திங்கள், 29 ஆகஸ்ட், 2016

"திங்க"க்கிழமை 160829 :: சேனைக்கிழங்கு கட்லெட் வடைலேஸான தூறலுடன் சூரியனில்லா ஒரு சென்னைப் பகல்.  
 


இதமான வானிலை.  5.1 ஸ்பீக்கரில் இனிமையான பாடல்கள் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தது. 
 இந்தச் சூழ்நிலையினால் நாலுமுழ நாக்கு அடுத்த கட்டத்துக்கு நகர ஆசைப் பட்டது!
 

என்ன இருக்கிறது என்று பார்த்தபோது கண்ணில் பட்ட உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கை ஒதுக்கி, கைகள் தெரிவு செய்தது சேனையை!
 

இப்போது தொடங்கினால் சாப்பிடும் நேரம் சூடானது தயார் செய்து விடலாம்.  ஸோ,
 சேனைக்கிழங்கை சுத்தம் செய்து துருவிக் கொண்டோம்.
 
 

 
தேவையான அளவு வெங்காயம் நறுக்கி வைத்துக் கொண்டோம்.
 
 

 
கறிவேப்பிலைக்கு கொத்துமல்லி, பச்சைமிளகாய் நறுக்கிச் சேர்த்துக் கொண்டோம்.
 
 
 
          Image result for கறிவேப்பிலைக்கு கொத்துமல்லி, பச்சைமிளகாய் images    Image result for கறிவேப்பிலைக்கு கொத்துமல்லி, பச்சைமிளகாய் images Image result for கறிவேப்பிலைக்கு கொத்துமல்லி, பச்சைமிளகாய் images
 
 
 
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைக்கு கொத்துமல்லியைப் போட்டு கொஞ்சம் வதக்கிக் கொண்டு, அதனுடன் துருவி வைத்திருக்கும் சேனையைப் போட்டுப் புரட்டினோம்.  தேவையான அளவு, உப்பு, காரப்பொடி, பெருங்காயம் சேர்த்தோம்.
 
  
இறக்கி சோளமாவில் புரட்டி உருண்டையாகவோ, தட்டையாகவோ வடிவங்கள் செய்தோம்.
 
 


 
எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்து விட்டோம்.
 
 

ஹிஹிஹி... உன்னைப்பிடி என்னைப்பிடி என்று போட்டி போட்டுச் சாப்பிட்டு விட்டோம்!  பார்ப்பதற்கு கொஞ்சம் கொஞ்சம் வாழைப்பூ வடை போலவும் இருக்கு இல்லை?  என்ன பெயர் வைப்பது என்று பார்த்து கட்லெட் போலச் செய்து மசால் வடை போல வருவதால் "கட்லெட் வடை"  என்று வைத்து விட்டேன்!

 
பி . கு   :  இதில் மூன்று படங்கள் மட்டுமே இணையத்திலிருந்து நன்றியுடன்..   அது எந்த மூன்று படங்கள் என்று உங்களுக்கே தெரியும்!

35 கருத்துகள்:

 1. மாறுபட்ட முறையில் சேனைக்கிழங்கு வடை செய்து பார்க்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 2. கடலை பருப்பை ஊறவைக்கவும் அதன் பிறகு சேனைக்கிழங்கை தோலி நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி அதை சிறிது அரைத்து அதுனுடன் ஊறவைத்த கடலை பருப்பையும் பச்சை மிளாகாய் அல்லது காய்ந்த மிளகாயை தேவையான அளவிற்கு போட்டு அரைத்து அதில் உப்பு சேர்த்து சோம்பையும் அதில் போட்டு கலந்து கொண்டு எண்ணெய் சட்டியில் வடை போல தட்டி போட்டு எடுத்து சாப்பிடுங்கள் அருமையாக இருக்கும் சிறிய சைஸில் வடை இருந்தால் நன்றாக இருக்கும்

  பதிலளிநீக்கு

 3. மேலே சொன்னது எங்க வீட்டில் நாங்கள் செய்யும் முறை

  பதிலளிநீக்கு
 4. நல்ல இருக்கும் போலத்தான் தோணுது . செய்து பார்க்கணும் போல உள்ளது அதை விட ஈஸி பேசாமல் உங்க இரண்டு பேர் வீட்டுக்கும் வந்து சாப்பிட்டு விடுவதுதான்

