வியாழன், 8 ஆகஸ்ட், 2019

காசி வந்த பலன் எனக்கு, (அதில்) சோழி பலன் உனக்கு

இரவு ஒன்று முப்பது சுமாருக்கு வாரணாசி வந்து சேர்ந்தோம்.  எங்கள் எண்பது பேரின் பேக்கேஜ் அங்கேயே தமிழ்நாடு ஹோட்டலில் ஒரு அறையில் வைத்து விட்டு வந்திருந்தோம்.  

  தேவையான பொருட்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு கயா சென்றிருந்தோம்.  இதற்காக ஒரு பெரிய அறையை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அறைகளை ஒப்படைத்து விட்டிருந்தோம்.  விட்டிருந்தோம் என்று சொல்லக்கூடாது, டிராவல்ஸ் காரர்கள் அந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தார்கள்!



திரும்பி வந்த நாளில் அதே ஹோட்டலில் இடம் கிடைக்கும் என்று நினைத்திருந்தோம்.  அப்படிதான் பாலாஜியும் சொல்லியிருந்தார்.  பின்னர் வழியிலேயே, அங்கு இடம் இல்லை என்று ஆகிவிட்டது, ஹோட்டல் பிராட்வேயில் அறை புக் செய்திருப்பதாய்ச் சொன்னார்.  அதற்கு காரணம் நான் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி அவர்கள் ஏற்பாட்டின்படி ஒரு அறைக்கு ஐந்து பேர்கள் என்று சொல்லி இருந்தார்கள்.  அவர்கள் ஏற்பாடு செய்திருந்தது நான் ஏஸி அறைகள்.  நாங்கள் ஏஸி அறைகள் எங்களுக்குச் சொல்லியிருந்தோம்.  மேற்கொண்டு ஆகும் பணத்தை தனியாகக் கொடுத்து விடுவதாக ஏற்பாடு.  அதனால் எங்களுக்கான ஏசி அறைகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தங்கி இருந்த அறை 


அறையிலிருந்த ஒரு ஜன்னல் வழியே...


அந்த ஹோட்டல் ரிஸப்ஷனில் வைத்திருந்த அலங்கார வண்டி!


இரவு சுமார் ஒன்று முப்பதுக்கு நாங்கள் இங்கு வந்து விட்டோம்.  அங்கேயே அதாவது ஹோட்டல் தமிழ்நாட்டில் ரூம் ஏற்பாடு செய்ய பட்டிருந்தவர்கள் அவர்கள் அங்கு   சென்றார்கள்.  எங்கள் பெட்டியை மறுநாள் காலை எடுத்துக் கொள்ள ஏற்பாடு.  எனவே நாங்கள் ப்ராட்வே ஹோட்டலில் இறங்கினோம்.  அறைக்குச் சென்று உறக்கம்!



எங்களுடன் வந்திருந்த ஒரு நண்பர் காபி குடிக்க மாட்டார்.  அவர் தேநீர்தான் குடிப்பார்.  அவ்வப்போது கடைக்குச் சென்று தேநீர் அருந்தி வருவார்.  இன்று நானும் அவருடன் தேநீர் குடிக்கச் சென்றேன்.



தேநீர்க் கடையிலிருந்து ஹோட்டல் தமிழ்நாடு செல்லும் சாலை!


அந்தக் கடையில் விறகு அடுப்பு அல்லது கரி அடுப்பு.  அந்த அடுப்பு அவ்வப்போது விசிற வேண்டுமே...   அதற்கான ஏற்பாடு - மின்விசிறி.  நாங்கள் படம் எடுப்பதை பெருமையான புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.  மண்குவளையில் தேநீர் குடித்தோம்.



தமிழ்நாடு ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த எங்கள் பெட்டியுடன் திரும்பி வந்தோம்.  






தாண்டிச் செல்லும் வழியில் வடைக்கடை தேடும்போது இந்தக் கடை கண்ணில் பட்டது.  இட்லி பஜ்ஜி என்றார்கள்.  விடாமல் வாங்கிச் சுவைத்தேன்!  நன்றாகவே இருந்தது.  சாம்பாரும் சட்னியும் உண்டு.  

தங்கியிருந்த இடத்தில் காலை எழுந்து காபி வந்து அதையும் குடித்திருந்தேன்!  அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் பூரி கிழங்கு வந்தது.  



தம்பதி பூஜை செய்வோரை அழைத்துக்கொண்டு பாலாஜி  கிளம்ப, பிரசாந்த் சில கோவில்களுக்குச் செல்ல யோசனை சொல்லி வண்டி ஏற்பாடு செய்தார்.  அந்த வண்டியையே மறுநாள் ஏர்போர்ட்டுக்கும் புக்செய்து கொள்ளலாம் என்றும் சொல்லியிருந்தார்.   





காலையே பெரும்பாலும் பேக்கிங் முடித்து விட்டோம்.  ஒன்றிரண்டு பொருட்கள் மட்டுமே உள்ளே வைக்கவேண்டும்.

பிர்லா மந்திர் உள்ளே...



காசி விஸ்வநாதர்-  பிர்லா மந்திர் உள்ளே 


மெதுவாய் பதினோரு மணிக்குமேல் கிளம்பி விட்டுப்போன அந்த சில கோவில்களை பார்க்கச் சென்றோம்.  அன்று முழுவதும் வாரணாசியில்தான்.  இவர்களது திட்டத்தில் இது ஒருகுறை.  முதல் நாள் கயாவில், புத்தகயாவில் ஒன்றுமே பார்க்க முடியவில்லை.  ஆனால் மறுநாள் ஞாயிறு அன்று வாரணாசியில் வெட்டியாய் நாள் முழுவதும்...

நாங்கள் முதலில் சென்றது காசி விஸ்வநாத் கோவில் பிர்லாவினால் கட்டப்பட்டது.   பனாரஸ் ஹிந்து யூனிவர்சிட்டியினுள் இருக்கிறது.  (BHU)


  உள்ளே நந்தியம்பெருமானுக்கு அருகே ஒருவர் அமர்ந்திருந்தார்.  வருகிறவர்கள் கையில் எல்லாம் ஒரு கலர்க் கயிறினைக் கட்டி விட்டு நெற்றியில் பட்டையாய் அழகாய், நேர்த்தியாய் விபூதி பூசி விட்டு, குங்குமம் வைத்து ஏதோ மந்திரம் சொல்லி அனுப்பினார்.  ஆளுக்கு பத்து ரூபாய் தட்டில் போட்டோம்.


வெளியே வரும்போது அந்த வளாகத்துக்குள் கண்ணில் பட்ட காட்சிகள்...



யார் இந்த மஹரிஷி?



 அரை மணி அங்கு இருந்திருப்போம்.  பின்னர் சென்றது ஹனுமான் மந்திர்.  அங்கு கேமிரா அனுமதி இல்லை.  சங்கடமோட்ச ஹனுமான் என்று பெயர்.  சில நாட்களுக்கு முன்னால் இங்கு குண்டு வெடித்ததால் ஏகப்பட்ட பாதுகாப்பு.  உள்ளே செல்லும் வழியில் வெளியே இறக்கி விடப்பட்டோம். 

கிராம வீடுகளில் தோட்டம் என்று எதிரேயோ,  சற்று தூரத்திலோ வைத்து படல் கதவு வைத்திருப்பார்களே...   அதுபோல!   உள்ளே சென்று நடந்தோம். நன்றாய் உள்ளே சென்றபின் சிறு கோவில்.  ஓரமாக பத்து ரூபாய் கொடுத்து செருப்புகளை வைத்து விட்டு உள்ளே நடந்தோம்.  

ஆஞ்சியைத் தரிசித்த்து விட்டு பக்கவாட்டிலிருந்த நரசிம்மர் என்று நினைக்கிறேன், அல்லது அதுதான் ஆஞ்சநேயர் சன்னதியா என்று நினைவில்லை,   அந்த சன்னதிக்குள் வரிசையில் நுழைந்தோம்.  ஒரு இளம்பெண் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்.  கன்னங்களை உப்பவைத்து,  நாக்கை வெளிநீட்டி மடித்து, கண்களை பெரிதாக்கி, நரசிம்மர் போலவும், ஹனுமான் போலவும் தோற்றம் காட்டி உக்ரம் காட்டிக் கொண்டிருந்தார். 

