வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

வெள்ளி வீடியோ : மலர் அள்ளிமுடிப்பான்... கன்னம் கிள்ளி எடுப்பான்

1971இல் வெளிவந்த திரைப்படம்.  ஆயி மிலன் கீ பேலா என்கிற ஹிந்திப் படத்தின் தழுவல்.ஹிந்தியில் ராஜேந்திரகுமார், தர்மேந்திரா, சாயிரா பானு நடித்திருந்தார்கள்.  தர்மேந்திரா வில்லனாக நடித்திருந்த ஒரே படமாம்!  அசோகன் நடித்திருந்த பாத்திரத்தில் ஹிந்தியில் நடித்திருப்பது நஸிர் ஹுசைன் - பின்னால் யாதோங்கிபாராத் ஹம் கிஸிஸே கம் நஹீன், கேரவன் போன்ற படங்களின் தயாரிப்பில் பிரபலமானவர்.

ப. நீலகண்டன் இயக்கத்தில் எம் ஜி ஆர், ஜெயலலிதா(இரட்டை வேடம்) நடித்திருக்கும் திரைப்படத்திலிருந்து ஒருபாடல்.

எனக்குஇந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் ரொம்பப் பிடிக்கும்.  முதலிடத்தில் இந்த "ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்" பாடல்.  இரண்டாவது "பாடினாள் ஒரு பாட்டு...  பால் நிலாவினில் நேற்று..."  இந்த இரண்டாவது பாடலை எழுதியிருப்பவர் வாலி.கண்ணதாசன் பாடலுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.  எம் ஜி ஆருக்கும் கண்ணதாசனுக்கும் ஊடல் வராத காலம் போலும்.   டி எம் எஸ் பாடியிருக்கும் இந்தப் பாடலை பி சுசீலாவும் பாடியிருக்கிறார்.  எனக்கு டி எம் எஸ் பாடல்தான் அதிகம் பிடிக்கும்.பணக்காரக் கதாநாயகி வந்து மேலே விழுந்து காதலைச் சொல்ல, வாத்தியார் நீதி நேர்மை எருமை..  - மன்னிக்கவும் அதிரா திரும்பி வந்து விட்டதால் அவர் சொல்வதுபோல சொல்லி விட்டேன் - நீதி நேர்மை நியாயம் மற்றும் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு உணர்ச்சி வசப்படும் நாயகிக்கு உண்மை நிலையைச் சொல்லி அவள் காதலை மறுக்கிறார்.

அப்புறம் அவர் அம்மாவுக்கு ஓகே என்றதும் அவரும் காதலிக்க ஆரம்பித்து விடுவார்.அந்தக் காலத்தில் படம் பார்த்தபோது எம் ஜி ஆரின் உடையும், கூலிங் க்ளாஸும், தோளில் மாட்டிக் கொண்டிருக்கும் பையும் கவர்ந்தன.  பாடலில் வரும் அந்தப் பாலம் நிறைய தமிழ்ப்பாடல்களில் இடம்பெற்றுள்ளது.  எந்தெந்த பாடல்களில் என்று நண்பர்கள் யோசிக்கலாம்!இந்தப் பாடலில் டி எம் எஸ்ஸின் குரல் மிகவும் பிடிக்கும்.

ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் 
உன் அழகுக்கு ஒருவன் துணை வருவான் 
ஓஹோஹோஹோஹோஹோ  அது நானல்ல அது நானல்ல 

உன் பாதத்தில் தலைவைத்துப் படுத்திருப்பான் -கண் 
பாவத்தில் காவியம் படைத்திருப்பான் 
உன்னைச் சிரிக்க வைப்பான் - கொஞ்சம் 
தவிக்க வைப்பான் 
பின்பு  துடிக்க வைப்பான் நெஞ்சம் சுகமாக... 
ஓஹோஹோஹோஹோஹோ  அது நானல்ல அது நானல்ல  

நல் ஆரம்ப நேரத்தை வரவு வைப்பான் - தன் 
அனுபவ ஞானத்தைச் செலவழிப்பான் 
மலர் அள்ளிமுடிப்பான் கன்னம் கிள்ளி எடுப்பான்  
அள்ளிமுடிப்பான் கன்னம் கிள்ளி எடுப்பான்  
இன்னும் சொல்லிக் கொடுப்பான் இன்பம் சமமாக 
ஓஹோஹோஹோஹோஹோ  அது நானல்ல அது நானல்ல  ஸ்ரீஜெயந்தி கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணன் பாடலை எத்தனை பேர் எதிர்பார்த்தீர்கள்?!!

