வெள்ளி, 1 ஜூன், 2018

வெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது


   நடிகை ராதிகா தயாரிப்பில், பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1985 இல் வெளிவந்த படம்.  PC ஸ்ரீராம் ஒளிப்பதிவு, இளையராஜா இசை, லெனின் எடிட்டிங் என்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.   PC க்கு இதன் பின்னர்தான் நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்தனவாம். 

   இந்தப் படத்தில் ஏற்பட்ட பழக்கத்தால் பிரதாப்பும், ராதிகாவும்  திருமணம் புரிந்து ஒரு வருட காலம் மட்டும்  கணவன்மனைவியாக வாழ்ந்து பின்னர் விவாகரத்து பெற்றனர்.  பிரதாப் முதன் முதலாக இயக்கிய படம்.  அதனாலேயே அவருக்கு ஒரு விருதும் கிடைத்ததாம்.   மனவளர்ச்சி இல்லாத இரண்டு வயது வந்த ஜோடிகளிடையே மலரும் காதல் பற்றிய திரைப்படம்.  படம் நான் அப்போது தியேட்டரில் சென்று பார்த்தேன்!  மனவளர்ச்சி இல்லாதவர்களையே நாயக-நாயகியாய் வைத்து எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்று நினைக்கிறேன்.    அந்தப் படத்தில் இந்தப் பாடல் விசேஷம்.  இளையராஜா இசையில் எஸ் பி பி - ஜானகி குரலில் ஒரு இனிய பாடல்.  என்னுடைய பல அதிகாலை நேர பயணங்களில் என் மனதில் இந்தப் பாடலின் முதல் வரி வந்து நிழலாடி விட்டுப் போகும்!   மனவளர்ச்சி இல்லாதவர்களுக்கான பாடல் என்பதால் எந்த விதமான சேஷ்டைக குரல்களும் இல்லாமல் ஒழுங்கான, இயல்பான, இனிமையான குரலில் பாடப்பட்டிருக்கும் பாடல்.  எழுதியவர் கங்கை அமரன் என்று நினைக்கிறேன்.  எளிமையான வரிகள்.


அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும் ஆலாபனை 
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே 

காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது 
காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது 
புது சங்கமம் சுகம் எங்கெங்கிலும்  
எங்கெங்கும் நீயும் நானும் சேர்வதே ஆனதே 

உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம் 
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற 
தோளோடுதான் தோள் சேரவே 
தூங்காமல் காணும் இன்பம் ராவெனும் நேரமே 
பி.கு :  காட்சியைக் காணாமலும் ஒருமுறை பாடலைக் கேட்டுப்பாருங்கள்!

138 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, எல்லோருக்கும்…

  கீதா
  .

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம் , கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

  பதிலளிநீக்கு
 4. அழகான பாடல் ஸ்ரீராம்....இந்தப் படத்தில் என்று நினைக்கிறேன் சாருகாஸன் ஒரு வசனம் சொல்லுவார் என்று சொல்லிச் சிரிக்க நானும் அந்தக் காட்சியை மட்டும் பார்த்திருக்கிறேன். பூமி உருண்டை லட்டு உருண்டை...என்று வரும் என்று நினைவு....

  கீதா

  பதிலளிநீக்கு
 5. திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டேதான் வந்தேன் துரை அண்ணா கீதாக்கா கண்ணில் தென்படுகிறார்களானு....அப்படியே கீதாக்கா காபி ஆத்திருந்தா குடிச்சுட்டு வரலாம்னு...துரை அண்ணாவை முதலில் காணலை...அப்புறம் தூரத்தில் வருவது தெரிந்ததும் .....ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 6. மன வளர்ச்சி குன்றியிருந்தாலும்
  அவர்களும் மனிதர்கள் தானே....

  85 ல் சிங்கப்பூரில் இருந்த போது பார்த்த திரைப்படம்...

  அப்போதே பல தாக்கங்களை ஏற்படுத்தியது...

  கோயில் யானைகளும்
  உழவுக் காளைகளும்

  எவ்வித சுகமும் காணாமல் மண்ணோடு மண்ணாகின்றன...

  பாவமில்லையா?...

  சிலர் வளர்ப்பு நாய்களுக்கும்
  வாழ்வை அறுத்து விடுகின்றார்கள்...

  வெண்மைப் புரட்சி வந்த பிறகு
  பசுக்களும் சுகமிழந்து போயின...

  எங்கே போயிற்று மனிதாபிமானம்?...
  நமக்கெல்லாம் மனிதன் என்ற பேர் எதற்கு?..

  பதிலளிநீக்கு
 7. // கோயில் யானைகளும்
  உழவுக் காளைகளும்

  எவ்வித சுகமும் காணாமல் மண்ணோடு மண்ணாகின்றன...

  பாவமில்லையா?...

  சிலர் வளர்ப்பு நாய்களுக்கும்
  வாழ்வை அறுத்து விடுகின்றார்கள்...

  வெண்மைப் புரட்சி வந்த பிறகு
  பசுக்களும் சுகமிழந்து போயின...

  எங்கே போயிற்று மனிதாபிமானம்?...
  நமக்கெல்லாம் மனிதன் என்ற பேர் எதற்கு?..//

  உண்மைதான். ஆனால் என்ன திடீரென துரை ஸார்? இந்தப் பாடலில் என்ன வித்து இந்த வரிகளுக்கு?

  பதிலளிநீக்கு
 8. காலை காஃபி என்ன ஆயிற்று என்று தெரிய வில்லையே...

  பதிலளிநீக்கு
 9. // பூமி உருண்டை லட்டு உருண்டை...//

  ஆம்... எனக்கும் லேஸா நினைவு இருக்கிறது கீதா... அதே போல ஜூஜூ தாத்தா என்று சொல்லும்போது சற்றே எரிச்சலுடன் ரசிக்க முடிந்தது!

  பதிலளிநீக்கு
 10. கீதா அக்கா வெள்ளிக்கிழமை என்பதால் பக்திக் கடமைகளை முடித்து வருவாரோ என்னவோ....

  பதிலளிநீக்கு
 11. சென்னையின் வெய்யில் பகல் நேரங்களில் மட்டுமல்ல இரவு எட்டு மணி வரை எந்த வேலைகளையும் செய்ய அனுமதிப்பதில்லை. குறிப்பாக கணினி பக்கம் வரவே தோன்றவில்லை, கடந்த இரண்டு நாட்களாய்... 105 டிகிரி! இன்னும் இரண்டு நாட்களுக்கு அப்படித்தான் இருக்குமாம்...

  பதிலளிநீக்கு
 12. /// இந்தப் பாடலின் என்ன வித்து?...///

  பாடலுக்காக சொல்லவில்லை..
  திரைப்படத்தின் கதையமைப்பிற்காகச் சொன்னேன்...

  ஒரு மரத்தையோ அல்லது வயல் வெளியையோ -

  மழைக்கு முன்னும் பின்னும் பார்த்திருக்கின்றீர்களா - ஸ்ரீராம்!...

  பதிலளிநீக்கு
 13. // மழைக்கு முன்னும் பின்னும் பார்த்திருக்கின்றீர்களா - ஸ்ரீராம்!... //

  பார்க்காமல் இருந்திருக்க முடியுமா!

