செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை - தெளிவு - ஜீவி

தெளிவு 
ஜீவி 
வாசலில் கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது.  வெளிக் கதவை மூடி, கண்ணாடி ஜன்னல்களையும் கொக்கி போட்டு அடைத்து விட்டதினால் ராஜிக்குக் குளிரே தெரியவில்லை.  'பெட்டி போன்ற வீடு.  அருமையாகத் தான் செலக்ட் செய்திருக்கிறார்.  ''இதையெல்லாம் எப்படித் தான் 'அவர்' கற்றுக் கொண்டரோ'' என்று ராஜிக்கு நினைப்பு ஓடியது.

புடவையை இழுத்துச் செருகிக் கொண்டு,  நடுஹாலில் போட்டது போட்டபடிக் கிடந்த சாக்குப் பைகளை அவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டாள் ராஜி.

மணி இரண்டு ஆகிறது.  நேற்று இரவும், இன்று காலையும் ஹோட்டலிலிருந்து எடுத்து வந்த 'கேரியர்' சாப்பாட்டைச் சாப்பிட்டாகி விட்டது.  அந்தச் சாப்பாட்டை நினைத்தாலே ராஜிக்கு வயிற்றைக் குமட்டியது.  அவளுக்கு  அப்படியெல்லாம் சாப்பிட்டுப் பழக்கம் கிடையாது.  சொன்னால் தெரிந்தால் தானே?  'பாத்திரங்களையெல்லாம் வெளியே எடுத்து, சமைத்துப் போட்டு, ஆபிஸூக்குக் கிளப்பி விடுகிறேன்' என்று சொன்னால் கேட்டால் தானே?

ராஜி தனக்குள்ளேயே ரகசியமாகச் சிரித்துக் கொண்டாள்.

'இதோ பாரு, முழுசா ஒரு நாள் ரயில் பிரயாணம். ரொம்பக் களைச்சுப் போயிருக்கே.  வீட்டுக்குள்ளே நுழைஞ்சவுடனேயே உன்னை வேலை வாங்க மனசு கேக்கலே.. பால் தானே காய்ச்சிக் குடிச்சோம்?   அதுக்குள்ளாற உனக்கு எப்படி வேர்த்துப் போய்விட்டது பார்த்தையா?' என்று டவல் எடுத்து, அவள் நெற்றியில் பனி முத்துக்களாய் துளிர்த்திருந்த வேர்வைத் துளிகளை அவன் துடைத்து விட்டதை நினைத்துப் பார்க்க ராஜிக்கு பெருமிதமாகத்தான் இருந்தது.

ஆச்சு;  மணி இரண்டரை.  இப்பொழுதிருந்தே ஒவ்வொரு பாத்திரமாக எடுத்துத் துடைத்து வைக்க ஆரம்பித்தால் தான் ஒரு வழியாக சாயந்திரத்திற்குள் காரியம் முடியும்.

ராஜிக்கு எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கப் பார்க்க இனிப்பாக இருந்தது.

கல்யாண கோலத்தில் தான் எத்தனை ரகசிய கிள்ளல்கள், பொருள் பொதிந்த பார்வைகள்,  கிசுகிசுப்புகள்!  'அவர்' ரொம்பப் பொல்லாதவர்தான்!  ராஜிக்கு அதை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

யாரோ ஒரு வாண்டுப் பயல் இவளது  பட்டுப்  புடவையின் தலைப்பையும்,  ராஜ்மோகனின் அங்கவஸ்திரத்தையும் சேர்த்துப் பின்னால் கட்டியிருக்கிறான்.  அம்மி மிதித்து, அருந்ததி காட்ட எழுந்திருக்கும் போது,  கொஞ்சம் முன்னால் சடாரென்று ராஜ்மோகன் எழுந்திருக்க நழுவி விட்ட அங்கவஸ்திரம் இவள் மடியிலேயே விழுந்து விட்டது.  ஆஹா!  அப்பொழுது  எழுந்த சிரிப்பு இருக்கிறதே!  ராஜிக்கு ஒரே வெட்கமாகப் போய் விட்டது.  உடனே அவள் தோழி கோமளம் சும்மாவா இருந்தாள்?  குனிந்து கொண்ட அவளது  தலையை நிமிர்த்தி வேடிக்கை செய்யவில்லை?...