60 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

  நான் கோகுலாஷ்டமி பாடலை எல்லாம் எதிர்பார்க்கவில்லை ஸ்ரீராம் ...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லாடன் மலையில் இருக்கிறேன்...அப்புறம் கேனடா, ஸ்காட்லான்ட் எல்லாம் போய் பார்த்துவிட்டு வர வேண்டும். இடையில் சாப்பிட வாங்க இடத்தில் ஏதேனும் இருக்கா என்றும் பார்க்க வேண்டும். ஈடையில் கோட்டைபுரத்து வீடு இருக்கிறது!!! அப்புறம் மூஸாலியை வேறு தாண்டிப் போக வேண்டும் ஹா ஹா..போகும் போது பாட்டும் கேட்டுக் கொண்டு போகிறேன்...

   கீதா

   நீக்கு
  2. இனிய காலை வணக்கம் கீதா.

   நான் இன்று எழுந்ததே லேட்.. இப்பதான் வர்றேன்... நீங்கள் சொல்லி இருக்கும் இடமெல்லாம் நானும் வரணும்...

   நீக்கு
  3. மூஸாலி நமக்கெல்லாம் நல்ல புத்தியை கொடுக்கட்டும்.

   நீக்கு
  4. ஆஆஆஆஆஆ நைட் ஜம்ப்பாக நினைச்சு. அது என்னமோ தெரியல்ல சுற்றுலாவின் போது எதுவும் தெரியாது, வீட்டுக்கு வந்ததும் ஒரே களைப்பாகவே இருக்கு.. ஸ்கூலும் தொடங்கி விட்டதால்.. ரயேட்டோ ரயேட்.. அதனால ஜாமத்தில் ஜம்ப்ப முடியாமல் போச்ச்ச்ச்:))..

   கீதா... மூஸாலி கோயிலுக்குள் முதலில் கில்லர்ஜியைத்தான் அனுப்புவதாக முடிவெடுத்தாச்சு:)). அவர் போய்ப்பார்த்து அங்கு ஏசி, தண்ணி, சுத்தம், லைட் எல்லாம் இருக்கிறதா எனச் செக் பண்ணி வந்து ஜொன்னபின்பு நாங்கள் முறுக்கு , பருத்தித்துறை வடை, பக்கோடா, மிக்ஸர் எல்லாம் செய்து கொண்டு போவோம்:)) அதுவரை வெயிட் பண்ணுங்கோ:)..

   நீக்கு
  5. நல்லவேளை..
   நம்மை யாரும் தேடவில்லை!...

   நீக்கு
  6. நான் தேடினேன், துரை. அதன் பின்னரே உங்கள்பதிவு வெளியாகி இருப்பதைக் கவனித்தேன்.

   நீக்கு
 2. நல்லபாட்டுகள் ஜி
  நண்பர் திரு.எம்.எஸ்.வி.அவர்களின் இந்த புகைப்படம் இன்றுதான் பார்க்கிறேன்

  இந்தப்படம் திரு.நவ்ஷாத் அவர்களிடம் வேலை செய்தபோது எடுத்த படமாக இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா... புதிய தகவல். மேலும் அவர் நவ்ஷாத்திடம் வேலை பார்த்தாரா என்ன?

