திங்கள், 18 ஜூன், 2018

"​திங்க"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.


அரிசி வடையும் ராஷ்மியும்

கீதா ரெங்கன்  


ட்ரிங்க் ட்ரிங்க் எபி கிச்சன் ஃபோன் அடித்தது.  “ஸ்ரீராம்! பாட்டினா ராஷ்மினு சொல்லுங்க ராஜலஷ்மினு சொல்லிடாதீங்க. அவ்வளவுதான் அல்லோகலம்.”

“ஹலோ! மே ஐ ஸ்பீக் டு த எபி கிச்சன் டைரக்டர் ஸ்ரீராம்?”

“ஸ்ரீராம் தான் பேசறேன். ராஷ்மி பாட்டியா?”

“ஓ! காட்! ஸ்ரீ! ஜஸ்ட் ராஷ்மி. நோ பாட்டி! வெல்! கார் அனுப்பிட்டீங்களா?” (ஹோ! பாட்டினு சொல்லக் கூடாதாம். பீட்டர் வேற… கார்….அனுப்பணுமாம்… …அலட்டல் பாட்டி போல…..இந்த கீதா சொல்லவே இல்லை…!! கீதாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!)

“நம்ம எபி கிச்சன் காரை அனுப்பறோம்னு சொல்லிடுங்க”

அதை ஏன் கேக்கறீங்க இன்றைய நம் ஷோவுக்கு வரும் ராஷ்மி! காலையிலேயே மூட் அவுட்! வேறு ஒன்றுமில்லை அந்தக் காலனியில் புதிதாய்க் குடி வந்திருக்கும் வைபு - வை புவனாவின் சுருக்கம் – காலையிலேயே தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறேன் என்ற பேரில் வந்தவள் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு போயிருக்கலாம்.

Image result for grandfather and grandmother funny clipart

“ராஜி பாட்டி! உங்க ஹஸ்பண்ட் பத்து அங்கிள் சூப்பர்! இந்த வயசிலும் என்ன யங்க்! சின்னக் குழந்தை மாதிரி என் குழந்தைகளுக்கு ஈக்வலா விளையாடுறார். அதுக்குத்தான் மனசை குழந்தை மாதிரி வைச்சுக்கணும்னு சொல்றாங்க போல! என் குழந்தைங்களுக்கு அங்கிளைக் கண்டாலே ஒரே குஷி!” என்று சொல்லியிருக்க வேண்டாம்.

“போச்சு போ! வைபு ராஜியிடம் மாட்டிக் கொண்டுவிட்டாளே என்று பத்து தாத்தா டென்ஷனாகி பாட்டிக்குத் தெரியாமல் வைபுவைப் பார்த்து கண்ணைக் காட்டி வாயில் கை வைத்துக் காட்டியது வைபுவுக்குப் புரியவா போகிறது. ராஜி பாட்டி, பத்து தாத்தா என்று ராஷ்மியின் காதில் விழுந்தால் காலனியே அல்லோகலப்படும் என்பதை காலனிக்காரர்கள் இவளுக்கு வார்னிங்க் கொடுக்கலை போலும்.

ராஷ்மிக்குக் காதில் ஈயத்தை வார்த்தது போல் இருந்தது. கண்களில் கனல்! “ஐ ஆம் நாட் ராஜி பாட்டி! கால் மி ராஷ்மி!” இந்தக் கிழவனை யங்க் அங்கிள்னு சொல்லிட்டாளே இந்த வைபு. சின்னக் குழந்தையாம்… வந்து பாத்துக்கறேண்டி வைபு உனக்கு இருக்கடி அப்பு” என்று மனதில் கருவிக் கொண்டவள், “ஹோ! அப்பு! இந்த “ஆப்பு” ந்ற லாங்க்வேஜக் கத்துக்கறதுக்குள்ள பிராணன் போயிடுது. சண்டை போட நேரமில்லை.’
“வெல்கம் டு அவர் காலனி. நைஸ் டு மீட் யு! ஐ ஆம் கோயிங்க் ஃபார் எ கிச்சன் ஷோ! ஸோ வில் மீட் யு இன் த ஈவினிங்க்”. கோபத்தில் வியர்த்ததில் மேக்கப் கலைந்து விட மீண்டும் டச்சப் செய்து கொள்ள ரூமிற்குள் சென்றார் ராஷ்மி!

“அது வேற ஒன்னுமில்லை வைபு! எங்க ராஜி ஸாரி ராஷ்மி பெரிய சமூக நலச் சேவகியாக்கும். .அமெரிக்காவில இருக்குற ஏதோ ஒரு லொட்டு லொசுக்கு அவாஇபெசசேச (அமெரிக்க வாழ் இந்தியப் பெண்கள் சமூக சேவை சங்கம்) இவள அழைக்கப் போக, ராஜலக்ஷ்மி ராஷ்மியாச்சு. என் பேர் பத்மநாபன் என்னை எல்லாரும் பத்துனு கூப்பிடுவாங்க. ”அசிங்கம். இங்க என்ன டெத் செரிமொனியா நடக்கறது? இல்லை பத்து பாத்திரமா? நோ மோர் பத்து! ஹீ இஸ் எ வில்லேஜ் மேன். ஸோ PADDY!” அப்படி எனக்கு நாமகரணம் சூட்டினா ராஷ்மி. அமெரிக்கா ரிட்டர்ன்!” என்றார் தாத்தா.

உள்ளே போயிருந்த பாட்டியின் காது, ஊசி விழுந்தால் கூடக் கேட்கும் அளவு செம ஷார்ப். மத்ததெல்லாம் விழுந்ததோ இல்லையோ “அமெரிக்கா ரிட்டர்ன்” மட்டும் காதுல விழுந்துருச்சு. “அமெரிக்கா ரிட்டர்னா?! இங்கிலிஷ் வரலைனா வாய மூடிட்டுப் பேசாம இருக்கணும்.” என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளியில் வந்தவள்,  “இப்படித்தான் கேட்டுக்க வைபு. ஒரு நாள் நான் இந்த மனுஷனை தியேட்டர்ல டிக்கெட் வாங்க அனுப்பிருந்தேன். தியேட்டர் வெளில கூட்டமா இருந்துச்சுன்றத இந்த மனுஷன் பெரிசா இங்கிலிஷ்ல பேசுறேன்னு, “அவுட் ஸ்டாண்டிங்க் க்ரௌட்” அப்படின்னு சொல்ல என் ஃப்ரென்ட்ஸ் முன்னாடி “யு க்னோ ஐ வாஸ் எம்பேரஸ்ட்” உன் பிள்ளைங்களோட இவர் பழகினார்னா உன் பிள்ளைங்களுக்கு இருக்கற இங்கிலிஷும் மறந்து போகும்…பி கேர்ஃபுல்…”

“ஹான்! மிஸ்டர் Paddy! எனக்கு எபி கிச்சன்லதான் லஞ்ச்! நச்சு, கிச்சு, சச்சு, அச்சு, பிச்சு, எல்லாம் கூட்டி வெச்சு கூத்தடிக்கக் கூடாது. கிச்சன் க்ளீனா இருக்கணும். வென் ஐ கம் பேக் பி ரெடி வித் காஃபி அண்ட் கார வடை.” தாத்தா முழி முழி என்று முழித்தார். “கார வடையா”!!! அது ஒரு தனிக்கதை!! பின்னர்…

இதுதான் இன்றைய ராஷ்மியின் அறிமுகம் மக்களே! பூஸார் நீங்கதான் ராஷ்மியை சமாளிக்க சரியான ஆள். பாருங்க வந்துட்டாங்க. ஓடுங்க!

Image result for tom welcoming cartoon

“ஹை ராஷ்மி! வாங்கோ வாங்கோ! எங்க எபி கிச்சன் ஷோவுக்கு”
“ஹை புலாலியூர் பூஸாநந்தா! வித் Hat யு லுக் ப்யூட்டிஃபுல் லைக் மி!! ஹான் வெயர் இஸ் யுவர் செக்ரட்டரி? அவங்களை எனக்கு செக்ரட்டரியா வைச்சுக்கலாமானு…யு க்நோ ஃப்யூ மந்த்ஸ் பேக் ஐ விசிட்டட்..”  (என் செக் இவங்களுக்கு செக் கா? நான் இவங்களை மாதிரி பாட்டியா?!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லாம் இந்த கீதாவின் வேலை…கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!)

