சென்ற வாரக் கருத்துரைகளில் ஸ்டாரும் நீரும்தான் பெரிதும் பேசப்பட்டன.
கருத்துரைத்தவர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றி.
இனி இந்த வாரக் கேள்விகளைக் காண்போம்.
சொல்பவர் யார் என்று பார்க்காதீர்கள்; சொல்லப்படுவது என்ன என்பதைப் பாருங்கள்.
அதுபோல,
கேட்பவர் யார் என்று பார்க்காதீர்கள்; கேட்கப்படுவது என்ன என்று பாருங்கள்!
========================
பி. தமன்னா ஒல்லியூர் :
உங்களுக்குப் பிடித்த சட்டை எது? ஏன்?
$அரைக்கை சட்டை சிவப்பு தவிர எந்த வண்ணத்திலும்.
& நான் ஒல்லியாக இருந்த நாட்களில் தைக்கப்பட்ட சட்டைகள் எல்லாமே பிடிக்கும் (என்னுடைய உடம்பை ) இப்போது அணிந்தால்!
ஷெ. அனுஷ்கா , குண்டூர் :
இரசிப்பது மழை நாட்களையா அல்லது வெயில் நாட்களையா?
$வீட்டுக்குள்ளிருந்து மழையையும், பார்க் பீ ச் என்றால் மிதமான வெயிலையும்.
& குடை இருந்தால் மழை நாட்களை; குளிர் இருந்தால் வெயிலை.
கீ சு (கீழூர் சுந்தரவல்லி ) :
உங்களுடைய குழந்தைகள் சிறு வயதில் ஒருவருக்கொருவர் சண்டையிட்ட நாட்களில் நீங்கள் யார் பக்கம்?
$சண்டை என்றால் நான் முதலில் வெளிநடப்பு செய்து விடுவேன் சமாதானம் பலிக்காவிடில்.
& அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் என் மனைவிதான் ரொம்ப டென்சன் ஆவார். நான் என் மனைவிக்கு அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் சொல்லிக்கொடுத்த ஓர் உபாயம் : 'சண்டையிடுவது யாரோ பக்கத்து வீட்டுப் பசங்க என்று நினைத்து வேடிக்கை பார். அப்போ டென்சன் இல்லாமல் இருக்கலாம்!' நல்லவேளை - என் பையனும், பெண்ணும் சிறியவயதில் வாய்ச்சண்டை மட்டும்தான்!
சொல்வேந்தன், தேவிக்குப்பம் :
பிறமொழிக் கலப்பு இல்லாமல் எழுதினால் மட்டும்தான் ஒரு மொழி வளருமா?
$அப்படி ஒரு 10 வரி எழுதிப்படித்துப்பாருங்கள்.
& ஹி ஹி ஒரு கற்பனைதான்!
எம்சியார் வேட்டி கட்டி வந்தால் சிறப்பாக இருக்கும் என்று சரோசாதேவி கன்னட பாடையில் கூறினார். இதில் கட்டியவர் எம்சியாரா அல்லது வேட்டி எம்சியார் (MCR) ஆ? அது என்ன கன்னட பாடை! இதிலெல்லாம்தான் தமிழ் வளரவேண்டும் என்றால், அந்தக் காலத்துத் தமிழ்ப் புலவர்கள் நொந்துபோவார்கள்!
திரிசடை, மங்காத்தாபுரம் :
இதுவரை வாழ்க்கையில் நீங்கள் சாதித்தது என்ன?
$என்னைக்கேட்டால்?, நமக்கு சாதனை என்று தோன்றுவது அடுத்தவருக்கு அற்பமாகத் தோன்றலாம்.
& நிறைய நண்பர்களை சம்பாதித்து வைத்திருப்பது. அவர்கள் வைதாலும், வாழ்த்தினாலும் நட்பை விடாமல் இருப்பது!
வாட்ஸ் அப் கேள்விகள்
பானுமதி வெங்கடேஸ்வரன் :
சில ரிஸ்ட் வாட்சுகளில் ஜுவல்ஸ் என்று போட்டு எண்ணிக்கையும் கொடுத்திருக்கும். அந்த ஜுவல்ஸ் எதைக் குறிக்கும்? இப்போதெல்லாம் அது காணப்படுவதில்லையே?
$ ஸ்பிரிங் முதல் செகண்ட் காட்டும் முள் வரை இருக்கும் பல்சக்கரங்களின் இரு புறமும் பொறுத்தப் பட்டிருக்கும் பேரிங் எண்ணிக்கை. ஒரு பின்னுக்கு ஒரு புறம் மட்டும்தான் பேரிங் என்பதால் எப்பொழுதும் ஒற்றைப்படை எண்ணிக்கையே வரும்.
இப்போதும் ஸ்பிரிங் மோட்டார் வைத்த வாட்சுகள் அப்படித்தான்.
Quartz வாட்சுகள் பல் சக்கரங்கள் இருந்தாலும் ஹேர் ஸ்பிரிங் regulator கிடையாது.