   நீக்கு
  2. திரு.நவ்ஷாத் அவர்கள் எம்.எஸ்வீயின் குருநாதர்

   நீக்கு
  3. மானசீக குருவாயிருக்கலாம். அல்லது அபிமான இசை அமைப்பாளராய் இருக்கலாம். கேம்ஸ் வி எஸ் எம் சுப்பையா நாயுடு அவர்களிடமும், சி ஆர் சுப்புராமன் அவர்களிடமும்தான் பணிபுரிந்ததாய் விக்கி சொல்கிறது!

   நீக்கு
  4. சுப்பையா நாயுடுவைத்தான் எம் எஸ் வி அவர்கள் குருநாதராக்க் கருதியிருக்க முடியும். சுப்பையா அவர்களின் மறைவுக்குப்பின் அவருடைய மனைவியை கடைசி காலத்தில் தான் பார்த்துக்கொண்டு இறந்த பிறகு கொள்ளி வைத்தார் என்று படித்த ஞாபகம்.

   நீக்கு
  5. நவ்ஷாத் தனது குருநாதர் என்று எம்எஸ்வீ பலமுறை என்னிடம் சொல்லி கேட்டு இருக்ஙிறேன். (அதாவது நான் தொலைக்காட்சி பெட்டி முன்பு அமர்ந்திருக்கும்போது)

   நீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் காலை வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் வேண்டி ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

  ஆமாம். இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா ஆயிற்றே. கிருஷ்ணனுக்கு பதிலாக ராமச்சந்திரன் பட பாடலா? ஹா. ஹா. ஹா. பாடலை கேட்டு விட்டு வருகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கமலா அக்கா...

   பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   கிருஷ்ணனுக்கு பதிலாக ராமச்சந்திரன்... ஹா.. ஹா... ஹா...

   ஆனாலும் ஒரு பொருத்தம் உண்டு!

   படத்தில் எம் ஜி ஆர் பெயர் கண்ணன். ஜெயலலிதா பெயர் ராதா!

   நீக்கு
 4. கண்ணன் இருக்கிறானே இந்தப்பாடலில் .எட்டிப் பிடிப்பதும்
  கட்டி அணைப்பதும் கண்ணனே.
  அன்பின் ஸ்ரீராம், கீதா ரங்கன், கீதாமா, எல்லோருக்கும்
  கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.
  இனிய நாளுக்கான வாழ்த்துகள்.

  ஆயி மிலன் கி பேலா பாடல்களும் நன்றாக இருக்கும்.
  இந்தப் பாடல் அருமையாக இருக்கிறது. நல்ல ஜோடி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா... காலை வணக்கம். ஆமாம்.. இதில் கண்ணனின் லீலைகள் சொல்லப்படுகின்றனவே... ஹிஹிஹி...

   நீக்கு
 5. பாடினாள் ஒரு பாட்டு மிகப் பிடிக்கும். முத்துராமனும்
  இருப்பார் இல்லையா.அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். அதுவும் நல்ல பாடல்மா... பிபி ஸ்ரீனிவாஸ் டி எம் எஸ் காம்பினேஷனில்!

   நீக்கு
 6. Its me! Its me..! நான்.. நான் என்று தன்னைப்பற்றியே பீற்றிக்கொண்டு அலையும் மனிதர்களைக்கொண்ட காலகட்டத்தில்.. ‘அது நானல்ல!’ என்ற் ஒருவன் சொல்வதாக அமைந்த பழைய பாடலைக் கேட்பது ரஸமான விஷயம்தான்! டி எம் எஸ் குரலில் நன்றாக இருக்கிறது. ஏன் இந்த திடீர் எம்ஜிஆர் பக்தி அல்லது டிஎம்எஸ் ரசனை?

  ஜோல்னாப்பை எம்ஜிஆர் ! தொப்பிக்கு பதிலாக பையை மாட்டிவிட்டுப் பழிவாங்கியிருப்பாரோ டைரக்டர் நீலகண்டன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏகாந்தன் ஸார்...எம் ஜி ஆர் சிவாஜி என்று நான் பார்ப்பதில்லை. பாடல்கள்தான். இந்தப் பாடல் நான் மிகவும் ரசிக்கும் பாடல். நீங்கள் சொல்வது போல அது நானல்ல அது நானல்ல வைகள்தான் முதல் கவர்ச்சி.

