ஆனால் அதுவும் உண்டுதான். இப்போது நான் சொல்லப் போவது வேறு மாதிரி.
" 'காண்க' என்பது வினை எச்சம். ஒரு மேலதிகாரிக்கு எழுதும்போது உதவியாளர் இப்படி எழுதக் கூடாது. தயவு செய்து காண்க' என்றே எழுத வேண்டும்" என்று எழுதி அனுப்பினார்.
நம் கதாநாயகன் கொஞ்சம் விடாக்கண்டர், நிறைய ஏடாகூடம். இவர் பதிலுக்கு அந்த நோட்ஃபைலில் பதிலுக்கு
"அது வினை எச்சம் அல்ல. அது வியங்கோள் வினை முற்று.
மேலும் நோட்ஃபைலில் சீனியர் ஜூனியர் பாகுபாடு எல்லாம் கிடையாது. எந்தப் பிரச்னையைக் குறித்துப் பேசுகிறோம் என்பதே முக்கியம்" என்று எழுதி அவருக்கே திருப்பி அனுப்பி விட்டார்.
அவர் மறுபடி "நான் சொன்னதே சரி" என்று எழுதி
அனுப்ப, நம் நண்பர் பதிலுக்கு தன் மகளின் எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணப்
புத்தகத்திலிருந்து இரண்டு பக்கத்தை ஜெராக்ஸ் எடுத்து இணைத்து
'ஆதாரத்துடன்' மறுபடி அவருக்கு அனுப்பி விட்டார்.
விஷயம் ஜே டிக்குப் போய்விட்டது. அவரைப் பற்றித் தனிப்பதிவே எழுதலாம். அவ்வளவு விஷயம் அவரிடமும் உண்டு!
"ஏ ஓ, அஸிஸ்டண்ட்... கூப்பிடுறா ரெண்டு பேரையும்!"
அவர் எதிரில் நின்றார்கள் இரண்டு பேரும்.
அவர் எதிரில் நின்றார்கள் இரண்டு பேரும்.
"என்னங்கடா பொழுது போகல்லையா உங்களுக்கு? பொழுது போகல்லையான்னு கேட்டேன்"
"இல்லை ஸார்.. நோட்ஃபைல் எழுதி அனுப்பினா இவரு..."
முடிக்க விடாமல் வெட்டினார் ஜே டி.
"குடுமி
வச்சிருக்கீங்களா ரெண்டு பேரும்? திரும்புங்க.... பார்க்கிறேன்!
தமிழ்ப் புலவர்களா நீங்க? நான் என்ன தமிழ்ச் சங்கமாடா வச்சு
நடத்திகிட்டிருக்கேன்? ஆஃபீஸா, என்னன்னு நினைச்சீங்க... தொலைச்சுடுவேன்..
செய்ய வேண்டிய வேலையை விட்டுட்டு என்ன விளையாடிகிட்டு இருக்கீங்க?"
கொஞ்ச நேரம் அர்ச்சனை செய்து அனுப்பினார்.
ஸீட்டுக்குத் திரும்பினார்கள் இருவரும்.
அப்புறம் அந்த ஃபைல் மறுபடி தயாராகி ஏ ஓ கையெழுத்தைப் பெற்று ஜே டியை அடைந்தது!
அப்புறம் அந்த ஃபைல் மறுபடி தயாராகி ஏ ஓ கையெழுத்தைப் பெற்று ஜே டியை அடைந்தது!
(டிஸ்கி :
வினையெச்சம், வியங்கோள் முற்று எல்லாம் அவர்கள் அடித்துக் கொண்டது.
சண்டைதான் முக்கியம். இதில் எது சரி, எது தவறு என்று எனக்குத் தெரியாது!)
ஹ ஹ ஹா
பதிலளிநீக்குஇப்படியும் தமிழ் பேசும் அலுவலகமா?
கல்வித்துறையா?
நல்ல வேளை,
வரைவுக் குறிப்பு என்பதைத்
திருமணத்திற்கான குறிப்பு எனப் புரிந்து கொண்டுவிடவில்லையே...!
அம்மட்டில் மகிழ்ச்சி தான்.
அப்புறம் காண்க என்பதற்கு வினையெச்சம் என்று இருக்கும் அந்தத் தமிழ்ப்பாடப் புத்தகத்தை இவ்வாண்டின் புலிட்சர் விருதுக்குப் பரிந்துரைக்கலாம்.
இலக்கண வகைமையும் சேர்த்துக் கொள்ளச் சொல்லி.
அருமை!
ஊம் .... நான் போட்டால் தெரியும் போடு; தமிழ்ப் பாட்டால் அடிப்பேன் ஓடு!
பதிலளிநீக்குவேடிக்கைதான்
பதிலளிநீக்குமனதில் உள்ள ஈகோவின் வெளிப்பாடு
நன்றி நண்பரே
மேலதிகாரிக்குத் தமிழ்ல பத்து மார்க் (இருபத்தெட்டாயிரத்துக்கு).
