வியாழன், 29 ஆகஸ்ட், 2019

அப்போ விட்ட பெருமூச்சு...!



     சீக்கிரம் புறப்படணும்னு சொல்றோம், நினைக்கறோம்... நம்ம கைல என்ன இருக்கு..  நாமென்ன தனியாவா போயிருக்கோம்?  நம்மைத்தவிர ஏழுபேர் இருக்காங்களே..  அவங்களும் சேர்ந்து கிளம்பணும் இல்லே?

போன வருஷம் ஒப்பிலியப்பன் கோவில் போனப்போ ஒரே கூட்டம்.  வரிசை கட்டி நின்ற கூட்டத்தில் பின்........னால் நின்னுக்கிட்டிருந்தோம்.  இன்ச் இன்ச்சா நகர்ந்து பெருமாள் பக்கம் போகவே ரொம்ப தாமதம் ஆச்சுன்னா,  திருப்பதியைவிட வேகமா தோள்ல கைவைச்சு தள்ளித் தள்ளி  விட்டாங்க..   அதுமாதிரி ஆயிடக்கூடாதேன்னு பார்த்தா...  அப்பவும் பாஸ் விடலையே... ஓரமா நின்னு ஒப்பிலியை கொஞ்ச நேரம் முறைச்சுட்டுதான் வந்தாங்க...  இப்போ எவ்வளவு கூட்டம் இருக்கப்போவுதோ...  எவ்வளவு நேரம் ஆகப்போவுதோ...

ஒரு வழியா எல்லாரையும் கிளப்பிக்கொண்டு நான் நெனச்சதுக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமா எட்டு மணிக்கு கோவிலை அடைந்தோம்.  தங்கியிருந்த இடத்துலேருந்து இருபது நிமிஷம்.   வழியில திருநாகேஸ்வரத்துல ஒரு நிமிடம் இறங்கியிருக்கலாம்...  ம்...ஹூம்.... எங்கே?  கண்டிஷன்ஸ் பலமா இருந்ததே...  

வண்டியிலிருந்து இறங்கியதும் ஆர்வம் தாங்காமல் ஒப்பிலியப்பன் கோவிலை பக்கவாட்டிலிருந்து ஒரு க்ளிக்.  கோபுரத்தின் எதிரே இருந்தும் படம் எடுத்திருக்கிறேன்தான்.

இதில் என்ன அழகு என்றால் சற்றே தேங்கி இருக்கும் மழை நீரில் கோபுரத்தின் பிம்பம் தெரிவதுதான்.  சென்னையில் தொடங்கி கிளம்பிய நாளிலிருந்து, ஊர் திரும்பி, இதோ, இப்போதும் அங்கேயும் இங்கேயும் பொழிந்து கொண்டிருக்கிறது மழை.

கோபுரங்கள் எப்போதுமே அழகுதான்...



மழை பெய்து கொண்டிருந்த அடையாளங்கள் இரண்டு படங்களிலும் தெரியும்!

ஒப்பிலி உப்பிய கன்னங்களுடன் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.  ஆமாம்..   யாருமே இல்லை...   நான்கைந்து பேர்கள் இருந்தார்களா...    அவங்களும் வேகமா பார்த்துட்டு திரும்பிக்கிட்டிருந்தாங்க..  

'என்னடா இது?  சனிக்கிழமை... பெருமாளுக்கு உகந்த நா...  கூட்டம்னு பயந்தோமே...  மழை என்று யாரும் வரவில்லையா'  என்றெல்லாம் மனசுல நெனச்சுகிட்டே வேகமா போனோம் உள்ளே.

ஆனா பாருங்க...

வேகமா உள்ளே போன அதே வேகமா வெளில வரலை.  

பின்னே?  பின்னால் அவசரப்படுத்தற கூட்டம் இல்லாததால நிதானமா பார்க்க முடியறப்போ ஏன் அவசரப்படணும்?  சொல்லுங்க..

எங்கள் அலுவலகத் தோழி அத்தி வரதரைப் பார்த்துட்டு வந்து அவர் கன்னங்களையும் ஒப்பிலியப்பன் கன்னங்களையும் ஒப்பிட்டுப் பேசி இருந்தது ஞாபகத்துக்கு வந்தது.    ஆமாம்ல...?

நாங்கள் ஓரளவு திருப்தியாகி வெளில வந்தும் கூட பாஸ் வரமாட்டேங்கறார்.  திரும்பத்திரும்ப அங்கேயே நிக்கறார். பாஸோட இதே ரவுஸாப் போச்சு...   நான் வந்துட்டேன் பிரகாரம் சுற்ற...  அப்புறம் எல்லோரும் மெதுவா வந்து சேர்ந்துகிட்டாங்க...  கிராமப்புற கோவில்கள்ல இருக்கற மாதிரி கூட்டமே இல்லாம ஒப்பிலியப்பன் கோவில் பிரகாரம் சுத்தினது புது அனுபவம்தான்.



பூமாதேவி குதூகலமா இருந்த மாதிரி தோணுச்சு.  இங்கிட்டும் அங்கிட்டும் திரும்பி கால்களை மாற்றி மாற்றி வச்சு ஒரே ஆட்டம்தான்...  அஞ்சு ரூபாய் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிகிட்டோம்...  ஆளுக்கு அஞ்சஞ்சு ரூவா....

அப்போ...  



 ஒரு மூணு வயசு இருக்குமா...   இந்தக் குழந்தை அங்க வந்தது...   அவங்க அம்மா அவங்க கைய பிடிச்சுக்கிட்டு இருக்காங்கன்னு பேருதான்...  இவங்கதான் அம்மாவை இழுத்துகிட்டு வேகமா வர்றாங்க..   யாரோடயோ பேசிக்கிட்டே வர்றாங்களே..  யாரோடன்னு பாத்தா..  அட,  யானையோட...!

"பாரு..   உன்னைப்பார்க்க வந்துருக்கேன்..   நீ என்னப் பாக்காம எங்கேயோ பாக்கறே..  பாரு...  போன வாட்டியே நீ இப்படிதான் செஞ்சே... அம்மா அழச்சுண்டே வரமாட்டேங்கறா...   மறுபடி நான் வரதுக்கு ரெண்டு மூணு நாளாகும் பாத்துக்கோ...  அடுத்த சனிக்கெழமைதான் ஸ்கூல் லீவு..  அப்பதான் வருவேன்.."



இப்படி எல்லாம் தொடர்ந்து பேசிக்கிட்டே யானை கிட்ட நெருங்கிட்டா...  எனக்குதான் பயமா இருந்தது.  பூமாவுக்கு குழந்தையை அடையாளம் தெரிஞ்சுதோ இல்லையோ, கேஷுவலா அவ கையை தேடிப்பார்த்துட்டு, அவ ஒண்ணும் கொடுக்கறதுக்கு முன்னாடியே அவளுக்கு ஒரு ஆசியை வழங்கியது!  

குழந்தை அப்புறமா வாழைப்பழம் கொடுத்தா.  அதை வாங்கிகிட்ட யானை அதை சாப்பிடறதுக்கு முன்னாடியே ஒரு ஆள் வந்து ரூபாய் கொடுக்க, வாழைப்பழத்தை கீழே போட்ட பூமா, காசு வாங்கி அந்த ஆளுக்கு ஆசீர்வாதத்தை அள்ளி வழங்க..  

வந்துச்சே கோபம் குழந்தைக்கு..

"என்ன பழத்த கீழ போட்டே...  பிடிக்கலையா?   மாமா கிட்ட சொல்லி அடிக்கச் சொல்லவா?" ன்னு பாகனைக் காட்டினா..