“பூஸார்! ராஷ்மி, அமெரிக்கா புராணம் ஆரம்பிச்சுடுவாங்க. வாயை மூடிடுங்க! நாம ஷோ ஆரம்பிச்சுடலாம்” என்று ரகசிய குரலில் சொல்லிவிட்டு, “ராஷ்மி ஆல் ஆர் வெயிட்டிங்க். நாம் ஷோவுக்குப் போயிடலாம்.”

“போதும் டச்சூஊஉ பண்ணியது. நல்ல வடிவாதான் இருக்கிறீர்கள். வாங்கோ. கேமரா ரோலிங்க்”

“யெஸ் வாட்ஸ் ஸ்பெஷல் டுடே?”

அடப் பாவி பாட்டிய கூப்பிட்டது தப்பாயிடுச்சோ! கவுத்துட்டாங்க..”ராஷ்மி! நீங்க தானே சொன்னீங்க அரிசி வடை செய்யச் சொல்லித் தரேன்னு….”

“ஓ! யா! ட்ரெடிஷனல் டிஷ் ஆஃப் வாங்கல் யு க்னோ! ஐ ஆம் வெரி பிஸி! அட்டெண்டிங்க் லாட் ஆஃப் ப்ரோக்ராம்ஸ்..ஸோ காட் கன்ஃப்யூஸ்ட்….(கீதா முதல்ல அவங்களை பீட்டர் விடாம தமிழ்ல பேசச் சொல்லுங்க – ஸ்ரீராம்)

“ராஷ்மி! தமிழ்ல சொன்னாத்தானே நிறைய பேரை ரீச் ஆகும்! ஸோ ப்ளீஸ்…”

“ஓ! மிகவும் சரியே! எல்லோரும் இப்படி வந்து மேசையைச் சுற்றி நில்லுங்கள். நான் ஒவ்வொன்றாகச் சொல்ல சொல்ல நீங்கள் அளந்து எடுத்துச் செய்ய வேண்டும்.”

“ராஷ்மி! இப்படி ஒரே அடியா அந்தக்கால டமிலுக்கும் போகாதீங்கோ. நான் டமில்ல டி ஆக்கும்!”

“ஓ! டி! டிஸ்டிங்க்ஷன்! க்ரேட்! அப்போ புரியுமே! பூஸாருக்கு! ஓ! மை காட்! டைம் ஆயிடுச்சு! அடுத்த அப்பாயின்ட்மென்ட் எ மீட்டிங்க் வித் கலெக்டர் சீக்கிரம் போனும். ஸோ.....செய்முறைக்குப் போலாம்...கமான் கைஸ்…”

Image result for stylish grandmother in a cookery show cartoon

புழுங்கலரிசி – 1 கப் (இதோ பார்த்துக்கோங்க இந்தக் கப் தான் நான் எடுத்துருக்கேன் - முதல் படம்)

புளிச்ச தயிர் – அந்த அரிசி மூழ்கும் அளவு. இதோ பார்த்துக்கோங்க இப்படித்தான் - இரண்டாவது படம். 4, 5 மணிநேரம் ஊற வைச்சுறணும் ஓகேயா. நான் ஊற வைச்ச அரிசியும் கொண்டு வந்துருக்கேன். இதோ மூன்றாவது படம்

பச்சை மிளகாய் – 3-5 உங்க காரத்துக்கு ஏற்ப.

பெருங்காயம் – ¼ டீஸ்பூன் படத்துல காட்டியபடி
.
இஞ்சி – ஒரு சின்ன துண்டு (இது கொஞ்சம் தோல் காஞ்சுருக்கு. அவ்வளவுதான்.)

தேங்காய்த் துருவல் – அரை கப் (எந்தக் கப்பால அளக்கறீங்களோ அந்தக் கப்பால)

கறிவேப்பிலை, கொத்தமல்லி கொஞ்சம்
.
உப்பு – தேவையானது. 


தேங்காய்த் துருவல் தவிர எல்லாத்தையும் க்ரைண்டர்லயோ, மிக்ஸிலயோ போட்டு நல்லா அரைச்சுக்கோங்க. நைசா அரைக்கணும். கெட்டியா அரைக்கணும். தண்ணி வேணும்னா கொஞ்சமா தெளிச்சுத்தான் அரைக்கணும். கடைசியா தேங்காய்த் துருவல் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கோங்க. இதோ அரைச்சது எப்படி இருக்குனு பாருங்க. கெட்டியா இருக்கு பார்த்தீங்களா.
யாராவது மாவை கொஞ்சம் எண்ணை கைல தொட்டுட்டு உருட்டிக் காட்டுங்க.
ஏஞ்சல், அதிரா ஃபோட்டோ எடுக்கும் போது என் கை ரேகை தெரியாம எடுங்க. அண்ணன் நெல்லை என்ரேகை பார்த்து......

அப்புறம் தட்டறதும் சொல்லிடறேன் உருட்டுனவங்க தட்டிக் காட்டுங்க. இதோ (படங்கள் 1, 2) உருட்டினதை இப்படிக் கட்டை விரலால் தட்டி நடுல ஓட்டை போட்டு எண்ணைல போடலாம். 


அல்லது (படம் 3) இடது கைல தட்டி, நடுல ஓட்டை போட்டு வலது கையால எடுத்து எண்ணைல போடலாம். இது சரி வரலைனா, ஒரு வாழை இலை, அல்லது ஈரத் துணி மேல வைச்சுத் தட்டி (படம் 4) நடுல ஓட்டை போட்டு எண்ணைல போடலாம்.

பொரியுது பாருங்க வடை. கடைசியா அங்க பாருங்க பொரித்த வடை…

“துரை செல்வராஜு ஸார் ரஸம் செஞ்சுருப்பீங்களே. கொஞ்சம் தரீங்களா” என்று ராஷ்மி கேட்க துரை அண்ணா மகிழ்வுடன் கமகம ரஸத்தைக் கொண்டு வர ஒரே போட்டி அதைக் குடிக்க. பாருங்க மீந்த கொஞ்ச ரசத்துல வடைய போட்டா எல்லா ரசத்தையும் வடை உறிஞ்சுடுச்சு.


இப்படி ரஸத்துலயும் போட்டுச் சாப்பிடலாம். வெறும் வடை, ரஸத்துல போட்ட வடை எல்லாம் டேஸ்ட் பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க. (பிஞ்சுருக்கறத தப்பா நினைச்சுக்காதீங்க. வெரி ஸாஃப்ட் நு காமிக்கத்தான் அப்பூடி!!)

டிப்ஸ்: அரைக்கும் போது ரொம்ப கெட்டியா இருந்துச்சுனா கொஞ்சமா தண்ணி அல்லது மோர் தெளிச்சு அரைக்கலாம். அரைச்சு எடுத்துட்டு கொஞ்சம் ஒரு 15 நிமிஷம் வைச்சுட்டா மாவு நல்லா உருட்டற அளவு கெட்டியா இருக்கும். ஸப்போஸ் மாவு கொஞ்சம் நெகிழ்ந்து போச்சுனா நோ ப்ராப்ளம். 2 மெத்தட். ஒன்று கொஞ்சம் ரவை சேர்த்துக்கலாம். இல்லைனா அரைச்ச மாவை ஒரு க்ளீன் வெள்ளைத் துணில வைச்சு மூடி வைச்சுட்டா ஒரு 15, 20 நிமிஷத்துல கெட்டியாகிடும். அப்புறம் உருட்டல் தட்டல் எல்லாம் இங்க செஞ்சு காமிச்சா போலத்தான். அரைக்கும் போதே கவனமா அரைச்சா கெட்டியா அரைச்சுரலாம். 

வெல் எல்லாரும் வீட்டுல செஞ்சு பாருங்க! ஆல் த பெஸ்ட்!

“ராஷ்மி! கலக்கிட்டீங்க!! போங்க!!”

