திங்கள், 11 ஜூன், 2018

"திங்க"க்கிழமை : இரட்டையர் – தாளகம் vs வறுத்து அரைத்த குழம்பு (வறுத்தரைச்ச குழம்பு) - கீதா ரெங்கன் ரெஸிப்பி.

இரட்டையர் – தாளகம் vs வறுத்து அரைத்த குழம்பு (வறுத்தரைச்ச குழம்பு) 
Image result for உணவ௠பற௠றி பழமொழிகளà¯
ஹாய்! ஹாய்! ஹாய்! மக்களே கொஞ்சம் நாளாச்சு எபி கிச்சன் ஷோவுல பார்த்து! எல்லாரையும் தினமும் தானே பார்த்துட்டுருக்க அப்புறம் என்ன பில்டப்பு! னு எல்லாரும் என்னை கேள்வி கேட்க வரதுக்குள்ள மீ எஸ்கேப் ஷோவுக்கு ஓடிடறேன்….

ரைட்டோ! இன்னிக்கு எல்லாரும் வந்துட்டீங்களா. பூஸார் அண்ட் ஏஞ்சல் அப்படியே உங்க அண்ணன் நெல்லை வந்துருக்காரானு பாருங்க. 

"நெல்லை அண்ணன் வந்துருக்காரு கீதா". ஏஞ்சல் பூஸார் எதுக்கோ ரொம்ப உங்களைப் பார்த்து சிரிக்கிறார் பாருங்க. நெல்லை உங்களுக்கு அண்ணனோ? அவர் உங்களை வேற என்னவோ சொன்னாரேனு. அப்புறம் பூஸார் இடம் இல்லைனு டேபிளுக்கு அடில போய் வம்பு பண்ணுவார். ஏஞ்சல் நீங்க பூஸாரை ப்ரோக்ராம் முடிஞ்சதும் நல்ல்ல்ல்ல்லாஆஆஆ கவனிச்சுக்குங்க. 

"ஸ்ரீராம் கேமரா எல்லாம் ரெடியா. போலாமா “எபி”சோடுக்கு!"

"என்னது கேமரா ரெடியானா? எப்பவோருந்து ரோலிங்க். இப்ப நீங்க பேசினது எல்லாம் வந்தாச்சு...ம்ம் சீக்கிரம் குக்கரி ஆரம்பிங்க" 

ஓகே டைரக்டர் ஸ்ரீராம் குரல் கொடுத்தாச்சு. ஸோ நாம ஷோவுக்குப் போவோம். "நம்ம கீதாக்கா தாளகம் செய்முறை எழுதியிருந்தப்ப உங்க செய்முறையும் போடுங்கனு சொன்னதால நாம இன்னைக்கு “தாளகம்” செய்முறை பார்க்கப் போறோம். அதோடு அதன் இரட்டையான “வறுத்து அரைத்த குழம்பு” ஒன்றையும் பார்க்கப் போறோம். இது என் பாட்டி செய்யும் குழம்பு. ரெண்டுக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம். முதலில் தாளகம் அப்படியே கூடவே வ அ கு வையும் பார்த்துடலாம். படங்களோடு.

தாளகத்திற்குத் தேவையான பொருட்கள்.
                      
              வாழைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், சேனைக்கிழங்கு, மஞ்சள் பூஷணிக்காய், சேப்பங்கிழங்கு (சேம்பு மட்டும் வேக வைத்து எடுத்துக் கொள்ளணும்)

காய்கள் – எல்லாமே நாட்டுக் காய்கள் தான். வ அ கு வுக்கும் இதே காய்கள் தான். இதோ இந்த அளவு எடுத்துக்கோங்க. முருங்கையும் போடலாம். நான் போடலை.
தாளகத்திற்கு                                               வறுத்து அரைத்த குழம்பிற்கு
துவரம் பருப்பு – 2 ஸ்பூன்                               கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
(படத்துல உள்ள ஸ்பூன் அளவு.)                        உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்                            வெந்தயம் - 1 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்                                   எள்ளு - 3 ஸ்பூன்
பச்சரிசி – 1 ஸ்பூன்                                      பச்சரிசி - 1 ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு - இரண்டு குழம்பிற்குமே இதே அளவு புளி

தேங்காய் – 1 கப். கப்பில் நன்றாக அளக்கணும். (200 கிராம் கப்) இரு குழம்பிற்கும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு இதே அளவு தேங்காய்

வறுப்பதற்கு, தாளிக்க – தேங்காய் எண்ணை கொஞ்சம்.

முதலில் புளியைக் கரைத்து அதில் காய்களைப் போட்டு வேக வைக்க வெண்டும். கொஞ்சம் தேங்காய் எண்ணை விட்டு கறிவேப்பிலையும் அந்த எண்ணையில் நனைத்துப் போட வேண்டும். தேவையான உப்பையும் போட்டு காய் வெந்ததும் வெந்து வைத்திருக்கும் சேம்பையும் போட்டுக் கொதிக்க விடவும் சிம்மில் வைத்து.

பச்சரிசி எண்ணை இல்லாமல்                                        எள்ளு எண்ணை இல்லாமல் வறுப்பது வஅகு விற்கு


தாளகத்திற்கு பச்சரிசியை எண்ணை இல்லாமல் வறுத்துக் கொண்டு, வெந்தயத்தைக் கொஞ்சம் எண்ணை விட்டு கருகாமல் வறுத்துக் கொள்ளவும். (வறுத்து அரைத்த குழம்பிற்கு பச்சரிசியை வறுத்ததும், எண்ணை இல்லாமல் எள்ளையும் வறுத்து எடுத்துக் கொண்டு விடவும். அப்புறம் வெந்தயம் எண்ணை விட்டு தாளகத்திற்குச் சொன்னது போல்)  பருப்புகளையும் கொஞ்சம் எண்ணையில் வறுக்கவும் 


பிறகு, தேங்காயை நல்ல கோல்டன் ப்ரௌன் நிறத்தில் வறுக்க வேண்டும்.


வறுத்தவை எல்லாம்


மிக்சியில் ரொம்பவும் நைஸாக இல்லாமல், ரொம்பவும் கரகர என்று இல்லாமல் அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து

பின்னர் எல்லாவற்றையும் மிக்சியில் ரொம்பவும் நைஸாக இல்லாமல், ரொம்பவும் கரகர என்று இல்லாமல் அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வெந்த காய்களுடன் சேர்த்து ரொம்பவும் கெட்டியாக இருந்தால் மிக்ஸி கழுவிய நீரையும் சேர்த்து சிம்மில் கொதிக்க வைத்துவிட்டு வாசனை வந்ததும் அணைத்துவிடவும்.

