வந்த அவதார வேலை முடிந்து மேலே செல்லவேண்டிய காலம் வந்தது என்று அறிந்ததும் ராமனின் கட்டளையை ஏற்று லக்ஷ்மணன் சரயு நதியில் மூழ்கி இகவுலக வாழ்க்கை நீங்கி மேலே சென்று ஐயனுக்கு ஆசனமாகக் காத்திருந்தான் என்கிறது புராணம். ராமனும் அதே சரயு நதியில்தான் மறைந்ததாக புராணம்.
அந்த சுற்றுச்சுவருக்குள் நுழையும்போதே தெரிந்த பெரிய ஆலமரம்...
தூரத்திலிருந்து பார்ப்பதைவிட அருகே நெருங்கநெருங்கதான் இன்னும் பெரிதாய்த் தோன்றியது.
ராமன் காட்டுக்குச் சென்றது அறிந்த பரதன் ராமனை அழைக்க வந்து ராமன் வர மறுத்ததால் பாதுகைகளை ராமனின் காலடியில்போட்டு அதனை ராமனின் பாதம் படச்செய்து அதனை சிம்மாசனத்தில் வைத்து ராமன் வரும்வரை இந்த நந்திக்ராமத்திலிருந்துதான் அயோத்தியை ஆண்டதாகச் சொல்வார்கள்.
ராமன் வரும் வரை இங்கிருக்கும் Bharat Kund இல் தவம் செய்ய, (உண்மையில்) சத்ருக்னன்தான் அயோத்தியை பரதன் சார்பில் சிறப்பாக ஆட்சி செய்ததாக புராணம். பரதன் தானும் வனவாசத்தில் இருப்பதுபோலவே வாழ்ந்தான் என்கிறது புராணம்.
உள்ளே ஒரு கிணறு இருக்கிறது. இப்படி மூடியிருக்கிறது. ஏதோ விசேஷமான பழைய கிணறுபோல...
அங்கு கிணற்றுக்குப் பொறுப்பானவர் போல ஒருவர் இருந்தார்தான். எதுவோ சொல்லிக் கொண்டே இருந்தார். ஒன்றும் புரியவில்லை!
பரதன் தங்கள் தந்தை தசரதனுக்கு இங்குதான் இறுதிக் காரியங்கள் செய்தாராம். எனவே இங்கும் பித்ரு காரியங்கள் செய்பவர்கள் இருக்கிறார்கள்.
பரத சத்ருக்னர்களோ.... இல்லை... ராம பரத ஆலிங்கனமாம்... நன்றி வல்லிம்மா
பரதன்.
அருகிலேயே ஒரு கதவு மூடி இருக்க, கதவின் அருகில் சென்று பார்த்தால் சில படிகள் தெரிந்தன. இறங்கிச் சென்றால் உள்ளே தெரியும் காட்சி.. இறங்கிச் செல்லாமல் பூட்டியிருக்கும் கதவின் வெளியிலிருந்தே செல்லை உள்ளே விட்டு ஒரு க்ளிக்.....
இந்த Bharat Kund எங்களுக்கு காட்டப்படவில்லை!
மரத்தின் பின்பக்கமாய் வந்து ஒரு க்ளிக்....
லக்ஷ்மணன் ராம சீதாவுடன் காட்டுக்குச் சென்றதும் முதல் நாளிரவு நித்திரை தேவி அவனை அணுகுகிறாள். லக்ஷ்மணன் நித்திரா தேவியை வணங்கி தனக்கு அண்ணனையும், அண்ணியையும் காக்கும் வேலை இருப்பதால் இந்தப் பதிநான்கு வருடங்கள் நித்திரை தன்னை அண்டாமல் இருக்க வேண்டுகிறான். ஆனால் நித்திரா தேவியோ, தனக்கு இடப்பட்டுள்ள பணியை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்றதும், லக்ஷ்மணன் அந்த நித்திரையை தனக்கு பதிலாக தனது மனைவி ஊர்மிளையைப் பற்றிக்கொள்ள வேண்டுகிறான். ஊர்மிளை தனது (லக்ஷ்மணனின்) கடமை, கஷ்டம் உணர்ந்து இதனை ஏற்றுக்கொள்வாள் என்றும் சொல்கிறான். எனவே நித்திரா தேவி ஊர்மிளையைப் பற்றிக்கொள்ள, ஊர்மிளா அந்தப் பதினாலு வருடங்களும் இரவு பகல் என நித்திரையில் இருக்கிறாள் என்று சொல்கிறது ஒரு புராணம். ஸ்ரீராம பட்டாபிஷேகத்தில்தான் ஊர்மிளை கண்விழிக்கிறாளாம். அந்த நேரம் லக்ஷ்மணன் தூங்கப் சென்று விடுகிறான். நித்திரா தேவி அவனை ஆட்கொண்டு விடுகிறாள்.
இந்த சுற்றுச் சுவருக்கு அருகில் கதவு போட்டு ஒரு காம்பௌண்ட்... அதனுள்ளேகோவில் போன்ற அமைப்பில் இன்னும் பரதர் .ஆஞ்சநேயர் சிற்பங்கள்..
எப்படியோ, பரதன் தவம் செய்த நந்திக்ராம் செல்கிறோம்.இங்குதான் தவம் செய்துகொண்டிருந்த பரதன், ராமன் பதினாலு ஆண்டுகள் ஆகியும் இன்னும் வரவில்லையே என்று வருந்தி, தான் சொன்னபடி தீயில் இறங்கி உயிர் விட ஆயத்தமாகிறான். இவன் இப்படிச் செய்வான் என்றறிந்திருந்த ராமன் அனுமானை பரதனைக் காத்துத் தடுத்து நிறுத்த அனுப்புகிறார்.
பரதாஞ்சனேய அணைப்பு...
இது என்ன காட்சி என்று சரியாக விளங்கவில்லை.
இருந்தாலும் ஒரு க்ளிக்...
பரதன் தீயில் இறங்கும் கடைசி கணத்தில் அங்கு தோன்றி அனுமான் ராமன் வருகையைக் கூறுகிறார். பெருமகிழ்ச்சி அடைந்த பரதனும் அனுமானும் கட்டித் தழுவிக் கொள்கின்றனர். அவர்கள் கட்டித் தழுவிக்கொண்ட இடம் இந்த ஆலமரத்தடி என்று காட்டினார்கள். இவை எல்லாம் நிகழ்ந்த இடம் நந்திக்ராம். நாங்கள் ஏப்ரல் பத்தாம் தேதி மாலை சுமார் நாலரை மணிக்கு அந்த இடத்தை அடைந்தோம்..