“கீதா! ராஷ்மி பாட்..ஓ ஸாரி ராஷ்மி அலட்டல்னாலும் கலக்கறாங்க. இன்னும் வேற டிஷ் எல்லாம் சொல்லுவாங்களா?” – ஸ்ரீராம், நெல்லை, கில்லர்ஜி..

“ஆமா ஸ்ரீராம்

, நெல்லை, கில்லர்ஜி. இன்னும் சொல்லுவாங்க.

ஓகே! ராஷ்மிக்கு நேரமாகிவிட்டது. ராஷ்மி! ரொம்ப நன்றி எங்கள் எபி கிச்சன் ஷோவுக்கு வந்ததுக்கு. இன்னும் நீங்க வரணும். வந்து நிறைய டிஷஸ் சொல்லித் தரணும். 

"ஓ! ஷ்யூர்! வில் கம் பேக்! கில்லர்! ஐ விஷ்ட் டு ஆஸ்க் யு ஸம்திங்க் ஹா ஹா. பட்...வெல் அப்புறம் கேக்கறேன்  எஞ்சாய் பை" (கில்லர்: இது இங்கிலிபீச்ச விடாது போலருக்கே!!)

அடுத்த எபி கிச்சன் ஷோ வரை உங்கள் எல்லோருக்கும் + டைரக்டருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறோம் உங்கள் எபி கிச்சன் க்ரூ!


கார்ட்டூன் படங்கள் : நன்றி இணையம்

91 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம் கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. ஆகா... அரிசி வடை!...
    வித்தியாசமாக இருக்கிறது...

    கடைசியில் -
    வடை போச்சே என்று சொல்லாமல் இருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  3. வாங்க துரை செல்வராஜூ ஸார்... காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  4. எங்கே அந்த கொயந்தை!?...

    காஃபி இன்னும் ஆத்தலையா?...

    பதிலளிநீக்கு
  5. வடை போகவில்லை. அவர்தான் பிஸியாக மகனுடன் அலைச்சலிலும், புத்தக வெளியீட்டு விழாவிலும் போய்க்கொண்டிருக்கிறார்!

    :)))

    பதிலளிநீக்கு
  6. சமையல் கட்டில் என்னையும்
    சேர்த்துக் கொண்டதற்கு மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  7. எல்லாம் சரி...

    அந்த ரெட்டை சிண்டு யார்!?.ம்
    உண்மை தெரிஞ்சாகணும்...

    பதிலளிநீக்கு
  8. அரிசியில் வடையா ? அதுவும் ரசத்தில் இட்டு சாப்பிட்டால் எப்படியிருக்கும் ?

    வீட்டில் செய்யசொல்லணும். கிச்சன் கலாட்டாவில் நானும்.... நன்றி.

    ரசிக்க வைத்தது பதிவு.

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம். அரிசி வடை - செய்முறை கேட்க நன்றாகவே இருக்கிறது. செய்து பார்க்கச் சொல்லணும்.....

    பதிலளிநீக்கு
  10. கீதா ரெங்கன் 19ம் தேதி வரை பிஸி (மகன் வந்து இருப்பதால்) இந்த நேரத்தில் அவர் பதிவுகளாய் வருகிறது.

    அவர் எல்லோர்கூடவும் கலந்துரையாட முடியாதபடி இருக்கிறது.

    அரிசி வடை நன்றாக இருக்கிறது, செய்முறை விளக்கம் படங்கள் எல்லாம் அருமை.


    பதிலளிநீக்கு
  11. அரிசி வடையா? அரிசி அடைனே வாசித்தால் கடைசியில் எண்ணெயில் பொரிக்கும்போதுதான் கவனித்தேன், வடை, அடையில்லை என்று. நல்லா வந்திருக்கு. செய்துபார்த்திடுவோம்.

    பதிலளிநீக்கு
  12. அரிசி வடை செய்முறையை ஊன்றிப் படித்தால், சந்தடி சாக்கில் "அணன் நெல்லையா"- இது அடுக்குமா?

    உளுந்தவடைக்கு நடுவுல ஓட்டை போடணும். அரிசி வடைக்குமா?

    பதிலளிநீக்கு
  13. யார்பதிவு யார் யார் என்பதெல்லாம் தலையும் புரியல காலும்புரியலை ஒரு சாதாரண அரிசி வடைக்கு ரொம்பவே அலம்பல்னு தோணூது

    பதிலளிநீக்கு
  14. வடையா அது? இலுப்பச்சட்டிக்குள்ள ’வார்’ நடந்தமாதிரில்ல இருக்குது!

    பதிலளிநீக்கு
  15. பொம்மனாட்டிகள் இப்படியெல்லாம் கால்தூக்கி ஆடப்படாதுன்னுதானே பார்வதி அன்னிக்கு அமைதியா இருந்தது.. தில்லையம்பல நடராஜன் ஜெய்த்ததாக இருந்துவிட்டுப்போகட்டும் என விட்டுக்கொடுத்தது.. இந்த குணம், பண்பாடெல்லாம் இந்த வெள்ளைப்பாட்டிக்கு எங்கே தெரியப்போகிறது? கிட்ச்சனுக்குள்ளேயே ஆடுது கிளவி.. (இது அதிரா பாஷையில்லைன்னு அவசரமா சொல்லிக்கிறேன்!)

    பதிலளிநீக்கு
  16. அரிசி வடை ஏன் எல்லா ரசத்தையும் உறிஞ்சிக்கொண்டது. ஒரேயடியாக தண்ணீர் கொஞ்சம்கூட விடாமல் மாவை அரைத்ததனாலா? ரச வடை செய்யுமுன் தேவையான ரசத்தை எடுத்து தனியா வச்சுக்கணும் போலிருக்கே. இல்லைனா ரசம் சாத்த்துக்கு உங்க வடை ரசத்தை மிச்சம் வைக்காது போலிருக்கே... ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  17. திங்கற கிழமைக்கு ரெசிபி கேட்கும் சாக்கில் கதையையும் கேட்டு வாங்கி போட்டு விட்டாரா ஸ்ரீராம்? அதகள படுத்திட்டாங்களே கீதா.

    பதிலளிநீக்கு
  18. அப்புசாமி, சீதா பாட்டி கதைகளை இனிமேல் யார் எழுதுவார்கள்? என்று விசனப்பட்டவர்களுக்கு ஒரு ஆறுதல், வந்து விட்டார்கள் பத்து சாரி paddy தாத்தாவும், ராஷ்மி பாட்டியும்.

    பதிலளிநீக்கு
  19. கீ.சா. அக்கா, இன்றைக்கு திங்கள் கிழமைதான், செவ்வாய் என்று நினைத்து 3 மணிக்கு ராகு கால விளக்கு ஏற்றி விடாதீர்கள். எல்லாம் இந்த கீதா ரெங்கன் செய்யும் வேலை.

    பதிலளிநீக்கு
  20. குழந்தை பிறந்த பதினோராம் நாள், அதை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, தொட்டிலில் போட்டு, தொட்டிலின் கீழே நெல்லில் மூன்று பெயர்களை எழுதுவது வழக்கம். அப்படி கீதாவை தொட்டிலில் போட்ட பொழுது எழுதிய பெயர்களில் ராஜலக்ஷ்மி என்பதும் ஒன்று என்றும், அதை சுருக்கி ராஷ்மி என்று கூப்பிடுவார்கள் என்றும் வேளச்சேரியிலிருந்து வந்த கழுகு ஒன்று என் காதில் கிசுகிசுத்து விட்டு செல்கிறது.

    பதிலளிநீக்கு
  21. ஆஆஆஅவ்வ்வ் என்னாது கீதா ரெசிப்பியாஆஆஆஆஆ... இதென்ன இது கீதாவுக்கு வந்திருக்கும் ஓதனை.. இது திட்டமிடப்பட்ட ஜதீஈஈஈஈ:)).. மகன் வந்திறங்கிற அன்று ஒரு குறிப்பு திரும்பும் அன்றும் ஒரு குறிப்பு போட்டு கீதாவுக்கு சோதனை மேல் சோதனையைக் குடுக்கிறார் ஸ்ரீராம் எண்டெல்லாம் மீ ஜொள்ள மாட்டேன் பிறகு வம்பாகிடும்...

