செவ்வாய், 16 ஜூலை, 2019

​கேட்டு வாங்கிப்போடும் கதை - அவன் அறிவானா? - நிறைவுப்பகுதி - நெல்லைத்தமிழன்

அவன் அறிவானா?
நெல்லைத்தமிழன் 
நிறைவுப்பகுதி 

சென்றவாரம் முடிந்த வரி:  ஒங்கிட்ட ரெண்டு விஷயம் சொல்லணும்.  ஒண்ணைத் தயங்காமச் சொல்லிடுவேன்…இன்னொண்ணு தயக்கமா இருக்கு”  பரத், அம்மாவிடம் தொலைபேசியில் பீடிகை போட்டான்.      இனி இந்த வாரம்…


  
“என்னடா இப்படிச் சொல்லிட்ட… எங்கிட்ட எதையும் சொல்லத் தயங்கும்படியாவா ஒன்னை வளத்துருக்கேன். சொல்லு”

“எம் படிப்பு முடிய இன்னும் ஆறு மாசம்தான் இருக்கு. அதுக்குள்ள எனக்கு பெரிய வேலை கிடைச்சிருக்கும்மா. அவங்க ஆறு மாசம் கழிச்சே ஜாயின் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க. எவ்வளவு சம்பளம் தெரியுமாம்மா? நம்ம வீட்டை மாதிரி ஆறு வீடு வருஷத்துக்கு வாங்கலாம்”

“ரொம்ப சந்தோஷம்டா..இன்னொரு விஷயம் என்னடா?”

“அம்மா……என்னோடயே ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கற பெண்ணை நான் விரும்பறேன்…அவ தாய்லாந்து. நம்ம மாதிரி இந்துதான். நல்ல குணம். எங்க ரெண்டு பேருக்கும் எண்ணத்தில் ஒரே அலைவரிசை. எனக்குப் பிடிச்சிருக்கு. உன்கிட்ட போட்டோ காட்டி நேர்ல சொல்லி அனுமதி வாங்கணும்கறதுதான் என் விருப்பம்”

“மதம்கறது வாழ்க்கையை வாழறதுக்கும் நம்மைப் படைச்சவனை அணுகறதுக்குமான ஒரு கருவிதாண்டா…அது எப்பவும் ரொம்ப முக்கியமில்லை. மனம்போல பண்ணிக்கோடா. மனைவிங்கறவ வாழ்க்கை பூராவும் கூடவே வர்றவ.  உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்”  பரத்தின் தேர்வில் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, அவள் குரலில் ஒலித்தது.

“அவளோட அப்பா அம்மா ரொம்ப வருஷம் முன்னாலயே போய்ட்டாங்கம்மா.  இன் ஃபாக்ட், அதைப்பற்றித்தான் நாங்க முதல் முதல்ல பேசினோம். அதுலேர்ந்து வளர்ந்ததுதாமா எங்க நேசம்.. அப்புறம் அதுவே காதலாச்சு.  வேற தேசத்துப் பொண்ணு, நீ என்ன சொல்லுவியோன்னு எனக்கு மனசுல தோணிக்கிட்டே இருந்ததும்மா”

“ஹிஸ்டரிலாம் படிச்சவனுக்கு இந்த சந்தேகம் எப்படிடா வந்தது? பூமிங்கற கிரகத்துல வெவ்வேற இடங்கள்ல பரந்து விரிஞ்சு வாழறதுதானே மனித ஜென்மம். அதுல பிரிச்சு கோடு போட்டு, இது என் தேசம், அது உன் தேசம்னு பிரிவினை பேசுனது அதே மனுஷங்கதானே. ஒத்தரைப் பத்தி இன்னொருத்தருக்கு முழுசும் தெரிஞ்ச ஒரு பொண்ணுக்கும்  பையனுக்கும் கல்யாணம் நடக்கணும்னா, ஒரே குடும்பத்துல ஒரே வீட்ல வாழற சொந்தக்காரங்களுக்குத்தான் அப்படி அமையும். மத்தவங்களெல்லாம் முன் பின் தெரியாதவாளைத்தானே கல்யாணம் பண்ணிப்பா? நானும் உங்கப்பாவைக் கல்யாணம் செஞ்சுக்கும்போது, இருவருக்கும் ஒருவரை ஒருவர் அறிமுகம் கிடையாது. பூர்வ ஜென்ம புண்ணியத்துனால எல்லாம் நல்லதா அமைஞ்சது.. இதுல சொந்த ஊர், அசலூர், சொந்த ஜாதி, அயல் ஜாதி, சொந்த மதம், வேற மதம், சொந்த தேசம், அயல் தேசம் என்ற பிரிவினைல என்ன அர்த்தம் இருக்கு?  உங்க காலத்துல ஒருத்தரோடு ஒருத்தர் பழகிப்பார்க்க வாய்ப்பு இருக்கு. இவள் நமக்கு சரியான துணைவியா இருப்பான்னு உன் அந்தராத்மா சொன்னதுன்னா அதன்படி செய்யறதுல என்ன தயக்கம்? எங்களுக்கும் அவா அவா அப்பா அம்மா, அவங்க அவங்க அந்தராத்மா சொல்றதை வச்சுத்தானே முடிவு பண்ணினாங்க? என்ன ஒண்ணு…எங்களுக்கு பெற்றோர்கள் முடிவு பண்ணினாங்க. .இதுல சம்பந்தப்பட்டவங்களே முடிவு பண்ணறீங்க. அது இன்னும் பெட்டர் இல்லையா?”

அம்மாவின் தெளிவான எண்ணச்சிதறல் எப்போதும்போல் பரத்துக்கு வியப்பாகத்தான் இருந்தது. அப்பா இடையில் மறைந்துவிட்டாலும், எப்படிப்பட்ட ஒரு மனுஷியால் தான் வளர்க்கப்பட்டிருக்கிறோம்,  இதுக்கெல்லாம் வாழ்க்கையில் யாருக்கு என்ன கைம்மாறு செய்துவிட முடியும்? என்று அவன் மனதில் தோன்றியது.


--

ஆறு மாதம் கழித்து பரத்தும் கன்யாவும் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டார்கள். கன்யா தன்னிடம் அன்போடு பேசியதும், இயல்பாகத் தன் வீட்டில் சில நாட்கள் தங்கியதும் ஆனந்திக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. ஆனந்தி எவ்வளவு வற்புறுத்தியும் அவர்கள் ஹோட்டலில் தங்க மறுத்துவிட்டனர்.  

“ஏம்மா நீங்க நான் செளகர்யமா இங்க இல்லைன்னு நினைக்கறீங்க?… அம்மாவோட ஆசியோட அவங்க முன்னால கல்யாணம் நடக்கணும், அம்மா வீட்டுக்கு வந்து அவங்களோட தங்கணும்கறதுதான் எங்க விருப்பம். நானும் பரத் மாதிரி சாதாரண குடும்பத்துல பிறந்து உழைப்பாலத்தான் அமெரிக்கா போய் படிச்சேன். இப்போ உங்களோட உங்க வீட்டுல இருக்கறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு”

தன் சந்தோஷத்துக்காக, குலதெய்வம் கோவிலுக்கு அவள் வருவாளா என்று கேட்டபோது, இயல்பான சந்தோஷத்துடன் வந்தாள். ஜீன்ஸ்  பேண்ட் மேலேயே புடவை கட்டிக்கொண்டுவந்த கன்யாவை பரத் பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது அவளைப்பார்த்து ஏதோ சொல்லி, அவளுக்கு நாணத்தை வரவழைத்துக்கொண்டிருந்தான். பரத்துக்கு, கன்யா, தன் அம்மாவுக்காக மெதுவாக ஆங்கிலம் பேசுவதும், அவ்வப்போது சில தமிழ் வார்த்தைச் சேர்த்துக்கொள்வதும் காணச் சிரிப்பாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. கோவிலைப் பற்றியும் செய்யும் பூசைகளையும்பற்றி ஒவ்வொன்றாக ஆனந்தி மருமகளுக்குச் சொல்லிக்கொண்டுவந்தாள்.

கோவிலிலேயே பொங்கிய பொங்கலையும் கன்யா பயபக்தியோடு எடுத்துக்கொண்டாள்.

“Yearly இந்தக் கோவிலுக்கு நீ போறிங்களா?” கன்யா, மாமியாரைக் கேட்டாள்.

“ஏய்…அம்மாவை நீங்கன்னு சொல்லு. நீன்னு சொல்ற. உன் தமிழ் அவ்வளவுதானா?” பரத் கன்யாவைச் சீண்டினான்.

“போடா…அவ எப்படிப் பேசினாலும் சரிதான் எனக்கு. நீ இவ்வளவு சொல்றயே… “தாய்” பாஷைல எனக்கு நாலஞ்சு வார்த்தை சொல்லித்தா”  ஆனந்தி மகனிடம் கேட்டாள்.

“அவருக்கு லவ் சம்பந்தப்பட்டதைத் தவிர வேறு எந்த வார்த்தையும் தாய் மொழில தெரியாது அம்மா” என்று சொல்லி பரத்தை முகம் சிவக்க வைத்தாள் கன்யா.

ஒரு மாதம் போன வேகமே தெரியவில்லை. அவர்கள், குறிப்பாக கன்யா எவ்வளவு வற்புறுத்தியும் ஆனந்தி அமெரிக்கா வரவில்லை என்று சொல்லிவிட்டாள்.

“உன் கையால வருஷத்துக்கு சில மாதங்களாவது சாப்பிடணும், என்னோட அம்மாவை, நான் அனுபவிக்கும் செளகரியங்களையெல்லாம் அனுபவிக்கச் செய்யணும்னு எனக்குத் தோணாதாமா? அவளுக்கும் உன்னை எப்படியாவது கூட்டிக்கொண்டு போகணும்னு ஆசை”

சொன்ன மகனின் கையைப் பிடித்துக்கொண்டாள் ஆனந்தி.

“கன்யாக்குத்தான் கொஞ்சம் ரெசிப்பி சொல்லிக்கொடுத்திருக்கேனே…ரசம், குழம்பு, கூட்டுலாம். அப்புறம் என்ன. நீங்க நல்லா செளகரியமா இருக்கீங்க என்ற நினைப்பே எனக்குப் போதுமானது. இந்த வீட்டுலதான் உங்க அப்பா, தாத்தா பாட்டியோட ஆன்மா இருக்கறதா நான் உணர்றேன். அதை விட்டுட்டு எங்கயும் வரமுடியாதுடா”

“அம்மாவோட உணர்வைப் புரிஞ்சுக்குங்க. ரொம்ப வற்புறுத்தி அவங்க மனசைக் காயப்படுத்தாதீங்க” கன்யா, பரத்துக்குத் தடை போட்டுவிட்டாள்.


**

வேறு கண்காணாத தேசத்தில் வசித்தாலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆனந்தியோடு இருவரும் ஒரு மணி நேரமாவது போனில் பேசிக்கொண்டிருப்பார்கள்.  அந்த வாரத்தில் சென்ற இடங்கள், சின்னச் சின்ன சம்பவங்கள்,  கலாட்டாக்கள், சில சமயம் சமையல் குறிப்பு என்று ஒரு நொடியில் ஒரு மணி நேரம் போனதே தெரியாது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, ஒரு மாதம் ஆனந்தியுடனேயே  வந்து இருப்பார்கள்.  ஆனந்தி பிடிவாதமாக வீட்டில் எந்த செளகர்யங்களையும் பண்ண ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த வீட்டை, அதே நிலையில்தான் வைத்துக்கொள்ள விரும்புவதாகக் கூறிவிட்டாள். அவர்களுக்கு வேண்டுமென்றால் ஒரு அறையில் ஏ.சி. பொருத்தி என்ன செளகரியம் வேணுமானாலும் பண்ணிக்கொள்ளுங்கள், நீங்கள் விடுமுறைக்காக வந்து, எனக்காக கஷ்டப்படக் கூடாது என்று சொன்னாலும், கன்யா அதை ஒத்துக்கொள்ளவில்லை.  ‘அம்மா’ மாதிரியே நாங்களும் விடுமுறைக்கு வரும்போது இருந்துகொள்கிறோம் என்று சொல்லிவிட்டாள். 

“ஏய்…. இங்க வந்து நான் அம்மா கையால சாப்பிடணும்னு பார்த்தா, நீ கிச்சன்ல என்ன பண்ணற?”

“நீ ஏண்டா எங்க இடைல வர்ற?  அவதான் இன்னைக்கு எனக்கு டின்னர் பண்ணப்போறாளாம். நீ சும்மா இரு.  மருமகள் கையால சாப்பிடக் கொடுத்துவச்சிருக்கணும். மத்யானம் ‘ஆஹா நல்லாருக்கு’ன்னு சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிட்டயே ரசம்… அது கன்யா பண்ணினது”  ஆனந்தி இடைமறித்தாள்.

“அரிசி உப்புமா,  கொத்சு வாசனை வரப்போகுதுன்னு பார்த்துக்கிட்டிருக்கேன்… ஒரு வாசனையும் வரலையேன்னு பார்த்தா கனி கிச்சன்ல இருக்கா”

“நேத்து அதிசயமா மாம்பழம் வந்தது. தாய்லாந்து உணவு பண்ணுன்னு நான் சொல்லிக்கிட்டிருந்தேன் இல்ல. அதுனால மாம்பழத்தை வச்சு ஏதோ ஸ்டிக்கி ரைஸ் பண்றா.  இது என்னோட விருப்பம். உனக்கு மட்டும் கொஞ்சமா அரிசி உப்புமா  நான் பண்ணறேன்.   நேத்து கொத்சு அவளுக்கு சொல்லிக்கொடுத்திருக்கேன். அதுனால  கொத்சு அவதான் பண்ணப்போறா. அவ சிலது பண்ணும்போது, நான் பண்ணினேனா இல்லை அவள் பண்ணினதான்னு எனக்கே சந்தேகம் வந்துடுது”

கன்யா கண்ணில் நீர் துளிர்த்தது. ஆனந்தியைத் தழுவி முத்தமிட்டாள். 

பரத்துக்கு, வருடம் முழுவதும் அந்த அன்பைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லையே, அம்மாவின் அருகாமை இல்லையே என்று தோன்றியது.



**

இரண்டாவது முறை அவர்கள் விடுமுறைக்கு வந்தபோது, பரத் ஒரு நாள் நண்பனைப் பார்க்க இன்னொரு ஊருக்கு காலையில் சென்றிருந்தான்.  அவர்கள் இருவருக்கு மட்டும் ஆனந்தி மதிய உணவு தயாரித்தாள். கன்யா, தானே செய்கிறேன் என்று சொன்னபோது, ‘நீ சொல்லித்தந்த தாய் டிஷ்தான் இன்னைக்கு நான் பண்ணப்போகிறேன். எப்படி வந்திருக்குன்னு சாப்பிட்டுப்பார்த்துச் சொல்லு” என்றாள்.

மதிய உணவு சாப்பிடும்போது, கன்யா மெதுவாக ஆரம்பித்தாள்.

“அம்மா… நாங்க சந்தோஷமாத்தான் இருக்கிறோம்.  ஒரு குறையும் இல்லை.  ஆனால் இன்னும் நான் ப்ரெக்னெண்ட் ஆகலை. கொஞ்சம் கவலையா எனக்கு இருக்கு”  முகத்தில் சலனத்தோடு சொன்னாள் கன்யா.

“அட..இதுக்கா இவ்வளவு சோகமா முகத்தை வச்சிக்கற… இத பாரு… நீங்க சந்தோஷமாத்தான் இருக்கீங்கன்னா இதை நினைத்து கவலைப்படவேண்டாம். நான் எங்க அப்பாவோட திருமணத்துக்குப் பிறகு அஞ்சு வருஷம் கழித்துத்தான் பிறந்தேனாம். பரத், எங்களுக்கு ஆறு வருஷம் கழித்துப் பிறந்தான்.  நம்ம குலதெய்வத்துக்கு நான் வேண்டிண்டிருக்கேன். அந்த அந்த வேளை வரும்போது வாரிசு தானா வயித்துல வளரும்”

“இதுக்காக நீ கவலைப்படாதே… அடுத்த முறை வரும்போது பேரனோட வா….குலதெய்வம் கோவில்ல முடி இறக்குவோம்…….. சரி….இப்போ சொல்லு… பட்டர்நட் கறி நல்லா வந்திருக்கா? இது நானே அரைச்சுவிட்ட தேங்காய்ப்பால்ல பண்ணிருக்கேன். உனக்காக காரம் கொஞ்சம் கொறச்சுட்டேன்”

“நல்லாருக்கு…டேஸ்டியா இருக்கு…ஆனா ஏதோ ஒண்ணு குறையற மாதிரி இருக்கு..ஆங்.. வெங்காய வாசனையைக் காணோமே”

“அதான் உங்கிட்ட சொன்னேனே…இன்னைக்கு வெங்காயம் சேர்க்கமாட்டேன்னு. நான் சாப்பிட்டுப் பார்க்கலைனா, நீ “நல்லாருக்கு”ன்னு  எனக்காகச் சொல்றயோன்னு தோணிடும். அதுனாலத்தான் உனக்கும் வெங்காயம் சேர்க்கலை”

இருவரின் முகமலர்ச்சியும்,  நட்புறவும் அவர்களின் உள் மனது சந்தோஷத்தைக் காட்டியது.

