சனி, 27 ஆகஸ்ட், 2016

இத்தனை வயதுக்கு மேல்...1)  "பெரியவர்கள் சொல்கிறார்கள் என்று நல்லது கெட்டது பார்க்காமல் தலை ஆட்டாத, அன்புள்ள முகேஷ்..  நீங்கள் செய்ததில் உங்கள் பயணியை இறக்கி விட்ட பிறகு ஒரு எச்சரிக்கக் குறிப்பும்,  உதவத் தயார் என்றும் சொன்னீர்களே..  ஆஹா.... நீங்கள் மனிதர்....."


2)  மகள் படிப்புக்குப் பணம் கட்ட வழியில்லை.  ஆனாலும் ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு உணவு.  முன்பு தினசரி 20 பேர்களுக்கு மட்டும் கொடுத்து வந்தவர் இப்போது 70 பேர்களுக்குத் தருகிறார்.  இவரது தன்னலமற்ற சேவையைக் கண்ட ராமகிருஷ்ண மடம் இவரது மகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்டுள்ளது.  முன்பே நம் பாஸிட்டிவ் பகுதியில் வந்துள்ள இவரது சேவை இன்னும் தொடர்வதோடு, எண்ணிக்கையையும் அதிகப் படுத்திக் கொண்டுள்ளார்.  ஈரோடு வி. வெங்கடராமன்.
3)  மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல இந்த பூமி....   சென்னையில், 'பெட்ஸ் ஆன் வீல்ஸ்' என்ற விலங்குகளுக்கான வாடகை வாகன சேவையை செய்து வரும் ஜெய்ஸ்ரீ ரமேஷ்.


4)  இத்தனை வயதுக்கு மேல்  விஜி அய்யரும் வெங்கட் அய்யரும்  மஸ்கட்டில் தங்களுடைய வசதியான வாழ்வைத் துறந்து, என்ன யோசித்து இந்தியா திரும்பினார்கள்?5)  வீடு தேடி வரும், விருதுநகர் மாவட்டம், மணவராயநேந்தல் கிராம நிர்வாக அலுவலர் பிரித்திவிராஜ்.  சக அலுவலர்களின் எதிர்ப்பைச் சமாளிப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை.  ஒன்றில்லை, ரெண்டில்லை...  பன்முகங்களில் பாஸிட்டிவ் மனிதராக இருக்கிறார்.6)  அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கு சில ஏழைகளுக்கு எழுத்தறிவித்தல்.. டாடா ஷெர்உட் அபார்ட்மென்ட்.


17 கருத்துகள்:

 1. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்
  தம +1

  பதிலளிநீக்கு
 2. போற்றுதலுக்கு உரியோரை தொடர்ந்து பகிரும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...
  அனைவரையும் வாழ்த்துவோம் அண்ணா...

  பதிலளிநீக்கு
 3. போற்றுதல்களுக்குரிய நல்ல உள்ள‌ங்களுக்கும் அவர்களின் தொண்டுகளை இங்கே வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் உங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 4. மனிதாபிமானம் மயங்கி விட்டதா என்று ஒரு தளத்தில் படித்தேன் இல்லை என்று கூறுகிறது இப்பதிவு

  பதிலளிநீக்கு
 5. அரிய மனிதர்கள். அருமையான சேவைகள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. நல்லவர் இருக்கத்தான் செய்கிறார்கள் .

  அது தான் மழை பெய்கிறது இந்த மாதமும்.

  நிற்க. வியாழன் அன்று பாபா கோவிலில் இருந்து
  திரும்பி வந்த பொது ஒரு ஆட்டோ என் முன்னாடி வந்து நின்றது.
  ஏறுங்க சார் என்று சத்தமாக குரல் கேட்டது.

  பெரியவரே ! ஏறுங்க...எங்க வேணுமானாலும் கொண்டு போய் விடுவேன்.
  காசு கிடையாது. இன்னிக்கு காப்டன் புறந்த நாள் என்று
  டிரைவர் சொன்னார்.

  நான் சொன்னேன். நன்று. ஆனால் பாரு, எனக்கு அதிருஷ்டம் இல்லை.

  இன்னிக்கு நான் இந்த நீலகிரி கடைக்கு போய் சுக்கு பவுடர் வாங்கணும்.
  அது வரைக்கும் உங்களை நிற்கச்சொல்வது சரியல்ல.

  போய் வாருங்கள். இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இருங்கள்
  என்று வாழ்த்திவிட்டு சென்றேன்.

  சென்ற இடத்தில் இன்னொரு அனுபவம்.

  அது என் தளத்தில். இங்கே இடம் இருக்காது.

  சுப்பு தாத்தா.
  www.subuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  இந்த வார செயதிகள் அனைத்தும் அருமை. அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. அன்னமிடும் நல்லவர்களையும் ,அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கு சில ஏழைகளுக்கு எழுத்தறிவிக்கும் நல்லவர்களைப் பற்றியும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளீர்கள் ,இதையெல்லாம் படிக்கும் போது இன்னும் அதிகமாக உதவ வேண்டுமென்ற எண்ணம் ஏற்படுகிறது !வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 9. சுப்பு தாத்தா

  லிங்க் வேலை செய்யவில்லையே...

  பதிலளிநீக்கு
 10. அனைத்தும் அருமையான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 11. முகேஷுக்கு சபாஷ்!!

  ஈரோடு வெங்கட்ராமனுக்கும், பெட்ஸ் ஆன் வீல்ஸ் ஜெயஸ்ரீ, விஜி ஐயர் வெங்கட் ஐயர் அவர்களுக்கும் பூங்க்கொத்து....

  அனைத்துச் செய்திகளும் அருமை..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!