தவக்கோலத்தில் பரதன்
ஆஞ்சநேயர்.. (சொல்லாட்டா தெரியாதாக்கும் என்கிறீர்களா?!)
இந்த வளாகங்கள் இருப்பது இந்தக் குறுகிய தெருவில்தான்! எதிரே இரண்டு கடைகள். அருகே ஒரு பெரிய மைதானம்.
சுமார் இரண்டரை மணிநேரம் அங்கிருந்து அந்த இடத்தை (மட்டும்) பார்த்துவிட்டு காசிநோக்கிக் கிளம்பினோம்.
சுமார் ஆறரை மணிக்குக் கிளம்பினோம். மறைந்து கொண்டிருந்த சூரியன் மரங்களுக்கு நடுவேயும், வயல்களுக்கு நடுவேயும் ஆங்காங்கே கண்ணில் பட்டுக் கொண்டு கருத்தைக் கவர்ந்து கொண்டிருக்க.. அதை ஆங்காங்கே சில புகைப்படங்கள் - பஸ்ஸிலிருந்தே...
கிளம்புகிறோமா என்று எட்டிப் பார்ப்பது போல தெரிந்தது!
ஓரமாய் நின்று வழியனுப்புவது போலத் தெரிந்தது.
விளக்குக் கம்பத்துக்கு நடுவே நின்று நாங்கள் செல்வதைப் பார்க்கிறது!
அந்தக் கட்டிடம் மறைக்கிறதாம்... கஷ்டப்பட்டு எட்டி எங்களைப் பார்க்கிறது.
இடையில் கிடைத்த பெரிய இடைவெளியிலிருந்து வசதியாய் எங்களை பார்க்கிறது!
முன்னே தெரியும் மரங்கள் ஒரு ஓவியம் போல...
அது எங்களிடமிருந்து விடை பெற்றுக்கொள்கிறது!
======================================================================================================
விக்ரமாதித்தக்கேள்வி.
கல்கி யாரையும் கேட்காமல் வேலையைப் பற்றிக் கவலைப்படாமல் (பொறுப்பில்லாமல்) முடிவு எடுத்தது சரியா?
இல்லை வாசன்தான் இவர் நாட்டுக்காக - நமக்காக- த்தானே போராடுகிறார் என்று எல்லாம் சிந்திக்காமல் ராஜினாமா செய்யச் சொன்னது சரியா?
இருவருமே கல்கியின் குடும்பம் பற்றி யோசிக்காதது சரியா?
சரியாக விசாரிக்காமல் அனுமதி வழங்கிய காந்தியின் செயல் சரியா?
என்ன? ஒன்றும் புரியவில்லையா? எப்படிப் புரியும்? இதைப் படித்தால் அல்லவா புரியும்!!
===========================================================================================
பழைய போட்டோ ஒன்று... பேஸ்புக்கில் பகிர்ந்தது. சில வருடங்களுக்குமுன் தாராசுரம் சென்றபோது நம் செல்லம் ஒன்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது! அதன் ஆராய்ச்சியைக் கெடுக்காமல் படம் எடுத்துக் கொண்டபோது.....!!!
=========================================================================================================
சொல்லாத சோகத்தைச் சொல்லும் ஒரு படம்...
இது சென்ற வருடம் கும்பகோணம் சென்றபோது எடுத்த படம். அந்த இல்லத்தைப் பாருங்கள். இல்லாமல் போன இல்லம் என்று சொல்லலாமா? கட்டப் படும்போது எவ்வளவு ஆர்வத்துடன், எதிர்பார்ப்புடன் கட்டப்பட்டு, பின்னர் எவ்வளவு நாட்கள் இந்த இல்லத்தில் சந்தோஷக் குடித்தனங்கள் நடந்திருக்கும்? இப்போது பார்க்கும்போது என்ன ஒரு வெறுமை! இதேபோல ஒரு படம் திருக்கடையூர் கோவில் அருகேயும் எடுத்திருந்தேன்.
=============================================================================================
arrived. am I alonve?
பதிலளிநீக்குalone?
நீக்குஇல்லை கீதாக்கா!
நீக்குகாலை வணக்கம்!
ரெண்டு எஸ்கார்ட் இருக்கோம் ஹா ஹா ஹா
கீதா
இல்லை... நானும் உள்ளேன்!
நீக்குயார் இருக்காங்களோ இல்லையோ... பேயார் இருப்பார் கீசா மேடம்.
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்.
காலை வணக்கம் நெல்லை.
நீக்குநலம் வாழ்க...
பதிலளிநீக்குவாங்க... வாங்க...
நீக்குஅன்பு ஸ்ரீராம், துரை, கீதா ரங்கன் அனைவருக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகள்.
நீக்குநன்றி வல்லிம்மா.
நீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்
பதிலளிநீக்குதலைப்பு என்னவோ சொல்லுதே...
கீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். .. ஹிஹிஹி.. பார்த்த உடன் "பூ... இதானா?" என்று தோன்றும்!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அதென்ன நான் வந்தால் எல்லோருமா ஒளிஞ்சுக்கறீங்க?
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதாக்கா கைக்குயந்தை நீங்க வந்தா துணியக்கு வேண்டுமேனேனு ரெண்டு பேர் இருக்கோம் பார்க்கலையா.துரை அண்ணா அண்ட் மீ வந்துட்டோமே!!
நீக்குகீதா
வாங்க கீதா அக்கா... நல்வரவும் வணக்கமும்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும் ..
பதிலளிநீக்குகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குநல்லவேளையா துரையும் தி/கீதாவும் வந்திருக்காங்க! பதிவைப் படிச்சுட்டு வரேன்.
பதிலளிநீக்குgrrrrrr.... நானும் வந்திருக்கேன்.. மாஞ்சு மாஞ்சு பதில் சொல்லிக்கிட்டிருக்கேனே...
நீக்குஇஃகி,இஃகி,இஃகி, பார்த்தேன், பார்த்தேன், இன்னிக்கு எல்லோருமே சீக்கிரமா வந்துட்டாங்க! நேத்திப்பூராப் பேயார் நடமாட்டமா, எல்லோரும் பயந்திருக்காங்க என்னைத் தவிர!
