வியாழன், 7 ஜூன், 2018

பண்டாரம்... எனக்கு வழி காட்டுங்க.. வானம் நிறைக்கும் அதிசய நிலா அனுஷ்கா அழகான பூ!



இப்போது ஊபர், ஓலா போன்றவை புக் செய்தபின் அவர்களுக்கு வழி சொல்லவேண்டும்.  அவர்களுக்குக் காட்டும் ஜி பி எஸ் ஸை நம்பினால் பெரும்பாலும் கதை கந்தல் ஆகிவிடும்!  நம் இருப்பிடத்துக்கு நேர் பின்னால் சாலை, அல்லது முன்னால் சாலையில் வந்து நின்றுகொண்டு கூப்பிடுவார்கள்.   

"இங்கதான் ஸார் உங்க சிக்னல் காட்டுது"

அங்கிருந்து அவர்கள் நாம் இருக்கும் இடத்துக்கு வரவேண்டும் என்றால் ஒரு ஒன்வே, இரண்டு வளைவுகள் என்று திரும்பி  பிரதான சாலையை மறுபடி பிடித்து, அப்புறம் நாம் சொல்லும் இடத்துக்கு வரவேண்டியிருக்கும்.

அதற்கு வழி சொல்லும்போதே அவர்களின் கோபத்துக்கு ஆளாகவேண்டியிருக்கும்.  சமயங்களில் ட்ரிப்பை கேன்சல் செய்துவிடுவார்கள்.  கொஞ்ச நேரம் ஆகிவிட்டாலும் நாம் கவனிக்கவில்லை என்றால் அடுத்த ட்ரிப்பில் 50 ரூபாய் நமக்கு பச்சா வைத்து விடுவார்கள்.




நான் சொல்ல வந்த விஷயம் வேற...  

வழி சொல்லும் கலை.  

நம் வீட்டுக்கு புதிதாக வருபவர்களுக்கோ,  இது மாதிரி வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கோ வழி சொல்வதும் ஒரு கலை.  



என் உறவினர் ஒருவர் வீட்டுக்குச் செல்லும் வழி எத்தனை முறை போனாலும் மனப்பாடம் ஆகாது.  குழப்பம்தான் வரும்.  சிக்கலான வழி.  முதல்முறை  போகும்போது வழி கேட்டுக்கொண்டு போனோம்.  அவர் சொன்ன வழியைக் கேட்டு மண்டை காய்ந்துபோய் "இருங்கள்..  நீங்கள் முதலில் சொன்ன லேண்ட்மார்க்குக்கு வந்து கால் செய்கிறேன்" என்று சொல்லி விட்டு அப்படியே செய்தோம்.

"ஆ...   வந்துட்டீங்களா?  உங்க ரைட்ல ஒரு ரோட் திரும்புதா?"

"ஆமாம்..."  டிரைவர் அங்கு வண்டியைத் திருப்பினார்.

"அங்கே திரும்ப வேண்டாம்...  நேரா வந்து லெஃப்ட்ல திரும்புங்க..."

"அட...  டிரைவர் சார்...  இங்க இல்லையாம்...  திரும்புங்க...  நேராப்போய் லெஃப்ட்.....   ம்ம்...   லெஃப்ட்ல திரும்பிட்டோம்..."

"ஒரு கோவில் வருதா?"

"ம்ம்ம்..."  டிரைவர் கிட்ட சிக்னல் செய்து மெதுவாய் போகச் சொன்னோம்.

"அதைத்தாண்டி வாங்க...  மூன்று ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் வரும்..."

மூன்றையும் தாண்டினோம்.  "தாண்டிட்டோம்"

"ஐயோ...   மூன்றையுமா?  இரண்டாவது ஸ்பீட் பிரேக்கர் தாண்டியதும் லெஃப்ட்ல திரும்பணும்"

"கடவுளே..  டிரைவர் ரிவர்ஸ் எடுங்க..."

டிரைவர் முனகிக்கொண்டே ரிவர்ஸ் எடுத்தார்.

"அப்புறம்"

"அங்க ஏர்டெல் னுப்போட்டு ஒரு கடை இருக்கா"

"டிரைவர் வண்டியைக் கொஞ்சம் நிறுத்திக்குங்க...நீங்க சொல்லுங்க...  அந்தக் கடை இருக்கு..  அப்புறம் எப்படிப் போகணும்?"

பொறுமை இழந்து கொண்டிருந்த டிரைவரை வைத்துக்கொண்டு ஒருவழியாய் அங்கு போய்ச் சேர்ந்தோம்.

"அப்பாடி...  ஸ்டெப் பை ஸ்டெப்பா இவங்களுக்கு ஒரு வழியாய் போன்லேயே வழி சொல்றதுக்குள்ள தாவு தீர்ந்துடுச்சு" னு அவர் அருகில் இருந்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்த போது அங்கு சென்றுவிட்டோம்.

என் பெரிய பையன் வாடகைக்கு கார் ஓட்டுநர்களுக்கு வழி சொல்லும்போது ஒரு கிலோ மீட்டருக்கு முன்னால் இருக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்துக் கொள்வான்.  அவன் அங்கிருந்து சொல்ல ஆரம்பிக்கும் வழியைக் கேட்க நமக்கே பொறுமை இருக்காது.  ஹோட்டல் பெயர்களாக சொல்லிக் கொண்டு வருவான்.

இதைச் சொல்லும்போது 80 களின் மதுரை நினைவுக்கு வருகிறது.  எந்த இடத்துக்கு வழி சொல்லவேண்டும் என்றாலும் ஒரு தியேட்டர் பெயரை வைத்தே வழி சொல்வார்கள்.  அந்த அளவு தியேட்டர்களும் இருந்தது மதுரையில்.

உங்கள் அனுபவம் என்னவோ?



================================================================================================================


"பண்டாரம்" என்பது அழகு தமிழ்ச் சொல். நம்முடைய அன்றாட வழக்கில் இந்தச் சொல், ஒன்றுமில்லாதவர்களை, ஓட்டாண்டிகளை, அன்றாடங் காய்ச்சிகளைக் குறிக்கும்.


ஆனால், பண்டாரம் என்றால் பொக்கிஷம் அல்லது கருவூலம் என்று பொருள். அதாவது பண்டங்களைக் கொட்டி வைக்கும் இடம்.
'அரச பண்டாரத்திலிருந்து பொருள் எடுத்து' என்று பழங்காலச் சொலவடைகள் உண்டு.; அரச கருவூலத்திலிருந்து செலவழிப்பதை இப்படிச் சுட்டிக் காட்டினார்கள்.
உலகியலை விட்டு விட்டு, இறையருளை நிரம்பச் சேமித்துக் கொண்டவர்களைப் 'பண்டாரம்' என்றழைத்தார்கள். காலப்போக்கில் சொல்லின் பொருளே சிதைந்து விட்டது.
ஓட்டாண்டி, அன்றாடங் காய்ச்சி போன்ற வழக்குகளும், யாந்திரீகப் பொருட்கள் மீது பற்று வைக்காமல், அவற்றைச் சேர்த்து வைக்காமல் (சேர்த்ததைப் பாதுகாப்பதற்காக மேலும் மேலும் சேர்த்துக் குவிக்காமல்), கிடைப்பதைப் புசித்துக் கடவுளையே சிந்தித்த, ஆனந்த நிலையைக் குறிப்பதற்காகத் தோன்றியவை ஆகும்.


' 2016  துக்ளக்'கில் டாக்டர் சுதா சேஷையன் 'பேசும் பரம்பொருள்' தொடரில்


===========================================================================================================

இது என்ன பூ?  தெரியாது.  ஆனால் என்ன அழகு?  என்ன கலைநயத்துடன் படைக்கப்பட்டுள்ளது இல்லை?  வெண்ணிதழ்கள்...



அதன்மேல் இழை இழையாக சிறு சிறு மென்கோட்டிழைகள்....


அதற்கும் அடுத்து லைட் பிங்க் நிறத்தில் ஒரு வட்டம்...


அதன்மேல் பச்சை நிறத்தில் ஒரு டிஸைன்...   அழகு!


இன்னொரு கோணத்தில்...


 மேலிருந்து... 



பக்கவாட்டிலிருந்து...  இன்னும் அழகாக...  இன்னும் தெளிவாக...


கொஞ்சம் பெரிய அளவில் பார்ப்போமா?!!

இவ்வளவு அழகான பூக்கள் பின்னர் அடுத்த கட்டத்தில் எப்படி கடுமையாக மாறுகின்றன பாருங்கள்....!!!

பூவின் எந்த பாகம் இப்படி முள்ளாக மாறுகிறது?


இயற்கையின் படைப்பில் என்ன ஒரு பாதுகாப்பு ஏற்பாடு!



============================================================================================================

சென்ற வாரம் கவிதை இல்லை என்று கீதா வருத்தப் பட்டிருந்தார்.  ரொம்பவே Feel செய்த அவருக்காக... !




====================================================================================================


என்னைக் காணோம்னு அதிராவெல்லாம் தேடறாங்கன்னு ஸ்ரீராம் சொன்னார்.  எப்படி இருக்கீங்க நண்பர்களே?  அ ர ம எப்படி இருக்கு?


அடுத்த வாரம் பார்ப்போமா....?

134 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  3. கீதா ரெங்கனை காலை முதலே காணோம்... இணைய இணைப்பு இல்லையோ, அல்லது மகன் வரும் பிஸியோ...!

