காலையில் பால் வாங்கிக் கொண்டு வரும் போது வீட்டுக்கு
சற்று தூரத்திலிருக்கும் கீரைக்காரப் பாட்டியிடம் மணத்தக்காளிக்கீரை
இருக்கிறதா என்று பார்க்கும் போதே எங்கள் வீட்டு வாசலில் ஏதோ கூட்டம்
இருப்பதைப் பார்த்து வியந்தேன்.
மார்கழி மாத பஜனைக்குக்கூப்பிட வந்தவர்கள் போல!
'அர்ஜுன்...ஆனந்த்...' என்று கூப்பிட்டவர்களும் அழைப்பு மணி விசையை அழுத்திப் பிடித்தவர்களாக ஒரு பத்துப் பேர்.
'அர்ஜுன்...ஆனந்த்...' என்று கூப்பிட்டவர்களும் அழைப்பு மணி விசையை அழுத்திப் பிடித்தவர்களாக ஒரு பத்துப் பேர்.
ஆணும்
பெண்ணுமாக விதவிதமான உடைகளைப் பார்த்ததும் 'வாலண்டின் டே' போல நம்
நாட்டுக்கு 'ஹாலோவீனு'ம் வந்து விட்டதோ என்றால் அதற்கும் நாட்கள் போக
வேண்டும்.
'அட, சனிக்கிழமை புரட்டாசி மாதத்துக்குக் கூட இன்னும் இரண்டு மாதம் போகணுமே'
என்றெல்லாம் எண்ணிக்கொண்டே வீடுவரை வந்து விட்ட பின்தான் கவனித்தேன்...
எல்லோர் கையிலும் ஒரு செல் ஃபோன்.
செல்ஃபோன் என்று சாதாரணமாகச் சொல்லக்கூடாது. எல்லாமே விதவிதமான ஸ்மார்ட்
ஃபோன். பல வண்ணஙகளில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. சில வண்ணமயமான சட்டைகளிலும்
ஒளிந்திருந்தன.
உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
போகிமான் வேட்டைக்குக் கிளம்பிய கும்பல் நம் வீட்டுப் பிள்ளைகளையும்
கோபிமார் தம் சிநேகிதிகளை அழைக்க வந்த மாதிரி வந்திருந்ததுடன் ஒவ்வொருவரும்
போகிமானின் பாரம்பரியம் பற்றி வேறு விவாதம் செய்யும் அளவிற்குத் தெரிந்து
வைத்திருந்தனர். சுமார் 700 பேர்களாம்.
பாண்டவர்கள் ஐந்து பெயர்கள், நவக்கிரகஙகளின் 9 பெயர் எல்லாம் தெரியாத எங்கள்
வீட்டுப் பசங்கள் சுமார் 500/600 பெயர்களைக் கவனம் சிதறாமல் சொல்லிய
அழகைப் பார்க்கும் போது குறள்மான், நாலடிமான் இப்படியெல்லாம் ஸ்மார்ட்
விளையாட்டுப் புரோக்ராம்கள் எழுதுவதை விட்டு நம் கல்வியாளர்கள் என்ன செய்து
கொண்டிருக்கிறார்கள் என்று ஜவடேகரை அடுத்த முறை பார்க்கும் போது கேட்க
வேண்டும்.
ஹிஹிஹி, மரமண்டைக்குப் புரியலை. இன்னும் கொஞ்சம் விம் போட்டு விளக்கம் ப்ளீஈஈஈஈஈஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
பதிலளிநீக்குpoke mon இந்தியாவில் வெளியாகி விட்டதா என்ன? நீங்கள் சொல்லும் நாலடியார் திருக்குறள் டிப்ஸ் ரசிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குமொபைல் கேம்ஸ் சம்பந்தமாக சொல்கிறீர்கள் என்பது மட்டுமே புரிந்தது.
பதிலளிநீக்குத ம 3
I thought this game was banned in India :-((
பதிலளிநீக்குPokemon. latest distraction.
பதிலளிநீக்குஇந்த சாக்கில் நடை பயிற்சி. ஊர்வலம் மாதிரி நிறைய பேர் இருக்காங்க.
பதிலளிநீக்குஇந்த சாக்கில் நடை பயிற்சி. ஊர்வலம் மாதிரி நிறைய பேர் இருக்காங்க.
பதிலளிநீக்குஇந்த சாக்கில் நடை பயிற்சி. ஊர்வலம் மாதிரி நிறைய பேர் இருக்காங்க.
பதிலளிநீக்குஇந்த சாக்கில் நடை பயிற்சி. ஊர்வலம் மாதிரி நிறைய பேர் இருக்காங்க.