நீக்குநேற்று நானே இந்தப்பக்கம் காணோமே...!!!
நீக்குநேத்திக்கு உங்க பிறந்த நாள் என்பதால் எங்கேயானும் கோயில் பக்கம் போயிட்டீங்களோ? அதோட இங்கே பேய் நடமாட்டம் வேறே அதிகம். நான் கொடுத்த மெயிலைக் கூடப் பார்க்கலை போல!
நீக்குகீசா மேடம்... நீங்க பிறந்த நாள் வாழ்த்து, மறந்துபோய் எனக்கு அனுப்பிட்டீங்கன்னு நினைக்கிறேன். பரவாயில்லை..இந்த மாதத்தில் ஒரு நாள் தானே..
நீக்குஇங்கு ஒரு கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்திருந்தது. நாற்பத்தெட்டு நாட்களுக்குள் அங்கு ஒரு பூஜை செய்ய வேண்டும் என்று பெயர் கொடுத்தால் அது நேற்றுதான் தேதி கொடுத்திருந்தார்கள். அதுவும் மாலை ஏழு மணி! அங்கு சென்று வந்தோம்.
நீக்குஇன்னைக்கு அக்கா ரொம்ப கோவமா இருக்காங்க...
பதிலளிநீக்குசேட்டை எதும் பண்ணாம
வந்தமா... படிச்சமா.. கருத்து சொன்னமா..ந்னு இருக்கோணும்...
அக்காவுக்கு கோபமா? அப்படிக்கூட வருமா என்ன!
நீக்குகோபம்? யாருக்கு? எதுக்கு? ஏன்? எப்படி?
நீக்கு//சேட்டை எதும் பண்ணாம வந்தமா... படிச்சமா.. கருத்து சொன்னமா..ந்னு இருக்கோணும்...// - இதை நீங்க 'அக்கா'வுக்குச் சொல்லலையே துரை செல்வராஜு சார்..
நீக்குநான் எனக்குத்தான் சொல்லிக் கொண்டேன்...
நீக்குNo you are not Geetha ma. Good Morning ma.
பதிலளிநீக்குஅடடே... வாங்க ..வல்லிம்மா. இனிய காலை வணக்கம். கீதா அக்காவுக்கு துணையா எத்தனை பேர் இருக்கோம்?
நீக்குமிக நல்ல பதிவு. அருமையான படங்கள். முதல் படம் ஸ்ரீராமனும் பரதனும்.
நீக்குஆரத்தழுவி விடை கொடுக்கிறார்.
நந்தி க்ராம படங்கள் அத்தனையும் படு ஜோர்.
ஊர்வசிக்குத் தூக்கம் வந்த கதையும், லக்ஷ்மணன்
பட்டாபிஷேகத்தில் தூங்கின கதையும் சுவை.
ஸரயுவை நினைக்கும் போது ராமர் அயோத்திமக்களுடன் புண்ணிய நதியில் இறங்கியது தான் நினைவுக்கு வரும்.
நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார் நாட்டுள்ளெ
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ
வரிகள் நினைவுக்கு வரும்.
ஸ்ரீராமன் வைகுண்டம் ஏகினதும், அவன் குல தேவதை உங்களை ஆதரவாகத் தொடர்ந்திருக்கிறார்,
நீக்குஇத்தனை அழகான ஆதவன் படங்களை வரிசையாக எடுத்த உங்களுக்குப் பாராட்டுகள்.
Thanks Valli. Just for a joke! :D
நீக்குOkay.haha.
நீக்குமுதல் படம் ராமனும் பாரதனுமா? ஓஹோ...
நீக்குபாராட்டியதற்கும், ரசித்ததற்கும், நன்றி வல்லிம்மா...
//அவன் குல தேவதை உங்களை ஆதரவாகத் தொடர்ந்திருக்கிறார்,//
அடடே... இதைப்படிக்க சந்தோஷமாய் இருக்கிறது மா.
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.பானு அக்கா.
நீக்குஇவ்வளவு சூப்பரா பாடுவீங்களா நீங்க?
ஙே!!!!!!!!!!!!!!!! என்ன? எங்கே? எப்போ? உங்களுக்கு மட்டும் பானுமதி பாடிக்காட்டி இருக்காங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குஇப்போ கேட்டுட்டீங்க இல்லையா? எப்படி இருந்தது?
நீக்குசூப்பர் எல்லாம் கிடையாது. ஏதோ பாடுவேன். எங்கள் வீட்டில் வாயைத் திறக்கவே பயம், ஏனென்றால் எல்லோரும் நன்றாக பாடுவார்கள். மாப்பிள்ளையும் நன்றாக பாடுவார். நான்தான் ஒளரங்கசீப் ! முன்பே நானும் என் மகளும் சேர்ந்து பாடி, ஒரு பஜன் போட்டிருந்தேன்.
நீக்குஅங்கேயே பதிலும் சொல்லிட்டேன்.
நீக்குகல்கி, வாசன் இருவரின் மனஸ்தாபம் தெரிந்த ரகசியம். அதனால் தான் கல்கி துவங்கப்பட்டது என்பதும் அறிந்ததே! அந்நாட்களில் இரு புத்தகங்களுக்கும் போட்டி உண்டு. விகடன் வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்ததாம். ஆகவே அதை முந்தித் தன் பத்திரிகை வர வேண்டும் என்பதற்காகக் கல்கி வியாழன் அன்றே கல்கியை வெளியிட்டு விடுவாராம். இரண்டுக்கும் போட்டிப் பல வருடங்கள் நீடித்திருக்கிறது. பின்னாட்களில் கல்கி வெள்ளி விழாக் கொண்டாடுகையில் ஆனந்த விகடன் அதிபர் வாசன், "தம்பி வீட்டுக் கல்யாணம்" என்னும் தலைப்பில் கல்கிப் பத்திரிகைக்கு வாழ்த்துச் சொல்லி ஓர் கட்டுரை எழுதி இருந்தார். அதன் பின்னர் கொஞ்சம் போட்டி மனப்பான்மை குறைந்ததோ என எண்ணுகிறேன்.
பதிலளிநீக்குபோட்டியில் துவங்கப்பட்டது சரி... கேட்ட கேள்விகளுக்கு பதில்??
நீக்குமறுபடி கேள்விகளைப் படிக்கிறேன். ஆனால் அவரவர் பார்வையில் அவரவர் கண்ணோட்டத்தில் அவரவர் செய்தது சரியாய்த் தான் தோன்றும்.