தேங்காய் எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்

வ அ கு விற்கு எண்ணை இல்லாமல் அரிசி, எள்ளு இவற்றைத் தனி தனியே வறுக்கவும். எள்ளு ஓவராக வறுபடக் கூடாது. ஜஸ்ட் வெடிக்கத் தொடங்கியதும் எடுத்துவிட வேண்டும். பின்னர் பருப்புகள், வெந்தயம் எல்லாம் கொஞ்சம் எண்ணையில் வறுத்து, தேங்காயும் கோல்டன் ப்ரௌன் நிறத்தில் வறுத்து அரைப்பது எல்லாம் அப்படியே தாளகம் போலவே தான். என் பாட்டி செய்வது வஅகு. 

எங்கள் ஊரில் ஆடிச் செவ்வாய், வெள்ளியில், தை வெள்ளியில் மஞ்சப் பொங்கல் (பச்சரிசி, கொஞ்சம் துவரம் பருப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பொல பொலவென வேக வைத்து – குக்கரிலும் வேக வைத்து எடுக்கலாம் – அதில் உப்பு சேர்த்து, நெய்யில் ஜீரகம், கொஞ்சம் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தேங்காய் துருவலையும் சேர்த்து செய்வதுண்டு. இதற்குத் தொட்டுக் கொள்ள ஊரில் தாளகம் செய்வார்கள். 

என் பாட்டி எங்கள் வீட்டில் இதைச் சாதாரண நாட்களில் செய்தாலும், மங்கிலிப் பெண்டுகள் என்று என் பிறந்த வீட்டில் செய்யப்படும் நிகழ்விற்கு இப்பொங்கல் + வஅகு இதைத்தான் செய்வார்கள்.

இங்கு கொடுக்கப்பட்ட அளவு 6 - 8 பேர் சாப்பிடும் அளவு. உங்கள் வீட்டிற்குத் தகுந்தாற் போல் செய்து கொள்ளலாம்.  

எபிகிச்சன் ஷோ டைரக்டர் ஸ்ரீராமுக்கு மிக்க நன்றி. ஓகே கைஸ். மீண்டும் அடுத்த எபிசோடில் சந்திக்கும் வரை டாடா பை பை சொல்கிறோம் எபி கிச்சன் க்ரூ.


Image result for tom and jerry funny gif
Image result for tom laughing at jerry gifஏஞ்சல் பூஸார் எதுக்கோ உங்களைப்
 பார்த்து சிரிக்கிறார் பாருங்க.


இதெல்லாம் சும்மா...பூஸாருக்கு வலிக்காது. விளையாட்டுதான்...
கார்ட்டூன் படங்கள் : நன்றி இணையம்

84 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம் ,கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 2. சதி சதி என்று சொல்லியே முதலில் வந்துள்ள கீதா .அக்கா.... காலை வணக்கம்!

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 4. இரண்டுமே செய்திருக்கேன். செய்யறேன். செய்வேன். எல்லாக் காலங்கள் வந்திருக்கா? தி/கீதா எட்டிப் பார்ப்பார்னு நம்பறேன்.

  பதிலளிநீக்கு
 5. எல்லாருக்கும் வணக்கம்...ஓ ஸ்ரீராம் நம்ம எபி கிச்சன் ரெசிப்பி! வரேன் அப்பால்.... கொஞ்சம் வெளியில் போக வேண்டிய. வேலை...

  மகன் நலமுடன் வந்து சேர்ந்தான்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // மகன் நலமுடன் வந்து சேர்ந்தான்... கீதா.. //

   ஆகா.. அதுதானே வேண்டும்...

   வாழ்க நலம்....

   நீக்கு
 6. சதினு எங்கே ஜொன்னேன்? அது ஜதியாக்கும்!

  பதிலளிநீக்கு
 7. ஆகா... அருமை..

  கிளிப்பிள்ளைக்கு சொல்லித் தர்ற மாதிரி அழகான போட்டோ எல்லாம் போட்டு சொல்லிக் கொடுத்தாச்சு...

  இனிமே நல்லபடியா கொழம்பு வெச்சிக்கிறது அவங்க அவங்க பொறுப்பு..

  பதிலளிநீக்கு
 8. ஆ.... கீதா ரெங்கன்..... மகன் தூங்கறாரா? நைஸா வந்துட்டீங்க....!!! காலை வணக்கம்!

  பதிலளிநீக்கு
 9. // சதினு எங்கே ஜொன்னேன்? அது ஜதியாக்கும்! //

  அது சதி... ச்சே.... அது சரி!!

  பதிலளிநீக்கு
 10. ஓ கீதாக்காவ்...ஜதியா... நீங்கதான் பார்ஸ்டஊஊஊஊஊ .ஓகே பை இப்ப....அப்புறம்...

  துரை அண்ணா. நன்றி. நேற்றைய கமெண்ட்....மயில்...மனது....

  கீதா

  பதிலளிநீக்கு
 11. இல்ல. அவன் எழுந்தாச்சு. இப்ப விசாக்கு போனும்னு...7 மணிக்கு...கிளம்பனும்....நானும்...அப்படியே..சில வேலைகள்....

  கீதா

  பதிலளிநீக்கு
 12. நல்லா ஜாலியான பதிவு படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 13. ஆஹா அருமை. இதே போலத்தான் பாட்டி செய்வார்.
  இதே மஞ்சப் பொங்கலுக்குத் தொட்டுக் கொள்ள
  இதே குழம்பு எள்ளு வாசனையோடு பிரமாதமா இருக்கும்.
  மிக நன்றி கீதா.
  அனைவருக்கும் காலை வணக்கம்.

  குழந்தை வந்தது முதல் வேலை இருக்கும்.

  அவனுடனே இருக்கவும். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 14. மகனுடன் ஆன பொழுதுகள் இனிமையாக ஆகட்டும் தி/கீதா. நிதானமா இருந்து பொழுதைக் கழிச்சுட்டு சந்தோஷமா வாங்க!

  பதிலளிநீக்கு
 15. காலை வணக்கம்.

  வறுத்த அரைத்த குழம்பு - எள் சேர்த்து செய்ததில்லை.