**


ஆனந்தியைப் போலவே, கன்யாவுக்கும் ஆறு, ஏழு வருடங்கள் கழித்துத்தான் குழந்தை பிறந்தது. குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு இந்தியா வந்திருந்தார்கள்.  குழந்தை அச்சு அசலாக தன் கணவன் மாதிரியே இருந்ததாக ஆனந்திக்குத் தோன்றியது.  ஒன்றரை வருடத்துக்கு முன்னால் கன்யா தன்னிடம் பேசியது நினைவுக்கு வந்தது.

“அம்மா…. எங்களுக்கு சந்தோஷ் பிறக்கப்போகிறான்”

சட் என்று ஆனந்திக்கு எதுவும் புரியவில்லை.

“எங்களுக்கு ஆண் குழந்தைதான் பிறக்கப்போகிறது….உங்க பேரன் பெயர் சந்தோஷ்….இதோ போனை உங்க பையன்’ட கொடுக்கறேன்”

“பரத்…குலதெய்வம் கண்ணைத் திறந்துட்டாளே…மகமாயீ….நெஞ்சே வெடிச்சுடும்போல சந்தோஷம்டா பரத்.”

“ஒங்கிட்டதான் முதல்ல சொல்லணும்னு அவளுக்கு எண்ணம். இன்னைக்கு கன்ஃபர்ம் ஆனப்பிறகு உடனே போன் பண்ணிட்டா..இன்னும் டாக்டர் கிளினிக் வெளிலதான் இருக்கோம்”

“அவளோட விருப்பம் ரொம்ப முக்கியம்டா பரத் அவள்  விருப்பப்படிதான்  உங்க குழந்தைக்கு பேர் வைக்கணும். உனக்கும், ‘உங்க பேரன் ‘பரதன்’ மாதிரி நல்லொழுக்கத்தோட இருக்கணும்’னு நான் ஆசைப்பட்டுச் சொன்னதைக் கேட்டு உங்க தாத்தாதான் பரத்னு பேர் வச்சார்.”

“அம்மா…நீ அப்போ அப்போ, நான், நீ வளர்த்த பிள்ளை என்பதையே மறந்துடற… கன்யாதான் இந்தப் பேரை வைக்கணும்னா….அதுமட்டுமில்லாம, அடுத்து பொண் குழந்தை பிறந்தா உங்க அம்மா பேரைத்தான் வைக்கணும்… அதுதான் அவங்க நினைவையும், அவங்களோட ஆசியையும் நமக்கு எப்போவும் தந்துக்கிட்டே இருக்கும்னு சொன்னா”

“பரத்…நீ நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுத்துருக்கடா… எனக்கு பரம சந்தோஷம். கன்யாட்டச் சொல்லு. அம்மா அவளை நினைத்துப் பெருமைப்படறேன்னு”

**

“ஏன் மாமி…. நீங்க தனியாவே இருக்கேளே.. இப்போ 55 வயசுதான் ஆறது. ஆனா வயசானா, வாழ்க்கை முடிவு வரத்தானே செய்யும். உங்க பையன் குடும்பமோ அமெரிக்காவுலயே செட்டில் ஆயிட்டாங்க.  அதைப்பத்தி உங்களுக்கு எதுவும் தோணலையா?”  ஆனந்தி மீது அன்புகொண்ட எதிர்வீட்டு கமலா, மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

“நான் மட்டும் என்ன சன்யாசினியா? எனக்கும் மகன், மருமகள், பேரன் கையால வாக்கரிசி வாங்கிக்கணும்னு ஆசை இருக்காதா? வயசாகும்போது பார்போம். அவங்கள்லாம் விடுமுறைல இங்க வந்திருக்கும்போது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் ‘சட்’னு போயிடணும்னு ஆசை. வாழ்க்கைல எல்லாத்துக்கும் ப்ராப்தம் இருக்கவேண்டாமா?”

அந்தப் பேச்சு நெடுநாள் வரை ஆனந்தி மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது.

**

“அம்மா......டிசம்பருக்கு நாங்க மூணு வாரம் வர்றோம். இந்தத் தடவை எல்லாரும் தாஜ்மஹால் போவோமா? அங்க இருக்கும்போது சந்தோஷ் உங்ககிட்டதான் எப்போவும் இருக்கணும்னு ஆசை. அவ்வளவு தூரம்லாம் வரலைனு சொல்லாதீங்க” கன்யா பேசினாள்.

“அப்படியே கேஞ்சஸுக்கும் போயிட்டு வரலாம்னு பரத் சொன்னார்.  நான் சொன்னா அம்மா மாட்டேன்னு அடம் பிடிப்பாங்க… நீ சொல்லி கன்வின்ஸ் பண்ணுன்னு சொல்லிட்டார். கடல் கடந்துதான் பிரயாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டீங்க. இதுக்கு ஒரு வாரம் போயிட்டு வந்தோம்னா, எங்களோட நீங்க வெளி இடத்துக்கும் வந்த மாதிரி இருக்கும். சந்தோஷோடையும் முழுசா இருந்த மாதிரி இருக்கும்.”

கன்யா சொல்லும்போது மறுத்துப்பேசத் தோன்றவில்லை ஆனந்திக்கு. ‘சந்தோஷ்’கூட இருக்கப்போகிறோம் என்றதும் கூடுதல் சந்தோஷம்.  “வர்றேன்’ என்று சொன்னதும், மருமகளுக்கு முகத்தில் தேஜஸ் கூடினமாதிரி ஆனது, ஆனந்திக்கு சந்தோஷத்தைத் தந்தது. இன்னும் அதற்கு ஆறு மாதங்கள் இருக்கிறதே...பேரனை மீண்டும் கையால் தூக்கிக் கொஞ்சி, விளையாடி…. இப்போ நடக்க ஆரம்பிச்சுட்டான்னு சொன்னாளே… அங்க இங்க ஓடி எதுலயும் பட்டுடக்கூடாதே.  வீட்டைச் சரிபண்ணி வைக்கணும். கன்யாவிடமோ இல்லை பரத்திடமோ பேசிக்கிட்டிருக்கும்போது இவன் அடுக்களைல புகுந்துடக்கூடாதே… கதவுக்கு இடைல ஒரு தடுப்பு போடலாமா?  நல்லவேளை…சுவிட்ச்லாம் நல்ல உயரமாத்தான் இருக்கு.  வெளி கேட்டையும் எப்போவும் சாத்தி வச்சிருக்கணும்.  மாடிப்படி பாதையை எப்படி அடைக்கறது? பார்ப்போம். கோனார்ட்ட வேற சொல்லி, கறந்த பசும்பாலை தினமும் கொண்டுதரச் சொல்லணும். பாக்கெட் பால்லாம் அவனுக்கு ஒத்துக்காது.  கன்யா சொல்றதுக்கு முன்னாலயே கஞ்சிமாவு தயார் பண்ணி வைக்கணும். அடுத்த வாரம் பேசும்போது கஞ்சிமாவுலாம் அமெரிக்காவுக்குக் கொண்டுபோவாளான்னு கேட்கணும்,  இல்லை…இல்லை…அந்த ஊர்லதான் கேப்பை, பாதம், பிஸ்தான்னு எல்லாமே கிடைக்குமே…. எப்படி கேப்பையை முளைகட்ட வச்சு கஞ்சிமாவு தயார் செய்யறதுன்னு அடுத்தவாரமே கன்யா கிட்டச் சொல்லிடுவோம். குழந்தை சின்ன மெத்தைல படுத்துப்பானோ? கேட்கணும்… தூளில தூங்கற வயசு போயிருக்குமே.  காதி க்ராஃப்டுல போய் நல்ல இலவம் பஞ்சு மெத்தை சின்னதா கிடைக்கறதான்னு பார்க்கணும். என்னோட ரூம்ல ஜன்னலுக்கு கொசுவலை அடிக்கச் சொல்லணும்.  ரூமையும் நல்லா ஒழிச்சுவைக்கணும்.  நாடார் சொல்லும், ‘என்ன பொங்கலுக்குத்தான் வெள்ளையடிப்பாங்க..நீங்க தீபாவளிக்கே வெள்ளையடிக்கச் சொல்றீங்க” என்ற கிண்டலைச் சமாளிக்கணும்.  நல்லவேளை..குளிர்காலம்தான். எதுக்கும் தேனும், இஞ்சியும் வாங்கிவைக்கணும். பேச ஆரம்பிக்கற வயசாச்சே… வசம்பும் சித்தரத்தையும் நாட்டு மருந்துக் கடைல வாங்கணும். நல்ல தரமான சாம்பிராணியா வாங்கணும்.  நல்லவேளை போன தடவை வந்தபோதே பாத்ரூம் வழுக்காம புதுத் தரையா போட்டாச்சு.

இந்தத் தடவையாவது மாமியாரோட நவரத்ன மோதிரத்தை மறந்துடாம கன்யாவுக்குக் கொடுக்கணும். பழனி சித்தநாதன் விபூதி பரத் கேட்டானே……

யோசித்துக்கொண்டே ஹாலுக்கு வந்தாள் ஆனந்தி.  ஹாலில் பிரதானமாக வைக்கப்பட்டிருந்த கணவன், அவரின் பெற்றோர் புகைப்படங்கள் கண்ணில் பட்டன. குலம் தழைக்கிறது.. அதைக் காணும், அனுபவிக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்திருக்கிறது.. நல்ல மருமகளாக கணவனின் பெற்றோருக்கும் இருந்திருக்கிறோம். கணவனின் வாரிசை நன்றாக வளர்த்திருக்கிறோம்.. அவங்க ஆசியோட நல்ல மனைவி அவனுக்கு அமைஞ்சிருக்கா…குலம் தழைக்கிறது…முக மலர்ச்சியோடு கணவனின் படத்தைப் பார்த்தாள் ஆனந்தி…அதுதான் கடைசி என்று அறியாமல்.

**




“அப்பா….செவப்பு கலர்ல நம்ம வீட்டு பால்கனில ஒரு பேர்ட் வந்திருக்குப்பா. தத்தித் தத்தி நடக்குது. அடி பட்டிருக்குமோ?... Whatsapp பாருங்க” சந்தோஷ் அப்பாவை மதியம் மூணு மணிக்கு போனில் கூப்பிட்டான்.

“ஹே… இது என்ன அதிசயமா ஒரு மாதிரி சிவப்பும் கறுப்புமா இருக்கு.  இது மாதிரி இருக்கற பறவையை நாங்க  செம்போத்துன்னு சொல்லுவோம்.  இங்கெல்லாம் இருக்காதே. ஒருவேளை இது அதுமாதிரி வேற பறவையோ? கொஞ்சம் வாட்டர் ஒரு ப்ளேட்ல வையேன். அதுக்கு பக்கத்துலயே கோதுமை தானியம் கொஞ்சம் வை”

“சாயந்தரம் ஆறுமணிக்கு அப்பா வர்றதுக்குள்ள அது பறக்கலைனா நான் பார்ப்பேன். ஓ…இன்னைக்கு வர்றதுக்கு ரொம்ப நேரமாகுமே.. அம்மாக்கு ராத்திரி 7 மணிக்குத்தான் வேலை முடியும்னு சொன்னா. நாங்க வர்றதுக்கு ஒன்பது மணி ஆயிடும்.  பால்கனில வெயில் இல்லையில்லையா?”

“நோ டாட்… ஷேட் இருக்கில்ல. அந்தப் பக்கத்துலதான் இது ஒதுங்கியிருக்கு”

பறவை விரும்பியான சந்தோஷ் ஓட்டஓட்டமாக கிச்சனில் புகுந்து ஒரு பிளாஸ்டிக் தட்டில் தண்ணீரும், அது பக்கத்தில் இன்னொரு தட்டில் கோதுமை மணிகளும் கொண்டுவந்து மெதுவாக பால்கனியின் ஓரத்தில் வைத்தான்.

அது பறந்துவிடுமோ என்று அவனுக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால்  அதுவோ இவனைப் பார்த்தவாறு மெதுவாக தத்தித் தத்தி நடந்து வந்து தண்ணீரைக் குடித்தது.  சில கோதுமை மணிகளையும் சாப்பிட்டது. அவனையே பார்த்தது. திரும்பவும் கொஞ்சம் தண்ணீர் குடித்தது. மிகுந்த மனத் திருப்தி அடைந்தார்ப்போல் ஒரு முறை மூச்சிழுத்து இறந்து விழுந்தது.

கடந்த வாழ்க்கையில் பேரனிடமிருந்து தனக்குக் கிடைக்காத வாய்க்கரிசி, இந்த வாழ்க்கையில் கிடைத்த நிம்மதியை அந்த ஆன்மா பெற்றது.


120 கருத்துகள்:

  1. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா , வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  3. இன்று நெல்லை அவர்களது கைவண்ணத்தில் இரண்டாவது பகுதி...

    வாசிப்போம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று யாருடைய சிறுகதையாக இருக்கும் என்ற ஆவல் சற்றே குறைந்து இருக்கிறது....

      நீக்கு
  4. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா அண்ட் தொடர்பவர்களுக்கு

    ஸ்ரீரங்கத்திலிருந்து இங்கு வர கொஞ்ச்ம லேட்டாகிவிட்டது! ஹிஹிஹி

    நெல்லையின் கதை முடிவு அறிய ஆவல்...ஒரு படம் பயமுறுத்துதே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லையகத்து கீதா ரங்கன்.

      பயமுறுத்தியது கடைசிப் படமா இல்லை முதல் படமா?

      நீக்கு
    2. நெல்லை முதலில் கண்ணில் பட்டது கடைசிப்படம். முடிவு தெரிந்துவிட்டது. அப்புறம் தெரிந்த முதல் படம் அதுவும் பயமுறுத்தியது. முடிவு உறுதியானது!!

      கீதா

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  6. மகன் எடுத்திருக்கும் முடிவு ஏற்கனவே அறிந்ததது தான்..

    ஆனால் அன்று அங்கே பார்த்த அந்த செண்பகப் பறவையின் படத்தைக் கொண்டு வந்து
    இப்படி இங்கே இணைத்த விதம் கண்டு மனம் நெகிழ்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு ஸ்ரீராம்,துரை செல்வராஜு, கீதாரங்கன் ,முரளிமா
      அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

      நிஜமாகவே நெடுங்கதைதான். அன்பா,ஆதரவாகக் கதை செல்கிறது.
      கடைசியில் செம்போத்து பயமுறுத்துகிறதே.

      இவ்வளவு இணக்கமான அம்மா,மகன் ,மருமகள், பேரன் என்று வந்த பிறகு அந்தத் தாய் சந்தோஷமாக இருக்க வேண்டாமா.
      மீண்டும் வருகிறேன்.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...

      நீக்கு
    3. வாங்க துரை செல்வராஜு சார்... பறவையை இணைத்தது சரியாக வந்திருக்கா?

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
    4. வாங்க வல்லிம்மா...

      நெடுங்கதை எழுதி ரொம்பவே சோர்வுறச் செய்துவிட்டேனோ?

      சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடிகை லட்சுமி சொல்வாங்களே...

      "நீ நல்லாருக்கயா..நான் நல்லாருக்கேன்.. அப்போ அப்போ நேர்ல பார்த்துக்கறோமா.. சந்தோஷப்படறோமா...அதோடயே இருந்துடணும்...ஈஷிக்கொண்டு சண்டை வந்துவிட்டால் நன்றாக இருக்காது' என்று சொல்வார்களே..

      சந்தோஷத்துக்கு எல்லை ஏது வல்லிம்மா? பேரன் பிறந்துவிட்டான். அவங்க சந்தோஷமா இருக்காங்க.. போதாதோ? பேரன் படித்து நல்ல வேலைக்குப் போகும் வரை... அவனுக்குத் திருமணம் நடக்கும் வரையாவது... ஒரு குழந்தை பிறந்துவிடட்டும்... அடடா முதல் குழந்தை பெண்ணா..ஒரு பையன் பிறந்துவிடட்டுமே... இல்லைனா..ஒரு பையன் பொறந்தாச்சு... மகாலட்சுமியும் பிறந்துவிடட்டுமே.... எதிர்பார்ப்புகளுக்கும் ஆசைகளுக்கும் எல்லையுண்டா?

      நன்றி வல்லிம்மா. மீண்டும் வருக.

      நீக்கு
  7. நெல்லை அட்டகாசமாக இருக்கு கதை.

    ரொம்ப நல்லா எல்லாத்தையும் லிங்க் பண்ணிக் கொண்டு வந்துருக்கீங்க நெல்லை...

    இந்த அம்மா கேரக்டர் கொஞ்சம் என் எண்ணங்களைப் பிரதிபலிப்பது போல இருக்கு. ஆனால் நான் ஊர் விட்டுப் போகமாட்டேன்னு எல்லாம் சொல்லமாட்டேனாக்கும் ஹிஹிஹிஹி!!!

