா ஆசிரியையாக மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

14 comments:

பழனி. கந்தசாமி said...

நல்ல செய்திகள்.

அமைதிச்சாரல் said...

மிக மிக நல்லசெய்திகள்..

சே. குமார் said...

அருமையான செய்திகளின் தொகுப்பு.

Ananya Mahadevan said...

ரத்தினச் சுருக்கமான தொகுப்பு.. அருமை!

வல்லிசிம்ஹன் said...

நாலு வயது ஸ்ருதிக்கு ஜே.விளையும் அரும் பயிர்.
புற்றுநோய் மரபணு கண்டுபிடித்தவருக்கு வாழ்த்துகள் எத்தனை உயிர் காப்பாற்றப் படப்போகிறது. நன்றி,
தெருவிளக்கு மேதை.டென்னிஸும் விளையாடுவார் போல.
ஜாதவ் பயாங் காடே தேவலை என்று வந்துவிட்டார்,. இனி மனிதவளத்துக்கு யாரோ.

Viya Pathy said...

அவசியம் படிக்கவேண்டிய செய்திகளின் தொகுப்பு

வெற்றிவேல் said...

அனைத்தும் சிறப்பான பதிவுகள்... பகிர்விற்கு நன்றி...

Ranjani Narayanan said...

குட்டி யோகா ஆசிரியைக்கு வந்தனங்கள்.
தெருவிளக்கு மேதையின் எதிர்காலம் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.
இந்த ஆட்டோவை நாமே ஓட்டலாமா?
டாக்டர் சந்திரமோகனுக்குப் பாராட்டுக்கள்.
ஜாதவ் பயேங் பற்றி படிக்க வியப்பு!

பிரேம் கணபதிக்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள்.
பாதையோர சிறுமியின் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.

rajalakshmi paramasivam said...

இந்த ஆட்டோ மாதிரி இருக்கும் கார் எப்போ சென்னைக்கு வரும் சொல்லுங்கள். அதில் போய் பார்க்க வேண்டும்.
கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் தெரு விளக்கிலும் படிக்கும் சிறுமிக்கு வாழ்த்துக்கள்.
யோகா ஆசிரியைம்றும் ஜாதவ் பயேங்பற்றித் தெரிந்து கொண்டேன் வியப்படைந்தேன்.
நன்றி.

ராமலக்ஷ்மி said...

நல்ல செய்திகள். தொகுத்தளித்த விதம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

கவியாழி கண்ணதாசன் said...

அனைத்துமே அற்புதம் .வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

விபரங்களை டைப் பண்றதுக்குப் பதிலா லிங்க் கொடுத்துட்டீங்க, “பாஸிடிவ்” முன்னேற்றம்! :-)

//இரைப்பை புற்றுநோய்க்கு தீர்வு!//
நோய்க்குக் காரணமான மரபணுதானே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அது தீர்வாகுமா? தீர்வுக்கான வழி தொடங்கியது என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாமோ?
(அந்த லிங்கின் சுட்டி வேறொரு பக்கத்திற்குப் போகிறது)

//சிறுவயதில் வீட்டை விட்டு ஓடி, பல்வேறு அனுபவங்களின் மூலம் 'வாழ்க்கையை'ப் படித்து, இன்று முன்னேறியிருக்கும் //

”வீட்டைவிட்டு ஓடிப்போய்” வாழ்வை இழக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் இடையில் இதுபோல ஓரிருவர் முன்னேறி இருப்பவர்கள் கதை மட்டுமே வெளிவருகிறது. இளைய தலைமுறைக்கு இது ஒரு தவறான உதாரணமாகாதா என்று ஒரு கேள்வி.

//6 வயது யோகா ஆசிரியை//
இளவயதிலேயே யோகா கற்றுக்கொளவது சிறப்புதான். ஆனால் இந்த வயதில் ‘ஆசிரியை’ ஆகமுடியுமா?

//இனி மனிதவளத்துக்கு யாரோ.//
வல்லிமா, குட் கொஸ்டீன். :-))

‘பாஸிடிவ்’ செய்திகளுக்கு, என்னுடைய எல்லா கருத்துகளுமே ‘நெகடிவ்வா’ இருக்கோ... அவ்வ்வ்வ்வ்....

Geetha Sambasivam said...

கடைசிச் செய்தியைத் தவிர மற்றவை படித்தவை. இந்தக் குட்டி யோகா ஆசிரியர் குறித்துக் கேட்டதில்லை. :)))

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!