   நீக்கு
 7. அனைவருக்கும் நல்வரவும் வாழ்த்துகளும், வணக்கமும் பிரார்த்தனைகளும். இன்று துரையின் பதிவு வந்திருக்கு போல. அனைவருக்கும் கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள். ஸ்ரீராமின் பிரச்னைகள் அனைத்தையும் ஸ்ரீகிருஷ்ணன் தீர்த்து வைக்க வேண்டும். பிரச்னைகள் குறையப் பிரார்த்தனைகள். சிரிக்க மறந்த ஸ்ரீராம் சிரிக்க ஆரம்பிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் முன்னாலேயே சிரிப்பைக்குறைத்து விட்டேன் என்று சமீபத்தில் உணர்ந்தேன்!

   பிரார்த்தனைகளும் வாழ்த்துகளுக்கும் நன்றி கீதா அக்கா.

   வருக... வருக..

   நீக்கு
 8. எம்ஜார் படமோ, பாடலோ கேட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இந்திப் பாடல், படம்பார்த்த நினைவு. இஃகி,இஃகி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனால் நான்ஹிந்திப் படத்தின் பாடல் ஒன்று கூட கேட்டதில்லை என்றே நினைக்கிறேன்!

   நீக்கு
 9. இது இந்திப்படத் தழுவல் என்பதை இப்போதுதான் அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்குமே இதற்கான விவரம் சேகரிக்கும்போதுதான் தெரியும் முனைவர் ஜம்புலிங்கம் ஸார். நன்றி.

   நீக்கு
 10. சிறு வயதில் பார்த்த படம்... அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும்...

  கண்ணன் எந்தன் காதலன்... கண்ணில் ஆடும் மாயவன்...
  என்னைச் சேர்ந்தவன் - கனவில் என்னைச் சேர்ந்தவன்...
  காதல் தேவன் கோவிலில் மாலை மாற்றினாள்...
  கண்ணிரண்டில் ஆசை என்னும் தீபம் ஏற்றினாள்...
  ராதை எந்தன் காதலி... தத்திச் செல்லும் வண்ணப் பைங்கிளி...
  ஊஞ்சல் ஆடினாள் - மனதில் ஊஞ்சல் ஆடினாள்...

  இது இன்றைக்கு ஓரளவு பொருத்தமாக இருக்குமோ...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொருத்தம்தான். ஆனால் பகிர்ந்திருக்கும் பாடல் நிறைய பேர் கேள்விப்படாமல் இருந்திருக்கிறார்கள் பாருங்கள். அவர்களுக்கு இந்தப் பாடலை அறிமுகப்படுத்தும்கடமை எனக்கு இருக்கிறதே... டி எம் எஸ்ஸின் குரல் இந்தப் பாடலில் சுமையாய் இருக்கும்- குறிப்பாய் சரணங்களில்.

   நீக்கு
  2. // குறிப்பாய் சரணங்களில்... //

   ஆம் உண்மை தான்...

   // அது நானல்ல அது நானல்ல // எனும் போது, வேறு ஒரு பாடல் மனதிற்குள் தோன்றுகிறது... ஆனால் அது என்ன என்று சொல்ல முடியவில்லை... இதை விட பழைய பாடல் அது... தொண்டையில் சிக்கியிருக்கும் முள் போல... வர மாட்டேங்கிது...!

   நீக்கு
 11. எதிர்ப்பார்த்ததில் சில :-

  கண்ணன் வந்தான்... அங்கே கண்ணன் வந்தான்... (படம் : ராமு)
  V.நாகையா அவர்களின் உருக்கமாக பாடும் பாங்கு...!