பதிலளிநீக்குஇந்த விளையாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் சாலயில் நடக்கும்போது கவனச் சிதறல் அதிகம் அடுத்த போக்கிமானைத் தேடி இவர்கள் அலைவதை நினைத்தால் பயம் ஏற்படுகிறது
பதிலளிநீக்குஇந்த விர்சுவல் ரியாலிட்டி கேம் ,தற்போது தடை செய்யப் பட்டு விட்டதே :)
பதிலளிநீக்குஅடப்பாவமே போக்மேன் இங்கும் வந்துவிட்டதா....யாரப்பா அங்கே இந்தப் போக்மேனைத் தூக்கிச் சிறையில் அடையுங்கள்! ஓ வேண்டாம்...போக்மேன் இப்போது எல்லா யுவ யுவதிகள், குழந்தைகள் மனச் சிறையில் இருக்கிறார்களே...சரி தூக்குத் தண்டனை கொடுத்தாலோ!!?? சரி கொடுக்கலாம்...முதலில் மனச் சிறையிலிருந்து வெளியே எடுக்க வேண்டுமே...இங்கு தூக்குத் தண்டனை கொடுத்தாலும் எதிர்ப்புகள் வந்தாலும், சரிக்கட்டி விடலாம் ஆனால் உலகம் முழுவதும் இருக்கும் போது...உலகம் முழுவதுமே தூக்குதண்டனை கொடுக்கணுமோ....
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபோக்மான் விளையாட்டினால் ஆபத்துக்கள் ஏற்படுவதாக கட்டுரைகள் படித்தேனே! என்னவோ, இந்த காலத்து குழந்தைகன் டி.விக்கும், ஃபோனுக்கும், மொத்தத்தில் அடிமையாகி விட்டனர்.எங்கள் வீட்டு குழந்தைகளையும் சேர்த்துதான் சொல்கிறேன்.நல்லதா.கெட்டதா தெரியவில்லை!
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கம்ப்யூட்டர் கேமுக்கும் நமக்கும் காத தூரம். கம்ப்யூட்டர் Gameஐ நினைத்தாலே எரிச்சலாக இருக்கும். Smartphoneம் உறவுகளின் முக்கியத்துவத்தை மறக்கடிக்க ஒரு காரணம்.
பதிலளிநீக்குஇப்போதைய போகிமான் போல ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்பு ஜப்பானியர்களால் அறிமுகபடுத்தப்பட்ட டோமோகுச்சி என்னும் விளையாட்டு கருவி அப்போதைய குழந்தைகளை ஆட்டிப் படைத்தது.
பதிலளிநீக்குமடிக்கணினியின் மௌஸ் போல இன்னும் சிறியதாக கைக்கு அடக்கமாக இருக்கும். ஒற்றை குழந்தைகளுக்கு ஒரு கம்பானியென் ஆக இருக்கும் என்று உருவாக்கப் பட்டிருக்கலாம். ஏனென்றால் டொமோகுச்சி என்பது ஒரு குழந்தை போல. அவ்வப்பொழுது பாலுக்கு அழும். தண்ணீர் கேட்கும், சூ சூ டாய்லெட் எல்லாம் போகும், சுத்தம் செய்து விட வேண்டும்.சில சமயம் அதற்க்கு உடல் நலமில்லாமல் போகும். டாக்டரிடம் காண்பித்து மருந்து வாங்கித் தர வேண்டும். இவை எல்லாமே ஒலிக்குறிப்புகள்தான். ஒவ்வொரு தேவைக்கும் வெவ்வேறு ஒலி, அதை அட்டெண்ட் பண்ண பட்டன்கள் இருக்கும். இத்தனை ஷோடச உபசாரங்கள் செய்தும் சில சமயம் டோமோகுச்சி இறந்து போய் விடும். அந்த சோகத்தை தாங்க முடியாமல் ஒரு ஜப்பானிய குழந்தை தற்கொலை செய்து கொண்டது என்றால் அதன் பாதிப்பு எவ்வளவு தூரம் இருந்திருக்கும் என்று யோசியுங்கள். கொஞ்ச நாட்களில் தானாக அந்த மோகம் குறைந்து விட்டது. வளைகுடா நாடுகளில் பிரபலமாக இருந்த டோமோகுச்சி இந்தியாவில் அத்தனை பிரபலம் ஆகவில்லை
செல்போன் விளையாட்டா?
பதிலளிநீக்குநிறைய பேர் இதற்கு அடிமை... :(
பதிலளிநீக்குபோகிமான் ஜோக்குகள் விகடனில் வந்தபோதுதான் எனக்கு கொஞ்சம் தெரிந்தது இந்த விளையாட்டை பற்றி!
பதிலளிநீக்கு