நான் பயந்துகிட்டே பாகனைப் பார்க்க அவரு புன்னகை சிந்தறாரு!  பார்த்துகிட்டே இருக்கும்போதே பொசுக்குனு போயி அந்தப் பழத்தை எடுத்துட்டா அந்தப் பொண்ணு..   எனக்கா திக்குனு ஆயிடுச்சு... எப்பவும் ஒரே மாதிரி இருக்குமா?  ஒண்ணு கிடைக்க ஒண்ணு ஆனா என்ன ஆறது?  குழந்தை பழத்தை மறுபடி பூமா கிட்ட கொடுக்க, அதை வாங்கி துதிக்கை நுனியால் அளந்த பூமா, அதை வாயில் போட்டுக்கிட்டு குழந்தைக்கு இன்னொரு போனஸ் ஆசீர்வாதம் தந்தது.

இவளா, பூமாவின் காலைக் கட்டிக்க போறா..  நல்லவேளையா அவங்க அம்மா குழந்தையை இழுத்துப் பார்த்து,  முடியாததால தூக்கிகிட்டு இந்தப்பக்கம் வந்தா..  அப்பவும் குழந்தை பூமா கிட்ட கையை ஆட்டி ஆட்டி பேசிக்கிட்டே வந்தது அழகோ அழகு..   பெரியவங்களே பயப்படற இடத்துல இவளுக்கு பூமா கிட்ட என்ன அன்னியோன்னியம்... நான் பார்த்து குழந்தைகள் இப்படி யானை கிட்ட பயமில்லாம இருந்ததே இல்ல...

"உங்க குழந்தையா?  என்ன வயசு?"  ன்னு புன்னகையோட அவங்க அம்மா கிட்ட கேட்டேன்.

"நாலு வயசாவுது..."

"இப்படி பயமில்லாம பக்கத்துல போறாளே...  பேச வேற பேசறா..."

"ஆமாம்..  அதுக்காகவேதான் என்னை இழுத்துகிட்டு வந்திருக்கா.. " என்றாள் அலுப்பான ஒரு புன்னகையுடன் அந்த அம்மா.

ஒப்பிலியப்பன் சன்னதியிலேயே சொல்ல நெனச்சும் தயங்கி சொல்லாததை மணியப்பன், முத்தப்பன் சன்னதிகளில் சொன்னோம்.  இது மாதிரி எங்களுக்கு இன்னிக்கி கல்யாண நாள், இதுமாதிரி எங்க கல்யாணம் இங்கதான் நடந்துச்சு...  இது மாதிரி எங்களுக்கு ரெண்டு பசங்க...   ரெண்டு பேருமே திருவோணம்..." 

பெருமைக்காக சொன்னோமோ, பெருமையுடன் சொன்னோமா, நெகிழ்ச்சியாய் சொன்னோமோ ...  சொல்லணும்னு தோணிச்சு, சொன்னோம்.  அங்கிருந்த வயதான இரு பட்டாச்சார்யார்கள் வாழ்த்து சொல்லி இன்னொரு முறை தீபம் காட்டினார்கள்.

முன்னாடி எங்கள் திருமணம் நடந்த இடம் இப்போ உற்சவர் இருக்கும் இடமா இருக்கு.அர்ச்சனை எல்லாம் இங்கதான்.  மண்டபம் வாடகைக்கு என்று அங்கேயே ஒரு மண்டபம் பார்த்தேன்.



வெளில வந்து கொஞ்சம் போட்டோஸ் எடுத்துகிட்டு -  அதை விடறதில்லீங்க..  பெரியவன் வேற கேனான் கேமிரா வச்சிருக்கான்...   அதையும் எப்பதான் உபயோகிக்கறது -  உப்பில்லாத புளியோதரையும் (கீதா அக்கா கவனிக்கவும்) பொங்கலும் காசு கொடுத்து வாங்கிச் சுவைத்துவிட்டு, கிளம்பினோம்.

போனவாட்டி அந்த ஊர்லயே ஒரு சிறு ஹோட்டலுக்குப் போனோம்.  பசங்க அங்க இந்தவாட்டி போக்கூடாதுன்னுட்டாங்க...  

"உட்கார இடமே இல்ல...   இடமோ ரொம்பச் சின்னது...  வெரைட்டீஸும் இல்ல...   ஆர்டர்  எடுக்க ஆள் வரவே கால்மணி ஆகுது...   ஆர்டர் கொடுத்தா  ஐட்டம் வர அரைமணி ஆகுது...  அப்புறம் சாம்பார் சட்னிக்காக அஞ்சு பத்து நிமிஷம் காத்திருக்கணும்...."

அடுத்து நாங்கள் செல்லவேண்டிய ஊர் மழுவச்சேரி.   குடவாசல் தாண்டி சேங்காலிபுரம் அருகே இருக்கும் சிற்றூர்.  அதுதான் எங்கள் குலதெய்வம் கோவில் இருக்கற ஊர்.  

போற வழில "நல்ல ஹோட்டல்ல" சாப்பிட்டுக்கலாம்னு கிளம்பினோம்...


===============================================================================================


சுஜாதா தனது கட்டுரை ஒன்றில் ஜென் கதை ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார்.   எனக்கு (வழக்கம்போல) புரியவில்லை.  உங்களுக்குப் புரிகிறதா?



ஹக்குவின் என்பவரின் சீடர் சுன்லோ.  நல்ல குரு.  ஒருமுறை தன் சீடர் சுன்லோவிடம் "ஒற்றைக் கைதட்டல் ஓசையைக் கேட்டு விட்டு வா" என்று கூறி அனுப்புகிறார்.

சீடர் மூன்று வருஷம் யோசித்தார்.  இறுதியில் "எனக்குக் கேட்கவில்லை.  தோற்றுவிட்டேன்.  அவமானத்தில் என் கிராமத்துக்குத் திரும்புகிறேன்" என்றாராம்.

"யோசி...  மீண்டும் ஒரு வாரம் கழித்து வா...! என்றார் குரு.

ஒரு வாரம் கழித்து வந்தான் சீடன்.   "ம்ஹூம்... கேட்க முடியவில்லை" 

"இன்னொரு வாரம் முயற்சி செய்"

அப்போதும் ஒரு கை ஓசை கேட்கவில்லை.

"இன்னும் இரண்டு நாள்..." என்றார் குரு.

சீடன் நொந்து போய் "என்னை ஆளை விடுங்கள்!" என்றான்.

ஐந்து நாள் கழித்து வரச்சொன்னார் குரு.

அதன்படியே வந்தார் சீடர் சுன்லோ. ஆனால் ஒற்றைக்கை ஓசை கேட்கவில்லை.

"இன்னும் மூன்று நாள் பார்...  கேட்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்" என்றார் குரு.

இரண்டாவது தினமே அவனுக்கு ஞானம் பிறந்தது.

உங்களுக்கு?



=================================================================================================


ஒரு மண்டபத்தில் எடுத்த படம்.  சுவரில் காணப்பட்டது.  யார் ஜாடையோ தெரியவில்லை?




===================================================================================

அப்போ விட்ட பெருமூச்சு...!  உண்ணாவிரதம் இருந்த அன்னா...!






======================================================================================

கோமதி அக்கா ஆத்துக்காரர் அரசு ஸார் எழுதிய புத்தகம்...   23-8-2019 அன்று குடந்தையில் வெளியிடப்பட்டது...  வாழ்த்துகள் அக்கா...   வாழ்த்துகள் ஸார்...





121 கருத்துகள்:

  1. உப்பிலியின் விடயங்கள் யானை படங்களோடு நன்று.