  சுவையான தாளகம் மற்றும் வறுத்து அரைத்த குழம்பு.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 16. ஆ.... கீதா ரெங்கன்..... மகன் தூங்கறாரா? நைஸா வந்துட்டீங்க....!!! காலை வணக்கம்!//

  ஹாஹாஹாஹா.. எழுந்து...அப்பாள போயிருந்தப்ப...நைசா வந்தேன்..ஹிஹிஹி...

  கீதா

  பதிலளிநீக்கு
 17. அட அடா...இரண்டு குழப்பு வகைகளா... ஒரே குழப்பமா இருக்கே... குழப்பத்தில் தாளகவறுத்தரைத்த குழம்பு செய்துவிடப் போகிறேன்.

  எங்க அம்மா வறுத்தரைத்த குழம்புக்கு கொட்டைத் தேங்காய்தான் உபயோகப்படுத்துவார்கள்.

  நல்லா எழுதியிருக்கீங்க.... செய்துபார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. டைரக்டர் ஸ்ரீராம் அவர்களுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோதரி

  மகனின் நல்வரவில் மனம் மகிழ்ந்திருக்கும் தங்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். அவரையும் நான் நலம் விசாரித்தாகச் சொல்லவும்.

  வறுத்தரைச்ச தாளகம் படங்களுடன் செய்முறை விளக்கங்களுடன் மிகவும் அருமையாக உள்ளது.கண்ணையும் மனதையும் வெகுவாக கவர்கிறது.சூப்பர்.

  நானும் இதை செய்துள்ளேன் தாளதம் எனற பெயரில். திருவாதிரை களி செய்யும் போது இதையும் செய்து இறைவனுக்கு நேவேத்தியமாக வைப்போம். வெறும் நாட்களிலும் செய்து சாதத்திற்கு தொட்டு சாப்பிடலாம்.

  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 20. எடுத்தவுடனே சீனா முன் நிற்பதால், அதற்கு ஒரு பதிலைச் சொல்லிவிடுகிறேன் :

  In this big, bad world, only very few get nice food or drink.

  பதிலளிநீக்கு
 21. ரொம்ப வேலை கொடுக்கும் போல!

  பதிலளிநீக்கு
 22. தாளகம் ஸூப்பர். சிலபேர்கள் செய்வதில் பருப்புகள் சற்று வித்தியாஸம். உங்கள் பிள்ளை வந்திருக்கிறார் எனத் தெரிய மிக்க ஸந்தோஷம். வாழ்த்துகளும் ஆசிகளும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 23. ஆஆஆஆஆஆஆவ்வ் இண்டைக்குக் கீதா ரெசிப்பியோ.. கீதா பிசி என்பதால மாத்தியிருக்கலாமோ? சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)

  //பூஸார் அண்ட் ஏஞ்சல் அப்படியே உங்க அண்ணன் நெல்லை வந்துருக்காரானு பாருங்க.
  /// நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ இது அநியாயம் கீதாவுக்கு மறதி அதிகம்... அவர் எனக்கு மட்டும்தேன் அண்ணாஆஆஆஆஆஅ.. அஞ்சு அவருக்கு அன்ரி ஆக்கும்.. அப்போ அவர் அஞ்சுவுக்கு என்ன முறை?:) ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
 24. ஹா ஹா ஹா மீயும் மீயும் வாழ்த்துச் சொல்லிடுறேன்ன்ன்ன்ன்:))..

  //டைரக்டர் ஸ்ரீராம் அவர்களுக்கு வாழ்த்துகள்...

  ///ஸ்ரீராம். said...
  // சதினு எங்கே ஜொன்னேன்? அது ஜதியாக்கும்! //

  அது சதி... ச்சே.... அது சரி!!///

  ஹா ஹா ஹா ஸ்ரீராமுக்கும் டங்கு ச்லிப்பாகுதூஊஊஊஊஊஊ:))

  பதிலளிநீக்கு
 25. அதிரா - //அவர் எனக்கு மட்டும்தேன் அண்ணாஆஆஆஆஆஅ.. // - தமிழ்நாட்டுல வயசு குறைஞ்சவங்களை 'தம்பி' என்றுதான் சொல்லுவினம். நீங்கள் வயது குறைந்தவரை 'அண்ணன்' என்று சொல்லுகிறீர்களே. பிரபாகரனை எல்லோரும் 'தம்பி' என்றுதானே அழைப்பினம். ஒருவேளை நீங்கள் இலங்கைப்பகுதியைச் சேர்ந்தவர் இல்லையோ. ஒரேயடியாக ஸ்காட்டிஷ் (இது அந்த டிஷ் இல்லை) ஆகிவிட்டீர்களோ?

  பதிலளிநீக்கு
 26. ஆஆ மகன் வந்துவிட்ட புழுகத்தில கீதாவுக்கு லெக் எங்க வைக்கிறது காண்ட் எங்க வைக்கிறதெண்டே புரியல்ல.. மகனை மீயும் நலம் கேட்டதாக மறக்காமல் சொல்லிடுங்கோ கீதா...
  [இப்பூடிப் புத்தியா:).. சுகம் விசாரிச்சால்தான் அம்பேரிக்கா சொக்கலேட்.. பேர்ஃபியூம் ஏதும் கிடைக்கும்:)) ஹா ஹா ஹா]

  ஆஆஆஆஆஆஆஆஆ ஜொள்ள மறந்திட்டேன்ன்ன்ன் கீதா அந்த அதிராவின் குழைஜாதம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. ஹையோ இந்த தாளகத்தின் நினைப்பில் என் ஜாதம் செய்ய மறந்திடாதீங்கோ:))

  பதிலளிநீக்கு
 27. ///நெ.த. said...
  அதிரா - //அவர் எனக்கு மட்டும்தேன் அண்ணாஆஆஆஆஆஅ.. // - தமிழ்நாட்டுல வயசு குறைஞ்சவங்களை 'தம்பி' என்றுதான் சொல்லுவினம்.//

  ஹா ஹா ஹா கொஞ்ச நாளாகவே ரொம்ப அமைதியாவே இருக்கிறாரே:).. வம்புக்கு இழுத்தாலும் காக்கா போயிடுறாரே:).. ஏதும் மெடிரேஷன் கிளாஸ் போகிறாரோ என நினைச்சேன்ன்ன்ன்.. ஹா ஹா ஹா கிட்னியைக் கசக்கிப் பிழிஞ்சு ஒரு ஐடியா எடுத்து வந்திருக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 28. ///ஏஞ்சல் பூஸார் எதுக்கோ உங்களைப்
  பார்த்து சிரிக்கிறார் பாருங்க//

  ஹா ஹா ஹா ஜெரிப்பிள்ளை .. தலை தப்பினதே தம்பிரான் புண்ணியம் என ரன்னிங்ங்ங் அவ்வ்வ்வ்வ்.. சரி மெயின் மட்டருக்கு லேட்டாத்தான் வருவேன் கீதா....

