வியாழன், 21 ஜூன், 2018

அனுஷ்கா என்னைவிட அழகா என்ன?



என் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார்.  அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.


சித்திக்கு 70 வயது ஆகிறது.  இரண்டு மகன்கள்.  முதல் மகனுக்கு ஒரு மகன் .  இரண்டாவது மகனுக்கு ஒரு மகள், ஒரு மகன்.  மகன் இளையவன்.  அந்த இளைய பேரனைச் சமாளிப்பது மிகவும் கடினம்.  பேத்தியும் விஷமம்தான்.  ஆனால் இரு கோடுகள் தத்துவத்தில் அவள் தேவலாம் என்றாகியிருந்தாள்.

ஒருமுறை (சென்ற வருட வரலக்ஷ்மி விரதம் அன்று) அந்தச் சிறுவன் எங்களிடம் இருக்கவேண்டிய நிலை வந்தது.  காலை சுமார் எட்டரை மணிக்கு பாட்டியையும் பேரனையும் பேத்தியையும் கொண்டு வந்து விட்டுவிட்டு அந்த இளைய மகன் சென்றுவிட, அந்த நாள் பரபரப்பான நாளாக அமையப்போகிறது என்று தெரியாமலிருந்தோம்.


தகப்பன் கிளம்பிச் சென்ற அரைமணியில் சிறுவனின் பராக்கிரமம் ஆரம்பமானது.  "அவனுக்குப் பிடிக்கலைன்னா அவன் எதையும் எடுத்து வெளியே வீசிடுவான்" என்று பாட்டி (சித்தி) எச்சரிக்கை செய்யும் தொனியில் பெருமை காட்ட, அரசியல் தொண்டனாய் செயல்பட்டான் சிறுவன்.  

கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வீசத் தொடங்கினான்.  அவனிடமிருந்து விலை உயந்த / உபயோகமான பொருட்களைக் காப்பாற்றுவது பெரும்பாடாய் இருந்தது.  இன்னொருவர் வீட்டுக்குழந்தையாய் இருந்ததால் கோபிக்கவும் முடியவில்லை.  இல்லாவிட்டால் முதுகில் ஒன்று வைத்திருக்கக் கூடிய நிலையை மதியானத்துக்குள் ஏற்படுத்தி இருந்தான் சிறுவன். 

படம் நன்றியுடன் இணையத்திலிருந்து...

பாட்டி (சித்தி)  பார்க்காதபோது அவனை கடுமையாய் முறைத்துப் பார்த்து அடக்கி வைக்க முயன்றேன்.  அதனாலேயே அவனுக்கு எதிரியானேன்.  அதற்குள் சில புத்தகங்கள் என் அருகிலிருந்து உருவி வீசப்பட இருந்த நிலையில், அதைக் காப்பாற்றும் முயற்சியில் சில நல்ல புத்தகங்கள் கிழிபட்டன.  சித்தி சிரித்தார்.  "அவன் பொல்லாதவன்...   அப்படிதான் விளையாடுவான்"

பொல்லாதவன் திரைப்படத்தில் ரஜினியின் பெண்குழந்தை அஞ்சு ஸ்கூலுக்குக் கிளம்ப வேலைக்காரர்களை படாத பாடு படுத்திக்கொண்டிருப்பார்.  திட்டவும் முடியாமல், கொஞ்சவும் முடியாமல் அவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கையில் ரஜினி அங்கு வந்து விடுவார்...

"என்ன...  என்ன நடக்குது இங்கே?" என்பார்.

"ஒண்ணுமில்லீங்க..  ஸ்கூலுக்குப் போக மாட்டேன் என்று பாப்பா சமர்த்தா அடம் பிடிக்குதுங்க.." என்று பல்லைக் கடித்துக் கொண்டு புன்னகையுடன் சொல்வார் வேலைக்காரர்களில் ஒருவரான சுருளி.

அதுதான் நினைவுக்கு வந்தது சித்தி சொன்ன பொல்லாதவன் வார்த்தையைக் கேட்டதும்..

ஆனால் அந்த வார்த்தையால் உற்சாகம் பெற்ற சிறுவன் வேறு சில புத்தகங்களைக் கவர்ந்துகொண்டு ஓடினான்.  பின்னாலேயே கௌரவமான வேகத்தில், பதட்டம் வெளிக்காட்டாமல் (என்று எனக்குள் நினைத்துக்கொண்டு)  நானும் பின்தொடர, என் மனைவி குறுக்கிட்டுப் புத்தகங்களைக் காப்பாற்றித் தந்தாள்.

என் மகன் ஒரு ஏரியாவுக்குக் காவல் இருக்க, நான் ஒரு ஏரியாவுக்கும், மாமியார் ஒரு ஏரியாவுக்கும் காவல் இருந்தோம்.   இப்போது கணினி மேல் அவன் பார்வை திரும்பியது.  நான் ப்ளாக் வேலையில் மும்முரமாக இருந்தேன்.   "கம்ப்யூட்டர்ல அவன் நல்லா வேலை செய்வான்"  - சித்தி.

போதாதா?

அதை அவனைத் தொடாமல் இருக்க வைக்கச் செய்த முயற்சிகள் பலிக்காமல், அவன் அருகிலேயே இருந்து அவனைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்ததை சித்தி பெருமையான சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

படம் நன்றியுடன் இணையத்திலிருந்து....

எனக்குக் கோபம் வரத் தொடங்கி, அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் வார்த்தைகள் குரலில் சற்று கடினமாக வெளிப்பட்ட நேரம்,   "மாப்பிள்ளை..   அவனுக்குக் கோபம் வந்தா கையை இழுத்து வைத்துக் கடிச்சுடுவான்..."

"ஆ....  என்று அலறினேன்.  பாட்டி சொன்னதை கணநேரம் கூடத் தாமதிக்காமல் -  நான் சுதாரிக்க சற்றும் இடம் தராமல் - நிறைவேற்றி விட்டான் பையன்.

என் கண்கள் கலங்கி விட்டது.  பாஸ் சமாளிப்புச் சிரிப்புடன் வந்து அவனை "விஷமம்...   விஷமம்..." என்று அப்புறப்படுத்தி அழைத்துச்....  "ஆ....ஆ.... "   

நீளமான 'ஆ' வினால் கடியின் வீர்யத்தை உணர முடிந்தது.  

"அச்சச்சோ..."  சித்தி வந்து அவனைத் தூக்கிக் கொள்ள, சித்தி வினை சித்தியைச் சுட்டது...

"ஆ....  "   

அவன் முதுகில் பலமாக ஒன்று விழுந்தது.   அப்புறம் அவன் அழுகையை நிறுத்த நடந்த முயற்சிகள் பற்றிச் சொன்னால் என் ஏக்கம் தீரலாம்; உங்கள் தூக்கம் போய்விடும்! (நன்றி வைரமுத்து) 

"உம்மாச்சி ..   பாரு.கைகூப்பு...  லக்ஷ்மி ஸ்தோத்ரம் சொல்லு"  அதெல்லாம் சொல்லுவான்.  பிரபந்தம் சொல்ல ஆரம்பித்தவன், வரலட்சுமிக்கு செய்யப்பட்டிருந்த அலங்கார மாலைகளில் கீழ்உள் மாலையை சட்டென இழுத்துப் பார்த்தான்.  வரலக்ஷ்மி மண்டபத்தின் உள்ளே திரும்பி முதுகு காட்ட, சாற்றப்பட்டிருந்த தங்க நகைகள் உட்பட எல்லாம் சிதறின.  அதில் சிலவற்றை கையிலெடுத்து நொடிநேரத்தில் வெளியே ஓடிவிட்டவனைத் துரத்திச் செல்ல முயற்சிக்கையில் என்னை முந்திக் கொண்டு ஓடினார் பாஸ்.

அவன் தூங்கிய இரண்டு மணிநேரம் எ(ங்கள்)ன் வாழ்வின் பொன்னான தருணம்.

மதியம் மூன்று மணி போல அவன் வீட்டுக்குக் கிளம்பியபோது நான்கு நிம்மதிப் பெருமூச்சுகள் சந்திரமுகி பாம்பு விடுவது போல வெளிப்பட்டது.  எங்கள் வீடுகளில் சிறு வயதில் யார் யார் எவ்வளவு விஷமங்கள் செய்தோம் என்று நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

"ஆனாலும் இவ்வளவு தின்னக்கம் யாருக்குமே  கிடையாது,  நானும் பார்த்ததில்லைப்பா..." - மாமியார்.

அப்போதுதான் அப்படி அவஸ்தைப் பட்டோமே தவிர, மறுவாரம் வேறொரு குடும்ப விழாவில் அனைவரும் வந்திருக்க, அவன் வராதது வருத்தமாக இருந்தது.  அவன் கையில் அடிபட்டிருந்ததால் வரவில்லையாம்.  "அந்த அறுந்த வாலைப் பார்க்க முடியவில்லையே..."  என் மணிக்கட்டைத் தடவிவிட்டுக் கொண்டேன்.