    உனக்கெதுக்கு இந்த அக்கறை ஆருக்குமே இல்லாத அக்கறை.. எம்மோடு கிச்சினுக்கு வந்தாயா? அடுப்பு பத்த வைத்தாயா.. இல்லை சமைக்கும் அண்ணாக்கள் அக்காக்களுக்கு மிளகாய்ய்ய்ய்ய் அறை:)த்துக் கொடுத்தாயாஆஆஆஆ இப்போ எதுக்குக் கேட்கிறாய் இப்பூடி ...

    எனக் கேய்ட்டாலும் கேய்ப்பாங்க:)).. மீ வந்தமா கொமெண்ட் போட்டமா:) என வந்த அடையாளமே தெரியாமல் போயிடோணும்:))

    பதிலளிநீக்கு
  22. ///துரை செல்வராஜூ said...
    எங்கே அந்த கொயந்தை!?...

    காஃபி இன்னும் ஆத்தலையா?...///

    என்னையா தேடினீங்க துரை அண்ணன்?:) சரி சரி முறைக்காதீங்க:) எங்களை எல்லாம் எப்போ தேடியிருக்கிறார் துரை அண்ணன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    கீசாக்கா ...போஸ்ட்டை நாளைக்கு எழுதலாம் இப்போ இங்கின வாங்கோ:).. எங்கும் போகாமல் போஸ்ட் எழுதுறா போல பந்தி பந்தியா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹையோ கலைக்கப் போறாவே:))

    பதிலளிநீக்கு
  23. ஹா ஹா ஹா ராஷ்மி பாட்டியோடு ஸ்ரீராம் கதைத்தாரா? ஓ எங்கள்புளொக் அவ்டி கியூ 5 அனுப்பியா பாட்டியக் கூப்பிட்டார்ர் கர்ர்ர்ர்ர்ர் எங்களுக்கு எண்டா மட்டும் அடிக்கடி நடுரோட்டில ஸ்ரக் ஆகிப்போகிற மாருதியை அனுப்புறார்ர்ர்ர்ர்ர்ர்ர்.. கீதா இதை எல்லாம் தட்டிக் கேய்க்கப்பூடாதோ?:) ஓஒ அங்கு தட்ட முடியாமல்தான் வடையைத்தட்டுறீங்களோ சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்.. பாட்டி உள்ளே வரட்டும் மீ கவனிக்கிறேன்ன்:)).. அவவுக்கு செக்:) கு வேறு கேய்க்குதாமோ?:))

    பதிலளிநீக்கு
  24. அதாரது பாட்டியின் காலுக்கு கீழே மாட்டியிருப்பது.. ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))

    //@ஏகாந்தன் அண்ணன்

    ///கிட்ச்சனுக்குள்ளேயே ஆடுது கிளவி.. (இது அதிரா பாஷையில்லைன்னு அவசரமா சொல்லிக்கிறேன்!)////

    ஹா ஹா ஹா தாங்க முடியல்ல சாமீஈஈஈஈஈ. டெல்டுல்கார் ஆடினா மட்டும் ரசிக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  25. ///ஏஞ்சல், அதிரா ஃபோட்டோ எடுக்கும் போது என் கை ரேகை தெரியாம எடுங்க. அண்ணன் நெல்லை என்ரேகை பார்த்து......///

    ஹா ஹா ஹா அவர் அலுங்காமல் குலுங்காமல் எல்லோரையும் மிரட்டி எல்லோ வச்சிருக்கிறார்:) இனி கிளவுஸ் போட்டுத்தான் படமெடுக்கோணும் போல ஹையோ ஹையோ:))

    பதிலளிநீக்கு
  26. //G.M Balasubramaniam said...
    யார்பதிவு யார் யார் என்பதெல்லாம் தலையும் புரியல காலும்புரியலை ஒரு சாதாரண அரிசி வடைக்கு ரொம்பவே அலம்பல்னு தோணூது///

    ஆங்ங்ங் தட்டிக் கேய்க்க ஆளில்ல என நினைச்சுட்டா கீதா:)) நாங்க இருக்கோம் தட்ட்ட்ட்ட்டிக் கேய்ப்போம்ம்ம்:) சமையல் பகுதியில ராஷ்மிப் பாட்டி எதுக்கு வந்தாஆஆ?:)) ஏன் இப்போ கிச்சினில ஆடுறா?:)... சமையல் பகுதியில் கதை அளந்து கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மீ இண்டைக்கு ஜி எம் பி ஐயாட பய்க்கமாக்கும்:)) அது பக்கம் என வாசிக்கோணும்:))

    ஹா ஹா ஹா ஹையோ எனக்கென்னமோ கொஞ்சம் கொஞ்சமா ஆகிக்கொண்டே போகுதே ஜாமீஈஈஈஈஈ:))..

    பதிலளிநீக்கு
  27. //"ஓ! ஷ்யூர்! வில் கம் பேக்! கில்லர்! ஐ விஷ்ட் டு ஆஸ்க் யு ஸம்திங்க் ஹா ஹா. பட்...வெல் அப்புறம் கேக்கறேன் எஞ்சாய் பை" (கில்லர்: இது இங்கிலிபீச்ச விடாது போலருக்கே!!)///

    ஹா ஹா ஹா நான் நினைச்சதையே எழுதிட்டீங்க கீதா:))

    பதிலளிநீக்கு
  28. ஓகே இனித்தான் வடைக்கு வாறேன், ரொம்ப வித்தியாசமான ரெசிப்பியா இருக்கு... ஆனா அரிசியை அரைச்சுப் பொரிச்சாலோ இல்ல தேங்காய்ப்பூ நிறையச் சேர்த்துப் பொரிச்சாலோ எண்ணெய் குடிக்குமே கீதா?..

    பார்க்க உழுந்து வடை போலவே இருக்கு சூப்பரா நிறையப் படங்களோடு போட்டு.. ராஷ்மிப் பாட்டியோடு கலக்கிட்டீங்க...

    சமையல் குறிப்பை விட கிச்சினுக்குள் பொடும் கூத்தும் கும்மாளமும்தான் ரொம்ப ரசனையா இருக்குது ஹா ஹா ஹா...


    இதேபோல தேங்காய்க்குப் பதில் வெங்காயம் போட்டு அரைச்சு வடகம் சுட்டேன்[அது அரிசி அல்ல சோற்றை அரைப்பது].. அது ஸாதிகா அக்கா போட்ட குறிப்பு.... காயவைத்து எடுத்துப் பொரித்தேன் நன்றாக வந்தது.

    பதிலளிநீக்கு
  29. @ அதிரா: ..நிறையச் சேர்த்துப் பொரிச்சாலோ எண்ணெய் குடிக்குமே கீதா?//

    குடிக்கட்டுமே! அரிசிக்கு அந்த உரிமைகூட இல்லையா? நீங்க மட்டும் தினம் தினம் காப்பி, டீ குடிக்கிறீங்க. சில சமயங்கள்ல ஓவரா உள்ள தள்றீங்கல்ல..!