  பதிலளிநீக்கு
 29. புதுமையான ரெசிப்பி. சுவையான சமையல்.

  பதிலளிநீக்கு
 30. ஏஞ்சலை எங்கே ரெண்டு நாளாக காணோம்?

  பதிலளிநீக்கு
 31. //ஏகாந்தன் Aekaanthan ! said...
  எடுத்தவுடனே சீனா முன் நிற்பதால், அதற்கு ஒரு பதிலைச் சொல்லிவிடுகிறேன் :

  In this big, bad world, only very few get nice food or drink.//

  மீயும் மீயும் ரோட்டலி ஃபுரூட்டலி அக்றீ வித் ஊஊஊஊ:)).

  வெரி வெரி பாட் வேல்ட் ஏகாந்தன் அண்ணன்.. அதனாலதான் நாங்க ரியுஸ்டேக் கிரகத்தில ஒண்ணே அரைக்கால் ஏக்கர் காணி வாங்கிட்டோம்ம்.. வருகிற விசாளக்கிழமை வீட்டுக்கு அடிக்கல் நாட்டப் போகிறோம்ம்.. நீங்களும் வாங்கோ.. மறக்காமல் வெத்திலைக்குள் ஒரு பத்துப்பவுண் கொயின்ஸ் உடன் ஒரு பத்து இருபது வைரக்கல்லும் வச்சுத்தாங்கோ:))

  பதிலளிநீக்கு
 32. //ஸ்ரீராம். said...
  ஏஞ்சலை எங்கே ரெண்டு நாளாக காணோம்?//

  சனி ஞாயிறு கொஞ்சம் பிஸியாகிட்டா.. இன்று வந்திடுவா என வானிலை அறிக்கை ஜொள்ளுது:))

  பதிலளிநீக்கு
 33. @ athira: வெத்திலைக்குள் ஒரு பத்துப்பவுண் கொயின்ஸ் உடன் ஒரு பத்து இருபது வைரக்கல்லும் வச்சுத்தாங்கோ:))//

  ரியுஸ்டேக் கிரகத்து சட்ட திட்டப்படி யாரும் யாருக்கும் கிஃப்ட்டு கொடுத்திட, வாங்கிடக்கூடாதெல்லோ? மறந்து போயிட்டீங்களோ ! அடிக்கல் நாட்டப்போற சமயம்பாத்து புடிச்சு உள்ள தள்ளிறப்போறாங்கோ..பாத்து..பாத்து..

  பதிலளிநீக்கு
 34. ஹாவ் !!இன்னிக்கு கீதா ரெங்கன் ரெசிப்பியா !!..
  இருங்க முதலில் சீன பழமொழிக்கு :)
  குழம்பு தாளகபடம் செம அப்டியே ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஸ்பூனால் சாப்பிடணும் பக்கத்தில் பீன்ஸ் கேரட் பொரியல் வச்சு :)

  பதிலளிநீக்கு
 35. கீதா :) உங்களை பென்ச் மேலேத்த பார்த்தேன் :) ஆனா // பூஸார் அண்ட் ஏஞ்சல் அப்படியே உங்க அண்ணன் நெல்லை வந்துருக்காரானு பாருங்க. //

  ஹாஹாஆ :) இதை பார்த்து மைண்ட் சேன்ஜ்ட் :) சரி மகனுக்கு ஒரு ஹாய் சொன்னதா சொல்லிடுங்க :)


  பதிலளிநீக்கு
 36. @ஸ்ரீராம் சனி ஞாயிறு வெளில போயிட்டு வந்தோம் .நேற்று என் லேப்டாப்பை பொண்ணு எடுத்துக்கிட்டா படிக்க அவளோடத்தில் அப்டேட்ஸ் முழு நாளும் போனது .

  பதிலளிநீக்கு
 37. ஹலோ மியாவ் :) நான் ஆன்டின்னா என்னைவிட 6 மாசம் பெரிய ஆண்ட்டி நீங்கதான் :) இதை நெல்லை தமிழன்தான் கை ஜோஸ்யம்ல சொன்னார்

  பதிலளிநீக்கு
 38. ///ரியுஸ்டேக் கிரகத்து சட்ட திட்டப்படி யாரும் யாருக்கும் கிஃப்ட்டு கொடுத்திட, வாங்கிடக்கூடாதெல்லோ? மறந்து போயிட்டீங்களோ ! அடிக்கல் நாட்டப்போற சமயம்பாத்து புடிச்சு உள்ள தள்ளிறப்போறாங்கோ..பாத்து..பாத்து..//

  ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணன்... பப்புளிக்கில தராட்டிலும் மேசைக்குக் கீழால தரலாமெல்லோ இல்லை எனில் என் வீட்டில ஒரு மாஆஆஆஆஆஆஆஆஅறி என்னைப் பார்ப்பினம்:)) இப்பவே ஒரு மாஆஆஆஆஆஆறித்தான் என்னை லுக்கு விடுகினம்:)).. இப்பூடி ஏதும் நீங்க தந்தால்தான் என் இமேஜ் உசருமாக்கும்:))..

  ஹையோ சமையல் பகுதியில் அரட்டை என ஆராவது மாறி நினைச்சிடப் போகினம்.. அப்பூடியில்லை.. இதுவும் பார்ட் ஒஃப் த சமையல்தான் பிக்கோஸ் கீதா போட்ட ஆரம்ப ஊசிக்குறிப்பை கொஞ்சம் கிளாறிஃபிக்கேஷன் பண்றோம்ம் அவ்ளோதேன்ன்:))..ஸ்ஸ்ஸ் எப்பூடி எல்லாம் இங்கிலீசில பேசிச் சமாளிக்க வேண்டிக் கிடக்கூஊஊஊஊஊஊஊ:))

  பதிலளிநீக்கு
 39. //Angel said...
  கீதா :) உங்களை பென்ச் மேலேத்த பார்த்தேன் :) ஆனா // பூஸார் அண்ட் ஏஞ்சல் அப்படியே உங்க அண்ணன் நெல்லை வந்துருக்காரானு பாருங்க. //

  ஹாஹாஆ :) இதை பார்த்து மைண்ட் சேன்ஜ்ட் :) சரி மகனுக்கு ஒரு ஹாய் சொன்னதா சொல்லிடுங்க :)//

  ஆவ்வ்வ்வ்வ் செக்கும் லாண்டட்டாஆஆஆஅ? அப்போ வானிலை அறிக்கை கரீட்டுத்தேன்ன்:))..