சரி, இப்போது மறுபடி முதல் பாரா விஷயத்துக்கு வருகிறேன்.  சித்தியின் துக்கத்துக்கு காரணம் அந்தப் பேரன்தான்.  அதாவது இந்த வருடம் யு கே ஜி போயிருக்கும் அவன்........


small a எழுத மாட்டேன் என்கிறானாம்.  எழுதவே மாட்டேன் என்கிறானாம்!  

பாஸ் சிரித்து விட்டார்.  "உங்களுக்குத் தெரியாததா சித்தி...  உங்கள் மகன்களை நீங்கள் வளர்க்காததா?  எங்கள் பையன் கூடத்தான் F மற்றும் E  ஐ திருப்பிதான் போடுவான்.  கொஞ்ச நாள் கழிச்சு சரியானது...   அவ்ளோதான்....  கவலையை விடுங்க"  


========================================================================================================

பூவில் புதிரொன்றுமில்லை.  சாலையோரத்தில் பார்த்த டேட்டுரா மெட்டல்!  ஸ்பீக்கர் பூ!  ஆசைப்பட்டு எடுத்த படத்தை சும்மா ஆர்வத்தில் பகிர்கிறேன்.






ஒரு அப்டேட்.  




உண்மையா, பொய்யா தெரியவில்லை.  கடந்த வியாழன் ஒன்றில் ஒரு அழகான பூ பகிர்ந்திருந்தேன் இல்லையா, அதன் பழத்தைச் சாப்பிடுவார்களாம்.  எடுத்துச் சாப்பிட்டார் எங்கள் ஆட்டோக்காரர்.  என்ன பெயர் என்று கேட்டேன்.  அவர் பெயரை அல்ல, பழத்தின் பெயரை.  ''மூக்குசளிப்பழம் என்று நினைக்கிறேன்'' என்றார்.

========================================================================================================


தாராசுரம் சென்றபோது.......





இது பழசு...  இந்த முறை காலையிலேயே சென்றும் அங்கு "அந்த ஆளை" காணோம்!!


=====================================================================================================







=======================================================================================================

உண்மையில் இந்தப் பதிவை பத்து நாட்களுக்கு முன்னாலேயே தயார் செய்துவிட்டேன்.  பின்னர் வந்ததுதான் அதிரா பதிவு.  அதில் அதிரா அணுகுண்டு மாதிரி அனுஷ் படம் சேர்த்திருந்தார்.   


அனுஷ்கா என்னைவிட அழகா என்ன?


"சொல்லுங்க நெல்லை...  இந்த போஸ் ஓகேயா?"


"அப்போ...   அடுத்த வாரம் பார்க்கலாமா?  டாட்டா சொல்லலாமான்னு ஸ்ரீராம் கேட்கச் சொல்றார்"



===========================================================================================================

120 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா அனைவருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் ,கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  3. ஆஹா காத்திருந்தும் விட்ட பதிவுகள் கமென்ட்ஸ் போட்டுக் கொண்டிருந்ததில் டக்கென்று மிஸ் ஆகிவிட்டது...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்...

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் பானு அக்கா...

    பதிலளிநீக்கு
  7. adadaa! Banumathiyoda post parththuttu iruwthathil ingkee vara maranwthu pochu! :)

    பதிலளிநீக்கு
  8. ஆஹா இன்று நெல்லைக்கு உற்சாகம்....அதுவும் அழகான படங்களா போட்டுட்டீங்க....அதிரா தான் குண்டு அனுஷ் போட்டு பழி வாங்கினார்...ஹா ஹா ஹா ஹா ஹா..ஆனால் பாருங்க ஸ்ரீராமுக்கு எவ்வளவு நல்ல மனசு!!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  9. எழுதிய கவிதையை ஏன் நிராகரிக்க வேண்டும்?...

    காக்கைக்கும் தன் குஞ்சு
    பொன் குஞ்சு தானே!..

    இப்போ -
    தமன்னா இருக்கையில்
    அனுக்காவும் இல்லையா!?...

    பதிலளிநீக்கு
  10. இனிய காலை வணக்கம் கீதா அக்கா... ஸ்ரீரங்கம் திரும்பியாச்சா? (கர்ர்ர் எல்லாம் சொல்லக்கூடாது)

    பதிலளிநீக்கு
  11. கீதா ரெங்கன்.. இது அதிரா பதிவுக்கு முன்னரே ஷெட்யூல் செய்து வைத்தது.

    பதிலளிநீக்கு
  12. கவிதை அருமை ஸ்ரீராம்...

    இப்ப உங்கள் கவிதை பார்த்து என் கை என் கவிதை????(எப்போதேனும் கவிதை என்ற பெயரில் எழுதுவது...ஹிஹிஹி) நிராகரிக்கிறதே!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஆஹா... எங்கெங்கும் ரெட்டை வால் ரெங்குடு நிறைய இருக்கும் போல!...

    பதிலளிநீக்கு
  14. கீதா ரெங்கன்.. இது அதிரா பதிவுக்கு முன்னரே ஷெட்யூல் செய்து வைத்தது.//

    பார்த்துவிட்டேன் பார்த்துவிட்டேன்....நெல்லை காட்டில் இன்று மழை!! சென்னை வெயில்லில் நெல்லைக்கு வேண்டிய ஒன்றுதான் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  15. எழுதிய கவிதையை விட அடுத்த கவிதை நன்றாக இருந்தால் வந்த கூச்சமாக இருக்கலாம் துரை செல்வராஜூ ஸார்... அவர்கள் படத்தில் ரஜினி வாங்கி வந்த ஆப்பிள்களை பார்த்து விட்டு தான் வாங்கி வந்த ஆப்பிள்களை மறைத்து வைப்பாரே கமல்.. பார்த்த்திருக்கிறீர்களா!

    பதிலளிநீக்கு
  16. துரை செல்வராஜூ ஸார்..

    // இப்போ -
    தமன்னா இருக்கையில்
    அனுக்காவும் இல்லையா!?... //

    ஹா... ஹா... ஹா... மாற்றிச் சொல்கிறீர்கள்.. இங்கே அனுஷ் இருக்கையில் தமன்னாவும் இல்லையா என்று வரவேண்டுமாக்கும்!!!

    பதிலளிநீக்கு
  17. கீதா ரெங்கன்..

    // இப்ப உங்கள் கவிதை பார்த்து என் கை என் கவிதை????(எப்போதேனும் கவிதை என்ற பெயரில் எழுதுவது...ஹிஹிஹி) நிராகரிக்கிறதே!!!!!!!//

    ஹா.. ஹா.. ஹா... அப்படியெல்லாம் பேசப்படாது!

    பதிலளிநீக்கு
  18. இங்கு பூக்கள் தேன் என்றால் தஞ்சையம்பதியில் திருவாசகத்தேனை ருசிக்கத் தொடங்கியிருக்கேன்....ருசித்துவிட்டு , கடமை ஆற்றிவிட்டு வருகிறேன்...அப்பால

    கீதா

    பதிலளிநீக்கு
  19. துரை செல்வராஜூ ஸார்..

    // எங்கெங்கும் ரெட்டை வால் ரெங்குடு நிறைய இருக்கும் போல!... //

    ஆமாம்... அப்போ கோபம், எரிச்சல் வந்தாலும் அப்புறம் நினைத்துப்பார்த்து ரசித்துச் சிரிக்க முடிந்தது!

    :)))

    பதிலளிநீக்கு
  20. // நெல்லை காட்டில் இன்று மழை!!//

    கீதா.. அழகான படங்களாக செலெக்ட் செய்து போட்டிருக்கிறேன் இல்லை?!!

    பதிலளிநீக்கு
  21. கிகிகீகிகிகீ இந்த மாதிரி வால் பசங்களை வைச்சுச் சமாளிச்ச அனுபவம் நிறைய எனக்கு உண்டு. நல்லா ரசனையோடு எழுதி இருக்கீங்க! குழந்தைங்கன்னா விஷமம் பண்ணத்தான் செய்யும்னு நம்ம வீட்டுக் குழந்தை செய்யும்போது சொல்வோம். அதுவே அடுத்த வீட்டுக் குழந்தைன்னா தர்மசங்கடமா இருக்கும். நம்ம குழந்தை தேவலைனு ஆயிடும்.

    அது சரி அந்தப் படங்கள் எல்லாமே தமன்னாவா? ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு முகமாய்த் தெரியுதே! எல்லாமே ஒருவர் தானா?

    பதிலளிநீக்கு
  22. // அதுவே அடுத்த வீட்டுக் குழந்தைன்னா தர்மசங்கடமா இருக்கும். //

    ஹா.. ஹா.. ஹா.. ஆமாம் கீதாக்கா.. சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது நிலைமை!