    இந்த செண்பகாவை வைத்து நான் அன்றே கதையும் எழுதிவிட்டேன். கிட்டத்தட்ட நீங்கள் முடித்திருப்பது போலத்தான். ஆனால் இன்னும் கொஞ்ச்ம இம்ப்ரொவைஸ் செய்யணும் நேரம் கிடைக்கவில்லை அப்படியே கிடக்கிறது.

    நெல்லை பாராட்டுகள், வாழ்த்துகள். சென்டிமெண்டலான கதை...

    அம்மா பரத் மற்றும் கன்யாவின் அன்பிற்கும் ஆசைக்காகவும் அட்லீஸ்ட் சில மாதங்களாவது போய் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவ்வளவே...

    மற்றபடி சூப்பர்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செண்பகா பற்றி ஸ்ரீராம் வாட்சப்பில் படம் அனுப்பி அது போனதையும் படம் எடுத்து அனுப்பியதுமே நான் தேதி பார்க்க கரெக்டாக ஸ்ரீராம் காசி சென்று வந்த இருமாதம் ஆகியிருக்க தேதியும் அதே...

      ஸோ கதை பிறந்துவிட்டது மனதில் செண்பகா அவர் வீட்டு வாசலில் வந்து கிடந்ததால்...

      உங்கள் முடிவு போன்று அதே முடிவு இல்லை என்றாலும் சாராம்ஸம் அதே !! பார்ப்போம் விரைவில் எடிட் செய்து இம்ப்ரொவைஸ் செய்து அனுப்ப முடியுதா என்று.....

      கீதா

      நீக்கு
    2. வாங்க கீதா ரங்கன்... உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.

      //நான் ஊர் விட்டுப் போகமாட்டேன்னு எல்லாம்// - யாருக்கு எந்த மாதிரியான எதிர்காலம் இருக்குன்னு யாருக்குத் தெரியும் கீதா ரங்கன்... உங்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கணும்னு ப்ராத்திச்சுக்கறேன். நீங்க எந்த சிச்சுவேஷன்லயும் ஜெல் ஆகிடுவீங்க (காமாட்சி அம்மா மாதிரி).

      கதை எழுதியாச்சுன்னா, ஒரே மூச்சுல அதனை முடிச்சுடணும். பிறகு இம்ப்ரொவைஸ் செய்யலாம்னு நினைத்தால் அந்த மூடு வருவது கஷ்டம்.

      நீக்கு
    3. //கரெக்டாக ஸ்ரீராம் காசி சென்று வந்த இருமாதம் ஆகியிருக்க தேதியும் அதே...// - கீதா ரங்கன்... காரண காரியம் இல்லாமல் எந்தச் செயலும் நடப்பதில்லை.

      நான் எங்கு சென்றாலும் புகைப்படம் எடுக்கும் வழக்கம் உடையவன். ஒரு தடவை ஒரு நிச்சயதார்த்தத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு உட்கார்ந்ததும் என் ஐபோன் வேலை செய்யலை (ஷட்டவுன் ஆகிவிட்டது). அதைச் சரிசெய்ய முயன்றும் முடியலை. அந்த ஃபங்ஷன் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் ஐபோன் கடைக்குப் போனால், அவங்க 10 செகண்டுல பிரச்சனையை சால்வ் பண்ணிட்டாங்க. சுலபம்தான்..ஆனால் அது எனக்குத் தெரியலை. என் மனதில் தோன்றியது, அந்த ஃபங்ஷனில் படம் எடுக்கக்கூடாது என்பதுதான் காரணமாயிருந்திருக்கும்னு.

      நான் எப்போதும் நினைப்பது நம்புவது, If two are destined to meet, they will meet. Otherwise NO CHANCE.

      நீக்கு
    4. இது மாதிரி எனக்கும் நேர்ந்திருக்கு. காமிராவைத் தயார் செய்து பாட்டரியைச் சார்ஜ் பண்ணிப் போட்டு எடுத்துட்டுப் போவேன். படமே எடுக்க முடியாத சூழ்நிலையாக இருக்கும்! இப்படித் தான் கோலாப்பூரிலும் ஆச்சு. காமிராவை மூட முடியாமல் அடுத்துப் படம் எடுக்க முடியாமல் ஒன்றரை மணி நேரம் வீணாகப் போன பின்னர் அதைக் கைப்பையில் போட்டு மூடிட்டேன். பின்னர் வேறே ஏதோ எடுக்கக் கைப்பையைத் திறந்தால் தானே சரியாகி இருந்தது.

      நீக்கு
    5. கதை எழுதியாச்சுன்னா, ஒரே மூச்சுல அதனை முடிச்சுடணும். பிறகு இம்ப்ரொவைஸ் செய்யலாம்னு நினைத்தால் அந்த மூடு வருவது கஷ்டம்.//

      ஹிஹிஹிஹி நெல்லை எனக்குத்தான் அது வரவே வராதே. சில கதைகள் இம்ப்ரொவைஸ் செய்வதற்கும், சில கதைகள் முடிவு மனதில் இருந்தும் முடிக்கப்படாமலும் இருக்கு. சிலது மனதில் தொடங்கப்பட்டு இருக்கு.

      நான் எழுதினால் அதை ஆறப்போட்டு அப்புறம் எடுக்க்ம் போது மீண்டும் கதைக்குள் நுழைந்து மாற்றுவனவற்றை மாற்றி, மெருகேற்றி மனம் கொஞ்சம் திருப்தி ஏற்பட்டால் ஸ்ரீராமுக்கு அனுப்பி அவர் ஓகே என்று சொன்னால்தான் மீண்டும் எச்டிஎம்எல் ல அனுப்புவேன். பானுக்காவிடமும் ஒப்பீனியன் கேட்பதுண்டு.

      பானுக்காவுடன் எழுதும் போது என் இயல்பையும் மீறி எழுதி அனுப்ப சவாலாகத்தான் இருந்தது.ஹிஹிஹி நான் தான் ஆறப்போடுபவள் ஆச்சே. அவங்க எழுதி அனுப்ப அனுப்ப நான் அதற்கு எற்ப எழுத, மீண்டும் மாற்றங்கள் வருத்தி இப்படி எழுதலாமா என்று அவங்க கேட்க நான் இப்படி எழுதலாமா என்று சொல்ல என்று மாற்றி அவங்க அனுப்ப நானும் உடன் அதை உள்வாங்கி அதற்கு ஏற்றாற்போல எழுத என்று எழுதியதை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. கீதாவா இது என்று!

      பல சுணக்கங்கள். மீண்டும் அதற்கான ஒரு நேரம் வந்தால் மட்டுமே எழுத முடியும். மூட் வேண்டும். அந்தக் க்தையிலேயே உழல வேண்டும் மனம் அப்போதுதான் எழுத முடியும். அதனால நெல்லை மீக்கு உடனே எல்லாம் எழுத வரும் கலையோ, திறமையோ இல்லையே!!!!! ஹா ஹா ஹாஹ் ஆ

      கீதா

      நீக்கு
    6. //படமே எடுக்க முடியாத சூழ்நிலையாக இருக்கும்!// - கீசா மேடம்...இது பற்றி நான் ஏற்கனவே எழுதினேனான்னு ஞாபகம் இல்லை.

      நிறைய தடவை கனவில் கையில் கேமரா இருக்கும். அந்த நிகழ்வை படம் பிடிக்க எண்ணுவேன். எவ்வளவு தடவை க்ளிக் செய்தாலும் படம் பதியாது.

      இதுமாதிரி நிறைய தடவை நடந்திருக்கு. (கனவில்). அது எதனால்னு புரிஞ்சிக்க முடிவதில்லை.

      கேமரா என்று சொன்னதால் ஒரு சம்பவம் நினைவுக்கு வருது. எப்போவும் நான் இரண்டு கேமராக்கள் வைத்திருப்பேன் (ஒருவேளை ஒன்று வேலை செய்யவில்லையானால் என்று). என் மகனுக்கு உபநயனம் ஆன பிறகு திருவரங்கத்துக்கு வந்தோம். வந்த அன்று கேமராவின் திரை வேலை செய்யவில்லை. படம் எடுக்கும் ஆனால் திரையில் படம் தெரியாது க்ளிக் செய்வதற்கு முன்பு). அப்போ அங்கே எங்கள் மாமனாரின் ஆச்சார்யார் ஆசிரமத்துக்குப் போய், குத்து மதிப்பா படங்களும் காணொளிகளும் எடுத்தேன். அந்தப் பயணம் முழுவதும் குத்துமதிப்பாகத்தான் படங்கள் எடுத்தேன்.

      அந்த ஆச்சார்யர் என் மகனுடன் பேசுவதையும் காணொளியாக எடுத்திருந்தேன். அது முக்கியமான ஆவணம் எனக்கு.

      நீக்கு
    7. //அவங்க எழுதி அனுப்ப அனுப்ப நான் அதற்கு எற்ப எழுத, // - ரெண்டு பெண்களுக்குள் எதுவும் ஒத்துப்போகாதே..அதுவும் கதை எழுதுவது, பாடல் பாடுவது என்று திறமை சம்பந்தப்பட்டது. அது எப்படி உங்களுக்கு ஒர்க் அவுட் ஆச்சு? ஹா ஹா.

      //உடனே எல்லாம் எழுத வரும் கலையோ, திறமையோ இல்லையே!// - அப்படீல்லாம் இல்லை கீதா ரங்கன். ஏதாவது ஒரு நிகழ்வு சலனப்படுத்தினால் மனசு அதை நினைத்து கதை எழுதத் தூண்டும். ஆனா ஒரே மூச்சுல எழுதலைனா நமக்கு எல்லாமே மறந்துபோகும் (என்ன என்ன நிகழ்வு வைக்க நினைத்தோம் என்றெல்லாம்).

      அதனால் நான் கதை எழுத ஆரம்பிக்கிற அன்னைக்கே, குறிப்புகளையும் அதிலேயே ஆங்கிலத்தில் எழுதிக்கொள்வேன். ஏன்னா, 15 வரி எழுதிட்டு அப்புறம் டாகுமண்டை மூடிவிட்டால், பிறகு திறக்கும்போது, எதற்காக இந்த சம்பாஷனை ஆரம்பித்தோம் என்பதெல்லாம் நினைவுக்கே வராது...ஹா ஹா.

      இருந்தாலும் நீங்கள்லாம் எனக்கு சீனியர் (திறமையிலும்..... வ ய தி லு ம் ஆஹ்ஹாஹ்ஹா)

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா வாங்க! சுற்றுப் பயணத்தை எஞ்சாய் செய்து கொண்டிருக்கீங்களா!! அப்படியிருந்தும் இங்கு வந்து எட்டிப் பார்த்துட்டுப் போறீங்களே!! என்னே கடமை உணர்வு! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. காலை வணக்கம் பானு அக்கா.

      நீக்கு
  9. நெகிழ்ச்சியான கதை...

    //ஆறு மாதங்கள் இருக்கிறதே...// வரிக்கு பின்வரும் இரு பத்திகளும் மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க திண்டுக்கல் தனபாலன்.

      அந்த எண்ணவோட்டத்தை ரசித்ததற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. கதை நெகிழ்வு.
    மனது கிடந்து அடித்து கொள்கிறது.
    கதையின் தலைப்பை அவள் அறிவாளா என்று வைத்து இருக்கலாம் போல!
    அவன் அறிவானா இது நடக்குமென்று பாடல் நினைவுக்கு வருது.
    நினைத்து பார்க்காத முடிவு.

    //“நான் மட்டும் என்ன சன்யாசினியா? எனக்கும் மகன், மருமகள், பேரன் கையால வாக்கரிசி வாங்கிக்கணும்னு ஆசை இருக்காதா? வயசாகும்போது பார்போம். அவங்கள்லாம் விடுமுறைல இங்க வந்திருக்கும்போது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் ‘சட்’னு போயிடணும்னு ஆசை. வாழ்க்கைல எல்லாத்துக்கும் ப்ராப்தம் இருக்கவேண்டாமா?”//

    அப்போது அவர் நினைத்த மாதிரி கிடைக்காமல், அடுத்த பிறவியை கொண்டு வந்து விட்டீர்கள்.

    தங்கமலை ரகசியம்(பழைய சினிமா சிவாஜி, ஜமுனா நடித்த படம்) என்ற சினிமா பார்த்தேன் , அதில் இரண்டு பறவைகள் வந்து வீட்டு பால்கனியில் உட்காரும். அம்மா குழந்தையிடம் சொல்வாள் உன் தாத்தா, பாட்டி வந்து இருக்கிறார்கள் அவர்களுக்கு உணவு கொடு என்று, பேரன் வைக்கும் தண்ணீர், உணவை உண்டு செல்லும் .

    அது போல் கடைசி காலத்தில் நினைக்கும் நினைப்பு நிறைவேறாமல் அந்த ஆத்மா முக்தி நிலை அடையாமல் அலைந்து கொண்டு இருக்கும் என்றும் சொல்வார்கள். அது போல் வந்து தன் நினைப்பை முடித்துக் கொண்டதோ!

    முதல் படமே கொஞ்சம் உணர்த்தி விட்டது உங்களின் முடிவை, அப்புறம் வாக்கரசி என்ற வார்த்தை உணர்த்தியது. மகன், மருமகள் பேரன் வந்த போதே அவர் ஆசையை நிறைவேற்றிவிடுவீர்கள் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கி
    திடீர் திருப்பம் செண்பகபறவையை கொண்டு வந்தது.

    கதையை அருமையாக கொண்டு சென்றீர்கள்.
    வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகளின் (என் போன்ற பெற்றோர்களுக்கு ) சில நேரம் நினைக்கும் நினைப்பை கதையில் கொண்டு வந்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு மேடம்...வாங்க. நெடிய கருத்துரைக்கு நன்றி. காலையிலேயே படித்துவிட்டாலும் யோசித்து எழுதணும்னு நினைத்தேன்.

      "அவள் அறிவாளா" - ஹா ஹா... தலைப்பு பொருந்தாது. நம் யாருக்குமே அடுத்து நடக்கப்போவது தெரியாதல்லவா? தன் பாட்டிதான் தன்னிடம் கோதுமை மணிகளும் தண்ணீரும் வாங்கிக் குடித்தது என்று பேரனுக்கும், தன் அம்மாதான் அங்கு வந்திருந்தது என்று பையனுக்கும் தெரியாதல்லவா? அதனால்தான் 'அவன் அறிவானா' என்ற தலைப்பு.

      /அவர் நினைத்த மாதிரி கிடைக்காமல்,// - வெளிநாட்டில் பிள்ளைகள் இருந்தால், அவங்க சரியான சமயத்துக்கு வந்து சேர்வது என்பது அபூர்வம். அதிலும் தூர தேசங்கள்.... இதற்கு முன்னரே பகிர்ந்திருக்கிறேன். என் அப்பா இறந்தது எனக்கு இரவு 9 மணிக்குத் தகவல் வந்தது. மறுநாள் மாலை நான் பிலிப்பைன்ஸுக்குச் சென்றுகொண்டிருந்திருப்பேன். மனசு ஒரு நிலைப்பட 9 1/2 மணி ஆகியது. அலுவலகத்தில் உடனடி உதவி, அவசர பேக்கிங்... நள்ளிரவு 12 மணிக்கு விமானத்தில் ஏறி, மும்பை அங்கிருந்து சென்னை மறுநாள் காலை 11 மணிக்கு வந்து சடங்குகளில் கலந்துகொண்டேன். மாலை எரியூட்டல். அந்த அவசரகதியில் நான் என் பையனைக் கூட்டிக்கொண்டுவர விட்டுப்போயிடுத்து. அவர்கள் அதற்கு மறுநாள்தான் வந்தார்கள். அதனால் ஒரே பேரன் செய்யவேண்டியதைச் செய்ய முடியவில்லை.

      கதை உங்களைக் கவர்ந்தது எனக்கு மகிழ்ச்சிதான். Professional Writers போன்று எழுதாவிட்டாலும், எனக்கு சம்பவங்களினால் திருப்தி தந்த கதை இது.

      நன்றி கோமதி அரசு மேடம்.

      நீக்கு
    2. //பறவை விரும்பியான சந்தோஷ் ஓட்டஓட்டமாக கிச்சனில் புகுந்து ஒரு பிளாஸ்டிக் தட்டில் தண்ணீரும், அது பக்கத்தில் இன்னொரு தட்டில் கோதுமை மணிகளும் கொண்டுவந்து மெதுவாக பால்கனியின் ஓரத்தில் வைத்தான்.//

      மீண்டும் படித்தேன் நீங்கள் சொல்வது சரிதான் சந்தோஷ் அறிய மாட்டான் தான்.
      இப்படி பார்த்தால் தலைப்பு பொருத்தம்.

      மாயவரத்தில் பிள்ளைகளின் வரவுக்கு , பேரன்களின் வரவுக்கு காண்ணாடி பேழையில் காத்து இருப்பவர்களை பார்த்து இருக்கிறேன். இறந்தவர்கள் அந்த வீட்டை சுற்றி சுற்றி வருவார்கள் என்று இரவு முழுவதும் வெளியில் நெருப்பு எறிய வைத்து இருப்பார்கள்.