# கடிகாரத்தின் இயங்கும் பல்சக்கரத்தின் அச்சுக்கு மேலும் கீழும் எளிதில் தேயாத கெம்பு மாதிரி கல் பொருத்தப் பட்டிருக்கும். இம்மாதிரி 17, 21, 23 ஜுவல் வாட்சுகள் மிகப் பிரசித்தம்.
இப்போதும் சக்கர இயக்க வாட்சுகள் ரோலக்ஸ் ஓமெகா மாதிரி லட்சக்கணக்கான விலையில் கிடைக்கின்றன.
உறவுமுறையில் இல்லாத ஒருவரால் மாமா/அங்கிள்/தாத்தா என்று முதல் முறையாக அழைக்கப்பட்ட பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?
# என்னை அங்கிள், தாத்தா என குழந்தைகள் அழைக்கும்போது ஏற்படும் ஆனந்தம் அளவிடற்கரியது.
& குரோம்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தேன். வழியில், வீட்டருகே பத்து வயது சிறுவர்கள் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஒருவன் வீசிய பந்து என்னைத் தோள் தட்டிப் பார்த்தது. அப்போது ஒரு சிறுவன், " பாவம்டா - பந்து அந்த மாமா மேல விழுந்துடுச்சு" என்றான்! (பாவம் பந்தா அல்லது நானா என்று தெரியவில்லை.) அதுதான் முதன் முதலாக உறவினர் அல்லாத ஒருவன் எனக்குக் கொடுத்த பிரமோஷன். அண்ணன் பட்டம் பறிபோனது. வயதாகிவிட்டதோ என்னும் வருத்தமும் பிரமோஷனால் சந்தோஷமும் ஒருங்கே வந்தது.
இந்து மதத்தில் சமயச் சடங்குகள் செய்யும் பொழுது ஆண்களை் மேலாடை அணியக்கூடாது என்று சொல்வது ஏன்?
$ சடங்கை செய்பவரைப் பற்றிய நிறைய விவரங்கள் கேளாமல் தெரியவரும்.
#மேலாடை அடக்கத்துக்கு அறிகுறி அல்ல. மேன்மை அல்லது கம்பீரத்தின் அடையாளம். பெரியவர்கள் எதிர்ப்பட்டால் "மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்வது" பவ்யம்.
தெய்வ வழிபாட்டு வகையான சடங்குகள் வேட்டிமேல் துண்டு / அங்கவஸ்திரம் தரித்தபடி செய்வது வழக்கம்.
அபர காரியங்களை ஒரே ஆடை அணிந்து செய்தல் வழக்காறு.
எல்லாம் பழக்க வழக்கம் தான். காரண காரியமாகத் தெரியவில்லை.
ஒரு மாதத்திற்கு இந்திய பிரதமராக டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக நரேந்திர மோடி இடம் மாறினால் எப்படி இருக்கும்?
$ ஒரு மாதத்தில் செய்யக்கூடிய மாறுதல்கள் சொற்ப மாறுதல்களையே தரக்கூடும். இல்லையானால் துக்ளக் ராஜ்யம் பற்றி சொல்வார்களே அந்த மாதிரி ஆகலாம்.
# ட்ரம்ப் குறித்து மீடியாவில் அதிகமாக எதிர்மறை உணர்வுகள் பரப்பப் பட்டாலும் " அமெரிக்கா முதலில்" எனும் அவரது முரட்டுப் பிடிவாதம் மக்களால் விரும்பப் படுவதாகச் சொல்கிறார்கள்.
மோடி ட்ரம்ப் இடம் மாறினால் இரண்டு நாடுகளிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம்.
& அமெரிக்காவில் $50, $100 இரண்டும் மதிப்பிழப்பு செய்யப்பட்டு, $ 200 புதிதாக வெளியிடப்படும்.
இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில், " திரம்பே திரும்பிப்போ " என்று கோஷங்கள் இட்டு, கருப்பு பலூன்களைக் காற்றில் விடுவார்கள்.
அவ்வளவுதான்!
===========================================
பெ வ கு இந்த வாரம் கிடையாது. அடுத்த வாரமாவது வருமா என்று பார்ப்போம்!
===========================================
எல்லோருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துகள்!
===========================================
இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், மற்றும் தொடரும் எல்லோருக்கும்
பதிலளிநீக்குகேள்வி கேட்டது யாருன்னு பார்த்தா ஹா ஹா ஹா
தமன்னா ஒல்லியூர், அனுஷ் குண்டூரா.....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்ஜெக்ஷன்!!!!!
கீதா
இனிய காலை வணக்கம் கீதா.
நீக்கு//அனுஷ் குண்டூரா.....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்ஜெக்ஷன்!!!!!//
என் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். என் ராஜினாமா கடிதத்தை வியாழன் செக்ஷனை கவனிக்கும் ஆ'சிரி'யருக்கு அனுப்பி இருக்கிறேன்.