    சகோ கோமதி அவர்களின் கணவருக்கு எமது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான தரிசனம் ஸ்ரீராம். குண்டு கன்னங்களோடு இன்னொருவர் இத்தனை நாள் காஞ்சீபுரத்தில்
    தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
    இரண்டு குழந்தைகளும் திருவோணம் என்று கேட்க மிகவும் மகிழ்ச்சி.

    எங்கள் வீட்டில் திருவாதிரை நிறைய.
    இரண்டு மாமாக்கள், ஒரு பேரன், ஒரு கொள்ளுப் பேரன் என்று தொடர்கிறது.

    உப்பிலியப்பன் கோபுரமும்,பூமாதேவி யும் மிக அழகு.
    அந்தச் சிறுமி மனதை அள்ளிக் கொண்டாள்.
    எனக்கும் யானையுடன் பேச மிகப் பிடிக்கும். அதென்னவோ பாகன் கையில் கொடுக்க காசை எதிர்பார்க்கும்.
    நான் பார்த்ததுக்கு இப்போ பூமாவின் கால்கள் இளைத்திருக்கின்றன.
    சரியாகச் சாப்பிடுகிறதோ என்னவோ.

    ராமர் மண்டபம் பார்த்தீர்களா.
    உப்பு வாங்கிப் போட முடிந்ததா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிம்மா.

      ராமர் மண்டபம் பார்க்கவில்லையே....

      பூமா இளைத்திருப்பதாய் எனக்கும் தோன்றியது நிஜம்தான் போல...

      நீக்கு
  3. அன்பு கோமதியின் சார் பற்றிப் பதிந்தது மிக மிக மகிழ்ச்சி.

    எத்தனை உழைப்பு இதில் அடங்கி இருக்கிறது.
    நல்ல தகவல்களோடு நீங்கள் பதிந்தது அருமை.
    நல்ல தமிழ் நூல் படிக்கக் கிடைத்தால்
    நன்றாக இருக்கும்.
    மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்காவிடம் சொல்லாமலே அல்லது கேட்காமலேயே படங்களை அவர் பேஸ்புக்ப்பக்கத்திலிருந்து எடுத்தேன். அவர் கோபித்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

      நீக்கு
    2. ஆமாம் , அக்கா ஸ்ரீராம் பகிர்ந்தது மகிழ்ச்சி தான்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.
      நான் கும்பகோணம் சென்று வந்ததிலிருந்து உறவினர் வருகை, உறவினர் உடல் நிலை சரியில்லை என்று அவர்கள் நலன் விசாரிக்க போய் விட்டோம். கும்பகோணத்தில் மழையில் நனைந்தது அது இருவருக்கும் கொஞ்சம் உடல் பாதிப்பு , தும்மல், ஜலதோஷம் . பதிவு எழுதவே தோன்றவில்லை. ஸ்ரீராம் மீது கோபம் இல்லை அவர் போட்ட்டு விட்டது மகிழ்ச்சி தான்.

      நீக்கு
  4. ஒரு கை ஓசை எழுப்பாதே. அதுதானே உண்மை. சுஜாதா சாரின்
    ஜென் கதைகள் என்றில்லை, ஜென் தத்துவமே எனக்குப் புரிவது மிகக் கடினம்.

    இளைத்த அன்னா, தமன்னாவுக்கு உறவோ.
    பயணத்தில் இருக்கும் கீதா ரங்கனுக்கும்,
    பயணத்துக்கான ஆயத்தங்களில் இருக்கும் கீதாமாவுக்கும்
    மற்றும் அனைவருக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கை ஓசை கேட்டுவிட்டது என்றல்லவா வருகிறான் சீடன்.... அதுதான் புரியவில்லை!

      //இளைத்த அன்னா தமன்னாவுக்குஉறவோ...//

      ஹா... ஹா... ஹா... தெரியலையே அம்மா... நெல்லையைக்கேட்டால் தெரியும்!

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    கும்பகோணம் ஐறு வயதில் சென்றது. ஒரு முறையாவது செல்ல வேண்டும் என ஆசை உண்டு. அழைப்பு வரவேண்டும்.

    யானியிடம் பேசிய சுட்டிப்பெண் மகிழ்ச்சி யந்தார்.

    ஜென் கதைகள் ;) பல கதைகள் புரிய நாமும் ஜென் ஆக வேண்டுமோ எனத் தோன்றும்.

    அன்னா :)

    கோமதிம்மா சார் புத்தக வெளியீடு.... வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்.

      காலை வணக்கம்.இந்தியா முழுவதும் சுற்றியிருக்கும் நீங்கள் இன்னும் குடந்தை சென்றதில்லை என்பது ஆச்சர்யம்.

      ஜென் கதை - ஒன்றும் புரியவில்லை!

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பதிவை படித்துக் கொண்டே வரும் போது சாரின் புத்தக் வெளியீடு பற்றிய தகவல்.
    இன்ப அதிர்ச்சி, பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.மீண்டும் வருகிறேன்.
    பேரன் பேசிக் கொண்டு இருக்கிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அக்கா. உங்களைக் கேட்காமலேயே உங்கள் பக்கத்திலிருந்து திருடியது!

      நீக்கு
    2. முகநூல் படம் என்று தெரியும்.
      பதிவு போட வேண்டும் . எழுத இன்னும் நேரம் வரவில்லை.
      பொழுதுகள் போகிறது. அலுப்பில் இருந்து மீண்டு எழுத வேண்டும்.

      நீக்கு
  8. ஒப்பிலியப்பன் தரிசன அனுபவம் - ரசித்தேன். பல சந்தர்ப்பங்களில் நமக்கு ஏகாந்தமான சேவை கிடைக்கும். கல்கருட சேவையின்போது 9 மணிக்கு ஒப்பிலியப்பன் கோவிலுக்கு வந்தபோது இரவு பெருமாளை துயிலப்பண்ணும்போதான பிரசாதமும் கிடைத்தது. ஆமாம்...கோவில் பிரசாத ஸ்டால், ஒப்பிலியப்பன் பிரசாதமா?

    ஏன் 'நல்ல' ஹோட்டலைத் தேடி அலைந்தீர்கள்? கும்பேசுவரர் கோவில் பக்கத்தில் உள்ள மங்களா விலாஸ் ஓகே. அங்கு காஃபி பஜ்ஜி/வடைக்கு ஒரு அருமையான கடை இருக்கு (இன்பம் ஸ்னாக்ஸ். மலர் மெகா சூப்பர்மார்க்கெட் ஒட்டிய கடை. மடத்துத் தெருவா நினைவில்லை). இனிப்புக்கு ஒரு கடை உண்டு. இன்னொரு நல்ல ஹோட்டலும் உண்டு. (ஸ்ரீ முருகன் கஃபே)..

    ஒரு கை ஓசை - அட பாக்யராஜ் படம்.

    மண்டபத்தில் நீங்க எடுத்த படத்தை நான் நிறைய லாட்ஜ்களிலும் பார்த்திருக்கிறேன், படம் எடுத்திருக்கிறேன். முதலில் இது என்ன கிரேக்க சாயல் இருக்கு என்று நினைத்தேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் படத்தை பகிர்ந்துகொள்கிறேன்.

    கோமதி அரசு மேடத்தின் கணவரைப் பற்றி இன்னும் அறிந்துகொண்டேன். பிள்ளைத்தமிழ் - பாராட்டுகள். நல்ல திறமை.படிக்கும் அனைவருக்கும் புத்தகம் உபயோகமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...

      ஆமாம்... பிரசாத ஸ்டால் ப்ரசாதம்தான். அதுவும் காசு கொடுத்து!