      நீக்கு
    3. கோமதி அரசு மேடம்... இந்த டாபிக்கை நீங்க எடுத்ததனால்தான் நான் எழுதுகிறேன்.

      இறந்தபிறகு ஆன்மா திகைத்து நின்றுவிடும். எப்படி நான் வேறு, என் உடல் வேறாக இருக்கிறதே என்று. உடலை விட்டுப் போக மனது வராது. தன் உறவினர்களையும் விட்டுப்போக மனது வராது. அவர்கள் அழுகிறார்களா என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும். எரியும் தணலில் உடலைக் கிடத்தும்போதுதான், நிச்சயமாக இனி மீள முடியாது என்று அது புரிந்துகொள்ளும் என்று படித்திருக்கிறேன். சடங்குகள் எல்லாம் முடிந்த பின்னர்தான், அது ஆசுவாசப்படும்.

      //பிள்ளைகளின் வரவுக்கு , பேரன்களின் வரவுக்கு// - ஒரு வரியிலேயே கலங்க வைக்கிறீர்கள் (அதுதான் நோக்கம் என்று இல்லாத போதும்).

      நீக்கு
  12. அருமையான கதை முடிவுதான் சற்றே மனதை கனக்க வைத்தது.

    இப்படி மருமகள் எல்லோருக்கும் வாய்த்தால் ?

    //ஜீன்ஸ் பேண்ட் மேலேயே புடவை கட்டிக்கொண்டு வந்த கன்யாவை பரத் பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான்//

    தங்களது இந்தக் குறும்பை ரசித்தேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி...

      பெரும்பாலும் கதைகள்லதான் இந்த மாதிரி மருமகளைப் பார்க்க முடியும்னு தோணுதா?

      சுயநலம் மேலோங்கும்போது அடுத்த தலைமுறை, முந்தைய தலைமுறையை மறத்தல் இயல்புதானே.

      நீக்கு
    2. இல்லை நெல்லை கதைகளில் மட்டுமல்ல நிஜத்திலும் இப்படியான மருமகள்கள் மாமியார்கள் இருக்கிறார்கள். இங்கும் கூட கொஞ்சம் அருகிலேயே தூரத்துச் சொந்தம் ஒரு குரும்பம் இருக்கிறார்கள். அருமையான குடும்பம். கூட்டுக் குடும்பமாகவே இருந்துவருகிறார்கள். என் தங்கை குடும்பமும் கூட்டுக் குடும்பமாகவே இருக்கிறார்கள்.

      அமெரிக்காவில் கூட என் உறவினர் தன் பெற்றோரை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார். பல வருடங்களாக. (நான் சொல்வது ஆண்). நான் சொல்லும் குடும்பங்கள் எல்லாமே சுமுகமாகச் செல்கிறது.

      எங்கு சென்றாலும் தங்கள் கூடவே அழைத்துச் செல்கிறார்கள். இப்போது ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கு வயது மிகவும் அதிகமானதால் யாரேனும் ஒருவர் இருந்து பார்த்துக் கொள்கிறார்கள். ஒருவர் மட்டும் பிராயணம் செய்வது என்று.

      கீதா

      நீக்கு
    3. ஆமாம் கீதா ரங்கன்...எல்லோரும் சுயநலத்துடன் இருப்பதில்லையே... பெரும்பாலானவர்கள் சுயநலத்தோடுதான் இருக்காங்க. கூட்டுக் குடும்பங்களின் அருமை பெருமை அதில் வாழும்போது தெரிவதில்லை.

      /எங்கு சென்றாலும் தங்கள் கூடவே அழைத்துச் செல்கிறார்கள்.// - ஏன்... நம் காமாட்சி அம்மா, வல்லிம்மா போன்றவர்கள் நமக்குத் தெரிந்த உதாரணங்கள்தாமே.

      பொதுவா, என் அனுமானம்...வயது ஏற ஏற 'தாமரை இலைத் தண்ணீர்' போல நாம நடந்துகொள்ளணும். ஒரு காலத்துல ராஜ்ஜியத்தைக் கட்டி ஆண்டதை நினைவில் கொண்டு, கடைசிவரை ராஜ்ஜியத்தின் ராணி/ராஜா தாந்தான் என்று நினைத்துக்கொண்டிருந்தால், அடுத்த தலைமுறையோடு இயைந்து வாழ்வது கடினம்.

      அது அவங்க வாழ்க்கை. அவங்க எண்ணப்படி வாழறாங்க. அதில் நாமும் ஒரு அங்கம். அவங்க வாழ்க்கையை நாம் எண்ணுவதுபோல மாற்ற நினைக்கக்கூடாது, தங்கள் நம்பிக்கைகள் போன்றவற்றைத் திணிக்கக்கூடாது என்று நினைத்தாலே எல்லாம் சுமுகமாகிவிடும்.

      நீக்கு
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    முதல் பகுதியே இன்னும் படிக்க வில்லை. அதைப் படித்த பிறகு இங்கே மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். இரண்டு பகுதிகளையும் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

      நீக்கு
  14. வரவேற்ற துரைக்கும், வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  15. இப்படித் தான் முடிக்கணும்னு முடிச்சிருக்கீங்க போல! ஆனால் கொஞ்சம் இயல்பை விட்டு மாறி விட்டமாதிரி என் எண்ணம். பின்னர் வரேன். சாப்பிடப் போகணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.

      கதையை எழுத நினைத்தது, ஸ்ரீராம் சொல்லியிருந்த செம்போத்து சம்பவம். அதுதான் கிளைமாக்ஸ் என்று தீர்மானித்து பிறகு கதையை எழுதினேன்.

      ரொம்ப திருப்பங்களுடன் சோகத்தைக் கூட்டக்கூடாது, எது இயல்போ அதுமாதிரித்தான் கதையில் நடக்கணும் என்று எண்ணி அதற்கேற்ப கதையைக் கொண்டுசென்றேன்.

      எனக்கு இந்தக் கதை எழுதியபோது காமாட்சி மகாலிங்கம் அம்மா போன்றவர்களை நினைவுக்குக் கொண்டுவந்து எழுதினேன். காமாட்சி அம்மா 'பசங்க தங்கள் மனைவியைத் தேர்ந்தெடுத்தபோது தான் எப்படி நடந்துகொண்டேன்' என்பதைப் புரிந்துகொள்ளும்படி ஒரு சில இடுகைகளில் சொல்லியிருந்தார்.

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம். இன்று இரவு சந்திர கிரஹணம், காலை 3 மணி தர்ப்பணம், 7 மணிக்கு இன்னொரு தர்ப்பணம் என்று அதற்கான தயாரிப்பு வேலைகளில் பிஸி. வாசித்த அனைவருக்கும் நன்றி.

    1. சென்ற பகுதியைப் படித்தபோது இந்த முடிவை எதிர்பார்த்தீர்களா?
    2. பரத் கூப்பிட்ட காரணத்தைச் சரியாக அனுமானித்திருக்கலாம். ஆனால் கதை ஃப்ளோ இப்படி இருக்கும் என்று நினைத்தீர்களா?
    3. முதல் பகுதியின் முதல் பாராவில் பறவையைப் பற்றி எழுதி கிளைமேக்ஸில் பறவையோடு முடித்தது ரசிக்கும்படி இருந்ததா?

    முடிந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளைக்காலை பதினோரு மணிக்குத் தான் புண்யகாலம் ஆரம்பிக்கிறது. ஆகவே ஒன்பது மணிக்கு மேல் பத்தரைக்குள்ளாக உத்தராயணம் இருக்கையில் தர்ப்பணம் செய்யணும் என்று சொல்கின்றனர். அலுவலகம் செல்பவர்களுக்குக் கஷ்டம்! ஆகவே கிரஹண தர்ப்பணம் நாலு மணிக்குப் பண்ணிட்டுத் திரும்பக் குளிச்சு ஏழு மணிக்குள் புண்யகாலத் தர்ப்பணம் செய்ய வேண்டி இருக்கும்.

      நீக்கு
    2. ஆமாம். 9-10 1/2க்குள் தர்ப்பணம் செய்யணும். ஆனால் நான், சமையல் செய்யணும், பக்கத்தில் உள்ள பார்க்கில் 45 நிமிடம் நடை. அவங்களுக்கு சாப்பாடு போடுவதற்கு முன் தர்ப்பணம் செய்துடலாம் என்று நினைத்திருக்கிறேன். இல்லைனா ரொம்ப நேரமாயிடும்.

      நீக்கு
    3. பறவையை முதலில் சொல்லியது பின்னரும் மகனின் வாழ்வில் நடக்க இருக்கிறது என்று தெரிந்தது. என்றாலும் அது செம்போத்துவடிவில் வரும் என்று எதிர்பார்க்கவில்லை நெல்லை. சத்தியமாக செம்போத்து வரும் என்று எதிர்பார்க்கலை..(இதுக்குத்தான் கீதா நீ மட்டும் தான் செம்போத்து வைச்சு கதை எழுதியிருக்கன்னு நினைக்கப்படாது கேட்டியா...அப்படியே எழுதியதை உடனே எடிட் இம்ப்ரொவைஸ் செய்து சூட்டோடு சூடா அனுப்பியிருக்கணும் ஹிஹிஹிஹி... என்று வடிவேலு ஸ்டைலில் சுட்டுவிரலை என் நெற்றிக்கு நேரே சுட்டி சொல்லிக் கொண்டேன் ஹா ஹா ஹா ஹாஹ் ஆ)

      பரத் கூப்பிட்ட காரணம் அதான் சொல்லிவிட்டேன் போன பதிவிலேயெ..கல்யாணம் பற்றி அவன் சொன்னாலும் அதுவும் ஆனந்தியை பாதிக்காது என்று. அப்புறம் அவன் அங்கு இருக்கப் போகிறான் அம்மாவை அழைப்பான் என்பதும் யூகித்தது ஆனால் ஆனந்தி இறப்பாள் என்பதையோ பேரன் மற்றும் செம்போத்தின் வடிவில் ஆனந்தி என்பதை யூகிக்க வில்லை.

      ஆனந்தி வைராக்கியமாக வரமாட்டேன் என்று இருப்பாள் அது மகனுக்கும் மருமகளுக்குமே கொஞ்சம் மனம் கஷ்டப்படும் என்று யூகித்து அப்படியே முடியும் என்றும் அவள் மனதில் என்னதான் இருக்கிறது என்பதை அவன் அறிவானா என்பது போல் முடியும் என்று நினைத்திருந்தேன் நெல்லை.

      கீதா

      நீக்கு
    4. //செம்போத்து வரும் என்று எதிர்பார்க்கலை.// - எனக்கு ஸ்ரீராம் எழுதினதைப் படித்த உடனேயே கதை எழுதணும்னு தோன்றியது. இதுபோல அவர் இன்னொரு தளத்தில் ஒரு 'கேள்வி' எழுப்பியிருந்தார். அதனையும் கதையாக்கணும் என்று நினைக்கிறேன்...அதற்கான திறமையும் நேரமும் வரலை. திருப்பதி பயணத்தின்போது மலையிலிருந்து பேருந்தில் கீழே வரும்போது ஒரு கதைக்கரு உருவானது. அதனை விரைவில் பூர்த்தி செய்து அனுப்பணும்.

      ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாகத் தோன்றியது. கதை கிளைமாக்ஸ் யாராலும் யூகிக்க முடியாது என்று.

      நீக்கு
  17. பிள்ளை காதல் திருமணம் தான் செய்து கொள்ளப் போகிறான் என்பது எனக்கே புரிந்திருக்கும்போது ஆனந்திக்குத் தெரியாமல் இருக்குமா? ஆனால் நான் கல்யாணம் ஆனதும் பிள்ளை, மாட்டுப்பெண்ணைப் பார்க்கும் முன்னரே இறந்துவிடுவாள் என நினைத்தேன். அதெல்லாம் இல்லை. பேரனையும் பார்த்துவிட்டுத் தானே உயிர் பிரிந்திருக்கிறது. இன்னும் கொஞ்ச காலம் இருந்து பேரனின் வளர்ச்சியைப் பார்த்திருக்கலாம். கொடுப்பினை இல்லை. ஆனால் இந்த முடிவு எதிர்பார்த்தது தான். சோகமான முடிவு பிடிக்காத நீங்கள் இப்படி ஒரு முடிவைக் கொடுத்திருப்பது ஆச்சரியம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பையன், தன் நல்வாழ்வுக்கான, எதிர்காலத்துக்கான படிப்புகளைத் தானே தீர்மானித்து அந்த வழியில் செல்லும்போது, திருமணம் மட்டும் அம்மா பார்த்து நடத்திவைத்தாள் என்று சொல்வதில் அர்த்தம் இருக்காது.

      அந்தத் தாயின் நிறைவேறாத ஆசை, தான் இறக்கும்போது மகன், மருமகள், பேரன் அருகில் இருக்கணும் என்பது. இது குறைந்தபட்ச ஆசைதான். வாழை வளர்ந்ததைப் பார்த்தவளுக்கு அதன் கன்று வளர்ந்து பார்க்கணும் என்ற ஆசை அதீதம். பிந்தைய தலைமுறை இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும் என்பது மகனின் வாழ்க்கையையும் மருமகள் அமைந்ததையும் வைத்து அவளே புரிந்துகொள்வாளே.

      இந்தக் கதையில் சோகம் இல்லை என்று நான் நினைத்தேன். கஷ்டப்பட்டவளுக்கு, மகன் திருமணத்துக்கே அழைப்பில்லை என்றெல்லாம் கதையைக் கொண்டுபோயிருக்கலாம். அப்படி நடந்த கதைகள்லாம் தெரியும். அந்தப் பாவம் நமக்கெதற்கு என்று அதையெல்லாம் இங்கு கொண்டுவரலை.

      'கண்காணாத இடத்தில் அவர்கள் நல்லா இருக்காங்க. என்ன.. நாமும் அவங்களோட போக இஷ்டப்படலை. அவங்களும் இங்க வரமுடியாது. அவங்க லீவுக்கு வந்திருக்கும்போது நாம போயிடணும் என்று நினைப்பது பேராசை' என்று அந்தத் தாய் எண்ணியிருப்பாள்.

      நீக்கு
  18. பறவைகளோடு ஆரம்பித்துப் பறவைகளோடு முடித்ததில் உள்ள தனிச் சிறப்பு எனக்குப் புரியவில்லை. ஆகவே முடிவு என்னைக் கவரவில்லை. எதிர்பார்த்தது தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிவை நீங்க எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? சும்மா சொல்லக்கூடாது. இப்படித்தான் முடிக்கப்போகிறேன் என்று நீங்கள் நினைத்திருக்கவே முடியாது என்பதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை.

      நீக்கு
    2. ஆனந்தி இறக்கப் போகிறாள் என்பதை நான் எதிர்பார்த்தேன். அதைத் தான் இங்கே சொல்லி இருக்கேன்,முடிவு எதிர்பார்த்தது என! :))))) கதையே ஆனந்தியின் முடிவைச் சொல்லத் தானே! ஆனால் செம்போத்தை இங்கே வலுவில் கொண்டு வந்திருப்பது தான் செயற்கையாக இருக்கிறது.

      நீக்கு
    3. ஓ... உங்களுக்கு ஆனந்தி இறந்த உடனேயே (கடைசியாகப் பார்க்கிறோம் என்பதை அறியாமல்), கதை முடிவுக்கு வந்ததாகத் தோன்றிவிட்டதா?

      அப்போ அந்த லிங்க் சரியா நான் கொண்டுவரலை போலிருக்கிறது.

      நீக்கு
    4. ஆரம்பத்தில் இருந்தே உங்கள் கதை ஆனந்தியின் மரணத்தை நோக்கியே செலுத்தப்பட்டிருக்கிறது. உங்களையும் அறியாமல் வந்திருக்கோ? ஆனால் போன வாரத்திலேயே புரிந்தது. மகன் சொல்லப் போகும் விஷயத்தில் ஒருக்கால் அவள் உயிர் பிரியுமோ என எதிர்பார்த்தேன். அந்த வகையில் இது எதிர்பார்க்காத முடிவு தான்!

      நீங்க கடைசியில் கோர்வையாக ஒருங்கிணைக்கவில்லை. ஆகவே செம்போத்து சம்பவம் கதையுடன் ஒட்டவில்லை.

      நீக்கு
    5. உங்கள் விமர்சனம் சரிதான் கீசா மேடம்... இன்னும் கொஞ்சம் செம்மைப்படுத்தியிருக்கலாம்.

      நீக்கு
  19. அம்பேரிக்காவில் செம்போத்து இருக்கானு பார்க்கணும்! ஹூஸ்டனில் இருப்பதாய்த் தெரியலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு இந்தப் பறவை இல்லை. ஆராய்ந்துதான் எழுதினேன். அதனை பரத்தும் சொல்வதாகவே எழுதியிருக்கிறேன்.