  :))

  பதிலளிநீக்கு
 14. காலங்கார்த்தாலே வீடு சுத்தம் செய்து குளிக்காமல் பக்திக்கடமைகளை எங்கே செய்யறது? அதெல்லாம் இல்லை! நாலு மணிக்கு எழுந்துட்டுப் படுத்தேன். திரும்ப எழுந்துக்க ஐந்தே கால் ஆயிடுச்சு! அதுக்கப்புறமாக் காfஇ ஆத்திக் கஞ்சிக்கடமை முடிச்சுட்டு வந்தேன். லேட்டு தான் ஆயிடுச்சே, மெள்ளப் போவோம்னு சில, பல மடல்களைப் படிச்சுட்டு இப்போ வரேன். இந்தப் படம் நான் பார்த்திருக்கேன். பாட்டெல்லாம் நினைவில் இல்லை.

  பதிலளிநீக்கு
 15. இங்கேயும் இரண்டு நாட்களாக வெயில் தான்! ஆனாலும் சென்னை மாதிரி இல்லை! அடுத்த இரண்டு நாட்களுக்கு இருக்க மாட்டேன். ஆகவே போட்டி இருக்காது! :))))))

  பதிலளிநீக்கு
 16. காலை இனிதாகவும் அனைவருக்கும் இன்றைய தினம் நன்றாக இருக்கவும் வாழ்த்துகள்.
  வெகு இனிமையாக இருந்தது.

  காளைகளும்,மற்ற மிருகங்களும் மரத்துப் போகவைப்பது
  எத்தனை கொடுமையோ,
  அத்தனை கொடுமையும் மன வளர்ச்சி இல்லாதவர்களுக்கும்,
  செய்யப் படவேண்டி வருகிறது.
  அந்தப் பெற்றோரின் வருத்தத்தையும் பார்த்திருக்கிறேன்.
  இந்தப் படத்தின் கரு நல்லதே.
  எனக்கு அழகுணர்ச்சி கண்ணில் படவில்லை.
  பாடல் வெகு இனிமை.

  பதிலளிநீக்கு
 17. வாங்க கீதா அக்கா.. எண்ணங்கள் பதிவு மாடரேஷன் செய்யப்பட யாழ்ப்பாவாணன் கடிதம் வெளியானதுமே நீங்கள் வந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன்!

  // அடுத்த இரண்டு நாட்களுக்கு இருக்க மாட்டேன். ஆகவே போட்டி இருக்காது!//

  இப்ப மட்டும் என்ன போட்டியாம்?!!

  :))

  பதிலளிநீக்கு
 18. //காலை காஃபி என்ன ஆயிற்று என்று தெரிய வில்லையே...// ஹிஹிஹிஹி, துரை சார், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோமுல்ல! காஃபி ஆத்திட்டோம்! :)

  பதிலளிநீக்கு
 19. காலை வணக்கம் வல்லிம்மா... சரியாய்ச் சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
 20. //இப்ப மட்டும் என்ன போட்டியாம்?!!

  :))// அப்போ இல்லையா? :)))))))

  பதிலளிநீக்கு
 21. எல்லாம் சரி படத்தின் பெயர் "மீண்டும் ஒரு காதல் கதை"தானே..?

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரத்குமாரின் சகலையை கண்டதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 22. கீதா அக்கா...

  // / அப்போ இல்லையா? :)//

  ஹிஹிஹி... அதை அதிராதான் சொல்லோணும்!

  பதிலளிநீக்கு
 23. வாங்க கில்லர்ஜி...

  // சரத்குமாரின் சகலை //

  உங்கள் குறும்பு உங்களை விட்டுப் போகாது!

  பதிலளிநீக்கு
 24. @ துரை செல்வராஜு:

  ..ஒரு மரத்தையோ அல்லது வயல் வெளியையோ -
  மழைக்கு முன்னும் பின்னும் பார்த்திருக்கின்றீர்களா...//

  என்ன! கவிதை மனதோடு எழுந்து உட்கார்ந்து காப்பி சாப்பிட்டதாகத் தெரிகிறதே..


  பதிலளிநீக்கு
 25. கீதாக்கா இப்போ எல்லாம் போட்டி அவ்வளவு இல்லை....மிஞ்சி மிஞ்சிப் போனா துரை அண்ணா நீங்க, நான் மூவர் மட்டுமே...

  வெயில் பாடாய்ப் படுத்துகிறது. கிச்சன் பக்கம் செல்லவோ, சமைக்கவோ, சாப்பிடவோ கஷ்டமாக இருக்கு...இத்தனைக்கும் எங்கள் வீட்டுக் கிச்சன் நல்ல வெளிச்சம், காற்றுடையது பால்கனியுடன் கூடிய கிச்சன்

  கீதா

  பதிலளிநீக்கு
 26. // என்ன! கவிதை மனதோடு எழுந்து உட்கார்ந்து காப்பி சாப்பிட்டதாகத் தெரிகிறதே..//

  ஏகாந்தன் ஸார்... கவிதை துரை ஸாரின் குருதியில் கலந்தது... அது சரி... கவிதையில் நனைந்து பாடலைக் கேட்காமல் கிளம்பி விட்டீர்களா?!!!

  பதிலளிநீக்கு
 27. // வெயில் பாடாய்ப் படுத்துகிறது.//

  ஆமாம் ஆமாம் ஆமாம் ஆமாம் ஆமாம் கீதா... இதோ உற்சாகமாய் சூரியன் கிளம்புகிறான் சென்னைவாசிகளை இன்று எப்படி வறுக்கலாம் என்று!

  பதிலளிநீக்கு
 28. இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேனே தவிர பார்த்ததில்லை. பாடலும் கேட்டதில்லை. கேட்டபிறகு எழுதறேன்.

  பதிலளிநீக்கு
 29. கீதா ரங்கன் - /கீதாக்கா இப்போ எல்லாம் போட்டி அவ்வளவு இல்லை....மிஞ்சி மிஞ்சிப் போனா துரை அண்ணா நீங்க, நான் மூவர் மட்டுமே...// - நான் போட்டிக்கு வர சான்சே இல்லை, ஸ்ரீராம் வெளியிடும் நேரத்தை 5 மணி என்று மாற்றினாலொழிய

  பதிலளிநீக்கு
 30. //ஒரு மரத்தையோ அல்லது வயல் வெளியையோ -
  மழைக்கு முன்னும் பின்னும் பார்த்திருக்கின்றீர்களா...//

  துரை அண்ணா ஆஹா என் ஊரை நினைவுபடுத்திட்டீங்களே!!! வரப்புகளில் வாய்க்கால் ஓரத்தில் நடந்த நினைவுகள் எல்லாம் வந்துருச்சே.....எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பேன்....

  கீதா

  பதிலளிநீக்கு
 31. ஆமாம் ஆமாம் ஆமாம் ஆமாம் ஆமாம் கீதா... இதோ உற்சாகமாய் சூரியன் கிளம்புகிறான் சென்னைவாசிகளை இன்று எப்படி வறுக்கலாம் என்று!//

  அவனுக்கென்ன!! நல்லாவே வறுத்துவிட்டுப் போகிறான். கேட்கிறான்...நானா வறுக்கிறேன். நீங்கள்தான் வறுபடுகிறீர்கள். யார் காரணம் என்று கொஞ்சம் சிந்தித்துவிட்டு சொல்லுங்கள்னு நம்மைப் பார்த்துக் கோபப்படுகிறான். ஹையோ ஸ்ரீராம் அவனைக் கொஞ்சம் கூல் பண்ணிவிடுவோம்...ஐஸ் வைப்போம்!!! ஹா ஹா ஹா ஹா...

  இப்படி சொல்லும் அவனது பாச்சா கேரளத்தில் பலிக்கவில்லை. மழையாம் அங்கு. அதனால் இங்கு டேராவாம்...இது எப்படி இருக்கு..

  கீதா

  பதிலளிநீக்கு
 32. நான் போட்டிக்கு வர சான்சே இல்லை, ஸ்ரீராம் வெளியிடும் நேரத்தை 5 மணி என்று மாற்றினாலொழிய// ஹா ஹா ஹா நெல்லை அது புதனன்று!!!