நீக்குகாந்தியின் பார்வையில்? குடும்பத்தை விட்டு விட்டு வா என்று சொல்லி விட்டாரே...
நீக்குகாந்தி பார்வை சரியாகவே இருக்காதே! :))))) நான் என்னோட பார்வையில் தான் பார்ப்பேன். :)
நீக்குநந்திகிராமத்திலும் அதிக நேரம் செலவழிக்கலை போல! ராமர் சரயூவில் மூழ்கிய இடத்தைப் போய்ப் பார்த்தீர்கள் தானே? பரதகுண்டத்தை அவங்க ஏன் காட்டணும்? நீங்களாவே போய்ப் பார்த்திருக்கலாமே!
பதிலளிநீக்குஆமாம், இல்லை, இல்லை.
நீக்குநாங்க வாடகைக்கு எடுத்திருந்த ஆட்டோக்காரர் எல்லா இடங்களையும் பட்டியல் போட்டுக் கொடுத்துட்டார். கடைசியில் ஒரு மலை மேல் ஏறணும்! அது மட்டும் குரங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதால் எனக்கு பயமாக இருந்ததால் போகலை. அங்கே தான் தேநீர் குடிச்சப்போ நம்ம ஆள் பக்கத்தில் ஸ்வாதீனமாக வந்து உட்கார்ந்து கொண்டு அவருக்கும் தேநீர் கேட்டார்.
நீக்குஓஹோ...
நீக்குIn Whatsapp Geetha ma.
பதிலளிநீக்குOh, Okay
நீக்குபழைய வீட்டப் பார்த்தால் சோகம்தான்.
பதிலளிநீக்குஎங்க வீட்டைப் பார்த்து யார் யார் என்ன சொல்கிறார்களோ.
இல்லைம்மா... இந்த வீடு வசிக்க லாயக்கில்லாததாக தெரிகிறது பாருங்கள்... அதைச் சொன்னேன். உங்கள் வீட்டில் ஜீவன் இருக்கிறது.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க... வாங்க...
நீக்குஅவதார நோக்கம் முடிந்தது என்று போய் விடுகிறார்கள்.
பதிலளிநீக்குசரயு நதியில் இறங்கி போவதாய் படிக்கும் போது மனது கஷ்டம் கொடுத்த நாட்கள்.
லவ குசா படம் பார்த்த் போது(சிறு வயதில்) அழுது இருக்கிறேன்.
பூமாதேவி பூமியை பிளந்து பெரிய சிம்மாசனத்தில் வருவதும் அம்மா என்று சீதை ஓடி போய் மடியில் அமர்வதும் பிளந்த மண் மூடிக் கொள்வதும் ராமன் பரிதவிப்பதும் மனகண்ணில் நிற்பவை.
மனிதனாக அவதரித்ததால் மனிதன் படும் கஷ்டங்களை எல்லாம் பட்டார்.
ஊர்மிளா லஷ்மணன்பிரிவு துயரை அறியாமல் தூங்கி கொண்டு இருந்தது நல்ல வரம்.
படங்கள் எல்லாம் இராமயணத்தை மீண்டும் படிக்க ஆசையை ஏற்படுத்துகிறது.
பரதனின் தவக்கோலம் ராமன், அனுமன் ஆலிங்கனம் எல்லாம் அருமை.
நீக்குபரதாஞ்சனேய அணைப்பு.. படம் அருமை.
ராமன், அனுமன் ஆலிங்கனம் என்று தவறாக எழுதி விட்டேன்.
நானும் முதலில் ராமாஞ்சனேய அணைப்பு என்றுதான் எழுதி மீண்டும் படித்துப் பார்த்தபோது மாற்றினேன். சட்டென வாயில், கையில் வரும் வார்த்தை ?அதுதான் இல்லையா !!
நீக்குசூரியன் தொடர்ந்து வந்து கண்ணில் மறையும் வரை பார்த்து விடை கொடுத்தது அருமை.
பதிலளிநீக்குஅதற்கு நீங்கள் எழுதி இருக்கும் வரிகளும் அருமை.
//
என்ன? ஒன்றும் புரியவில்லையா? எப்படிப் புரியும்? இதைப் படித்தால் அல்லவா புரியும்!!//
படித்து விடுகிறேன் விவரம் அறிய.
செல்லத்தின் ஆராய்ச்சி அருமை.
இப்பது பழுது அடைந்து கிடக்கும் பழைய வீடுகள் படம் நிறைய எடுத்து வைத்து இருக்கிறேன்.
மரங்கள் வளர்ந்து வீட்டை இரண்டாய் பிளந்த வீடுகள் எல்லாம் மாயவர்ம், திருக்கடையூர் , மாயவரம், திருவெண்காடு பக்கம் எல்லாம் எடுத்து இருக்கிறேன். நினைத்து பார்த்தால் சோகம் தான். வீடுகள் நிறைய கதைகள் சொல்லும்.
சூரியன் படங்களை போட்டு போர் அடிக்கிறேனோ என்று நினைத்தேன். ஆனால் அதைப் படங்களை விடவும் மனமில்லை. அதுதான் வெளியிட்டு விட்டேன்! ரசித்ததற்கு நன்றி.
நீக்குஅங்கிருந்து அருகில் இருக்கும் குப்தார் Gகாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லையா? அங்குதானே ராமர் சரயு ந்தியில் இறங்கியதாக ஐதீகம்?
பதிலளிநீக்குஅதன் எதரில் லட்சம் சாளக்ராமங்களை வைத்து வழிபட்ட கோவில், முஸ்லீம் படையெடுப்புக்குப் பின் மிஞ்சிய சாளக்ராமங்கள் பார்க்கலயா
இல்லை நெல்லை.
நீக்குஇந்த கல்கி வாசன் சம்பவத்தை இரு நாட்களுக்கு முந்தி எங்கேயோ படித்தேன். ஒருவேளை ஏட்டிக்குப் போட்டி புத்தக முன்னுரையிலா?
பதிலளிநீக்குOrganization is above individuals. கல்கியின் செயலால் விகடன் கம்பெனி பாதிக்கப்பட்டிருக்கும். வாசன் செய்தது மிகச் சரியானது. ஏற்கனவே, விகடனில் concentration செய்யாமல் வெளி வேலைகளிலும் ஈடுபடுகிறாரே என்ற எண்ணம் வாசனுக்கு இருந்திருக்கும்.