      நல்ல ஹோட்டலைத் தேடி அலைந்ததன் காரணம், நாங்கள் ஒப்பிலியப்பன் தரிசனம் முடித்து நகருக்கு நேர் எதிர் சாலையில் வெளியே சென்றதுதான். குடவாசலில் இருக்கும் என்றார்கள்.

      ஒரு கை ஓசை - பாக்யராஜ் படமா? கதைக்கு அர்த்தம் சொல்வீர்கள் என்று பார்த்தால்...

      நானும் இந்தப் படத்தை ஏதோ லாட்ஜில்தான் எடுத்த நினைவு.

      நீக்கு
    2. சாரை பாராட்டியதற்கு நன்றி நெல்லைத்தமிழன்

      நீக்கு
  9. அரசு ஐயாவிற்கு வாழ்த்துகள்...

    பூமா - குழந்தை விளையாட்டு மிகவும் ரசிக்க வைத்தது...

    கோபுரத்தின் பிம்பம் தெரிவது அழகு...

    பதிலளிநீக்கு
  10. வந்திருக்கும் நண்பர்களுக்கும் இனி வரவிருக்கும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். வல்லியின் முட்டி வீக்கம் சரியாகி இருக்கும்னு நினைக்கிறேன் கீதா ரெங்கன் பயணமா? துரையும் திரும்பி குவெய்த் பயணத்தில் இருக்காரோ? நேற்று உறவினர் வருகைக்குப் பின்னர் ஒன்பது மணிக்கு மருத்துவரைப் பார்க்கப் போயிட்டுத் திரும்பி வரச்சே பத்தரை மணி! தூக்கமே வராமல் பனிரண்டுக்கு அப்புறமாத் தூங்கி எழுந்துக்கும்போது காலை ஆறுமணி! பிள்ளை தொலைபேசினார். அதிகம் பேச முடியாமல் அப்போத் தான் எழுந்திருந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... நல்வரவும் வணக்கமும். உங்கள் பிரார்த்தனைகளில் நானும் கலந்துகொள்கிறேன். துரை செல்வராஜூ ஸார் ஒரு வாரம் விடுப்பு என்றாரோ... நினைவில்லை. ஆளைக் காணோம். வரவர.. வியாழன் பதிவுகளில் அவர் காணாமல் போய்விடுகிறார்...!!!! கீதா பயணத்தில்... இன்று பெங்களூரு அடையக்கூடும்! பார்ப்போம்.

      நீக்கு
  11. கோமதி அரசு, அவர் கணவர் திரு அரசு ஆகியோரையும் அவங்க பெண் முத்துலக்ஷ்மி பற்றியும் (கோமதி அரசு பதிவு எழுத ஆரம்பிக்கும் முன்னரே) எங்கள் மாயவரம் நண்பர் அபி அப்பா என்ற தொல்காப்பியன் அடிக்கடி சொல்லுவார். முத்துலக்ஷ்மி தான் அப்போதெல்லாம் வலைச்சரம் ஆசிரியராக இருந்தார். அப்புறமா அவர் வலைப்பக்கங்களில் அதிகம் வருவதில்லை போலும். அதிலும் நான் சிதம்பர ரகசியம் எழுதும்போது நீங்க மாயவரம் வந்து அவர்களைச் சந்திக்கணும் என்பார். எங்களால் அப்போ வரமுடியலை! இந்தப் புத்தக வெளியீடு பற்றி கோமதியும் அவர் பதிவில் சொல்லி இருந்தார். ஸ்ரீராமுக்கும் இவ்வளவு தகவல்களும் படங்களோடு கிடைத்துப் புத்தகமும் கிடைத்துப் பகிர்ந்ததுக்கு வாழ்த்துகளும் நன்றியும். கோமதி அரசுவுக்கும் அவர் கணவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றி. நான் ரொம்ப வருஷம் அவங்களுக்குக் கயல்விழி முத்துலக்ஷ்மி மட்டும் ஒரே பெண் என நினைத்திருந்தேன், அவரோட அம்பேரிக்காப் பயணப்பதிவுகளைப் பார்க்கும் வரை! :))))) இப்போதெல்லாம் அபி அப்பாவும் அதிகம் எழுதுவதில்லை போலும். எப்போவானும் முகநூல் பக்கம் வருவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...

      இதில் எனக்கு சில புதிய தகவல்கள்.

      புத்தகம் பற்றிய படங்கள் நான் கோமதி அக்கா பேஸ்புக் பக்கத்திலிருந்துதான் திருடினேன்!

      நீக்கு
    2. சார் புத்தக வெளியீடு பற்றி முகநூலில் படங்களை பகிர்ந்து இருந்தேன் கீதா . நீங்கள் அதை பார்க்கவில்லை. ஸ்ரீராம் முகநூலில் இருந்து எடுத்து ஒட்டி இருக்கிறார் படங்களை. புத்தகம் ஸ்ரீராமுக்கு கிடைக்கவில்லை. பதிப்பகத்திற்கு எழுதி கொடுத்ததுடன் சரி சார்.
      நிறைய செய்திகள் எங்களை பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி. ஆயிலயன், அபி அப்பா, கோபிநாத் எல்லாம் உங்களை தலைவி என்று அழைத்து பின்னூட்டம் போடுவார்கள் படித்து இருக்கிறேன். அது ஒரு பொற்காலம்.
      இப்போது எல்லோரும் பதிவு எழுதுவது இல்லை.

      நீக்கு
    3. //கோமதி அரசுவுக்கும் அவர் கணவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்,//

      சாரோடு சேர்த்து எனக்கும் பாராட்டுக்கள் , வாழ்த்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி கீதா.
      பூவோடு சேர்ந்த நாருக்கும் வாழ்த்தும் பாராட்டும் கிடைத்தது மகிழ்ச்சி.

      நீக்கு
    4. ஸ்ரீராம்,கோமதி, நன்றி பகிர்வுக்கு. உங்கள் முகநூல் பதிவுகளை நான் பார்க்கவில்லை. 2,3 நாட்களாக அதிகம் பதிவுகள் பக்கமோ, முகநூல் பக்கமோ வர முடியவில்லை. அப்போ வந்திருக்கும்! தேடிப் பார்த்து உங்கள் டைம்லைனில் இருக்குமே! பார்க்கிறேன் கோமதி.

      நீக்கு
    5. அபி அப்பா, ஆயில்யன் எல்லோரும் 2007 க்குப் பின்னர் வந்தவர்கள், கோபிநாத்தும் அப்போத் தான் வந்தார். அதற்கு முன்னரே நான் எழுத ஆரம்பித்த 2005-2006 ஆம் வருடத்தில் இருந்தே இளைஞர்கள், இளைஞிகள் "தானைத் தலைவி" என்பதைச் சும்மா என்னைக் கலாய்ப்பதற்காக "யானைத் தலைவி" என்றோ "தலைவலி" என்றோ சொல்லுவார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் நான் எழுத ஆரம்பித்த வந்த பின்னர் வந்த என்னோட முதல் பிறந்த நாளைப் பல்லி மிட்டாய் எல்லோருக்கும் வாங்கிக் கொடுத்து விமரிசையாகக் கொண்டாடியது. பிதற்றல்கள் சிபி, பெனாத்தல் சுரேஷ், இலவசக்கொத்தனார் ராஜேஷ், அம்பி, திராச, வேதா, ச்யாம், பொற்கொடி, மு.கார்த்திக்,ராம், நாகை சிவா, கைப்புள்ள,ஜி3 என அழைக்கப்பட்ட காயத்ரி, எஸ்கே எம் என அழைக்கப்பட்ட ஷாலினி எனப் பலர் அப்போது என் பதிவுகளில் வந்து கலாட்டா செய்வார்கள். பாலபாரதி எனப்படும் பாபா, சித்தார்த் வெங்கடேஷ், கென் ஆகியோரின் பதிவுகள் எல்லாம் அப்போது காரசாரமாக இருக்கும். கென் அப்போதெல்லாம் அடிக்கடி கூகிள் மூலம் பேசுவார். பின்னர் தொடர்பிலேயே இல்லை. இப்போதைக்கு பாலபாரதியின் மனைவி லக்ஷ்மி பாலகிருஷ்ணன் மட்டும் முகநூலில் தொடர்பு. முன்னால் ஜி+இல் தொடர்பில் இருந்தார்.