  ஸ்ரீராம் 5 மணிக்குப் போட்டாலும் மீ போட்டிக்கு வந்துடுவேனாக்கும்...அடுத்த புதன் வாங்க!!! நீங்களும் போட்டிக்கு...நாம ஒரு கை பாத்துரலாம்!! ஹா ஹா ஹா ஹா ஹா (கொ அண்ணா இதை எல்லாம் பார்த்துட்டு 7 மணிக்கோ லேட்டாவோ போடாம இருக்கணும்!!!!)

  கீதா

  பதிலளிநீக்கு
 33. காலை வணக்கம் 🙏. காணொளி மாலை பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 34. // சரத்குமாரின் சகலை //

  ஹா ஹா ஹா ஹா கில்லர்ஜி!!!

  அது சரி மாஜிகணவர் சகலையா ஒரே குயப்பமா கீது....ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 35. வாங்க நெல்லைத்தமிழன்... நான் இந்தப் படத்தை தூர தரிசனத்தில் மாநில மொழித் திரைப்படமாகப் பார்த்த நினைவு! பாட்டைக் கேட்டுச் சொல்லுங்க...

  பதிலளிநீக்கு
 36. நெல்லை....

  // நான் போட்டிக்கு வர சான்சே இல்லை, ஸ்ரீராம் வெளியிடும் நேரத்தை 5 மணி என்று மாற்றினாலொழிய //

  எங்கே... அது கௌ அங்கிள் நேரம்! அந்த நேரம் வெளியிட்டால் எனக்கு பதிவை அங்கு, இங்கு இணைப்பது சிரமம்... மற்ற தளங்கள் செல்வது சிரமம்...

  பதிலளிநீக்கு
 37. கீதா...

  // வரப்புகளில் வாய்க்கால் ஓரத்தில் நடந்த நினைவுகள் எல்லாம் வந்துருச்சே...//

  அப்போ கூட முள்ளு குத்திச்சே...!!!

  பதிலளிநீக்கு
 38. கீதா...

  // அது சரி மாஜிகணவர் சகலையா ஒரே குயப்பமா கீது....//

  மாஜிக்கானவர் சகலை இல்லையோ... கில்லர்ஜி... கில்லர்ஜி... கில்லர்ஜி....

  பதிலளிநீக்கு
 39. கீதா...

  கேரளா மழை இங்கு குளிர்ச்சியைத் தரவில்லையே கீதா... அரபிப்புயல் ஈரப்பதங்களை எல்லாம் உறிஞ்சிக்கொண்டு நம்மைப் படுத்துகிறதே...

  பதிலளிநீக்கு
 40. //..கவிதையில் நனைந்து பாடலைக் கேட்காமல் கிளம்பி விட்டீர்களா?!//

  கேட்டேன். ஒருவேளை கதைப்பின்னணி அறிந்திராமல், வீடியோ பார்க்காமல் கேட்டிருந்தால் ரசித்திருக்கமுடியுமோ?

  ப்ரதாப் போத்தன். எங்கே போனார் இந்த ஆள்? ராதிகாவுடன் ஒரு வருஷம் என்பது ஆளையே அட்ரெஸ் தெரியாமல் ஆக்கிவிட்டதா! மலையாளத்திலாவது நிறையப் படங்களில் நடித்தாரா, இல்லையா? தி கீதா-வுக்கே(தி இந்து மாதிரி) வெளிச்சம்!

  பதிலளிநீக்கு
 41. எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்...

  கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..ன்ற வரில வரும் ஏற்றம் இறக்கம் ரொம்ப பிடிக்கும்.

  இதை என் ட்ராஃப்ட்ல வச்சிருந்தேன். நீங்க பதிவு போட்டுட்டீங்க.

  பதிலளிநீக்கு
 42. மீண்டும் ஒரு காதல் கதை படத்தில்
  இளையராஜா இசையமைப்பில் எஸ்.பி.பி யும் எஸ்.ஜானகியும் பாடிய இனிமையான பாடலை வெகுநாட்கள் களித்து நினைவுபடுத்தி கேட்க வைத்தமைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 43. பாடல் இனிமை, கேட்டு ரசித்தேன்.
  படம் பார்க்கவில்லை.
  பாட்டை மட்டும் தான் கேட்டேன் இப்போதும்.
  மனவளர்ச்சி இல்லாமல் இரண்டு பேரும் வந்ததால் பார்க்கவில்லை மனம் வேதனை படும்.

  பதிலளிநீக்கு
 44. ஸ்ரீராம் கீதாக்கா எல்லோரும் ஹை ஹை ஜாலி ஹைத்தலக்கா ஜாலி ஜாலியோ ஜாலி.னு கும்மி அடிங்க!

  எனக்கும் கமென்ட்ஸ் எதுவும் பாக்ஸுக்குள் வரலை. நான் கொடுக்கும் பதிலும் இல்லை நீங்கள் போடற கமென்ட்ஸும் இல்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
 45. கேரளா மழை இங்கு குளிர்ச்சியைத் தரவில்லையே கீதா... அரபிப்புயல் ஈரப்பதங்களை எல்லாம் உறிஞ்சிக்கொண்டு நம்மைப் படுத்துகிறதே...//

  ஈரப்பதத்தை அரபிக்கடல் உறிஞ்சுதா இல்லை ஈரப்பதமே சென்னையைக் காப்பாற்றத் தன்னையே தியாகம் செய்து பரிசோதனையில் இருக்கிறதோ தெரியலை...

  கீதா

  பதிலளிநீக்கு
 46. ஏகாந்தன் அண்ணா //திகீதாவுக்கே வெளிச்சம்//

  ஹா ஹா ஹா ஹா...அண்ணே இப்ப நான் ரெண்டாங்கெட்டான்!!! ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 47. அப்போ கூட முள்ளு குத்திச்சே...!!!//

  ஹா ஹா ஹா ஹா.....

  ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் அதெல்லாம் ரகசியம். ஸ்ரீராம்...மெதுவா சொல்லுங்க. அந்த முள்ளு குத்தினதுல ஒரு கதையே இருக்கு....ஹா ஹா ஹா ஹா ...(ஹப்பா எல்லாருக்கும் இப்ப மூளைக்குள்ள பல கதைகள் முளைக்கும். கல்கிப்போட்டிக்கு எழுதிப் போடுங்கப்பா...)

  கீதா

  பதிலளிநீக்கு
 48. பிரதாப் போத்தன் அப்புறம் வெற்றி விழா போன்ற படங்கள் டைரக்ட் சித்தார். சிவாஜியின் ஜல்லிக்கட்டு போன்ற படங்களிலும் நடித்தார் ஏகாந்தன் ஸார்...

  பதிலளிநீக்கு
 49. கீதா... கல்கி கதைப்போட்டிக்கு பல கதைகள் யோசிச்சு வைச்சிருக்கேன். அதுல மூன்றை செலெக்ட் செய்யணும். இரண்டாவது எழுதணும்... ஒன்றாவது அனுப்பணும்!

  பதிலளிநீக்கு
 50. கீதா... கல்கி கதைப்போட்டிக்கு பல கதைகள் யோசிச்சு வைச்சிருக்கேன். அதுல மூன்றை செலெக்ட் செய்யணும். இரண்டாவது எழுதணும்... ஒன்றாவது அனுப்பணும்!//

  ஹைஃபைவ் ஹைஃபைவ்!!! ஸ்ரீராம் மீ டூ ஒன்றாவது அனுப்பணும்...அதுதான் இப்ப எழுதறதுதான் முடியலை ஸ்ரீராம்..