  கேட்டதும் கொடுப்பவனே... கிருஷ்ணா... கிருஷ்ணா... (படம் : தெய்வ மகன்) -
  சிவாஜி அவர்களின் அற்புதமான நடிப்பு... இங்கும் V.நாகையா அவர்கள் பாடல் முடிவில் உருகுவார்... மரணப்படுக்கையில் இருக்கும் பீஷ்மர் போல எனக்கு தோன்றும்...

  கண்ணன் வருவான்... கதை சொல்லுவான்... (படம் : பஞ்சவர்ணக் கிளி)
  இரண்டு முறை இந்தப்பாடல் வரும்... இது சந்தோசமான சூழ்நிலையில் வரும் பாட்டு : P.சுசிலா அம்மாவின் இனிமையான குரலும், காட்சியில் வரும் குழந்தையும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பஞ்சவர்ணக்கிளி பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

   இதே லிஸ்ட்டில் நிறைய பாடல்கள் சொல்லலாம் DD.

   கோகுலத்து கண்ணா கண்ணா
   கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
   யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே
   கண்ணனை நினைக்காத நாளில்லையே
   ஜெயிச்சுட்டே.. கண்ணா நீ ஜெயிச்சுட்டே
   ஆட்டுவித்தால் யாரொருவர்
   ப்ருந்தாவனத்துக்கு வருகின்றேன்
   கங்கையிலே ஓடமிலையோ..

   இப்படி நிறைய சொல்லலாம்!

   நீக்கு
  2. ஶ்ரீராம்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... இதில் ஒன்றை இன்று பகிர்ந்திருந்தால் என்னவாம்? சீடை உண்டான்னு வீட்டுல நினைவா கேட்பீங்க இல்லையா?

   நீக்கு
 12. /ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் // - வாழ்க்கைல முதல் முறை கேள்விப்படும் பாடல். காணொளியின் பாலம் பல முறை பல படங்களில் பார்த்த நினைவு இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேட்ட பாடலையேதான் கேட்கணுமா என்ன நெல்லை? இதுவும் நல்ல பாடல் கேட்டுப்பாருங்கள்.

   ராமன் எத்தனை ராமனடி (அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு)
   நவகிரகம் படத்தில் சிவகுமார்-லட்சுமி தோன்றும் பாடல்காட்சி இதிலெல்லாம் இந்தப் பாலம் பார்த்த நினைவு இருக்கிறது!

   நீக்கு
 13. நோஓஓஓஓஓஓஓஒ ஸ்ரீராம் நீங்க பாடினாள் ஒரு பாட்டு.. பால் நிலாவினில் நேற்று.. அதைத்தான் போடப்போறீங்க எனக் கீழே வந்தால் மற்றதைப் போட்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நீங்க போட்ட பாட்டை கேட்டதாகவும் நினைவு வருது இல்லை, ஒருவேளை ரேடியோவில் கேட்டிருந்தாலும் மனதில் பதியவில்லையோ என்னமோ.. பெரிதாக கவரவில்லை அது மனதை...

  பாடினாள்.. பாட்டுத்தான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடித்த பாடல்.... அது அப்படியே மனதை வருடும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பாட்டு உங்கள் மனதை வருடும். எனக்கு அந்தப் பாட்டோடு இந்தப்பாட்டும் மனதை வருடும்!

   நன்றி அதிரா.

   நீக்கு
 14. //நீதி நேர்மை எருமை.. - மன்னிக்கவும் அதிரா திரும்பி வந்து விட்டதால் அவர் சொல்வதுபோல சொல்லி விட்டேன் -//

  உங்கள் தமிழில் சொற்பிழை உள்ளது ஸ்ரீராம்:)).. நீதி நேர்மை கடமை..யின் பின்னர்தான் மேன்மை தங்கிய
  “எருமை” அவர்களைப் புகுத்த வேண்டும்... ஹா ஹா ஹா.. ஹையோ மீ ஓடிடுறேன்ன்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... கடமையை விட்டு விட்டேனா? அதனால்தான் ஜகா வாங்கி விட்டேன்.

   நீக்கு
 15. கண்ணன் :- உத்தவரே, உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்...