முகம் எல்லாம் சிவந்திருக்க, ஒரு வார்த்தை பேசவில்லை.  ஸ்வாமி விக்ரகத்தைப் பார்த்தவண்ணமே உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருந்தார். அவரை,  அவர் கணவர் என்று நினைக்கிறேன்,  இரண்டு உறவினர்கள் உதவியுடன்,  மெதுவாய் வெளியே நகர்த்திக் கொண்டு வந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்.  அங்கிருந்த பண்டாக்களும் சரி,  மற்றும் வழிபாட்டுக்கு வந்திருந்த பக்தர்கள் வரிசையும் சரி,  இது மாதிரி ஒரு சம்பவமே நடக்கவில்லையென்பது போலவும், ஏதோ என் கண்ணுக்குதான் இந்தக் காட்சி தெரிகிறதோ என்று சந்தேகப்படும் அளவும் அவரவர் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

வெளியே வரும் வழி வேறாக இருக்க, வெளியே வந்து பார்த்தால் நாங்கள் வந்த வண்டி அந்தப் பக்கம் நின்றிருக்க,  எங்களை வெளியே அனுப்பிய துப்பாக்கி வைத்திருந்த காவலர்களுக்கு புரிய வைத்து வந்த வழியே திரும்பி உள்ளே சென்றோம். அதற்கு அவர்கள் லேசில் அனுமதிக்கவில்லை.  நாங்கள் மறுபடி வந்த வழியே வெளியே செல்லும் வரை எங்கள் மேல் கண்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள்!  எங்களைத்தவிர வேறு யாரும் அந்தப் பாதையில் வெளிவரவுமில்லை!






அடுத்ததாய் நாங்கள் சென்றது துர்கா மந்திர்.  காவி அடித்தது போல கோவில் முழுவதும் தகதகவென சிவப்புக்கலரில் மிளிர்ந்தது.  உள்ளே தூண்கள் தங்க நிறத்தில் இருந்தன.  பிரகாரங்களில் தண்ணீர் விட்டுக் கழுவியதுபோல இருந்தது.  வழுக்கி விழாமல் படிகளில் இறங்கி ஜாக்கிரதையாய் நடந்தோம்.  உள்ளே சிலர் புகைப்படம் எடுத்தார்கள்.  நான் எடுக்கவில்லை.




அடுத்ததாய் சென்றது துளசி மந்திர்.    இதைப்பற்றி விவரம் ஒன்றும் ஞாபகமில்லை!!  சில படங்கள் மட்டும்!  இந்தக்கோவில் வாசலில் பெரிய அண்டாக்களில் பால் வைத்து காய்ச்சி மசாலா அல்லது பாதாம்பால் போல தயார் செய்து கொண்டிருந்தார்கள்.  நான் குடிக்க ஆசைப்பட்டும், உடன் வந்தவர்கள் நிற்காமல் சென்றுகொண்டே இருக்க, சுவைக்க முடியவில்லை.




காசி புகைப்படங்கள் புத்தகம் ஒன்றும் இன்னொரு புத்தகமும் ஒவ்வொன்றும் இருபது ரூபாய் என்று வாங்கிக்கொண்டேன்.





கடைசியாய் சென்றது சோழி அம்மன் ஆலயம்.  இந்த அம்மனுக்கு வேறு பெயரும் சொன்னார்கள்.  சட்டென நினைவுக்கு வரவில்லை.  மிகச்சிறிய கோவில்.   இங்கு 20 ரூபாய்க்கு சோழி வாங்கி கொண்டு படி ஏறி பிரகாரம் சுற்றி அம்மன் சன்னதி வாசல் சென்றோம். சோழிகளை வாங்கி ஒரு ரவிக்கைத் துண்டுடன் கொடுக்கவேண்டும்.  




ஒரு சோழியை எடுத்து கப்பில் வைத்துக் கொண்டு மற்ற சோழிகளை அந்த ரவிக்கைத் துண்டுடன் அம்மன் மேல் தூக்கிப் போடச் சொல்கிறார்.  போட்டோம்.    அப்படிப் போடும்போது அவர் ஒருமந்திரம் சொல்கிறார். அதன் முடிவில் "காசி வந்த பலன் எனக்கு, (அதில்) சோழி பலன் உனக்கு" என்று சொல்லி முடிக்கிறார்.  அந்த சோழியை ஊர் வந்ததும் ஸ்வாமியிடம் வைக்க வேண்டுமாம்.


அந்தக் கோவிலிலிருந்து திரும்பும் வழியில் (அல்லது செல்லும் வழியில்!) கண்ணில் பட்ட ஜீப்.



மாலை அறைக்குத் திரும்பினோம்.  அப்புறம் ரெஸ்ட்தான்.   நடுவில் பெட்டியை எடுத்துக் கொண்டு சென்று வெயிட் பார்த்து பதறினோம்.  ஏகப்பட்ட வெயிட் காட்டியது.   எதை கையில் எடுத்துச் செல்வது, எதை லக்கேஜில் போடுவது என்று நீண்ட நேரம் குழப்பம்.  மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தேன்!

இரவு சப்பாத்தியும் ஒரு உருப்படாத கூட்டும் டின்னர்.  சமையல் கலைஞர்களுக்கு காசு கலெக்ட் பண்ண ஒரு குழு முனைந்தது.  அவர்களே கேட்டிருப்பார்கள் போலும்.  ஏதோ ஒரு ரவுண்ட் கணக்கு வர தலா நூற்றிருபது ரூபாய் கொடுத்ததாய் நினைவு.

இனிய நினைவுகளுடன் தூங்கப்போனோம்.  மறுநாள் வீட்டில் இருக்கப்போகும் நினைவு இனித்தது.

காலை எழுந்து, நேற்று வந்த வண்டிக்காய்க் காத்திருந்து, வந்ததும் அதில் கிளம்பினோம்.  இடையிலேயே ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸ் இரண்டுமுறை நேரத்தை மாற்றி விட்டார்கள்.  எங்கே கேன்சல் செய்து வேறு ஃபிளைட்டுக்கு சொல்லி விடுவார்களோ என்கிற பயமும் இருந்தது.  நல்லவேளை அப்படி ஆகவில்லை.

இந்த ஹோட்டலில் இருந்து வெளியே கிளம்பும்போதும் உள்ளே வரும்போதும் வாயிற்காப்போன்ர்கள் தொல்லை பெரிதாக இருந்தது.  புதிய பாதையில் வருமே, அதுபோல வளைந்து வளைந்து வணக்கம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.  பலன்?  கிளம்பும்போது ஆளுக்கு ஐம்பது ரூபாய் கொடுக்கப்பட்டது!

ஏர்போர்ட் செக்கின்னில் புதிதாய் திருமணம் ஆன ஜோடி குழந்தையுடன் வந்திருக்க, அந்த குழந்தைக்கான ஆவணங்கள் சரியில்லை என்று ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

மகாகனம் பொருந்திய ஒரு பெண்மணி செக்கின் வரிசையில் நின்றிருக்க, நாங்கள் அவரைத் தவிர்த்து வேறொரு வரிசையில் சென்றோம்.  ஆனால் இந்தக் குழந்தைக் குழப்பத்தில் எங்கள் வரிசைக்கார போலீஸ்காரர் அந்தப் பக்கம் செல்ல, அந்த மகாகனம் பெண்ணிடம்தான் நாங்கள் எங்கள் ஆவணங்கள் காட்டினோம்!

ஒரு இனிய ஆச்சர்யம் என்ன என்றால் எங்களுக்கு காலை உணவை டிராவல்ஸ் குழுவினர் பார்சல் செய்து கொடுத்து விட்டனர்.  அதை ஏர்போர்ட்டில் சாப்பிட்டோம்.

என் அத்தை என்னை ஃபிளைட் நிற்குமிடம், வரும் இடம் எல்லாம் அழைத்துச் சென்று காட்டி, விளக்கினார்.  எனக்கு முதல் அனுபவம் அல்லவா?  

உள்ளே 'டிப் டீ' யின் விலையே அதிகமாய் இருக்க, குறைந்த விலையில் (ரூ 125) ஒரு காஃபி வாங்கி குடித்து வெறுப்பானோம்.  காஃபியா அது!  கர்மம்!  

தண்ணீர் பாட்டில் வைத்திருந்தவர்களை எல்லாம் கீழே கொட்டச்செய்தனர். எனது ஹேண்ட்பேக் ஓரம் கட்டி வைக்கப் பட்டிருந்தது.    அதை எடுக்க முனைந்த போது கடும் புன்னகையுடன் என்னை ஒரு அதிகாரி (மொஹம்மத் அப்பாஸி) தடுத்து நிறுத்தி ஓரம் கட்டினார்.  ஹேண்ட்பேக்கில் என்ன இருக்கிறது என்றார்.  ஸைட் ஜிப்பைத் திறந்து எடுக்கச் செய்தார்.  செயின் லாக்கை பெட்டியில் வைக்க மறந்து விட்டிருந்தேன்.  140 ரூபாய்!  அது அங்கு ட்ரேயில் போடப்பட்டது.  அப்புறம் காசியில் வாங்கி வைத்திருந்த ஏதோ ஒன்றிரண்டு மெட்டல் பொருள்கள்.  மறுபடி மறுபடி ஸ்கேன் செய்து பார்த்த வண்ணமே இருந்தனர்.  அப்புறம் போகச் செய்தனர்.



