புதன், 21 ஆகஸ்ட், 2013

தமிழ்ப்பட டயலாக், தானாய் எரியும் விளக்கு, ஜோக், காஞ்சூரிங் - வெட்டி அரட்டை

         
"தெரிஞ்சோ தெரியாமலோ..."  என்று தொடங்கி பேசப்படும் வசனங்களை நிஜ வாழ்வில் எத்தனை முறை உபயோகப்படுத்தும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது?

                
'தெரிஞ்சோ தெரியாமலோ....'  செய்தால் தவறில்லை என்று அர்த்தமா!


                                                          

தவறு என்பது தவறிச் செய்வது... தப்பு என்பது தெரிந்து செய்வது... தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்... தப்பு செய்தவன் வருந்தியாகணும்... வாலி வரிகள்!

              
தமிழ்ப்படங்களில் கதா நாயக / நாயகியரின் சுயபரிதாப ஒப்புதல் வாக்குமூலங்களுக்கு இந்த ஆரம்பவரிகள் தப்பாமல் தளம்  கொடுக்கின்றன. எத்தனை ஹீரோக்கள் எத்தனை எத்தனை படங்களில் இந்த வசனத்தை உபயோகித்திருக்கிறார்கள்....
                
'சும்மா' போல அர்த்தமில்லாமல் போகப்போகும் வரிகளில் ஒன்று!
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

ஆஸ்பத்திரியில் ஊழியர் "உங்க பேர் சொல்லுங்கம்மா..."


"மங்கை"

"மங்கையா...மங்கையர்க்கரசியா?"

"மங்கைதாங்க"

"புருஷன் பேரு சொல்லும்மா..."

"ஐயோ மாட்டேன்லா....ஆயுசு குறைஞ்சு போகும்..."

"அட, சொல்லும்மா...உயிரை வாங்காத!"

"வானத்துல போகுமே..."

"என்னம்மா வேலை நேரத்துல விளையாடிகிட்டு... புதிர் போடாமச் சொல்லும்மா... ஏரோப்ளேனா?"

" இல்லீங்க... அங்கேயே இருக்குமே... "

"மேகமா....என்னம்மா எங்கெங்க மரியாதை காட்டறதுன்னு இல்லையா?"

"ஐயோ.. இல்லீங்க.... ஆ.....ங்....ராத்திரியில வருமே..."

"ராத்திரில வருமா?! நட்சத்திரமா....ஓ... ..நிலவு... சந்திரனா?"

"அ...ஆமாங்க...அதேதாங்க...அதுக்கு முன்னாடி சீதை புருசன் பெயரைச் சேர்த்துக்குங்க..."

"ராமச்சந்திரன்?"

"கரெக்டுங்க....அதாங்க அந்தக் கருமம் பிடிச்சவன் பேரு...."
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
   
லண்டன் வாழ் தமிழர் (என்று ஞாபகம்) ஒருவர் தெருவிளக்குகள் ஆட்கள் நடமாட்டம் இருந்தால் மட்டும் விளக்கு எரியும் வண்ணம் (உதவி :சென்ஸர்)  தயாரித்திருப்பதாகப் படித்தேன். இந்தச் செய்தியின் மூலத்தைப்  பிடிக்க முடியாததால் ( நோ நோ அந்த மூலம் இல்லீங்க....ஸோர்ஸ்) பாஸிட்டிவ் செய்திகளில் பகிர முடியாமல் போனது! நல்ல சிக்கன நடவடிக்கையாக இருக்கும். 

                                                       

ஆனால் நாய் கம்பத்தடியில் படுத்திருந்தால் விளக்கு மட்டும் எரிந்து கொண்டேயிருக்கலாம்! இருளான  தெருக்களைப் பார்க்கும்போதே ஒரு தயக்கம், பயம் வரும் - இரவில்! இரவில்! இந்நிலையில் தாண்டி நடக்க நடக்க தானாக விளக்குகள் எரிந்தால்... பழகும் வரையில் தெருவுக்கு ஒரு 108 ஆம்புலன்ஸ் (ஒரு.. 108.. ! என்ன முரண்!)  நிறுத்திவைக்க வேண்டியிருக்கலாம்!
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][[][][][][][][]
    
இந்த பயத்தைப் பற்றிப் பேசும்போது வேறொன்று நினைவுக்கு வருகிறது. சென்னையில் மக்கள் ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்து பரவசமாக பயந்து போகிறார்கள். ஏதோ கைதட்டும் பேய் பற்றிய படமாம்... படம் பெயர் என்னவோ வருமே.... என்னவோ வருமே....
 