    பதிலளிநீக்கு
  30. நல்ல ரெசிபி பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் சகோதரி

    இன்று உங்கள் ரெசிபி அரிசி வடை சூப்பரா இருக்கிறது. புது மாதிரி வடை கேள்விபடாதது. ஆனால் பார்க்க படங்கள் செய்முறை அனைத்தும் மிக அழகாக இருந்தது. படங்கள் செய்முறை விளக்கங்கள் ரசத்தில் ஊற வைத்த வடை அனைத்தும் பார்த்த உடனேயே நானும் செய்து பார்க்க தோன்றுகிறது. கண்டிப்பாக தங்கள் செய்முறைபடி செய்து பார்க்கிறேன். கிச்சன் கலாட்டா கதை மாதிரி செவ்வாயை நினைவு படுத்தியது.அப்புசாமி கீதா பாட்டியை எ. பி கிச்சனுக்குள் கொண்டு வந்து விட்டீர்கள். வசனங்கள் மிகவும் அட்டகாசமாக ரசிக்கும்படி இருந்தன. சூப்பரா எழுதியிருக்கிறீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகளுடன் பாராட்டுக்கள்

    எனக்கு கொஞ்சம் நேரமின்மையால் இந்த பதிவுக்கு வர தாமதமாகி விட்டது. வருந்துகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  32. //ஏஞ்சல், அதிரா ஃபோட்டோ எடுக்கும் போது என் கை ரேகை தெரியாம எடுங்க. அண்ணன் நெல்லை என்ரேகை பார்த்து......///

    எப்பவுமே எதிர்க்கட்சியிலதானே நிற்பாங்க.. இப்போ எதுக்கு அதிராட பக்கம் ஒன்று சேர்ந்திட்டாய்க என ஓசிச்சேன்ன்ன்.. நெ.தமிழனை அண்ணன் எனக் கூப்பிடவாம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விடவே மாய்ட்டேன்ன் அவர் அதிராவுக்கு மட்டும்தேன் அண்ணன்:).. அஞ்சுக்கு மருமகன்[ஆன்ரி எண்டல்ல்?:))] கீதாவுக்கு தம்பி ஆக்கும் கர்ர்ர்:))..

    என் தேம்ஸ் ஐ அரை விலைக்குக் குடுத்தாவது ... காண்ட் கோர்ட் படி ஏறி வாதாடுவேன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  33. //ஏகாந்தன் Aekaanthan ! said...
    @ அதிரா: ..நிறையச் சேர்த்துப் பொரிச்சாலோ எண்ணெய் குடிக்குமே கீதா?//

    குடிக்கட்டுமே! அரிசிக்கு அந்த உரிமைகூட இல்லையா? நீங்க மட்டும் தினம் தினம் காப்பி, டீ குடிக்கிறீங்க. சில சமயங்கள்ல ஓவரா உள்ள தள்றீங்கல்ல..!//

    அதுவும் சரிதான்:)..

    எண்னெயை அரிசி குடிக்க..
    அரிசியை நாங்க குடிக்க..
    எங்களை வருத்தம் குடிக்கட்டும் ஹா ஹா ஹா:))..

    பதிலளிநீக்கு
  34. எல்லோருக்கும் வணக்கம்….துரை அண்ணா ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் வடை போலை…ஹா ஹா ஹா ஹா…..நேரம் செல்வதே தெரியவில்லை…இதோ இப்போது மகன் முன்பு வேலை செய்த க்ளினிக்கிற்கு சென்றிருப்பதால் கொஞ்சம் நேரம் கிடைத்தது. பதில்…கடகட என்று கொடுத்துட்டு அடுத்து பேக்கிங்க் ஆரம்பிக்கணும். வெயிட் பார்க்கணும்…அங்கிருந்து அவன் வெறும் ஹேன்ட் லக்கேஜ் மட்டும்தான் எதுவும் கொண்டு வரலை. ஆனால் இங்கிருந்துதான் லக்கேஜ் ஹா ஹா ஹா ஹா ஹா….
    உங்க ரசம் சூப்பரா இருந்துச்சாம் ராஷ்மி சொல்லிவிட்டார்.

    அந்த ரெண்டு சிண்டு ஹா ஹா ஹா ஹா ஹா பெரிய சிண்டு ராஷ்மி…….சின்ன சிண்டு அதிரடி அவர் அப்படி அவரை வரவேற்கிறாராம்…வடை சுடுகிறாராம்…ஹா ஹா ஹா ஹா

    மிக்க நன்றி துரை அண்ணா…

    கீதா

    கரன்ட் வேறு இல்லாமல் இருந்துச்சு கமென்ட் எல்லாம் அடித்து வைச்சுட்டேன்....இப்ப வந்ததும் பப்ளிஷிங்க்....

    பதிலளிநீக்கு
  35. மிகிமா ஹா ஹா ஹா ஹா நானும் எபி பதிவு வைத்துத்தான் கிழமை தெரிந்து கொள்வதே….மிகிமா அதான் ஸ்ரீராம் அழகா தலைப்பு பெரியதா கொடுத்து என்னைக் காப்பாற்றிவிட்டாரே!!! ஹா ஹா ஹா…மிக்க நன்றி…
    கீதா

    பதிலளிநீக்கு
  36. கில்லர்ஜி அரிசி வடை ரொம்ப நல்லாருக்கும். ரசத்தில் போட்டும் சாப்பிடலாம் சூப்பரா இருக்கும் செஞ்சு பாருங்க….சரி சரி உங்க பதிவு வருது தெரியுது….நாளை வரேன்.
    துளசி உங்கள் மற்றும் பல பதிவுகள் பலதுக்கும் கமென்ட் அனுப்பிருக்கார். என்னால் போட முடியலை. நாளை போடுகிறேன் என் கமென்ட் போடும் போது…மிக்க நன்றி கில்லர்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
  37. மிக்க நன்றி டிடி ரசித்தமைக்கு. செஞ்சுதரச் சொல்லுங்க…இல்லை நீங்களே தட்டுங்க!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  38. மிக்க நன்றி வெங்கட்ஜி. நீங்கள் அல்லது ஆதி செஞ்சு பாருங்க…சூப்பரா இருக்கும்…
    நாளையிலிருந்து வலை உலா தொடங்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  39. வாங்க கோமதிக்கா. பரவால்ல கோமதிக்கா…ஸ்ரீராம் என்னிடம் பேசிக் கேட்டுவிட்டுத்தான் போட்டார்….எப்படியேனும் இடையில்வந்து கமென்ட் கொடுக்க முயற்சி செய்கிறேன் என்று சொல்லியிருந்தேன்…. மகன் க்ளினிக்கிற்குச் சென்றிருப்பதால் கொஞ்சம் நேரம் கிடைத்தது. பேக்கிங்க் ஆரம்பிக்கணும் அடுத்து…ஸோ கொடுத்துட்டு ஓடிடுவேன்…ஹா ஹா ஹா

    மிக்க நன்றி கோமதிக்க்க வடை நன்றாக இருக்கு என்று சொன்னதற்கு…

    கீதா

    பதிலளிநீக்கு
  40. நெல்லை ஹா ஹா ஹா ஹா ஹா………அண்ணன் நெல்லை வாழ்கனு ஒரு கோஷமே போடலாம்னு அதிரடியும் ஏஞ்சலும் கூட காதில் கிசு கிசுத்தார்கள்….பாவம் இதோட நிறுத்திக்குவோம்…அடுத்ததுல பார்த்துக்குவோம்னு ஹிஹிஹிஹி

    ஏன் நெல்லை அரிசி வடைல ஓட்டை போடக் கூடாதா பாவம் அது அப்புறம் உளுந்து வடைக்கும் மட்டுமா…நோ பார்ஷியாலிட்டி!!! ஹா ஹா ஹா ஹா அரிசி வடைக்கும் போட்டா நல்லா வேகும்…போட்டதும் புஸ் என்று பூரி போல கொஞ்சம் உப்பி வரும் அப்படி வந்தா வடை நல்லாவே இருக்கும்……நன்றி நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  41. ஹா ஹா ஹா ஹா ஜிஎம்பி ஸார்….அதான் ஸ்ரீராம் தலைப்புல பெரிசா கொடுத்துருக்காரே….யார் பதிவுனு….

    ஸார் ஸாதாரண அரிசி வடையா? விஐபி வடை சார் !!! மாப்பிள்ளைகளுக்கு ஸ்பெஷலா செய்வாங்களாம்!!!! …அதான் அலம்பல் !! ஹா ஹா ஹா ஹா…..சார் அரிசி வடைக்கு ஒரு பப்ளிசிட்டினு வைச்சுக்குவோமா….ஹா ஹா ஹா ஹா ஹா……கொஞ்சம் வித்தியாசமா முயற்சி பண்ணலாமேனுதான் சார். இது ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் அப்பு சீதாப்பாட்டி கதைகள் படித்து ரசித்து மனதில் தோன்றியதை சும்மா ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்தேன். அதைத்தான் கொஞ்சம் தட்டி வெட்டி இப்படி பதிவு போடலாம்னு எழுதத் தொடங்கியதை இங்கு திங்கவில் இணைத்தேன் சார்.