  DD :- நீ புரிந்த செயல்களில், புரியாத காரணங்களுக்கு தகுந்த விளக்கம் அறிய ஆவலாக உள்ளேன்...

  கண்ணன் :- நானும் ஆவலாக உள்ளேன்...

  DD :- ஆபத்பாந்தவனாக கடைசி வரை பரிபூரணமாக நம்பின, பாண்டவர்களின் உற்ற நண்பன் நீ... நடப்பவை மட்டுமல்ல நடக்கப் போவதையும் முன் கூட்டியே நன்கறிந்த ஞானியான நீ...

  1) "தருமா... இந்தச் சூதாட்டம் வேண்டாம்..." என்று தடுத்திருக்கலாம்... ஏன் செய்யவில்லை...?

  2) விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி பாடம் புகட்டியிருக்கலாம்... தருமன் தம்பிகள் உட்பட அனைத்தையும் + தன்னையும் இழந்தான்... நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ ஏன் செய்யவில்லை...?

  3) குல தேவதை + அதிர்ஷ்டம் மிக்க திரௌபதியை பணயம் வைத்து ஆடி சவால் விட்ட துரியோதனனை, உனது தெய்வீக சக்தியால் அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்க வேண்டிய நீ, ஏன் செய்யவில்லை...?

  4) அடுத்து, மாற்றான் ஒருவன் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன அவளிடம் இருக்கிறது...? அவள் அப்போதே இறந்து விட்ட பிறகு உயிர் மட்டுமே ஊசலாடியது... "துகில் தந்தேன்... திரௌபதி மானம் காத்தேன்", என்று ஜம்பமாக மார்தட்டிக் கொண்ட நீ ஏன் பெருமைப் படுகிறாய்...? ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்...? இது நியாயமா...? தருமமா...?

  (5) முடிவாக ஒரு கேள்வி... கூப்பிட்டால் தான் நீ வருவாயா...? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில், கஷ்டங்களில் உதவ உன் அடியவர்களுக்கு வரமாட்டாயா...?

  அனைவருக்கும் இதன் பதில் தெரியும்... ஆனால் இதில் ஆண் பதிவர்களுக்கே முன் உரிமை...!

  யாருக்கும் தெரியவில்லையெனில், இதை அப்படியே புதன் பதிவில் copy & paste...!

  நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு. தனபாலன் கேட்பதாக வருபவை உத்தவ கீதையில் உத்தவர் கேட்பதாக வருவன.. ஆறேழு ஆண்டுகளுக்கு முன் சக்தி விகடனில் வெளியானது...

   இதை ஒருவர் தனது பதிவில் வெளியிட்டுக்கொள்ள அதை ஸ்ரீ மதி மனோசாமிநாதன் அவர்கள் தனது தளத்தில் பகிர்ந்து இருந்தார். சக்தி விகடனில் வெளியானதை நான் நறுக்கி வைத்துள்ளேன்...

   ஆனால் இந்தப் பகுதி சக்தி விகடனில் வருவதற்கு முன்பே அதன் சாரத்தை அறிந்திருக்கிறேன்.. எல்லாம் எங்கோ உபந்நியாசத்தில் கேட்டது தான்...

   கண்ணன் தன்னை சாட்சி பூதம் என்று சொல்லிக் கொள்கிறான்..

   தர்மபுத்திரன் - தான் ஆடும் சூதாட்டம் கண்ணனுக்குத் தெரியக் கூடாது என்றே நினைக்கிறான்...

   துரியோதனன் சார்பாக சகுனி சொக்கட்டான் ஆடுகையில் எனது சார்பாக கண்ணன் ஆடுவான் என்று தர்மபுத்திரன் கூறவில்லையே!..

   அது ஏன்?..

   கண்ணன் சாட்சி பூதம் என்றால்
   நம்மூர் கோர்டுகளில் ஆஜாராகும் சாட்சிகளைப் போல் அல்ல..

   எக்காலத்திற்கும் ஆன சாட்சி..