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம். அடா அனுஷ்கா..☺

    பதிலளிநீக்கு
  5. வாங்க பானுக்கா... காலை வணக்கம். அனுஷ்க்காவின் முதல் ரசிகை வருகை!

    பதிலளிநீக்கு
  6. கீதா அக்கா வந்துக்கொண்டு இருக்காங்க.வாங்க வாங்க ..அக்கா.

    பதிலளிநீக்கு
  7. இன்றைய வியாழன் கதம்பம் ரசித்தேன்.

    வழி சொல்வது ஒரு கலைதான். மிக ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க. சில சமயம் ரொம்ப தெளிவா சொல்கிறோம் என நினைத்துக்கொண்டு வாகன ஓட்டுகளை முழுவதும் குழப்புவோம்.

    பூவின் படத்தை ரசித்தேன், ஆனால் மிக அதிகமான படங்கள். இன்னும் குறைத்திருக்கலாம்.

    தினத்தந்தி ஆண்டிப்பண்டாரத்தையும் நினைவுபடுத்திவிட்டீர்கள். (பண்டாரம் என்று சாதியும் உண்டு. அவர்கள் கோவில் பூக்கள் கட்டிக்கொடுப்பவர்கள். இதுபோல் கோவிலின் இசைக்கு, சங்கு முழங்குவது, மேளம், நாதஸ்வரம் போன்ற சேவைகளைச் செய்பவர்களை கம்பர் குலத்தார் என்று சொல்வார்கள்.

    கவிதையை ரசித்தேன். நல்லவேளை சூரியனைப் பற்றி இப்படி நினைக்கலை.

    பதிலளிநீக்கு
  8. இன்றைய வியாழன் கதம்பம் ரசித்தேன்.

    வழி சொல்வது ஒரு கலைதான். மிக ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க. சில சமயம் ரொம்ப தெளிவா சொல்கிறோம் என நினைத்துக்கொண்டு வாகன ஓட்டுகளை முழுவதும் குழப்புவோம்.

    பூவின் படத்தை ரசித்தேன், ஆனால் மிக அதிகமான படங்கள். இன்னும் குறைத்திருக்கலாம்.

    தினத்தந்தி ஆண்டிப்பண்டாரத்தையும் நினைவுபடுத்திவிட்டீர்கள். (பண்டாரம் என்று சாதியும் உண்டு. அவர்கள் கோவில் பூக்கள் கட்டிக்கொடுப்பவர்கள். இதுபோல் கோவிலின் இசைக்கு, சங்கு முழங்குவது, மேளம், நாதஸ்வரம் போன்ற சேவைகளைச் செய்பவர்களை கம்பர் குலத்தார் என்று சொல்வார்கள்.

    கவிதையை ரசித்தேன். நல்லவேளை சூரியனைப் பற்றி இப்படி நினைக்கலை.

    பதிலளிநீக்கு
  9. நன்றி நெல்லைத்தமிழன். பூவின் படங்களைக் குறைக்க மனம் வராததால் சேர்த்தேன். ஒன்றிரண்டை எடுத்து விடவா? எதை எடுக்க? யோசனை சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
  10. இது நாகலிங்கப் பூவோ? பார்த்தால் அப்படித் தான் இருக்கு. எதுக்கும் தேடிப் பார்க்கறேன். இன்னிக்கு எழுந்தது லேட். இப்போல்லாம் காலை 3 அல்லது 3-30க்கு விழிப்பு வந்த பின்னர் நாலுக்குப் பின் தூங்கிடறேன். இன்னிக்கு எழுந்துக்கும்போது ஐந்தே கால்! :))))) யாருங்க அங்கே சரியான தூங்குமூஞ்சினு சொல்றது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))

    பதிலளிநீக்கு
  11. மத்ததுக்குப் பின்னர்! பூப் படங்கள் நீக்க வேண்டாம். :))))))

    பதிலளிநீக்கு
  12. //நான் சொல்லலை? அக்கா வந்துக்கிட்டிருக்காங்கன்னு... வாங்கக்கா...

    // யாருங்க அங்கே சரியான தூங்குமூஞ்சினு சொல்றது? //

    வேற யாரு.. நம்ம அதிரடிதான்...!

    இப்படிக்கு ச்ரீராம்!

    பதிலளிநீக்கு
  13. // பூப் படங்கள் நீக்க வேண்டாம். :)))))) //

    நன்றி அக்கா...

    பதிலளிநீக்கு
  14. வழி சொன்னதை மிகவும் இரசித்தேன் ஜி

    நல்லவேளை ஓட்டுனர் இறங்கச் சொல்லவில்லை. ஆம் முன்பு தியேட்டர்களே அடையாளம்.

    பதிலளிநீக்கு
  15. ஆமாம், நாகலிங்கப் பூ இல்லை. :)))))

    பதிலளிநீக்கு
  16. இதழ்கள் வெண்மை நிறம் கொண்டது இல்லை நாகலிங்கப் பூ!

    பதிலளிநீக்கு
  17. ஓலா, உபேர் பத்திக்கேள்விப் பட்டிருப்பதால் நாங்க எப்போதுமே ஃபாஸ்ட் ட்ராக் தான்!

    பதிலளிநீக்கு
  18. கவிதை நல்லா இருக்கு. அனுஷ்கா ஹிஹிஹிஹிஹி. ரொம்ப நாள் போடலைனு இன்னிக்குப் போட்டாச்சு!

    பதிலளிநீக்கு
  19. பண்டாரம் என்பதை வைப்புழி என்று
    வள்ளுவப் பெருமான் குறிக்கின்றார்...

    சொல்லையும் பொருளையும்
    சிதைப்பதில் வல்லவர்களாயிற்றே - நாம்!...

    தமிழாசிரியரிடம் தமிழ் பயின்ற காலங்கள் எல்லாம் மலையேறிப் போயின...

    பதிலளிநீக்கு
  20. இனிய லேட் காலை வணக்கம் எல்லோருக்கும்!!!

    இன்று எழும் போதே 5 மணி ஆகிவிட்டது. நேற்றிலிருந்து மகனுக்குக்குக் கட்டிக் கொடுக்க எல்லாம் ஏற்பாடு அவன் வரும் போது கிச்சனில் இருக்காமல் அவனுடன் நேரம் செலவழிக்கலாமே என்று இப்போதே....ஸோ காலையில் பாத்திரங்கள் என்னை முழித்துப் பார்க்க முதல் கட்ட வேலை சமையல் கொஞ்சம்...இடையில் செல்லத்துடன் நடைப்பயிற்சி வந்து மீதி சமையல் முடித்து என்று....அதான்

    ஸ்ரீராம்...செம கவிதை ரொம்ப ரசித்தேன்....மிக்க நன்றி ஸ்ரீராம்....அப்படியே அனுக்கா படம் போட்டதற்கும் மிக்க நன்றி!!! என்ன அழகு...அனுக்கா இல்லாமல் எபியா?!!!! அப்பத்தான் கலக்கல் ஹா ஹா ஹா

    அரம இடையில் டல்லாகிவிட்டது அனுக்கா...இனி மீண்டும் புத்துயிர்ப்பெறும் பாருங்க...சொல்லிடுங்க ஸ்ரீராம் அவங்ககிட்ட...அடுத்து எசைப்படம் தமனாவா?!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  21. காலை வணக்கம்.

    பண்டாரம் - நல்ல சொல்லை எப்படி மாற்றி விட்டோம்! :(

    ஆஹா அனுஷ்கா! :)))))

    பதிலளிநீக்கு
  22. பூவின் படங்கள் செம ஸ்ரீராம்...

    இதே பூ காயுடன் எல்லாம் நானும் போட்டிருந்தேன் ஸ்ரீராம்.https://thillaiakathuchronicles.blogspot.com/2017/08/World-Photography-Day-Photos.html
    ..வெங்கட்ஜியும் போட்டிருந்தார்...

    இதன் பெயர் தெரியவில்லை...அழகான பூ அப்புறம் நீங்கள் எடுத்திருப்பது போல் அந்த முள்ளு காயுடனும்படம் அதில் இருக்கு...இன்னும் பல கோணங்களில் எல்லாம் எடுத்து வைத்திருக்கேன்...மீண்டும் அதை ஷேர் செய்தால் போட்ட படத்தைப் போடுறீங்க நு மக்கள் சொல்லுவாங்களோனு போடாம வைச்சுருக்கேன்.என்னைப் பொருத்தவரை..ஒவ்வொரு சமயம் எடுக்கும் போதும் ஒவ்வொரு அழகு கோணம் என்று தோன்றும் எனக்கு...

    படங்கள் அத்தனையும் அழகு ஸ்ரீராம்..ஒவ்வொரு படத்திலும் பாருங்க அதன் ஒவ்வொரு அழகு வெளிப்படுது...இயற்கை இயற்கைதான்...இது காட்டுப் பூ என்று நினைக்கிறேன்...பெயர் நெட்டிலும் தெரியவில்லை...கீதாமணிவாணனும் இப்பூவின் படம் போட்டிருந்த நினைவு....

    மற்ற பகுதிகளை வாசித்துவிட்டு அப்பால வாரேன் சில கடமைகள் முடித்துவிட்டு....