    மிக்க நன்றி சார். கருத்திற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  42. ஹா ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா இலுப்பச் சட்டிக்குள்ள வார் ஹா ஹா ஹா…அது திடீரென்று தோன்றிய ஐடியா..ஸோ மீந்த கொஞ்ச ரசத்தில் அரிசி வடை இருந்ததைப் போட்டு அது ரசத்தை உறிஞ்சிட அது ஸாஃப்ட் என்பதைக் காட்ட பிய்த்து அம்புட்டுத்தான் நல்ல காலம் …கொத்து பரோட்டா மாதிரி கொத்து அரிசி வடைனு…. !! ஹாஹாஹாஹாஹா அதை அழகு படுத்தி ஃபோட்டோ எடுக்கலாம்னு நினைக்கறதுக்குள்ள காலியாகிடாம இருக்கணுமேனு....டக்குனு எடுத்துட்டேன்...ஹாஹாஹாஹா
    மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  43. ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா அந்தக் கிளவியுடன் ஆடுவது சின்னக் கிளவியாக்கும்!!!! ஹா ஹா ஹா……

    மிக்க நன்றி அண்ணா
    கீதா

    பதிலளிநீக்கு
  44. நெல்லை எல்லா ரசமும் இல்லை…வடை செய்ததும் திடீரென்று தோன்றியய்து செய்த மீந்த ரசத்தில் அதைப் போட்டுப் பார்த்தால் என்ன என்று. அப்படி கொஞ்சமே கொஞ்சமாக மண்டியுடன் இருந்த ரசத்தில் போட்டதும் நீரை உறிஞ்சி மண்டி மட்டும்….அதான்….ஹாஹா நாங்க கெட்டில்லா….ரசத்தைக் குடிச்சுட்டு மீந்ததைத்தானே வடைக்குக் குடிக்கக் கொடுத்தோம்…….ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  45. ஹா ஹா ஹா ஹா பானுக்கா செம!!!! சும்மா வித்தியாசமான ஒரு முயற்சி. ஜிஎம்பி சாருக்குக் கொடுத்திருக்கேனே அதே….ராஷ்மியும் அந்தச் சின்னச் சிண்டும் ஒரே அதகளம் போங்க….பாருங்க வடையை எப்படித் தூக்கிப் போட்டுப் பிடிக்கிறாங்கனு..ஹா ஹா ஹா மிக்க நன்றி பானுக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  46. பானுக்கா யெஸ்….அப்புசாமி சீதா பாட்டி கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் முன்பு ரொம்ப ரசித்து வாசித்ததுண்டு கொஞ்சம் கொஞ்சம்தான்….அப்படி பல வருடங்களுக்கு முன் எழுதியதை கொஞ்சம் வெட்டி தட்டி எழுதி வைத்திருந்தேன் பாதி…அதை இங்கு திங்கவில் பயன்படுத்திக் கொண்டேன்….
    இன்னும் எழுத நினைத்துள்ளேன் பானுக்கா paddy தாத்தாவும் ராஷ்மியும் ஆனால் இடையில் கொஞ்சம் மனம் இன்னும் அதில் போகலை….பார்ப்போம்.
    கீதாக்காக்குச் சொன்னதையும் ரசித்தேன் பானுக்கா..ரொம்ப….ஓ அதான் கீதாக்காவைக் காணலையா…..ஹ ஹா ஹா ஹா ஹா ஹாஹா…ஹை பானுக்காவும் கலாய்த்தலில் சேர்ந்துட்டாங்க டோய்!!!! அதிரா நோட் திஸ்….
    மிக்க நன்றி பானுக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  47. ஹா ஹா ஹா ஹா ஹையோ செமையா சிரிச்சு முடில பானுக்கா என் மகனிடம் சொல்லணும்…உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வேளச்சேரியிலிருந்து வந்த கழுகு எங்கேனு தேடிட்டிருக்கேன் ஹா ஹா ஹா……

    கீதா

    பதிலளிநீக்கு
  48. வாங்க அதிரா…..ஹா ஹா ஹா ஹா எந்த சோதனை எந்த வடிவத்தில் வந்தாலும் இந்தக் கீதா யார்…கொக்கானு விடுவேனா பாத்துருவோம் ஒரு கைனு ஸ்ரீராம்கிட்ட சொல்லித்தான் போட்டார் அதிரா …ஹா ஹா ஹா ஹா ஹா…
    அதிரா ராஷ்மியை சமாளிச்சதே நீங்கதானே….அப்புறம் என்ன மஞ்சள் கிச்சன் அடுப்புனு……ம்ம்ம்ம்ம் ஏஞ்சல் நோட் திஸ் ஓல்ட் வசனம்….அப்ப இதுலருந்து என்ன தெரியுது!!!!! அதிராவின் வயது!!!! ஹிஹிஹிஹி

    மிக்க நன்றி அதிரா
    கீதா

    பதிலளிநீக்கு
  49. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா ரசித்தமைக்கு….

    கீதா

    பதிலளிநீக்கு
  50. அதிரா ஆவ்டி கியூ 5 ஓல்ட்….எபி கிச்சன் ஆவ்டி கியூ 7 ஆக்கும்….….8க்கு புக் பண்ணியாச்சு!!! ..டொயோட்டா…ரஷ்க்கு புக் பண்ணியாச்சு தெரியுமோ……. பிஎம்டபுள்யு எக்ஸ் 5 எல்லாம் ….எபி கிச்சனை என்னனு நினைச்சீங்க!!!!
    உங்களுக்கு மாருதியா ????ஹிஹிஹிஹி.. மாட்டு வண்டியில்லையோ அனுப்பினது !!!!! கட்டைவண்டி கட்டை வண்டி காப்பாத்த வந்த வண்டியாக்கும்!!!! அப்புடி எல்லாம் கேய்க்கப்படாதாக்கும்…ஹா ஹா ஹா உங்க செக் இனி ராஷ்மிக்குத்தான் செக் ஹா ஹா ஹா (ஆனா மாருதி நல்லாருக்கும் அதிரா……)
    கீதா

    பதிலளிநீக்கு
  51. அதிரா ஹா ஹா ஹா ஹா நெல்லை அண்ணனை சமாளிச்சுக்கலாம்……க்ளவுஸ் இல்லை தின் ஸ்கின் கவர் போட்டுக்கலாம்…நெல்லை ரேகையைத் தேடுவார்…கை இருக்கு ரேகை இல்லையேனு…ஹா ஹா ஹா…… ஜிஎம்பி சார் பக்கமா ஹா ஹா…சரி சரி ராஷ்மி மாதிரி ஒரு ஸ்மார்ட் பாட்டி வந்தா அதிரா பாட்டிக்கு பொற்ற்ற்ற்றாஆஆஆஆஆஆமை…..ஹா ஹா ஹா ஹா ஹா ஹா….
    //ஹா ஹா ஹா நான் நினைச்சதையே எழுதிட்டீங்க கீதா:))// ஹைஃபைவ் அதிரா….
    அப்படியே குடிச்சா குடிக்கட்டும் அதிரா பாவம் அரிசி வடை…..நாமெல்லாம் காபி குடிக்கறோமல்லோ….அப்படி வைத்துக் கொள்வோம்….ஹா ஹா ஹா ஹா

    ஓகே ஜோக்ஸ் அபார்ட்…..இந்த அரிசி வடை எண்ணை குடிக்காது அதிரா. நல்ல கெட்டியாக அரைத்து வைத்துச் செய்தால் நல்லா வரும். மற்ற வடைகள் போலத்தான் எண்ணை இழுக்கும் அதிகம் இழுக்காது. ஆமாம் அதிரா சோற்று வடகம் வெங்காயம் போட்டுச் செய்யலாம் நல்லாருக்கும்.