ஆ!! ஸ்ரீராம் நோ நோ...இதுவும் அப்ஜெக்ஷன்!! ராஜினாமா கடிதமா. போர்ட் மெம்பர்ஸ் நாங்க யாரும் இதை அக்செப்ட் பண்ண மாட்டோம் ஸோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது!!!!!!!!!!!!
நீக்குகீதா
இனிய காலை வணக்கம்.
நீக்கு// என் ராஜினாமா கடிதத்தை வியாழன் செக்ஷனை கவனிக்கும் ஆ'சிரி'யருக்கு அனுப்பி இருக்கிறேன்.// எங்கள் பிளாகிலும் ஒரு ராகுல் இருக்கிறார் போலிருக்கு!
நீக்குஅட? ஶ்ரீராம் ராகுலின் விசிறியா? அப்படியே அவரோட பாணியைக் கடைப்பிடிக்கிறாரே! :))))
நீக்குஓ இது ராகுல் விவகாரமா!!! ஹா ஹா ஹா இந்தச் சின்ன அறிவுக்கு அது உரைக்கவில்லை பாருங்க...ஹிஹிஹி
நீக்குகீதா
அனுஷ்கா குண்டூர் நு சொன்னதுக்கு அரம வின் தலைவர் ஸ்ரீராம் அப்ஜெக்ஷன் வைக்கவில்லை என்றால் அரம வின் செக்ரட்டரி பானுக்காவின் சார்பில் இந்த அசைன்ட்மென்ட் அவருக்குக் கொடுக்கப்படுகிறது..இனி எந்தக் கோயில் சென்றாலும் பிள்ளையார், முருகன், கருடர், ஆஞ்சு எல்லாரும் எந்தப் பக்கத்தில் அந்தக் கோயிலில் என்று பார்த்து வர வேண்டும் என்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
நல்ல உடற்பயிற்சி!
நீக்குஎல்லோருக்கும் இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துகள். நம் நாடு மேலும் மேலும் வளர்ந்து வல்லரது என்பதை விட எதிர்மறை செயல்கள் யாவும் மறைந்து தீவிரவாதம் போர், கற்பழிப்புகள் என்பதில்லாமல் அன்பரசாக ஆக வேண்டும் என்று வாழ்த்துவோம்....இந்தியாவின் குழந்தைகளாகிய நாமும் நம்மால் இயன்ற வரை அதை உறுதிப்படுத்துவோம்...
பதிலளிநீக்குகீதா
ஆஹா! வல்லரசு என்று சொன்னால் மென்மையாக ஒலிக்கிறதோ என்று நினைத்து வல்லரது ஆக்கிவிட்டீர்களா! நாடு வாழ்க, நாமும் வாழ்க!
நீக்குஹா ஹா ஹா கௌ அண்ணா அது டைப்பும் போது அப்படி ஆகிவிட்டது!!! அது கூட இப்படி ஒரு பொருள் பொதிந்து வந்துவிட்டதா!!!!!!
நீக்குகீதா
என்னாச்சு இன்று எபியில் யாரும் இன்னும் எழுந்திருக்கவில்லையா???
பதிலளிநீக்குகீதா
எந்திரிச்சோம், ஆனா கணினி பக்கம் வரவில்லை.
நீக்குஅதே, அதே! காலையிலிருந்து வேலை! இதோ இப்போவும் வெளியே கிளம்பிட்டே இருக்கேன்!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகுண்டூர், ஒல்லியூர்... ஹாஹாஹா
வாங்க பானுக்கா இன்று ஆசிரியர்கள் எல்லாரும் செம தூக்கம் போல!!!!! யாரையும் காணலை...பாருங்க நாமதான் சுறு சுறுப்பா வந்திருக்கோம்...
நீக்குஆசிரியர்க்ள் உதாரணமா இருக்க வேண்டாமோ?!!!!! ஹிஹிஹி
கீதா
காலை வணக்கம் பானு அக்கா.. வாங்க.. வாங்க...
நீக்குவந்தாச்சா ஸ்ரீராம்!?
நீக்குலேட்டு பெஞ்ச் மேல நில்லுங்க ஹா ஹா ஹா
கீதா
காலை வணக்கம்.
நீக்குஹலோ கௌ அண்ணா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பாஷை என்பதற்கு மொழி என்று தமிழ் இருக்கே!!!!!!
பதிலளிநீக்குஇம்பொசிஷன் போட்டாச்சு...பாஷை-மொழி என்று 10 முறை எழுத வேண்டுமாக்கும்!!!!!!!!!
கீதா
ஹூம் இதுக்குத்தான் தமிழ்ல டி வாங்கினவங்க, தமிழ் ப்ரொஃபசர் எல்லாம் வேண்டும்ன்றது....ஒரு கை கொடுப்பாங்க .கும்மி அடிக்க....தமிழ்ல டி வாங்கினவங்கதான் விடுமுறைல இருக்காங்கனா ப்ரொஃபசரும் ஆள் வரதில்ல அவ்வளவா...ஹூம்...