ஒரு வழியாய் எங்கள் ஃபிளைட் வர, ஒன்பதே முக்கால் மணிக்கு ஏறி அமர்ந்தோம்.  பிளைட் ஏறும்வரை புகைப்படக் கடமைகளை முடித்துக்கொண்டேன்.  ஜன்னல் இருக்கை எனக்கு அமையாதது ஒரு சோகம்!  



இரண்டு மணி நேரம்.  




பனிரெண்டே முக்கால் மணி சுமாருக்கு சென்னை வந்து சேர்ந்தோம்.   எங்கள் ஆஸ்தான ஆட்டோவை ஏற்கெனவே ஃபோன் செய்து வரச் சொல்லியிருந்தேன்.  மிக முன்னதாகவே வந்து காத்திருந்தார் கருப்பையா.  வீடு வந்து சேர்ந்தபோது ஏப்ரல் பதினைந்து மதியம் ஒன்றேகால் மணி!

ஏப்ரல் மாதத்தில் ஒன்பது நாட்கள் சென்று வந்த ஒரு டூரை என்னால் முடிந்தவரை ரப்பராய் இழுத்து விட்டேன்.  இது பதினாறாவது வியாழன்!  பொறுமையாய்ப் படித்துக் கருத்திட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.  

ஆரம்பத்தில் நல்ல டிராவல்ஸ் மூலம் சென்று வந்ததாகவே நினைத்தேன்.  சொல்லவும் செய்தேன்.  ஆனால் பயணக் கட்டுரைக்காக நான் சென்றுவந்த இடங்கள் பற்றிய விவரங்கள் சேர்த்தபோது நிறைய இடங்களை மிஸ் செய்திருப்பது தெரிந்தது.  அதையும் சொல்லி இருக்கிறேன்.  ஆனாலும் எனக்கு அதனால் பெரிய மனக்குறை இல்லை.  வடநாட்டுப் பக்கம் சென்ற முதல் அனுபவம்.  நான் பார்க்காத இடங்கள் பார்த்து வந்ததும், கயா ஸ்ராத்தம் செய்ததும் சந்தோஷம்.  

சுருக்கமாக எழுதி விடலாம் என்று எண்ணியபோது என்னை நீளமாக எழுதத்தூண்டிய நெல்லைத்தமிழனுக்கு நன்றி.   கேஜிஜியும் விளக்கமாக எழுத ஊக்குவித்தார்.  மற்றவர்கள் ஊக்குவிக்கவில்லையா என்று நினைக்க வேண்டாம். இவர்கள் ஆரம்பப் புள்ளிகள்.  எல்லா வாரங்களும் நான் பகிர்ந்த இரண்டாம் தரமான புகைப்படங்களை ரசித்து,  'பக'வையும் பகபகவென சிரிக்காமல் ரசித்த அனைத்துப் பதிவுலக சகோதரர்களுக்கும் நன்றி...  நன்றி...   நன்றி!

- நி - றை - ந் - த து -


========================================================================================================


இப்படியும் சமாளிக்கலாம் இல்லை?  நான் தெரியாத கணக்கை செய்யாமலிருக்க டியூஷனில் இதேபோல சமாளித்திருக்கிறேன்!  அசடும் வழிந்திருக்கிறேன்!




=============================================================================================

வரலாற்றின் சில வரிகள்...  படித்ததை பகிர்ந்ததிலிருந்து...




=========================================================================================

'கவிதை'யைக் காணோமே என்று தேடுபவர்களுக்காக.....!!


========================================================================================

129 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிமொழிந்து வரவேற்கிறேன்.

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும், வந்திருக்கும் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் இனி வரப்போகும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள். ரேவதி கனடா பயணத்தில்! நெ.த. கும்பகோணத்தில் ஒப்பிலியப்பன் கோயிலில் இருந்து எங்கே போய்க் கொண்டிருக்காரோ?

      நீக்கு
    3. வாங்க கீதா அக்கா... நல்வரவும், வணக்கமும்.

      நீக்கு
    4. நெல்லையையும் வல்லிம்மாவையும் மிஸ் செய்கிறோம். ஏற்கெனவே இரண்டு அதிரடி சகோதரிகள் லீவ்!

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா மற்றும் தொடரும் அனைவருக்கும்

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பதிவு இறங்கவே இம்புட்டு நேரம் எடுத்து விட்டது.

    படங்கள் அட்டகாசமாக இருக்கிறதே. அதுவும் முதல் படம் அந்த ஆங்கிள் மற்றும் ஒரு கோபுரம் செமையா இருக்கு...இன்னும் கவனித்துவிட்டு வருகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.


      இரண்டு நாட்களாகவே எனக்கும் இணையம் படுத்துகிறது கீதா. தளங்களில் கமெண்ட் போட்டால் வெளியாக நேரம் எடுக்கிறது. எங்கள் பிளாக் முழுவதும் திறக்க நெடுநேரம் ஆகிறது.

      நீக்கு
    2. எப்போவும் வெங்கட் அவர்களின் வலைப்பக்கம் திறக்க நேரம் ஆகும். நேற்று எ.பி.வலைப்பக்கமும் திறக்கமுடியாமல் சிரமமாக இருந்தது. இன்னிக்குச் சரியா இருக்கு!

      நீக்கு
    3. வெங்கட் தளமாவது திறக்கிறது. எங்கள் தளம் எனக்கே திறக்க நெடு நேரமாகிறது. பின்னூட்டங்கள் பதில்கள் அளிப்பதும் சிரமமாக இருக்கிறது.

      நீக்கு
  3. ஸ்ரீராம் என்ன மாயம் செய்தீர்கள்? இதற்கு முன் ஆன பதிவுகளின் படங்களை விட இந்தப் படங்கள் செம க்ளாரிட்டி!!!

    கறுப்பு வெள்ளை (ஃபில்டர் யூஸ் பண்ணினீங்களோ!!) அட்டகாசமாக இருக்கிறது சிவப்பை விட!!!! (கலர்தான் மற்றபடி படம் அருமையா இருக்கு)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை ஓடிக்கொண்டே எடுக்காமல் ஓய்வாக எடுத்ததால் இருக்குமோ...!

      நீக்கு
  4. வழக்கம் போல சோழி பலன் உனக்கு..
    பதிவில் படித்த பலன் எனக்கு!..

    பதிலளிநீக்கு
  5. வானிலே மண்ணிலே
    நீரிலே நிழலிலே!..

    ஆகா அழகான படங்கள்... அருமை.. அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கும் நீதானம்மா...எங்கும் நீதானம்மா..!!!

      நன்றி...நன்றி...

      நீக்கு
  6. கவிதையில் சொல்லி இருக்காப்போல் இயல்பாய் இருக்கத் தான் ஆசை! ஆனாலும் சில, பல சமயங்களில் முடியறதில்லை.

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் காலை வணக்கங்களுடன் இந்நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமையவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    இதுவரை ஏனோ உங்களின் இன்றைய பதிவை என் நண்பர்கள் புதிய பதிவு லிஸ்டில் காண்பிக்கவேயில்லை. அதனால் தாமதமாகி விட்டது. பதிவை படித்து விட்டு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      காலை வணக்கம். பிரார்த்தனைக்கு நன்றி. உங்களுக்கும் இந்த நாள் இனிதாகட்டும்.

      படிச்சுட்டு வாங்க... என்னவோ நான்கைந்து நாட்களாக தளங்கள் திறக்க நேரமாகின்றன.

      நீக்கு
  8. //முகம் எல்லாம் சிவந்திருக்க, ஒரு வார்த்தை பேசவில்லை. ஸ்வாமி விக்ரகத்தைப் பார்த்தவண்ணமே உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருந்தார்//

    இந்த மாதிரி "உம்மாச்சி" வருவது எல்லாம் தமிழ்நாட்டுக்கே உரியது என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். வடக்கேயும் இப்படிப் பார்க்கிற வரைக்கும். அதுவும் மாத்ருகயா போனப்போ அங்கே ஒரு ராஜஸ்தானியக் குடும்பமும் காரியங்கள் செய்ய வந்திருந்தனர். அவர்களில் ஓர் இளம்பெண்ணை அவங்க எந்த நபருக்குக் காரியம் செய்ய வந்தனரோ அவரின் ஆவி என்று சொன்னார்கள். அது அந்தப் பெண்ணிடம் இறங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் ஒரே ஆர்ப்பாட்டம், அமர்க்களம்! ஆனால் எங்களைத் தவிர்த்து குறிப்பாக என்னைத் தவிர்த்து யாரும் கண்டுக்கலை. நம்ம ரங்க்ஸ் தான் காரியம் பண்ணுவதில் முனைந்திருந்தாரே! சத்தம் காதில் விழுந்தது என்று பின்னால் சொன்னார். ஆனால் அப்போக் கண்டுக்கலை! எனக்குத் தான் கலவரமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா அக்கா...

