Saturday, April 18, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1) "இந்த ஆயுளில் முழுப் பலனையும் அடைந்து விட்டதாக உணர்கிறேன்."   விருதுநகர் மாவட்டம், கீழ்உப்பிலிக்குண்டில் நுாலகத்தை நிறுவிய, முன்னாள் கைதி முருகன்
 


2) தாயம்மாளின் உயர்ந்த சேவை.
 


3) மின்சாரம் தேவை இல்லை, எரிபொருள் தேவையில்லை.  விவசாயிகளுக்கு பெரிய அளவில் உதவும் மங்கள்சிங்கின் கண்டுபிடிப்பு.  (நம்ம பிரச்னை தண்ணீர்ப் பற்றாக்குறை இல்லையா?  ஆனால் அந்த அளவு தண்ணீர் வேண்டுமே!!!)
 4) ஆயுஷின் லட்சியங்கள் நிறைவேறட்டும்.
 


5) அக்கை பத்மஷாலியின் போராட்ட வாழ்க்கையும், வெற்றியும்.
 


6) சூர்யகுமார்.


 

13 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்குரியவர்கள்
போற்றுவோம்
பாராட்டுவோம்

திண்டுக்கல் தனபாலன் said...

கவலையை ஒழித்த சூரியகுமார் +

தாயம்மாள் - கல்வித்தாய் எங்கும் வேண்டும்...

Thenammai Lakshmanan said...

சூப்பர் சூர்ய குமார். இதுபோல பள்ளிகளில் எல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்டால் ரொம்ப சந்தோஷம்தான்.

வெளிநாடுகளில் கார்பெண்டரி வேலைகள் வீட்டில் சின்ன சின்ன ரிப்பேர்களை அவர்களே செய்து கொள்வார்களாம். இதுக்கு கூலி ஜாஸ்தியா இருக்குமா. இல்லாட்டி ஆள் கிடைக்காதா தெரில..

ஆனா கைத்தொழில் ஒன்றைக்கற்றுக் கொள் என்று கூறியது ( திரு வி க ந்னு நினைக்கிறேன் ) சரிதான்னு தோணுது :)

KILLERGEE Devakottai said...


போற்றப்பட வேண்டியவர்களே அனைவரும் வாழ்க வளமுடன்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே!

நல்ல செய்திகளுடன் ௬டிய பதிவு.

தாயம்மாள் அவர்களின் கல்வி சேவையும், கைத்தொழிலை மாணவியருக்கு கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் சூர்யகுமார் அவர்களின் பெருந்தன்மையும் பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள்.அவர்களுடன் இன்று பகிர்ந்துள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள். பகிர்ந்தமைக்கு தங்களுக்கு நன்றிகள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

Geetha Sambasivam said...

கைதியாக இருந்தும் மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டு இன்று சிறப்பான சேவை செய்திருக்கும் முருகனைக் குறித்து இப்போது தான் படிக்கிறேன். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலேயே டிவிஎஸ் நிறுவனம் செய்து வந்திருக்கும், வரும் தொண்டுகளுக்குக் கணக்கே இல்லை. தாயம்மாள் குறித்தும் இப்போது தான் அறிகிறேன்.

திருநங்கை பத்மஷாலிக்கும் மற்றும் சூர்யகுமார் விவசாயி மங்கள் சிங் அனைவருமே புதியவர்கள்.இம்முறை எல்லோருமே புதிய செய்திகளைத் தாங்கி வந்திருக்கின்றனர்.

Geetha Sambasivam said...

சூர்யகுமார் செய்து வருவது புதிது அல்ல. ஏற்கெனவே உள்ளது தான். மேலும் இந்தத் தொழில் கல்வி ராஜாஜியால் அறிமுகம் செய்யப்பட்டுக் குலக்கல்வி என்னும் பெயரால் அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டது. எனக்குத் தெரிந்து மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் இருந்தே கைத்தறி நெசவு, தச்சு வேலை போன்ற கைத்தொழில்களைக் கற்றுக் கொடுத்திருக்கின்றனர். கைத்தறி நெசவில் ஆசிரியர்களாக இருந்த இருவரும் பிராமணக் குலத்தைச் சேர்ந்தவர்கள். பெரிய தறி, சின்னத் தறி என்னும் பெயரால் அழைக்கப்பட்டனர்.

Geetha Sambasivam said...

//வெளிநாடுகளில் கார்பெண்டரி வேலைகள் வீட்டில் சின்ன சின்ன ரிப்பேர்களை அவர்களே செய்து கொள்வார்களாம். இதுக்கு கூலி ஜாஸ்தியா இருக்குமா. இல்லாட்டி ஆள் கிடைக்காதா தெரில....

கூலி அதிகம் தேனம்மை. மேலும் தொழில் கல்வி கற்றுக்கொள்ளச் சொன்னது திருவி.க அவர்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ராஜாஜி நடைமுறைப் படுத்த நினைத்தார். பயங்கர எதிர்ப்பு எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். பல பாரம்பரிய ஆசாரிகளின் நுணுக்கமான கைவேலைகள் எல்லாம் இதனாலேயே அழியக் காரணமாகவும் இருந்து விட்டது. அதே போல் நெசவுத் தொழிலிலும். இன்னும் பல புராதனக் கலைகளில்! :(

‘தளிர்’ சுரேஷ் said...

தன்னம்பிக்கை நாயகர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

Bagawanjee KA said...

கைதி முருகனின் நல்ல செயலில் நான் கைதாகிப் போனேன் :)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முருகனின் சேவையைப் போற்றுவோம்.
திருநங்கைகள் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. நான்எழுதிய திருநங்கைகள் பற்றிய பதிவு ஒன்றை படித்துவிட்டு ஒரு கல்லூரி மாணவர் போன் செய்தார். அவரது சூழல் அறிந்து வருந்தினேன்.அவர் அனுமதியுடன் பின்னர் அதனைப் பற்றி எழுத இருக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமையான செய்திகள்.....

தொடரட்டும் நற்செய்திகளின் தொகுப்பு.....

Thulasidharan V Thillaiakathu said...

கைதியின் மனதிலும் நல்ல எண்ணங்கள் உண்டு என்பது நிரூபணம்.....சூரியகுமார் போற்றப்பட வேண்டியவர். அருமை...

அக்கை திருநங்கை குறித்த பதிவு ம்ம்ம் நம்ம தளத்திலும் பங்களூரைச் சேர்ந்த திருநங்கை பற்றி எழுதியிருந்தோமே...ம்ம் அவர்களின் நிலை பாவம்தான்....போராட்டம் மிக்க வாழ்க்கைதான்...பரவாயில்லை..நல்லது நடக்க ஆரம்பித்து அது தொடர்ந்தால் நல்லதே!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!