                                                          

"கொண்டையில் தாழம்பூ.." பாடலில் ரஜினி "கூடையில் என்ன பூ..." என்று வாயசைத்து விட்டு ரசிகர்களைப் பார்த்து 'என்ன' என்று கைஜாடையில் கேட்பார்! அது நினைவுக்கு வருகிறது இல்லை?!!
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
      
உங்களிடத்தில் முப்பது ரூபாய் மட்டும் கொடுத்து இன்றைய பொழுதை  இந்தப் பணத்துக்குள் ஓட்ட வேண்டும், கடனோ உடனோ வாங்கக் கூடாது என்று சொன்னால் என்ன வாங்குவீர்கள், பசியாறுவீர்கள்?!!! ஒருமுறை மட்டுமே 'அம்மா உணவக'த்துக்கு அனுமதி!  






மேலே உள்ளவை சில முகநூல் கருத்துகள். 
மற்ற வாசகர்களின் கருத்துகளையும் அறிய ஆவலாக உள்ளோம். 
               

18 கருத்துகள்:

  1. என்னவோ வருமே.... என்னவோ வருமே.... வேறு எதோ வருகிறது...! ஹிஹி...

    பதிலளிநீக்கு
  2. சுவிஸ் அக்கவுண்டு உள்ளது இன்று தான் தெரியும்... ஹிஹி...

    அப்புறம் தொட்டால் எரியும் பல்பு - வரும் பகிர்வில் இணைக்கப்படும்...

    பதிலளிநீக்கு
  3. //"மங்கை"
    "மங்கையா...மங்கையர்க்கரசியா?"
    "மங்கைதாங்க" //

    :))

    பதிலளிநீக்கு
  4. // சுய பரிதாப ஒப்புதல் வாக்குமூலங்கள்..//

    எவ்வளவு அருமையான வார்த்தைத் தொடர்! ரொம்ப நாளைக்கு மனசில் நிற்கும்!

    பதிலளிநீக்கு
  5. //அதாங்க அந்தக் கருமம் பிடிச்சவன் பேரு//
    Class!

    பதிலளிநீக்கு
  6. அதாங்க அந்தக் கருமம் பிடிச்சவன் பேரு --- அடிச்சாண்ணே நெத்தியடி...

    பதிலளிநீக்கு
  7. / நடமாட்டம் இருந்தால் மட்டும் எரியும் விளக்கு/

    நல்ல கண்டுபிடிப்பாக இருக்கலாம். நடைமுறைக்கு ஒத்து வராதென்பதே என் கருத்தும்.

    பதிலளிநீக்கு
  8. கணவருக்கு மரியாதை செலுத்தும் மங்கையர்க்கரசி புகழ் படித்தேன்.

    முதலில் பாராளுமன்றத் தேர்தலில் ஜெயித்து விட்டு உங்கள் முப்பது ருபாயை வாங்கிக் கொள்கிறேன்.
    பாராளுமன்றக் கேண்டீனில் எல்லாமே விலை கம்மி என்று டிவியில் பார்த்தேன்.

    பி.கு. நான் நேர்மையானவளாக இருப்பேனே !

    பதிலளிநீக்கு
  9. ஸ்விஸ் பாங்க் அக்கவுன்டைப் பத்தி இங்கே எங்கே எழுதி இருக்கீங்கனு தேடித்தேடித்தேடித்தேடித் தேடித்தேடிப் பார்த்தும் கண்ணில் படலை. மத்தபடி விளக்கு எரியுதம்மா நல்லா இருக்கு. புதிய வார்த்தை சுய பரிதாப ஒப்புதல் வாக்குமூலம்! கற்றேன்.

    இந்த மங்கை, அந்த மங்கையா? இல்லை அதன் பாதிப்பா? :)))))

    இப்போத் தோணினது, முப்பது ரூபாயை வாங்கிட்டு உண்டியல்லே போட்டுட்டு யார் வீட்டுக்கானும் ஓ.சா.க்குப் போயிட வேண்டியது தான். பணத்துக்குப் பணமும் மிச்சம். சாப்பாடும் கிடைச்சுடும்.

    பதிலளிநீக்கு
  10. //இந்த மங்கை, அந்த மங்கையா? இல்லை அதன் பாதிப்பா? :))))) //

    கீதாம்மா! அடுத்த பதிவு வரை கெடு கொடுத்திருந்தேன், அல்லவா?.. நீங்க தான் கண்டு கொள்ளவில்லை. ஸ்ரீராம் விடுவாரா?..