    பதிலளிநீக்கு
  23. // இந்த மாதிரி வால் பசங்களை வைச்சுச் சமாளிச்ச அனுபவம் நிறைய எனக்கு உண்டு??

    பின்னே? உங்க வயசுக்கு இதெல்லாம் ஜுஜுபி ஆச்சே!!!!!

    பதிலளிநீக்கு
  24. இஃகி இஃகினு போட்டேன். இஃ விழாமல் கி மட்டும் வந்திருக்கு. இங்கே என்ன கவிதைப் போட்டி நடக்குதா? நான் நேத்திக்கே எ.பி.யிலே கமென்ட் போட்டிருந்தேனே ஶ்ரீராம், ஒழுங்காப் படிங்கனு சொன்னாலும் படிக்கிறதே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  25. // எல்லாமே தமன்னாவா? ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு முகமா//

    எல்லாமே தமன்னாதான் அக்கா.. எல்லாம் மேக் அப்.. அதுதான்.. அனுஷ் மாதிரி இயற்கை அழகு கிடையாது!

    பதிலளிநீக்கு
  26. //பின்னே? உங்க வயசுக்கு இதெல்லாம் ஜுஜுபி ஆச்சே!!!!!// வயசா? அப்படின்னா என்ன மாமா/ சே, தாத்தா?

    பதிலளிநீக்கு
  27. // ஒழுங்காப் படிங்கனு சொன்னாலும் படிக்கிறதே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் //

    அக்க்க்கா... கர்ர்ர்ர் சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருந்தேன் இல்லை? எல்லாவற்றையும் ரெஃபர் செய்ய முடியுமா? பதில்தான் சொல்லுங்களேன்...!

    :)))

    பதிலளிநீக்கு
  28. // அப்படின்னா என்ன மாமா/ சே, தாத்தா?//

    .கர்ர்ர்ர்ர்ர்.... .சட்டுனு பேக் அடிக்கறீங்க பார்த்தீங்களா!

    பதிலளிநீக்கு
  29. குழந்தை விஷமத்தை ரொம்ப ரசனையா (வேறு வழியில்லாமல்) எழுதியிருக்கீங்க. வால் பசங்களை அவங்க பெற்றோர்தான் சமாளிக்கணும்.

    எங்க ஊர்ல சத்சங்கம் நடக்கும்போது வால் பசங்களைக் கூட்டிட்டு வந்துடுவாங்களாம். அவங்க கலாட்டாவை (தனி ரூம்ல பசங்க எல்லாரும் இருப்பாங்க) சத்சங் நடத்தறவர் கஷ்டப்பட்டு பொறுத்துப்பார்.

    வேறொரு பெற்றோரை (வால்களைப் பெற்றவர்களை) விசேஷங்கள், கெட் டுகேதர்க்கு அழைப்பவர்கள், பசங்களை கொண்டுவரவேண்டாம்னு சொல்லிடுவாங்களாம்.

    இன்னொருத்தருடைய குழந்தை (அவன் 8 வது படிக்கிற வரையில்) சத்சங் முடிந்து எல்லோரும் சாப்பிடும்போது இடது கைலதான் சாப்பிடுவான் (தமிழ் சாப்பாட்டை). அவனோட உட்கார்ந்து சாப்பிட மனம் ஒத்துக்காது.

    இன்னொண்ணு, வால்களைப் பார்த்து நம்ம பசங்களும் வால்தனத்தைப் பழகிடுமோன்னு எல்லோருக்கும் பயமா இருக்கும்.

    நீங்க கொஞ்சம் எக்சாஜெரேட் பண்ணியிருப்பீங்க நகைச்சுவையா.

    பதிலளிநீக்கு
  30. காலை வணக்கம்...

    ரெட்டை வால் ரெங்குடு! எப்படித்தான் பொறுமையாக இருக்க முடிந்ததோ?

    தமன்னா.... ஹாஹா... இன்றைக்கு ஒரே கொண்டாட்டம் தான் நெல்லைக்கு!

    பதிலளிநீக்கு
  31. இன்றைய குழந்தைகள் 90% இப்படித்தான் இருக்கின்றன...

    அனுஷ்கா, தமன்னா இன்னும் உங்களை படுத்துகின்றார்களே... ஜி

    பதிலளிநீக்கு
  32. அப்பாடி இவ்வளவு விஷமமா. எப்படிப் பொறுத்துக்
    கொண்டீர்களோ.
    அதை அந்தச் சித்திப் பாட்டிதான் அடக்க மாட்டார்களோ.

    நம் குழந்தைகள் நம் வீட்டில் அட்டகாசம் செய்தாலும் வெளியே
    படுத்த மாட்டார்கள்.
    உங்கள் கவிதை அழகாகத்தான் இருக்கு.
    தமன்னா அழகுதான். அனுஷ்கா படம் ஒண்ணு
    போடக் கூடாதோ.
    அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  33. சித்தியின் மூக்குக் கண்ணாடியை, கூடோடு எடுத்து வால் பையன் கையில் கொடுத்து, 'இதை எங்கேயும் தூக்கிப் போட்டுடாதே' என்று சொல்லியிருந்தால், சித்தி, வாலு இருவருக்கும் பாடமாக அமைந்திருக்கும்!

    பதிலளிநீக்கு
  34. சமீபத்தில் ஒரு சினிமாப் பத்திரிக்கையில் படித்த முக்கிய விவரம்: அனுஷ்கா ஒரு படத்துக்கு வாங்கும் தொகை, 4 கோடி. தமன்னா வாங்குவது, ஒரு படத்துக்கு 90 லட்சம்.

    பதிலளிநீக்கு
  35. @ ஸ்ரீராம்: .. நல்ல புத்தகங்கள் கிழிபட்டன. சித்தி சிரித்தார்.//

    இதுதான் தலைப்பாக இருந்திருக்கவேண்டும்: ‘சித்தி சிரித்தார்!’

    பதிலளிநீக்கு
  36. காலையில் எழுந்தவுடன் குலதெய்வத்தை நினைத்திருக்கலாம். குருபகவனையாவது ஏதாவது ஸ்லோகம் சொல்லி வணங்கியிருக்கலாம். மெனக்கெட்டு தமன்னாவை அழகாக் காட்ட பெரும் முயற்சி செய்திருக்கிறீர்களே! விடிந்தது வியாழன்தானே?

    பதிலளிநீக்கு
  37. .. எல்லாமே ஒருவர் தானா?//

    பாருங்க, காலைல நீங்க பகவானை விட்டுவிட்டு, மெனக்கெட்டதற்குக் கைமேல் பலன்!

    பதிலளிநீக்கு
  38. குறும்புச்சிறுவனை சமாளித்த விதம் அருமை. அதன் தாக்கம் அதைவிட அருமை.

    பதிலளிநீக்கு
  39. கீதா.. அழகான படங்களாக செலெக்ட் செய்து போட்டிருக்கிறேன் இல்லை?!!//

    ஆமாம் ஸ்ரீராம்!!! நெல்லைக்கு ஒரு நாள் நீங்க மேக்கப் இல்லா தமனா படம் போட்டு வெறுப்பேத்தி ஹா ஹா ஹா இன்று வெள்ளைக் கொடியோ அதற்கு ஈடு கட்ட!!

    //எல்லாமே தமன்னாதான் அக்கா.. எல்லாம் மேக் அப்.. அதுதான்.. அனுஷ் மாதிரி இயற்கை அழகு கிடையாது!//

    அப்படிப் போடுங்க!! ஸ்ரீராம்!!!! இல்லைனா நம்ம அரம என்னாறது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  40. ஹா ஹா ஹா ! நன்றாகவே அவஸ்தை பட்டிருக்கிறீர்கள்.

    தாராசுரத்தில் பாவம் வெய்யிலில் கஷ்டப்படுகிறாரே என்று யாராவது குளிர் பிரதேசம் எதற்காவது அனுப்பியிருக்குப் போகிறார்கள்.

    தாராசுரத்தில் சிற்பங்கள் மிகவும் நன்றாக இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதில் ஒன்றிரண்டை எடுத்து போடக் கூடாதா?

    பதிலளிநீக்கு
  41. இது போன்ற வாலுகளை நிறையவே சமாளித்திருக்கேன் ஸ்ரீராம். கல்யாணத்திற்கு முன் ஒரு விதம் அப்போது தெரியாத அயற்சி கல்யாணத்திற்குப் பின்..கொஞ்சம் தெரிந்தது. என் மகன் ரொம்பவே ஸாஃப்ட். வேகமாகச் செயல்படவும் மாட்டான். அது அவன் பர்த் ப்ராப்ளம். ஆனால் அவன் ஃப்ரென்ட்ஸ் எல்லாம் ரெட்டை வால்கள் இல்லை மல்டி வால்கள். மகன் விளையாட்டுச் சாமான்களை மெதுவாகவே விளையாடுவான். எல்லாம் வால்கள் வீட்டுக்கு வந்து இவனோடு விளையாடும் போது பியுந்து பறக்கும்.