நீக்குகீதா
கன்னடக்காரர்களுக்கு மொழி என்றால் தெரியாதே! அதனால்தான் பாஷை வந்திருக்கு! சரோசாதேவி கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்!
நீக்குபானுக்காவின் இரு கேள்விகளும் சூப்பர்...
பதிலளிநீக்குவாட்ச் பற்றிய தகவல்கள் செம. புதியதாக அறிய முடிந்தது.
மாமா, அங்கிளுக்கான இரு பதில்களுமே மிகவும் ரசித்தேன்.
ஆமாம் ப்ரமோஷன் கிடைத்தாலும் கூடவே வயதாகிவிட்டதோ என்ற எண்ணமும்...
இப்போது என்னுடன் பணிபுரியும் பெண் சிறியவள் என் மகனையும் விடச் சிறியவள். அவள் என்னிடம் உங்களை எப்படி அழைக்கட்டும் என்றாள். நான் சொன்னேன் உங்களுக்கு எது விருப்பமோ அப்படி என்று. என்னை முதலில் அக்கா என்று சொல்லிப்பார்த்துவிட்டு....இல்லை அது சரி வரலை...உங்களை அம்மானு கூப்பிடவா? உங்களுக்கு அதில் ஒன்றும் மனசு சங்கடப்படாதே என்று..
அட! அம்மா! அழகு அப்படியே கூப்பிடுங்கள்னு சொல்லிவிட்டேன். அம்மா என்றாலே அன்புதானே!! என் மகனின் தோழர்கள், தோழிகள் எல்லோருமே என்னை அம்மா என்றுதான் அழைப்பார்கள். அதில் ஒரு மகிழ்ச்சி. எத்தனை பேருக்கு அம்மா நாம் என்று!!!!..
கீதா
ஆஹா! அற்புதம் சகோதரி!
நீக்குஹூம்! 19 வயதில் என்னைக் கல்யாணம் ஆனப்போவிருந்தே "அம்மா"வென்று அழைத்தவர்கள் அதிகம். ஆகவே இதை "அற்புதம்" எனச் சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :P :P :P :P
நீக்குகீதாக்கா ஹா ஹா ஹா ஹா...நான் இல்லைப்பா இந்த விளையாட்டுக்கு!!
நீக்குகீதா
ட்ரம்ப், மோடி மாறினால் என்ற பானுக்காவின் கேள்வியை மிகவும் ரசித்தேன். நல்ல கற்பனை. அதற்கான பதில்களையும்தான்..!!!
பதிலளிநீக்குமீதி மதியத்திற்கு மேல். இப்போதைய கோட்டா ஓவர்..
கீதா
நன்றி, மீண்டும் வருக!
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம்!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். துரைக்கு விடுமுறை ஏகாந்தமாகக் கழியும் என எண்ணுகிறேன்.
நீக்குஹிஹிஹி, கீழேயே ஏகாந்தன்! முன்னாடியே பார்க்கலை! இஃகி,இஃகி,இஃகி!
விடுமுறை எல்லாம் முடிந்து போயிற்று...
நீக்குStore Keeper என்பதால் ஒரு நாள் குறைவு...
உங்களுக்கும், எபி குழும ஆசிரியப் பெருமக்கள் மற்றும் நண்ப, நண்பிகள் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிதான மூவர்ண வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு’எல்லோருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்’ என்று இந்திய சுதந்திரதினத்துக்கு ஒரு நாள் முன்பு சொல்லிவிட்டீர்கள். சரிதான்.
ஆனால், எங்கள் ப்ளாகை இன்று வாசிக்க நேர்ந்த பாகிஸ்தானின் இம்ரான் கான், குதூகலம் அடைந்துவிட்டதாகக் கேள்வி. நீங்கள் ’அவர்களை’ இன்று -அவர்களது சுதந்திர தினத்தில்- வாழ்த்தியதாக ஒரு ரகசிய ஆனந்தம் அங்கே! என்னதான் இந்தியா இப்படி அநியாயமாகக் காஷ்மீரை கபளீகரம் செய்துவிட்டு குத்துக்கல் மாதிரி உட்கார்ந்திருந்தாலும், நம்மை வாழ்த்துவதற்கும் ‘சிலர்’ அங்கே இருக்கிறார்கள் போலிருக்கிறதே. இந்த எபி-க்காரர்கள் தமிழர்தானே ! - என்று இம்ரான் கான் ஐஎஸ்ஐ-இடம் லேசாக விஜாரித்ததாக தூரத்திலிருந்து வந்த செய்திகள் கூறுகின்றன..
நல்லவேளை ! கொடி படம் போட்டேன்! இல்லையேல் NIA வுக்கே இப்படி ஒரு சந்தேகம் வந்திருக்கும்!
நீக்குரசிக்க வைத்தன...
பதிலளிநீக்குகடைசி படம் ஸூப்பர் ஜி
நன்றி!