  ம்ஹூம்ம் நோ கீதா நோஓஓஓஓ மீதான் முதல்ல நலம் விசாரிச்சேன்ன் பேர்ஃபியூம் எனக்குத்தான்ன்ன்ன்ன்:))

  பதிலளிநீக்கு
 40. ///Angel said...
  ஹலோ மியாவ் :) நான் ஆன்டின்னா என்னைவிட 6 மாசம் பெரிய ஆண்ட்டி நீங்கதான் :) இதை நெல்லை தமிழன்தான் கை ஜோஸ்யம்ல சொன்னார்///

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நெல்லைத்தமிழன் மின்னாமல் முழங்காமல் அப்பப்ப ஏதாவது ஜொள்ளி விட்டிடுறார்ர்:)) அதால அஞ்சு பப்பா மர உச்சியில ஏறி நிண்டு துள்ளுறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ஹலோ மிஸ்டர் உங்கட கையை முழுச எடுத்துப் போடுங்கோ அப்போ என்ன ஜொள்றார் எனப் பார்த்திடலாம் ஒரு கை:)) மீக்கு சுவீட் 16 தானே நடக்குது ... :))

  பதிலளிநீக்கு
 41. ஆஆஆஆஆஆவ்வ் இரண்டுமே சூப்பர் கீதா.. தாளகம் இப்படி ஒரு குறிப்பு வீடியோ பார்த்தேன் அது பாசை வேறு தெலுங்கென நினைக்கிறேன்ன்.. தாளகம் வித்தியாசமான பெயர்..

  பார்க்கவும் அழகா இருக்கு.. ஆனா கொஞ்சம் வேலை அதிகம் போல டக்கு டிக்கெனச் செய்திட முடியாது... ஆனா சுவை நிட்சயம் இருக்குமென்பது தெரியுது.

  பதிலளிநீக்கு
 42. //மீக்கு சுவீட் 16 தானே நடக்குது ... :))//

  ஹலோ :) வேணாம் சும்மா சும்மா ஸ்வீட் சொல்லிட்டு 16 லேயே என் கண்ணிலும் பட்ருச்சு ஸ்விட் :) ஹையோ ஹையோ
  இந்த பூனை மட்டும் தானாவே வந்து வண்டியில் ஏறுறாங்க :)

  பதிலளிநீக்கு
 43. இரண்டுமே செய்திருக்கேன். செய்யறேன். செய்வேன். எல்லாக் காலங்கள் வந்திருக்கா? தி/கீதா எட்டிப் பார்ப்பார்னு நம்பறேன்.//

  ஆமாம் கீதாக்கா நீங்க ரெண்டுமே செஞ்சுருப்பீங்க....பார்த்துட்டேன் உங்க கமென்டையும்...
  நேரில் இப்போது என்பதால் இருவரும் நிறைய பேசுறோம்...நிறைய ஜோக் அடிப்பான்..பேச்சுவாக்கிலேயே...ஸோ எஞ்சாயிங்க்...நெட் வேறு கட் ஆகி கட் ஆகிப் போகுது. இந்த கமெட்ன் அடித்தே ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகுது....மகன் உறவினர்களின் ஃபோன்காலில் இருப்பதால் இந்தப் பக்கம்....ஹா ஹா ஹா ...இடையில் இடையில் வந்து கொடுக்கிறேன் கமென்ட்ஸ்

  கீதா

  பதிலளிநீக்கு
 44. சதினு எங்கே ஜொன்னேன்? அது ஜதியாக்கும்!//

  ஸ்ரீராம் கீதாக்கா ஜதி சொல்லி ஆடி ஆடி வந்தாங்க பார்க்கலையா நீங்க…ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 45. கிளிப்பிள்ளைக்கு சொல்லித் தர்ற மாதிரி அழகான போட்டோ எல்லாம் போட்டு சொல்லிக் கொடுத்தாச்சு...

  இனிமே நல்லபடியா கொழம்பு வெச்சிக்கிறது அவங்க அவங்க பொறுப்பு..//

  ஹா ஹா ஹா ஹா ஆதானே துரை அண்ணா, முதல்ல இதை அதிரடிக்குச் சொல்லணும்…….

  கீதா

  பதிலளிநீக்கு
 46. மிக்க நன்றி கில்லர்ஜி பதிவை எஞ்சாய் செய்ததற்கு…

  கீதா

  பதிலளிநீக்கு
 47. ஆகா.. அதுதானே வேண்டும்...

  வாழ்க நலம்....//

  மிக்க நன்றி துரை அண்ணா.

  கீதா

  பதிலளிநீக்கு
 48. இதே மஞ்சப் பொங்கலுக்குத் தொட்டுக் கொள்ள
  இதே குழம்பு எள்ளு வாசனையோடு பிரமாதமா இருக்கும்.//

  ஆமாம் வல்லிம்மா இதுதான் திருநெல்வேலிப் பக்கத்து பொங்கல் அண்ட் குழம்பு…மிக்க நன்றி வல்லிம்மா…
  குழந்தை வந்தது முதல் வேலை இருக்கும்.

  அவனுடனே இருக்கவும். வாழ்க வளமுடன்.//

  ஹா ஹா ஹா ஆமாம் அம்மா. பேச்சு பேச்சுதான் சிரிப்பும்……மிக்க நன்றி அம்மா அவனுடனேயே தான் இருக்கிறேன். இப்ப அவனுக்கு உறவினர்களிடமிருந்து ஃபோன் அதான் இந்தப் பக்கம்……ஹா ஹா ஹா
  கீதா

  பதிலளிநீக்கு
 49. Siamese twin kuzhambus? Will try....