   சாட்சியானவன் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை நாம் உணர்ந்து விட்டால் -

   தவறு செய்வதிலிருந்து தப்பித்துக் கொள்கிறோம்....

   இறையச்சம் மறக்கடிக்கப்பட்டது தானே ஐம்பது ஆண்டுகளின் சாதனை!...

   நீக்கு
  2. துரை, டிடி உத்தவரின் இடத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டு பார்த்திருக்கிறார். ஆகவே அவருக்கும் பதில் தெரியும். இறைவன் கூப்பிட்டால் தான் வருவானா? என்று கேட்டதற்கு பதில் இங்கே பரிபூரண சரணாகதி அடைவதைச் சொல்வது! நான் பார்த்துக்கொள்கிறேன். எனக்குத் தெரியும். என்னால் முடியும் என்பதை எல்லாம் விட்டு விட்டு "அவனே கதி!" என்று சரணாகதி அடைந்து விட வேண்டும்.

   நீக்கு
  3. //தன்னைப் பொருத்திக் கொண்டு..//

   எல்லாரும் கூட இப்படிப் பொருத்திக் கொள்ளலாம்!..

   ஆனால்,

   அது பொருந்த வேண்டுமே!..

   நீக்கு
  4. //சாட்சியானவன் பார்த்துக் கொண்டு இருக்கிறான்// - துரை சார்.... இறைவன் சாட்சி மட்டும்தான். Exam hall supervisor போல. மாணவர்கள் எழுதும் தவறை உடனுக்குடன் சரி செய்வது அவர் வேலையல்ல. ஆனால் 'தீனனின் குரலுக்கு மட்டும் அவர் உடனே செவிசாய்க்கிறார், அல்லது ஏதாவது ரியாக்ட் செய்கிறார், அந்த தீனன் முற்பிறப்பு கருமத்தை அனுபவிக்கவில்லை என்றால்.

   இறையச்சம் என்பது பெரும்பாலானவருக்கு இல்லை. என்னைக் கேட்டால் பக்தி என்பதே மிக மிகக் குறைந்த பேர்களிடம்தான் இருக்கிறது.

   நீக்கு
 16. தெரிந்த கதை.. தெரியாத ரகசியம்..

  என்று ஏதோ ஒரு பெயரில் சக்தி விகடன் வெளியிட்ட கட்டுரையிலேயே கண்ணன் அளித்த விளக்கமும் இருக்கும்..

  அதில் ஆழ்ந்து விட்டாலே
  நம்முடைய பிரச்னைகள் எல்லாம் தீர்ந்ததாக இருக்கும்..

  நாம் தான் அதில் அப்படி ஆழ்ந்து போவதில்லையே!..

  (ஒன்றே ஒன்றைத் தவிர!...)

  பதிலளிநீக்கு
 17. //..இறையச்சம் மறக்கடிக்கப்பட்டது தானே ஐம்பது ஆண்டுகளின் சாதனை!//

  போட்டீர்களே ஒரு போடு !

  பதிலளிநீக்கு
 18. //இறையச்சம் மறக்கடிக்கப்பட்டது தானே ஐம்பது ஆண்டுகளின் சாதனை//

  ஸூப்பர் உண்மை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருமலை/ திருப்பதி பேருந்து பயணச் சீட்டுகளில் கிறித்தவ சமய விளம்பரங்கள் வந்திருப்பதாக கூகுள் சாயங்காலத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறது....

   நீக்கு
 19. துரை ஐயா... சுருக்கமாக சொல்லி விட்டார்... மிக்க நன்றி...

  சக்தி விகடனில் வந்ததை வாசித்ததில்லை...

  இது எனது அப்பா சொல்ல, அம்மா மூலம் கேட்டு அறிந்தது...

  இன்னும் சிலர் சொல்ல காத்திருக்கிறேன்... எனது விளக்கம் அதன் பிறகு...