      நீக்கு
  20. //செண்பகா பற்றி ஸ்ரீராம் வாட்சப்பில் படம் அனுப்பி அது போனதையும் படம் எடுத்து அனுப்பியதுமே நான் தேதி பார்க்க கரெக்டாக ஸ்ரீராம் காசி சென்று வந்த இருமாதம் ஆகியிருக்க தேதியும் அதே...//
    முகநூலில் போட்டிருந்தார். நினைவு இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அப்படீன்னா, சமீபத்தைய விஷயங்களும் உங்களுக்கு மறக்கறதில்லையா? (ஏற்கனவே நீங்க பழைய விஷயங்கள் எதுவும் உங்களுக்கு மறக்காதுன்னு சொல்லியிருக்கீங்க) நல்ல ஞாபக சக்திதான் உங்களுக்கு கீசா மேடம்

      நீக்கு
    2. ஞாபகமறதி கிடையாது என்பதால் தானே ஞாபக சக்தி அதிகம் உள்ள ஆனைக்குட்டியைப் ப்ரொஃபைலில் வைச்சிருக்கேன்! :)))))

      நீக்கு
    3. தெரிந்துகொள்வதற்காகக் கேட்கிறேன் கீசா மேடம்.

      நான் நிறைய புகைப்படங்கள் எடுப்பேன்னு சொல்லியிருக்கேன் இல்லையா? உதாரணமா நான் திருவரங்கம் வந்தபோது என்ன என்ன டிரெஸ் கொண்டுவந்தேன் என்பதை அந்தப் புகைப்படங்களைப் பார்த்துத் தெரிஞ்சுப்பேன். திரும்பவும் திருவரங்கம் பயணம் வரும்போது அந்த டிரெஸ்களைத் தவிர மற்ற செட்டை உபயோகப்படுத்துவேன். இது எல்லா பயணங்களுக்கும் பொருந்தும். இப்போ பெங்களூர் வந்திருக்கும்போது, கடந்த இரண்டு பயணங்களில் உபயோகப்படுத்தாத உடைகள்தான் எடுத்து வந்துள்ளேன். இதற்கு நான் எடுத்திருக்கும் புகைப்படங்களைப் பார்த்துத்தான் முடிவெடுக்க இயலும்.

      உங்களுக்கு இதெல்லாம் நினைவில் இருக்குமா? இந்தத் திருமணத்துக்கு இந்த டிரெஸ் போட்டுக்கொண்டேன், அதனால் அந்த வீட்டில் இந்த விசேஷத்துக்கு வேறு எடுத்துக்கொள்வோம் என்பதுபோன்று.

      நீக்கு
  21. உள்ளத்தைத் தொட்டது! உருக்கும் கதை என்றெல்லாம் சொல்ல முடியாது! நல்ல கதைக்கரு! ஆனால் ஆரம்பித்த நோக்கம் நிறைவேறவில்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செம்போத்து வருகிற கதையைத் தனியாகவும் இந்த ஆனந்தி தொடர் தனியாகவும் வந்திருந்தால் இன்னும் நன்றாகக் கதை அமைந்திருக்குமோ? கதையோடு செம்போத்து ஒட்டவே இல்லை.

      நீக்கு
    2. இல்லை கீசா மேடம்... நான் எழுதினபோது எனக்கு நிறைவைக் கொடுத்தது.

      நீக்கு
    3. இதை நான் முன்னரே சொல்லி இருக்கிறேனோ? தெரியலை! இங்கே இந்தியாவில் என் மாமியார் இறக்கையில் அதிகாலை ஐந்து, ஐந்தரை இருக்கும். அப்போ அங்கே ஹூஸ்டனில் மதியம் மூன்றிலிருந்து நான்கரைக்குள் இருக்கும். இறந்த செய்தி எங்களுக்கு வருவதற்குக் கொஞ்சம் முன்னால் திடீரென அறையிலிருந்த சென்சாரில் நிழலாட்டம். சாதாரணமாக யாரேனும் அதற்கு எதிரே நடந்தாலோ, நின்றாலோ, அமர்ந்தாலோ தான் சென்சாரில் நிழல் தெரியும். அன்னிக்கு நாங்க யாருமே இல்லாதபோது அறையில் யாரோ இருந்தாப்போல் ஓர் உணர்வு. அறையில் இருந்தது நானும் எங்க பையரும் தான்! இருவருமே சென்சாருக்கு நேரே இல்லை. பையர் படுத்துக் கொண்டு இருந்தார். நான் கணினியில் மூழ்கி ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டிருந்தேன் அவர் என்னைக் கேட்டார், "சென்சாரில் மனித நடமாட்டம் எனக்குத் தான் தெரியுதா? அல்லது உனக்குமா?" என்று கேட்டார்! நான் அவரிடம், "அதே கேள்வியைத் தான் நான் கேட்க நினைத்ததாகச் சொன்னேன்." எங்க பேச்சுக்குரல் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த நம்மவர் எழுந்து வந்து என்ன என்று கேட்க அப்போது வாட்சப்பில் தகவல் வந்தது. எங்களுக்குள் கொஞ்சம் திகில் கலந்த ஆச்சரியம்! ஆனால் எங்க பையரோ, பாட்டி தான் வந்து பார்த்துட்டுப் போயிருக்கா எனத் திட்டவட்டமாகச் சொன்னார்.

      நீக்கு
    4. நீங்க இதுவரை சொல்லலை கீசா மேடம்.

      இறப்பவர், உயிர் பிரியும் தருவாயில் (பிரிந்த உடன்) தான் எண்ணிய இடத்துக்குப் போய்விட்டு வரமுடியும் (உடல் இருக்கும் இடத்துக்குத் திரும்பணும்).

      இதைப் போன்ற பலவற்றை நான் படித்திருக்கிறேன். ஆனா இதெல்லாம் நம் அனுபவமா, நமக்குத்தான் ஆச்சர்யமா இருக்கும். நம்பாதவர்களுக்கு அதன் தாக்கம் புரியாது.

      நீக்கு
    5. மகனில்லாத என் பெரியப்பா, இறப்பதற்குச் சில நாட்கள் முன்பு, தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்து, அங்கிருந்து சென்னை வர முயன்று அது சாத்தியமில்லாமல், என் அப்பாவை தொலைபேசி உடனே வரச் சொன்னார்.

      அப்போது அங்கு என் அப்பா சென்றிருந்தும், இறக்கும் தருவாயில் பெரியம்மாதான் அவர் இறக்கப்போகிறார் என்று சொன்னார்கள். என் அப்பா அப்போ அதனை நம்பலை.

      இவை எல்லாமே சாத்தியம்தான்.

      நீக்கு
    6. கார்த்திகை சோமவாரம் அன்று விரதம் இருந்து மாவிளக்கு பார்த்து இரவு தான் சாப்பிடுவேன்.
      திருவெண்காடு கோவிலில் சங்காபிஷேகம் பார்த்து வந்தோம், இருவருக்கும் எனக்கும் என் கணவருக்கும் ஏதோ அலுப்பு!
      உணவு வேண்டாம் என்று தோன்றியது.

      என் கண்வர் 'நீ காலையிலிருந்து சாப்பிடவில்லை சாப்பிட்டு விட்டு படு என்றார்கள்' இல்லை வேண்டாம் பசி போய் விட்டது . அலுப்பாக இருக்கிறது தூங்க வேன்டும் என்று படுத்து விட்டேன்.

      தூங்கி கொஞ்ச நேரத்தில் கனவு அப்பா வந்தார்கள் கனவில் 'அம்மாவை பத்திரமாய் பார்த்துக் கொள்' என்று சொன்னார்கள். நான் திடுக்கிட்டு எழுந்து மீண்டும் படுக்க போகலாம் என்று நினைத்த போது தந்தி வந்து இருக்கிறது என்று என் கணவர் க்தவை திறந்து வாங்கி வந்தார்கள்.

      என் அப்பா 51 வயது நல்ல திடகாத்திரமாய் நோய் நொடி இல்லாமல் இருந்தவர்கள்.அவர்கள் இறந்து விட்டார்கள் என்று அண்ணன் கொடுத்த தந்தி. நம்பமுடியவில்லை தவறாக வந்து இருக்கிறதா? என்று ஒரு முறைக்கு பலமுறை பார்த்து முடிவு செய்து கொண்டோம்.


      எல்லோர் பக்கத்தில் இருக்கும் போது நானும், என் அக்காவும் மட்டும் வெளியூரில் இருக்கிறோம். இரண்டு பேர் கனவிலும் அப்பா வந்தார்கள்.

      அங்கு போன பின் தான் என் அக்காவும் சொன்னார்கள் . அங்கு அம்மா சோமவார விரதம் இருந்து மாவிளக்கு பார்த்து அக்கம் பக்கம் கொடுத்து முடித்தவுடன் 'அப்பா போங்கள் எல்லோரும் சாப்பிட நேரம் ஆகி விட்டதே! விரதம் இருந்தவர்கள்' என்று எல்லோரையும் சாப்பிட போக சொல்லி விட்டு அப்படியே கீழே படுத்து இருக்கிறார்கள்.

      தம்பி தங்கை, அண்ணனுக்கு சாப்பாடு எடுத்து வைத்து சாப்பிட சொல்லி விட்டு அம்மா ஏன் இப்படி கீழே படுத்து இருக்கிறீரள்? என்று கேட்ட அம்மாவிடம் கைவலி என்று சொல்லி இருக்கிறார்கள். (வெகு காலமாய் விட்டு விட்ட டென்னிஸ் விளையாட்டை மீண்டும் ஆபிஸில் விளையாடி இருக்கிறார்கள் அதனால் கை வலி என்று சொல்லி இருக்கிறார்கள். முதல் நாள் டாக்டரிடம் போய் இருக்கிறார்கள் அவர் இரண்டு நாள் ஒய்வு எடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.)

      அதெல்லாம் அப்பா அலுவலக நண்பர்கள் அம்மாவுக்கு சொன்னது.

      அம்மா கையை பிடித்து விட்டு இருக்கிறார்கள். அப்படடியே அவர்கள் உயிர் பிரிந்து விட்டது, அந்த நேரம் எங்களை நினைத்து இருக்கிறார்கள்.

      டாகடர் வந்து மாரடைப்பு என்று சொன்னார்கள். அவர்களை பொறுத்தவரை இந்த கதையில் வரும் ஆனந்தி போல் நல்ல சாவு, யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல், நரை திரை வந்து நோகாமல் போய் விட்டார்கள். ஆனால் அம்மா எல்லோரையும் ஆளாக்கி நன்மை தின்மை பார்த்து எவ்வளவு !



      நீக்கு
    7. கோமதி அரசு மேடம்.... உங்கள் அனுபவம் வியப்பாவும் இருக்கு. நிச்சயம் நடக்கும் சாத்தியக்கூறுள்ளதாகவும் இருக்கு.

      என் அனுமானப்படி, இறக்கும் ஒவ்வொருவரும், மிஞ்சின துணை கடைசிவரை நல்லா இருக்கணுமே என்ற நினைப்போடுதான் இறப்பார்கள். அதுவே அவர்களின் கடைசி விருப்பமாக இருக்கும். அப்படி ஏற்கனவே துணை இழந்தவர்கள், பசங்களில் யார் கஷ்ட நிலையில் இருக்கிறார்களோ அவர்கள் நல்லா இருக்கணும், மத்தவங்க அவங்களைப் பார்த்துக்கணும் என்ற எண்ணம்தான் அவங்களுக்கு இருக்கும்.

      என் அப்பா என் கனவில் வந்து ஒரு செய்தி சொன்னார் (என்னிடம் கோபத்தோடு கேள்வி கேட்டார்.... காரணம் இப்போ எழுதலை..அது சொத்து சம்பந்தமான ஒரு விஷயம்).

      எனக்கு இதிலெல்லாம் பூரண நம்பிக்கை உண்டு.

      நீக்கு
  22. முதல் பகுதி சிறப்பாக இருந்தது. தாய் க்கும், மகனுக்கும் இடையே நிலவும் பாசமும், சினேகமும் சிறப்பாக வெளிப்பட்டிருந்தன. பம்பாயில் கிடைத்த வேலையை ஒப்புக்கொள்வதா? அமெரிக்காவுக்கு படிக்கச் செல்வதா? என்று குழம்பும் மகனை தைரியம் சொல்லி அமெரிக்காவிற்கு அனுப்பும் தாய். இந்த இடங்களெல்லாம் மிக நன்றாக இருந்தன. ஆனால் இரண்டாம் பகுதி கொஞ்சம் அமெச்சூர்தனமாக இருந்தது.
    தவிர எல்லோரும் நல்லவர்கள், எல்லாம் நன்றாகவே நடக்கிறது என்பது கதையில் க்ரிப் இல்லாமல் செய்து விட்டது.
    ரா.கி.ரங்கராஜன் குமுதத்தில் எப்படி கதை எழுதுவது (எ.க.எ) என்று ஒரு தொடர் எழுதினார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த முதல் விஷயம் ஒரு கதை என்றால் அதற்கு ஒரு ஆரம்பம், நடுவில் ஒரு சிக்கல், பின்னர் அந்த சிக்கல் விடுவிக்கப்படுவது(முடிவு) எனறிருக்க வேண்டும் என்றார். உங்கள் கதையில் அந்த சிக்கல் இல்லாததுதான் குறை. மற்றபடி நடை, எடுத்துச்செல்லும் விதம் எல்லாம் நன்றாக இருக்கின்றன. பாராட்டுகள்.
    என் விமர்சனத்தை சரியான கோணத்தில் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்...

      நீங்க சொல்வது எனக்குப் புரிகிறது. நான் எழுதி, திருத்தி, மீண்டும் எழுதினபோது எனக்கு சரியாக வந்திருப்பதாகத்தான் பட்டது. தேவையில்லாத சிக்கல்கள் கொண்டுவரவேண்டாம் என்று நான் நினைத்தேன்.

      முடிவைத் தீர்மானித்துக்கொண்டு, அதை நோக்கிய பயணமாக கதையை எழுதிச் சென்றேன். நிச்சயம் ஒரு வாரத்துக்குள் அடக்க முடியாது என்பது புரிந்தபிறகு, சில சம்பவங்களைச் சேர்த்து இரு வாரங்களாக்கினேன். ஸ்ரீராம், சரி என்று சொன்னதால்தான் இது சாத்தியமானது.

      உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.

      நீக்கு
  23. கதை படித்து பல வருடங்கள் ஆகி விட்டது. இங்கு வந்துள்ள விமர்சனங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது. உள்வாங்கி படித்துள்ளார்கள். அதுவே உங்களுக்கான தரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜோதிஜி சார்.... நானும் கதை படித்து பலப் பல வருடங்களாகிவிட்டது. எனக்கு அனுபவங்களைப் படிப்பதுதான் ரொம்பவும் பிடிக்கும். பிறருடைய அனுபவங்களைப் பற்றி எழுதிய புத்தகங்களை நான் விரும்பி வாங்கிப் படிப்பேன்.

      இந்தத் தளத்தில்தான் செவ்வாய் வெளிவரும் கதையைப் படிப்பேன். உண்மையில் நான் தொடர்கதை படிப்பதே இல்லை. அது முடிந்த பிறகுதான் படிப்பேன்.

      சும்மா, 'அருமை', 'நல்லாருந்தது', 'பாராட்டுகள்' என்று எழுதுவதால் கதை/இடுகை எழுதியவர்களுக்கு என்ன பிரயோசனம்?

      நன்றி

      நீக்கு
  24. // முதல் பகுதியின் முதல் பாராவில் பறவையைப் பற்றி எழுதி கிளைமேக்ஸில் பறவையோடு முடித்தது... //

    இப்படித்தான் முடிக்க வேண்டும்... வேறு வழியில்லை...

    ஆனாலும் அந்த தாயின் பரி'தவிப்புகள், மனதை பாதித்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு அப்பா மறைந்துவிட்டார். கணவன் மறைந்துவிட்டான். தனக்குப் பாதுகாப்பாக இருந்த மாமனார், மாமியாரும் மறைந்துவிட்டார். ஆனாலும் குழந்தையை வளர்க்கும் கடமையை அந்தத் தாய் மறக்கவில்லை.

      அந்தத் திருப்தி ஒன்றே போதாதா? எல்லோருக்கும் எல்லாமா கிடைத்துவிடுகிறது?

      அந்தத் தாய்க்கே, மகன் திருமணம் முடித்த பிறகு இந்தியாவே வராமல் இருந்திருந்தால், அதோடு அவர்கள் இருவருக்கும் சந்திப்பே நிகழாமல் இருந்திருந்தால்...

      அதைவிட கிடைத்தது அந்தத் தாய்க்கு மிகவும் திருப்தியைத் தந்திருக்கும்.

      நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      நீக்கு
    2. இதற்கு முன் பானுமதி அம்மாவும், சகோதரி கீதா அவர்களும்...

      ஐயோ, எதற்கு அம்மா - சகோதரி என்று ! - இரு மூத்த பதிவர்களின் தொடர் கதை வந்தது...

      அதுவே ஒரு ஜெமினி (சாம்பார்) கதை என்பது அடியேன் கருத்து...