    ரசித்தமைக்கு மிக்க நன்றி அதிரா…

    கீதா

    பதிலளிநீக்கு
  52. ஹையோ ஏகாந்தன் அண்ணா…நான் லைட்டாகச் சொன்னதை நீங்களும் சொல்லிட்டீங்க…ஹா ஹா ஹா ஹா ரசித்தேன்…

    கீதா

    பதிலளிநீக்கு
  53. மிக்க நன்றி அசோகன் குப்புசாமி சகோ கருத்திற்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  54. எப்பவுமே எதிர்க்கட்சியிலதானே நிற்பாங்க.. இப்போ எதுக்கு அதிராட பக்கம் ஒன்று சேர்ந்திட்டாய்க என ஓசிச்சேன்ன்ன்.. நெ.தமிழனை அண்ணன் எனக் கூப்பிடவாம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விடவே மாய்ட்டேன்ன் அவர் அதிராவுக்கு மட்டும்தேன் அண்ணன்:).. அஞ்சுக்கு மருமகன்[ஆன்ரி எண்டல்ல்?:))] கீதாவுக்கு தம்பி ஆக்கும் கர்ர்ர்:))..

    என் தேம்ஸ் ஐ அரை விலைக்குக் குடுத்தாவது ... காண்ட் கோர்ட் படி ஏறி வாதாடுவேன்ன்ன்:))//

    நாங்க அப்பப்ப்போ சேம் சைட் கோல் போடுவோம்ல....அதை எல்லாம் கணக்கில் எடுக்கக் கூடாதாக்கும்....ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  55. கமலா சகோ மிக்க நன்றி சகோ...ரசித்தமைக்கு....செய்து பாருங்க நல்லாருக்கும்.

    தாமதத்திற்கு எல்லாம் ஏன் வருத்தம்....எப்ப வேணாலும் நேரம் கிடைக்கும் போது வந்து கருத்திடலாம் சகோ...ஸோ நோ வொர்ரிஸ்.....பி ஹேப்பி!!!! இது நம்ம வூடுதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
  56. ஸ்ரீராம் மிக்க நன்றி திங்க பதிவு வெளியிட்டமைக்கு.....எல்லா விதத்திலும் ஊக்கப் படுத்தி உற்சாகப்படுத்துவதற்கு (பூஸ்ட் கொடுத்து ..பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்று சொல்லும்படி!!!! !) மிக்க நன்றியோ நன்றி!!!!

    சரி அடுத்து பாக்கிங்க்....மகன் வந்தாச்சு....கோயிங்க்....நாளை வருகிறேன்....கீதாக்காவைக் காணலையே!!! பானுக்கா சொன்னது போலாகிடுச்சோ....

    கீதா

    பதிலளிநீக்கு
  57. //எங்கே அந்த கொயந்தை!?...

    காஃபி இன்னும் ஆத்தலையா?.// ஆத்தினேன், ஆத்தினேன், இன்னிக்குத் திங்கற கிழமைங்கறது மறந்துட்டேன். இன்னும் ஞாயிற்றுக் கிழமை மாதிரியே இருக்கு! இப்போத் தான் ஏஞ்சல் சொன்னதைப் பார்த்துட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
  58. இந்த வாரமும் கீ.ரெ. வாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆரமா? அது என்ன பானுமதி சொல்லி இருக்காங்க. போய்ப் பார்க்கணுமே இங்கேயே கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  59. ஓகோ, ராகுகால விளக்கா? இஃகி இஃகி! செவ்வாய்க்கிழமைனு நினைக்கலை! இந்த வடை வெறும் அரிசியை மோரில் ஊற வைச்சு கீ.ரெ. செய்திருக்காங்க. கோவைக்காரங்க அரிசி+துவரம்பருப்புச் சேர்த்துப் புளி சேர்த்து உப்புக்காரம் போட்டு அரைச்சுச் செய்வாங்க. புளி வடைனாலும் அதுக்குக் கோவை மாவட்டப் பெயர் வேறே ஏதோ! தேடிப் பார்த்துச் சொல்றேன்.

    பதிலளிநீக்கு
  60. //நெ.த. said...
    அரிசி வடை செய்முறையை ஊன்றிப் படித்தால், சந்தடி சாக்கில் "அணன் நெல்லையா"- இது அடுக்குமா?//
    https://media1.tenor.com/images/a1705a7e2e6ad09f8c6f801b0af080a8/tenor.gif?itemid=7525573

    பதிலளிநீக்கு
  61. கடைசியில் அந்த ராஷ்மிப் பாட்டி கீ.ரெ. தானா? நான் என்னமோ ஒய்.ஜி. மகேந்திராவோட அம்மாவோனு நினைச்சுட்டேன். :)))))

    பதிலளிநீக்கு
  62. //ன்/// செக் இவங்களுக்கு செக் கா? நான் இவங்களை மாதிரி பாட்டியா?!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லாம் இந்த கீதாவின் வேலை…கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!) //


    haahaaaa என்ன சொல்ல எது சொல்ல சொல்ல ஒரு வார்த்தையில்லை :)

    பதிலளிநீக்கு
  63. கீதா அரிசி வடை சூப்பரா வந்திருக்கு .எனக்கு உளுந்து சேர்க்காம இப்படி சாப்பிட ஆசை ..தயிர் சேர்ந்ததால் எண்ணெய் குடிக்காதா ?
    எனக்கு தயிர் சேர்த்து பொரிக்க பயம் .ஒருதடவை தேன்மிட்டாய் செய்யப்போய் வெடிக்க ஆரம்பிச்சி கிச்சனை விட்டே ஓடிட்டேன் :)

    ஆனா ஹெல்மெட் போட்டாவது இதை செய்யணும் :)

    செஞ்சி பார்த்து சொல்றேன்

    பதிலளிநீக்கு
  64. @ அதிரா: ..எங்களை வருத்தம் குடிக்கட்டும் ஹா ஹா:))..

    நீங்கள்ல்லாம் சர்பத்தா என்ன வருத்தம் வந்து குடிக்க! ஒரு வருத்தமும் வராது. யாமிருக்க பயமேன் என்கிறார் திருச்செந்தூர் முருகன்!

    பஜ்ஜியிலோ வடையிலோ எண்ணெய் இருக்கக்கூடாதுன்னா பட்சணம் எப்படித்தான் செய்யறதாம்? சின்ன கீதா என்னதான் பண்ணுவாங்க.
    நீங்களும் சும்மா இருக்கமாட்டாம, அந்த வடை என்னவோ, எண்ணெயை பீர் மக்குல ஊத்திக் குடிக்கிறமாதிரி. திருஷ்டிபட்டுறப் போவுது.. பாவம் அந்த அரிசி வடை. அந்தக் வெள்ளைக்காரப் பாட்டி !

    பதிலளிநீக்கு
  65. @ கீதா: ..அது ரசத்தை உறிஞ்சிட, அது ஸாஃப்ட் என்பதைக் காட்ட பிய்த்து, அம்புட்டுத்தான் நல்ல காலம் …//

    வடகறியா வந்து நிக்காம, ஒங்கள விட்டுருச்சு..!

    பதிலளிநீக்கு
  66. அரிசி வடை கேள்விப்படாத ஒன்று. ஆனால் படங்களைப் பார்த்தபோது வாயில் ருசிக்க ஆரம்பித்துவிட்டது. சூடாகச் சாப்பிடணும். அல்லது ரஸவடையாகச் சாப்பிடணுமா? ஆமாம் இப்படி புதுசு புதுசாக எப்படித் தோன்றுகிறது? இதிலே ராஷ்மி பாட்டி அறிமுகம். ஸபாஷ் பாட்டி போல இருக்கு. ஆமாம் அரிசிப்பூரி தெரியுமா? எங்கள் ஊர் விசேஷம். எதிர்க்கேள்வி இல்லை இது.
    நிதானமா பின்னூட்டம் எழுதறேன். ஸபாஷ் அன்புடன்

    பதிலளிநீக்கு
  67. அட்டகாசமா வந்திருக்கு கீதா. கதையா ,ரெசிப்பியான்னு தெரியலை.
    அதுவும் ராஷ்மின்னதும் அசந்து போயிட்டேன்.
    புது சீரிஸ் ஆரம்பிச்சுட்டீங்க.