எனக்கும் அதைப்போன்ற அனுபவம் உண்டு. எங்கள் கம்பெனியில் உள்ள மேனேஜ்மென்ட்குடும்ப உறுப்பினர்கள் அரசியல் போராட்டத்தில் ஓரிரு நாட்கள் ஈடுபட்டு, அரசின் கோபம் கம்பெனிமேல் விழுந்து கம்பெனி பிறகு நொடித்துப்போய்்ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பம் நசிந்தது.
சமீபத்தில் வந்ததுதானே இது? படித்திருப்பீர்கள். பரிதாபம் பாரபட்சம் பார்க்காமல் தான் ஒரு சிறந்த நிர்வாகி என வாசன் முடிவெடுத்து விட்டார்.
நீக்குசோதனைக் காலங்களிலிருந்து எப்படி மீண்டு எழுவது - அதுவும் வெகு சிறப்பாக என்று கல்கி நிரூபித்து விட்டார்.
வாசனுக்கும், கல்கிக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது தியாக பூமி படத்தில்தான் என்று என் அப்பா கூறுவார். தியாக பூமி கதையை கல்கி விகடனில் எழுதும் பொழுதே படமாக்கப்பட்டு, விகடனில் புகைப்படங்களோடு கதையை வெளியிட்டார்களாம். முடிவு என்னவென்று எழுதக்கூடாது, எழுதாமல் விட்டால்தான் ஒரு எதிர்பார்ப்பில் படம் நன்றாக ஓடும் என்று வாசன் கருதினாராம். கல்கியோ, நான் தொடர் கதையாகத்தான் எழுதுகிறேன் எனவே முடிவையும் வெளியிடத்தான் வேண்டும் என்று கூற, இருவரும் பிரிய அதுவே காரணமாக அமைந்ததாம். ஒருவேளை இந்த விஷயத்தில் எழுந்த மனக்கசப்பை வாசன் கல்கி போராட்டத்தில் ஈடுபடுகிறார் என்ற சமயத்தில் தீர்த்துக் கொண்டாரோ என்னவோ?
நீக்குபாரதிராஜா தான் படமாக எடுத்துக் கொண்டிருந்த ஒரு படத்தை கல்கியில் தொடர் கதையாக எழுதினார். அதில் பாபு என்னும் நடிகர் நடித்தார். அதன் முடிவை அவர் எழுத மறுத்து விட்டார். அப்போதும் கல்கியில் அது தவறு என்று எழுதியிருந்தார்கள்.
வாங்க பானு அக்கா... பாரதிராஜா தகவல் புதிது. நீங்கள் சொல்வது என் உயிர்த்த தோழன் கதையோ? பாக்யராஜ் மௌனகீதங்கள் கதையை குமுதத்தில் எழுதினர். விக்ரம் கதையும் குமுதத்தில் வந்தது.
நீக்கு//சமீபத்தில் வந்ததுதானே இது? படித்திருப்பீர்கள். // பல வருஷங்களாகவே தெரிந்தது தான். தினமலரில் மறுபடி போட்டிருக்கலாமோ?
நீக்குபாரதிராஜாவின் இந்த "என்னுயிர்த்தோழன்" பாபு தான் கடைசியில் படுத்த படுக்கையாக ஆனார். இப்போ இருக்காரா என்னனு தெரியலை. பாவம், ரொம்பச் சின்னவயசிலே இப்படி நடந்துவிட்டது. :(
பரத் குண்ட் பெரிது, ஆனால் நிறைய பாசிகளுடன் கூடியது.
பதிலளிநீக்குஓஹோ...
நீக்குஹனுமான் பரதன் சிலை நன்றாக புகைப்படம் எடுக்கப்படவில்லை. நான் அனுப்புகிறேன்.
பதிலளிநீக்குவியாழன் பதிவை ஞாயிறுபோல ஆக்க நினைத்து மறையும் சாரியன் படங்களைப் பகிர்ந்துகொண்டீர்களா?
நான் ரொம்ப பயந்து பயந்து எடுத்தேன். கூட்டத்துக்கு நடுவே அங்கிருப்பவர்கள் பார்க்காதபோது எடுத்தேன். நாங்கள் படம் எடுக்கக்கூடாது என்று தடுக்கப்பட்டோம்.
நீக்குபதிவில் வியாழன் என்ன, ஞாயிறு என்ன... நன்றாயிருந்தால் எல்லாம் ஒன்றுதான்! ஆனால் அப்படி எல்லாம் நினைக்கவில்லை. அந்தப் படங்களை பகிராமல் இருக்க மனமில்லை. அதுதான்...!
படங்களோடு சொல்லி வந்த கதை நன்று.
பதிலளிநீக்குஇந்த மாதிரி ஆனால் பெரிய, பெரிய வீடுகள் தேவகோட்டையில் நிறைய இருக்கின்றன... ஆட்கள் கிடையாது.
நாட்டுக்கோட்டச் செட்டியார்கள் (நகரத்தார்) இல்லங்களைத்தானே சொல்றீங்க கில்லர்ஜி... அவைகள் ஒரு தெருவில் வாசல்னா இன்னொரு தெருவில் பின்வாசல் அமைஞ்சிருக்கும்னா. நிறைய கட்டுகளோடு பெரிய பெரிய வீடுகளாக இருக்குமே...அப்போல்லாம் ஊர்ல ஆட்கள் இருந்தாங்க. இப்போ அந்த அந்த பெரிய வீடுகளை பராமரிப்பதே சாத்தியமில்லாததுன்னா...
நீக்குதேவகோட்டைல இருக்கான்னு தெரியாது...பொன்னமராவதி, பூலாங்குறிச்சி போன்ற இடங்களில் இத்தகைய வீடுகளை நான் பார்த்திருக்கேன்.
ஆமாம் நண்பரே இந்த தெருவில் தலைவாசல் இருந்தால் அடுத்த தெருவில் கொல்லைவாசல் இருக்கும்.
நீக்குஎனது வீடும் இப்படித்தான் 9 கதவுகள் திறந்தால் கொல்லைவாசல் அடுத்த தெரு.
நன்றி கில்லர்ஜி.
நீக்குநாட்டுக்கோட்டை வீடுகளோடு ஒப்பிடும்போது இது மிகச்சிறிய வீடு.
அந்த சோகம் சில காரணங்களினால் இருக்கலாம்.