    .பொதுவாகப் பெற்றோர் வளர்ப்பில் இருக்கு. பல பெற்றோர் தங்கள் குழந்தைகள் விஷமம் அதாவது பிறரை பாதிக்கும் விஷமம் செய்யும் போது அதைப் பெருமையாக நினைக்கிறார்கள். பெற்றோர் அல்லது குழந்தைகளை வளர்ப்பவர்கள் அதைக் கண்டிக்க வேண்டும். டைவெர்ட் செய்ய வேண்டும். அதுவும் பிற வீடுகளுக்குச் செல்லும் போது இது போன்றவை நல்லதில்லையே. பிற வீடுகளுக்குச் செல்லும் போது கட்டுப் படுத்த வேண்டும் வேடிக்கை பார்க்கக் கூடாது.

    இது என் மகன் ஸாஃப்டாக இருந்தான் என்பதால் சொல்லவில்லை. பொதுவான கருத்து. என் மகனுக்காக சைல்ட் சைக்காலஜி படிக்க வேண்டிய சூழல் வந்ததால் அறிந்த கருத்து.

    துறு துறு என்று இருக்கும் குழந்தைகள் புத்திசாலிகள் அதாவது அவர்களது மூளை மிக மிக நன்றாகச் செயல்படும் என்றும் சொல்லபப்டுகிறது. ஆனால் அந்தத் துறு துறு இப்படி இருந்தால் அது வேறு விதம். பெற்றோர் தான் பொறுப்பெடுத்து கட்டுப் படுத்த வேண்டும். வீட்டில் எல்லோரும் ஒரே போல சொல்லிக் கட்டுப் படுத்த வேண்டும். சிலர் கட்டுப் படுத்த சிலர் அதை செல்லமாக எங்கரேஜ் செய்தால் குழந்தை அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்ளும்.

    ஆனா பாருங்க நீங்க சொல்லியிருக்காப்ல அதுங்களை பார்க்கலைனா கஷ்டமாவும் இருக்கும்....நீங்க செமையா எழுதியிருக்கீங்க ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  42. அனுஷ்கா, தமன்னா இன்னும் உங்களை படுத்துகின்றார்களே... ஜி//

    கில்லர்ஜி!! ஏன் பொயிங்குறீங்க ஹா ஹா ஹா ஹா ஹா!!! பொற்ற்ற்ற்ற்ற்ற்ற்றாஆஆஆமை ஹிஹிஹிஹி!!

    கீதா

    பதிலளிநீக்கு
  43. தாராசுரத்தில் நிறைய படங்கள் எடுத்தேன். ரொம்ப நல்லா இருக்கும். அந்தக் கோவிலுக்கு வெளில (எதிர்ப்புறம்) ஒரு மொட்டை கட்டிடம்போல் இருக்கே. அதைப் பார்த்தீர்களா?

    நான் சென்றிருந்த அன்றைக்கு தாராசுரத்தில் இருந்த கோவில் நடை சாத்தியிருந்தது. அடுத்த முறையாவது கோவிலைத் தரிசிக்கணும் (அங்கு இருக்கும் தூண்களில் ஸ்வரம் வரும்னு சொல்றாங்க)

    பதிலளிநீக்கு
  44. என்னடா இது... ஸ்ரீராம், 'தமன்னா' படங்களை, அதுவும் நல்ல படங்களை (அதாவது முற்காலத்தில் எடுத்த படங்கள்) போட்டிருக்கிறாரே என்று நான் சந்தோஷப்படக் கூடாதாம்.

    அதுனால, மேனகா ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவங்க, 'தமன்னா' சம்பளம் கம்மின்னு சொல்லி சந்தோஷப்பட்டுக்கறாங்க. அவங்க சந்தோஷத்தைக் கெடுப்பானேன்.

    பதிலளிநீக்கு
  45. ///அனுஷ்கா என்னைவிட அழகா என்ன?//

    ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கோடைக்கானல்ல இடி இடிச்சா.. கடலூரில மழை கொட்டுதே:) அவ்வ்வ்வ்வ்வ் புகை வரத்தொடங்கிட்டுதூஊஊஊஊஊஊ:))..

    தலைப்புக்குக் கீழே, வீட்டுக் கதையை எழுதியதும், நினைச்சேன் ஸ்ரீராமின் பொஸ்தான், ஸ்ரீராமைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டு விட்டாவோ என ஹா ஹா ஹா ஹா.. ஆனா அந்த சித்தியின் பேரன் கதை முடியும் வரை, அங்கு அனுக்கா பற்றி வராததால் கொஞ்சம் ஏமாற்றம்:). ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  46. ஹா ஹா ஹா சித்தியின் குட்டிப் பேரனோடு எப்படிக் கஸ்டப்பட்டிருப்பீங்க... சில குழந்தைகள் இப்படி ஓவர் அக்டிவ்வாக இருப்பார்கள்.. இங்கு எனில் இப்படிக் குழந்தைகளை ஒருவகை ஓட்டிஸம் தான் எனச் சொல்லி அதுக்கேற்ப பேரன்ஸ்க்கு கவின்சிலிங் குடுத்து, எப்படிக் கவனிக்கோணும் குழந்தையை எனச் சொல்லிக் குடுப்பார்கள். ஸ்கூலில் இப்படி சில குட்டீஸ் உண்டு.. வீட்டில் வைத்துப் பராமரிப்பது எவ்வளவு கஸ்டம்.. அவர்களுக்கு அடிக்கவோ கோபிக்கவோ கூடாது.. உங்கள் சித்தி போலத்தான் பெருமையாகச் சொல்லிச் சொல்லி நல்வழிப்படுத்தோணும் ஹா ஹா ஹா.

    எங்கள் புளொக்கையும் நம் எல்லோரையும் சமாளிக்க முடிந்த உங்களால அந்தக் குட்டியைச் சமாளிக்க முடியாமல் போச்சே:))

    பதிலளிநீக்கு
  47. // ஸ்பீக்கர் பூ! //

    இது ஊமத்தம்பூ இல்லயோ? இலைகள் பார்க்க அப்படி இருக்கே.

    //எடுத்துச் சாப்பிட்டார் எங்கள் ஆட்டோக்காரர். //
    நீங்க சொன்னபின்பே எனக்கும் இப்படி ஒரு பழம் சாப்பிட்ட நினைவு வருது ஊரில்.. கொஞ்சம் புளிப்பாக இருக்கும்.. உள்ளே குட்டி விதைகளாக இருக்குமோ?.. ஆனா பூவை ஊரில் பார்த்த நினைவில்லை.. இங்கு பூ இருக்கு ஆனா காய்களைக் காணவில்லை.

    பதிலளிநீக்கு
  48. //இது பழசு... இந்த முறை காலையிலேயே சென்றும் அங்கு "அந்த ஆளை" காணோம்!!//

    ஹா ஹா ஹா அது எப்படி மேல்:) தான் என முடிவுபண்ணி கவிதை வடிச்சிட்டீங்க?:) ஃபீமேலா இருந்திட்டல் அவ்ளோதேன்:)) ஸ்ரீராமை கங்கையில தள்ளிடுவா வந்து:)).
    -----------------------------

    அந்தப் பக்கத்துக் கவிதைகள்.. என்றது.. கவிமாமணி அதிராவின் கவிதைகளாக இருந்திருக்குமோ?:) ஹா ஹா ஹா சரி சரி எல்லொரும் முறைக்கினம் என் பெயரைக் கேட்டாலே:))..

    இரண்டு கற்பனையில் உதித்த கவிதைகளும் ரசிக்கும்படி இருக்கு... இன்னும் எழுதுங்கோ.. அந்த ஓட்டோக்காரரையும் பூவையும் பழத்தையும் சாப்பிட்டதையுமே ஒரு கவிதையாக்கலாம் போல வருது...

    பதிலளிநீக்கு
  49. ///உண்மையில் இந்தப் பதிவை பத்து நாட்களுக்கு முன்னாலேயே தயார் செய்துவிட்டேன். பின்னர் வந்ததுதான் அதிரா பதிவு. அதில் அதிரா அணுகுண்டு மாதிரி அனுஷ் படம் சேர்த்திருந்தார். ///

    நோஓஓஓஓஓ இதை நான் நம்பமாட்டேன்ன்:)).. நெல்லைத்தமிழன் நம்பிடாதீங்கோ:)) உங்களை அனுஸ்:) கட்சியில் சேர்க்கவே இந்த பட்டர்:) தடவிங்:)) ஹா ஹா ஹா:).