      சிவந்த அந்தப் பெண்ணின் முகம் மேலும் சிவந்து உணர்ச்சிகரமாக இருந்தது. எனக்கு படம் எடுக்க ஆசை. ஆனால் பயம்!!

      ராஜஸ்தானிலுமா? மாமா ஒரே கவனமுடன் காரியம் செய்திருக்கிறார்!

      நீக்கு
    2. மாத்ருகயா குஜராத்தில். அந்தப் பெண்ணும் அவர் குடும்பமும் ராஜஸ்தானில் இருந்து மாத்ருகயாவுக்குக் காரியங்கள் செய்ய வந்திருந்தனர்.

      ஆமாம். இப்போக் குட்டிக் குஞ்சுலுவும் அப்படித் தான் ஒரு வேலையில் முனைந்தால் முழு முனைப்போடு இருக்கு!

      நீக்கு
  9. படங்கள் எல்லாம் நன்றாகவும் தெளிவாகவும் வந்திருக்கு. திரும்பி வீட்டுக்கு வரப்போகிறோம்னு சந்தோஷத்திலேயே வந்திருக்கும்னு நினைக்கிறேன். இன்னும் படங்கள் பற்றி நிறைய எழுதி ஒரு கருத்துப் போட்டேன். திடீர்னு இணையப் பிரச்னை வந்து அது காக்கா கொண்டு போச்சு! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டுக்குத் திரும்பி வரும் உற்சாகம்... ஹா.. ஹா.. ஹா... இருக்கலாம். ஏனெனில் அப்போது ஆரம்பித்த பிரச்னைக்காகவும் உடனே ஊர் திரும்ப வேண்டி இருந்தது.அப்போதைய நிலையில் கயாவில் பார்க்கவேண்டிய இடங்கள் இருக்க, இங்கு இந்த நாள் முழுதும் வீணாகிறதே என்கிற எண்ணம் கூட அவ்வளவாக எழவில்லை.

      நீக்கு
  10. காசி அரண்மனை எல்லாம் பார்க்கலை போல! காசி ராஜா பிராமணர்! தேவதாசிகள் பற்றி எழுதி இருப்பதை நானும் படித்திருக்கிறேன். "மறைந்த சாம்ராஜ்யம்" நூலில். அதைப் பற்றிப் பதிவுகள் கூட எழுத ஆரம்பித்துப் பாதியில் விட்டுப் போச்சு! இப்படி எத்தனையோ முடிக்காத விஷயங்கள்! :( அந்தப் பையர் ஆசிரியரிடம் சொல்லுவது ஆங்கிலத்திலும் படிச்சாச்சு! இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசி அரண்மனை வேற இருக்கா? விட்டுட்டேனா? அடுத்த தடவை ஒரு லிஸ்ட் போட்டுக்கொள்ள வேண்டும்.

      நீக்கு
  11. இட்லி படம் போடலை! எடுக்கலையோ? பாவம் இட்லி. ஆனால் வடையைப் பார்த்தால் உங்க சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் கொடுத்ததை விட நல்லா இருந்திருக்கும் இட்லியும் எனத் தோன்றுகிறது! :P :P :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா... அது வடை இல்லை. இட்லி பஜ்ஜி. பேஸ்புக்கில் கூட அப்போதே பகிர்ந்திருந்தேனே...

      நீக்கு
    2. ஙே!!!!!!!!!!!!!!!! நான் இட்லி தனி, பஜ்ஜி தனினு நினைச்சுட்டேனே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))))

      நீக்கு
  12. ஸ்ரீராம் அறை ஜன்னல் (க்ளோஸப்பில் ஜன்னல் ஃப்ரேம் அந்தப் படம் ரொம்ப அழகாக இருக்கிறது!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா... சில படங்களை வெளியிடவில்லை. எவ்வளவுதான் படம் காட்டுவது! ஏற்கெனவே இந்தப் பதிவில் படங்கள் அதிகம்!

      நீக்கு
  13. அங்கெல்லாம் விறகு அடுப்பை விட "பத்தர் கா கொய்லா" என்னும் நிலக்கரி அடுப்புத் தான் அதிகம். அதுவே வேகமாகவும் தீவிரமாகவும் எரியும். நாங்க குளிர்நாட்களில் ஓர் வாளி குமுட்டியில் கரியைப் போட்டுப் பற்றவைத்து ஒரு பெரிய பாத்திரம் (அண்டா) நிறைய வெந்நீர் போட்டு வைப்போம். தீரத்தீரத் தண்ணீரை விட்டு விடுவோம். நாள் முழுவதும், இரவுக்கும் தேவையான வெந்நீர் சூடாகக் கிடைக்கும். குமுட்டி அடுப்பே வாளி போலத் தூக்கிச் செல்லும்படி இருக்கும். அதிலேயே தேநீர்க் கெட்டிலை வைத்துக் கொண்டு சுடச் சுடத் தேநீரும் கொடுப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... சுவாரஸ்யமான மேலதிகத் தகவல். நன்றி அக்கா. வசதியாய் இருக்கும். நாம் ஏன் அப்படி வைத்துக் கொள்வதில்லை?

      நீக்கு
    2. இங்கே சில தெருவோரத் தேநீர்க்கடைகள் தவிர்த்து எங்கேயும் விறகோ, கரி அடுப்போப் பார்க்க முடியலை. கிராமங்களில் கூட எரிவாயு அடுப்பு வந்து விட்டது. பெட்ரோலியம் எரிவாயு அல்லது சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் எரிவாயு எனப் பயன்பாட்டில் இருக்கு.

      நீக்கு
    3. சென்னையில் கூட எங்கும் நான் விறகு, கரி அடுப்பு தேநீர்க்கடை சமீபத்தில் பார்க்கவில்லை கீதா அக்கா.

      நீக்கு
  14. அந்த அலங்கர வண்டி செம க்யூட். ரசித்தேன். ஓட்டிப் பார்க்க வேண்டும் போல இருந்தது. கிட்டத்தட்ட வாட்டர் சீம் பார்க்குகளில் இருக்கும் ரேஸ் கார் போல இருக்கு டக்கென்று பார்க்க.

    தேநீர்க்கடையில் அட அந்த ஃபேன். அடியில் நெருப்பை அவ்வப்போது ஊதி விட முன்பெல்லாம் அடுப்புக் குழல் அல்லது விசிறி..இது நல்ல ஐடியா!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. மண்குவளையில் தேனீர் ஆஹா எனக்கு மிகவும் பிடிக்கும் வட இந்தியாவில் பல இடங்களில் இப்ப்டி மண்குவளையில் தருவதுண்டு. மதுராவில் மண்குவளையில்தான் மசாலா பால் தருவார்கள் கோயிலின் அருகில். செம டேஸ்டியா இருக்கும். அதுவும் பால் திக்காக மேலே பாதாம் பிஸ்தா எல்லாம் சீவிப் போட்டு ஹையோ செம டேஸ்டியா இருக்கும். அவர் கப்பில் ஆத்தும் விதமே அத்தனை கழகு மேலே உயரே தூக்கிப் பிடித்து ஓரு ஆத்து ஆத்துவார் பாருங்க கீழே சிந்தாமல் கரெக்டா கீழே உள்ள டம்ப்ளரில் விழும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ கீதா... மசாலா பால் வர்ணனை என்னை ஜொள் விடச் செய்கிறது! விட்டேனே... விட்டேனே.... சுவைக்க விட்டேனே...

      நீக்கு
  16. இட்லி பஜ்ஜி நலலருக்கும். நான் முழு இட்லி போட்டுச் செய்ததில்லை. சிறிய துண்டுகளாகிச் செய்ததுண்டு. எல்லாம் மகருக்காக. அவன் ஸ்கூல் காலேஜ் படிக்கும் வேளையில்...ரொம்ப நல்லாருக்கும்.

    உங்கள் படமும் நல்லாருக்கும்பனு சொல்லுது நீங்களும் நன்றாக இருந்ததுனு சொல்லிட்டீங்க...

    விறகு அடுப்புத் தேநீர் தனிச்சுவையுடன் இருக்குமே...

    சரி மீதி படித்து கருத்து சொல்ல மதியம் தான்...வேலைக்குக் கிளம்பணும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இட்லி பஜ்ஜி நன்றாகத்தான் இருந்தது கீதா. எதுவுமே அதன் சைட் டிஷ் உபயத்தில் இருக்கிறதே...

      தேநீர் ஸ்பெஷலாக எதுவும் இல்லை என்றாலும் சுவை குறையவில்லை.

      நீக்கு
  17. காலக் கொடுமையடா காத்தவராயா...

    இன்றைய பதிவு இங்கே இன்னும் வெளியாகவில்லையே.. ஏன்?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ ஸார்.. உங்கள் பதிவும் இன்று வெளியாகியிருக்கிறதா? அப்டேட் எதுவும் நம் தளத்தில் இல்லாததால் இல்லை என்று நினைத்துவிட்டேன்.