பதிலளிநீக்கு1. வீட்டுச் சொந்தக்கார சந்ததிகள் வெளி நாட்டில் இருக்கலாம். டாலரில் புழங்குவோருக்கு இந்த வீடு ஒரு இப்படி இருப்பது விஷயமே
இல்லை.
2. இடத்திற்கு வாரிசு உரிமை கொண்டாடுவதில் சிக்கல் இருக்கலாம்.
கோர்ட் முடிவுக்காக காத்திருக்கலாம்.
3. வெறும் நிலமாக இருந்தால், யாராவது குடிசை போட்டு விடுவார்களோ என்ற பயத்தில் சிதைந்த வீடு சிதந்த படியே இடம் விற்பனைக்காகக் காத்திருக்கலாம். நல்ல விலை படிந்தால் இந்த வீடே காணமல் போகும்.
4. கும்பகோணம் கோயில் நகரமாதலால், அடிமனை கோயிலுக்குச் சொந்தம் என்று பல இடங்களில் உண்டு. அந்த மாதிரி பத்திர சிக்கல் ஏதாவதில் மாட்டிக் கொண்டிருக்கலாம்.
5. வீட்டுக்காரர் வீட்டை புதுப்பித்தாலும் வாடகை அந்த வீடு இருக்கும் பகுதியைப் பொருத்தது. இருப்பதை ஏறக்கட்டி புதுப்பிக்கும் செலவுக்கு வாடகை தேறாதது என்று அப்படியே விட்டு விடலாம்.
6. பக்கத்து வீடு தூக்கிக் கட்டிய மாடி வீடு. தங்கை--அக்கா போல இருக்கும் அந்த இரண்டு சிறிய வீடுகளும் அண்ணன்--தம்பி பாகப்பிரிவனையில் பிரிந்து ஒருத்தர் மட்டும் ஓரளவு குடித்தனம் இருக்கிற அளவில் சீர்திருத்தியிருக்கிறார். இரண்டு வீடுகளாகத் தோற்றமளிக்கும் இந்த இரண்டிற்கும் ஒரே பத்திரம்--பட்டா என்றால் விற்பனையாவதிலும் சில சிக்கல்கள் இருக்ககூடும்.
7. இடது பக்கம் காலி மனையாயிருந்தால் எல்லாப் பகுதிகளையும் ஒன்றாய் வளைத்து அடுக்கு மாடி குடியிருப்பு -- அல்லது சீனியர் சிடிசன் நல இடமாக்கி (கும்பகோணத்தில் இதற்கு தான் டிமாண்ட் இப்போது) பெரிய தொரு மாளிகையாக்கி காசு பார்க்கலாம்.
கும்பேஸ்வரர் கோட்டை, மங்களாம்பிகா மாளிகை என்று ஏதாவது பெயர் சூட்டி முதியோர் நல வாசஸ்தலம் ஆக்கலாம்.
வீட்டைப்பற்றிய உங்கள் அனுமானக் கற்பனை பிரமாதம் ஜீவி ஸார். இது மாதிரி சிந்தனைகளைதான் எனக்குள்ளும் தூண்டியது அந்த வீடு. எத்தனை சாத்தியக்கூறுகள்! குடந்தையில் அந்த ஏரியாவில் பெரிய ஆஃபர் எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன்.
நீக்கு//சீர்திருத்தியிருக்கிறார்..//
பதிலளிநீக்குசீர்திருத்தியிருக்கலாம் என்று படிக்கவும்.
//இரண்டு வீடுகளாகத் தோற்றமளிக்கும் இந்த இரண்டிற்கும் ஒரே பத்திரம்--பட்டா என்றால் விற்பனையாவதிலும் சில சிக்கல்கள் இருக்ககூடும். //
ஒரே பத்திரம் - பட்டா என்றிருப்பின் என்று திருத்தி வாசிக்கவும்.
சில விஷயங்களை மனம் தானாக உள்வாங்கி விடும்!
நீக்குபடங்களுடன் இராமர் &கோ அருமை.
பதிலளிநீக்கு"சோகத்தை சொல்லும் படம் " கவலை.
நன்றி சகோதரி மாதேவி.
நீக்குஸ்ரீராம் கிணறு ரொம்ப அழகா வித்தியாசமா இருக்க்ம் போல இருக்கிறது! தண்ணீரும் இருக்காப்ல இருக்கு. அந்த வாளியில் தண்ணீர்.
பதிலளிநீக்குராமர் குடும்ப ஆல்பம் படங்கள் நல்லாருக்கு ஸ்ரீராம். அந்தக் கிணற்றிற்கு அருகில் இருப்பவர் அந்த இடத்தைப் பற்றியும் கிணற்றுக்கு ஏதேனும் கதையும் சொல்லியிருப்பார். உங்களுக்குத்தான் ஹிந்தி புரியுமே இல்லையா ஸ்ரீராம்?!!!!!!!
கீதா
கீதா... அந்தக் கிணற்றுக் காப்பாளர் அதிலிருந்து எடுத்த தண்ணீரை எங்களிடம் தரவந்தார். தந்தார். கொஞ்சம் வாயில் விட்டுக்கொண்டோம்.என்ன சொன்னார் என்றுபுரியவில்லை. எனக்குத் தெரிந்த அரைகுறை அறிவில் அது ஹிந்தி போல இல்லை.
நீக்குவிவரங்களும் படங்களும் சிறப்பு. தவக்கோலத்தில் இருக்கும் பரதன் அருமை. பார்க்காத பரத குண்ட் பற்றியும் தகவல் தந்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா. எழுதுவதற்காக விவரங்கள் தெரியபோதுதான் நாங்கள் எவ்வளவு மிஸ் செய்திருக்கிறோம் என்றும் தெரிந்தது.
நீக்குபரத் குன்ட் காட்டப்படவில்லை//
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏன் இப்படி இந்த ட்ராவல்ஸ்காரர்கள். நீங்க யாரும் கேக்கலையா ஸ்ரீராம். திவி சினிமாவில் நாகேஷ் கேட்பாரே பிழை இருந்தால் அதுக்கு ஏத்தாப்ல குறைத்துக் கொடுங்க பரிசைனு நீங்களும் இதெல்லாம் காட்டலை ரேட்டைக் குறைச்சுக்கோங்கனு சொல்லிக் கேட்க முடியாதோ?!!