    ///"சொல்லுங்க நெல்லை... இந்த போஸ் ஓகேயா?"///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் “பார்வை ஒன்றே போதுமே...”.. இந்தப் பார்வையோடு கிட்டத்தட்ட நெல்லத்தமிழன்:) இனி மீண்டு வர ரொம்ப நாளாகும் என்றே நினைக்கிறேன்ன்:)) ஹா ஹா ஹா...

    ///"அப்போ... அடுத்த வாரம் பார்க்கலாமா? டாட்டா சொல்லலாமான்னு ஸ்ரீராம் கேட்கச் சொல்றார்"///

    நோஓஓஓஓஓஓஓ இது ரொம்ப அநியாயம்.. அனுஸ் ஐ எம்மோடெல்லாம் பேச விடமாட்டார்ர் ஆனா , தமனா தன்னோடு பேசினாவாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நெல்லைத்தமிழன் இதைப் படிச்ச பின்பும், ஹரிதுவாரில குதிக்காமல் இருப்பார் என்றோ நினைக்கிறீங்க?... ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  50. /////ஆஹா இன்று நெல்லைக்கு உற்சாகம்....அதுவும் அழகான படங்களா போட்டுட்டீங்க....அதிரா தான் குண்டு அனுஷ் போட்டு பழி வாங்கினார்...ஹா ஹா ஹா ஹா ஹா..ஆனால் பாருங்க ஸ்ரீராமுக்கு எவ்வளவு நல்ல மனசு!!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதா இது “வஞ்சகப்புகழ்ச்சி” ஆக்கும்:)) ஹையோ நேக்கு டமில்ல டி என்பதால எல்லாத்தையும் கண்டு பிடிக்கிறேன் நான்:)).. ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  51. ///ஸ்ரீராம். said...
    // நெல்லை காட்டில் இன்று மழை!!//

    கீதா.. அழகான படங்களாக செலெக்ட் செய்து போட்டிருக்கிறேன் இல்லை?!!//

    ஹையோ ஹையோ இதை எல்லாம் படிச்சிட்டும் நெ.தமிழன் எப்பூடித்தான் இன்று வேர்க்கை ஒழுங்காச் செய்கிறாரோ?:) ஹா ஹா ஹா எனாலயே முடியுதில்லையே இந்த பில்டப்ப்பூ:))

    பதிலளிநீக்கு
  52. //Geetha Sambasivam said...
    இஃகி இஃகினு போட்டேன். இஃ விழாமல் கி மட்டும் வந்திருக்கு. இங்கே என்ன கவிதைப் போட்டி நடக்குதா? நான் நேத்திக்கே எ.பி.யிலே கமென்ட் போட்டிருந்தேனே ஶ்ரீராம், ஒழுங்காப் படிங்கனு சொன்னாலும் படிக்கிறதே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்///

    ஏதோ தான் மட்டும் எங்கட கொமெண்ட்ஸ் ஐ எல்லாம் ஒழுங்காப் படிச்சு பதில் போடுறவ மாஆஆஆஆஆஆறி:)யேஏஏஏஏஏ ஒரு பில்டப்பூ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  53. ///ஸ்ரீராம். said...
    // எல்லாமே தமன்னாவா? ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு முகமா//

    எல்லாமே தமன்னாதான் அக்கா.. எல்லாம் மேக் அப்.. அதுதான்.. அனுஷ் மாதிரி இயற்கை அழகு கிடையாது!///


    ஹையோஓஓஓஓஓ அஞ்சூஊஊஊஊஊஊஊ கொஞ்சம் ஓடி வாங்கோஓஓஓஓஓஒ என்னால இங்கு நின்ற்கவே முடியுதில்லை:)) நானே ஓடிப்போய்த்தேம்ஸ்ல குதிச்சிடப்போறேன்ன்ன்:)).. நான் ஒண்ணும் தமனா கட்சியும் இல்லை... தமனாவில பெரிய இன்றஸ்ட்டும் இல்லை:) ஆனா ஸ்ரீராமின் குண்டுஅனுக்கா பில்டப் தாங்க முடியல்லேஏஏஏஏஏஏஏஏ:))
    ....

    உடனேயே 111 க்கு கோல் பண்ணுங்கோ:)... அதிரா ஜம்பிங்ங்ங்ங்:)).. ஹையோ மசமச எண்டு பார்த்துக் கொண்டு நிண்டிடாதீங்கோ பிகோஸ் மீக்கு நீந்தத் தெரியாது மூச்சடைச்சிடுமாக்கும்:)).

    பதிலளிநீக்கு
  54. (அஞ்)ஞானி அதிரடி, நாங்க ஒழுங்காப் படிக்கிறதாலே தான் ஒழுங்காப் பதில் போடுறோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    பதிலளிநீக்கு
  55. ////kg gouthaman said...
    சமீபத்தில் ஒரு சினிமாப் பத்திரிக்கையில் படித்த முக்கிய விவரம்: அனுஷ்கா ஒரு படத்துக்கு வாங்கும் தொகை, 4 கோடி. தமன்னா வாங்குவது, ஒரு படத்துக்கு 90 லட்சம்.///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கெள அண்ணன் உங்கட நீல நிற:) மருமகனுக்கு ஓவராத்தான் சப்போர் பண்றீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  56. ///ஏகாந்தன் Aekaanthan ! said...
    காலையில் எழுந்தவுடன் குலதெய்வத்தை நினைத்திருக்கலாம். குருபகவனையாவது ஏதாவது ஸ்லோகம் சொல்லி வணங்கியிருக்கலாம்.///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 ஏ அண்ணன்..:).... இண்டைக்கு அசைவப் பதிவு என நாம் எல்லாம் குஷியா இருக்கிறோம்ம் உங்களுக்கு இப்ப போய் சைவம் கேட்குதே:)) அது ஸ்ரீராம் வேறொன்றுமில்லை.. ஏ அண்ணனுக்கு பிடிச்ச விசயத்தை நீங்க ஒருமுறையேனும் போடவில்லை எனக் கோபம் அவருக்கு:) அதுவும் நியாயம் தானே?:) ஒரு முறை இந்த வேல்ட் கப் பற்றிப் போடுங்கோ:)) ஏ அண்ணன் இங்குதான் இருப்பார்ர்:) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  57. ///Geetha Sambasivam said...
    (அஞ்)ஞானி அதிரடி, நாங்க ஒழுங்காப் படிக்கிறதாலே தான் ஒழுங்காப் பதில் போடுறோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!///

    ஆஆஆஆஆஆ பத்திடிச்சி பத்திடிச்சி:)) வெற்றி வெற்றி.. ஹா ஹா ஹா ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))

    பதிலளிநீக்கு
  58. குதிங்க, குதிங்க, குதிச்சுட்டே இருங்க! அஞ்சு, போகாதீங்க! நாம வேடிக்கை பார்க்கலாம்! நாம வரலைனதும் அதிரடி குதிக்காமத் திரும்பிடுவாங்க! ஹெஹெஹெஹெஹெ!

    பதிலளிநீக்கு
  59. //துறு துறு என்று இருக்கும் குழந்தைகள் புத்திசாலிகள் அதாவது அவர்களது மூளை மிக மிக நன்றாகச் செயல்படும் என்றும் சொல்லபப்டுகிறது. //

    அதேதான் கீதா, இப்படிக் குழந்தைகளை அதட்டி அடக்கினால் தப்பு, நல்ல முறையில் வளர்த்தால் நல்ல திறமைசாலிகளாக வருவார்கள், ஆனா என்ன பண்ணுவது பேரன்ஸ்க்கு கஸ்டம்தான்.. அந்தர ஆபத்துக்கு உறவினர் வீட்டுக்கு கூட அனுப்ப முடியாது..

    பதிலளிநீக்கு
  60. ///Geetha Sambasivam said...
    குதிங்க, குதிங்க, குதிச்சுட்டே இருங்க! அஞ்சு, போகாதீங்க! நாம வேடிக்கை பார்க்கலாம்! நாம வரலைனதும் அதிரடி குதிக்காமத் திரும்பிடுவாங்க! ஹெஹெஹெஹெஹெ!///

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் குதிக்கப் பண்ணாம விட மாட்டாங்க போலிருக்கே:))சப்டரை மாத்திடலாம்:)

    அது கீசாக்கா இண்டைக்கு கரிநாளாம்:) இன்று எனக்கேதும் நடந்தால்.. நட்புக்களௌக்குக் கூடாதாம் என முனியாண்டிச் சாத்திரியார் சொல்லிட்டார்ர்:)) அதனால நாளைக்குப் பார்த்திடலாம்:))

    பதிலளிநீக்கு
  61. சித்தியுடன் எதாவது பிரச்சனையா? பையனை பற்றி சொல்வதுபோல் அவனுக்கு clue கொடுத்து உசுப்பிவிட்டு உங்களை படுத்திவிட்டார்.