      நீக்கு
    6. //புத்தகம் பற்றிய படங்கள் நான் கோமதி அக்கா பேஸ்புக் பக்கத்திலிருந்துதான் // - ஓ அப்படியா? நான்கூட, இன்றைக்கு கவிதைக்குப் பதிலாக பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு செய்யுள் அல்லது சில வரிகளைப் போட்டிருக்கலாமே என்று நினைத்தேன். கோமதி அரசு மேடம் இது சம்பந்தமான இடுகை எழுதும்போது இதனை நினைவு வைத்துக்கொள்வார்னு நம்பறேன்.

      நீக்கு
    7. நான் புத்தகம் அட்டைபடம் மட்டும் தானே போட்டேன் நெல்லைத்தமிழன்.
      அதில் உள்ள செய்யுள் போடவில்லை நான் பதிவு போடும் போது நினைவு வைத்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  12. உடல் நலம் குன்றி இருக்கும் காமாட்சி அம்மா, மற்றும் பதிவர்களின் கணவன்மார் உடல் நலம் முன்னேறப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு நாள் முந்தி இந்த சிந்தனை வந்தது. என்ன இது, காமாக்ஷி அம்மாவைக் கொஞ்ச நாளாய்க் காணவில்லையே என்று. இப்போது நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். உடல்நலம் சீராகி இயல்புநிலைக்குத் திரும்பப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. எங்கள் பிரார்த்தனைகளும்.

      நீக்கு
    3. காமாட்சி அம்மா , பானுமதி அவர்களின் கணவர் உடல் நலம்பெற பிரார்த்தனைகள்.

      நீக்கு
    4. காமாட்சி அம்மா மற்றும் அனைவருக்கும் எனது பிரார்த்தனைகளும்

      நீக்கு
    5. காமாட்சி அம்மாவிற்கு கடவுள் கருணையால் டக்கென உடல் நிலை சரியாகணும்னு நினைக்கறேன், விரும்பறேன், ப்ரார்த்திக்கறேன்.

      பானுமதி வெங்கடேச்வரன் மேடத்தின் கணவருக்கு 'திடுமென' வந்த பிரச்சனை தீரணும்னு மனசு நினைச்சுக்கிட்டே இருக்கு.

      நீக்கு
  13. முதல் படம் ஏற்கெனவே முகநூலில் ஸ்ரீராம் பகிர்ந்திருந்தார். மற்றப்படங்களும் பூமாவின் படமும் அருமை. பூமா தன் பாகனுடன் நிற்கும் படத்தில் எதிரே அந்தப் பெண் குழந்தை இருக்காப் போல! அதான் பூமாவின் முகம் சிரித்த முகமாகத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா... பூராவும் குழந்தையை வரவேற்கிறாள் போலும்.

      கீதா அக்கா... பேஸ்புக்கில் ஒரு இடத்தில நான் உங்களை tag செய்திருந்தேன். ஸ்ரீரங்கம் ஆண்டாள் ஜோர் நடை போட்டு வரும் வீடியோ... பார்த்தீர்களா என்றே தெரியவில்லை.

      நீக்கு
    2. ///பார்த்தீர்களா என்றே தெரியவில்லை//

      கீசாக்கா எதைத்தான் பார்க்கிறா?:) இதை மட்டும் பார்ப்பதற்கு கர்ர்ர்:)) அவ போஸ்ட் போடுவதில் மட்டும்தான் பிஸியாக்கும்:)).. ஹையோ காலையிலயே எனக்கு என்னமோ ஆகுதே:))

      நீக்கு
    3. கீதா அக்கா வந்து என்ன சொல்லப் போறாரோ! ஆண்டாளை அவர் ரசிப்பார்ன்னு பார்த்தேன்!

      நீக்கு
    4. ஶ்ரீராம், ஆண்டாளை என்னிக்கு "tag" செய்தீர்கள்? ஶ்ரீரங்கம் குழுவிலும், நம்பெருமாள் குழுவிலும் சிலர் என்னை "டாக்" செய்திருந்தனர். அதிலே உங்கள்பெயரைப் பார்த்ததாக நினைவில் இல்லை. பொதுவாக நண்பர்கள் அனைவரும் எங்காவது ஆனை படமோ, குட்டி ஆனை படமோ வீடியோவோ பார்க்க நேர்ந்தால் உடனே எனக்கு அனுப்புவார்கள் அல்லது டாக் செய்வார்கள். ஆகவே பார்த்தது நினைவில் இல்லையோ என்னமோ! அதோடு நான் சமீபகாலமாக முகநூல் பக்கம் அதிகம் வருவதும் இல்லை.

      நீக்கு
    5. ஹிஹிஹி, ஆண்டாளை என்னிக்கு எனக்கு "டாக்" செய்தீர்கள் என வந்திருக்க வேண்டியது. ஒரு வார்த்தை விட்டுப் போச்சு! :))))

      நீக்கு
  14. பிரசாதம் என்பது பட்டாசாரியார்களால் கொடுக்கப்படுவது.நீங்க ஸ்டாலில் வாங்கிச் சாப்பிட்டது ஒப்பந்த அடிப்படையில் பண்ணப்பட்டு விற்பனைக்கு வந்தது. ஆகவே என்னதான் புளியோதரை சாப்பிட்டாலும் அது கணக்கில் வராது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்தால்தானே மண்டபத்தில் வாங்க? காலியாக இருந்து பெருமாளைநன்கு சேவிக்க முடிந்தது. அஷ்டே. மற்றபடி நமக்கெல்லாம் காசு கொடுத்து பிரசாத ஸ்டால் புளியோதரைதான்!

      நீக்கு
  15. எங்க வீட்டிலும் எங்காவது கிளம்புவது என்றால் நாங்கள் தான் முன்னால் கிளம்பிக் காத்துக்கொண்டிருப்போம். அதிலும் நான் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். கூட வரவங்க மெதுவாக் கிளம்பி வருவதோடு "என்னால் தான் தாமதம்" எனக் கண்ணை மூடிக்கொண்டு என்னைச் சொல்லுவாங்க! :))))) ஏன்னா கிளம்பும்போது ஒரு முறை கழிவறைக்குப் போகணும்னு நான் போயிருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் முன்னாலேயே கிளம்பிவிடுவேன். ஊபர் புக் பண்ணியதும் கிளம்பி தெருவுக்கு வந்து விட நினைப்பேன். உறவினர்கள் கிண்டல் செய்வார்கள்!

      நீக்கு
  16. ஒப்பிலியப்பன் கோபுர படம் அழகு. பக்கவாட்டு கோபுரம் அதன் பிம்பம் தண்ணீரில் தெரிவது அழகு.