நீக்குகுண்டூர் சரி! ஒல்லியூர் எந்த மாநிலம்? அதென்ன இன்னிக்கு பெ வ குவை விட்டுட்டீங்க? கூடவே ஏதானும் மண்டையை உடைக்கிற கேள்விகளைக் கேட்டிருக்கக் கூடாதோ? நேத்திக்கு, முந்தாநாள் முகநூலில் கேட்டாப்போல்!
பதிலளிநீக்குஅங்கே கேட்டவைகள் தனி! அங்கே அது! இங்கே இது! ஒல்லியூர் ஒடிஷாவில் உள்ளது. ஒரியா பாஷையில் அதன் பெயர் வேறு!
நீக்கு//கன்னட பாடையில் கூறினார். // ஹா ஹா ஹா! உங்களுக்கு தமிழின் மீது பற்று இருக்கலாம், அதற்காக கன்னடத்தை பாடையில் ஏற்றுவது அநியாயம்.
பதிலளிநீக்குஹா ஹா !
நீக்குஒரு சின்ன வாட்சுக்குள் இத்தனை விஷயங்களா? பொறுமையாக படத்தோடு விளக்கியதற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குமோடி,டிரம்ப் இடம் மாறினால்..? கேள்விக்கு எல்லா பதில்களையும் மிகவும் ரசித்தேன். குறிப்பாக '&' அவர்களின் பதில், சான்ஸே இல்ல... ஹா ஹா ஹா!
நன்றி! நன்றி!
நீக்குதிரிசடையையும், சொல் வேந்தனையும் கண்டுபிடிக்க பிரயத்தனப்பட்டு...
பதிலளிநீக்குஅமெரிக்காவில் ஆளும் கட்சிக்காரர்களே தீர்மானங்களின் மீது தங்கள்
வாக்கை (வோட்) மாற்றிப் போடலாம். அந்தளவுக்கான சுதந்திரத்தை எல்லாம் நம்மவர்கள் தாங்கமாட்டார்கள். அதனால் தான் 5 வருஷங்களுக்கு ஹாயாக இருக்கிறார்கள்.
நகைச்சுவையை ரசிகாமல் 'எம்சிஆர் காலத்தில் எம்சிஆர் வேட்டி இல்லையே' என்று யாராவது கலகலத்தாலும் ஆச்சரியமில்லை. அடுத்து அது பொருட் குற்றமா, சொல் குற்றமா என்ற ஆராய்ச்சி வரை வேறு போகும்.
அங்கிளை விட தாத்தா அழைப்பில் பெருமை ஜாஸ்தி. தமிழகத்தில்
வரலாறு காணாத அதிசயம் ஒன்று நடக்கிறது. வயதானவர்களைப் பார்த்தால் போதும் ஐயா என்ற அழைப்பு. புல்லரிக்கிறது.
உண்மைதான். ஆனால், சில சமயங்களில் வயதானவர்களை, 'யோவ் பெருசு' என்று கூப்பிட்டு நோக அடிப்பார்கள்!
நீக்குஅந்த பெருசு எல்லாம் சினிமாவோட சரி! அவர்கள் தான் இப்படியெல்லாம் அறிமுகப்படுத்துகிறார்கள்! யார் சொல்லியும் நான் கேள்விப்பட்டதே இல்லை!
நீக்குஆமாம்,அதுவும் ரயிலில், பேருந்துகளில் நிறையக் கேட்கலாம். சமயங்களில் பேருந்து நடத்துநரே சொல்லுவார்.
நீக்குகைக்கடிகாரம் பற்றிய விளக்கம் + படம் சூப்பர்...
பதிலளிநீக்குமற்ற கேள்வி பதில்களும் அருமை...
கடைசி கேள்வி பதில் - அரசியல்... ஐயோ...
நான் இரு ஊர்காரிகளை சந்தித்து விட்டு வருகிறேன்...
நன்றி!
நீக்குஒல்லியூர்காரிக்கு :-
பதிலளிநீக்குஆசை என்னும் தூண்டில் முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்...
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்...!
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்...
நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது மயக்கம்...!
இது மாயவலையல்லவா...? புது மோகநிலையல்லவா...?
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்...
விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே...
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே...
அடி இதுபோல் மழை காலம் என் வாழ்வில் வருமா...?
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே...
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே...
(படம் : அயன்)
அடடா, அடடா! அற்புதம்! நெல்லைத்தமிழரே நீரும் இங்கே வாரும் அய்யா!
நீக்குகவிதையை ரசிக்கும் மனநிலை பொதுவா எனக்குக் கிடையாது. ஆனால் அயன் படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஏன்னு கேட்கப்படாது.
நீக்குஇதையெல்லாமா கேட்டுத் தெரிஞ்சுக்குவாங்க!....
நீக்குரொம்பவும் அப்பாவியா இருக்கீகளே!...
அது! ஹா ஹா ஹா ! ஒல்லியூர்தான் காரணம்!