      நீக்கு
  18. இம்முறை விளக்கங்கள் அழகாக தொகுத்தது போலிக்கிறது.
    படங்களும் நன்றாக இருக்கிறது ஜி.

    135/ ரூபாய்க்கு டீ, சில சாலையோரக் கடைகளில் 8 ரூபாய்க்கு குடிக்கும்படி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  19. இனிய காலை வணக்கம்.

    உங்கள் முதல் வட இந்தியப் பயணம் பற்றிய தகவல்கள் சிறப்பு. படங்களும் நன்றாகவே இருந்தன. இந்த மாதிரி நீண்ட நாட்கள் பயணம் வரும்போது சில இடங்களில் சொதப்பல்களை தவிர்க்க முடியாது - அதுவும் ட்ராவல் ஏஜெண்ட் மூலம் வரும்போது! அவர்களுக்கு எது வசதியோ/லாபமோ அதை மட்டுமே செய்வார்கள். நமக்கு சுற்றுலா பொழுதுபோக்கு - அவர்களுக்கு இதுவே சம்பாத்யம்! வேலை...

    அடுத்த பயணம் விரைவில் உங்களுக்கு அமையட்டும்.

    ஏர்போர்ட் உணவு - பெரும்பாலும் த்ராபையாக இருக்கும். உண்பதோ, பானங்கள் அருந்துவதோ இல்லை. சில விமானங்களில் தரும் உணவு யக்! வகை... ஏன் சாப்பிட்டோம் என்று ஆகிவிடும்.

    இன்றைக்கு ஸ்ரீராம் பிசி போல! இன்னும் என் பக்கத்திற்கு வரவில்லை! கீதாஜி மட்டுமே வந்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். வணக்கம்..

      பயண கட்டுரை பற்றிய பாராட்டுகளுக்கும், தகவல்களுக்கும் நன்றி. உண்மைதான். டிராவல்ஸ் காரர்கள் அவர்கள் லாபத்தை, பிழைப்பைப்பார்க்கிறார்கள்!

      இன்றைக்கு காலை ஆறரை மணி வரையிலும் கூட உங்கள் பதிவு எனக்கு அப்டேட் ஆகவில்லையே.. பார்த்துக் கொண்டே இருந்தேன். அதனால் வரவில்லை.

      நீக்கு
    2. உங்கள் ப்ளாக்! எங்கள் விருப்பம் !! Gadget-ல் கூட வரவில்லை... Something wrong...!

      நீக்கு
    3. அப்படியா? என்ன ஆச்சோ தெரியவில்லையே...

      நீக்கு
  20. கயா யாத்திரை பற்றி முடிந்த அளவு எழுதியதுக்கு நன்றி. இந்த யாத்திரை சம்பந்தமான கேள்விகள் அடுப்பப்பட்டால் அடுத்த வாரத்தில் பதிலளித்து விடுங்கள்.

    ‘உருப்படாத கூட்டும்’ - இந்த வார்த்தை டிராவல்ஸின் கேடரிங் பற்றி முழுமையாக சொல்லிவிட்டது.

    வந்தபிறகு எழுதறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லைத்தமிழன். உங்கள் பயணத்துக்கு நடுவே இங்கே எட்டிப்பார்த்திருப்பது சந்தோஷம் தருகிறது.

      நீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  22. காசி பயண அனுபவங்கள், படங்கள் எல்லாம் அருமை.
    படங்கள் நன்றாக வந்து இருக்கிறது.

    படம் எடுக்க அனுமதி உள்ள இடத்தில் ஏன் எடுக்க வில்லை?
    படம் எடுக்க மனதை கவரவில்லியயா?

    உணவு நம் எதிர்பார்ப்பு போல் இருக்காது பயணத்தில்.
    காபி கடைகளில் (வடநாட்டில்) நன்றாக இருக்காது.
    அதுவும் ஏர்போர்ட்டில் குடிக்கவே கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுகளுக்கு நன்றி கோமதி அக்கா. அனுமதி இருந்தது என்று அர்த்தம் இல்லை. அங்கு படம் அடுத்தவர்களை யாரும் கண்டிக்கவில்லை. ஏனோ எனக்கு அங்கு படம் எடுக்கத் தோன்றவில்லை!உணவில் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை அக்கா. ஆனாலும் ஓரளவாவது இருக்க வேண்டாமா?!!! ஏர்போர்ட்டில் காஃபி குடிக்கும் ஆசை இனி வராது!

      நீக்கு
  23. அறையிலிருந்த ஒரு ஜன்னல் வழியே...//

    அந்த படம் ஓவியம் சுவரில் தொங்கவிட்டது போல் இருக்கிறது, அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவரில் தொங்க விடப்பட்டது போல --- பாராட்டுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  24. பயண விவரங்கள் செம... படங்கள் அருமை...

    “அம்மா இந்த சோழி உனக்கு... காசி யாத்திரை பலன் எனக்கு...” என்று இன்னொரு வலைநண்பர் பதிவில் வாசித்தேன்...

    மஹரிஷி - ஐயன் போல் தெரிகிறார்... ஆமாம் பிள்ளையார் இருக்க வேண்டிய இடத்தில் அவருக்கு என்ன அங்கு வேலை...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க DD... நன்றி.

      மகரிஷி அப்படிதான் தெரிகிறார்! மரத்தடிகள் பிலாலியாருக்கு மட்டும் சொந்தமோ!!!!

      நீக்கு
  25. காசி புகைப்படங்கள் புத்தகம் நாங்களும் முன்பு போனபோது வாங்கினோம்.

    SMS ந்மபிக்கை, படித்தது, கவிதை பயணக் கட்டுரை என்று பதிவு அனைத்தும் அருமை.

    வாரம் ஒரு நாள் பயணத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் பயணக்கட்டுரை இத்தனை நாள் ஆகும் தான்.

    பதிலளிநீக்கு
  26. திருப்திகரமாக, பாதுகாப்பாக ஒரு வட இந்திய/காசிப் பயணம் முடிந்தது நல்லது. என்ன, அந்த பாதாம் பாலைக் குடிக்க விடவில்லை, கூடவந்த அவசரக் குடுக்கைகள்.. ஏர்ப்போர்ட்டில் வந்து காலை டிஃபன் கொடுத்திருக்கிறார்களே டிராவல்ஸ்காரர்கள், மறக்காமல்! பலே!

    //..அசடும் வாழ்ந்திருக்கிறேன்!//

    நிறைய அசடுகள் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்கிறார்கள். இனியும் இனிதே வாழ்வார்கள்.. அசடுகளின் உலகே இது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏகாந்தன் ஸார்...

      ////..அசடும் வாழ்ந்திருக்கிறேன்!////

      எங்கே இருக்கிறது என்று தேடிப்பிடித்து அப்புறமாய் திருத்துகிறேன்!

      நீக்கு
  27. //இடையிலேயே ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸ் இரண்டுமுறை நேரத்தை மாற்றி விட்டார்கள். எங்கே கேன்சல் செய்து வேறு ஃபிளைட்டுக்கு சொல்லி விடுவார்களோ என்கிற பயமும் இருந்தது. நல்லவேளை அப்படி ஆகவில்லை.//இப்படி மாற்றித் தான் எங்கள் பயணத்தையே ரத்து செய்யும்படி பண்ணிவிட்டார்கள் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை செய்பவர்கள்!:( இல்லைனா இப்போது இன்னிக்கு நாங்க வாரணாசி அல்லது பிரயாகையில் இருந்திருக்கணும். ஆனால் வட இந்திய மழை பற்றிய செய்திகளைப் பார்க்கையில் போகாதது நல்லதே எனத் தோன்றுகிறது. நம்ம பானுமதி, கோலாப்பூர், மும்பை எல்லாம் போயிட்டு இந்தப் பக்கம் வந்தாங்களோ, பிழைச்சாங்க! மஹாலக்ஷ்மி விரைவு வண்டி நடு வழியில் மாட்டிக்கொண்டு 2 நாட்கள் நின்று போனமாதிரி ஏதாவது நடந்திருந்தால்?நல்லவேளையா சரியான சமயத்துக்குக் கடவுள் அவங்களைக் கொண்டு சேர்த்துட்டார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கீதா அக்கா... நடக்கும் எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. நீங்கள் ஸ்பைஸ்ஜெட் பற்றி உங்கள் பதிவில் சொல்லி இருந்தபோது அங்கு நானும் என் அனுபவத்தைச் சொல்லி இருந்தேன் ன்று ஞாபகம்!