    வாண்டுப் பையனுடன் நீங்கள் மல்லுக்கட்டியதை சொல்லிய விதம் அருமை. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  62. பேரன் சேட்டைகள் விளக்கம் மிகவும் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  63. வாங்க அனுபிரேம் ... சிரிப்பான்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  64. வாங்க நெல்லை... பெற்றோர், அதுவும் வெளியிடங்களுக்கு செல்லும்போது நல்லாவே கவனிக்கணும்!

    //நீங்க கொஞ்சம் எக்சாஜெரேட் பண்ணியிருப்பீங்க நகைச்சுவையா.//

    அதிகமே இல்லை... உண்மையில் குறைத்துச் சொல்லியிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  65. வாங்க வெங்கட்...

    மதிய வணக்கம்!!! ரெவாரெ... ஆமாமாம்!

    நெல்லைக்கு ஆனாலும் என்னவோ குறை இருக்கு!

    பதிலளிநீக்கு
  66. வாங்க கில்லர்ஜி... ஆமாம் ரெண்டு பேரும் ரொம்பவே படுத்தறாங்க...!!

    பதிலளிநீக்கு
  67. வாங்க வல்லிம்மா..

    //அதை அந்தச் சித்திப் பாட்டிதான் அடக்க மாட்டார்களோ.//

    அவங்கதானே அம்மா ஒருவகையில் தூண்டி விடறாங்க - அவங்களே அறியாமல்!

    //உங்கள் கவிதை அழகாகத்தான் இருக்கு. தமன்னா அழகுதான். //

    நன்றி அம்மா.

    // அனுஷ்கா படம் ஒண்ணு போடக் கூடாதோ.//

    பாருங்க.. உங்களுக்கே அப்படித் தோன்றி விடுகிறது...!

    பதிலளிநீக்கு
  68. வாங்க தனபாலன்...

    //1000 Watts...?//

    அபுரி!

    பதிலளிநீக்கு

  69. என் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.


    //அனுஷ்கா என்னைவிட அழகா என்ன?//

    தலைப்பைப் பார்த்து கேட்பது வேறு ஒருவரை நினைத்தேன், ஆனால் தமன்னா கேட்பது போல் ஏமாற்றி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  70. அடடே.. கேஜிஜி... உங்களையும் இழுத்து விட்டதோ குறும்பதிகாரம்? அப்படிச் செய்ய எல்லாம் நேரமே கொடுக்கவில்லையே அந்த அறுந்த வால்!

    //அனுஷ்கா ஒரு படத்துக்கு வாங்கும் தொகை, 4 கோடி. தமன்னா வாங்குவது, ஒரு படத்துக்கு 90 லட்சம்.//

    முக்கியமான விவரத்தை, முக்கியமான நேரத்தில் கொடுத்த உங்களுக்கு நன்றிகள்!!!

    பதிலளிநீக்கு
  71. வாங்க ஏகாந்தன் ஸார்..

    //இதுதான் தலைப்பாக இருந்திருக்கவேண்டும்: ‘சித்தி சிரித்தார்!’//

    படிக்க ஆள் அதிகமா வரணுமே... அதற்கு சித்தியைவிட அனுஷ்க்கு பவர் ஜாஸ்தி!

    //மெனக்கெட்டு தமன்னாவை அழகாக் காட்ட பெரும் முயற்சி செய்திருக்கிறீர்களே! //

    என் கஷ்டம் தெரிந்தவர் நீங்கள்.

    //விடிந்தது வியாழன்தானே?//

    வியாழன்தான்... வியாழன்தான்... வியாழனேதான் ஸார்...

    பதிலளிநீக்கு
  72. வாங்க முனைவர் ஐயா... ரசனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  73. வாங்க கீதா...

    //இல்லைனா நம்ம அரம என்னாறது!!!//

    நம்ம பெருமையை விட்டுவிட முடியுமா!!

    பதிலளிநீக்கு
  74. வாங்க பானு அக்கா..

    தாராசுரம் 2014 லிலும் சென்று வந்து ஏகப்பட்ட படங்கள் தளத்திலும், ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்தேன். (அப்போது கங்கை கொண்ட சோழபுரமும் சென்று வந்தோம்.) இப்போதும் ஓரளவு எடுத்திருக்கிறேன். அவ்வப்போது பகிர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  75. வாங்க கீதா..

    //பொதுவாகப் பெற்றோர் வளர்ப்பில் இருக்கு. பல பெற்றோர் தங்கள் குழந்தைகள் விஷமம் அதாவது பிறரை பாதிக்கும் விஷமம் செய்யும் போது அதைப் பெருமையாக நினைக்கிறார்கள்.//

    உண்மை.

    //குழந்தைகளை வளர்ப்பவர்கள் அதைக் கண்டிக்க வேண்டும். டைவெர்ட் செய்ய வேண்டும். அதுவும் பிற வீடுகளுக்குச் செல்லும் போது இது போன்றவை நல்லதில்லையே. //

    கரெக்ட். மறைமுகமாக அதைத்தான் சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

    //சைல்ட் சைக்காலஜி படிக்க வேண்டிய சூழல் வந்ததால் அறிந்த கருத்து.//

    இதற்காக சைக்காலஜியே படிக்கவேண்டாம். தானே தெரியற கருத்து!

    பதிலளிநீக்கு
  76. வாங்க நெல்லை..

    //அந்தக் கோவிலுக்கு வெளில (எதிர்ப்புறம்) ஒரு மொட்டை கட்டிடம்போல் இருக்கே. அதைப் பார்த்தீர்களா?//

    பார்த்தேன். சென்றமுறை தாயார் சன்னதியும் சென்று வந்தேன். இந்தமுறை நைஸாக கழன்று கொண்டேன். கேமிராவும் கையுமாக இருந்த மகன்களை அங்கிருந்து கிளப்புவதே பெரும்பாடாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  77. @நெல்லைத்தமிழன்..

    //கோவில் நடை சாத்தியிருந்தது.//

    சென்றமுறை எங்களுக்கும். இந்தமுறை திறந்திருந்தது.

    //அதுனால, மேனகா ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவங்க, 'தமன்னா' சம்பளம் கம்மின்னு சொல்லி //

    ..ஹா... ஹா.... ஹா... நோட் தி பாயிண்ட் கௌ அங்கிள்! மேனகா ரசிகர் மன்றமாம்! மஞ்சுளா கோச்சுக்க மாட்டாங்க?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மஞ்சுளா..வா!..///

      அவங்க போய்ச் சேந்து தான்
      கன நாளாச்சே!...

      நீக்கு
  78. வாங்க .அதிரா..

    //அவ்வ்வ்வ்வ்வ் புகை வரத்தொடங்கிட்டுதூஊஊஊஊஊஊ:))..//

    நல்லா படியுங்க மேடம்.... இது பத்து நாட்களுக்கு முன் ஷெட்யூல் செய்தது!

    //ஸ்ரீராமின் பொஸ்தான், ஸ்ரீராமைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டு விட்டாவோ //

    ஹா... ஹா.. அவங்க அனுஷ்ஷை விட அழகாக்கும்!

    பதிலளிநீக்கு
  79. @அதிரா..

    //இப்படிக் குழந்தைகளை ஒருவகை ஓட்டிஸம் தான் எனச் சொல்லி அதுக்கேற்ப பேரன்ஸ்க்கு கவின்சிலிங் குடுத்து, எ//

    ஆம். இங்கும் உண்டு.

    //உங்கள் சித்தி போலத்தான் பெருமையாகச் சொல்லிச் சொல்லி நல்வழிப்படுத்தோணும்//

    கர்ர்ர்ர்.....

    எ//இது ஊமத்தம்பூ இல்லயோ? //

    அதேதான்... அதுதான் மேலே டேட்டுரா என்று கொடுத்திருக்கேனே...

    பதிலளிநீக்கு
  80. @அதிரா..

    ////எடுத்துச் சாப்பிட்டார் எங்கள் ஆட்டோக்காரர். ////

    இந்தப்பூவை அல்ல.

    அந்த ஆள்ங்கறது இருபாலாரையும் குறிக்காதோ?

    //அந்தப் பக்கத்துக் கவிதைகள்.. என்றது.. கவிமாமணி அதிராவின் கவிதைகளாக இருந்திருக்குமோ?//

    ஹா... ஹா... ஹா.. சிரிப்பு வருது... சிரிப்பு வருது...

    பதிலளிநீக்கு
  81. அதிரா...

    //இந்தப் பார்வையோடு கிட்டத்தட்ட நெல்லத்தமிழன்:) இனி மீண்டு வர ரொம்ப நாளாகும் என்றே நினைக்கிறேன்ன்:)) ஹா ஹா ஹா...//

    ஹா... ஹா... ஹா... அப்போ சிறப்பான படமாக எடுத்துப் போட்டிருக்கேன்னு சொல்லுங்க... நெல்லைக்கு ஹரிதுவாரை ஒதுக்கிட்டீங்களா!