  ஹா ஹா ஹா அட இந்தத் தலைப்பு கூட வைச்சிருக்கலாமோ!!! சூப்பர் மிகிமா! மிக்க நன்றி கருத்திற்கு. செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க…

  கீதா

  பதிலளிநீக்கு
 50. மகனுடன் ஆன பொழுதுகள் இனிமையாக ஆகட்டும் தி/கீதா. நிதானமா இருந்து பொழுதைக் கழிச்சுட்டு சந்தோஷமா வாங்க!//

  ஆமாம் கீதாக்கா ரொம்ப இனியான பொழுதுகள் தருணங்கள். மிக்க நன்றி க்கா…
  கீதா

  பதிலளிநீக்கு
 51. வறுத்த அரைத்த குழம்பு - எள் சேர்த்து செய்ததில்லை.

  சுவையான தாளகம் மற்றும் வறுத்து அரைத்த குழம்பு. //

  மிக்க நன்றி வெங்கட்ஜி செய்து பாருங்க ரெண்டுமே நல்லாருக்கும்…

  கீதா

  பதிலளிநீக்கு
 52. அட அடா...இரண்டு குழப்பு வகைகளா... ஒரே குழப்பமா இருக்கே... குழப்பத்தில் தாளகவறுத்தரைத்த குழம்பு செய்துவிடப் போகிறேன்.

  எங்க அம்மா வறுத்தரைத்த குழம்புக்கு கொட்டைத் தேங்காய்தான் உபயோகப்படுத்துவார்கள்.

  நல்லா எழுதியிருக்கீங்க.... செய்துபார்க்கிறேன்.//

  ஹா ஹா ஹா ஹா செஞ்சு பாருங்க நெல்லை சொல்லுங்க…ரெண்டும்..நல்லாருக்கும்…

  கீதா

  பதிலளிநீக்கு
 53. அருமை/

  மிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ கருத்திற்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 54. டைரக்டர் ஸ்ரீராம் அவர்களுக்கு வாழ்த்துகள்...//

  ஆமாம் டிடி கரீக்க்க்க்க்க்க்க்டா சொன்னீங்க…டைரக்டர் ஸ்ரீராம் எங்கள் லூட்டிகளை எல்லாம் பொறுத்து வெளியிட்டு எம்மாம் பெரிய ஊக்கம் சொல்லுங்க!!! ஜூப்பர் இல்லையா……மிக்க நன்றி டிடி…

  கீதா

  பதிலளிநீக்கு
 55. மகனின் நல்வரவில் மனம் மகிழ்ந்திருக்கும் தங்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். அவரையும் நான் நலம் விசாரித்தாகச் சொல்லவும்.//

  மிக்க நன்றி கமலா சகோ. சொல்லிருக்கேன் உங்கள் எல்லோரைப் பற்றியும். தங்கள் எல்லோரது வாழ்த்துகள் விசாரிப்புகள் சொல்லிடுறென்…
  நானும் இதை செய்துள்ளேன் தாளதம் எனற பெயரில். திருவாதிரை களி செய்யும் போது இதையும் செய்து இறைவனுக்கு நேவேத்தியமாக வைப்போம். வெறும் நாட்களிலும் செய்து சாதத்திற்கு தொட்டு சாப்பிடலாம்.//
  ஆமாம் சகோ திருவாதிரைக் களி செய்யும் போது செய்வதுண்டு. மிக்க நன்றி தங்களின் ஊக்கமிகு கருத்திற்கு.

  கீதா

  பதிலளிநீக்கு
 56. எடுத்தவுடனே சீனா முன் நிற்பதால், அதற்கு ஒரு பதிலைச் சொல்லிவிடுகிறேன் :

  In this big, bad world, only very few get nice food or drink.//

  உண்மை ஏகாந்தன் அண்ணா. மிக மிக உண்மை. உலகில் வறுமைதான் அதிகம்…

  நல்ல உணவு கிடைப்பவர்கள் இறைவனுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஒரு சிறிய பாராட்டும் சொல்லலாமே அதைச் செய்தவருக்கு. அது மனைவியாக இருக்கலாம் கணவனாக இருக்கலாம், குடும்பத்து நபர் நண்பர் வட்டம் அல்லது ஏன் ஹோட்டலாகக் அல்லது கல்யாண விருந்து எதுவாக இருந்தாலும் பாராட்டல் நலம் ஒரு பாசிட்டிவ் அப்ரோச் இல்லையா அண்ணா
  மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா..

  கீதா

  பதிலளிநீக்கு
 57. ரொம்ப வேலை கொடுக்கும் போல!//

  வாங்க ராஜி. கடினம் எல்லாம் இல்லை…ஜிம்பிள் தான் இங்கு சொல்லியது அப்படித் தோன்றுது உங்களுக்கு….வேலை எலலம் இல்லை…மிக்க நன்றி ராஜி கருத்திற்கு…

  கீதா

  பதிலளிநீக்கு
 58. தாளகம் ஸூப்பர். சிலபேர்கள் செய்வதில் பருப்புகள் சற்று வித்தியாஸம். உங்கள் பிள்ளை வந்திருக்கிறார் எனத் தெரிய மிக்க ஸந்தோஷம். வாழ்த்துகளும் ஆசிகளும். அன்புடன்//

  மிக்க நன்றி காமாட்சிம்மா…ஆமாம் சில வித்தியாசங்கள் உண்டு. இது எங்கள் ஊர்ப்பக்கம்…குடும்பத்துப் பழக்கம்…பிள்ளைக்கு உங்கள் வாழ்த்துகளைச் சொல்லிவிட்டேன்…எல்லோரையும் சொல்லிருக்கேன் அம்மா

  கீதா

  பதிலளிநீக்கு
 59. வாங்க ஜல் ஜல் ஜல்….நானும் ஸ்ரீராமும் பேசித்தான் ரெசிப்பி வந்தது. ஸ்ரீராம் கேட்கவும் செய்தார்……பரவாயில்லை…மகன் இப்போது ஃபோன் கால்ஸ் அதனால் மீ இங்கு…

  ஹா ஹா ஹா ஹா……ச்சே ஆமாம் மறதிதான்…உங்களுக்கு நெல்லை பேராண்டி……ஏஞ்சலுக்கு மட்டும் தான் அண்ணன்…..ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 60. ஆஆ மகன் வந்துவிட்ட புழுகத்தில கீதாவுக்கு லெக் எங்க வைக்கிறது காண்ட் எங்க வைக்கிறதெண்டே புரியல்ல.. மகனை மீயும் நலம் கேட்டதாக மறக்காமல் சொல்லிடுங்கோ கீதா...
  [இப்பூடிப் புத்தியா:).. சுகம் விசாரிச்சால்தான் அம்பேரிக்கா சொக்கலேட்.. பேர்ஃபியூம் ஏதும் கிடைக்கும்:)) ஹா ஹா ஹா]///