  கீதா

  பதிலளிநீக்கு
 51. //இந்தப் படத்தில் ஏற்பட்ட பழக்கத்தால் பிரதாப்பும், ராதிகாவும் திருமணம் புரிந்து ஒரு வருட காலம் மட்டும் கணவன்மனைவியாக வாழ்ந்து பின்னர் விவாகரத்து பெற்றனர்.// எல்லாத்திலயும் அவசரப்பட்டு விட்டினமோ?:)..

  ஏகாந்தன் அண்ணன்.. நீங்கதான் நாடுகடத்தினாலும் வீடு கடத்தினாலும் ஜொள்ள வந்ததைக் கரெக்ட்டாச் சொல்லிடுவீங்க:)).. இதுக்கும் கொஞ்சம் என்னான்னு ஜொள்ளிடுங்கோ:)) மீ எதுவும் ஜொள்ளமாட்டென் ஜாமீ மீ ரொம்ப நல்ல பொண்ணு யூ நோ?:)..

  பதிலளிநீக்கு
 52. படமும் பார்த்ததில்லை.. கேள்விப்பட்டதில்லை.. பாடலும் என் காதுக்கு டிமிக்கி காட்டியிருக்கே:)) கேட்டதாகவே இல்லையே....

  //பி.கு : காட்சியைக் காணாமலும் ஒருமுறை பாடலைக் கேட்டுப்பாருங்கள்!//

  அப்போ இதை எங்களை ரெண்டு தடவை கேட்கச் சொல்லி இண்டிரெக்ட்டாச் சொல்லுறீங்க ?:)).. முதல்ல என் செக் ரெண்டு தடவை கேட்பாவுக்கும் பின்பு தான் மீ கேட்பேன்ன்:))

  பதிலளிநீக்கு
 53. அதாரது கீசாக்கா நித்திரையால எழும்ப முன் ரிபன் கட் பண்ணி கடை திறந்தது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வெயிட் பண்ணி இருக்க வாணாமோ?:))... பூட்டிப்போட்டு திரும்பத் திறங்கோ:)).. சே..சே... எழுநூத்தம்பது ரூபா செலவளிச்சது வேஸ்ட்டாப் போச்சே:))...

  பதிலளிநீக்கு
 54. நெல்லைத்தமிழனைத் திரும்பக் கூட்டி வந்து பாறைனில் விடவும்:)) ஊருக்குப் போனால் அவரால அதிகம் பேச ரைம் கிடைக்குதில்லை:))

  பதிலளிநீக்கு
 55. கீதா...

  // ஒன்றாவது அனுப்பணும்...//

  ஆனா அதையும் செய்வேனா, தெரியாது!!!!!

  பதிலளிநீக்கு
 56. வாங்க அதிரா...

  ராதிகா அதற்கு முன்னாலேயே விஜயகாந்தை காதலித்ததாய் ஒரு வதந்தி உண்டு. சுதாகரையும்! அப்போ பொழுது போகணுமே... இதை எல்லாம் படிச்சா பொழுது போகும்!

  // பாடலும் என் காதுக்கு டிமிக்கி காட்டியிருக்கே:))//

  பாடல் கேட்டதில்லையா? அட... நல்ல பாட்டு..

  பதிலளிநீக்கு
 57. அதிரா...

  // அதாரது கீசாக்கா நித்திரையால எழும்ப முன்//

  // சே..சே... எழுநூத்தம்பது ரூபா செலவளிச்சது வேஸ்ட்டாப் போச்சே:))... //

  ஹா... ஹா.. ஹா... அதுதான் பொறுப்பை உங்க கிட்ட விட்டுட்டேன்!

  பதிலளிநீக்கு
 58. // ஊருக்குப் போனால் அவரால அதிகம் பேச ரைம் கிடைக்குதில்லை:)) //

  நெல்லை ஆன்மிகம் பற்றி அதிகம் பேசுவார். சினிமா பற்றி கம்மியாகத்தான் பேசுவார்!

  பதிலளிநீக்கு
 59. @ அதிரா:..இதுக்கும் கொஞ்சம் என்னான்னு ஜொள்ளிடுங்கோ:))//

  மேலே சினிமா ஸ்பெஷலிஸ்ட் சொல்லியிருக்கறதை அவசர அவசரமாப் படிக்காம, நின்னு நிதானமா படிக்கணும். ராதிகா சரிதம் ஓடிட்டிருக்கு...அதப்படிச்சிட்டு ஆரு இந்த சுதாகரு-ன்னு கேக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்.

  ஆன்மீகத்துக்கு நெத-ன்னும் சொல்லியிருக்காரு.. ஆனா ஒங்களுக்குத்தான் ஆன்மீகத்துல ஜந்தேகமே வராதே!

  பதிலளிநீக்கு
 60. இந்தப் படம் பார்த்திருக்கிறேன். அப்போது நாகர்கோவிலில்தான் இருந்தேன். நல்ல பாடல். அதன் பின் இந்தப் பாடல் அதிகம் கேட்டதில்லை. கேரளம் பக்கம் சென்றுவிட்டதால். 70 களில் பாடல்கள் என்றால் நிறைய கேட்டதுண்டு அப்போது இலங்கை வானொலியும் இருந்ததால்.

  இந்தப் படமே இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. இங்கு பார்த்த பிறகு. பாடலைக் கேட்ட பிறகு.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 61. ஆனா அதையும் செய்வேனா, தெரியாது!!!!!//

  ஹா ஹா ஹா ஸ்ரீராம் நானும் அப்படியே கல்கிக்குப் போகுதோ இல்லையோ கண்டிப்பா கே வா போ க க்கு வந்துரும்

  ஹா ஹா ஹா ஹா ஹா....எனக்கும் இது அப்படியே பொருந்தும் ஸ்ரீராம். ஒன்னும் மண்டைல வெளிச்சம் போட மாட்டேங்குது...

  எனது தனிப்பட்டக் கருத்து இது....கல்கிக்கு அனுப்பி அது செலக்ட் ஆகி ஒரு வேளை வின் பண்ணினா அல்லது பரிசு இல்லைனாலும் பிரசுரம் ஆனால் மகிழ்ச்சிதான்... அது ஒரு ரீச் தான் இல்லைனு சொல்ல முடியாதுதான். ஆனால் இங்கு வந்து அதை இத்தனை நண்பர்கள் வாசித்துக் கருத்து உடனடியாகத் தெரிந்து எல்லாவிதக் கருத்துகளும் தெரிகிறதே...எத்தனைப் பேர் பாருங்கள்....சந்தோஷமாகவும் அதே சமயம் எழுத்தைத் திருத்திக் கொள்ளவும் ஊக்கப்படுத்துவதாகவும் தெரிகிறது. நிறைய ஊக்கங்கள் அதுவும் அன்புடனான ஊக்கங்கள். திருப்தியாக இருக்கு ஸ்ரீராம்...

  முயற்சி செய்கிறேன்....ஆனால் எழுத முடியவில்லை ஃப்ளோ இல்லை ஸ்ரீராம்....

  கீதா

  பதிலளிநீக்கு
 62. அதப்படிச்சிட்டு ஆரு இந்த சுதாகரு-ன்னு கேக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்.//

  ஏகாந்தன் அண்ணா கண்டிப்பா அதிரா கேக்க மாட்டாங்க...நீங்க வேற அவங்க வயசு தெரியாம பேசுறீங்க!!! ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 63. // ஊருக்குப் போனால் அவரால அதிகம் பேச ரைம் கிடைக்குதில்லை:)) //

  நெல்லை ஆன்மிகம் பற்றி அதிகம் பேசுவார். சினிமா பற்றி கம்மியாகத்தான் பேசுவார்!//

  ஹா ஹா ஹா ஹா...நெல்லை சினிமா பத்தி கம்மியாவா...