    //உடனேயே 111 க்கு கோல் பண்ணுங்கோ:)... அதிரா ஜம்பிங்ங்ங்ங்:)).//

    இதையே எத்தனை நாள் கேட்டுக்கொண்டிருப்பது? குதிக்க வேணாம்... தேம்சுக்கு பக்கத்தில் நின்னு ஒரு போட்டோ கூட போட்டதில்லை நீங்க!!

    பதிலளிநீக்கு
  82. கீதாக்கா..

    //(அஞ்)ஞானி அதிரடி, //

    கவிதாயினியையும் மருத்துவரையும் விட்டுட்டீங்க!

    பதிலளிநீக்கு
  83. @அதிரா..
    //கெள அண்ணன் உங்கட நீல நிற:) மருமகனுக்கு ஓவராத்தான் சப்போர் பண்றீங்க //

    அவர் பாவம் அவர் அறிந்த பொது அறிவுத் தகவலைச் சொல்கிறார். உங்களுக்கேன் பொறாமை?

    //ரு முறை இந்த வேல்ட் கப் பற்றிப் போடுங்கோ:))//

    ஏகாந்தன் ஸாருக்காக சிபாரிசா? இப்போதைக்கு கால்பந்து பற்றிதான் ரசிப்பார் அவர்.

    பதிலளிநீக்கு
  84. வாங்க மஹேஷ்... முதல் வருகையோ... வரவுக்கும், ரசனைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  85. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  86. இம்மாதிரி வால் பையன்களின் அனுபவம் எனக்கு இருக்கிறது. அது என்னமோ தெரியவில்லை வால் பையன்கள் என்னைப் பார்த்தால் தவறு நானவர்களைப் பார்த்தால் கப் சிப் என்று அடங்கி விடுவார்கள் என் முகராசி அப்படிமுப்பது நாற்பது வயதுகளில் பெண்கள் அழகாமே அனுஷ்காவோ தமன்னாவோ

    பதிலளிநீக்கு
  87. குழந்தையின் குறும்பு மிகவும் அதிகமாகி விட்டது.
    மிகவும் கஷ்டப்பட்டு விட்டீர்கள்.
    வரபோவது முன்பே தெரிந்தால் (குறும்புகள் தெரிந்து இருந்தால்) எல்லாவற்றையும் குறும்பு கண்ணனுக்கு தெரியாமல் வேறு இடத்தில் எடுத்து வைத்து இருக்கலாம் கண் மறைவாய்.

    இருகோடு தத்துவம் அருமை.

    பதிலளிநீக்கு
  88. வாங்க கோமதி அக்கா... ஏமாற்றுவதற்குத்தானே தலைப்பு? ஹா... ஹா... ஹா...

    // வரபோவது முன்பே தெரிந்தால் (குறும்புகள் தெரிந்து இருந்தால்) எல்லாவற்றையும் குறும்பு கண்ணனுக்கு தெரியாமல் வேறு இடத்தில் எடுத்து வைத்து இருக்கலாம் கண் மறைவாய்.//

    ஆமாம். அதை நானே எழுதவும் நினைத்து அப்புறம் எழுதாமல் விட்டு விட்டேன்

    பதிலளிநீக்கு
  89. வாங்க ஜி எம் பி ஸார்... அனுஷ், தமன்னாவுக்கு அவ்வளவு சின்ன வயசுன்னா சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  90. ஸ்பீக்கர் பூ! அழகு
    அடுத்த பூவின் பழத்தின் பெயர் முகசுளிக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  91. // ஸ்பீக்கர் பூ! அழகு//

    நன்றி.

    //அடுத்த பூவின் பழத்தின் பெயர் முகசுளிக்க வைத்து விட்டது. //

    ஹா... ஹா... ஹா... ஆட்டோக்கார நண்பர் என் கண்ணெதிரேயே பழத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார் கோமதி அக்கா!

    பதிலளிநீக்கு
  92. "அந்த ஆளை" காணோம்!!//

    நல்ல கற்பனை.

    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  93. //நல்ல கற்பனை. கவிதை அருமை. //

    நன்றி கோமதி அக்கா.

    பதிலளிநீக்கு
  94. அனுஷ்காவை விட இவங்க வயசு குறைச்சல்னு நினைக்கிறேன். அனுஷ்கா வயசானவங்களா இருக்காங்க! இப்போ வர சீரியல் ஒண்ணிலேயும் கதா"நாயகி" வயசானவங்களா இருக்கிறதோடு ரொம்பவே அழுத்தம் கொடுத்து வெட்டி வெட்டிப்பேசறாங்க! :))))) இயல்பாப் பேசறதா அவங்க நினைப்புப் போல! ஆனால் அத்தனை இயல்பா இல்லை! :(

    பதிலளிநீக்கு
  95. //என் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.// அதே, அதே, சபாபதே, நானும் அதான் நினைச்சேன் கோமதி அரசு! ஶ்ரீராம் ஏமாத்திட்டார்! :))))))

    பதிலளிநீக்கு
  96. வணக்கம் சகோதரரே

    கதம்பம் அருமை

    எப்படித்தான் அந்த வாண்டுவை சமாளித்தீர்களோ? நகைச்சுவையாக தாங்கள் அதை விவரித்த விதம் மிக அருமை. இப்படித்தான் சில சேட்டை பண்ணும் குழந்தைகள் வீட்டுக்கு வந்து விட்டால் என கவனமெல்லாம் அவங்க சேட்டையிலேயே இருக்கும். மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் படுகிற அவஸ்தையை அழகாக விவரித்து விட்டீர்கள். இப்படியா.. அமர்க்களம் செய்வதை ரசிப்பது மட்டுமில்லாமல், தூண்டியும் விடுகிறார்களே என்ற வருத்தமும் வரும். ஆனால் அவர்கள் சென்ற பிறகு கொஞ்சம் தளர்வாக நார்மலாக இருந்திருக்கலாமோ அவர்கள் ஏதாவது தப்பாக நினைத்து கொள்வார்களோ எனவும் தோன்றும்.

    பூக்கள் படங்கள் மிக அழகு. அந்த பழத்தின் பெயர் சொல்லவே ஒரு மாதிரி உள்ளதே.. எப்படி சாப்பிடுவது?

    தங்கள் கவிதை அழகு. பாராட்டுக்கள். தங்களின் கவிதையையே கரங்கள் நிராகரித்ததை கேள்விபட்டதென்றால், நானெல்லாம் எழுதுவதை பார்த்து என் கரங்கள் கவிதையை வெட்டி சின்னாபின்னமாக்கி விட்டு அடுத்தாக என்னையும் அது போலவே ஆக்கலாமா என யோசிக்கும்.

    தமன்னா படங்கள் அழகு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகு. தாங்கள் கதம்பத்தை தொகுத்து வழங்கிய விதமும் ஒரு அழகு. மிக்க நன்றி.

    இன்று நான்தான் கடைசி குடும்ப உறுப்பினராக வருகை. வருந்துகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  97. ​கீதா அக்கா...

    // அனுஷ்காவை விட இவங்க வயசு குறைச்சல்னு நினைக்கிறேன். அனுஷ்கா வயசானவங்களா இருக்காங்க! //

    ஆமாம். ஆனால் அழகு! சீரியல் பத்தி நமக்கென்ன! அல்லது எனக்கென்ன!!!!

    பதிலளிநீக்கு
  98. கீதா அக்கா..

    // அதே, அதே, சபாபதே, நானும் அதான் நினைச்சேன் கோமதி அரசு! ஶ்ரீராம் ஏமாத்திட்டார்! ://

    அதற்குதானே அப்படி எழுதுவது? அது மட்டுமில்லாமல் வேறு ஒரு எதிர்பார்ப்பும் அது ஏற்படுத்தும் என்று நினைத்தேன். நடக்கவில்லை! வற்புறுத்திப் படிக்கச் சொன்னபோது பாஸே ஏமாந்தார்.

    பதிலளிநீக்கு
  99. வாங்க சகோதரி கமலா ஹரிஹரன்...

    ரசித்ததற்கும் அதே உணர்வைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

    // நானெல்லாம் எழுதுவதை பார்த்து//

    உங்களுக்கென்ன? அருமையாய் எழுதுகிறீர்கள்.

    // இன்று நான்தான் கடைசி குடும்ப உறுப்பினராக வருகை. வருந்துகிறேன்.//

    இதில் என்ன வருத்தம்... எப்போது முடியுமோ அப்போது வாருங்கள். இதெல்லாம் பொழுதுபோக்குதானே? வேலை முக்கியம். ஆனால் இன்னும் கூட காமாட்சி அம்மா வரலாம். ஏஞ்சல் வரலாம்... எனவே நீங்கள் கடைசி இல்லை.