  ஹையோ ஆமாம் அதிரா…..கையும் ஓடலை காலும் ஆடலை…கதைத்துக் கொண்டே இருக்கிறோம்…..அவன் நிறைய பேச்சுவாக்கில் ஜோக்கடிப்பான். நான் சிரித்துக் கொண்டே இருப்பேன்….கண்டிபபக உங்களையும் சொல்லியாஹ்சு. இங்கு எல்லோரைப் பற்றியும் சொல்லிருக்கேன் அவ்னிடம்…

  ஆஆஆஆஆஆஆஆஆ ஜொள்ள மறந்திட்டேன்ன்ன்ன் கீதா அந்த அதிராவின் குழைஜாதம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. ஹையோ இந்த தாளகத்தின் நினைப்பில் என் ஜாதம் செய்ய மறந்திடாதீங்கோ:))

  சத்தியமாக உண்டு அதிரா உங்கள் ரெசிப்பியேதான் மகனுக்குச் செய்யப் போறேன். அவனிடம் சொன்னேன்…..செய்துட்டு அவன் கமென்ட்டையும் சொல்லறேன் கண்டிப்பாக….

  மிக்க நன்றி அதிரா
  கீதா

  பதிலளிநீக்கு
 61. ஹா ஹா ஹா ஜெரிப்பிள்ளை .. தலை தப்பினதே தம்பிரான் புண்ணியம் என ரன்னிங்ங்ங் அவ்வ்வ்வ்வ்.. சரி மெயின் மட்டருக்கு லேட்டாத்தான் வருவேன் கீதா....//

  மெதுவா வாங்க அதிரா….ஹா ஹா ஹா ஓடுங்கோ ஓடுங்கோ…தேம்ஸ் நதி எல்லை வரை ஓடுங்கோ…ஹா ஹா நீங்கதான் ரன்னிங்கில் செகன்ட் ஆச்சே!! ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 62. புதுமையான ரெசிப்பி. சுவையான சமையல்.//

  மிக்க நன்றி முத்துசுவாமி சகோ தங்களின் கருத்திற்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 63. ஏஞ்சல் வாங்க வாங்க…ஆமாம் நம்ம ரெசிப்பி….எபி கிச்சன் ரெசிப்பி…
  குழம்பு தாளகபடம் செம அப்டியே ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஸ்பூனால் சாப்பிடணும் பக்கத்தில் பீன்ஸ் கேரட் பொரியல் வச்சு :)//

  யெஸ்ஸு யெஸ்ஸூ ஏஞ்சல் செமையா இருக்கும் அந்தக் கோம்பொ!!!! ஹைஃபைவ்!!!!
  மிக்க நன்றி ஏஞ்சல்…
  கீதா

  பதிலளிநீக்கு
 64. கீதா :) உங்களை பென்ச் மேலேத்த பார்த்தேன் :) ஆனா // பூஸார் அண்ட் ஏஞ்சல் அப்படியே உங்க அண்ணன் நெல்லை வந்துருக்காரானு பாருங்க. //

  ஹாஹாஆ :) இதை பார்த்து மைண்ட் சேன்ஜ்ட் :) சரி மகனுக்கு ஒரு ஹாய் சொன்னதா சொல்லிடுங்க :)//
  மகனுக்கு உங்களைப் பற்றி ஷாரென் பற்றி அவர் விருப்பம் பற்றி எல்லாம் சொல்லிட்டேன்……மகனுக்கு ஒரே சந்தோஷம் தன் குடும்பத்தில் அனிமல் லவ்வர்ஸ் பெருகுவது குறித்து…..இங்கு எல்லோரைப் பற்றியும் சொல்லிருக்கேன்…

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா…..இன்னொரு கமென்ட் கொடுத்துருக்கேன் பாருங்க ஏஞ்சல்…..நீங்க ஹைஃபைவ் போடுவீங்க என்னோடு…..பூஸார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜொல்லி ஓடி வருவார்….ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 65. அதிரா நீங்க இப்பத்தான் வாங்கிருக்கீங்களா…நான் ஏற்கனவே மூனில் வாங்கியாச்சு!!!! இனிதான் கல் நாட்டல் எல்லாம்…அதுக்கு எபி நம்ம ஃப்ரென்ட்ஸ் எல்லோருக்கும் ராக்கெட்டில் அழைத்துவர பூஸார் அல்லோ!!! பொறுப்பு!!! ஹா ஹா ஹா ஹா ஹா……

  கீதா

  பதிலளிநீக்கு
 66. ஆஆஆஆஆஆவ்வ் இரண்டுமே சூப்பர் கீதா.. தாளகம் இப்படி ஒரு குறிப்பு வீடியோ பார்த்தேன் அது பாசை வேறு தெலுங்கென நினைக்கிறேன்ன்.. தாளகம் வித்தியாசமான பெயர்..

  பார்க்கவும் அழகா இருக்கு.. ஆனா கொஞ்சம் வேலை அதிகம் போல டக்கு டிக்கெனச் செய்திட முடியாது... ஆனா சுவை நிட்சயம் இருக்குமென்பது தெரியுது.//

  மிக்க நன்றி அதிரா….வேலை ஒன்னும் இல்லை அதிரா…ஒன்ஸ் செய்துட்டீங்கனா ஈஸிதான்….ரொம்ப நல்லாருக்கும்….