      நீக்கு
    2. //நம்ம பானுமதி, கோலாப்பூர், மும்பை எல்லாம் போயிட்டு இந்தப் பக்கம் வந்தாங்களோ, பிழைச்சாங்க! மஹாலக்ஷ்மி விரைவு வண்டி நடு வழியில் மாட்டிக்கொண்டு 2 நாட்கள் நின்று போனமாதிரி ஏதாவது நடந்திருந்தால்?நல்லவேளையா சரியான சமயத்துக்குக் கடவுள் அவங்களைக் கொண்டு சேர்த்துட்டார்!//உண்மைதான். பத்திரிகை யில் அடுத்த வாரம் மஹாலக்ஷமி எக்ஸ்பிரஸ்ஸுக்கு நேர்ந்த கதியைப்பார்த்து திடுக்கிட்டோம்.

      நீக்கு
  28. மறந்த வரலாறு -நாங்கள் அறிவதற்காகப் பகிர்ந்ததா? இல்லை முன்கால அரசராகப் பிறந்திருக்கலாமே என்ற ஆதங்கமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா...

      சுவாரஸ்யமாக இருக்கிறதே என்று பகிர்ந்தேன். நானும்தான் மோர்சாதம் சாப்பிட்டபின் பாயசம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்... அடுத்த பிறவியிலாவது ராஜாவாகப் பிறக்கலாமே என்று!

      நீக்கு
    2. காலசக்கரம் நரசிம்மா எழுதிய சங்க தாராவை பயணத்தின் ஊடே படித்து முடித்தேன். அதையெல்லாம் படித்தால் ராஜாவாக பிறக்கும் ஆசை வராது.

      நீக்கு
    3. பானுக்கா ஹைஃபைவ். நானும் முடித்துவிட்டேன்..உங்கள் கருத்தை அப்படியெ டிட்டோ செய்கிறேன்....ராஜா வா ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ராணீயீயீயீயீயீயீயீயீ ஆசை நமக்கு வேண்டாம் ஜாமீ!!!!!!!!! இந்த வாழ்க்கைதான் சொர்கம்...

      கீதா

      நீக்கு
    4. பானு அக்கா...

      அடடே... எப்படியிருந்தது? அதைப் படித்து விட்டீர்கள் எனில் எங்கள் விமரிசனத்தையும் படியுங்களேன்!

      நீக்கு
  29. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  30. எனது பயணத்தில் சிறிது ஓய்வு... அதனால் இந்த கருத்து...

    // காசி வந்த பலன் எனக்கு, (அதில்) சோழி பலன் உனக்கு //
    இது தங்களின் கருத்து... பதிவின் தலைப்பும் கூட...!

    // சோழியும் ஒரு ரவிக்கை துணியும் தான் படையல். “அம்மா இந்த சோழி உனக்கு காசி யாத்திரை பலன் எனக்கு” என்று இங்கு அனைவரும் பிரார்த்தனை செய்து தனது காசி யாத்திரையை முடிக்கின்றனர். இந்த அம்மனை தரிசனம் செய்யாமல் காசி யாத்திரை முடிவுருவதில்லை. //
    இது காசி யாத்திரை மேற்கொண்ட இன்னொரு வலைநண்பர் பதிவில் வாசித்த கருத்து...!

    இதற்குள் தான் எத்தனை முரண்...? நீங்கள், "பலன் எல்லாம் அன்னைக்கே (அன்றைக்கே அல்ல)"- என்று நினைத்து சமாதானப்பட்டுக் கொள்ளலாம் ... ஆனால், அந்த வலைநண்பரோ, "யாத்திரையின் பலன் தனக்கே" - என்று நினைத்து ஆர்ப்பரிக்கலாம்...! எனக்கு மேலும் என்ன தோணுகிறது என்றால் :-

    இதோ வலைநண்பரின் இணைப்பு : → காசி யாத்திரையும் பித்ரு பூஜையும்

    மோகனப்புன்னகை... - (சென்ற வார பதிவின் எனது கருத்துரையை யோசிக்கவும்)

    இதில் மோகனப்புன்னகை புரிந்தது யார்...? தாங்களா...? இல்லை அந்த வலைநண்பரா...? இல்லை தட்டில் பணம் மட்டுமே குறிக்கோள் எனும் நபரா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த லிங்க்கில் நீளமாய் இருக்கிறது DD. இருப்பினும் அந்த ஊர் முழுவதுமே பணம் பணம் என்று அலைகிறார்கள்தான். எனக்கு அப்போது தோன்றியது என்ன என்றால், நம் ஊர்ப்பக்கங்களிலும் உள்ளூர் மக்களிடம் சாதாரணமாய் இருந்துவிட்டு நம் கோவில்களிலும் வடநாட்டு, வெளிநாட்டு ஆட்களிடம் பணம் பணம் என்று கேட்பார்களோ? ஆட்டோக்காரர்களையே பார்க்கிறோம், வெளிநாட்டுக்காரர்களிடம் எப்படி வசூல் செய்கிறார்கள் என்று!

      சோழி பலன் உனக்கு... மிச்ச பலன் எனக்கு... இதற்கும் ஏதாவது புராணக்கதை இருக்கும். இந்தப் பதிவுக்கு நான் அதிகம் இணைய ஆராய்ச்சி செய்யவில்லை DD. கீதா அக்காவுக்குத் தெரிந்திருக்கலாம்!

      நீக்கு
  31. //தேவையான பொருட்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு கயா சென்றிருந்தோம். இதற்காக ஒரு பெரிய அறையை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அறைகளை ஒப்படைத்து விட்டிருந்தோம். விட்டிருந்தோம் என்று சொல்லக்கூடாது, டிராவல்ஸ் காரர்கள் அந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தார்கள்!// திருக்கயிலைப் பயணத்தின் போதும் இப்படித் தான். தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டோம். இரண்டே பைகள்! அதுவும் எடை அதிகம் இல்லாமல்! மற்றப் பொருட்கள் எல்லாம் அனைவரோடதும் சேர்த்து ஓர் அறையில் போடப்பட்டு அந்த அறை ஓட்டல்காரர்களாலும் பயண ஒருங்கிணைப்பாளர்களாலும் தனித்தனியே பூட்டப்பட்டது. பயணிகள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு லாக்கர் கொடுத்திருந்தார்கள். தேவையான பணத்தை மட்டும் சீனப்பணமாக மாற்றிக் கொண்டு எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். மற்றப் பணம் பூராவும் அவரவர் லாக்கரில் வைத்துப் பூட்டி விட்டுச் சாவியைப் பத்திரமாக அவரவரே வைத்துக்கொள்ளச் சொன்னார்கள். விலை உயர்ந்த நகையை அணிந்திருந்தாலும் அந்த லாக்கரில் வைக்கும்படி சொன்னார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. So, இது எங்கும் எப்போதும் நடக்கும் நடைமுறைதான் என்று தெரிந்துகொண்டேன்.

      நீக்கு
  32. இதுவே ட்ராவல் டைம்ஸ் ஏற்பாடு செய்த ரயில் மூலம் செய்த ஐஆர்சிடிசியின் "பாரத் தர்ஷன்" பயணத்தில் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு பேருந்துப் பயணத்துக்கு வருமாறு சொன்னார்கள். மற்ற சாமான்கள் அனைத்தும் ரயிலிலேயே இருக்கும். ரயிலில் பாதுகாவலர்கள் ஒவ்வொரு பெட்டிக்கும் இருவர் உண்டு. அவர்கள் நம் உடைமைகளைப் பார்த்துக் கொள்வார்கள் என்று ஏற்பாடு செய்திருந்தனர். அருமையான ஏற்பாடு. கொஞ்சமும் கலாட்டா இல்லாமல் குழப்பம் இல்லாமல் சுமார் ஐநூறு பேர் போனாலும் தடுமாற்றங்கள் இல்லாமல் செய்த பயணம் அது ஒன்றே! பட்டியலில் உள்ள எந்த இடத்தையும் விடாமல் கூட்டிச் சென்று காட்டினார்கள். போதுமான நேரமும் கொடுத்தார்கள். ஷிர்டி, மந்த்ராலயம், கோதாவரி, நாசிக், பஞ்சவடி, போன்ற ஊர்களுக்கு ஓர் நாள் முழுவதும் கொடுத்தனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பவும் உண்டா 'பாரத் தர்ஷன்'? நல்ல ஏற்பாடாயிருக்கே...

      நீக்கு
    2. உண்டே! சென்னை மவுன்ட்ரோடில் "ஆனந்த்"தியேட்டர் போகும் சந்தில் ட்ராவல் டைம்ஸ் அலுவலகம் இருக்கு. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையின் பக்கத்து ரோடு! அங்கே விசாரிங்க! ஐஆர்சிடிசியும் தனியாகச் செய்கின்றனர். ஆனாலும் அதைவிடவும் இது இன்னமும் நன்றாக உள்ளது. இவங்க franchise! ஐஆர்சிடிசி நேரிடையாப் பண்ணறாங்க! பயணச் சீட்டுக்கான கட்டணம் எல்லாம் நம்மால் ஏற்கும்படி தான் இருக்கும்.