    பதிலளிநீக்கு
  100. நன்றி நண்பர் நாகேந்திர பாரதி.

    பதிலளிநீக்கு
  101. குழந்தைகளைச் சமாளிப்பது
    சாதாரண் விஷயமில்லை
    இதில் மிகச் சிலர் மட்டுமே
    விற்பன்னராயிருக்கிறார்கள்/
    கவிதை அருமை படங்கள் போலவே
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  102. நம் வீட்டு பிள்ளைகள் நம் வீட்டில் எத்தனை வாலுத்தனம்செய்தாலும், செல்லும் இடங்களில் சம்த்தாக நடந்து கொள்ளவும் பழக்கப்படுத்த வேண்டும். நானும் இங்கே கவனித்துள்ளேன். வீட்டில் எப்படித்தான் சமாளிப்பார்களோ வந்த இடத்திலும் ஒர்ரிடமாய் இருக்காமல் அதை இதை இழுத்துபோட்டு உடைப்பதும், கிழிப்பதும் பெற்றாருக்கு நல்ல பெயரை நிச்சயம் தராது. அதே போல் வயதுக்கு மீறிய பேச்சுக்களையும் செயல்பாடுகளையும், நான் என் பசங்களிடம் சின்ன வயதிலிருந்தே கண்டிப்பேன். என் தங்கை பசங்க வாலுத்தனம் செய்யும் போது நான் கண்டித்தான் என் தம்பி சொல்வான். விடுக்கா சின்னப்பசங்க தானே?: என் ஒரே பதில் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. நீங்கள் அவர்கள் செய்வதை ரசித்து சிரிப்பதனால் அவர்கள் செய்யும் தவறுகளை அவர்கள் உணராமலே போகின்றார்கள். பின்னாடி வருத்தப்படுவீர்கள் என்பேன்.

    நீங்கள் எழுதி இருப்பதே உங்களுக்கு அந்தப்பையனின் செயல்பாடுகள் எத்தனை சங்கடம் தந்திருக்கின்றதென உணர வைக்கின்றது.

    நான் நலமே.. வேலை அதிகம் என்பதனால் இந்தப்பக்கம் வரவே முடியவில்லை. பேஸ்புக் தான் என் வியாபாரத்தொடர்புக்கான விளம்பரங்களை பகிரும் இடமாக இருப்பதனால் அங்கே மட்டும் எட்டிப்பார்ப்பேன். அத்துடன் பெரும்பாலான் கஸ்டமர்களுடன் உரையாடலும் இன்பாக்ஸ் மூலம் என்பதனால் அங்கே என்னை காணலாம்.

    பதிலளிநீக்கு
  103. வாங்க நிஷா.. நீண்ட நாட்களுக்குப்பின் (உங்கள்) பதிவுலகம் பக்க(மு)ம் வந்ததற்கு மகிழ்ச்சி. நீங்கள் சொல்லி இருப்பது போல நம் பிள்ளைகளை நாம் கண்டித்து வைத்தால், வளர்த்தால் உறவு,நட்பு வீடுகள் செல்லும்போது இச்சங்கடங்கள் நேராது.

    பதிலளிநீக்கு
  104. //வாங்க மஹேஷ்... முதல் வருகையோ... வரவுக்கும், ரசனைக்கும், கருத்துக்கும் நன்றி.//

    தொடர்ந்து இந்த வலைதளத்தை படித்து வருகிறேன். ஒருசில கருத்துகளும் இதற்கு முன் இட்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  105. //ஸ்ரீராம். said...
    நல்லா படியுங்க மேடம்.//
    நான் மேட ராசி இல்லை....லைலைலைலைலைலை....:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
  106. // நல்லா படியுங்க மேடம்.//
    நான் மேட ராசி இல்லை....லைலைலைலைலைலை....:) கர்ர்ர்ர்ர்ர்ர்//

    என்னாச்சு? எங்கேருந்தெல்லாமோ இடி வருது இன்று!

    பதிலளிநீக்கு
  107. //நான் மேட ராசி இல்லை....லைலைலைலைலைலை....:) கர்ர்ர்ர்ர்ர்ர்// இது எங்கே வந்திருக்கு? தேடிப் பார்த்தேன், கிடைக்கலை.

    அதிரடிக்கு மேட ராசி மட்டும் தான் தெரியும்னு நினைக்கிறேன். எல்லோரையும் அந்த ராசிக்கு இழுத்துட்டு இருக்காங்க! :))))))

    பதிலளிநீக்கு
  108. ஹாஹா :) ஸ்ரீராமையே கலங்கடித்த அந்த குட்டி ஹீரோ கியூட் .
    இதுக்கு முன்னாடி கொலுசு போட்டு ஒரு தத்தக்க பித்தக்கானு குட்டிப்பாப்பா வந்தா இல்லியா .

    //
    மாப்பிள்ளை.. அவனுக்குக் கோபம் வந்தா கையை இழுத்து வைத்துக் கடிச்சுடுவான்..." //

    ஹாஹாஆ :) சித்தியே குட்டி பயலுக்கு எடுத்து கொடுக்கிற மாதிரி இருக்கே :))

    என் மைத்துனர்களின் பிள்ளைகள் எல்லாரும் இப்படி அட்டகாசம் செய்தவர்கள்தான் இப்போ எல்லாரும் கல்லூரி/ முடித்து வேலை .
    அவர்களில் ஒருவன் யாரெல்லாம் திட்டுறாங்களோ அவங்களை படமெல்லாம் வரைந்து என் பெயர் மட்டும் குட் மற்றவர்கள பேய் ரேஞ்சுக்கு படம் வரைந்தான் 10 வயதிருக்கும்போது அந்த படங்கள் இன்னமும் என்னிடம் இருக்கு :)

    அந்த பழம் இங்கும் பார்த்தேன் ஒரு கார்டன் சென்டரில் :) அதை பூச்சாம் பழம்னு அம்மா சொல்வாங்க .விநாயகர் சதுர்த்திக்கு மார்க்கெட்டில் இந்த பழம் பிரப்பம்பழம் வுட் ஆப்பிள் எல்லாம் கிடைக்கும் மெட்றாஸில் .
    உங்க ஏரியா பக்கம் இச்செடிகள் வளருவது நல்லது பறவைகள் பட்டாம்பூச்சிகள் வருகை அதிகரிக்கும்

    ரெண்டு நாள் பயணம் பிசி .அதான் லேட் வர

    பதிலளிநீக்கு
  109. வாங்க ஏஞ்சல்... கலக்கிட்டான் பையன்!

    படம் வரைந்து குணம் சொன்ன பையன் சுவாரஸ்யம்!

    // உங்க ஏரியா பக்கம் இச்செடிகள் வளருவது நல்லது பறவைகள் பட்டாம்பூச்சிகள் வருகை அதிகரிக்கும் //

    அடடே... இதுவரை இல்லை.

    // ரெண்டு நாள் பயணம் பிசி .அதான் லேட் வர //

    ஓகே ஓகே.. அதுதான் உங்கள் தோழியிடம் கேட்டிருந்தேன்!

    பதிலளிநீக்கு
  110. குறும்புக்காரச் சிறுவன் மனதில் நின்று விட்டான். நானும் தங்கைகளும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எதிர் வீட்டில் ஒரு வடக்கத்திய குடும்பம் சில காலம் இருந்தார்கள். அவர்களின் ஐந்து வயதுப் பெண் அஞ்சு தனியாக எங்கள் வீட்டுக்கு வரும் போது அத்தனை சமர்த்தாக இருப்பாள். ஆனால் தன் அம்மாவுடன் வந்தால் வீட்டைத் தலை கீழாகப் புரட்டி விடுவாள். அம்மாவும் தன் மகளின் குறும்புகளைப் பெருமையுடன் ரசித்திருப்பார். இங்குள்ள பள்ளியில் படித்ததால் அஞ்சுவுக்கு மட்டும் தமிழ் நன்கு தெரியும். அவள் அம்மாவுக்குப் புரியாது. நாங்கள் முகத்தை சாந்தமாக வைத்துக் கொண்டு சிரித்தபடி அஞ்சுவை தமிழில் மிரட்டிப் பார்ப்போம் ‘செய்யாதே. நாளைக்குத் தனியாக வரும்போது பார் உன்னை என்ன செய்கிறோமென’ என்று. அசர மாட்டாள். ஆனால் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு மறுநாள் வந்து நிற்கும் போது எங்களுக்கு அந்தக் குறும்புகள் எல்லாமே மறந்து போகும். குழந்தைகள் குழந்தைகளே. அஞ்சு இப்போது எங்கிருக்கிறளோ!

    பதிலளிநீக்கு
  111. உங்கள் அனுபவத்தையும் ரசனையாகச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!