  பதிலளிநீக்கு
 5. அபயாஅருணா எங்க வீட்டிற்கு வந்தா; நல்ல சாப்பாட்டிற்கு கேரண்டி எங்காத்து மாமி வீட்டில் இருந்தால் வெஜிடேரியனும் அவங்க இல்லாத சமயத்தில் வந்தால் நான் வெஜூம் கிடைக்கும் எங்க வீட்டு சாப்பாட்டை சாப்பிட்ட பதிவர் ஒருத்தர்மட்டுமே உண்டு அவர் நம்ப ரமணி சார்தான் அவரிடம் கேட்டு கொள்ளுங்கள்

  பதிலளிநீக்கு
 6. சேனை வடை செய்முறை நல்லா இருக்கு. கொஞ்சம் crispyயாருங்க இருக்க பருப்பு சேர்க்கவேண்டாமா? சோளமாவே crispness கொடுத்துருமா? மழைக்காலத்தில் கூடக்கொஞ்சம் பச்சை மிளகாய் கட்பண்ணிச் சேர்த்தால் அருமையாக இருக்கும். இங்க மழையைப் பார்க்கவே முடியாது. வடை பண்ணுப்போட ஹஸ்பண்டும் இல்லை. எனக்கு வடைல பூண்டோ சோம்போ சேர்த்தால் பிடிக்காது.

  பதிலளிநீக்கு
 7. # நாலுமுழ நாக்கு#
  சாப்பிட ஆசை வந்தால், நாககு நாலு முழம் ஆகி விடுமா :)

  பதிலளிநீக்கு
 8. வித்தியாசமா இருக்கு..செய்து பார்க்கணும் ஒருநாள்...குறிப்புக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 9. வித்தியாசமா இருக்கு..செய்து பார்க்கணும் ஒருநாள்...குறிப்புக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 10. ஶ்ரீராம், அருமையான வழிமுறைகள். செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. சோளமாவு மொறுமொறுப்புக்கும் வடை தட்டும்படியாகச் சேர்ந்து வருவதற்கும் போதுமா? பொதுவா சேனைக்கிழங்கு அவ்வளவாப் பிடிக்காது என்பதால் எப்போவோ தான் வாங்குவோம். கருணைக்கிழங்கு வாங்கிட்டிருந்தோம். அதுவும் ஒரு முறை ரொம்பத் தொண்டை அரிப்பு ஏற்படவே நிறுத்தியாச்சு. கருணைக்கிழங்கில் என் மாமியார் வடை செய்வதாகக் கேள்விப் பட்டிருக்கேன். சாப்பிட்டதில்லை. இதெல்லாம் முயன்றாலும் நம்ம வீட்டில் போணியாகாது! :) அப்புறமா நான் தான் சாப்பிடணும்.

  பதிலளிநீக்கு
 12. இன்னிக்கு ராத்திரிக்கே கேழ்வரகு தோசை உளுந்து அரைச்சுப் போட்டு வார்க்கும் முறையில் செய்ய ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன். நம்ம ரங்க்ஸுக்குத் தெரியாது! என்ன சொல்லப் போறாரோ! :) திக் திக் திக்! :)

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  சேனையில் வடை! புது முயற்சியாகத்தான் தெரிகிறது. சேனைக்கிழங்கின் ருசியை நாவில் நிறுத்திப் பார்த்தேன். நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. சமயம் வரும் போது அவசியம் செய்து பார்க்கிறேன். பகிர்ந்தமைக்கும் குறிப்புகளுக்கும் நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. வித்தியாசமான ரெஸிபியைப்
  பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. நல்ல ரெசிப்பி நீங்கள் துருவி செய்தீர்கள் இல்லையா....நான் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி வதக்காமல் எல்லாம் மிக்ஸ் செய்து செய்ததுண்டு. இப்படியும் செய்து பார்த்துவிடுகிறேன்....