      இது தூய மண(ன)ம் குணம் நிறைந்த அதே அதே...!

      தவறாக எண்ண வேண்டாம்... மனதில் பட்டது...!

      +

      அதே சமயம் சில வரிகள், (நேற்றைய பதிவு) தங்களின் மகனுக்கு செய்து தரும் சமையல்களும் ஞாபகம் வந்தது... நன்றி...

      நீக்கு
    3. வாங்க தி.தனபாலன். உங்கள் விமர்சனத்தில் தவறில்லை.

      நான் நிறைய கதைகள், நாவல்கள் படித்தவன். (தமிழில்).

      மிகச் சிறந்த கதாசிரியரும், அவருடைய சூழ்நிலையைவிட்டு வெளியே உள்ள சூழ்நிலையில் கதை எழுதுவதோ இல்லை நேட்டிவிட்டியைக் கொண்டுவருவதோ மிக மிகக் கடினம்.

      பேச்சு வழக்கு, கதை மாந்தர்களுக்கு பெயர் சூட்டுவது, அவங்க உரையாடல்கள், கதை போகும் போக்கு, சம்பவங்கள் போன்றவை நிச்சயம் காட்டிக்கொடுத்துவிடும்.

      அவங்க அவங்க பழக்கத்தையும் அனுபவத்தையும் ஒட்டி கதை எழுதலைனா, கதையில் ஜீவன் இருக்காது. பெர்சப்ஷன் மட்டும்தான் இருக்கும்.

      உதாரணமா, பிராமண பழக்கவழக்கங்களை கூடவே பார்த்து பழகியிராதவங்க, அதே நேட்டிவிட்டியோட கதை எழுதவே முடியாது. இந்த விதி ஒவ்வொரு சமூகத்துக்கும் உண்டு. அதுபோல கோயமுத்தூரில் வாழ்ந்திராதவங்க, அந்த நேட்டிவிட்டியோட கதை எழுதமுடியாது (அதே சமூகத்தைச் சேர்ந்தவங்களா இருந்தாலும்) மத்தவங்க சுலபமா அந்தத் தவறுகளைக் கண்டுபிடித்துவிடலாம்.

      இதனால்தான், பாபநாசம் படம் எடுத்த போது, கமலஹாசன் தன் கூடவே, நெல்லையைச் சேர்ந்தவரை வைத்துக்கொண்டிருந்தார். பேச்சு வழக்கு, வசனம் என்று ஒவ்வொன்றிலும் அவர் சொன்ன மாற்றங்களைச் செய்வதற்கு.

      நான் 'நெல்லை' என்று போட்டுக்கொண்டிருந்தாலும், நெல்லைத் தமிழ் என்னால் பேசமுடியாது. காரணம் நான் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சின்ன வயதிலிருந்தே ஒவ்வொரு மூன்று வருடங்களும் இருந்ததால், ஒரு இடத்தின் பேச்சு வழக்கு எனக்கு வரவே இல்லை.

      நீக்கு
    4. @திண்டுக்கல் தனபாலன் - //கூடவே பார்த்து பழகியிராதவங்க, அதே நேட்டிவிட்டியோட கதை எழுதவே முடியாது.// - இதைப்பற்றி நான் மேலும் எழுதணும்னு நினைக்கிறேன்.

      திரைப்படங்களிலும், நாவல்களில் ஓவியர் வரையும்போதும் இந்த அபத்தங்களை நான் நிறைய தடவை கண்டிருக்கிறேன். சமீபத்தில்கூட கோலமாவு கோகிலா படத்தில் இந்த அபத்தத்தைக் கண்டேன். சாருஹாசன் எழுதிய நூலில், ஒரு பகுதியில் ஓவியர் வரைந்த படத்தைப் பார்த்தும் (படம் குங்குமம் இதழில் வரைந்திருந்தார்) ஓவியருக்கு அனுபவமில்லா நிகழ்வு என்பதால் ஓவியம் வரைவதில் சொதப்பிவிட்டார் என்று நினைத்திருக்கிறேன்.

      என்ர ஐயன் இப்படிச் சொல்லுவாரு என்று பேச ஆரம்பித்தால் மட்டும் நான் கொங்குதமிழ் பேசியதாக நினைத்துக்கொள்ள முடியாது. இரண்டு வரிகள் பேச ஆரம்பித்தாலே இவனுக்கும் கொங்குதமிழுக்கும் சம்பந்தம் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிடும். உண்மையைச் சொன்னால், சென்னையில் பிறந்து வளர்ந்த என் உறவினன் பேசும் தமிழே 'சென்னை பிராமண பாஷை' என்று தோன்றும். சுத்தமான எங்கள் மொழி இருப்பதில்லை என்று தோன்றும்.

      படங்களில் 'ஏலே....என்னலே சொல்லுத' என்று ஓரிரண்டு மொழிக்கூறுகளை வைத்துக்கொண்டு, நெல்லைக்காரனாக நடிப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்வார்கள். இயல்பான மொழி, நடை உடை பாவனை வரவேணும்னா, அந்த அந்தப் பகுதியில் இருப்பவர்களின் இன்வால்வ்மெண்ட் வேண்டும்.
      நீங்களும் இதனைக் கவனித்திருப்பீர்கள்.

      நீக்கு
  25. இன்றைய இடுகையின் முதல் படம் - நாங்கள் தாய்லாந்த் ரிசார்டில் தங்கியபோது அவர்கள் 'பாத்ரூம் டவலை' அலங்காரமாக வரவேற்பதுபோல படுக்கையில் வைத்திருந்தது, மற்றும் சிறிய இலையில் வரவேற்று எழுதியிருந்ததைப் பார்த்து நான் எடுத்த படம்.

    சென்ற இடுகையிலும், இந்த இடுகையிலும் உள்ள தாய்லாந்து பெண்ணின் ஓவியம், தாய்லாந்த் விமான நிலையத்தில் இமிக்ரேஷனுக்குப் போகும் பாதையில் இருந்த படங்கள்.

    மேங்கோ ஸ்டிக்கி ரைஸ்- இது தாய்லாந்தின் சிறப்பு இனிப்பு. அந்த ரிசார்ட்டில், என் மனைவிக்கு (கான்ஃபரன்சுக்கு வந்திருந்த மற்றவர்களின் துணைவிகளுக்கும்) எப்படி இந்த இனிப்பு செய்வது என்று 3 மணி நேரம் சொல்லித் தந்தார்கள். ஒவ்வொருவரும் செய்தும் காண்பிக்கவேண்டும். நான் கான்ஃபரன்ஸில் இருந்ததால் சாப்பிடவில்லை. இரவு எனக்காக அவங்க மேங்கோ ஸ்டிக்கி ரைஸ் செய்துதந்தார்கள். அந்தப் படம் மட்டும் கட் செய்து இதில் இணைத்துள்ளேன்.

    செம்போத்து படம் - ஸ்ரீராம் இங்கு வெளியிட்டிருந்தது.

    மற்றவை இணைய உபயம்.

    பதிலளிநீக்கு
  26. நெகிழ்ச்சியான கதை...

    ஒரு குறுநாவல் போல் நீண்டதொரு கதை.

    அன்பான மாமியார் - மருமகளைப் பார்த்தல் அரிதாகிவிட்டது. எல்லாருமாய் வாழும் குடும்பத்தில் இன்னும் இந்த அன்பு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மனசுக்குள் ஆயிரம் இருந்தாலும் கூடும் இடங்களில் மகிழ்வாய்தான் இருக்கிறார்கள் நான் பார்த்த எங்கள் குடும்பம் உள்பட பல குடும்பங்களில்.

    இப்படி மருமகள் அதுவும் வேறு நாட்டுப் பெண் கிடைத்தல் அரிது.

    முடிவுதான் ரொம்ப நெகிழ்ச்சியாய்...

    இன்னும் கொஞ்சம் வெட்டி, ஒட்டி எழுதினால் இன்னும் சிறப்பான சிறுகதையாக வரும்... அல்லது இன்னும் காட்சிகளை நீட்டினால் அழகான குறுநாவலாக மாறும்.

    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பரிவை குமார். உங்கள் விமர்சனம் (வெட்டி/ஒட்டி) சிந்திக்கவைத்தது. குறுநாவல்கூட எழுதிவிடலாம் என்ற நம்பிக்கையை இந்தக் கதை எழுதும்போது மனதில் பெற்றேன் (with proper editing). சிறுகதை எழுதுவது ஒரு சேலஞ்ச்தான்.

      பிலிப்பினோஸ்கள், போலந்துப் பெண்கள் அப்படிப்பட்ட குணம் வாய்ந்தவர்கள் (அவர்களில் அந்தக் குணம் அதிகம்). தாய்லாந்த் பெண்களைப் பற்றி எனக்கு அப்படி ஒரு அபிப்ராயம் (பலர் வெளிநாட்டுக்காரரை மணக்க ஆசைப்படுபவர்கள்). ஆஃப்ரிகன் தேசங்களிலும் அப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள்.

      இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை எழுத நினைக்கிறேன்.

      நான் பிலிப்பைன்ஸ் போயிருந்தபோது நான் சென்ற ஆஃபீசில் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவருக்கு 35 வயது இருக்கலாம். சில நாட்களில் அந்தப் பெண் சொன்னார், 'நானும் பொதுவா எங்க குடும்பத்துல உள்ளவங்க மாதிரி திருமணமே செய்துகொள்ளவேண்டாம் என்று இருந்தேன்.. எப்படியோ ஒரு ஆஃப்ரிகரைச் சந்தித்து..அது திருமணத்தில் முடிந்துவிட்டது. எனக்கு ஒரு குழந்தை போன வருஷம் பிறந்தது. அது ஆஃப்ரிகன் சாயலிலேயே இருக்கு. கறுப்பா அவங்க சாயல்ல இருப்பதால் என் சொசைட்டில எனக்கு வெட்கமா இருக்கு' என்றார்.

      எங்க ஆபீஸில் வேலை பார்த்த என் சீனியர் (Gகோவன்), அங்கேயே செக்ரெட்டரியாக வேலை பார்த்த ஒரு பிலிப்பினோ பெண்ணை மணந்தார். அவரோட குழந்தைகள் பிலிப்பினோஸ் போன்று இருந்தன.

      இரண்டு சம்பவங்களிலும் பெண்கள் ரொம்ப நல்ல குணம் படைத்தவர்கள். அதுக்காகச் சொன்னேன். இதனை சுலபமாக ஏற்றுக்கொள்வது மேற்கத்தைய நாடுகள்தாம்.

      நீக்கு
  27. இரண்டுபகுதிகள் என்பதால் இரண்டையும் சேர்த்து படிக்க நினைதேன் முதலில் இரண்டாம் பகுதியை வாசித்தேன் முதல் பகுதியில் எதையும் மிஸ் செய்தமாதிரி இல்லை இனிதான் முதல் பகுதி வாசிக்க வேண்டும் முன்னோர்கள் பறவை ரூபத்தில் வருவார்கள் என்னு நம்பிக்கையே அடிப்படை என்று தெரிகிறதுசொல்ல வந்ததை சீராகச் சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி.எம்.பி. சார்... நெடிய கதை என்பதால், சிரமப்படாமல் படித்ததற்கே மிக்க நன்றி. கருத்து எழுதியது மகிழ்ச்சி அளிக்கிறது.

      இந்தக் கதைக்கு விதை, ஸ்ரீராம் சொன்ன சம்பவம். அன்று இரவுதான் கதை எழுதலாம் என்று யோசித்து எழுத ஆரம்பித்தேன்.

      மிக்க நன்றி.

      நீக்கு
  28. ஒரு சிறுகதையில் நமக்குத் தெரிந்த ஊர் பட்ட சமாச்சாரங்களை அடக்க முயற்சிக்கக் கூடாது. நிறைய இடங்களில் கதைக்கு சம்பந்தப் படாத வளவளா. நீங்களாக வலுவாக சம்பந்தப்படுத்த முயற்சித்திருப்பது செயற்கையாகத் துருத்திக் கொண்டு தெரிகிறது. அதனால் சிக்கென்று அமைந்திருக்க வேண்டிய கதை நிறைய இடங்களில் கதைக்கான ப்ரேமைத் தாண்டி அலைபாய்கிறது. இது ஒரு பெரிய குறை. கதையின் உள் செறிவை ஆழமாக்கி வெளிச் செறிவை வெட்டிப் பாருங்கள். உங்களுக்கே கதையின் அழகு கூடுவது தெரியும்.

    தாய் வளத்த பையன். சிரேஷ்டமானவன். அமெரிக்காவிற்குப் படிக்கப் போய் வேலை கிடைத்து தாய்லாந்து பெண்ணை அம்மாவின் ஆசியோடு சம்பந்தத்தோடு மணக்கிறான். வாய்த்த மருமகள் அனுசரணையானவள்.
    மாமியாரை பெற்ற் தாயாக மதிக்கிறாள். பேரன் பிறக்கிறான். அமெரிக்க சொந்தங்கள் இருக்கிற இடத்திலேயே சந்தோஷமாக இருக்கட்டும் என்று தாயும் நினைக்கிறாள். இவளும் அமெரிக்கா சென்று சொந்தங்களுடன் வாழ வேண்டும் என்ற ஆசையும் அவளை பாதிக்கும் அளவுக்கு இல்லாமல் இருக்கிறாள். அவர்கள் இந்தியா வரும் பொழுது அருகில் இருக்கும் பொழுது தன் உயிர் போய்விட்டால் நிம்மதி என்ற ஒரே ஆசையே அவளுக்கு இருக்கிறது. அந்த அவளது ஆசையை 'அது தான் கடைசி என்று அறியாமல்' என்ற ஒரே வரியில் நிராசையாக்கி விடுகிறார் ஆசிரியர். அந்த முடிவுக்கு கதை இயல்பாக நகரவில்லை.
    ஆசிரியர் தான் நினைக்கும் முடிவை வலுவாகத் திணித்து அப்படி முடிக்க வேண்டும் என்று நினைத்து முடித்திருக்கிறார். கதையின் முக்கியப் பகுதியான அந்தத் தாயின் இறப்புக்கு ஒரு சின்ன முடிச்சு போட்டிருந்தால், அதான் கதை சொல்ல வந்த விஷயம் என்று எழுதிய கதைக்கு ஒரு அர்த்தம் கிடைத்திருக்கும். அது இல்லாமல் போய்விட்டது.

    //நல்ல மருமகளாக கணவனின் பெற்றோருக்கும் இருந்திருக்கிறோம்.//

    இந்த இடத்தில் கதைக்கான அந்த முடிச்சைப் போட்டிருக்கலாம்.

    அந்தத் தாய் நல்ல மருமகளாக அவளது புகுந்த வீட்டில் இல்லை என்று காட்டியிருக்கலாம். ஆடாத ஆட்டம் ஆடியிருக்கிறாள்.

    ஆனால் அப்படிப்பட்டவளுக்கு ஒரு நல்ல இணக்கமான மருமகள் வேறு தேசத்துப் பெண்ணாய் இருந்தாலும் கிடைக்கிறாள். அந்த மருமகளின் அன்பில் தனது இளம் வயது மனக்கோளாறுகளை இந்தத் தாய் உணர்கிறாள். மருமகளின் அன்பான நடவடிக்கைகள் தனது தீச்சுடலை உணருகிற அளவுக்கு இந்தத் தாய்க்குப் பாடமாக இருக்கிறது.

    'இறைவா! நான் என் மாமியார், மாமனாருக்கு நல்ல மருமகளாக நடந்து கொள்ளவில்லை; ஆனால் எனக்கு ஒரு நல்ல மருமகளைக் கொடுத்திருக்கிறாயே! என்னே, உன் கருணை' என்று மருகுவதாகக் காட்டி அந்த துயரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நைந்து போவதாகக் காட்டியிருக்கலாம்.

    'இறைவன் ஒருவரை துன்பப் படுத்தித்தான் செய்த பாவத்தை உணர வைக்க வேண்டும் என்றில்லை.. நல்லது செய்தும் அதை உணர வைக்கலாம்' என்ற பாடத்தை இந்தக் கதை போதித்திருந்தால் மிகப் பிரமாதமாக அமைந்திருக்கும்.

    இந்த மாதிரி.. என்று இதெல்லாம் ஒரு உதாரணம் தான்.

    சின்ன ஒரு முடிச்சு. அதை அவிழ்விப்பது வாசகர் உணர்ந்து அனுபவிக்கிற மாதிரி.. அவ்வளவு தான். இதான் வாசகர் மனத்தில் படிகிற நல்லதொரு கதைக்கான இலட்சணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்... உங்கள் பாசிடிவ் விமர்சனத்துக்கு நன்றி.

      உங்கள் விமர்சனம் உண்மை. நம்ம உருவாக்கினதை, மூன்றாவது மனிதன் இடத்தில் இருந்து படித்து, கதையை மேலும் மேலும் செறிவூட்டணும். அப்படித்தான் திறமையான கதைசொல்லிகள் ஆரம்பகாலகட்டத்தில் செய்திருப்பார்கள். நன்கு வசப்பட்டவுடன் நேரடியாகவே அவர்களால் சொல்ல வந்ததை நச் என்று சொல்லும் திறமை வந்திருக்கும்.