    .// பாஸோட இதே ரவுஸாப் போச்சு... நான் வந்துட்டேன் பிரகாரம் சுற்ற...//

    உங்கள் எல்லோர் நலத்திற்கும் வேண்டி வருவார் நிதானமாய் இறைவனிடம் பேசி. தனியாக குடும்பத்துடன் போய் வரும் போது என்ன அவசரம்?
    டூர் மாதிரி அடுத்து அடுத்து கோவில் பார்க்க வேண்டும் என்றால் அவசர படனும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா...

      ஆமாம்... பாஸ் ரொம்பவே உருகுவார். பொசுக்குன்னு கண்ணில் தண்ணி வந்துடும்! என்னைப்பொறுத்தவரை ஆண்டவனிடம் அவன் சன்னிதானத்தில் தனிப்பட்ட வேண்டுதல் என்று கேட்பதே தப்பு என்று தோன்றும். கும்பிடு போட்டுவிட்டு வந்துவிடுவேன்!

      நீக்கு
    2. ஆண்கள் மனநிலை வேறு, பெண்கள் மனநிலை வேறு.
      பக்தியில் கண்ணீர் வர வேண்டும் ஸ்ரீராம்.
      அழுதால் உன்னை பெறலாம் என்று மாணிக்கவாசகரும், காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்று ஞானசம்பந்தர் பாடி இருக்கிறார்.

      சூழ்தரும்வல்வினையும் உடல்தோன்றிய பல்பிணியும்
      பாழபட வேண்டுதிரேல் மிக ஏத்துமின் பாய்புனலும்
      போழிள வெண்மதியும் அனல் பொங்கர வும்புனைந்த
      தாழ்சைடை யான்பனந்தாள் திருதாடகை யீச்சரமே.

      இப்படி வேண்டிக் கொண்டு இருக்கிறார்கள் சிவனடியார்கள். அவர்களே வேண்டிக் கொள்ளும் போது நாம் எம்மாத்திரம்!

      நானும் முன்பு குழந்தைகள், கணவர் உடல்நிலை சரியில்லை என்றால் உடனே ஏதாவது இறைவனிடம் வேண்டிக் கொள்வேன். அதை நிறைவேற்ற படாது பாடு படுவேன். அப்புறம் இறைவனுக்கு தெரியும், நமக்கு எதை எப்போது கொடுக்க வேண்டும் என்று இப்போது கொஞ்சம் பக்குவம் வந்து இருக்கு. கவலை, இல்லாமல் இல்லை இருந்தாலும் வேண்டிக் கொள்வது குறைந்து இருக்கிறது. எல்லோரையும் நன்றாக வை என்ற வேண்டுதல் உண்டுதான்.


      நீக்கு
    3. உண்மைதான் கோமதி அக்கா.

      ஆழ்ந்த பக்தி என்றால்தான் கண்ணீர் வருமோ...

      நீக்கு
  17. குடவாசலிலேயே பாடல் பெற்ற தலம் இருக்கிறதே? செல்லவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.. குடவாசல் தாண்டிச் சென்றோம். உள்ளே செல்லவில்லை. என்ன தலம்?

      நீக்கு
  18. பூமா படம் ,குழந்தை பேச்சு , மீண்டும் குழந்தை பழத்தை கொடுத்தது, தாயின் அன்பான அலுப்பு புன்னகை. எல்லாம் அருமை.
    பழம் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்து இருந்து வேறு ஒருவர் பனம் கொடுத்து இருக்கலாம்.

    குழந்தை பூமா பழத்தை கீழே போட்டவுடன் ஏமாந்து இருப்பாள் இல்லையா? மீண்டும் கொடுத்து பூமா சாப்பிட்டதும் இருவருக்கும் மகிழ்ச்சி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூமா அதை எல்லாம் உணர்வாலாதெரியவில்லை. குழந்தை சந்தோஷம் முக்கியம். அவள் வயது குழந்தைகள் யானை என்றாலே அம்மாவைக் கட்டிக்கொண்டு பிரிக்கவே முடியாது. அந்தக்குழந்தையின் தைரியமும், அன்பும் கவர்ந்தன.

      நீக்கு
  19. //வண்டியிலிருந்து இறங்கியதும் ஆர்வம் தாங்காமல் ஒப்பிலியப்பன் கோவிலை பக்கவாட்டிலிருந்து ஒரு க்ளிக். //

    ஆஆஆஆ கமெரா மான் ரேஞ்சுக்குப் போயிட்டாராம் தான், எனச் சொல்ல வாறார் ஸ்ரீராம்:))

    //கோபுரத்தின் எதிரே இருந்தும் படம் எடுத்திருக்கிறேன்தான்//
    ஆஆஆஆஆ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேச்சே...என் லட்சணம் எனக்குத் தெரியாதா அதிரா? சும்மா பிலிம் காட்டினேன் அவ்வளவுதான்!

      நீக்கு
  20. //கோபுரங்கள் எப்போதுமே அழகுதான்...///
    உண்மைதான், ஆனா கோயில் எல்லையிலிருந்து சற்றுத் தொலைவில் கடைகளை வைக்க விட்டால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.. இது கோபுர அழகை, அந்த சுற்றுப்பிரதேசம் குறைச்சுக் காட்டுவதைப்போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  21. // இரண்டாவது தினமே அவனுக்கு ஞானம் பிறந்தது.

    உங்களுக்கு? //

    ஸ்ரீராம் சார்... பயண "கேப்"பில் இதை டைபிங்க்...

    இதற்கு இரு பதில்கள் உண்டு...

    1) ரங்கராஜன் எனும் பெயரில் எழுதிய பதிலா...?

    2) சுஜாதா எனும் பெயரில் எழுதிய பதிலா...?

    வெயிட்...

    இரண்டு கேள்விகளுக்கான எனது பதில்கள் :-

    1) என்னால் எனது பதிவை மேற்கோள் காட்ட முடியும்... அதில் உங்களது கருத்துரையை கண்டால், நீங்களே அதிர்ச்சி அடைய வாய்ப்பு உண்டு...(!)

    2) சீ... சே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதா என்னும் பெயரில்தான். கடவுள் என்னும் கட்டுரையில்.

      //அதில் உங்களது கருத்துரையை கண்டால், நீங்களே அதிர்ச்சி அடைய வாய்ப்பு உண்டு...(!)//

      ஆ.....!

      நீக்கு
    2. // எனது பதிவை + எனது பதிவை + எனது பதிவை.... மேற்கோள் காட்ட முடியும்... அதில் உங்களது உங்களது உங்களது... கருத்துரையை...//

      ஒரு கை ஓசை பற்றி ரங்கராஜன் அவர்கள் சொன்னதை சொல்லவா...? அசிங்கம்...!

      பாவம் ரங்கராஜன் அவர்களின் மனைவி...

      நீக்கு
    3. அப்போது தினத்தந்தியில் வந்த பேட்டி பற்றி சொல்கிறீர்களோ... நான் கூட அதுபற்றி பதிவிட்டிருந்தேன். அப்புறம் நீண்டநாட்களுக்கு பிறகு சுஜாதா (திருமதி சுஜாதா) அதுபற்றி விளக்கமும் கொடுத்திருந்தார்.​

      நீக்கு
  22. ஆஆஆ கோயிலில் கூட்டம் இல்லையோ... எப்ப்போ உங்களுக்கு நிதானமான தரிசனம் கிடைக்கோணும் என இருக்கோ அப்போதான் கிடைக்கும்.. இம்முறை அது கிடைச்சிருக்கு.

    ஒரு பிரயாணமும் சரி, எக்ஸாமும் சரி... மிக மிக தைரியமாக இதெல்லாம் ஜூஜூபி எனக்கு என்பதுபோல நினைச்சுக் கொண்டு மிக தைரியமாகப் போனால் அது கவிட்டுப் போடும்..