    கீதா

    பதிலளிநீக்கு
  23. எச படம் தமனாவை ஜாக்கிரதையா போடுங்க இல்லைனா அது தமனாவே இல்லைனு தம்பி நெல்லை சொல்லி வருத்தப்படுவார்... ஹா ஹா ஹா ஹா...சரி சரி நான் ஓடிப் போறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீராம் பூப்படங்கள் அப்படியே இருக்கட்டும்...எல்லாம் அத்தனை அழகு!!! செமையா இருக்கு..

    சரி அப்பால வாரேன் பாதிதான் வாசிச்சுருக்கேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  25. நல்லவர்களைப் போல வெள்ளை மனம் கொண்ட வெள்ளைப்பூ.
    நிலாக் கவிதை சூப்பர்.

    அனுஷ்கா ரொம்ப அழகா இருக்காங்களே.
    நாங்கள் தலைக்காவிரி பார்க்க மேற்கொண்ட பயணம்
    இது போல வழிகாட்டிகளால் பத்து மணி நேரம் நீடித்து வாழ்க்கையே வெறுத்துட்டோம்.

    பதிலளிநீக்கு
  26. முதலில் சிரித்தேன்... பிறகு ரசித்தேன்...!

    பதிலளிநீக்கு
  27. ஊபரில் இதுவரை எனக்குப் பிரச்சனை வந்ததில்லை ஸ்ரீராம். ஓரிருவர் அதுவும் வழி மட்டுமே கேட்டதுண்டு அல்லாமல் கன்ஃப்யூஷன் வந்ததில்லை. என் கஸின் கள் வரும் போது அல்லது குடும்பத்துடன் போகும் போது என்பதாலும் எனக்கு அவ்வளவு தெரியவில்லை...

    வழி சொல்லுவது நிஜமாகவே ஒரு பெரிய கலை. ஒரு சில இடங்களுக்கு வெகு எளிதாகச் சொல்லிவிடலாம். சில இடங்களுக்குச் சொல்லுவது கடினம்.

    அதுவும் டூவீலரில் செல்பவர்களுக்கு (தடுக்கு முடுக்கு இடுக்கு எல்லாம் நுழைந்து சென்று விடுவதால் ஹா ஹா ஹா ஹா) கார் நுழையும் சாலை வழி சொல்லுவது சில சமயம் கடினம் ஆகி விடுகிறது...உங்கள் வீடு, எங்கள் வீடு எல்லாம் சொல்லுவது மிக எளிது.

    நாம் செல்லும் போது மிக மிக நுணுக்கமாக அதாவது யாருக்கோ வழி சொல்லப் போகிறோம் என்று மனதில் குறித்துக் கொண்டால்தான் ஈஸி...

    ஈரோடு போயி திரிச்சி வரணும் கதைதான் ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  28. ஒரு இடத்திற்கு ரெண்டு மூன்று வழி இருக்குனு வையுங்க...வழி சொல்லுவதில் சில சமயம் நாம் சென்ற வழி அல்லது நமக்குத் தெரிந்த வழி இல்லாமல் மற்றொரு வழியில் செல்பவர்கள் இருந்தால் சொல்லுவதும் சில சமயம் கஷ்டம்..எனவே மிக அருகில் இருக்கும் நல்ல லேன்ட்மார்க் தான் சுலபம்...அங்கு வந்ததும் ஃபோனில் சொல்லவோ தெரிந்து கொள்ளவோ சௌகரியாமாக இருக்குமோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  29. காணொளிகள் செம பொருத்தம்...ஹா ஹா ஹா ஹா...

    அதிரடிக்கு ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடிக்கு மட்டும் வழி தெரியும்!!! ஆனால் யாருக்கும் சொல்ல மாட்டார் ஏன்னா அங்கதான் புதையலே வைச்சுருக்காங்க...ஹா ஹா ஹா..ஏஞ்சல் உங்களுக்கு ரகசியம் நீங்க கில்லர்ஜி பயன்படுத்டிய லாடம் பயன்படுத்தி பூஸாரின் பொக்கிஷ்ப் பொட்டி எடுக்கணும்னு சொல்லிருந்தீங்கல்லியா அங்க கில்லர்ஜி வீட்டுக்குள்ள எனக்குப் போக முடியல..ஸோ இங்க சொல்லறென் நீங்க லாடம் எல்லாம் போட வேண்டாம் ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடிக்கு வந்து லபக்குனு எடுத்துக்கலாம்..அங்கதான் இருக்கு....ஹா ஹா ஹா..

    கீதா

    பதிலளிநீக்கு
  30. பண்டாரம் எனும் சொல்லிற்கு புது அர்த்தம் கருவூலம்...புதிது அறிந்து கொண்டோம்...

    உலகியலை விட்டு விட்டு, இறையருளை நிரம்பச் சேமித்துக் கொண்டவர்களைப் 'பண்டாரம்' என்றழைத்தார்கள். காலப்போக்கில் சொல்லின் பொருளே சிதைந்து விட்டது.// ஆமாம்...

    இப்படிப் பல நல்ல சொற்கள் அர்த்தம் மாறி சிதைந்துருச்சே ஸ்ரீராம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  31. இன்னும் கும்மி அடிக்க ஆசை...அதிரடி ஏஞ்சல் வரும் போது முடியுமா தெரியலை...

    கீதா

    பதிலளிநீக்கு
  32. மதுரைக்கு வழி வாயிலே! என்பார்கள்.
    வழி கேட்டு போவது அந்தக் காலம்.இப்போது மனிதனை நம்புவதைவிட ஜி பி எஸ் ஸை நம்பும் காலம் ஆகி விட்டது.

    ஓலாவை பற்றி சொன்னது முற்றிலும் உண்மை.

    காணொளிகள் நல்ல சிரிப்பு.
    கவிதை, அனுஷ்கா, தர்பூசணி பூ படம் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  33. ஆலமுண்டான் எங்கள் பாண்டிப்பிரான் தன் அடியவர்களுக்கு மூலபண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே//
    திருவாசகம் பாடல்.
    பாண்டிப்பிரானின் மூலபண்டாரம் அள்ளக் குறையாதது;

    பதிலளிநீக்கு
  34. பூக்கள் அருமையாக இருக்கிறது...என்ன பூ இது..

    பதிலளிநீக்கு
  35. ஓலா, ஊபரில் இந்த சிக்கலை நாங்கள் அனுபவித்துள்ளோம்.

    பதிலளிநீக்கு
  36. Its wild Passion flower....

    Angel

    பதிலளிநீக்கு
  37. ஆஆஆஆஆஆஆஆஆஆ அசைவம் அசைவம்.. இன்று அசைவப்பதிவூஊஊஊஊஊ:)).. அஞ்சூஊஊஊஊ தமிழ்ல ஓடிவாங்கோ:)) உங்க வழக்கப்படி கீழிருந்து மேலே படிங்கோ...:))

    சே..சே... இன்று பார்த்துக் கீதாவைக் காணமே... ரெண்டு வருசமாத்தூசு தட்டாமல்.. வீடு கழுவாமல், மலையேறி.. ஊர் சுத்தித்திரிஞ்சிருக்கிறா:)).. இப்போதான் வி ஐ பி வாறார் என்றதும் கிளீனிங் வேலை நடக்குது போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹையோ இது மைண்ட் வொயிஸ் கொஞ்சம் கீசாக்காவைப்போல சத்தமா ஒசிச்சேனா வெளில கேட்டுவிட்டது.. ஆரும் போட்டுக் குடுத்திடாதீங்கோ:)).. பிறகு ஆஞ்சனேயருக்கு நேர்த்தி வச்சிடுவேன்ன் பிக்கோஸ் இன்று அதிரா ஆஞ்சநேரய் விரதமாக்கும்:))

    பதிலளிநீக்கு
  38. ஹா ஹா ஹா உங்களுக்கு வழி சொன்னவர்.. ஹா ஹா ஹா நல்ல ஜோக்கரா இருப்பார்போலும்:)) சிலர் இப்படித்தான் தேவையானதை மட்டும் சொல்லாமல் தேவை இல்லாததையும் சொல்லிக் குழப்புவினம்.. நம கீசாக்கா மார்கட்டுக்கு சாமான் வாங்கச் சொல்வதைப்போலவேதேன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா.. வாங்க வேண்டியதை மட்டும் சொல்லி அனுப்பாமல்.. வீட்டில் இருப்பதையும் சொல்லி அனுப்பி மாமாவைக் கொயப்பி விட்டிடுவாவெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    இந்த ஊபரின் ஸ்பீட்டை நான் பார்த்தது நியூயோர்க்கில்தான். சொல்லிவிட்டு திரும்பமுன் அருகிலே நிற்கும்.. அவ்ளோ ஸ்பீட்ட்.

    ஜி பி எஸ் அடிக்கடி அப்டேட் பண்ணோனும் அல்லது புதுசு வாங்கோனும் .. ஏனெனில் அவை பழைய மப் ஐ வச்சே காட்டும் ஆனா இப்போதெல்லாம் தினமும் புது ரோட்டுக்கள் புது வீடுகள் என காடழிச்செல்லாம் கட்டுகிறார்களெல்லோ.. அதை எல்லாம் கரெக்ட்டாக் காட்டாது...