      எனக்கு கதையை எழுதிய உடனேயே, சரியா வந்திருக்கு என்று தோன்றி ஸ்ரீராமுக்கு அனுப்பிவிட்டேன். Finalஆ அனுப்புவதற்கு முன்பும் பல தடவை கதையைப் படித்தாலும், என்னால் அதன் குறைகளைக் கண்டறிய முடியவில்லை. உண்மையில், ஏதேனும் போட்டிக்கு அனுப்பலாமா என்று தோன்றியது. அப்படி அனுப்ப நினைத்திருந்தால், நல்ல எழுத்தாளர்களிடம் சொல்லி, எதை வெட்டலாம் எந்தப் பகுதி சரியில்லை என்றும் கேட்டிருப்பேன் (மனதில் உங்கள் நினைப்புதான் வந்தது. நீங்கள் திருச்சி கோபு சார் வைத்த விமர்சனப் போட்டியின் நடுவராக இருந்தீர்கள் அல்லவா?)

      நீங்கள் சொன்ன கரு, வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கும்.

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஜீவி சார்.

      நீக்கு
    2. உங்கள் பதிலைப் படித்து, 'இதோ ஒரு நல்ல எழுத்தாளர் உருவாகிறார்' என்ற எண்ணம் ஏற்பட்டது. வாழ்த்துக்கள், நெல்லை!

      நீக்கு
    3. நன்றி ஜீவி சார்.... 'எழுத்தாளர்லாம் உருவாக மாட்டார்'. என் ஆசையே வேறு... நாலாயிர திவ்யப்ப்ரபந்தத்தைப் படித்து அதற்கு உரை எழுத முயற்சிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். பக்திப் பயணங்களை இடுகை வாயிலாக எழுத முடியுமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். அவ்ளோதான்.

      என் அப்பா சின்ன வயசில் நான் குமுதத்தை எடுத்தாலே, 'என்னடா பாட்டிக் கதைகளைப் படிக்கறயா..எடுத்து வை' என்று சொல்லிடுவார். துக்ளக், கல்கி இவைகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. விகடனும் ஏற்றுக்கொள்ளப்படும்.

      நீக்கு
  29. வணக்கம் நெல்லை தமிழன் சகோதரரே

    நேற்றிலிருந்து இதோ இப்போது வரை என்னால் வலைத்தளத்திற்கு வர இயலவில்லை மன்னிக்கவும்.
    நேற்றைய மோர்கூழ்க்கு வராததால் மீண்டும் வருந்துகிறேன்.இதை படித்து கருத்துக்கள் தந்து விட்டு அதற்கும் கருத்துரை தருகிறேன். ஆனால் நேற்றே தங்களின் இன்றைய கதை பகுதியும் நினைவுக்கு வந்தது.

    கதையை மிகவும் நன்றாக கோர்வையாக கொண்டு சென்றுள்ளீர்கள். தயங்கிய விஷயம் தான் காதலிக்கும் விஷயமாகத்தான் இருந்திருக்கும் என்பது நான் ஒரளவுக்கு ஊகித்ததுதான். ஆனால் அங்கிருக்கும் பெண்ணாக இருக்குமென நினைத்தேன். தாய்லாந்து,இந்துதான் எனக்கூறி ஒரு நல்ல பெண்ணாக மனித நேயம் மிக்க மருமகளாக கொண்டு வந்து விட்டீர்கள்.

    ஆனால் மகனும், மருமகளும் அவ்வளவு வறுப்புறுத்தி அழைத்தும், வரவில்லை என்று பிடிவாதமாக ஆனந்தி மறுக்கும் போது ஆனந்தியின் மரணம் கதையின் முடிவில் கொஞ்சம் எதிர்நோக்க வைத்தது.

    நடுவில் ஆனந்தியின் ஊருக்கு அவர்கள் வந்து போக இருந்ததும், பாச பிணைப்பு காட்சிகளும் நான் நினைத்த முடிவு தவறாகி இறுதியில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாகவோ, இல்லை ஆனந்தியும் மனம் மாறி வெளிநாடு புறப்படும் சமயம், மரணம் ஆனந்தியின் கைப்பிடித்து அழைத்து செல்லுமோ எனவும் எதிர்பார்க்க வைத்தது.

    ஆனால் ஏற்கனவே இழப்பின் வலியுடன் எங்கள் கண்களையும், கருத்தையும் விட்டகலாத செம்போத்து பறவையையும், இறுதியில் தான் காண துடித்த பேரனின் கையால் சிறிதளவு நீர் பருகி போன பிறவியின் ஆசையை ஆனந்தி தீர்த்துக் கொள்வதுமாய் அமைத்திருப்பதும் எதிர்பாராத ஒன்று. வித்தியாசமான கோணமாக சிந்தித்ததற்கு வாழ்த்துக்கள்.

    பேரனின் வரவுக்காக எதிர்பார்த்து,பார்த்து பார்த்து கற்பனை கோட்டை கட்டுமிடம் படிக்கும் போது மனம் நெகிழ்த்தியது. எப்போதுமே நிறைய எதிர்பார்க்கும் போதுதான் எதிர்பாராததும் நடந்து விடுமோ?

    அதுவரையில் தைரியமாக அனைத்து பிரிவுகளையும் சந்தித்த பெண்ணாகிய ஆனந்தியை, மரணம் அப்போதுதான் சந்திக்க வர வேண்டுமா? விதி கொடியது தான் என்ற என் எண்ணம் வலுப்பெறுகிறது. கதை மிகவும் மனதை பாதிக்கிறது. படங்கள் பொருத்தமாக நடுநடுவே இட்ட இடங்கள் சிறப்பாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... இன்றைக்கு ஒரு சில கருத்துக்கு பதில் எழுதிக்கிட்டிருந்தப்போ (நேற்றைய பதிவுக்கு), நீங்க இன்னும் வரலைன்னு தோன்றியது. கருத்தைப் பற்றிலாம் நினைக்கலை. எபி க்கு வருபவர்களில் யாரேனும் வரலைனா, என்ன ஆச்சு, எங்கேயும் வெளியூர் பயணமா, முடியவில்லையா என்று மனதில் தோன்றும்.

      இரண்டு வாரங்களுக்கு மேல் காமாட்சி அம்மாவின் பின்னூட்டம் இல்லை. அவங்க ஏற்கனவே ரொம்ப முடியலைன்னு எழுதியிருந்தாங்க. அது என் மனசுலயே இன்னும் இருக்கு.

      நீக்கு
    2. உங்கள் விமர்சனம் படித்தேன்... மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம்.

      நீங்கள் சொல்லியிருக்கும் கோர்வையும் நன்றாகத்தான் இருக்கு. அப்படியும் சிந்தித்திருக்கலாம்.

      இதற்கு முன்பும் ஒரு கதை, பசங்க வெளிநாட்டில் வேலை பார்த்து, அப்பாவைத் தன்னுடன் கடைசி காலத்துக்கு வந்துவிடும்படி வற்புறுத்தும்படியாக.

      என் மனதில் எப்போதும் தோன்றுவது, தான் பழகிய இடத்தை விட்டு யாரும் இன்னொரு இடத்தில் போய் வாழ்ந்து மடிந்துகொள்ளலாம் என்று பெரும்பாலும் நினைக்கமாட்டார்கள். அதிலும் மனதில் 'இடத்தின் மீதான பற்று' இருந்தால் அவங்களால அந்த வயசுல இன்னொரு நிலத்தில் வாழமுடியாது என்று தோன்றும். நானும் அதுபோல்தான் (அப்படி எதிர்காலத்தில் வாய்ப்பு வருமானால்). அதுதான் இந்த மாதிரி சிந்தனைக்கு அடிப்படை.

      நம்ம கடமையைச் செய்தோம். அத்தோடு சரி... அவங்களுக்கு உதவியா இருக்கலாம். அவங்களோடயே எப்போதும் இருப்போம் என்ற சிந்தனை எனக்கு வருவதில்லை. காலம் எனக்கு என்ன வைத்திருக்கிறதோ யாருக்குத் தெரியும்?

      விதி கொடியது என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. விதி, நம்முடைய ஆசை நிராசைகளைக் கணக்கில் கொள்வதில்லை.

      எழுதி எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற் செல்லும் என்ற உமர்கய்யாமின் மொழிபெயர்ப்பு நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      தங்களின் பதில் கருத்து நன்றாக உள்ளது தங்களின் நேற்றைய பதிவுக்கு படித்து கருத்திட வராமலிருந்த என்னை தேடியதற்கு மிக்க நன்றி.நான் நேற்று என் வலைதளத்தில் பதிந்த என் பதிவுக்கும் யாருக்கும் பதில் கருத்து கொடுக்க இயலவில்லை. பதில் தந்த அனைவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

      நாம் எழுதும், படிக்கும் கதைகளில் மட்டுமா மாற்றங்கள்? நம் தினசரி வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் வந்து கொண்டேதான் உள்ளது. மாற்றங்கள் மனதிற்கு பிடித்தவையாக அமைந்து விட்டால் அவை மகிழ்ச்சி தருணங்கள். மாறாக மாறுபட்டவையாக நடந்து விட்டால் அவை ஏமாற்றங்களின் தத்தளிப்புகள். நமக்கு கிடைக்கும் எல்லாமே நம் விதியின் கைப்பிடியில்தான். நாமும் என்றும் அதன் கைப்பாவைகள்தான்.

      உண்மை.. தாங்கள் சொல்வது போல் அது நம் ஆசை நிராசைகளை கணக்கில் வைத்துக் கொள்ள பிரியபடுவதில்லை. விதி காட்டும் வழியில்தான் நாம் என்றுமே செல்ல முடியும்.விதி கொடியது என நான் சொல்ல வரவில்லை தொடர்ந்த என் சோகங்கள் அதை அப்படி சொல்ல வைத்து விட்டன.அவை நல்லதுக்கும் பொறுப்புடையவைதான்.

      தங்களின் நேற்றைய பதிவுக்கும் கருத்து தந்துள்ளேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. நன்றி கமலா ஹரிஹரன் மேடம்... அதுதான் சொல்லியிருக்கேனே... வாழ்க்கை என்பது பாலைவனம். சோலை அப்போ அப்போ வரும். அவ்ளோதான்.

      நீக்கு
  30. நெல்லைத்தமிழன்! கதைப்போக்கு சென்றவாரத்தில் சொன்னது போல இந்தவாரமும் நன்றாகத்தான் இருக்கிறது! ஆனால் ஒரு முடிவை மனதில் வைத்துக் கொண்டு அதற்கேற்பக் கதை எழுதுவதில், முடிவோடு முன்னால் எழுதியதில் சங்கிலி எங்கேயும் அறுந்து விடாமல் சரியாக இருக்கிறதா என்பதைப் பலமுறை பரிசோதித்துப் பார்க்க வேண்டியிருக்கும் என்பது இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

    இப்போது இங்கே இதுவரை வந்தவிமரிசனங்களில் இருந்து எடுத்துக் கொள்ளக் கூடியதாக, கதையில் கொஞ்சம் நீட்டிச் சொன்ன இடங்கள் எவை என்று கவனித்து trim /edit செய்து இன்னொரு முறை எழுதிப் பாருங்கள்! Precis writing மாதிரித்தான்! ஒரு சிறுகதைக்கான அத்தனை அம்சங்களும் கச்சிதமாகப் பொருந்தி இருப்பதை பார்ப்பீர்கள்!

    ஜோதிஜி இங்கு சொன்ன மாதிரி எனக்கும் சிறுகதைகள் படிக்கிற வழக்கமே அற்றுப் போய்விட்டது..அதோடு வாராந்தரிகள் எதையுமே வாங்குவதில்லை என்பதால் தொடராகவும் எதையும் படிக்க வாய்ப்பில்லை. .நீண்ட காலத்துக்குப் பிறகு இங்குதான் சிறுகதை முயற்சிகளை அவ்வப்போது பார்க்கிறேன். அதில் உங்களுடையது மிகவும் சென்டிமெண்டைத் தொடுவதாக! வாழ்க நலம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்.

      /பலமுறை பரிசோதித்துப் பார்க்க// - உண்மைதான். ஆனா பாருங்க... அவ்வளவு மெனெக்கெட மனசில்லை. (நேரமில்லை என்று சொல்லித் தப்பிக்கக்கூடாது. நாம் எழுதுவது அப்படி பர்ஃபெக்டா இருக்கணும் என்ற எண்ணம் 'கதை' எழுதும்போது வரலை)

      நான் சிறுகதைகளைப் படிப்பதே இல்லை. நாவல்கள் படிப்பதிலும் எனக்கு ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டது. அனுபவங்களை மட்டும்தான் படிக்க ஆர்வமா இருக்கும்.

      நேற்று(?) கீதா சாம்பசிவம் மேடம், ரஞ்சனி நாராயணன் அவர்களின் ஒரு சிறுகதையை (2010ல் வந்தது) படிக்கச் சொல்லி லிங்க் கொடுத்திருந்தார்கள். ரொம்பவும் ரசித்துப் படித்தேன்.

      மற்றபடி எல்லாச் சிறுகதைகளையும் படிக்க நேரமில்லை, ஆர்வமும் இல்லை. ஆனா பாருங்க..இங்க எ.பில செவ்வாய் 'சிறுகதை' என்பதால் படித்துவிடுகிறேன்.

      உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

      நீக்கு
  31. //மற்றபடி எல்லாச் சிறுகதைகளையும் படிக்க நேரமில்லை, ஆர்வமும் இல்லை.//

    இப்பொழுது தான் உங்கள் சிறுகதைப் முயற்சிக்கான குறைகளின் காரணமும் தெரிகிறது. எந்த புது முயற்சியிலும் நாம் ஈடுபட ஆசை கொள்ளும் பொழுது அந்த 'ஏரியா' பற்றிய முழுப் பயிற்சிகளும் பெற முயல வேண்டும். கடுமையான முயற்சிகளால் தான் கனி பறிக்க இயலும். இல்லையென்றால் எதுவும் காமாசோமாவென்று முடிந்து
    'இது கசக்கும்' என்று அடுத்ததற்குப் போய் விடும். அதுவும் கசக்க
    கசப்பே தொடர் நிகழ்வாகி விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜீவி சார். முற்றும் உண்மை. ஆர்வம், passion இருந்தால்தான் பரிமளிக்கும். ஆனால் 'சீச்சீ இது புளிக்கும்' கதையில்லை. இருந்தாலும் ஆர்வம் வரும்போது எழுதுவேன்.

      நீக்கு
  32. ஸ்ரீராமின் வெற்றி சாதாரணமாக வந்து விடவில்லை. மிகச் சிறந்த எழுத்து வன்மை அவருக்குக் கைகூடியிருக்கிறது. கிட்டத்தட்ட எழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆல் ரவுண்டர்.

    சலிப்பே இல்லாத அவர் முயற்சிகளைப் பார்த்து மனசுக்குள்ளேயே எவ்வளவு வியந்திருக்கிறேன், தெரியுமா?.. முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு அவர் நமக்குத் தெரிந்த நல்ல உதாரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் எழுதினா, அது இண்டெரெஸ்டிங் ஆக இருக்கு. எழுத்தைப் பிடிக்க வைப்பது பெரிய திறமை. நிறைய எழுதலாம், ஆனால் அவருக்கு நேரமில்லை என்கிறார். அதைவிட நான் பெரிதாக நினைப்பது மற்றவர்களை என்கரேஜ் செய்யும் குணத்தை. நீங்களும் அப்படித்தான். நல்ல எழுத்துத் திறமை உள்ளவர்கள் பிறரையும் ஆதரிப்பது என்பதே பெரிய குணம்.

      அது இருக்கட்டும்...உங்கள் எழுத்தில் என்னை ஆரம்பகாலங்களில் (நான் இணையத்துக்கு வந்தபோது) கவர்ந்தது தமிழ் பற்றி நீங்கள் தொடர்ந்து எழுதியவைகள்தாம். சங்க இலக்கியம் என்றெல்லாம் எழுதுவீங்க. அதை அம்போன்னு நிறுத்திட்டீங்க. நேரம் கிடைக்கும்போது நீங்க தொடரணும் என்பது என் ஆசை.

      நீக்கு
    2. பாராட்டுகளுக்கு நன்றி ஜீவி ஸார். அதற்கு நான் தகுதியானவன் அல்ல. இருந்தாலும் சந்தோஷமாக இருக்கிறது.

      நீக்கு
    3. ஜீவி அண்ணா உங்களோடு சேர்ந்து நானும் வழி மொழிகிறேன் அப்படியே!

      நெல்லை நிஜமாகவே நீங்கள் ஸ்ரீராம் பற்றிச் சொல்லியிருப்பதையும் அப்படியே டிட்டோ செய்கிறேன்...அவரின் அழகான ஈர்க்கும் எழுத்தோடு பிறரை ஊக்குவித்து ஆதரிப்பது என்பது மிக மிக மேன்மையான குணம்.