  இரவச்சம் மறந்தவர்களுக்கு இறையச்சம் குறைய தொடங்கும்... மறைந்தும் போகலாம்... இறையச்சம் விட இரவச்சம் என்றுமே தேவை... இன்றைக்கு அதிகம் தேவை...

  தாத்தாவிற்கு கோபம் வந்துள்ளதை அறிய இதோ :-

  இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
  கெடுக உலகியற்றி யான்

  அடியேனும் பிச்சை கேட்கிறேன்...

  இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
  கரப்பார் இரவன்மின் என்று

  பதிலளிநீக்கு
 20. கீதா அம்மா :- சர்வசாதாரணமாக நீங்களும், கோமதி அம்மா மற்றும் பானுமதி அம்மா அவர்களும் சொல்லி விடுவீர்கள் என்று தெரியும்...

  உங்கள் கருத்துரை - அற்புதமான பதில்... முந்தைய நான்கு கேள்விகளும் இதில் சரணாகதி... ஹா... ஹா... நன்றி அம்மா...

  அப்புறம்... // தன்னைப் பொருத்திக் கொண்டு //

  எனது அனைத்து சிந்தனை பதிவுகளும் அவ்வாறே...

  பதிலளிநீக்கு
 21. ஸ்ரீராம் இந்தப் பாடல் கேட்ட நினைவு இருக்கிறது. ஆனால் பல வருடங்களுக்கு முன். 30 வருடங்களுக்கும் மேல் எனலாம். அப்புறம் இப்போதான் கேட்கிறேன் ஸ்ரீராம்.

  சரணம் செமையா இருக்கு. டி எம் எஸ் வாய்ஸ் ரொம்பவே யங்க்...எம்ஜியாருக்காகக் கொஞ்சம் மாடுலேட் செய்திருக்கிறார்.

  அருமையான மெட்டு. ஸ்ரீராம் சரணம் வேறு ஏதோ ஒரு பாட்டை நினைவுக்கு வர வைக்கிறது ஆனால் மீக்குத்தான் இந்த பாடல் வரிகளே நினைவிருக்காதே....என்ன பாட்டு என்று டக்கென்று சொல்லத் தெரியவில்லை.

  நல்ல ராகம் அதுவும் மனதில் இருக்கு டக்கென்று சொல்ல வரலை...சொல்கிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 22. ஸ்ரீராம்ஜி இந்தப் பாடலைக் கேட்டதுண்டு. இந்தப் படமும் பார்த்திருக்கிறேன். ஆனால் அதிகம் நினைவில்லை. ஒரு தியேட்டரில் தேனீயில், பழைய படங்கள் போடுவதுண்டு. அப்படி எப்போதோ பார்த்த நினைவு. நல்ல பாடல். எத்தனை வருடங்கள் ஆயிற்று இப்பாடலைக் கேட்டு. சிலோன் ரேடியோவிலும் கேட்டதுண்டு. அதன் பின் இப்போதுதான் கேட்கிறேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 23. ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 24. ஸ்ரீ கிருஷ்ணஜயந்தி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் சகோதரரே

  நல்ல இனிமையான பாடல். டி. எம். எஸ்ஸின் இனிய குரலில் பாடல் நன்றாக உள்ளது. ஏற்கனவே கேட்டு ரசித்துள்ளேன். இப்போதும் ரசித்தேன்.
  பாடலுக்கும், மற்றும் பிற தகவல்களுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 26. பாடல் கேட்ட நினைவில்லை. நான் பிறந்த வருடம் வெளிவந்த படம்! :)

  பதிலளிநீக்கு
 27. பாடல் அடிக்கடி கேட்ட பாடல்.

  //டி எம் எஸ் பாடியிருக்கும் இந்தப் பாடலை பி சுசீலாவும் பாடியிருக்கிறார். எனக்கு டி எம் எஸ் பாடல்தான் அதிகம் பிடிக்கும்.//

  எனக்கு இரண்டும் பிடிக்கும்.
  ஒரு வாரம் முன் இந்த படம் ஏதோ சேனலில் போட்டு இருந்தார்கள், கொஞ்சம் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!