  கீதா

  பதிலளிநீக்கு
 16. மதுரைத் தமிழா அருணாவுடன் எங்களையும் சேர்த்துக் கொள்ளூங்கள்....நாங்கள் எல்லாம் எங்க வரப் போறோம் உங்க ஊருக்குனு நினைக்கறீங்கல்ல...ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 17. நன்றி மதுரைத் தமிழன். நீங்கள் சொல்லும் முறையும் கேள்விப் பட்டிருக்கிறேன். செய்ததில்லை. மனத்துக்குத் தோன்றியதை செய்து பார்ப்பதுதான் பொழுதுபோக்கு! ரசித்துச் சாப்பிட ஆள் வீட்டில் இருக்கே!!!

  பதிலளிநீக்கு
 18. ஹா... ஹா..... ஹா... வெல்கம் அபயா அருணா ஸிஸ்டர்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. மதுரைத் தமிழன்.. உங்க வீட்டுக்கு வர, பாஸ்போர்ட் விசா எல்லாம் தயார் பண்ண வேண்டுமே!

  பதிலளிநீக்கு
 20. வாங்க நெல்லைத்தமிழன்.. மொறுமொறுப்பாக இருக்கவேண்டும் என்று செய்ததில்லை இது. வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று நினைத்துச் செய்தது. பெரிய துண்டங்களாக வெட்டி, நீள் சதுரங்களில் வெட்டி, குழைய வைத்து எல்லாம் செய்து பார்த்தாகி விட்டது. அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபோது துருவி ஏதாவது முயற்சிக்கலாமே என்று செய்தது! எனவே, க.ப எல்லாம் சேர்க்கவில்லை.

  :))

  பதிலளிநீக்கு
 21. இல்லீங்க பகவான்ஜி... என் நாக்கு எப்பவுமே நாலு முழம்தான்!

  :))

  பதிலளிநீக்கு
 22. நன்றி திருமதி வெங்கட். இதையும் செய்து பார்த்து விட்டு ஃபேஸ்புக்கில் பதிவீர்கள் என்று நம்புகிறேன்!!

  பதிலளிநீக்கு
 23. வாங்க கீதாக்கா... நெல்லைத்தமிழனுக்குச் சொல்லியிருக்கும் பதில்தான்! அதையே படித்துக் கொள்ளவும்! சோளமாவு அது உதிராமல் வடிவமாக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மொறுமொறுப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கேழ்வரகு தோசைக்கு மாமா என்ன சொன்னார் என்று பகிரவும்!

  பதிலளிநீக்கு
 24. நன்றி சகோதரி கமலா ஹரிஹரன். அவசியம் செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள். அவரவர்கள் செய்யும்போது புதிய புதிய ஐடியாக்கள் தோன்றும். இன்னும் மேம்பட்ட முறையில் செய்யலாம்!

  பதிலளிநீக்கு
 25. நன்றி சகோதரி கமலா ஹரிஹரன். அவசியம் செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள். அவரவர்கள் செய்யும்போது புதிய புதிய ஐடியாக்கள் தோன்றும். இன்னும் மேம்பட்ட முறையில் செய்யலாம்!

  பதிலளிநீக்கு
 26. நன்றி கீதா ரெங்கன். நீங்கள் முயற்சிக்காத புதுமையா? மதுரைத் தமிழன் மதுரை வரும்போது அவர் வீட்டுக்குப் போய்விட வேண்டியதுதான். என்ன சொல்கிறீர்கள்? ஹா... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 27. ​படத்தைப் பார்த்தால் ​சிக்கன் nuggets மாதிரி இருக்கிறது.
  ​ஜெயக்குமார் ​


  பதிலளிநீக்கு
 28. நல்லா வயித்தெரிச்சலை வாங்கிக் கட்டிக்கிறீங்க சார்

  பதிலளிநீக்கு
 29. அருமையான சேனைகிழங்கு வடை.
  நன்றாக இருக்கிறது.
  சேனை கிழங்கை சின்ன துண்டங்களாய் வெட்டி மிக்ஸியில் திருகலாம். வெங்காயத்தை வதக்காமலும் செய்யலாம்.
  இன்னொரு முறை இப்படி செய்து பாருங்கள். சோளமாவு, அரிசு மாவு கலந்து செய்யலாம்.

  பதிலளிநீக்கு
 30. பார்க்க நல்லா இருக்கு ஸ்ரீராம். செய்து பார்க்கணும்!

  பதிலளிநீக்கு
 31. மனைவியிடம் சொல்லிட்டேன்...
  ஊருக்குப் போகும்போது செய்து பார்க்கலாம்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!