  ஹான் கரீக்டுதான் முன்ன்னனாஆஆஆஆஆஆஆஅடி அவர் நிறைய குமுதம் கிசுகிசு எல்லாம் இங்கு சொல்லிருக்காரே...ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 64. ஸ்ரீராம் எழுதுங்க!! அனுப்புங்க! நீங்க அழகா எழுதுவீங்க!!! வெற்றி பெறுவீர் !!

  அவ்வளவுதான் இங்க மேடை போட்டு விழா எடுத்துற மாட்டோம்!!! ஜல் ஜல்லின் சதிராட்டம், ஆஷா போன்ஸ்லே பாட்டு, தேம்ஸ் ஞானியின் சத்சங்கம், புலியூர் பூஸானந்தாவின் தத்துவ மழை கதா பிரசங்கம் இடையிடையே தஞ்சையம்பதியின் பக்திப் பாடல்கள், எபிகிச்சன் விருந்து என்று கொண்டாடிட மாட்டோம்!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 65. மீண்டும் ஒரு காதல் கதை...யில் பாடல் இப்போதும் கேட்டு மகிழ்ந்தேன். நிறை நாட்கள் ஆகிவிட்டது கேட்டு. நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 66. வணக்கம் சகோதரரே

  நல்ல பாடல். நன்றாக இருந்தது.படம் நானும் தொலைக் காட்சியில் பார்த்திருக்கிறேன். மிகவும் பாவமாக இருக்கும். பாடல் அவ்வளவாக நினைவில்லை. இப்போது தங்கள் பதிவில் கேட்டதும் நினைவுக்கு வருகிறது.
  மீண்டும் கேட்க வைத்தமைக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 67. அதிரா.... கில்லர்ஜியை கேள்வி கேட்க விட்டுட்டீங்களே.

  உறவு முறை சொல்வதில் கில்லாடியான கில்லர்ஜி, இன்று ஒரு தவறு செய்துவிட்டார். மனைவியின் முன்னாள் கணவன், சகலை என்று சொல்லிவிட்டார். (ஒருவேளை உங்களுக்கே கொயப்பமோ?)

  பதிலளிநீக்கு
 68. ஆஹா இனிமையான spb குரல் .காட்சியும் பார்க்கலாம் sk ,jiv ,js krv இன்னபிற அ .கோ சே விட இது எவ்ளோ டைம்ஸ் பெட்டர் .பரவாயில்லை .

  பதிலளிநீக்கு
 69. இந்த படத்தை டிவில போட்டாங்கன்னு நினைக்கிறேன் .ஸ்கூல் படிக்கும்போது அரைகுறையா பார்த்த நினைவு

  பதிலளிநீக்கு
 70. //ஸ்ரீராம். said...
  வாங்க அதிரா...

  ராதிகா அதற்கு முன்னாலேயே விஜயகாந்தை காதலித்ததாய் ஒரு வதந்தி உண்டு. சுதாகரையும்! அப்போ பொழுது போகணுமே... இதை எல்லாம் படிச்சா பொழுது போகும்!//

  ஓ இதென்ன இது புதுக்கதையைக் கொண்டு வந்து செருகிறீங்க:)).. இப்போதான் அறிகிறேன் ..

  பதிலளிநீக்கு
 71. @மியாவ் நான் 3 டைம்ஸ் கேட்டாச்சு ஸோ நீங்களும் தாராளமா கேக்கலாம்

  பதிலளிநீக்கு
 72. @ நெல்லைத்தமிழன் அவங்க தமிழ் டீச்சர் இந்த உறவுமுறை வார்த்தைகள் சொல்லிகுடுத்த அன்னிக்கு இவங்க ஸ்கூலுக்கு கட் அடிச்சிட்டு மரத்தில் மீனாட்சி பழம் சாப்பிட்டுட்டு இருந்தாங்களாம் .
  மீனாட்ஷி பழம்னா என்னனு எனக்கு தெரில ஆனா பூஸார் விளக்கம் தருவார்

  பதிலளிநீக்கு
 73. ஏகாந்தன் அண்ணன்...
  // ராதிகா சரிதம் ஓடிட்டிருக்கு...அதப்படிச்சிட்டு ஆரு இந்த சுதாகரு-ன்னு கேக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்.///

  ஆங்ங்ங்ன் சுதாகரை நேக்குத் தெரியுமே.. ராதிகாவோடு சேர்ந்து ஒரு படம் கோயிலில் பாடிக்கொண்டிருப்பார்.. கண் தெரியாது அவருக்கு .. பின்னர் பாடுவார்ர். .. கண்ணில்லாதபோது கூட இருந்தாய் காட்சி வந்த போது எங்கே போய் விட்டாய் என ஒரு பாட்டு அவர்தானே? அதில் வரும் பாட்டுக்களும் யூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

  ///ஆன்மீகத்துக்கு நெத-ன்னும் சொல்லியிருக்காரு.. ///

  இதை பார்த்திட்டும் நெ.த எப்பூடிக் காக்கா போனார்ர்:)... சந்தடி சாக்கில நெல்லைத்தமிழனுக்கு வயசாகிட்டுது அதனால ஆன்மீகத்தில நாட்டம் அதிகம் என... இண்டைக்கு முழுக்க்க்க்க்க ஸ்ரீராம் இண்டிரெக்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாகவே பேசுறார்:)).. என்னைத்தவிர இது ஆர் கண்ணிலும் படுதில்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்:))..

  ஆனாலும் ஏகாந்தன் அண்ணன்.. உருக்குப் போனாலே எல்லோரும் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவிங்களாக:)) ரெம்ம்ம்ம்ப அமைதியாகிடுறாங்க.. இன்குளூடிங் துரை அண்ணன்.. ஹா ஹா ஹா..

  ///ஆனா ஒங்களுக்குத்தான் ஆன்மீகத்துல ஜந்தேகமே வராதே!//

  எனக்கெப்பூடி வரும்... இதில உங்களுக்கு ஜந்தேகம் வரலாமோ?:)) மீ தான் எப்பவோ ஞானியாகிட்டனே:))

  பதிலளிநீக்கு
 74. ///Angel said...
  ஹையோ பூனை இங்கியா///

  ஆஆஆஆஆஆஆ அதென்ன என் வால்ல எலி கடிக்கிறதுபோலவே ஒரு ஃபீலிங்கா வருதேஏஏ:))

  பதிலளிநீக்கு
 75. ///மீனாட்ஷி பழம்னா என்னனு எனக்கு தெரில ஆனா பூஸார் விளக்கம் தருவார்//

  ஹலோ மிஸ்டர் அஞ்சு...:)) அது 1ம் வகுப்பிலிருந்து 5 ம்வகுப்புவரை சாப்பிட்ட மீனாட்சிப் பயம்:)) அதன் பின்பு என்றுமே சாப்பிட்டதில்லை... அது கிட்டத்தட்ட பேரீட்சம்பழம்போலவேதான் சைஸ்ல.. உள்ளே விதை வடிவம் எல்லாமே ஆனா மரம் பெரிய ஆலமரம்போல இருக்கும்..... பழ்ழம் சாப்பிட்டால் நாவற்பழம்போல வாய் பேப்பிளாகிடும்.. அதனால பிஸ்கட் மிச்சம் பிடிசுக் கொண்டு வந்து, மீனாட்சிப் பழம் சாப்பிட்டுப் போட்டு பிஸ்கட் சாப்பிட்டு கலரைப் போகப்பண்ணிய பின் வீட்டுக்குப் போவோம்:)).. கூட்டிப் போக சேவண்ட் போய் வருவார் ஆனா அவர் காட்டிக்கொடுக்க மாட்டார் வீட்டில்:))

  பதிலளிநீக்கு
 76. //நெ.த. said...
  அதிரா.... கில்லர்ஜியை கேள்வி கேட்க விட்டுட்டீங்களே.