      நீக்கு
    3. ஸ்ரீராம் பாரத் தர்ஷன் இருக்கு நல்ல ஏற்பாடு...கீதா அக்கா மத்த டிடெயில்ச் கொடுத்துட்டாங்க...அக்கா சொல்லிருப்பது போல் ஐஆர்டிசி விட இந்த ஏஜன்ட்ஸ்/ஃப்ரான்சைஸ் நல்லாவே செய்யறாங்க.

      ஆரம்பத்தில் ஐஆர்டிசி திருப்பதி தர்ஷன் பயணம் நன்றாகவே இருந்தது. அப்புறம் அத்தனை திருப்தியாக இல்லை...அதன் பின் போனதில்லை...

      கீதா

      நீக்கு
  33. வெங்கட் புதுப் பதிவு போட்டிருக்கார். ஆனால் இங்கே அப்டேட் ஆகலை! ஏன்னு தெரியலை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. தளம் சென்று புதிய பதிவைப் பார்த்தேன் நானும்!

      நீக்கு
  34. 'அங்கிட்டி’- அல்லது விறகு/கரி அடுப்பு - அதனை விசிறிவிட முன்னே அமர்ந்திருக்கும் எலெக்ட்ரிக் விசிறி.. ஷாட் ! இந்த மாதிரிக் காட்சிகள் உங்களைப் போன்ற கலைஞனின் கண்களிலேதான் படும். பலே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா...

      உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியவில்லை?!!! வித்தியாசமா இருக்கே என்று எல்லாரும்தானே பார்ப்போம்!

      இருப்பினும், நன்றி!

      நீக்கு
    2. ஹை, நாங்களும் பார்த்திருக்கோமே நிறையவே! :)))))

      நீக்கு
    3. அதானே... நானும் இதைத்தான் சொன்னேன்.

      நீக்கு
  35. ஸ்ரீராம் மீண்டும் இப்ப ஸ்க்ரோல் பண்ணும் போது அந்த ஜன்னல் படம் தான் வந்து நிறந்து...அதன் கீழே பதிவு போக ரொம்ப நேரம் எடுத்தது. அந்த ஜன்னல் படம் இப்போது வேறு ஒரு எண்ணம் அது அழகான கண்ணாடி படம் போல இருக்கிறது. இன்னும் அந்த மேல் சட்டமும் (கீழ் சைட் ரெண்டும் இருக்குது இல்லையா...மேல்) அதுவும் உங்க மொபைல் கேமரா ஃப்ரேமுக்குள் வந்திருந்துச்சுனா இதுவே இத்தனை அழகா இருக்கும் போது அது செமையா இருந்துருக்கும்...

    மீண்டும் அப்படத்தை ரசித்தேன் ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  36. அம்புட்டு தூரம் போய்ட்டு மசாலா பால் குடிக்காம வந்திருக்கீங்களே...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    உங்க கூட வந்தவங்க எல்லாம் ரொம்பவே விரைவு வண்டி மக்கள் போல!!!! ஹா ஹா ஹா ஹா

    சில இடங்களுக்குப் பாசஞ்சர் மாதிரி போகணும்..அதுவும் கல்கா சிம்லா குட்டி ரயில் மாதிரி!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  37. குடை பிடித்துக் கொண்டிருக்கும் அந்த மாமா ஆரு?

    ஏதோ மன்னர் மாமாவோ?!!

    பிர்லா மந்திர் ரொம்ப அழகான வடிவம். கோபுரம் ரொம்ப அழகாக இருக்கிறது

    நீர்த்தாரைதானே அது? சிவலிங்கம் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் செம்பு.. லிங்கம் சிறிதாய் மிக நன்றாக இருக்கிறார். அழகு இறைவன்.

    அங்கும் நந்தி எம்பெருமானின் காதில் வேண்டுதல் வைப்பார்கள் போலும். அப்பையன் ஏதோ ரகசியமாய் இறைக்கு செய்தி அனுப்புகிறார்!வேலையா? படிப்பா இல்லை கல்யாண்மா??!!!!

    அந்தச் சங்கு சக்கர மண்டபம் அழகாக இருக்கிறதே. அந்த ஒற்றைக் கொம்பு காண்டா மிருகமும் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  38. என்னோட பதிவு அப்டேட் ஆகி இருக்கே! வெங்கட்டோடது தான் இன்னமும் வரலை!

    பதிலளிநீக்கு
  39. ஒன்றையும் விட்டு விடாமல் சொல்ல வேண்டும் என்ற அக்கறை புலப்பட்டது. அருமை.

    பதிலளிநீக்கு
  40. //இன்றேனும் ஒருநாள்
    இயல்பாய் இரு... //

    ஒரு நாள் ரொம்பவும் அதிகபட்சமாய் தெரிலே..? கொஞ்சம் குறைச்சிக்கக் கூடாதா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா...

      அதிகமாய்ச் சொன்னால்தான் குறைந்த அளவாவது கிடைக்கும்!

      நீக்கு
  41. தினமலர் வாரமலர் குறிப்பு பற்றி...

    இதெல்லாம் பாலகுமாரன் எழுதி வாசிக்க வேண்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அந்தப் புத்தகத்தின் பகிர்வு ஜீவி ஸார். அவர்கள் போட்டதை நான் எடுத்துக் போட்டு விட்டேன்!

      நீக்கு
  42. ஓவரே இல்லே...

    இந்நாளைய காரியதரிசிகளே கோடிஸ்வரராக இருக்கின்றனர்!

    பதிலளிநீக்கு
  43. அந்த ரிஷிக்கு காவி உடை இல்லை என்றால் நம்ம வள்ளுவர்னு சொல்லிடலாம் லாங்க் ஷாட்ல!! தான். கைல சுவடி இல்லையே எழுது கோல் இல்லை.

    அந்த மந்திர் தரை க்ளோசப் போட்டொவில் பார்க்க ஏதோ பெரிய பாய்/கார்பெட் நார் ஒன்றுக்குள் ஒன்று நுழைத்து பாவியிருப்பது போன்ன்று தோற்றம். ரொம்ப அழகாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் சகோதரரே

    காசி கயா யாத்திரை பதிவை அழகான படங்களுடன், நிறைவான விமர்சனத்துடன் அழகாக நிறைவு செய்து விட்டீர்கள். எங்களுக்குத்தான் அடுத்த வாரத்திலிருந்து மிகவும் போராக இருக்கும். இன்னமும் விரிவாக எழுதுவது கடினமெனினும். இதுநாள் வரை பதிந்ததை கொஞ்ச, கொஞ்சமாக தந்து இன்னமும் கொஞ்ச வாரம் நீடித்திருக்கலாம் எனவும் எனக்குத் தோன்றுகிறது.

    அழகான படங்கள். பனாரஸ் ஹிந்து யூனிவர்சிட்டியினுள் இருந்த சிவன் கோவில் நந்தியம்பெருமானும், வளாகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் அழகாக வந்திருக்கின்றன.

    துர்காமந்திர் துளசிமந்திர் என அனைத்து கோவிலையும் தரிசித்து கொண்டேன்.சோழி விபரங்கள் ஆச்சரியமூட்டுகின்றன. வானவெளி படங்கள், தீப்பெட்டி படங்கள் மனதிற்கு மகிழ்வூட்டுகின்றன.

    வெளியூர் சென்று என்னதான் ஆசை தீர சுற்றினாலும், மறுநாள் நம் வீட்டுக்கு வரப்போகிறோம் என்ற நினைவே ஒரு சுகமானதுதான். நிறைவாக பதிவை முடித்துள்ளீர்கள். எங்களுக்கும் உங்களுடன் அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்த திருப்தியும், நிறைவும் கிடைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    இத்தனை நாள் ஒவ்வொரு வியாழன் பதிவுகளையும், மிகவும் ரசித்து கட,கடவென படித்தோம். இனி என்ன செய்வதென கப, கபவென ஒரு வருத்தம் வருகிறது. ஹா.ஹா. ஹா. (சபாபதி படம் நினைவுக்கு வருகிறது.)

    கொஞ்சம் ஓவராக இருந்தாலும் காரியதரிசிக்காக காத்திருந்து கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்ட மாணவரின் செயல் ரசிக்கும்படி இருந்தது.

    ஆடல்கலையை போற்றி, வளர்த்து விட்டது அந்தக் கால அரசர்கள்தான் என்ற விபரம் அறிந்தது என்றாலும், விபரங்கள் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

    கவிதை மிகவும் ரசிக்கும்படி இருந்தது. கவலைகளை ம(றை)றக்க இயலாமல் தடுமாறுவதால்தான் இயல்பான வாழ்வு பறி போகிறது. உண்மை.. மிகவும் ரசனையான வரிகள். அனைத்தும் நன்றாக இருந்தது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      //எங்களுக்குத்தான் அடுத்த வாரத்திலிருந்து மிகவும் போராக இருக்கும்.//

      ஹா..ஹா.. ஹா...