    வடிவேல் அங்கிள் கொமெடி பார்கப் பார்க்க அலுக்காது.. நாங்க தினமும் கொமெடி பார்ப்பதுண்டு ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  39. இன்னொன்று இந்த ஜி பி எஸ் க்கு வன் வே சிஸ்டம் புரியாது.. உள்ளே போ உள்ளே போ எனச் சொல்லும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஓடும் நாம் தான் அதைக் கவனிக்கோணும்.. இல்லை எனில் அவ்ளோதேன்ன்ன் ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  40. ஆஹா பண்டாரம் எனும் சொல்லைப் பயமில்லாமல் உபயோகிச்சிட்டீங்க ஸ்ரீராம்.. முதலில் பயந்திட்டேன்.. சாதிபற்றிப் பேசுறிங்களோ என கர்ர்:)).. பின்புதான் நினைச்சேன் தமிழ்நாட்டில் இப்படி ஒரு சாதி இல்லைப்போலும் என...

    ஆனா நெல்லைத்தமிழன் சொல்லிட்டார்... அதே தான் நம் ஊரிலும் அப்படி ஒரு வகையினர் உண்டு.. அவர்கள்.. சைவமாகத்தான் இருப்பார்கள். கோயிலுக்கு மாலை கட்டிக்கொடுப்பது மற்றும் கோயில்களில் கல்யாண வீடுகளில்[சந்தோசமான விசேசங்களுக்கு] சமைப்பது.. கோயிலில் ஐயரோடு கூட நின்று ஒத்தாசை செய்வது இப்படியானவர்களைச் சொல்வது.

    ////ஆனால், பண்டாரம் என்றால் பொக்கிஷம் அல்லது கருவூலம் என்று பொருள். அதாவது பண்டங்களைக் கொட்டி வைக்கும் இடம்.//

    ஓ..

    சிலர் ஆரையாவது திட்டும்போது.. “அந்தாள் பண்டாரம்போல:) எப்பவும் கிச்சினிலேயே நிற்பார்” எனத் திட்டுவதும் உண்டு:)) ஹா ஹா ஹா ஹையோ.. [அதாவது சமையலாள் எனப் பொருள்படும் இங்கு].

    பதிலளிநீக்கு
  41. ஸ்ரீராம் - போட்டிருக்கும் படம் டாக்டர் சுதா சேஷையன் அவர்களது படமா? நான் வடிவுக்கரசியின் படம் என்றுதான் முதலில் நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  42. ஆங்ங்ங்ங் இன்றும் ஒரு நாரதர் கலகம் ஆரம்பம்ம்ம்ம்ம்ம்.. ஒரு புய்ப்பத்தை வச்சே கலகத்தை ஆரம்பிச்சிட வேண்டியதுதேன்ன்ன்ன்:))..

    எதிர்ப்பாலார்[நெல்லைத்தமிழன்:)] கேட்டிச்சினம் தங்களுக்கு அதிகம் புசுப்பம்:) பிடிக்கல்ல பிடுங்கிடுங்கோ வெரி சோரி டங்கு ஸ்லிப் ஆச்சு:)).. குறைச்சிடுங்கோ என:)).. ஆ

    ஆனா நம்பாலார் சார்பில் கீசாக்கா ஜொல்லிட்டா இல்ல வாணாம் புய்ப்பத்தைப் பறிக்கக்கூடாது:)) அவை மரத்திலேயே இருக்கட்டும் நமக்கு கல்யாணவீடேதும் வந்தா மட்டும் பிச்செடுத்திடலாம்:)) ஹையோ மெதுவா நோகாம ஆய்ந்திடலாம் என:)...

    அப்போ ஸ்ரீராம் ஓகே என நம்பாலாருக்கே சப்போர்ட் பண்ணிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:))...

    இல்ல நெல்லைத்தமிழன் சொன்னதுபோல குட்டிக் குட்டியா போட்ட பூக்களில் ஒன்றிரண்டைக் குறைச்சிருக்கலாம்.. பட் போட்டாச்சு இனி விட்டிடுங்கோ.. பூத்தானே பார்க்கப் பார்க்க அலுக்காதே..

    இந்தப் பூக்கள் இங்கும் உண்டு... நம் “ஆராய்ச்சி அம்புஜம்” கண்டு பிடிச்சிட்டா பெயரை மேலே சொல்லிட்டா பார்த்தீங்களோ? நான் இப்போதெல்லாம் ஏதும் ஆராட்சி எனில் அவவிடம் ஒப்படைப்பேன்ன்.. தேடிப் பிடிச்சுத்தருவா:))..
    ///Its wild Passion flower....

    Angel/// ஹா ஹா ஹா.

    பத்து லட்சத்து 99 கோடியே 66 ஆயிரத்து 43 லட்சதுப் பதின் அஞ்சு பூக்கள் பூக்குது இப்போ இங்கெல்லாம் .. பெதுக்கெனப் பெயரைத்தேடுவது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    இந்தப் பூக்கள் இப்போதான் இங்கும் சீசன் ஸ்ரீராம்.. மதில்கள் வேலிகள் என சில வீடுகளில் சூப்பராக பூத்திருக்கு... மேலோட்டமாக பார்ப்போருக்கு எல்லாமே புசுப்பம்தேன்.. ஆனா உங்களைப்போல நம்மைப்போல கூர்ந்து கூர்ந்து ஆராட்சி பண்ணி ரசிப்போருக்குத்தான் தெரியும் ஒவ்வொன்றையும் இயற்கை எவ்ளோ அழகா படைச்சிருக்குதென.. நான் இப்படி அடிக்கடி வியப்பதுண்டு.

    போனதடவை என் பக்கம் போட்ட அந்த குண்டுக் குண்டு பிங்கி மலர்களை ஒரு 10..15 நிமிடமா நிண்டு ரசிச்சு வியந்து வந்தேன் தெரியுமோ.. இதை எல்லாம் வெளில சொன்னால்ல்.. இது ஏற்கனவே லூசு:)) இப்போ முழுக்கத் தட்ட்டிட்டுது:)) எனச் சொல்லிட்டாலும் என்பதால் இப்படியான விசயங்களை தணிக்கை செய்திடுவேனாக்கும் ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  43. ஓம் பாஸன் ஃபுரூட் மலர்கள் இப்படித்தான் இருக்கும் இன்னும் கொஞ்சம் பெரிசாக.. ஊரில் எங்கள் வீட்டில் பாசன் ஃபுரூட் பந்தல் போட்டிருந்தோம் அதன் இலைகளைப் பிடிங்கிச் சுண்டல் செய்வதுண்டு சூப்பர் சுவை..

    என்ன கீசாக்காஆஆஆஆஆஆஆஆஆஆஅ நாகலிங்கப் பூவோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  44. //நெ.த. said...
    ஸ்ரீராம் - போட்டிருக்கும் படம் டாக்டர் சுதா சேஷையன் அவர்களது படமா? நான் வடிவுக்கரசியின் படம் என்றுதான் முதலில் நினைத்தேன்.///

    ஆவ்வ்வ்வ்வ் தெற்கால புகை வரத்தொடங்கிட்டுதூஊஊஊஊஊஊஊஊ:))..

    ஸ்ரீராம் கெதியா தமனாக்காவைக் கூட்டியாங்கோ இல்லை எனில் இருட்டடி விழவும் வாய்ப்பிருக்கு:)) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)) ரைம் ஆகுது பின்பு வாறேன்ன்ன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  45. இந்த பூவை நான் வண்ணத்துப்பூச்சி தோட்டத்தில் பார்த்தேன் .படமும் எடுத்து என் பக்கம் போட்டிருந்தேன் ஆனா இப்போ எங்கேன்னு தெரில :) லேபில்ஸையே காணோம் அப்புறம் படம் எங்கே தெரியும்

    பதிலளிநீக்கு
  46. @நெல்லைத்தமிழன் கர்ர்ர்,,, சுதா சேஷய்யன் கம்பீரமான அழகு ..mmc யில் பார்த்திருக்கேன் பேசியும் இருக்கேன்

    பதிலளிநீக்கு
  47. ///நம் “ஆராய்ச்சி அம்புஜம்” கண்டு பிடிச்சிட்டா பெயரை மேலே சொல்லிட்டா பார்த்தீங்களோ? நான் இப்போதெல்லாம் ஏதும் ஆராட்சி எனில் அவவிடம் ஒப்படைப்பேன்ன்.. தேடிப் பிடிச்சுத்தருவா:))..
    ///Its wild Passion flower....//

    கர்ர்ர்ர் :)

    பதிலளிநீக்கு
  48. படிப்பு வேலைன்னு ரொம்ப டெடிகேடட் அவங்க ..இள வயதில் கல்லூரி டீன் ஆனவங்க சுதா
    @sriram இதே துக்ளக் பதிவை முகப்புத்தகத்தில் போட்டிருந்தார் :) அங்கும் சொன்னேன் இதை

    பதிலளிநீக்கு
  49. நைஜெல்லா பூக்களின் seed pod கூட இப்படித்தான் இருக்கும்
    ஆவ் கவிதை :) நல்லாருக்கு .இங்கே டாக்சிஸ் .gps இருக்கிறதால அட்ரஸ் பின் கோட் போதும் சரியாஇறக்கிடுவாங்க

    பதிலளிநீக்கு
  50. மியாவ் அறிவியல் ஸ்டூடண்ட்ஸ் binomial நோமெண்க்ளேச்சர் இல்லாம பாடமே படிக்க முடியாது ,வெங்காயத்தையே Allium cepaனு தான் சொல்வோம் :) ஒரு காலத்தில் சைன்டிபிக் நேம் வஸ்ச்சிதான் எல்லாத்தையும் கூப்பிடறது :)

    பதிலளிநீக்கு
  51. வணக்கம் சகோதரரே

    ஓலா ஊபர் வழி காட்டுதல் பற்றி கூறியதெல்லாம் உண்மையே.. வருவதற்குள் நாம் கிளம்பி வெளியில் நிற்கவில்லையென்றாலும், இல்லை, வரும் போதே வழி தடுமாற்றங்கள் ஓட்டுனருக்கு ஏற்பட்டாலும் வண்டி கேன்சல் ஆகிவிடும்.