  உறவு முறை சொல்வதில் கில்லாடியான கில்லர்ஜி, இன்று ஒரு தவறு செய்துவிட்டார். மனைவியின் முன்னாள் கணவன், சகலை என்று சொல்லிவிட்டார். (ஒருவேளை உங்களுக்கே கொயப்பமோ?)//

  அது நெ.தமிழன்.. அஞ்சுட ஜித்தப்பா எப்போ அரசியலில் ஜம்ப் ஆகிறேன் எனச் சொன்னாரோ.. அன்றிலிருந்து கில்லர்ஜி டென்ஷனாவே இருக்கிறார் ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா:))..

  பதிலளிநீக்கு
 77. //ராதிகாவோடு சேர்ந்து ஒரு படம் கோயிலில் பாடிக்கொண்டிருப்பார்.. கண் தெரியாது அவருக்கு .. பின்னர் பாடுவார்ர். .. கண்ணில்லாதபோது கூட இருந்தாய் காட்சி வந்த போது எங்கே போய் விட்டாய் என ஒரு பாட்டு அவர்தானே? அதில் வரும் பாட்டுக்களும் யூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...//

  ஹானஹு ஹீ ஹாஹ்கா

  அது ராதா நடிச்ச படம், ..பரத நாட்டிய மூவி என்கிறதால் என்ன மை மம்மி கூட்டிட்டு போனாங்க படம் பார்க்க

  பதிலளிநீக்கு
 78. @ கீதா
  ///கல்கிக்கு அனுப்பி அது செலக்ட் ஆகி ஒரு வேளை வின் பண்ணினா அல்லது பரிசு இல்லைனாலும் பிரசுரம் ஆனால் மகிழ்ச்சிதான்..////

  கீதா எனக்கு கல்கி ஆட்கள் அக் கதை எழுதுவோருக்குப் போட்டிருக்கும் ரூல்ஸ் பார்த்ததும் ஒரு மாதிரி ஆகி விட்டது.. இப்படி ஓவர் ரூல்ஸ் போட்டால் நேக்குப் பிடிக்காது.. கதை எழுதி அனுப்புங்கோ என ஒரு அன்பா ஆசையாக் கேட்டால்.. கேட்டதுக்காகவே எழுதி அனுப்புவோம் என எண்ணம் வரும்... இப்படி பெரிய லெவலாக அழைப்பு விட்டிருப்பதைப் பார்க்க சத்தியமா நான் பங்கு பற்றவே மாட்டேன்ன் நேக்குப் பிடிக்கல்ல:))

  பதிலளிநீக்கு
 79. //அது ராதா நடிச்ச படம், ..பரத நாட்டிய மூவி என்கிறதால் என்ன மை மம்மி கூட்டிட்டு போனாங்க படம் பார்க்க//

  இதென்ன புயு வம்பு:)) சரி சரி ஹீரீயினுக்கு கழிச்சிட்டு.. ஹீரோ சரிதானே??:)) பரிசு உண்டெல்லே?:)

  பதிலளிநீக்கு
 80. சங்கீத ஜாதிமுல்லை பாட்டு spb குரலில் வரும் ஹீரோ பேர் தெரில

  பதிலளிநீக்கு
 81. //அது நெ.தமிழன்.. அஞ்சுட ஜித்தப்பா எப்போ அரசியலில் //

  ஹலோவ் மியாவ் எதுக்கு சும்மா சித்தப்பாவை வம்பிழுக்கறீங்க ..அவரே ரொம்ப மனக்கஷ்டத்தில் இருக்கார் :)

  பதிலளிநீக்கு
 82. அதிராவ் ஸ்ரீராம் இங்கேதான் இருக்கார் :) அங்கே பாருங்க coffee வாசனை வருது . குடிச்சிகிட்டே நம் கமெண்ட்ஸை வாசிக்கிறார்

  பதிலளிநீக்கு
 83. சுதாகரைக் கடத்திட்டு வந்திட்டேன்ன்ன்.. ராதிகா அன்ரியைக் கூட்டி வாங்கோ எங்கள் புளொக்கிலே ஸ்ரீராம் தலைமையில் ஒன்று சேர்த்து வச்ச்சிடுவோம்ம்.. காதலுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா

  https://i.ytimg.com/vi/yq9Q2wqyTqg/maxresdefault.jpg

  பதிலளிநீக்கு
 84. //Angel said...
  அதிராவ் ஸ்ரீராம் இங்கேதான் இருக்கார் :) அங்கே பாருங்க coffee வாசனை வருது . குடிச்சிகிட்டே நம் கமெண்ட்ஸை வாசிக்கிறார்//

  எனக்கும் தெரியுமே:)) அவர் எங்கட டெய்ஷியைப்போலவேதேஏஏஏஏஏஏன்ன்ன்:)) ஒளிச்சிருந்து வோச்சிங்ங்ங்ங் ஹா ஹா ஹா:)).. ஹையோ கொஃபி புரக்கேடிடப்போகுதூஊஊஊஊஉ:))

  பதிலளிநீக்கு
 85. //Angel said...
  //அது நெ.தமிழன்.. அஞ்சுட ஜித்தப்பா எப்போ அரசியலில் //

  ஹலோவ் மியாவ் எதுக்கு சும்மா சித்தப்பாவை வம்பிழுக்கறீங்க ..அவரே ரொம்ப மனக்கஷ்டத்தில் இருக்கார் :)//

  அஞ்சு..அப்போ அவருக்கு சப்போர்ட் பண்ணி இன்றே ஒரு போஸ்ட் போடுங்கோ:)) கில்லர்ஜியை ஊருக்குள் வரவிடாமல் நான் கறுப்புப் பூனைப்படைக்கு ரெடி பண்றேன்ன்ன் ஹா ஹா ஹா:))

  பதிலளிநீக்கு
 86. //கண்ணில்லாதபோது கூட இருந்தாய் காட்சி வந்த போது எங்கே போய் விட்டாய் என ஒரு பாட்டு அவர்தானே?//
  விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் ,விழி வந்த பின்னால் ஏன் (சிறகொடித்தாய் }
  கர்ர்ர் எனக்கு கடைசி வார்த்தை பிடிக்கலை

  பதிலளிநீக்கு
 87. / ராதிகா அன்ரியைக் கூட்டி வாங்கோ எங்கள் புளொக்கிலே ஸ்ரீராம் தலைமையில் ஒன்று சேர்த்து வச்ச்சிடுவோம்ம்.. காதலுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா//
  ஹையோ மியாவ் அப்போ சரத்குமார் வாழ்க்கை ?? குடும்பத்தில் குயப்பம் வருமே

  பதிலளிநீக்கு
 88. அதிரா/கீதா ரங்கன் - //சினிமா பற்றி கம்மியாகத்தான் பேசுவார்// - நான் காஸிப் படித்ததையெல்லாம் (ராதிகா, வி.காந்த், பி.போத்தன்'-அவர் விட்டாப் போதும்னு ஓடினவர், .....) எழுதலாம். அப்புறம் ஸ்ரீராம் எல்லா பின்னூட்டத்தையும் தூக்கிடுவார் (அவர் படித்தப்பறம் ஹா ஹா ஹா)

  பதிலளிநீக்கு
 89. //மேலே சினிமா ஸ்பெஷலிஸ்ட் சொல்லியிருக்கறதை //

  ஏகாந்தன் ஸார்... ஆ!