    எப்போ பயந்து நடுங்கிக்கொண்டு போகிறோமோ.. அப்போ மிக நன்றாக இருக்கும்.. இது அனுபவம், ஆனா இவை தானாக வர வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் திருப்பதி கதையை ஞாபகப் படுத்துகிறீர்கள். சரியா?!!

      நீக்கு
  23. //எங்கள் அலுவலகத் தோழி அத்தி வரதரைப் பார்த்துட்டு வந்து அவர் கன்னங்களையும் ஒப்பிலியப்பன் கன்னங்களையும் ஒப்பிட்டுப் பேசி இருந்தது ஞாபகத்துக்கு வந்தது. ஆமாம்ல...?///

    ஆஆஆஆஆஆஅ ஒபிஸ்ல இதுதான் நடக்குதோ?:) இது பொஸ் க்கு தெரியுமோ?:) ஐ மீன் வீட்டு பொஸ் அல்ல ஒபீஸ் பொஸ் ஐக் கேய்ட்டேன் ஹா ஹா ஹா...

    அத்திவரதரின் கன்னம் எப்படி இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்தி வரதரின் கன்னம் ஒப்பிலியப்பன் கன்னம் போலவே இருக்கும்.

      பாஸுக்கு அவிங்கள நல்லாவே தெரியும். ஸோ.. பிரச்னையில்லை!

      நீக்கு
    2. ஒப்பிலியப்பன் கன்னம் எப்படி இருக்கும் ஶ்ரீராம்?:)

      நான் சொன்னது ஒபிஸ் பொஸ் கேட்டால், வேலை செய்யாமல் ஊர்க்கதை பேசுவதாக நினைக்க மாட்டார்ர் ஹா ஹா ஹா:)

      நீக்கு
    3. //ஒப்பிலியப்பன் கன்னம் எப்படி இருக்கும் ஶ்ரீராம்?:)//

      ஒப்பிலியப்பன் கன்னம் அத்திவரதரின் கன்னம் போலவே இருக்கும் அதிரா. (எதிர்பார்த்திருப்பீர்கள்)

      நீக்கு
  24. ஆஆஆ பூமாப்பிள்ளை உங்கள் தலையில தொட்டதோ ஸ்ரீராம், ஹையோ நான் கிட்டப் போகவே மாட்டேன்ன்.. எனக்குப் பயமோ பயம், அதுவும் சில கோயில் யானைகள் திடீரென மதம் கொண்டு தாக்கும் வீடியோக்கள் சிலதைப் பார்த்ததிலிருந்து, என்னால் முடியவே முடியாது. குழந்தை இளங்குருத்துப் பயமறியாது. 4 வயசில இவ்ளோ பேசுறா அழகா.

    ஓ உங்கள் மகன்கள் இருவரும் ஒரே நட்சத்திரமோ? எங்கள் இருவரும் ஒரே ராசி, ஒரே நம்பர் ஹா ஹா ஹா. அதேபோல நானும் கணவரும் ஒரே ராசி ஒரே நம்பர்.. ஆனா நட்சத்திரங்கள் வெவ்வேறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூமாவிடம் மூன்று முறை ஆசீர்வாதம் வாங்கினேன். அதில் இரண்டுமுறை போட்டோ எடுக்கப் படுவதற்காக...

      நீக்கு
    2. ஆஆஆஆ அந்த போட்டோ எங்கே:) வரும் வழியில் துலைச்சிட்டீங்களோ?:)

      நீக்கு
    3. இல்லையே... பத்திரமா வச்சிருக்கேன்!!

      நீக்கு
    4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
  25. //"இன்னும் மூன்று நாள் பார்... கேட்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்" என்றார் குரு.

    இரண்டாவது தினமே அவனுக்கு ஞானம் பிறந்தது.

    உங்களுக்கு?//

    ஆஆஆஆஆஆ ஹா ஹா ஹா ஒரு கை ஓசை கேட்க வாய்ப்பில்லையே:)).. ஆவ்வ்வ்வ்வ்வ் மீக்கும் ஞானம் பிறந்திட்டுதூஊஊஊஊஉ 2ம் தடவையாக:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைநெல்லாம் ரொம்ப ஆராயக் கூடாதுன்னு எனக்கும் ஞானம் பிறக்குது!

      நீக்கு
  26. /// யார் ஜாடையோ தெரியவில்லை?///

    ஆஆஆஆஆஆஆஆ இதிலென்ன ஜந்தேகம்:)) அப்படியே அஞ்சுதேன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா.. ஹையோ ஆண்டவா படிச்சதும் கிழிச்சிடுங்கோ.. இனி வந்திடுவா இங்கின:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா மியாவ் வந்து படிச்சிட்டேன் நீங்க பேப்பரில் எழுதறேன்னு நினைச்சி சுவற்றில் கீறி வச்சிட்டீங்க அது மறையாதது :)

      நீக்கு
  27. அன்னா வுக்கு சுகர் கூடிவிட்டது போலும் ஹா ஹா ஹா அப்படி எனில்தான் இது சாத்தியம்:)) ஹையோ ஆண்டவா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னா அப்போது ஏற்கெனவே ஒல்லி... இதுல உவி வேற...

      நீக்கு
    2. @ஹலோ மியாவ் அன்னா யார் னு தெரியுமா ??

      நீக்கு
    3. அது அஞ்சு முதல்ல, அண்ணா வைத் தப்பா எழுதிப்போட்டார் என நினைச்சேன்... பின்பு பார்த்தால் அது எழுத்துப்பிழை இல்லை என்பதனால்.... அன்னு, அம்மு... போல இது அன்னா வாக்கும் என வுட்டுட்டேன்ன்ன்ன்ன்ன் :)

      நீக்கு
    4. Anna Hazare (born 15 June 1937) is an Indian social activist. He is known for developing a village called Ralegaon Siddhi in India. He played a large part in the 2011 Indian anti-corruption movement.

      நீக்கு
  28. //கோமதி அக்கா ஆத்துக்காரர் அரசு ஸார் எழுதிய புத்தகம்.//
    ஆஆஆஆஆஆஆஅ மாமாவும் புத்தகம் வெயிட்டிருக்கிறாரோ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

    கோமதி அக்கா இது ஞாயமோ?:) நமக்குச் சொல்லாமல் ரகசியமாக பேஸ்புக்கில் சொல்லியிருக்கிறீங்க:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த படங்கள் அலைபேசியில் எடுத்த படங்கள் அப்படியே முகநூலில் போட்டு விட்டேன்.
      படங்களை வலையேற்றி பதிவு எழுத வேண்டுமே ! சோம்பல் தான் விரைவில் வரும்.
      வாழ்த்துக்களுக்கு நன்றி நன்றி.
      பதிவுகளின் பின்னூட்டத்தில் குமகோணத்திற்கு போய் வந்தேன் என்று காறண்ம சொல்லி இருக்கிறேன் அதிரா.

      நீக்கு
  29. பூமாவும் குழந்தையும் பதிவு நன்றாக இருக்கிறது. அந்த அம்மாவுக்கு குழந்தையை யானையிடம் கொண்டுவந்துவிடுவதில் ஒரு அலுப்பு! என்ன செய்ய, இந்த மாதிரி ஆசைக் குழந்தைகள், தைரியக் குழந்தைகள் அந்த மாதிரி அலுப்பு அம்மணிகளுக்குத்தான் பிறக்கும் என்பது ஆண்டவன் கட்டளை!