    காணொளிகள் இரண்டும் அருமை. ஏற்கனவே பலமுறை ரசித்து பார்த்தது எனினும், மீண்டும் புதிதாகவே இருக்கிறது. தங்களுக்கு உறவினர் வழி காட்டியதைப் பற்றி கூறியதை எல்லாம் ரசித்துப் படித்தேன். காணொளியை விட நகைசுவையாக இருந்தது. ஹா ஹா இங்கும் என் மகன் கேப் புக் செய்யும் போது அரைமணி நேரமாக கைபேசி வைத்துக் கொண்டபடி பேசிக் கொண்டிருக்கும் அவனையே பார்த்து கொண்டிருக்கனும். ரெடி என்றதும், வாசலுக்கு ஓடி விட வேண்டும். கொஞ்சம் வேறெதிலாவது கவனம் செலுத்தி விட்டால், போச்சு.. கேன்சல் ஆகி விட்டது என்பான்.

    பண்டாரம் வார்த்தை பல வேறு அர்த்தங்களுடன், மாறி விட்டதை அறிந்தேன்.

    பூவின் மாறுபட்ட கோணங்கள் அருமை.
    அதன் ஒவ்வொரு நிலையிலும், தங்களின் வாரத்தை ஜாலங்கள் வியப்பூட்டின. ரசிக்க வைத்தன. அது கற்றாழை இனத்தை சேர்ந்த பூவோ? ஆனால் பூவின் அழகு உண்மையிலேயே நன்றாகவே இருந்தது.

    கவிதை மிக மிக அருமை. அழகான வரிகளுடன் நிலவின் குளிர்ச்சி கவிதையிலும் நிறைந்திருந்தது. பாராட்டுகள். மேகங்கள் தழுவும் நிலாவும், நிலவு படங்களும் கண்ணுக்கு குளிர்வூட்டின.

    அனுஷ்கா படங்களும், கதம்ப முடிவை அழகுடன் அழகாக்கி தந்திருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  52. இடம் கண்டுபிடிக்கிற வேலை இருக்கிறதே..ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அனுபவம். மோசமானது டெல்லியில். இங்கே ஹனுமான்-ஜி கா மந்திர் ? என்று கேட்டவுடன் சொல்லிவிடுவான் பதிலை: ’சீதா (Seedhaa) ச்சல்லே ஜாவ்..!’ என்று ஒரு சாலையைக் காண்பித்துவிட்டுப்போய்விடுவான். போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான், அதிராவின் ஆஞ்சனேயரே நேரே எதிரே வந்து ’போதும் நில்லு..அது நாந்தான்!’ என்று சொல்கிறவரை.

    பண்டாரத்திற்கு கருவூலம் என்றொரு அர்த்தமா? கிராமத்தில் சிவன் கோவிலில் இருந்த பண்டாரம் ஒருவர் நினைவுக்கு வருகிறார். நன்றாக சங்கு ஊதுவார்-முக்கியமாக மார்கழிமாதக் காலைநேரங்களில். கிராமத்துப்பாட்டு ஒன்று நினைவில் லேசாக: பண்டாரம் படபடங்க.. பானைசட்டி கிடுகிடுங்க..! ‘.

    என்ன நினைத்து இப்படி அடுக்கிவைத்தான் ஆண்டவன்? கீதாS நாகலிங்கப்பூவா? என சந்தேகத்தைக் கிளப்பியவுடன், கிளம்பியது மனதின் ஆழத்திலிருந்து பழையபாட்டு:

    நாகலிங்கப் பூவெடுத்து
    நாலுபக்கம் கோட்டை கட்டி வா..வா..வா..!
    மாம்பழத்துச் சாறெடுத்து
    மல்லிகையில் தேனெடுத்து வா..வா..வா..!

    சிரிக்காதிருக்கும் அனுஷ்காவைப் போனால்போகிறதென்று பார்க்கலாம் கொஞ்சம் திரும்பி... அவ்வளவுதான்.

    படம்போட்டிருக்கிறீர்கள்தான். இருந்தும் ‘வானத்தையே நிறைக்குமென..’ என்றவுடன் ஆதவன் அல்லவா அதிரடியாக நினைவுக்கு வந்திருக்கிறான் நெல்லைக்கு..!

    பதிலளிநீக்கு
  53. நாகலிங்கப்பூ இல்லை என்று தெரியும். வேறு என்ன பூ என்றுதான் தெரியவில்லை. நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  54. வழி சொன்னதை, மற்றும் காணொளியை ரசித்ததற்கு நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  55. // ஓலா, உபேர் பத்திக்கேள்விப் பட்டிருப்பதால் நாங்க எப்போதுமே ஃபாஸ்ட் ட்ராக் தான்! //

    இதில் என்ன வித்தியாசம் கீதா அக்கா? அவர்களுக்கும் வழி சொல்லணுமே...

    கவிதைன்னு நீங்கள் சொன்னது அனுஷ்காவைதானே அக்கா?!!!

    பதிலளிநீக்கு
  56. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  57. // பண்டாரம் என்பதை வைப்புழி என்று //

    ஓ... நன்றி துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  58. வாங்க கீதா ரெங்கன்... கவிதையை ரசித்ததற்கு நன்றி. கவிதை நீங்கள்தான் காணோமே என்று கேட்டீர்கள்! அனுஷ் எப்பவும் அழகுதான் இல்லையா!
    அட, ஆமாம்.. நீங்களும் அந்தப் பூ படம் போட்டிருக்கிறீர்கள். இல்லை, பூவின் பாடங்களைக் குறைக்கவில்லை.

    எச படம்? தமன்னா? புரியவில்லையே கீதா!

    பதிலளிநீக்கு
  59. கீதா...

    // ஊபரில் இதுவரை எனக்குப் பிரச்சனை வந்ததில்லை ஸ்ரீராம்//

    ஊபர், ஓலா என்று இல்லை கீதா.. பிரச்னை, மற்றவர்களுக்கு நாம் எப்படி வழி சொல்கிறோம் என்பதுதான்!

    பதிலளிநீக்கு
  60. வாங்க வெங்கட்.. வணக்கம். ஆஹாஹாஹாஹா அனுஷ்கா!!

    பதிலளிநீக்கு
  61. வாங்க வல்லிம்மா... அனுஷ் அழகு இல்லாம என்ன பின்னே?!!! கவிதை பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  62. நன்றி தனபாலன். சிரித்தது எதைப்பார்த்து? ரசித்தது எதற்காக?

    பதிலளிநீக்கு
  63. வாங்க கோமதி அக்கா... அனுஷ்கா பூசணி படமா? பூசணி படம் நான் போடவில்லையே அக்கா... அனுஷையா அப்படிச் சொல்றீங்க?!!! ஜி பி எஸ் சமயங்களில் ஒரு குளக்கரைக்கு அழைத்துச் சென்று நிறுத்தி விடுகிறது. திருவாசகம் பாடல் சொன்னமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  64. வாங்க உமையாள் காயத்ரி.. என்ன பூ என்று தெரியவில்லை. அதைத்தான் உங்கள் எல்லோரிடமும் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  65. ஆ... ஏஞ்சல் எப்பவுமே முதலில் அனானியா வந்து விடையைச் சொல்றாங்க... நன்றி அனானி ஏஞ்சல்!

    பதிலளிநீக்கு
  66. வாங்க அதிரா... அசைவப்பதிவு அல்ல ஆசை வந்த பதிவு!

    // இப்போதான் வி ஐ பி வாறார்//

    அது யாரது!

    பதிலளிநீக்கு
  67. அதிரா...

    // நம கீசாக்கா மார்கட்டுக்கு சாமான் வாங்கச் சொல்வதைப்போல//

    அதானே... இன்னும் கீசாக்காவை இழுக்கலையேன்னு பார்த்தேன். வடிவேலு தாத்தாவின் காமெடிகளை ரசித்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  68. அதிரா..

    பண்டாரம் - நீங்கள் குறிப்பிடும் மனிதர்களை பற்றி எனக்கும் தெரியும். என் அலுவலகத் தோழி ஒருவர் நண்பர்களை செல்லமாக பண்டாரம் என்றுதான் திட்டுவார்!

    பதிலளிநீக்கு
  69. ஆ... நெல்லை... சுதா சேஷையனைப் பார்த்தல் வடிவுக்கரசி மாதிரி இருக்கிறதா? ஒன்று விட்ட சகோதரிகளோ!

    பதிலளிநீக்கு
  70. அதிரா... கீசாக்கா மட்டுமில்லை, கீதாவும் பூவைப் பறிக்கவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். பதியன் போட்ட... ச்சே... பதிவு போட்ட எனக்கு எப்படி படங்களைக் குறைக்க மனம் வரும் சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
  71. அதிரா...