  பதிலளிநீக்கு
 90. நன்றி துளஸிஜி. பிரதாப் உங்க ஊர்க்காரர் ஆச்சே!

  பதிலளிநீக்கு
 91. /ஃப்ளோ இல்லை ஸ்ரீராம்....//

  ஆமாம் கீதா... மூட் செட் ஆகமாட்டேங்குது!!! இவ்வளவு வேக்காட்டுல கதை வரலை! வியர்வைதான் வருது!

  //நெல்லை சினிமா பத்தி கம்மியாவா...//

  ஆமாம் கீதா.. சமீப காலங்களில்!

  பதிலளிநீக்கு
 92. கீதா....

  //ஸ்ரீராம் எழுதுங்க!! அனுப்புங்க! நீங்க அழகா எழுதுவீங்க!!! வெற்றி பெறுவீர் !! //

  ஹா... ஹா... ஹா.... நெ.பொ கெ!

  பதிலளிநீக்கு
 93. வாங்க ஜி எம் பி ஸார்... நான் எழுத விட்டுட்டேனா?!! படத்தின் பெயர் மீண்டும் ஒரு காதல் கதை... யு டியூப் சென்று பாடல் கேட்டால், அங்க தெரியும்.

  பதிலளிநீக்கு
 94. வாங்க சகோதரி கமலா ஹரிஹரன். நீங்க படமும் பார்த்திருக்கீங்க போல... இளையராஜா தூள் கிளப்பி இருக்கும் பாடல்களில் ஒன்று. ஒன்று தெரியுமோ? நாளை இளையராஜா பிறந்தநாள். 75 வயசு.

  பதிலளிநீக்கு
 95. வாங்க ஏஞ்சல்... ஜெய்சங்கர், கே ஆர் விஜயா தெரிகிறது. sk jiv யார்னு தெரியலை! அ கோ சே யம் புரியலையே... திருநல்வேலிக்கே...

  ஆமாம் இந்தப் படத்தை மாநில மொழித் திரைப்பட வரிசையில் போட்டதாகத்தான் எனக்கும் நினைவு.

  //மியாவ் நான் 3 டைம்ஸ் கேட்டாச்சு //

  நல்ல பொண்ணு!

  மீனாக்ஷி பழமா? நான் கேள்விப்பட்டதில்லையே....

  பதிலளிநீக்கு
 96. அதிரா...

  //இதென்ன இது புதுக்கதையைக் கொண்டு வந்து செருகிறீங்க:)).. இப்போதான் அறிகிறேன் ..//

  முதல் காதல். பேதைக் காதல்! சுதாகர் அப்புறம் அம்போ என்றாகி விட்டார்! ஆள் காணாமலே போனார்!

  பதிலளிநீக்கு
 97. அதிரா...


  //கோயிலில் பாடிக்கொண்டிருப்பார்.. கண் தெரியாது அவருக்கு ..//

  அதிரா அது காதல் ஓவியம். கண்ணன் எனும் நடிகர். அந்த ஒரே படத்தோடு காணாமல் போனார். அந்தப் படத்தின் நாயகி . ராதா. அந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் தேன் தேன் தேன்... நாளை இளசுக்கு 75 வயசு தெரியுமோ... (ஐயோ ஏகாந்தன் ஸார் ஏற்கெனவே சினிமா ஸ்பெஷலிஸ்ட்னு சொல்லி இருக்கார்.. இப்போ இவ்வளவு விவரம் வேற சொல்றேனே....)

  பதிலளிநீக்கு
 98. //சந்தடி சாக்கில நெல்லைத்தமிழனுக்கு வயசாகிட்டுது அதனால ஆன்மீகத்தில நாட்டம் அதிகம் என... இண்டைக்கு முழுக்க்க்க்க்க ஸ்ரீராம் இண்டிரெக்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாகவே பேசுறார்//

  ஐயோ... நான் எங்கே அப்படிச் சொன்னேன்? அதிரா... இது அந்த நாரதருக்கே... ச்சே... நாராயணனுக்கே பொறுக்காது...

  பதிலளிநீக்கு
 99. அதிரா...

  //மீ தான் எப்பவோ ஞானியாகிட்டனே:))//


  ஆமாம்... ஆமாம்.. நானே என் சந்தேகங்களை அவ்வப்போது அவ்விடத்தில்தானே கேட்டுக்கொள்கிறேன்!


  //அஞ்சுட ஜித்தப்பா எப்போ அரசியலில் ஜம்ப் ஆகிறேன் எனச் சொன்னாரோ.. அன்றிலிருந்து கில்லர்ஜி டென்ஷனாவே இருக்கிறார் //


  ஹாங... ஹா... ஹா... உண்மை... உண்மை! அதிரா கண்ணிலிருந்து எதுவும் தப்ப முடியாதாக்கும்!

  பதிலளிநீக்கு
 100. ஏஞ்சல்..

  //அதிராவ் ஸ்ரீராம் இங்கேதான் இருக்கார் :) அங்கே பாருங்க coffee வாசனை வருது . குடிச்சிகிட்டே நம் கமெண்ட்ஸை வாசிக்கிறார்//

  நிஜம்மாவே செகண்ட் டோஸ் காபி குடிச்சுக்கிட்டே மொட்டை மாடியில் இந்த கமெண்ட் படித்தேன்!

  பதிலளிநீக்கு
 101. ஐயோ... அதிரா... மறுபடியும் பொன்மானைத்தேடியா!

  பதிலளிநீக்கு
 102. நெல்லை..

  //அப்புறம் ஸ்ரீராம் எல்லா பின்னூட்டத்தையும் தூக்கிடுவார் (அவர் படித்தப்பறம் ஹா ஹா ஹா)//

  ஹா... ஹா... ஹா.... படித்த, ரசித்த ஊர்வம்புகள்ன்னு ஒரு போஸ்ட் ஆரம்பிச்சுடலாமா?!!!

  பதிலளிநீக்கு
 103. நெல்லைத்தமிழன் நீங்க எழுதுங்கோ, நான் ஆயுதத்தை ரெடி பண்ணிடுறேன்ன்:)) தூக்கைனால் தட்டிடுவேன் பட்டினை:))

  https://i.pinimg.com/736x/17/29/df/1729df80dd519b0c282653521571af6e--grumpy-cats-funny-cats.jpg

  பதிலளிநீக்கு
 104. //Angel said...
  / ராதிகா அன்ரியைக் கூட்டி வாங்கோ எங்கள் புளொக்கிலே ஸ்ரீராம் தலைமையில் ஒன்று சேர்த்து வச்ச்சிடுவோம்ம்.. காதலுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா//
  ஹையோ மியாவ் அப்போ சரத்குமார் வாழ்க்கை ?? குடும்பத்தில் குயப்பம் வருமே//

  அப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு.. எடுங்கோ அந்த கதிரையையும் வெற்றிலைத்தட்டையும்.. ஏகாந்தன் அண்ணனைக் கூட்டி வந்து கதிரையில் இருத்துங்கோ:))

  பதிலளிநீக்கு
 105. ஸ்ரீராம் - //படத்தின் பாடல்கள் அத்தனையும் தேன் தேன் தேன்.// - பாடல்களையும் குறிப்பிட்டிருக்கலாம். அந்தப் படத்தில் பூஜைக்காக வாழும் பூவை-மிக அருமையா பாடியிருப்பார் தீபன் சக்ரவர்த்தி(?). விகடன் விமரிசனத்தில் அதைக் குறிப்பிட்டிருந்த ஞாபகம். மற்ற பாடல்கள் யாவும் மிக மிக அருமை. இளையராஜாவின் அதீத திறமை பளிச்சிடும்.