  கீதா

  பதிலளிநீக்கு
 67. நெட் கட்டாகி கட்டாகி வருவதால் வேர்டில் அடித்து வைத்துவிட்டேன்……..இப்ப பப்ளிஷிங்க்……..அதிரா ஏஞ்சல் ரொம்ப கும்மி அடிக்க முடியலை….இடையில் சிலதுக்கு கும்மி அடிக்க முடியலை….மகன் ஃப்ரீ ஆகிட்டான்…கால்ஸ் முடிந்து….ஸோ மீ ஓடிங்க்…….ஹா ஹா …

  கீதா

  பதிலளிநீக்கு
 68. @கீதா: நல்ல உணவு கிடைப்பவர்கள் இறைவனுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஒரு சிறிய பாராட்டும் சொல்லலாமே அதைச் செய்தவருக்கு. அது மனைவியாக இருக்கலாம் ..//

  இப்படி ஒரு கமெண்ட் போட்டு ஒரு பழைய நினைவை என்னில் மீட்டுவிட்டீர்கள். டோக்யோவில் -2002 என்று ஞாபகம்- ஒரு முறை என் மனைவி தன் நண்பிகளுக்கு (10-12 பேர் இருப்பார்கள்) ஒரு லேடீஸ் லஞ்ச் எங்கள் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தாள். இண்டியன் லேடீஸ் குழாம் சாப்பிட்டுவிட்டு ஐஸ்க்ரீமும் அரட்டையுமாய் உட்கார்ந்திருந்த நேரத்தில் நான் நுழைந்தேன் (ஆஃபீஸ் அருகிலேயே இருந்ததால் லஞ்சுக்கு). நான் சாப்பிட்டுவிட்டு ஓட நினைக்கையில், ஒரு தோழி ஆரம்பித்தார்: ‘ஒங்க ஒஃய்ப் இப்படி பல வெரெய்ட்டி காட்டி ப்ரமாதமா சமைக்கிறாங்களே.. நீங்க எப்பவாவது, ஏதாவது சொல்லியிருக்கீங்களா -ரெண்டு வார்த்தை பாராட்டி !’ இந்த மாதிரி வாழ்க்கையின் கடினமான கேள்விகளுக்கு என்னிடம் மழுப்பல் சிரிப்பைத் தவிர வேறேதும் இருந்ததில்லை. அந்தப் பெண்மணிக்கு என் மேல் கோபம், ’ஏதாவதொரு ஐட்டம் நல்லா பண்ணிருக்கே.. நல்லாயிருக்குன்னு, எப்பவாவது சொல்லக்கூடவா ஒங்களுக்கெல்லாம் வாய் வலிக்கும்?’ என்று என்னை நகட்டி எடுத்துவிட்டார்.. ஏண்டா லஞ்சுக்கு வந்தோம் என்று ஆகிவிட்டது எனக்கு!

  இங்கேயும் பாருங்கள். சீனப்பழமொழிக்கு பதில்சொல்லி ஓடலாம் என நினைத்தால்..

  பதிலளிநீக்கு
 69. ////ஆஆஆஆஆஆஆஆஆ ஜொள்ள மறந்திட்டேன்ன்ன்ன் கீதா அந்த அதிராவின் குழைஜாதம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. ஹையோ இந்த தாளகத்தின் நினைப்பில் என் ஜாதம் செய்ய மறந்திடாதீங்கோ:))

  சத்தியமாக உண்டு அதிரா உங்கள் ரெசிப்பியேதான் மகனுக்குச் செய்யப் போறேன். அவனிடம் சொன்னேன்…..செய்துட்டு அவன் கமென்ட்டையும் சொல்லறேன் கண்டிப்பாக….

  மிக்க நன்றி அதிரா
  கீதா///

  ஆஆஆஆஆவ்வ்வ்வ் நெல்லைத்தமிழன் அண்ணாஆஆஆஆ வெளில வாங்கோ:)) பாருங்கோ என் பெருமை அம்பேரிக்காவில கொடிகட்டிப் பறக்கப் போகுது:) இனி ட்றம்ப் அங்கிளிடமிருந்து நேக்கு ஓடர் வந்தாலும் வரலாம்:)) ஸ்ஸ்ஸ்ஸ் ஆரும் பொறாமைப்படக்குடா ஜொள்ளிட்டேன்ன்:))

  பதிலளிநீக்கு
 70. ஆஹா அந்தக் காலத்திலேயே அதிராவைப்போல ஒருவர் ஏகாந்தன் அண்ணனைக் கேள்வி கேட்டு பதில் ஜொள்ள முடியாமல் திண்டாட வச்சிருக்கிறாவே:)).. ஹையோ எனக்கு எதுக்கு தேவையில்லாத சோலி எல்லாம் மீ ரன்னிங்ங்ங்ங்ங்:))

  பதிலளிநீக்கு
 71. குழை ஜாதமா...ஆஆஆ!....

  அதுவும் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வந்த மகனுக்கா!.....

  சாமீய்ய்ய்ய்ய்!...
  வயிரவா!.. காப்பாத்துங்கோ!...

  பதிலளிநீக்கு
 72. ஏகாந்தன் அண்ணா ஹா ஹா ஹா ஹா...அப்ப என்னிடமும் மாட்டிக்கிட்டீங்களா...ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 73. //துரை செல்வராஜூ said...
  குழை ஜாதமா...ஆஆஆ!....


  சாமீய்ய்ய்ய்ய்!...
  வயிரவா!.. காப்பாத்துங்கோ!...//

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கடற்கரையில போய் நித்திரை கொள்ளாதீங்கோ என்றால் ஆரு கேய்க்கிறா:) பாருங்கோ துரை அண்ணனுக்கு ஏதோ காத்துக் கருப்புப் பிடிச்சிட்டுதூஊஊஊ.. ஹையோ வேப்பங்குழைக்கு இப்பொ எங்கின போவது?:)

  பதிலளிநீக்கு
 74. அதிரா குழை சாதம்...... மகன் சாப்பிட்டுவிட்டு சொல்றேன்னு சொல்லிருக்கான்.... ட்ரம்ப் மாமாவுக்கும் ஒரு பார்ஸல் கொண்டு போகலாமா வேண்டாமா என்று...நான் மகன்ட சொன்னேன்...ட்ரம்ப் மாமா ஓடிப் போயிடுவார்...அது அவரது செக்கின் ரெசிப்பினு தெரிஞ்சதுனா.......ஹா ஹா ஹா ஹா ஹா....

  கீதா

  பதிலளிநீக்கு
 75. கீதா , நாங்களும் வறுத்து அரைத்த குழம்பு செய்வோம்.
  அழகான படங்களுடன் அருமையான செய்முறை.
  நேற்று தம்பி வீட்டுக்கு போய் வந்த பின் பதிவுகளை படித்து பின்னூட்டம் போட்டேன் எப்படி இதை பார்க்காமல் விட்டேன் என்று தெரியவில்லை.
  இப்போதுதான் பார்த்தேன். அதுதான் எல்லோரும் கீதா வாரமா என்று கேட்டார்களா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!