    // ஸ்ரீராம் கெதியா தமனாக்காவைக் கூட்டியாங்கோ//

    நோ... ஒன்லி வடிவுக்கரசி படம்...

    பதிலளிநீக்கு
  72. வாங்க ஏஞ்சல்... இந்தப் பூவை நீங்களும் பதிவிட்டிருக்கிறீர்களா? அட!

    ஆராய்ச்சி அம்புஜம்... பெயர் நல்லாருக்கு இல்லே?

    // sriram இதே துக்ளக் பதிவை முகப்புத்தகத்தில் போட்டிருந்தார் :)//

    ஆனாலும் உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம்... ஆம்... அங்கிருந்துதான் எடுத்தேன்!

    எங்கள் ஊரில் ஜி பி எஸ் இருந்தாலும் இடையில் சுவர், குளம், ஆறு எல்லாம் குறுக்கே வரும்!!

    பதிலளிநீக்கு
  73. வாங்க கமலா ஹரிஹரன்... ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு ரசித்துக் கருத்துக் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி. அந்தப் பூவின் பெயரை நம்ம ஆராய்ச்சி அம்புஜம் (நன்றி அதிரா) ஏஞ்சல் சொல்லிட்டாங்க பாருங்க..

    இப்படித்தான் ஒருதடவை கல்கியில் பாரதி பாஸ்கர் ஒரு கட்டுரையில் ஒரு கல்கியின் சிறுகதை பற்றிச் சிலாகித்துச் சொல்லி இருந்தார். அது கல்கி எழுதியது என்று கூடச் சொல்லவில்லை. அதைப்பற்றி முகநூலில் ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்தக் கதையைக் கண்டு பிடித்துக் கொடுத்தது ஏஞ்சல்தான்.

    பதிலளிநீக்கு
  74. வாங்க ஏகாந்தன் ஸார்... நாம் வழி கண்டுபிடித்துப் போவதும், நாமே பிறருக்கு வழி சொல்வதும் வித்தியாசமான அனுபவங்கள்.. பின்னால் நினைத்து நினைத்துச் சிரிக்கலாம்.

    நாகலிங்கப்பூவுக்கு ஒரு பாட்டு சொல்லி விட்டீர்கள்....

    // இருந்தும் ‘வானத்தையே நிறைக்குமென..’ என்றவுடன் ஆதவன் அல்லவா அதிரடியாக நினைவுக்கு வந்திருக்கிறான் நெல்லைக்கு..! //

    விடுங்க ஸார்... நெல்லைக்குப் பொறாமை... தமன்னா படம் இப்படி அழகா இருக்காதே என்று!

    பதிலளிநீக்கு
  75. //இருந்தும் ‘வானத்தையே நிறைக்குமென..’ என்றவுடன் ஆதவன் அல்லவா அதிரடியாக நினைவுக்கு வந்திருக்கிறான் நெல்லைக்கு..! //

    ஹ்ஹாகாஹையோ

    பதிலளிநீக்கு
  76. ஆனாலும் உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம்... ஆம்... அங்கிருந்துதான் எடுத்தேன்!//
    இதே எங்கள் blog il அனானியா ஒரு மஞ்சள் ரோட்டோரப்பூவுக்கு கமெண்ட் கொடுத்தேன் இன் 2012 :)
    என் பிரச்சினையே எதும் மறக்கறதில்லை

    பதிலளிநீக்கு
  77. // இதே எங்கள் blog il அனானியா ஒரு மஞ்சள் ரோட்டோரப்பூவுக்கு கமெண்ட் கொடுத்தேன் இன் 2012 :)
    என் பிரச்சினையே எதும் மறக்கறதில்லை //

    ஓகே ஓகே இனி உஷாரா இருக்கேன்!

    பதிலளிநீக்கு
  78. வாங்க ஏஞ்சல்... இந்தப் பூவை நீங்களும் பதிவிட்டிருக்கிறீர்களா? அட!
    //
    இதை இங்கே நிறைய இடங்களில் பார்த்திருக்கேன் ,ஆராய்ச்சி அம்புஜம் :)

    பெருமையோடு ஏற்றுக்கொள்கிறேன் :) ஹாஹாஆ

    பதிலளிநீக்கு
  79. அனுஷ்காவை பூசணி என்று சொல்வார்களா?
    .
    அதுவும் அவருக்கு அருமையான ரசிகர் இருக்கும் போது.

    அனுஷா அழகு என்றேன்

    பூ படம் போட்டு இருந்தீர்கள் அல்லவா? அதுதான் தர்பூசணி பூ என்றேன். அழகுபூ என்றேன்.

    பதிலளிநீக்கு
  80. // பூ படம் போட்டு இருந்தீர்கள் அல்லவா? அதுதான் தர்பூசணி பூ என்றேன். அழகுபூ என்றேன். //

    ஓ... நன்றி... நன்றி... நன்றி கோமதி அக்கா.

    // அனுஷா அழகு என்றேன்//

    அதானே!

    பதிலளிநீக்கு
  81. //https://engalblog.blogspot.com/2012/03/blog-post_30.html//

    :)))))))

    பதிலளிநீக்கு
  82. அடடே... அதையும் உடனே தேடி எடுத்துட்டீங்களா? ஆனால் லிங்க் எனக்கு ஓபன் ஆகமாட்டேன் என்கிறது ஏஞ்சல். என்ன தலைப்பு அந்தப் பதிவுக்கு? 2013 லா?

    பதிலளிநீக்கு
  83. Friday, March 30, 2012
    மலரே, மலரே தெரியாதோ!

    பதிலளிநீக்கு
  84. //yellow mallow/Hibiscus pentaphyllus/
    Hibiscus caesius //

    நீங்க எடுத்தது இது தான் என்று நினைக்கிறேன் yellow mallow

    மூன்று அனானி பதில்களும் என்னுடையதே .//

    // engalBlog said, ஒரு அனானி சொன்னது:
    மூன்று அனானி பதில்களும் என்னுடையதே!
    ஆஹா இப்போ முழுவதும் வெளங்கிடிச்சு. மூன்று அனானிகளும் ஒருவரே! இந்த நான்காவது அனானிதான் யார் என்று தெரியவில்லை! //

    ஓ... இந்த அனானி மர்மம் இப்போதுதான் விளங்குகிறதா? நீங்கள்தானா அது ஏஞ்சல்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாதூஊஊ ச்ரீராம்.... எங்கள் புளொக்கில் 4 அநானியாஆஆ அந்த புளிய மரத்தில் தலைகீழாகத் தொங்குமே அதுதானே அநானீஈஈ ஹையோ வேப்பிலை கட்டிவிடுங்கோ இங்கின இல்லை எனில் ஜாமத்தில நான் வரமாட்டேஎன்ன்ன்ன்ன்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

      நீக்கு
  85. @Angel
    என் பிரச்சினையே எதும் மறக்கறதில்லை////

    ஆஆஆஆஆஆ ஆஞ்சனேயர் என்னைக் கைவிடேல்லை:) ... அப்போ என்னிடம் கடனா வாங்கிய அம்பேஏஏதாயிரம் பவுண்ட்ஸ் ஐ திரும்ப தந்திடுவா அஞ்சு மறக்காமல்:)

    பதிலளிநீக்கு
  86. ஆமா :) அப்போ சைன் இன் பண்ண lazy அனானியா டக்குனு போட்டுட்டு போய்ட்டேன் :)

    பதிலளிநீக்கு
  87. @மியாவ் முதலில் நீங்க எனக்கு தரவேண்டிய ஒரு லட்சத்தில் ஐம்பதாயிரத்தை கழிச்சிட்டு மீதி கொடுங்க எனக்கு மறதியே இல்லை

    பதிலளிநீக்கு
  88. இப்போதான் ஜிம் ல இருந்து பார்க்கிறேன்ன்ன் கவிதை ரொம்ப அழகு... நல்ல கற்பனை பாராட்டுக்கள் கவிஞர் ச் ரீராம்ம்ம்ம்:)... 💐💐💐💐💐💐

    பதிலளிநீக்கு
  89. // கவிஞர் ச் ரீராம்ம்ம்ம்://

    கர்ர்ர்ர்ர்ர்ர்.....

    பதிலளிநீக்கு
  90. // அப்போ என்னிடம் கடனா வாங்கிய அம்பேஏஏதாயிரம் பவுண்ட்ஸ் ஐ திரும்ப தந்திடுவா அஞ்சு //

    // மியாவ் முதலில் நீங்க எனக்கு தரவேண்டிய ஒரு லட்சத்தில் ஐம்பதாயிரத்தை கழிச்சிட்டு//

    உங்க சண்டைல எனக்குத் தரவேண்டிய நாற்பதாயிரம் பவுண்ட்ஸை மறந்துடப்போறீங்க....

