திங்கள், 27 ஜூன், 2016

"திங்க"க்கிழமை 160627 :: புளிச்சகீரைப் பொடி



ஒரு கட்டு புளிச்சக்கீரை அல்லது கோங்கூரா.





தண்டு, காம்பு இவற்றை நீக்கி இலை மட்டும் எடுத்துக் கொள்க.

ஒரிரண்டு முறை நல்ல நீரில் கழுவி உதறி எடுத்து ஒரு வெள்ளைத் துணியில் வாடும் வரை 10/12 மணி நேரம் ஆறப் போடவும்.

பின் கத்தரி அல்லது கத்தியால் நறுக்குக.





இதை ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்த பின் வாணலியில் மீண்டும் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் சிவப்பு மிளகாய் சிறிது புளி(!) இவற்றுடன் உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு போட்டு வறுக்கவும்.


ஆறிய பின் மிக்ஸியிலிட்டு அரைத்த பின் வதக்கி வைத்த இலை உப்பு சேர்த்து கலக்கி எடுக்கவும்.




பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடாகும் போதே மிளகாய்த் தூள் மஞ்சள் பொடி சேர்த்துப் புரட்டி ஆறிய பின் பாட்டிலில் எடுத்து வைக்கலாம்.






பூண்டு பிரியர்கள் உறித்த பூண்டுப் பல் வேண்டிய அளவு வதக்கியோ வதக்காமலோ சேர்ப்பதுண்டு.

மிக்ஸியில் கலந்ததை பாட்டிலில் போட்ட பின் காய்ச்சி ஆற வைத்த எண்ணெய் மேலாக ஊற்றி வைத்தால் பூசணம் வராது.

சாதத்துடன் கலந்து அல்லது உப்புமாவில் இருந்து பூரி வரை எல்லா உணவுக்கும் ஏற்ற பக்க வாத்தியம்.










நன்றி கேஜி, நன்றி புவனா.

40 கருத்துகள்:

  1. Amma used to prepare this when we were at Hosur! It was tasty. After that no chance to taste this one. Here in our house there is no vote for this one. so I never prepared this one. :)

    பதிலளிநீக்கு
  2. சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  3. இது கேரளத்தில் செய்வதில்லை. கீதா வீட்டில் சாப்பிட்டதுண்டு. முதன் முறையாக. நன்றாக இருந்தது பிடித்திருந்தது என்பதால் அவ்வப்போது வரும் போது இங்கு வந்து விடும்.

    பதிலளிநீக்கு
  4. ஹை கோங்குரா தொக்கு சரி உங்கள் பொடி....மிகவும் பிடித்த ஒன்று இப்போது கூட பையனுக்குச் செய்து கொடுத்தனுப்பினேன். பூண்டு போட்டு. அப்பாவுக்கும் மாமியாருக்கும் போடாமல் எடுத்து வைத்துவிட்டு அப்புரம் பூண்டு போட்டு எங்களுக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கோங்குரா பிரமாதமாக இருக்கும்.
    பூண்டு போட்டே விருப்பம்

    பதிலளிநீக்கு
  6. குண்டூரு கோங்குரா என்று பாட்டில் ஒரு வரி வருதே ,என்ன சம்பந்தம் :)

    பதிலளிநீக்கு
  7. பார்த்தால் செய்து சாப்பிடத் தோன்றுகிறது..நன்றி..

    பதிலளிநீக்கு
  8. பார்த்தால் செய்து சாப்பிடத் தோன்றுகிறது..நன்றி..

    பதிலளிநீக்கு
  9. நல்ல குறிப்பு. செய்து பார்க்கிறேன். ஆனால் ரிசல்ட் எப்படியென்பது புகைப்படம் கருப்பாக இருப்பதால் சரியாகத்தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  10. கோங்குரா தொக்கு எனக்கும் பிடிக்கும்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. எனக்கும் கீரைகள் பிடித்தமானதே ஹூம் எல்லாம் ஊருக்கு வந்தால்தான்

    பதிலளிநீக்கு
  12. கோங்கூரா பச்சள்ளு. பருப்பு போடாமல் செய்தால் இதுவும் நன்றாக இருக்கும். பரவாயில்லையே. நல்லநல்ல குறிப்புகள். புளிப்பு வஸ்து எனக்குப் பிடிக்கும். செய்துவிட வேண்டியதுதான்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  13. இதெல்லாம் பண்றது கஷ்டம்தான் (எனக்கு). புகைப்படங்களையெல்லாம் ஆர்டர் மாத்தி வெளியிட்டிருக்கிறீர்கள். கடந்த இரண்டு வாரங்களாக திங்கக் கிழமை, மற்றவர்கள் பண்ணிக்கொடுத்தால் சாப்பிடும்படியான ஐட்டமாக வெளியிட்டிருக்கிறீர்கள். பேசாம நான் உங்களுக்கு இரண்டு ரெசிப்பிக்களை அனுப்பலாம் என்று இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. வாவ்... சூப்பர்...
    குறிப்பை ஊருக்கு பார்சல் பண்ணியாச்சு அண்ணா.

    பதிலளிநீக்கு
  15. ஹை ! எனக்கும் பிடிக்கும் இங்கே சம்மருக்கு வங்காளிகள் கிடைக்கும் ..
    ஆந்திரா கீரை அங்கேயும் பேமஸ் :) நானா ரொம்ப நாள் வச்சதில்லை உடனே சாப்பிடுவேன் ..
    இதே போல செஞ்சா ஊறுகா தொக்கு மாதிரி வச்சி சாப்பிடலாம்னு நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  16. கோங்கூரா சட்னி மாதிரி கோங்கூரா பொடி... பார்க்க நல்லாவே இருக்கு.... இங்கே கிடைக்குதா பார்க்கணும்!

    பதிலளிநீக்கு
  17. கோங்குரா பிடிக்காத ஒன்று . ஆந்திராவில் பிரசித்தி பெற்றது

    பதிலளிநீக்கு
  18. புளிச்ச காய்ல ஊறுகாய் பிரமாதமா இருக்கும்.
    இப்ப எல்லாம் சென்னைல அந்த மரம் இருக்கான்னு தெரியவில்லை.
    இந்தப் பொடியைப் பார்த்தால் ஆசையா தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  19. ளிச்சுப் போச்சுங்கறீங்களா முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.. நன்றி.

    பதிலளிநீக்கு
  20. பு விட்டுப் போச்சு இதுக்கு முதல் கமெண்ட்ல.. ஸாரி!

    பதிலளிநீக்கு
  21. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  22. நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.

    பதிலளிநீக்கு
  23. நன்றி நண்பர் நெல்லைத்த தமிழன். நீங்கள் அனுப்பினாலும் போடுகிறோம். படங்களுடன் அனுப்புங்களேன். sri.esi89@gmail.com க்கு அனுப்புங்கள்!

    பதிலளிநீக்கு
  24. புளிச்சகீரை பொடி, தொக்கு எல்லாம் பாட்டிலில் அடைத்து விற்பதை வாங்கி பயன்படுத்தி இருக்கிறேன்.
    செய்கிறேன் கீரை கிடைத்தால்.
    படி படியாக படங்களுடன் பதிவு அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!