    அரிசி வடை நல்லா வந்திருக்கு.
    உளுந்தில்லாத வடை தேடிக் கொண்டிருக்கிறென்.
    கிடைத்துவிட்டது..

    மகனின் பயணம் சிறக்க வாழ்த்துகள்.
    அனைவருக்கும் மாலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  68. //அப்புசாமி, சீதா பாட்டி கதைகளை இனிமேல் யார் எழுதுவார்கள்? என்று விசனப்பட்டவர்களுக்கு ஒரு ஆறுதல், வந்து விட்டார்கள் பத்து சாரி paddy தாத்தாவும், ராஷ்மி பாட்டியும்.//

    நான் நினைத்தேன் அதை பானு சொல்லிவிட்டார்கள்.
    காலையில் உறவினர் வீடு போகும் அவசரத்தில் பின்னூட்டம் போட்டு விட்டு போனேன்.
    பாக்கியம் ராமசாமி மாதிரி எழுதி இருக்கிறார்கள். சீதாபாட்டி நினைவு வந்தது.
    அது மாதிரி எழுதலாம் கதைகள் நல்ல நகைச்சுவையாக எழுத வருகிறது கீதாவிற்கு தொடரலாம் இது போன்ற கதைகளை.

    பதிலளிநீக்கு
  69. //ஏகாந்தன் Aekaanthan ! said...
    @ அதிரா: ..எங்களை வருத்தம் குடிக்கட்டும் ஹா ஹா:))..

    நீங்கள்ல்லாம் சர்பத்தா என்ன வருத்தம் வந்து குடிக்க! ஒரு வருத்தமும் வராது. யாமிருக்க பயமேன் என்கிறார் திருச்செந்தூர் முருகன்!//

    ஹையோ ஏகாந்தன் அண்ணன்.. இந்தாங்கோ ரிமூட்ட்:)) நீங்க வேல்ட் கப் பாருங்கோ:))..

    சே..சே... பார்த்தால் வேல்ட் கப்..:). பாஞ்சால் எங்கள்புளொக்:) அதிலும் .. அதிரா தான் இன்று மாட்டி ஹா ஹா ஹா:)) மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்...

    வெயாரிஸ் த பாட்டீஈஈஈஈஈஈஈஈஈ ? நான் ராஷ்மிப் பாட்டியைக் கேட்டேன்ன்:).. பிக்கோஸ் நேக்கு அவவை ரொம்பப் பிடிச்சுப் போச்சு கீதா:))

    பதிலளிநீக்கு

  70. கதை சொல்லி சாப்பாடு ஊட்டுவாங்க ஆனால் இங்கே கம்பராமயணம் சொல்லி அல்லவா ரிசிப்பி போட்ட மாதிரி இருக்கே....

    பதிலளிநீக்கு
  71. ட்றுத்.. அது கம்பராமாயணம் இல்ல:) மகாபாரதம்:))

    பதிலளிநீக்கு
  72. இன்னிக்குத் திங்கற கிழமைங்கறது மறந்துட்டேன். இன்னும் ஞாயிற்றுக் கிழமை மாதிரியே இருக்கு! இப்போத் தான் ஏஞ்சல் சொன்னதைப் பார்த்துட்டு வரேன்.//

    இதுக்குத்தான் கீதாக்கா காலைல எழுந்தமா காபி ஆத்தினமா 6 மணிக்கு அடிச்சுப் புடிச்சு முந்திக்கொண்டு எபியில் நுழைந்தமானு இருக்கணும்!!!!! எபி குள்ள வந்துட்டா தெரிஞ்சுடுமே என்ன கியமைனு!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  73. கடைசியில் அந்த ராஷ்மிப் பாட்டி கீ.ரெ. தானா? நான் என்னமோ ஒய்.ஜி. மகேந்திராவோட அம்மாவோனு நினைச்சுட்டேன். :)))))//

    ஹா ஹா ஹா ஹா கீதாக்கா இந்த பானுக்கா கிளப்பி விட்டது ஹா ஹா அந்த வேளச்சேரி கழுகைத் தேடுகிறேன்...கீதாக்கா எனக்கு அப்போது ராஷ்மி என்று எழுதிய போது ஒய்ஜியின் அம்மா பற்றி தெரியாது அப்புறம் இப்போதெல்லாம் ராஷ்மி என்றால் அவர் தான் நினைவுக்கு வருவார்...என் கஸின் அமெரிக்காவுக்குப் படிக்கப் போயிருந்த நேரம். 29 வருடங்களுக்கு முந்தையது இது. அவன் பெயர் பத்மநாபன் ஆனால் அவனை அங்கு paddy என்றுதான் அழைப்பார்கள் என்று சொன்னான். அதையும் அப்படி என் குடும்ப நபர் ஒருவரின் பெயர் ராஜலக்ஷ்மி ராஷ்மியானது...அதையும் சும்மா வைத்து எழுதியது. கொஞ்சமெ கொஞ்சம். அதிலும் என் கையில் கிடைத்தது இத்தனைதான்...மீதி என்னாச்சு என்று தெரியவில்லை...எப்படியோ மிஸ் ஆகி விட்டது...கிடைத்த பேப்பர்களும் பொடிந்து போய்விட்டது...

    கீதா

    பதிலளிநீக்கு
  74. ஏஞ்சல் வடை அவ்வளவு ஒன்றும் எண்ணை குடிக்காது. மற்ற வடைகள் போலத்தான் புளிச்ச தயிர் கூட அதிகம் இல்லை அரிசி ஊற மட்டுமே. நல்லாருக்கும் செஞ்சு பாருங்க....மிக்க நன்றி ஏஞ்சல்

    கீதா

    பதிலளிநீக்கு
  75. கோமதிக்கா மிக்க நன்றி ஆமாம் அப்புசாமி சீதா பாட்டியின் இன்ஸ்பிரேஷந்தான்.....இதை நான் எழுதிய ஒரிஜினல் பதிவில் சொல்லியிருந்தேன். இங்கு திங்கவுக்கு அதை இணைக்கும் போது கொஞ்சம் எடிட் செய்து அதில் நம் எபி கிச்சன் க்ரூவையும் இணைத்து அதிரடியையும் ராஷ்மிக்கு தோதாகக் கொண்டு வந்ததால் அது விடுபட்டது...சொல்ல நினைத்து விடுபட்டது....

    கீதா

    பதிலளிநீக்கு
  76. உமையாள், ராஜி மிக்க நன்றி பா....நல்லாருக்கும் செஞ்சு பாருங்க....

    கீதா

    பதிலளிநீக்கு
  77. மதுரை மிக்க நன்றி....கருத்துக்கு ஏஞ்சல் பதில் சொல்லிட்டாங்க ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  78. வல்லிம்மா மிக்க நன்றி....ஹா ஹா ஹா ஹா கதையா ரெசிப்பியானு...சும்ம ஒரு முயற்சிதான்....தொடருமா??!!!!! ம்ம்ம்ம் பார்ப்போம்...அதற்கான மன நிலை வேண்டும்...

    மகன் கிளம்பியாச்சு இன்று. வீடு வெறிச் வல்லிம்மா...மிக்க நன்றி வாழ்த்திற்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  79. காமாட்சிம்மா மிக்க நன்றி அம்மா...

    அரிசிப் பூரி ஆமாம் உங்கள் ஊர் ஸ்பெஷல் மகாராஷ்டிரா ஸ்பெஷல்...(தற்போது மும்பைதானே காமாட்சிம்மா?) செய்திருக்கேன். நன்றாக இருக்கும்.

    அம்மா அரிசி வடை புதுசு எல்லை. என் கற்பனையும் இல்லை. அது என் மாமியார் வீட்டில் வாங்கல் ஸ்பெஷல் என்பார்கள். அவரிடம் கற்றது.

    மிக்க நன்றி காமாட்சிம்மா

    கீதா

    பதிலளிநீக்கு
  80. கீதா மகன் ஊர் போய் சேர்ந்திட்டாரா ..ஹக்ஸ் டு யூ டியர் ..டேக் கேர்

    இன்னிக்கு செஞ்சாச்சு அரிசி வடை :) போடறேன் பதிவில்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!