    பதிலளிநீக்கு
  91. ஸ்ரீராம்/ ஏஞ்சலின் - //@நெல்லைத்தமிழன் கர்ர்ர்,,, சுதா சேஷய்யன் கம்பீரமான அழகு// - தவறு என்னுடையதுதான். சொன்னாச் சிரிப்பீங்க. நான் தூர்தர்ஷனில் அல்லது பொதிகையில் இவரது நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் பார்த்தவங்க முகம் மனதில் பதிந்தது. அதற்குப் பிறகு 30 வருஷமாச்சே (முன் ஜென்மம்-இது அதிராக்கு மட்டும்) என்பது எனக்கு மறந்துவிட்டது. இப்போ கூகிளாண்டவரிடம் கேட்டுப் பார்த்து, கால மாறுதல்களைப் புரிந்துகொண்டேன்

    பதிலளிநீக்கு
  92. / எனக்கு மறந்துவிட்டது. //

    அதுசரி நெல்லை.. ஆனால் வடிவுக்கரசியை மட்டும் மறக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  93. ஹையோ அந்த நாலாவதா வந்த அநானி நாந்தேன்ன்ன்ன் அஞு எல்லோரையும் பேய்க்காட்டுறா...

    ச் ரீராம் அது நீங்க அஞ்சு க்கு குடுத்த லோன்:) உங்களுக்கு மறதி அதிகம் மாறி அதிரா என நினைச்சிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
  94. //அதுசரி நெல்லை.. ஆனால் வடிவுக்கரசியை மட்டும் மறக்கவில்லை.///

    https://www.youtube.com/watch?v=5GP9RVZkWQo


    பதிலளிநீக்கு
  95. // ச் ரீராம் //

    கர்ர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்ர்.....குர்ர்ர்ர்ர்...

    // அது நீங்க அஞ்சு க்கு குடுத்த லோன்://

    நீங்க கேட்டதாததான் வாங்கினாங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாதூஊஉ மீ கேட்டேனாமா ஹையோ அஞ்சு சிவப்புப் பொய் சொல்லியிருக்கிறா இது அந்த 3 வது அநானிமேல் சத்தியம்ம்ம்ம்ம்ம்ம்...

      மீ தேம்ஸ்ல குதிக்கிறேன்ன்ன்ன்ன்ன்:)

      https://www.google.co.uk/search?q=suicide+cat&client=safari&hl=en-gb&prmd=ivn&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwjw7vbtnMHbAhURaVAKHfz2Bi4Q_AUIESgB&biw=414&bih=622&dpr=3#imgrc=Hlept2VZ0noBwM:

      நீக்கு
  96. ஸ்ரீராம்/ஏஞ்சலின் - //ஆனால் வடிவுக்கரசியை மட்டும் மறக்கவில்லை// - இதற்கும் ஒரு காரணம் உண்டு. இவங்க, காந்திமதி போன்றவர்கள் ஒரே கேட்டகரி (குணசித்திர, வயதான கிராமத்து கதாபாத்திரம்). ஆனால், ஒரு முறை, தவறுதலாக ராஜ் தொலைக்காட்சியைப் பார்த்தபோது, அதில் ஒரு நிகழ்ச்சியில், வடிவுக்கரசி, நடிப்பைப் பற்றிய ஒரு தொடர் நிகழ்ச்சி வழங்கினார். அப்போ அவரது நடிப்புத் திறமையைப் பார்த்து மிக வியந்தேன். அப்போதான், நாம் 'சாதாரணம்' என்று நினைக்கும் நடிகைகள், நடிகர்கள் போன்றவர்களும், மிகவும் திறமைசாலிகள் என்று புரிந்தது. அதிருஷ்டம் உள்ளவர்கள் குன்றின்மேல் இட்ட விளக்குபோன்ற நிலைக்கு வந்துவிடுகிறார்கள். பலர், திறமை இருந்தும் சாதாரணர்களாகவே இருந்துவிடுகிறார்கள் (தேவையான உயரத்தை எட்டாமல்) என்று புரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  97. பூவும், கவிதையும் அழகு.அனுஷ்காவை தனியாக குறிப்பிட வேண்டுமா என்ன?.
    பண்டாரம் என்றால் கருவூலம் என்பது தெரிந்த விஷயம்தான். நம் ஊரில் கருவூலமான பண்டாரத்தையும், எதுவுமே இல்லாத ஆண்டியையும் சேர்த்து ஆண்டி பண்டாரம் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
  98. @நெ.த. வடிவுக்கரசியையும் காந்திமதியையும் ஒப்பிட முடியாது. வடிவு பல மடங்கு மேலானவர். அவருடைய வடிவம் அவருக்கு கதாநாயகி அந்தஸ்து தரவில்லை.

    பதிலளிநீக்கு
  99. தர்பூசனி - அது பழம்..
    உண்டால் குளுமை...

    அனுக்கா - இது மலர்..
    கண்டாலே குளுமை!...

    (சும்மா ஏதாவது சொல்லி வைப்போம்..ந்னு சொன்னதல்ல!...)

    பதிலளிநீக்கு
  100. இப்போ மணி நண்பகல் 12.54..
    உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது..

    பதிலளிநீக்கு
  101. எல்லாரும் சாப்பிட்டுட்டு
    இளங்குறட்டையில் இருக்கும் நேரம்...

    நம்ம உளறலை யார் ரசிக்கப் போறாங்க?..

    பதிலளிநீக்கு
  102. /// Wild Passion.. ///

    மலரே முள்ளாய் மாறியது..
    என்ன இது.. இறைவா உன் படைப்பு?..

    /// Smiling Beauty.. ///

    முட்களை மலராய் மாற்றுவது..
    என்னே இறைவா உன் படைப்பு!...

    பதிலளிநீக்கு
  103. // மீ தேம்ஸ்ல குதிக்கிறேன்ன்ன்ன்ன்ன்:)//

    ஹா... ஹா... ஹா... சூப்பர் செலெக்ஷன் அதிரா. ஆனா மொத்தமா லிங்க் எடுத்துட்டீங்க போல!

    பதிலளிநீக்கு
  104. நெல்லை... காந்திமதி Vs வடிவு... நோ...! ஆனால் நீங்கள் சொல்வது நிஜம். எல்லாத் திறமைகளும் கண்களுக்குத் தெரிவதில்லை. இன்னொன்று சொல்லவேண்டும். சிப்பிக்குள் முத்து, தென்கிழக்குச் சீமையிலே போன்ற படங்களில் ராதிகா நடிப்பையும், கிழக்கே போகும் ரயில், நிறம் மாறாத பூக்கள் போன்ற படங்களில் ராதிகா நடிப்பையும் ஒப்பிட முடியுமா? படிப்படியாக திறமைசாலிகளாகின்றனர்!

    பதிலளிநீக்கு
  105. வாங்க பானு அக்கா...

    // அனுஷ்காவை தனியாக குறிப்பிட வேண்டுமா என்ன?. //

    அவசியம் இல்லைதான். ஆனால் எல்லோருக்கும் தெரிய வேண்டுமே...!

    பதிலளிநீக்கு
  106. துரை செல்வராஜூ ஸார்...

    // (சும்மா ஏதாவது சொல்லி வைப்போம்..ந்னு சொன்னதல்ல!...//

    அல்லன்னு அதிகமா டைப் பண்ணிட்டீங்க!


    உங்களுக்கு உச்சி வெயில். எங்களுக்கு காஃபி சாப்பிடும் நேரம்!

    மலர் முள்ளாய் மாறுவதும், முட்கள் மலராவதும் காலம் செய்த கோலம்... கடவுள் செய்த......

    பதிலளிநீக்கு
  107. ஏகாந்தன் அண்ணனின் பாட்டுப் பார்த்து எனக்கும் நினைவுக்கு வந்துது ஊரில் கோயிலில் பாடும் பஜனைப்பாடல்..

    பண்டாரம் போலிருக்கும் எங்கள் குல தெய்ய்ய்வம்

    அண்டினோரை வாழ வைக்கும் எங்கள் குல தெய்வம் என வரும் ஹா ஹா ஹா..

    அதாவது ஆடாமல் அசையாமல் எப்பவும் ச்ச்சும்மா இருப்போரைப்:) பார்த்தும் பண்டாரம் எனப் பேசுவதுண்டு ஹா ஹா ஹா நான் இங்கு ஆரையும் குறிப்பிடவில்லை ஹையோ ஹையோ:))

    பதிலளிநீக்கு
  108. நாங்க தொண்டை வறளக் கத்தினாலும் எட்டிப் பார்க்க மாட்டார்ர்.. இப்போ என்ன தனியே வந்து நிண்டு ஓவர் ஃபீலிங்கூஊஊஊஊஊஊஉ துரை அண்ணனுக்கு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    அது ச் ரீராம்:)).. மொபைலில் லிங் குடுத்தால் முழுவதுமா தருது:))

    பதிலளிநீக்கு
  109. டீச்சர் துளசி கோபால் என்விட்டூக்கு வந்திருந்தார் என்வீட்டுக்கு வருவதுமிக எளிதான ஒன்று அருகே இருக்கும் ஐயப்பன் கோவில் லாண்ட்மார்கங்கிருந்த்ய்சுமார் 700 மீட்டர்தூரமென்வீடு அவர்கள் வரும்போது தொலை பேசியில்தொடர்பு கொண்டார் நான் என்வீடுஇருக்கும் பிரதான சாலை பெயரை குற்ப்பிட்டு நேராக வரும்படியும் வீட்டு வாசலில் நாங்கள் காத்திருப்போம் என்றும் கூறினேன் ஆனால் என்னை எப்படிப் புரிந்து கொண்டார்களோ தெரியவில்லைஎங்கெல்லாமோ போய் வீட்டுக்கு வருவதையே கான்சல் செய்ய இருந்தார்கள் கடைசியாக ஒரு வழியாக வந்துசேர்ந்தார்கள் வழி சொல்பவர்மட்டும் போதாது புரிந்து கொள்ளவும் வேண்டும் ஓலாவில்கூகிள் மாப்பைப் பார்க்கத்தெரியாத ட்ரைவர்களையும் கண்டிருக்கிறேன் 15 கிமீ தூரம் போக இருக்கும்போது வண்டியில் ஏறியதும் நம்மிடமே வழிகேட்டவர்களையும் பார்த்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  110. / நாம் 'சாதாரணம்' என்று நினைக்கும் நடிகைகள், நடிகர்கள் போன்றவர்களும், மிகவும் திறமைசாலிகள் என்று புரிந்தது//