கீதா
அது இப்போதுதானே தெரிகிறது கீதா? போனால்போகட்டும் விடுங்கள். ஏதோ நான் பார்க்காத பல இடங்களை பார்த்தேனே.. பாஸிட்டிவாக நினைப்போம்...
நீக்குநீங்கள் செல்வதை சூரியன் ஒளிந்து இருந்து பார்ப்பதாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால், எனக்கென்னவோ நீங்கள் விடாமல் துரத்தி துரத்தி படமெடுப்பதை பார்த்து வெட்கப்பட்டு ஒளிந்து கொள்கிறதோ என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குஓ... அப்படியும் சொல்லலாமோ பானு அக்கா! பார்வையின் மறுபக்கம்!
நீக்குஊர்மிளா அந்தப் பதினாலு வருடங்களும் இரவு பகல் என நித்திரையில் இருக்கிறாள் என்று சொல்கிறது ஒரு புராணம்.//
பதிலளிநீக்குஇது புச்சா கீதே! நான் வாசித்தது ஊர்மிளா தன் மாமனார் மாமியாரைக் கவனிக்க வேண்டும் என்று சொல்வது போல வாசித்த நினைவு. ம்ம்ம்...
நந்திகிராம் வளாகங்களைப் பார்த்துக் கொண்டாயிற்று. ஆஞ்சு சூப்பர்!
சூரியன் எட்டிப்பார்க்கும் படம் அழகு.
கீதா
புதுசா? கீழே கமலா அக்கா அது தெரிந்த கதை என்று சொல்லியிருக்கிறார் பாருங்கள் கீதா.
நீக்குபாராட்டுகளுக்கு நன்றி. ப க வை எப்போது முடிக்கப்போகிறோம் என்று இருக்கிறது எனக்கு!
தி/கீதா, மைதிலி ஷரண் குப்தாவின் "சாகேத் ராமாயண்" படிச்சிருக்கீங்களா? ஊர்மிளை பற்றி உருக உருக எழுதி இருப்பார். கண்ணீர் கொட்டும்.
நீக்குநீங்க எல்லாரும் ஒழுங்கா பத்திரமா கிளம்பியாச்சா என்று பார்த்துவிட்டுத் தன் கடமையை இங்கு முடித்துக் கொள்ளும் சூரியன் செமையா இருக்கிறார்!
பதிலளிநீக்குகீதா
நல்லா இருக்கு இல்லே? அதுதான் பகிர்ந்தேன்!
நீக்குஅடுத்தடுத்த சூரியன் படங்களும் உங்கள் கேப்ஷன்ஸும் அருமை.
பதிலளிநீக்குஎன்ன கடமை உணர்ச்சி பாருங்க சூரியனுக்கு! பின்ன சூரியவம்சத்தவர் இருந்த இடத்தை அல்லவா பார்க்கப் போயிருக்கீங்க! அதான் அந்தக் கடமை உணர்வோ!??!!!
கீதா
இது தெரியாமலே அல்லது உணராமலேயே நான் படம் எடுத்திருக்கிறேன் பாருங்கள்!
நீக்குகல்கி, வாசன், காந்தி என்று கேள்வி மேல் கேள்வி இதைப் படித்தால்தான் புரியும் என்பதை இனிதான் படிக்கணும் ஸ்ரீராம் நைட் படித்துவிட்டு வருகிறேன்...
பதிலளிநீக்குஆனால் நீங்கள் சொன்ன விதத்தை மிகவும் ரசித்தேன்...
கீதா
நன்றி கீதா! ஆவலைத் தூண்டி விட முயற்சி!
நீக்குசெல்லத்தின் ஆராய்ச்சி ஹா ஹா ஹா ஹா ஹா...ஹையோ அதை ஏன் கேக்கறீங்க எங்க வீட்டுது இருக்கே அது இப்படித்தான் வீட்டுத் தரை மொசைக்கா இருந்தாலும் ஏதோ மண்ணைத் தோண்டிப் படுப்பது போல க்ரக் க்ரக் நு தோண்டிட்டுப் முகர்ந்து பார்த்துத்தான் படுப்பா...அப்புறம் அவ படுக்கையையும் கூட அப்படித்தான் சில சமயம் ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குஅழகு செல்லம் !! க்யூட்
கீதா
செல்லங்கள் மனதில் என்ன இருக்குமோ!
நீக்குஅந்தக் கடைசிப் படம் போல ஒன்று நீங்கள் முன்பு பகிர்ந்திருந்த நினைவு இருக்கு ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஇந்த வீட்டைப் பார்க்கும் போது என்னென்னவோ தோன்றுகிறது. கதை கூட உருவாகுது ஆனால் பாருங்க இப்பல்லாம் உக்காந்து எழுதக் கூட முடியாமல் ஓட்டம்....
கீதா
ஆமாம் கீதா... திருக்கடவூரில் எடுத்த படம் முன்னர் பகிர்ந்திருந்தேன். ஒரு ஓட்டு வீடு வாசலில் தேங்காய் மட்டைகளாக இருக்கும்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குராமாயண காலத்தை கண்ணெதிரில் காட்டியது தங்கள் பதிவு. படங்கள் அத்தனையும் அருமை.மிகப்பெரிய ஆலமரம் அங்குதான் பரதாஞ்னேய ஆலிங்கனம் என்றதும் மெய் சிலிர்த்தது. காலங்காலமாய் இன்னமும் அங்கு நிலைத்து உள்ளதா? பரதன் தான் கொடுத்த கெடு முடிந்ததும், அக்னி பிரவேசம் செய்ய துணிந்ததும், அவர் அக்னி பிரவேசம் செய்ய முற்படும் போது அவரை முதன் முதலாக தரிசித்த ஆஞ்சநேயரும் என மனக்கண்ணில் ராமாயண காட்சி விரிந்தது.
ஊர்மிளையின் உறக்கம் அறிந்ததுதான். இங்கு கதையாய் கேட்கும் போது நன்றாக இருந்தது. கிருஷ்ணாவதாரத்தின் முடிவு அறியபட்டதெனினும் ராமாவதாரத்தின் முடிவு இன்று தெரிந்து கொண்டேன். சரயு நதியின் நல்ல வரலாறு அறிந்து கொண்டேன்.
சூரியன் தங்களை விடாது தொடர்ந்தபடி வந்த படங்களும், அவரை தாங்கள் விடாது விரட்டியபடி எடுத்த படங்களும் மிக அழகு. ஒவ்வொரு படங்களுக்கும் தாங்கள் கொடுத்த அருமையான வரிகளை மிகவும் ரசித்தேன்.