நீக்குகுண்டூர்காரிக்கு :-
பதிலளிநீக்குநெஞ்சின் அறைகள் திறக்கிறேன் - உன்னை அதிலே நிறைக்கிறேன்...
என்னை முழுதாய் மறக்கிறேன் - அன்பே உன் காதலாலே...
உன்னை எண்ணியே வசிக்கிறேன் - என்னை அதனால் ரசிக்கிறேன்...
தன்னந் தனியே மிதக்கிறேன் - அன்பே உன் செய்கையாலே...
தலை கால்தான் புரியாமல் என்னை தவிக்கவைத்தாள் -
என்னை தவிக்கவைத்தாள்...
தலைக்கனமாய் நடந்தேதான் என்னை ஏதேதோ செய்துவிட்டாள்...
She Stole My Heart... She Stole My Heart... She Stole My Heart...
She Stole My Little Little Heart...!
(படம் : சிங்கம்)
நல்லா இருக்கு. ஆனாலும் அந்த குண்டு மேனியை ஒரே நெஞ்சத்தில் நிறைக்க இயலுமா என்னும் ஐயம் வருகின்றது.
நீக்கு// சொல்பவர் யார் என்று பார்க்காதீர்கள்; சொல்லப்படுவது என்ன என்பதைப் பாருங்கள்.
பதிலளிநீக்குஅதுபோல,
கேட்பவர் யார் என்று பார்க்காதீர்கள்; கேட்கப்படுவது என்ன என்று பாருங்கள்! //
நான் இப்படிக்கா போறேன் :-
பாடல் சொல்பவர் யார் என்று பார்க்காதீர்கள்... பாடலில் சொல்லப்படுவது என்ன என்பதைப் பாருங்கள்...!
அதுபோல,
இந்தப்பாடலை கேட்பவர் யார் என்று பார்க்காதீர்கள்... பாடலின் ரசனையால் கேட்கப்படுவது ஏன் என்று பாருங்கள்...!
காஞ்சிபுரம் கன்னிகாபுரத்தைச் சேர்ந்த, தங்க மீன்கள் மற்றும் சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது பெற்ற, கவிஞர் மறைந்த தினம் இன்று... அவர் :-
நா.முத்துக்குமார்
1500 பாடல்களுக்கு மேல் எழுதியவற்றில், இரு பாடல்கள் தான் மேலே...!
நன்றி...
தகவலுக்கு நன்றி!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.
குண்டூர், ஒல்லியூர் எல்லாம் புதன் கேள்விகளுக்கும் வந்து விட்டார்கள் போலிருக்கிறது.. பாக்கி மூவரும் நல்ல கேள்விகளை தொடுத்து நல்ல பதில்களையும் பெற்றிருக்கிறார்கள். அனைத்தையுமே ரசித்தேன்.
சகோதரி பானுமதி அவர்களின் கேள்விகளும் அபாரம். முதல் வாட்ச் கேள்விக்கு அக்கு வேறு,ஆணி வேறாக அலசி பதில் சொல்லியிருப்பது பயனுள்ளதாக இருக்கிறது.
மற்ற கேள்வி பதில்களையும் ரசித்தேன்.
தாத்தா, அங்கிள், அக்கா, அண்ணா என்று பிறர் அழைத்தால்தான் நமக்கு வயதாவதை நாம் உணர முடியும்.. தங்களுக்கும் நாளைய சுதந்திர தின வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி!
நீக்குடி.டி. இந்தக் கவிஞர்களிடம் இதயம் மாட்டிக் கொண்டு ஏன் இப்படி தவியாய் தவிக்கிறது?.. மனம் திருடும் மன்மதனிகள் இல்லாததினாலா?..
பதிலளிநீக்குஎனக்கும் அந்த சந்தேகம் உண்டு.
நீக்கு"எல்லாமே பணத்திற்காக...!" என்கிற அற்ப சந்தேக பதில் எனக்கு வரவில்லை... அதை சொல்ல மனமும் வரவில்லை... ஒரு தெளிவு... அது என்னவென்றால் :-
நீக்கு“கண்களின் தண்டனை காட்சி வழி... காட்சியின் தண்டனை காதல் வழி... காதலின் தண்டனை கடவுள் வழி..."
இந்த இடத்தில் கவிஞர் கண்ணதாசன் ஏனோ தயங்கி நின்றார்... இதற்கு அடுத்த வரி...? என்ன எழுதுவது...? சிந்தித்தார் கவிஞர்... சிறப்பான வார்த்தைகள் ஏதும் சிக்கவில்லை...! இசைக்கு ஏற்ப வரிகளை மாற்றுவது இந்தக் காலம்... ஆனால், அன்று இத்தனை சிரமங்களா...?
வசந்த மாளிகை - கவிஞரின் பாடல் வரிகளில், கே.வி.மகாதேவன் இசையில் உருவான சூப்பர்ஹிட் படம்... கே.வி. மகாதேவனைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், கண்டிப்பாக “புகழேந்தி” என்பவரையும் அறிவர்...