    @நெல்லைத்தமிழன் ..உண்மைதான் ..ஒரு பொன்னாத்தா மட்டுமே அது வடிவு ஆன்ட்டி மட்டுமே :)

    அதே மாதிரி 16 வயதினிலே இப்படி சொல்லும்போது உடனே செந்தூரப்பூவேன்னு மயில் நினைவு வரும் ஆனா அதையும் தாண்டி அவங்கம்மா காந்திமதி :) ..திரையுலகம் சிலரை நன்கு பயன்படுத்தவில்லையோன்னு தோணும் சிலநேரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Halllooooo அத்தாரது சுவீட் 16 பற்றிப் பேசுறதூஊஉ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
  111. நெல்லைக்குப் பொறாமை... தமன்னா படம் இப்படி அழகா இருக்காதே என்று!//

    ஹா ஹா ஹா ஹா அதே அதே...ஸ்ரீராம்...அதான் ஜாக்கிரதையா போடுங்கனு சொன்னா நம்ம சினிமாவுல வரா மாதிரி.....அன்பர்களே வீட்டைக் கொளுத்தாதீர்கள்...கல்லை எறியாதீர்கள்...என்றுய் சொன்னால் என்ன அர்த்தம்!!?

    ஸ்ரீராம் அதிரா சொன்ன விஐபி...வேறு யாருமல்ல என் பையன் வரானாம் அதனால நான் வீட்டைக் க்ளீன் செய்வதில் பிசியா இருக்கேன் காணலைனு என்னைக் கலாய்த்தல்...ஹா ஹா ஹா...ஹையோ எல்லாம் வாசித்தேன் பதில் போட முடியலை....

    செமைய சிரிச்சேன் அதிரடி ஆட்டம் போட்டுட்டுப் போய்ட்டாங்க...நான் நாளை இன்னும் பிஸி...

    அதிரா உங்களுக்கு ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடிக்கு மட்டும் வழி தெரியுமல்லோ!!!?

    ஹலோ எனக்கும் நீங்க தரவேண்டிய பாக்கி இருக்கு...ஏஞ்சல் உங்களுக்குத்தான் நினைவு ஜாஸ்தி மீ மறந்துருவேன்...ஸோ நினைவு வைச்சுக்கங்க..ஹிஹி

    துரை அண்ணா உங்க கமென்ட் ரசித்தேன்......

    ஸ்ரீராம் எச படம்னா.....எச பாட்டுனு சொல்லுவீங்கல்லா...அதைத்தான் எச படம்நு ஹிஹிஹிஹிஹி....

    கீதா

    பதிலளிநீக்கு
  112. ஸ்ரீராம் தெரியும் நான் தான் கேட்டேன் உங்க கவிதையை...அதுக்குத்தான் நன்றி நவிலல் அந்த கமென்டில்...

    ரொம்பவே ரசித்தேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  113. எங்கள் ஊரில் அதாவது நான் வகிக்கும் ஊரில் எல்லாம் வழி சொல்லுவது என்பது சில இடங்களில் ரொம்பவே கடினனம் மலையும் பள்ளமும் இருப்பதால்...பல இடங்களில் தெரு பெயர் எல்லாம் கிடையாது. ஏன் ஏரியா பெய்யரே இருக்காது.
    ஊபர் ஓலா எல்லாம் அத்தனை ப்ராபல்யமாக இல்லை நகரங்களில் கொச்சி, எர்ணாகுளம், திருச்சூர், திருவனந்தபுரம் எல்லாம் சமீபத்தில்தான் வரத் தொடங்கியிருக்கிறது அதுவும் ஊபர். இங்கு ஆட்டோவே சீப் தான்..

    பண்டாரம் நல்ல சொல். அதன் அர்த்தம் மாறியிருப்பது போல், நான் தமிழ்நாட்டில் இருந்த வரை பல சொற்களின் அர்த்தம் தற்போது மாறியிருப்பது தமிழ்த்திரைப்படங்களில் அறிய முடிகிறது,

    அந்தப் பூ மிக மிக அழகாக இருக்கிறது. இங்கும் காண்பதுண்டு. பெயர் தெரியவில்லை.

    அனுஷ்காவின் தரிசனம் மீண்டும்!

    உங்கள் கவிதையை மிகவும் ரசித்தேன். அழகான கற்பனை! வழக்கம் போல் உங்கள் கற்பனை கண்டு வியப்பு ஸ்ரீராம்ஜி. அனைத்தும் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  114. ஸ்ரீராம் உங்களுக்கு வழி சொன்னவர் போன்று எங்கள் வீட்டிலும் ஒருவர்....அந்த முக்குல போனதும் ரெண்டு ரோடு பிரியும். இடது பக்க ரோடுல திரும்பக் கூடாது. வலது பக்க ரோடுல திரும்பணும்...இப்படி முதலில் எங்கு செல்லக் கூடாதோ அதைச் சொல்லிவிட்டு சரியாகத் திரும்புவதைச் சொல்லுவார்....ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  115. // மீ தேம்ஸ்ல குதிக்கிறேன்ன்ன்ன்ன்ன்:)//

    ஹா... ஹா... ஹா... சூப்பர் செலெக்ஷன் அதிரா. ஆனா மொத்தமா லிங்க் எடுத்துட்டீங்க போல!//

    ஹா ஹா ஹா ஆமா....மொத்தமா குத்தைகையே எடுத்துட்டாங்க!!! போல...

    கீதா

    பதிலளிநீக்கு
  116. நாங்கள் புதிதாக ஒரு இடத்துக்குப் போவதாக இருந்தால், போக வேண்டிய இடத்தில் இருப்பவருக்கு ஃபோன் செய்து ஓட்டுனரிடமே வழியைச் சொல்லச் சொல்லி விடுவோம்! இதிலும் சில இடக்குகள் வரும் - இந்த இடத்துக்கு வந்தவுடன் மறுபடி ஃபோன் செய்யச் சொன்னார் என்று!! சென்ற வருடம் புதிய ஊரில் வீடு தேடி வந்த போது கற்ற பாடம்!! மேப்பில் தவறுகள் இருப்பதனால் பின் வாசல் காம்பவுண்ட் சுவரில் போய் நின்ற அனுபவமும் உண்டு!!
    பூ படங்கள் மிக அழகு!

    பதிலளிநீக்கு
  117. நன்றி ஜி எம் பி ஸார்... அப்போ நீங்க வழி சொல்வது யாருக்கும் புரியாது என்று சொல்லுங்கள்!!!

    பதிலளிநீக்கு
  118. நன்றி கீதா ரெங்கன். நாளை முதல் ஒரு வாரத்துக்கு உங்களுக்கு லீவா? ம்ம்ம்.... கஷ்டம்தான்! உங்கள் பங்கையும் என் வீட்டு மொட்டை மாடியில் போடச் சொல்கிறீர்களா? எச படம்... புரிந்தது!

    பதிலளிநீக்கு
  119. / பின் வாசல் காம்பவுண்ட் சுவரில் போய் நின்ற அனுபவமும் உண்டு!!//

    ஹா... ஹா... ஹா... அதே... அதே.. கூகிள் தவறு! நன்றி மிடில்க்ளாஸ்மாதவி.

    பதிலளிநீக்கு
  120. வழி கேட்டுச் சொல்லும்
    அவஸ்தையை இத்தனை
    சுவையாக சுவாரஸ்யமாகச்
    சொன்னது அருமை

    பூக்களின் அணிவகுப்பும்...

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  121. நல்ல தொகுப்பு.
    பூக்களைப் பொறுமையாகப் படமாக்கியிருக்கிறீர்கள்.
    கவிதை அருமை. அனுஷ்கா அழகு:)!

    பதிலளிநீக்கு
  122. நான்வழிசொன்னால் ஐலர் தவறாகப்புரிந்துஅல்லது அவர்களாகஏதாவது நினைத்துப் போகிறார்கள் ஒரு முறை வந்துபாருங்கள் சரியாகவழி சொல்கிறேனா என்று

    பதிலளிநீக்கு
  123. அனைருக்கும் பாராட்டுகள் கண்களை குளிர்வித்த து பூக்கள்

    பதிலளிநீக்கு
  124. கால் டாக்சி அனுபவம் எனக்கும் பல நேரங்களில் எரிச்சல் ஊட்டுகிறது. அண்ணா நகரில் இரவு பத்து மணியளவில் ஒரு டாக்சியில் ஏறி பத்தடி தூரம் கூட ஓடவில்லை. உடனே நிறுத்தி சார் ஒங்க டிரிப் கேன்சல் வேற டிரிப் புக் ஆயிடுச்சு என்று இறக்கி விட்டார் இதுதான் நிலைமை

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!