    நிம்மதியான தரிசனத்தை ஆண்டவன் தந்தாலும் வெளியே ஓடுவதிலேயே பக்தன் குறியாயிருந்தால் எப்படி? கோபுரப் படங்கள் நன்றாக வந்துள்ளன.

    சுஜாதாவுக்கு ஜென் கதைகள்மீது ஒரு ஈர்ப்பு எப்போதும்! இரண்டாவது நாள் வந்த ஞானம்.. மூன்றாவது நாள் வரவேண்டியது, ஒரு நாள் முன்னாலேயே வந்துவிட்டது. பயம்! ‘கதை’ முடிஞ்சிடுச்சின்னா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்.. அந்த அம்மா அப்படி எல்லாம் அலுத்துக் கொள்ளவில்லை. கொஞ்சம் பெருமையாகத்தான் காணப்பட்டார்.

      தரிசனம் முடிந்துதான் வெளியே வந்தேன்!

      நீக்கு
    2. //.... " என்றாள் அலுப்பான ஒரு புன்னகையுடன் அந்த அம்மா.//

      இது வேற அலுப்போ !

      நீக்கு
  30. சொல்ல வந்ததைச் சொல்லிச் செல்லும் விதமும் படங்களும் எழுத்தும் நடையும் மிகவும் ரசிக்க வைத்தது குட் கீப் இட் அப்

    பதிலளிநீக்கு
  31. ஒப்பிலி அப்பன் கோவிலுக்குச் சென்றிருக்கிறோம் தெருவோரத்தில் இருக்கும் கோவில் தானே இப்போதெல்லாம்நினைவுகள் ஷார்ப்ப்பாக இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். தாண்டிச் செல்லும்போது தெரு முனையில் இருக்கும் கோவில்தான்.

      நீக்கு
  32. நானும் கும்பகோணம், சங்கரன் கோவில் யானைகளை படம் எடுத்து இருக்கிறேன் . பதிவில் போடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  33. எனக்கு தலை சுத்தி சுத்தி குழம்புது :) இது ஸ்ரீராமின் எழுத்து walk தானா ?? அபப்டியே யார் எழுத்தையோ கண் முன் கொண்டருது யாருதுன்னு தான் புரியலை ..ஆனாலும் வித்யாசமா உரையாடல் போலிருக்கு .
    பூமா முகமெல்லாம் சிரிக்கிறா பூ மாரி :) பொழிவது போல் .
    அந்த பெண் குழந்தை இதே குணத்துடன் வளரட்டும் பிற உயிர்களிடத்து இப்படி அன்பு காட்டுவது பெரிய விஷயம் .
    இளங்கன்றுக்கு யானையின் அளவு உயரம் ப்ரமாண்டமேலாம் தெரியல பாருங்க அதுதான் குழந்தை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்.. ரொம்ப நாளுக்கு அப்புறமா வருகை. எப்படி இருக்கீங்க? என்ன இப்படிக்கு கேட்டுட்டீங்க... என் எழுத்துதான். கொஞ்சம் வித்தியாசப்"படுத்தலாமே"ன்னுதான்!​ யார் ஞாபகம் வந்தது?

      பயப்படும் குழந்தைகளைதான் பார்த்திருக்கிறேன். இப்போதான் இப்படி ஒரு குழந்தையைப் பார்த்தேன்.

      நீக்கு
  34. //நாங்கள் ஓரளவு திருப்தியாகி வெளில வந்தும் கூட பாஸ் வரமாட்டேங்கறார். திரும்பத்திரும்ப அங்கேயே நிக்கறார். பாஸோட இதே ரவுஸாப் போச்சு.//

    ஸ்ஸ்ஸ் :) இது எல்லா பெண்மணிகளும் இப்படித்தான் பெரும்பாலும் ...கோயில் ஆலயம்லாம் அவங்க பிறந்தகம் மாதிரி .எனக்கு எந்த இடத்துக்கு போனாலும்காரில் ரிட்டர்ன் எங்க சர்ச் வழியா வந்து அதை பார்த்துட்டு ஹாய் சொல்லணும்
    சில விஷயங்கள் உணர்வோடு கலந்தவை அதை சொல்ல வார்த்தைகள் இல்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிகிறது! அல்லது புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்!

      நீக்கு
  35. இப்போ என்ன :) உங்களுக்கு அன்னா வை விட வெயிட் குறைய ஐடியா தரட்டா :) 3 வேளையும் கீரை ஜூஸ் மட்டும் குடிங்க :)
    ஒப்பிலியப்பன் vs அத்திவாரதர் ரெண்டு பேர் முகத்தையும் போட்டிருந்தா நாங்களும் பார்த்திருப்போமே .

    கோமதி அக்காவின் அரசு வாழ்த்துக்கள் .

    ஒரு கை ஓசை :) எனக்கெல்லாம் உடனே ஞானம் வந்திருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெந்நீர் குடிச்சாலே போதும்னு கூட மருத்துவர் சொல்றார். எனக்கெங்கே பொறுமை?!!

      நீக்கு
    2. 7 நாட்கள் வெறும் தேங்காய்ச்சொட்டு சாப்பிட்டே இருக்கலாமாம்:)

      நீக்கு
  36. ஓப்பிலியப்பன் கோபுர தரிசனம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. எங்கள் குடும்பத்திற்கும் ஒப்பிலியப்பன் தான் குலதெய்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அப்படியா ஜீவி ஸார்? வருடா வருடம் சென்று வருகிறீர்கள்தானே?

      நீக்கு
  37. ஒப்பிலியப்பனின் அதிகாலை 5.30 மணியளவிலான தரிசனத்திற்காகவே இரவு அங்கேயே தங்குகிற மாதிரி நாங்கள் போவதுண்டு.
    கோபுரத்திற்கு நேர் எதிரே இருக்கும் சன்னதி தெருவில் ஆண்டவன் ஆசிரமம் என்ற பெயரில் தங்கும் விடுதியில் தங்குவது வழக்கம். முன்னாலேயே இந்த நேரத்திற்கு வருகிறோம் என்று போன் பண்ணி சொல்லி விட்டால் குறித்துக் கொள்கிறார்கள். தொலைபேசி எண்: 0435- 2463138

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகூர்த்த நாட்களைத் தவிர. அதுபோல சார்ங்கபாணி கோவில் பின்புறம் ஆண்டவன் ஆஸ்ரமத்திலும் அப்படித்தான். ஆ.ஆ - ஏசியோடு 1000, ஏசி இல்லாம 550ன்னு ஞாபகம்.

      நீக்கு
    2. ஆமாம். 4 பேர்ன்னா 1209/-
      3 பெட்ரூம் அறையும் இருக்கு!

      நீக்கு
    3. அடுத்த வருடம் உதவலாம் ஜீவி ஸார்.

      நீக்கு
    4. அடுத்த வருடம் அந்த கிராமம் இன்னும் முன்னேறி விடும்

      நீக்கு
  38. கோபுரத்திற்கு பக்கவாட்டு வடக்குத் தெருவில் V.G. Sakthi Divine Mess என்று ஹோட்டல் இருக்கிறது. டிபன், மதிய சாப்பாட்டாற்கு உகந்தது. மற்ற சின்ன மெஸ்களில் முதலிலேயே சொல்லி வைத்திருந்தால் குறிப்பிட்ட நேர்த்தில் மட்டும் ஏதாவது சிற்றுண்டி கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்லி இருந்த மாதிரி, மகன்கள் அந்த ஊரில் சாப்பிடவேண்டாம் என்று சொல்லி இருந்தார்கள்!

      நீக்கு
  39. மனதிற்கு இசைவான தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!