      இதுவும் கஞ்சம் ஓவரா இல்லை?!!!

      ஒவ்வொன்றாய்ப் படித்து, ரசித்து, ரசித்ததை பகிர்ந்து மகிழ்ச்சியூட்டியமைக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  45. குழந்தையுடன் வந்த தம்பதி அப்புறம் எப்படி பயணம் செய்தார்களோ பாவம்..

    ஏர்போர்ட்டிற்குள் எல்லாமே கொள்ளை விலைதான் ஸ்ரீராம்.

    ஆமாம் ஹேன்ட்லக்கேஜில் செயின் போன்ற எந்த உபகரணங்களும் கூடாதே...ஆனால் பாருங்க லேப்டேப் அனுமதி உண்டு!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சர்யமான விதிகள்! ஆம், பாவம்தான் அந்த தம்பதிகள்.

      நீக்கு
  46. அந்த ஏரியல் வியூ வாரணாசியா சென்னையா ஸ்ரீராம்...ஏன் கேட்கிறேன் என்றால் ஒன்ரில் ஆறு அழகான ஆறு தெரிகிறது அதனால்.!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை நெருங்கும்போது எடுக்கப்பட்டது. அது ஆறு இல்லை, கடல்!

      நீக்கு
  47. படங்களை செல்லில் சரியாக பார்க்க முடியவில்லை. இருந்தாலும் செக்கச் சிவந்த துர்க்கை கோவிலும் அதன் கருப்பு வெள்ளை பிரதியும் பிடித்தன.

    பதிலளிநீக்கு
  48. இந்தப்ப்திவில் வரும் கவிதைகள் எல்லாம் 2013 -2014ல் எழுதியவையாக இருக்கிற்தே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி எம் பி ஸார்... பழசுதான்.​ பெரும்பாலும் எப்பவுமே பழைய முகநூல் பகிர்வுகளைதான் பகிர்வேன்!

      நீக்கு
  49. ஸ்ரீராம் ஆமாம் நெட் ரொம்பப் படுத்தல். இங்கு ஏற்கனவே மாலை ஆனால் மயங்கிடும். இப்ப ரொம்பவே படுத்துத்து....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற தளங்களை விட எங்கள் தளம் ரொம்பவே படுத்தல் கீதா!

      நீக்கு
  50. காசி சென்றிருந்தபோது புகழ்பெற்ற இந்த பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கும் அங்கு உள்ள கோயிலுக்கும் சென்றோம். அப்பல்கலைக்கழகம் இந்தியாவின் பெரிய பல்கலைக்கழகம் என்று கூறுவர்.

    பதிலளிநீக்கு
  51. ஆடல் கலையே தேவ(ராயர்)ன் தந்தது //

    ஸ்வாரஸ்யமான தகவல்கள். அதைவிட தலைப்பு பிடித்தது!

    ஸ்ரீராம் உங்கள் கவிதை மிக மிக பிடித்தது. ஆனால் நடைமுறையில் தான் ஹிஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு
  52. மிகவும் விரிவாக பல தலங்களையும் உங்கள் பயணத்தில் நாமும் கண்டு மகிழ்ந்து வந்தோம்.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  53. அருமையான பயணத் தொடர். உங்களுடன் சேர்ந்து பல மந்திர்களையும் ஆலயங்களையும் தரிசிக்க முடிந்தது. புகைப்படக் கடமையையும் சரிவர ஆற்றியிருக்கிறீர்கள்.

    கவித் துளி சிறப்பு.

    பதிலளிநீக்கு
  54. மீண்டும் வருகிறேன்.. அனைத்துப்படங்களும் வெகு ஜோர். இட்லி பஜ்ஜி சூப்பர். அனைவருக்கும் வணக்கம்.

    பதிலளிநீக்கு
  55. மீண்டும் முழுமையா காசி பயணம் சம்பந்தமாக படித்து முடித்தேன். எங்க பஸ் போக முடியாதோ அங்க, நாம நடந்து போவதற்கு பதில் ஆட்டோ/ஜீப் அமர்த்தி அதன் பைசாவை நம்மை ஷேர் செய்யச் சொல்றாங்க. இது பெரிய விஷயம் இல்லை. ஆனா நீங்க முக்கியமான இடங்களை விட்டிருக்கீங்க (அக்பர் கோட்டை-இது 10 நிமிஷத்துல பார்த்திருக்கவேண்டிய இடம். இதனுள் அக்‌ஷயவடம், அதனைச் சுற்றி சிறு சிறு சன்னிதிகள். பெரிய சிற்பங்கள்லாம் இல்லை. இதனுள் கூட்டிச் செல்லாதது உங்க டிராவல்ஸின் தவறு). எனக்கும் ஆனந்த பவன் 2008ல் அமையலை (திங்கள் போனதுனால). இந்தத் தடவை நன்றாகப் பார்த்தேன். எதிரே பரத்வாஜ ஆஸ்ரமம் நீங்க போகலை. வேணி மாதவர் கோவில்-படங்கள் காணோம். அந்த கோவிலுக்கு முதல் தளம் கிடையாது. அதுனால நீங்க சொல்ற கோவில் எதுன்னு சந்தேகம் வருது. நைமிசாரண்யத்தில் ததீசி குண்ட் போனதை எழுதுனமாதிரி தெரியலை. மிக முக்கியமான இடம். பரத் குண்ட் போகாம நீங்க எப்படி அனுமன்/பரத் சிலையைப் பார்த்தீங்கன்னு தெரியலை. சும்மா 100 மீட்டர் தூரத்தில் அந்த பரத் குண்ட் இருக்கிறது. அயோத்தில கனக பவன் போனமாதிரி தெரியலை. (கைகேயில் ராமர்/சீதாவுக்கு பரிசளித்த பவன். இங்கதான் அவங்க வாழ்க்கை தொடங்குது). அயோத்தில அம்மாஜி மந்திருக்கு கண்டிப்பா கூட்டிட்டுப் போயிருக்கணும் (நம்ம ஊர் இராமர் கோவில் மாதிரி இருக்கும்). நாங்க போனபோது, ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு, இரண்டு வேளை காபி. எங்க சமைப்பது கடினமோ அங்க கலந்த சாதம். இரயில் பிரயாணத்துக்கும் இந்தக் கதைதான். கங்கைல நிறைய தடவை குளிச்ச மாதிரி எழுதியிருக்கீங்க. ஆனா சிவாலய Gகாட் மட்டும்தான் படம் போட்டிருக்கீங்க. குழுவில் எல்லோரும் ஜரூரா, ஒரு ஒழுங்கோட வரலைனா (ஒவ்வொரு இடத்தில் தரிசனத்துக்குப் பிறகும் டக்குனு எல்லோரும் ஒரு குழுவா) எல்லா இடங்களையும் தரிசிக்க முடியாது. கயால மஹாபோதி கோவில் போகாதது ஆச்சர்யம், அந்த புத்தகயாலதான் தங்கிட்டு. பல்குனில மஹாளய பக்‌ஷம் மட்டும் தண்ணீர் சிறிது விடுவாங்க. நாங்க அதுக்கு ஒரு வாரம் முன்னால அங்க இருந்ததுனால, தண்ணீர் இருந்தது. எங்க பயணத்துல இரயில் பிரயாணம் இங்கிருந்து போன அன்னைக்கு மறுநாள் காஞ்சீவரம் இட்லி கொடுத்தாங்க (நிறைய, மி.பொடியோடு). மத்தபடி பூரி, இட்லிலாம் தரலை. சாப்பாடு ரொம்ப நல்லாவே இருந்தது. தினமும் உணவில் இனிப்பு, மாலை 4 மணி வாக்கில் ஒரு இனிப்பு, காரம் கொடுப்பாங்க. படித்த வரைல ஜெயலக்‌ஷ்மி டிராவல்ஸ் பற்றி நல்ல அபிப்ராயம் வரலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் பொறுமையாய் ஒருமுறை படித்ததற்கு நன்றி நெல்லை.

      நான் பார்த்ததைதான் எழுதியிருக்கிறேன்.   கட்டுரை எழுத விவரங்கள் தேடும்போது நான் பார்க்காமல் விட்ட விவரங்கள் பற்றி நானே எழுதியிருக்கிறேன்.    முதலில் பாராட்டத் தொடங்கிய இந்த டிராவல்ஸ் சரியில்லை என்று அப்புறம் நானே சொல்லியும் இருக்கிறேன்.   ஆமாம்...   நிறைய இடங்களை பார்க்க விட்டிருக்கிறேன்.

      பல்குணி நதியில் நீர் இருந்த படம் பார்த்தேன். அதிருஷ்டம் இருந்திருக்கிறது அப்படிக் காண!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!