மேலே உள்ள பாடலில், மூன்று வரிகள் முழுமை பெற்று விட்டன... நான்காவது வரி...?
கண்ணதாசன் என்னென்னவோ யோசிக்கிறார்... எதை எதையோ சொல்லிப் பார்க்கிறார்... ம்ஹூம்... திரும்ப திரும்ப சொன்னாலும், அவருக்கும் திருப்தி இல்லை, அவரைச் சுற்றி இருந்த மற்றவர்களுக்கும் நிறைவான திருப்தி, ஏனோ வரவே இல்லை...
கண்களை மூடிக் கொண்டு கண்ணதாசன் அமர்ந்திருக்க , அப்போது புகழேந்தி, மெல்ல அழைக்கிறார் : “கவிஞரே... இந்த சரணத்தை இப்படி முடிக்கலாமா?”
"கடவுளை தண்டிக்க என்ன வழி...?" - இப்படி சொல்லி விட்டு புகழேந்தி தயங்கி தயங்கி சொன்னாராம் : "இது நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் கவிஞரே."
அசையாமல் ஒரு கணம் சிந்தித்த கண்ணதாசன், அப்படியே ஓடி வந்து கட்டித் தழுவிக்கொண்டார் , புகழேந்தியை...!
ஆம். புகழேந்தி சொன்ன அந்த வரிதான் பொருத்தமான வரியாக இருந்தது அந்தப் பாடலுக்கு !
"கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளை தண்டிக்க என்ன வழி?"
அப்புறம் என்ன...? பாடல்களும் ஹிட்... “வசந்த மாளிகை” படமும் ஹிட்...!
யோசித்து பாருங்கள்... கண்ணதாசன் நினைத்திருந்தால், புகழேந்தி சொன்ன வரியை பொருத்தமில்லாதது என்று புறம் தள்ளி இருக்கலாம்... ஆனால் ஈகோ எதுவும் இன்றி, நல்ல விஷயங்கள் எங்கிருந்து வந்தாலும் தெளிந்த நினைவோடும், திறந்த நெஞ்சோடும் ஏற்றுக் கொண்ட அந்தப் பெருந்தன்மை... அது சிலருக்கே மட்டும் வாய்க்கும்...
கடவுளுக்கு பல மன்மதனிகள் இருக்கும் போது...
மதனிகளே இல்லாத நா.முத்துக்குமார் அவர்களின் மறைவிற்கு...?
"கடவுளை தண்டிக்க என்ன வழி...?"
தொடரும்...
“தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே, வேறெங்கே...? தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சம் நிறைந்த துண்டோ அங்கே!”
இதைப்பற்றி நேரம் கிடைப்பின் தொடர்கிறேன் ஐயா...
நா.முத்துக்குமார் ரசிக்கத்தகுந்த திரைவரிகளை எழுதியவர். வேகவேகமாக உழைத்து ஓய்வின்றி உடம்பைப் பாழ்படுத்திக்கொண்ட நல்ல கவிஞர். சுஜாதாவின் கண்டுபிடிப்பு என்பது பலருக்குத் தெரிந்திருக்கும்தான்.
நீக்குவாசித்து மகிழ்ந்தேன்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபள்ளியில் கூட இத்தனை விவரமாகக் கிடைத்ததில்லை..
பதிலளிநீக்குகடிகாரத்தின் நுட்பங்களைப் படத்தோடு போட்டதற்கு மகிழ்ச்சி.. நன்றி...
நன்றி!
நீக்கு//சமயச் சடங்குகள் செய்யும் பொழுது ஆண்களை் மேலாடை அணியக்கூடாது // - இந்தக் கேள்விக்கான பதில் சரியில்லை.
பதிலளிநீக்குமேலாடை அணிவது கம்பீரம், மற்றும் மேலாதிக்க மனப்பான்மை. பெரியவர்களைப் பார்க்கச் செல்லும்போது மேலாடை அணியக்கூடாது என்பது நம் பாரம்பர்யம். அதனால்தான் ஆலயத்தில் மேலாடை இன்றிச் செல்பவர்கள் மட்டும் இறைவன் சன்னிதியின் வெகு அருகில் செல்ல முடியும்.
சமயச் சடங்குகளின்போது, ஹோமம் என்பது இறைவனுக்கு அல்லது மறைந்தவர்களுக்குச் செய்யும் ஆஹூதி. அதனால் செய்பவர்கள் மேலாடை அணியக்கூடாது. நாளை பூநூல் மாற்றும் போது, அதன் சார்ந்த சடங்குகளின்போதுகூட மேலாடை அணியும் வழக்கம் இல்லை.
இதன் திரிந்த வெளிப்பாடுதான் பண்டைக் காலத்தில் (40-50 ஆண்டுகளுக்கு முன்பு வரை) கிராமத்து பெரிய தனக்காரரின் தெருவில் செல்லும்போது தலைப்பாகையைக் கழட்டி, இடுப்பில் கட்டிக்கொண்டு செல்வது. அப்புறம் சில சமூகத்தில் பெண்களின் மேலாடை கூடாது என்று சொன்னது.