  பாடல்கள் அட்டஹாசமாக இருந்து படம் பிளாப் ஆனதில் காதல் ஓவியம், சங்கமம் போன்ற படங்கள் அடங்கும்.

  பதிலளிநீக்கு
 106. // பாடல்கள் அட்டஹாசமாக இருந்து படம் பிளாப் ஆனதில் காதல் ஓவியம், சங்கமம் போன்ற படங்கள் அடங்கும்//

  ஆமாம். இன்னும் சில படங்கள் கூட சொல்லலாம். சட்டன நினைவுக்கு வரவில்லை நெல்லை.

  // பாடல்களையும் குறிப்பிட்டிருக்கலாம். //

  சொல்லணுமா என்ன? 1) வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் நேரம் இது 2) சங்கீத ஜாதி முல்லை காணவில்லை 3) பூவில் வந்து கூடும் (இது அந்தப் படத்திலேயே எனக்கு மிக்க்க்க்க்கவும் பிடித்த பாடல்) 4) .குயிலே... குயிலே... உந்தன் கீதங்கள் கேட்காதோ.. 5) நாதம் என் ஜீவனே 6) பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ 7) நதியில் ஆடும் பூவனம் (இந்தப் பாடலில் எஸ் பி பி "காமன் சாலை யாவிலும்... ஒரு தேவ ரோஜா ஊர்வலம்" என்று பாடும் இடம் இருக்கிறதே... ஆஹா...)

  பதிலளிநீக்கு
 107. //ஜெய்சங்கர், கே ஆர் விஜயா தெரிகிறது. sk jiv யார்னு தெரியலை! அ கோ சே யம் புரியலையே... திருநல்வேலிக்கே...
  //http://www.lakshmansruthi.com/cineprofiles/images/sivakumar.jpg parunga ennai therilaiyaanu kekkaraar

  பதிலளிநீக்கு
 108. // அப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு.//

  கூட்டி? அதிரா... ஒரு குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தினாலே பாவம்.. இதுல...

  பதிலளிநீக்கு
 109. ஏஞ்சல்... சரி சிவகுமார் தெரிகிறது... jiv சிவாஜியா? அ கோ சே?

  பதிலளிநீக்கு
 110. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 111. ஹாஹா அ து அஷ்ட கோணல் சேஷ்டை யம் செய்யும்

  பதிலளிநீக்கு
 112. என்னை மறந்துட்டியேப்பா நான்தான் ஜிவாஜி அங்கிள்னு சொல்றார்

  ஜிவாஜி அங்கிள் படத்தை போட்டேனு பார்த்தா அதில் நிறைய பொண்ணுங்க படம் வந்திருகு:)

  பதிலளிநீக்கு
 113. ஶ்ரீராம் -பிளாப் படங்களில் நிழல்கள் நினைவு உங்களுக்கு வரும் என நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
 114. ஆமாம் நெல்லை.. நிழல்கள்.

  இதயக்கோவில் படம் கூடச் சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
 115. இனிய பாடல் கேட்டேன் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 116. @ ஸ்ரீராம்: ..கண்ணன் எனும் நடிகர். அந்த ஒரே படத்தோடு காணாமல் போனார். //

  அது ராதிகா-எஃபெக்ட், இது ராதா-எஃபெக்ட்டா? பாவம் இந்த ஹீரோக்கள். வேதம் புதிது படத்தில் ராஜா என்ற பெயரில் ஒருத்தர் வந்துபோன ஞாபகம்.. அவர் எந்தப்பக்கம் ஓடினார்? அதிரா & கோ. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே?

  பதிலளிநீக்கு
 117. @ அதிரா:.. அப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு. எடுங்கோ அந்த..//

  கட்டப்பஞ்சாயத்தோ ! கடவுளே..

  பதிலளிநீக்கு
 118. //வேதம் புதிது படத்தில் ராஜா என்ற பெயரில் ஒருத்தர் வந்துபோன ஞாபகம்..//

  ஏகாந்தன் சார் ..விகடன்ல அப்போ இப்போன்னு ஒரு பகுதி வருது அதி படிச்சேன் ராஜா மார்பிள் பிஸ்னஸ் மேன் ஆகிட்டாராம் இப்போ
  https://cinema.vikatan.com/tamil-cinema/news/125045-kadaloora-kavithaigal-raja-in-appo-ippo-series-10.html

  பதிலளிநீக்கு
 119. ஏகாந்தன் சார் இது கட்டையால் அடி வாங்க வைக்கும் பஞ்சாயத்து அதுவும் பாஞ்சாலிக்கும் பரஞ்சோதிக்கும் இப்போ பஞ்சாயத்தாம்
  வைக்க பார்க்கிடறாங்க மியாவ் :)

  பதிலளிநீக்கு
 120. @ Angel: இப்போ பஞ்சாயத்தாம் வைக்க பார்க்கிடறாங்க மியாவ் :)//

  ஞானியாப்போனவங்க லட்சணமா இது ? அட, ஆண்டவா!

  பதிலளிநீக்கு
 121. நன்றி நண்பரே
  இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்

  பதிலளிநீக்கு
 122. வணக்கம் சகோதரரே

  அட ஆண்டவா.. எத்தனை படங்கள்.. எத்தனை செய்திகள்..இளையராஜாவின் பிறந்த நாள் செய்தி உட்பட.கமெண்ட்ஸை படிக்கப்படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. சினிமா பத்திரிக்கை எல்லாம் தேவையேயில்லை போலிருக்கே .. (அந்த பத்திரிக்கைகளின் பெயர் கூட சட்டென சொல்லத் தெரியவில்லை எனக்கு..) காதல் ஓவியம் பட பாடல்கள் அனைத்தும் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்களே.. அதில் இரண்டொரு பாட்டை நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் கேட்டால்தான் இப்போதும் புரியும் எனக்கு. விபரங்கள் பிரமிப்பாக இருக்கிறது.
  நாளை இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 123. //ஏகாந்தன் Aekaanthan ! said...
  @ அதிரா:.. அப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு. எடுங்கோ அந்த..//

  கட்டப்பஞ்சாயத்தோ ! கடவுளே..//

  ஏகாந்தன் அண்ணன் பஞ்சாயத்தில கட்ட.. நீளம் எண்டெல்லாம் இருக்குதோ?:)..

  ///ஞானியாப்போனவங்க லட்சணமா இது ? அட, ஆண்டவா!///
  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒரு சின்ன திருத்தம்:)) ஒரு ஞானி ஆகிட்ட:) சுவீட் 16 ஐப் பார்த்து., அடிக்கடி ஞானி ஆகப்போறவங்க:) என இன்சல்ட் பண்ணுவதை மீ வன்மையாக் கண்டிக்கிறேன்ன்ன்ன்ன்:)) ஹையோ ஹையோ வர வர ஞானிக்கே மருவாதை இல்லாமல் போகுது பேசாமல் பழையபடி டொக்டர் அதிரா ஆகிட வேண்டியதுதேன்ன்:)). ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 124. ///Angel said...
  ஏகாந்தன் சார் இது கட்டையால் அடி வாங்க வைக்கும் பஞ்சாயத்து அதுவும் பாஞ்சாலிக்கும் பரஞ்சோதிக்கும் இப்போ பஞ்சாயத்தாம்
  வைக்க பார்க்கிடறாங்க மியாவ் :)//

  ஹலோ மிஸ்டர் அஞ்சு:)) புதுசு புதுசா ஆட்களை எங்கள் புளொக்கில இறக்காதீங்க:)) இருப்பவர்களையே ஜமாளிக்கிறதில பாதி உசிரு போகுதே ஜாமீஈஈஈஈஈஈ:))..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!