      கீதா

      நீக்கு
    4. கீதா ரங்கன் - நான் ரொம்பவும் வெளிப்படையாகப் பாராட்டுவதில்லை. கோடி காண்பிப்பதோடு சரி. மனதுல நாம அப்படி நினைத்தால் அதுவே போதுமானது இல்லையா? ரொம்பவும் பாராட்டுவது, அதுவும் தெரிந்தவர்களை மிகவும் பாராட்டுவது - அது என் குணம் இல்லை.

      நீக்கு
  33. அந்த செம்போத்து துவண்டு போய்ப் படுத்திருந்தபோது அதன் அருகில் சென்றபோதும் அது பெரிதாக நகர முற்படவில்லை என்று பார்த்தபோது அது அதன் இறுதி நேரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று உணராமல், ஏதோ பயந்திருக்கிறது அல்லது முட்டை போடப்போகிறது என்று முட்டாள்தனமாக நினைத்தேன். அதன் வாயில் நான் ஊற்றிய தண்ணீர் சில சொட்டுகள் அலகைத் திறந்து உள்வாங்கியது. பின்னர் சுமார் அரைமணி கழித்து பார்த்தபோது இறந்திருந்தது.

    அது அதன் கடைசித் தண்ணீர் என்று நான் உணரவில்லை என்பதோடு வேறொன்றும் தோன்றவில்லை. ஆனால் இதைச் சொன்னபோது கீதா என்னிடம் சொன்ன விஷயம் என்னை யோசிக்க வைத்தது. என் தந்தையின் கடைசி நேரங்கள் நினைவுக்கு வந்தன. அதனால் சில நெகிழ்ச்சியான சிந்தனைகள் மனதில் ஓடின. காலமாவதற்கு கொஞ்ச நாட்கள் முன்பு சென்னைக்கு வரவேண்டும் என்று மிக விரும்பினார் அவர்.

    அந்த வகையில் இந்தக் கதையின் முடிவு "இருக்குமோ?" என்று எண்ண வைத்து என்னை ஒரு அல்ப திருப்தி படவைக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் - வேறு என்ன காரணம் இருந்திருக்க முடியும்? தெரியலை. ஏதேனும் விட்ட குறை தொட்ட குறை இருக்கலாம். உங்களுக்கு அப்போ தண்ணீர் கொடுக்கணும்னு தோன்றியதே... அது பெரிய விஷயம்.

      உங்களை கன்ஃப்யூஸ் பண்ண ஒரு விஷயம் சொல்றேன்.

      பொதுவா ஒருத்தர் இறக்கும்போது அவர் முகத்தில் படும்படியா இருக்கக்கூடாது என்று சொல்வார்கள். அதிலும் குறிப்பா, மரண தண்டனைக் கைதிகள் போன்றவர்கள். அதனால்தான் அவங்களுக்கு முகமூடி போட்டிருப்பாங்க. அதேபோல, சவுதியில் கழுத்தை வெட்டுபவனும், பின்பக்கமாக நின்றுகொண்டுதான் வெட்டுவான். பழைய காலத்தில் (பிரிட்டிஷ்), மொத்த கும்பலைச் சுடும்போதும் அவங்களை மறுபக்கம் பார்க்கச் சொல்லித்தான் சுடுவாங்க.

      நீக்கு
    2. ஆஹா ஸ்ரீராம் ஹைஃபைவ்!!!!!!!!!!!!!!!!!!!!! என் மனதில் தோன்றியதும் அதுதான். அதுவும் நீங்கள் அன்றே அதற்குத் தண்ணீர் கொடுத்தது பற்றியும் சொன்னீங்களா....தேதி எல்லாம் மனதில் கலந்து உடனேயே கதை வந்துவிட்டது. அதை நான் இங்கு அல்லது உங்களிடம் வெளிப்படையாகச் சொல்லாததன் காரணம்.....சரி மீதியை நான் இங்குச் சொல்லவில்லை...புரிந்திருக்கும்...
      எனக்கும் கதையில், நெல்லை செம்போத்து சொல்லியிருந்தது பிடித்திருந்தது. ஆனால் இன்னும் ஏதோ ஒன்று மட்டும் அங்கு மிஸ்ஸிங்க் என்று தோன்றுகிறது...

      கீதா

      நீக்கு
  34. நெல்லை எனக்குத் தோன்றியது என்னவென்றால் ஆனந்தி அப்படிப் போக மாட்டேன் என்று ஏன் இருக்க வேண்டும். அங்கு செல்வ்து டெம்பரரி தானே. நிரந்தரம் இல்லையே. கொஞ்ச நாட்களேனும் போயிருந்திருந்தால் மகனுக்கும் மருமகளுக்கும் இன்னும் கொஞ்சம் மனம் சந்தோஷமாக இருந்திருக்கும் இல்லையா. நம் குழந்தைகளின் அன்பான அழைப்பை, நமது சில கொள்கைகளினால் அல்லது அதை என்ன என்று சொல்ல? பிடிவாதம் என்று சொல்லமுடியுமா என்று தெரியவில்லை..அதிலும் சேர்த்தி இல்லை...ம்ம்ம்ம்..சரி ஏதோ ஒன்று...அப்படி நிராகரிப்பது போல இல்லையா நெல்லை? இத்தனைக்கும் ஆனந்திக்கு வயதும் ஒன்றும் ஆகிவிடவில்லை. முதுமையின் காரணமாகப் போக முடியவில்லை என்று சொல்ல. அட்லீஸ்ட் அவர்களின் அன்பிற்காக சந்தோஷத்திற்காக ஒரு இரு மாதமாவது போய் இருந்திருக்கலம. அதுவும் ஆனந்தி நல்ல மெச்சூர் பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் போது...அந்த அன்பை அவள் நிராகரிப்பது போலத் தோன்றியது. இது என் தனிப்பட்டக் கருத்து.

    பிரச்சனை வரும் என்று ஏன் நினைக்க வேண்டும். அப்படியே வந்தாலும் இருவருமே அதை பக்குவப்பட்ட மனதுடன் சரி செய்திருப்பார்களே அப்படித்தானே கேரக்டர்ஸ். சரி மருமகள் மாமியார் பிரச்சனை வேண்டாம். ஆனந்திக்கு அமெரிக்கா சென்று அவர்களோடு இருப்பது ஆனந்தமாக இருந்தாலும் அங்குள்ள வாழ்க்கை அவளுக்குப் பிடிக்காமல் போனதாகச் சொல்லியிருக்கலாமோ அதனால் அவள் அங்கு செல்ல விரும்பவில்லை என்று...இதெல்லாம் என் மனதில் தோன்றியவை. ஆனால் படைப்பாளி நீங்க. ஸோ உங்கள் சிந்தனை கருத்துகள் இல்லையா...

    பறவை வடிவில் செண்டிமென்ட், நல்லாருக்கு. இன்னும் அதை மெருகேற்றி ஆழப்படுத்தியிருக்கலாமோ?! இன்னும் கொஞ்சம் உணர்வு பூர்வமாக?

    கதைக் கரு எல்லாம் நல்லாருக்கு நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை ஒரு கமென்ட் விட்டுப் போச்சு!! காலைல போட்டேன். பார்த்தா அது காணலை....

      நீங்க கதைல தமன்னாக்காவை கன்யா பாத்திரத்திற்குக் கொண்டு வருவீங்கன்னு நினைச்சேன்!!!! ஏமத்திட்டீங்களே!! பொருத்தமா இருந்திருப்பாங்கல்ல அதுவும் தாய்பொண்ணுக்கு!!!!! ஹிஹிஹிஹி...

      கீதா

      நீக்கு
    2. //தமன்னாக்காவை கன்யா பாத்திரத்திற்குக் // - நிழல் நிஜமாகுமா கீதா ரங்கன்? கானல் நீர் தாகம் தணிக்குமா? இங்க (இரண்டு பகுதிகள்லயும்) நான் தாய்லாந்தில் எடுத்த சில படங்களைப் போட்டிருக்கிறேன். இணையத்தில் கிடைத்த ஒரு பெண்ணின் படத்துக்கு குங்குமம் வைத்திருக்கிறேன். நான் படமெடுத்த பெண்ணின் படத்தைப் போட நினைத்தேன். சட் என கிடைக்கவில்லை.

      நீக்கு
    3. கீதா ரங்கன்

      /அப்படிப் போக மாட்டேன் என்று ஏன் இருக்க வேண்டும். // - இந்த மாதிரி இடங்களில் கதை எழுதுபவனின் நம்பிக்கையோ இல்லை அனுபவமோ வந்துவிடுகிறது. ஆனந்தி போயிருக்கலாம். ஆனால் போகாமல் இருந்ததுதான் சரி என்று என் மனதுக்குத் தோன்றியது. அவள் பிடிமானம் அந்த வீடு, அது கொடுத்த ஆன்மீக தைரியம்.

      //அங்குள்ள வாழ்க்கை அவளுக்குப் பிடிக்காமல் போனதாகச் சொல்லியிருக்கலாமோ// - பொதுவா ஆண்களுக்கு அவர்களின் சொந்தக் குகை தவிர வேறு இடங்களில் பிடிமானம் இருக்காது. ஆனால் பெண் என்பவள் அப்படி அல்ல. அவள் எந்த நிலத்திலும் வேரைப் படர விடக்கூடிய தனிப்பட்ட சக்தி உண்டு. அதனால்தான் பெண், தன் உறவினர்கள் வீட்டில் தனியாக அவர்களுடன் இருந்துவிட முடியும், குடும்பத்தோடு ஒன்றிவிட முடியும். ஆணுக்கு அப்படிப்பட்ட ஆட்டிட்டியூட் குறைவு என்பது என் எண்ணம்.

      //இன்னும் கொஞ்சம் உணர்வு பூர்வமாக? // - இருக்கலாம். ஆனா பாருங்க..சமைச்சாச்சு என்று தோன்றிவிட்டால் அதில் இன்னும் அழகுபடுத்த ஆர்வம் வருவதில்லை. இன்னொன்று, பொறுமையா இன்னும் செதுக்கியிருந்தால் நல்ல படைப்பாக அமைந்திருக்கும், ஆனால் அதற்கான பொறுமை இல்லை (பேசிக்கலி நான் கதை எழுதுபவன் கிடையாது என்பதால் இருக்கும். ஹா ஹா)

      நீக்கு
  35. இந்த வாரம் பார்த்தபின்பே, பின்னோக்கி சென்றுவந்தேன்.

    செம்போத்துப் பறவை உங்களை செம்மையாகப் பிடித்துவைத்திருந்திருக்கிறது. ஓவர்பாசக் கதை நீள்வதைப் பார்த்தால், கன்யா தன் பேரனுடன் கொஞ்சி விளையாடும் கட்டமும் வந்துவிடும் என எண்ணியிருந்தேன்.

    ’இப்படித்தான்’ என சிறுகதைக்குக் கட்டம் கட்டிக் காட்டமுடியாதெனினும், சிறுகதை அழகிய சித்திரம் போன்றது. சித்திரமும் கைப்பழக்கம்..

    நீங்கள் நிறைய வரைவீர்கள் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் சார். இரண்டு பகுதிகளையும் படித்துக் கருத்திட்டதற்கு நன்றி.

      வாழ்க்கையில் 'பாசம்' என்பதுதானே அதன் நாடகத்தை நடத்துவதற்கான முதல் ஆதாரமாக இருக்கிறது. நிறைய நேரம் நாம் எண்ணுவதெல்லாம் நடப்பதில்லை. நம் பையன்கள்ட ரொம்பவும் அன்பு வைத்திருப்போம், பாசமாக இருப்போம், ஆனால் அது அதே லெவலில் அவர்களிடமிருந்து கிடைக்காது, நாம் நம் பெற்றோரிடம் நடந்துகொள்வது போலவே (பெரும்பான்மையை வைத்துச் சொல்கிறேன்).

      எதுவுமே திரும்பத் திரும்ப முனையும்போது சிறப்படையும்.

      கதை - வரையலாம். ஆனால் நிஜத்தில் ஒரு காலத்தில் நிறைய வரைவேன். இப்போ டச் விட்டுப்போய்விட்டது. சமீபத்தில் டிராயிங்க் பென்சில்கள், நோட்டு வாங்கிவைத்திருக்கிறேன். இன்னும் ஆரம்பமாகவில்லை.

      நீக்கு
  36. நெ.த. ஐயா :- ஜூன் மாதம் ஸ்ரீராம் சார் இந்தப் பறவையைப் பற்றி படங்களுடன் முகநூலில் பகிர்ந்து இருந்தார்... அறிவீர்களா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை திண்டுக்கல் தனபாலன். நான் முகநூலில் இல்லை. ஆனால் இந்தத் தளத்தில் ஒரு வியாழன் அன்று ஸ்ரீராம் படங்களையும் சம்பவத்தையும் பகிர்ந்துகொண்டிருந்தார் என நினைக்கிறேன். அதிலிருந்துதான் ஒரு படத்தை எடுத்து இந்தக் கதைக்கு உபயோகப்படுத்திக்கொண்டேன்

      நீக்கு
  37. கதையில் ஆங்காங்கே தெளித்திருக்கும் கருத்துகள் ரசிக்கும்படி இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜி.எம்.பி. சார்..உங்கள் மீள் வருகைக்கு.

      இதைப்பற்றிக் குறிப்பிடணும்னு நினைத்தேன். அந்தக் கருத்துக்கள் கதையாசிரியர் நம்பும் கருத்துக்களாக இருக்கவேண்டியது இல்லை. அதனால் கதை மாந்தர்களின் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் வைத்து என்னை எடைபோட்டுவிடாதீர்கள். ஹா ஹா ஹா

      நீக்கு
  38. /“மதம்கறது வாழ்க்கையை வாழறதுக்கும் நம்மைப் படைச்சவனை அணுகறதுக்குமான ஒரு கருவிதாண்டா…அது எப்பவும் ரொம்ப முக்கியமில்லை. மனம்போல பண்ணிக்கோடா. //
    என்னவொரு தங்கமான குணம் ..
    கதை கொஞ்சம் பெரியதுதான் ஆனாலும் உணர்வுகளை அழகாய் படம் பிடித்து உள்ளீர்கள் .ஆனால் இத்தனை அன்பான புரிதலுள்ள ஆனந்தி அம்மா தனது பேரனை தூக்கி கொஞ்சாதது மன வருத்தமே அந்த செம்போத்தை அவங்க வீட்டு தோட்டத்தில் அட்லீஸ்ட் ஒரு வருஷ காலமாவது மரத்தில் வளருவது போல் வைத்திருக்கலாம் .அம்மாவின் ஆன்ம சாந்திக்காக தோணுச்சு .

    ஆனந்தி போன்றோர் தெய்வ குணம் நிரம்பியோர் இக்காலதில் பெற்றோர் அனைவருக்கும் இந்த மாற்று கலாசார திருமணங்கள் ஏற்கும் பக்குவம் கொஞ்சம் கொஞ்சமாக வந்துள்ளது .எங்க தெரிந்த நண்பர்கள் பிரிட்டிஷ்க்காரர்கள் அவங்க வேற சர்ச் அங்கு மூன்றம் தலைமுறை மருமகள்கள் முறையே பிலிப்பைன்ஸ்/மெக்சிகோ /பிரேசில் மற்றும் சீன பெண்கள் இ.சரியாகா அனந்தி வாயிலாக///மதம்கறது வாழ்க்கையை வாழறதுக்கும் நம்மைப் படைச்சவனை அணுகறதுக்குமான ஒரு கருவிதாண்டா/// நீங்களே சொல்லிட்டீங்க
    நல்ல கதை ஆனாலும் செம்போத்தை பேரனுடன் பயணிக்க விட்டிருக்கலாம் சிலகாலம் :) அது மட்டுமே எனக்கு குறையகப்பட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனந்தி அம்மா தனது பேரனை தூக்கி கொஞ்சாதது மன வருத்தமே// ஹா ஹா. எல்லோரின் கருத்தைப் படித்த பிறகு, அவங்களோட சந்தோஷமான வாழ்க்கையையும் இன்னும் சிறிது எழுதியிருக்கலாமோன்னு தோணுது. அப்போ நிறையபேருக்கு இன்னும் நிறைவாக இருந்திருக்கும்.

      //இந்த மாற்று கலாசார திருமணங்கள் ஏற்கும் பக்குவம் கொஞ்சம் கொஞ்சமாக வந்துள்ளது .// - இந்தியாவுல இது சுலபமல்ல. அதற்கு இன்னும் நூறாண்டுகளாவது ஆகும். மாற்று சாதித் திருமணங்களே இங்கு இயல்பா எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. பிறக்கும் குழந்தை அப்பாவின் சாதியைத் தழுவுகிறது. அதுபோல மாற்று மதமும், வழிபாடு முறைகளில் பிரச்சனையைக் கொண்டுவருகிறது.

      மேற்கத்தைய கலாச்சாரம்போல, நான் கிறிஸ்டியன், அவர் இஸ்லாம் என்று சொல்லும்படியான நிலை இங்கு கிடையாது.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!