ஆணாதிக்க அந்த நாட்கள்.
நீக்குகௌ அண்ணே அந்தக் கற்பனையாக எபி யில் கனவுக்கன்னிகளாக உலாவி வரும் பெயர்களைக் கொண்டே ஊர்ப்பெயரையும் போட்டு கேள்வுகளும் கேட்டு பதில்களும் கொடுத்தது செம . ரசித்தேன்.
பதிலளிநீக்குஅதே போல மோடி அமெரிக்கா அதிபர் ஆனால்ன்றதுக்கான பதில் சிரிச்சு முடில...குறிப்பா அந்த டாலர் மதிப்பு இழந்து...ஹா ஹா ஹா...
ஓ ட்ரம் இங்க அதிபரா வந்தா? குழம்பிடுவாரே ஓ அப்ப அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணத்தான் அவர் பி ஏ அங்க போயிருக்காங்க போல!!! அவரோடு காபி எல்லாம் குடிச்சாங்களாமே!! பிஏவின் செக் காத்துவாக்குல செய்தி எல்லாம் சொல்லிட்டுப் போனாங்க...
கீதா
இரசிப்புக்கு நன்றி!
நீக்குவாட்ச் பற்றி இன்னுமொரு கேள்வி: சில கை கடிகாரங்களில் வாட்டர் ப்ரூஃப் என்றும், சில கை கடிகாரங்களில் வாட்டர் ரெசிஸ்டெண்ட் என்றும் குறிப்பிடப்படுகின்றதே? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
பதிலளிநீக்குபதிலளிப்போம்.
நீக்குகேளவியும் பதிகளும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநேற்று ஊரில் இல்லை. அதனால் இன்று தான் படித்தேன்.
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் !
1.வருடாவருடம் சுதந்திர தினம், குடியரசு தினம் கொண்டாடுவது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதிலளிநீக்கு2.நீங்கள் சிறு குழந்தையாக இருக்கையில் சுதந்திர, குடியரசு தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருப்பீங்க! இப்போதும்
அவ்வாறு உண்டா? உங்கள் குடியிருப்பு வளாகம் அல்லது உங்கள் தெருவில் அனைவரும் இணைந்து சுதந்திர தினம் கொண்டாடுவது
உண்டா?
4.கொடி ஏற்றி, இறக்குவதில் உள்ள சட்டதிட்டங்கள் பற்றி அறிவீர்களா?
5.ரக்ஷாபந்தன் பற்றி உங்கள் கருத்து என்ன?
அதை வட மாநிலங்களில் மட்டுமே கொண்டாடுகின்றனர். இங்கே ஏன் கொண்டாடுவது இல்லை? உங்களுக்கு இதைப் பற்றி எப்போது தெரியும்?
இந்தக் கேள்வியில் முதல் கேள்விக்கு மட்டும் பதிலளித்துவிட்டு மற்றவற்றுக்குப் பதில் அளிக்காமல் இருந்துடாதீங்க! :)))) அப்புறமா வரேன்.
முன்னெல்லாம் அதாவது சில, பல வருடங்கள் முன்னர் சென்னைக் கல்லூரி மாணவ, மாணவிகள் ரக்ஷாபந்தனைக் கொண்டாடிப் பார்த்திருக்கேன். இப்போது அப்படி இல்லை? ஏன்? பார்க்கப் போனால் வட இந்திய உணவு, உடைனு இப்போத்தான் தமிழ்நாட்டில் அதிகம் காண முடிகிறது! அப்படியும் ஏன் இல்லை?
தமிழ்நாட்டில் சுதந்திர, குடியரசு தினங்களில் சமபந்தி போஜனம் என அரசியல் தலைவர்களும் ஆட்சி புரியும் அமைச்சர்களும் நடத்துகின்றனர். ஆட்சியில் இருக்கும் அரசு அறநிலையத்துறை சார்பில் நடத்துகிறது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? எல்லா ஓட்டல்களிலும் எல்லாப் பொதுமக்களும் கலந்து தான் உணவு உண்கின்றனர். அதே போல் அடுக்கு மாடிக் குடியிருப்புக்களில் மக்கள் கலந்து தான் வாழ்கின்றனர். இத்தகைய சூழலில் சமபந்தி போஜனமோ, சமத்துவபுரமோ தேவையா? அதிலும் இதிலும் உள்ள வேறுபாடு என்ன?
முதல் கேள்விக்கு மட்டும் பதிலளித்துவிட்டு
கேள்விகள் கேட்டவர்களின் பெயர்கள் - நல்ல கற்பனை!
பதிலளிநீக்குகேள்விகள் சில வாரங்களில் மட்டும் நிறைய வருகிறது... இல்லாத வாரங்களில் இப்படி கற்பனை மாந்தர்களின் கேள்விகள்!