கல்கி பத்திரிக்கை துவக்கம் நாட்டுக்கான போராட்டத்தில் எழுந்ததுவா? "எல்லாம் நன்மைக்கே" என்ற வாசகம் என்றுமே உண்மையாகத்தான் இருக்கிறது.
செல்லத்தின் மூ(லை)ளை ஆராய்ச்சி திறம்பட உள்ளது.மிகவும் ரசித்தேன்.
வீடு தன் இளமையில் தொலைத்ததை, தங்களின் இன்றைய தலைப்பை சுட்டிக் காட்டியதில் சற்று நிம்மதி அடைந்திருக்கும் என நம்புகிறேன். என் சோகங்களையும் சற்றே சுமக்க மனிதர்கள் இருக்கிறார்கள் என சிறிதளவு சந்தோஷம் அடைந்திருக்கும்.
தன்னால் வாழ்ந்த எத்தனை பேர்களின் சந்தோஷங்களை,கவலைகளை தன்னுள் அடக்கியபடி நிமிர்ந்து நின்ற அந்த ஒவ்வொரு செங்கற்களும் இன்று ஆயிரம் கதைகள் சொல்கின்றன இது போல் தாங்கள் பகிர்ந்த மற்றொரு வீட்டையும் முன்பொரு பதிவில் பார்த்துள்ளேன்.
அனைத்தும் நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா...
நீக்குஅதே ஆலமரமா இன்னமும் இருக்கும்?!! நம்ப முடியவில்லை! ராமனின் முடிவு எப்படி என்று இப்போதுதான் அறிந்தீர்களா? ஆச்சர்யம். சூரியப்படங்களின் கேப்ஷன்களை ரசித்ததற்கு நன்றி.
மூளை மூலை - ரசித்தேன். வீடு பற்றி கீதாவுக்கு சொன்ன ஆபத்தில் உங்களுக்கும்!
நன்றி கமலா அக்கா.
காலையிலேயே நந்திக்ராம் தரிசனம் ஆயிற்று..
பதிலளிநீக்குபடங்கள் அத்தனையும் அருமை.. ஆனாலும்,
மனதில் ஏதோ பாரம் அழுத்திற்று..
தனக்கென்று ஒரு விதியைத் தானே எழுதிக் கொண்டு
போராடிக் களைத்த ஸ்ரீராமனின் பாதம் பதிந்த பூமி.. என்று மெய்சிலிர்த்தது..
நீதி நெறிமுறைகளைக் காட்டி வாழ்ந்த ஸ்ரீராமன் மீது புழுதி வாரித் தூற்றும்
இன்றைய மானிடப் பதர்கள் அந்த ஸ்ரீராமனின் பாதுகையைப் பூஜித்த
பரதனின் பாதத்தூளிக்கு நிகராகுமா?...
ஆகாது துரை செல்வராஜூ ஸார். அந்தக்காலத்தில் மீடியா கிடையாது.செய்தித்தாள்கள் கிடையாது. வம்பு பேச நேரம் இருந்திருக்காது.
நீக்கு//படங்கள் அத்தனையும் அருமை..//
நன்றி.
தசரத புத்திரர்கள்போன்ற சகோதரர்களை, அதற்கப்புறம் இந்த உலகம் அறிந்ததா - தெரியவில்லை. சகோதரர்கள் ஒருவரையொருவர் அளவிலா பாசங்காட்டி வாழ்ந்த புண்ணியபூமியில் சில மணிநேரம் இருந்தீர்கள் என்பதே போதுமானது. ஆதவனும் உங்கள் வருகையில் ஆனந்தப்பட்டானோ!
பதிலளிநீக்குகும்பகோணம் வீடு போன்ற பாழடைந்த வீடுகள் மனதைக் கலவரப்படுத்துகின்றன. எத்தனை விதமான ஆண்,பெண், குழந்தைகளைத் தன் இளமைக் காலத்தில் உள்ளிருத்திக் காத்திருக்கும் இந்த வீடு?
ஆமாம் ஏகாந்தன் ஸார்... இதுபோன்ற பாசங்கள் புராண காலத்தோடு முடிந்து விட்டதோ என்னவோ!
நீக்குவீடு பற்றிய உங்கள் எண்ணம் எனக்குள்ளும் தொற்றிக்கொள்கிறது.
வாசன் செய்தது சரி என்றே தோன்றுகிறது. அச்சாபீஸ் ஏற்கனவே ஜாமீன் கட்ட வேண்டியிருந்திருக்கிறதே. விகடன் ஆஃபீஸ் சரியக் கூடாது என்று அதை மேனேஜ் செய்து வந்த வாசன் அந்த இடத்தில் எமோஷனலாக இல்லாமல் பலருடைய வேலைக்கு ஆப்பு வைக்காமல் ஒரே ஒருவரை விலக்கியிருக்கிறார்.
பதிலளிநீக்குகல்கி இதனைக் கலந்தாலோசித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. என்றாலும் அவரது ஆர்வத்தைக் குறை சொல்ல முடியாது. இப்படி நிகழ்ந்ததால்தான் கல்கி பிறந்தது. அதுவும் சிறப்பாகத்தான் இருந்தது அப்போது.
காந்தி? ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கொஞ்சம் விசாரித்திருக்கலாமோ? கல்கியிடமே...ஒரு வேளை இதற்கு முன் இரு முறை கலந்து கொண்டவர்தானே என்று அனுமதித்திருப்பாரோ?
புதிய தகவல்
கீதா
அழகான படங்களும் தகவல்களும். இந்த இடங்களுக்கெல்லாம் நான் போக வாய்ப்பில்லை என்பதால் இங்கேயே நன்கு ரசித்துப் பார்த்துக்கொண்டேன். சூரியனாரும் நீங்களும் விளையாடிய கண்ணாமூச்சி அழகு. கடைசி படம் சொல்லும் கதைகள் அநேகம்.
பதிலளிநீக்குநன்றி சகோதரி.
நீக்குராம பரத ஆலிங்கன படங்கள் அற்புதம் .....நம் ராமனின் இடம் என்று நினைக்கும் போதே பரவசம் தான் ..
பதிலளிநீக்குசூரிய காட்சிகள் அழகு ..
நன்றி சகோதரி அனுபிரேம்.
நீக்கு