    விடையை அங்கே சொல்லாமல் இங்கே சொல்லியிருக்கார். நானும் அகஸ்மாத்தாக நேற்று இரவு பார்த்தவன், இனிமேலும் தாமதம் செய்யக் கூடாது என்று இன்று போட தயாராக இருந்த பதிவை அவசர அவசரமாக நேற்றே பப்ளிஷ் பண்ணி விட்டேன்.

    கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
    காற்று வந்ததால் கொடி அசைந்ததா?--
    ங்கறதை ஸ்ரீராம் தான் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு

  11. DD... அடுத்த புதுமை செய்ய ரெடி ஆயிட்டீங்க போல.... உங்க அடுத்த பதிவுல விளக்கெரிய வைக்கப் போறீங்களா... கலக்குங்க!

    அய்யய்யோ... ஜீவி ஸார்... அண்ட் கீதா மேடம்... மங்கை என்ற பெயர் மனதிலிருந்து தானாய் வந்தது. அதற்கு எந்தக் காரணமும் இல்லை. இந்த மங்கை வேறு.... நல்லவேளை புருஷன் பெயர் மாறி இருக்கிறது! ஆனால் மங்கை என்று ஏன் மனதில் பெயர் தோன்ற வேண்டும்? கோ இன்சிடென்ஸ் தான்.

    சு.ப.ஒ.வா. - வார்த்தையை சிலாகித்ததற்கு நன்றி ஜீவி ஸார்! மற்றும் கீதா மேடம்!

    நன்றி bandhu!

    நன்றி சே. குமார்!

    நன்றி ராமலக்ஷ்மி. எல்லா இடங்களிலும் எப்போதும் எரியும் விளக்குகளைவிட, எங்கேயாவது நாய் படுத்திருந்து எப்போதும் எரியும் விளக்குகள் இருந்தாலும் சிக்கனம்தானே... ஒருவேளை ஏன் தொடர்ந்து அங்கே விளக்கு எரிகிறது என்று கண்ட்ரோல் ரூமில் பார்த்து உடனே நடவடிக்கை எடுக்கலாம்!!!

    நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்... உங்களுக்கு 7 வோட்டு நிச்சயம்... உங்கள் வோட்டு, உங்கள் கணவர் வோட்டு, மற்றும் எங்கள் ஆ'சிரி'யர்கள் 5 பேர்!

    நன்றி கீதா மேடம்.. முப்பது ரூபாயை உண்டியல்ல போட்டாலும் இன்னொரு ஏதோ ஒருநாளை ஓட்ட, 30 ரூபாயை வைத்து கணக்குக் காட்ட வேண்டும்! :)))

    நன்றி அப்பாதுரை!

    நன்றி மாதேவி...

    ஜீவி ஸார்.. மறுபடி சொல்றேன்.... அந்த மங்கை வேற... இந்த மங்கை வேற...!

    பதிலளிநீக்கு
  12. இனாபா இது.. ஒரு கமெண்டு போட்டா... அத வெச்சு போஸ்டு தேத்திர்ராங்க.. என்னை வெச்சு காமிடி கீமிடி பண்ணலியே????

    பதிலளிநீக்கு
  13. காஞ்சுரிங் அப்படி ஒன்று பயமாய் இல்லை சார்.. அத்தனை அத்தனை பெரும் ஆகா ஓகோ என்று எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு புஸ்ஸுன்னு போயிருச்சு.. தமிழில் வந்த பீசா சூப்பரோ சூப்பர்

    பதிலளிநீக்கு
  14. முப்பது ரூப்பாய்க்கும் என்ன வாங்க முடியும்
    ஒரு வேளை உபவாசம் இருக்கலாம்:)ஏகாதசியாப் பார்த்து.
    அப்புறம் முகநூல் அடிக்ஷன் என்னைப் பிடிக்கலை. சாமி புண்ணியத்தில்.:)

    பதிலளிநீக்கு
  15. ஹாஹா, வல்லி, முப்பது ரூபாயில் ஒரு ரூபாய் மிச்சம் பிடிச்சிருக்கேனே. வந்து பாருங்க, கணக்கா கேட்கிறாங்க, கணக்கு! :)))))

    பதிலளிநீக்கு
  16. நானும் முகநூலில் குடித்தனமெல்லாம் பண்ணறதில்லை. அப்புறமா வீட்டிலே யாரு பண்ணறது? :)))) இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி என்னிக்கானும் ஒரு நாள் போயிட்டு வருவேன். :)))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!