பதிலளிநீக்கு//Durai A said...
பதிலளிநீக்குமேலதிகாரிக்குத் தமிழ்ல பத்து மார்க் (இருபத்தெட்டாயிரத்துக்கு).//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
அது என்ன கணக்கு 10/28000 ? :)))))
/அவரைப் பற்றித் தனிப்பதிவே எழுதலாம்//
பதிலளிநீக்குவெயிட்டிங்!! :-)))))
நல்ல தமாசுதான்.
பதிலளிநீக்குஎங்க ஆபீசுல ஒருத்தர் இப்படித்தான். துணைவேந்தருக்கு அனுப்பிய கோப்பில் "விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு விடிஞ்சதுக்குப் பிறகு, சீதைக்கு ராமன் சித்தப்பா என்று சொல்கிற மாதிரி இருக்கு" என்று எழுதி அனுப்பி விட்டார்.
அவர் பெயர் கலியப்பா. துணைவேந்தர் "கலியப்பா, இங்க கொஞ்சம் வாப்பா" என்று கோப்பில் எழுதி திருப்பி அனுப்பினார். அப்புறம் நடந்தவைகளை இங்கே எழுதக்கூடாது. நாகரிகம் இல்லை.
ஹா... ஹா...இப்படியுமா...!
பதிலளிநீக்குதனிப்பதிவு எப்போது...?
வணக்கம்
பதிலளிநீக்குசம்பவம் இப்படி போகுதா....
எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...: ...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தமிழ் என்பதால் நிச்சயம் அரசு அலுவலமாகத் தான் இருக்கவேண்டும்.சுவாரசியமான பதிவு
பதிலளிநீக்கு"பணிந்து சமர்ப்பிக்கிறேன்" மேலதிகாரிக்கு.
கனிவுடன் அனுப்பலாகிறது சக அலுவலருக்கு , அறிவுறுத்தப் படுகிறது கிழ்நிலை அலுவலருக்கு.
வேடிக்கையான நிகழ்வுதான்... அவர்களுடைய தமிழ்ச்சண்டையில் மற்றவர்களுக்குப் பொழுதுபோகிறது. மேலதிகாரி அவர்களுடைய குடுமியை சோதித்து புலவர்கள் இல்லை என்று அறுதியிட்டு அறிந்தது நல்ல சுவாரசியம்.
பதிலளிநீக்குநல்லவேளையா எனக்குத் தமிழ் இலக்கணமெல்லாம் தெரியாது. பிழைச்சேன்.:)
பதிலளிநீக்குசண்டை மிக சுவாரஸ்யம் ஸ்ரீராம் சார். அதை மேலதிகாரி பஞ்சாயத்து செய்த விதம் இன்னும் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குகுடுமி இருந்தால் தமிழ்ப் புலவர் என்று அர்த்தமா?
பதிலளிநீக்குசுவாரஸ்யமான சண்டைதான்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குநல்ல பொழுதுபோக்கான ஆனால் சுவாரஸ்யமான தமிழ் இலக்கண சண்டைதான்.பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வியப்பாக இருக்கிறது. இப்படிக் கூட சண்டை போடுவார்களா?
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஜே.டி க்கான தனிப்பதிவைக்காண ஆவல்...
இந்த பதிவில் தான் எத்தனை ஆங்கில வார்த்தைகள்?..
பதிலளிநீக்கு'அப்ரூவல்' 'ஃபைலை', 'டீல்', 'அக்கவுண்ட்ஸ் ஆபிஸர்', நோட் ஃபைல், சீனியர்-ஜூனியர், 'ஜெராக்ஸ்' 'ஜே.டி', 'ஆஃபீஸ்' ---
--அவற்றையும் தமிழாக்கம் செய்வதில் கொஞ்சமே கொஞ்சமானும் சிரமப்பட்டிருந்தால் வேறு கோணத்தில் இந்தப் பதிவு ஹஹ்ஹஹா ஆகியிருக்கும். :))
இப்படியெல்லாம் தமிழ்ச் சண்டை வரும்னு தான் வெள்ளைக்காரன் மெக்காலே கல்வி முறையை கொண்டு வந்ததாக சொல்வார்கள் :)
பதிலளிநீக்குஅன்பின் இனிய வலைப் பூ உறவே!
பதிலளிநீக்குஅன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
ஸ்வாரசியாமான சண்டை தான். எடுக்க வேண்டிய முடிவு எடுக்கப்படாமல் சண்டையிலேயே தள்ளிப் போடப்படும் முடிவுகள் எத்தனை எத்தனை!
பதிலளிநீக்குஈகோ:))!
பதிலளிநீக்குநானும் காத்திருக்கிறேன் அந்தத் தனிப் பதிவுக்கு..!