இந்த நிகழ்ச்சிகளெல்லாம் அப்பொழுது அவளுக்கு வேதனையாகவும், வெட்கமாகவும் இருந்தன.  இப்பொழுது நினைத்துப் பார்ப்பதற்கு இன்பமாக, இன்னும் சொல்லப் போனால் இன்னொரு முறை அப்படி நடக்காதா என்று ஏங்கக் கூடத் தோன்றுகிறதே!  

தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு உதட்டைக் கடித்துக் கொண்ட ராஜி,  காலையில் லாரி புக்கிங் ஆபிஸிலிருந்து டெலிவரி எடுத்த சாக்குப்பைகளைப் பிரிக்க ஆரம்பித்தாள்.  புதுக்குடித்தனம் ஆரம்பித்து இன்னொரு ஊரில் குடும்பத்தை 'ஸெட்அப்' செய்ய வேண்டுமென்றால் அது ஒரு லேசான காரியமாகவா இருக்கிறது?..

சாக்கு பையிலிருந்து இட்லி அடுக்குகள் வெளி வந்த போது நாளை சாயந்திர  டிபனுக்கு இட்லி பண்ணலாம் என்று ராஜிக்குத் தோன்றியது.

சின்ன வயசிலிருந்தே ராஜிக்கு இட்லி என்றால் உயிர்.  அதுவும் எண்ணெய் ஊற்றிய  மிளகாய்ப் பொடியில் இட்லியைத் தோய்த்துத் துண்டு துண்டாக விண்டு வாயில் போட்டுக் கொள்வதென்றால் ராஜிக்கு வெல்லக்கட்டி. 

"ஏண்டி,  இப்படி ரெண்டு கண்ணிலேயும் ஜலம் கொட்டறதேடீ?  அப்படியா ஒரு நாக்கு?.. அந்த உறைப்பில் உனக்கு என்ன சுகம் தெரியறதுடீ?" ன்னு அவள் அம்மா கிடந்து அடியோ அடியென்று அடித்துக் கொள்வாள்.

ஊஹூம்.. ஒன்றுக்காவது அசைந்து கொடுக்க மாட்டாளே, இந்த ராஜி?   "ம்.. ஒண்ணும் பேசப்படாது.   அடுத்த ஈடு இட்லி எடுத்தாச்சா?.. பேசாமல் போடு..  ஐய்யய்யோ.. அம்மா, அம்மா, மிளகாய்ப் பொடி இன்னும் இன்னும் கொஞ்சம்மா.." என்று கெஞ்சித் தொலைப்பாளே?..

அம்மாவை நினைக்கும் போதே ராஜிக்கு நெஞ்சை அடைத்தது.  

புக்ககத்தில்  தனிக்குடித்தனம் பண்ண ராஜியை அனுப்பும் பொழுது அவளுக்குப் பெருமையாக இருந்தாலும் தடுமாறிப் போய் விட்டாள்.  சமையலறைக்குள் யாருக்கும் தெரியாமல் 'கோ'வென்று அவளுக்குள்ளேயே அழுதபடி புடவைத் தலைப்பு  முனையால் யாரும் பார்த்து விடாதபடி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"மாமி... மாமி...." தடதடவென்று வாசல் கதவு இடிபடும் சப்தம்.

யாராக இருக்குமென்று  ஒரு நிமிடம் தன்  புருவங்களை வில்லாக வளைத்து யோசித்தாள் ராஜி.  அடுத்த  நிமிடம் சடாரென்று 'வந்திருப்பது யார்'  என்று  தெரிந்து கொள்ளும் ஆவலில் வாசல் பக்கம் நகர்ந்தாள்.

"மாமி... மாம்மீ..."

கதவைத் திறந்த ராஜிக்குத் திகைப்பாகத் தான் இருந்தது.  வாளிப்பான உடலுடன் சுடிதாரும் துப்பட்டாவுமாய்  ஓர் அழகுக் குவியல் வெளியே நின்று கொண்டிருந்தது. வயசு பதினெட்டு இருக்கும்.

"நான் தான் மாமி, சித்ரா..  பக்கத்தாத்து சித்ரா.." என்று ராஜியைத் தள்ளிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் சித்ரா.

"பக்கத்தாமா?.. வாம்மா.." என்று புன்முறுவல் பூத்த ராஜி
அவளை உள்ளே கூட்டிக் கொண்டு போகும் வரை காத்திருக்கவில்லை அந்தப் பெண்.

அவள் பாட்டுக்கு சர்வ சுதந்திரத்துடன் ராஜிக்கு முன்னால் கூடத்தை நோக்கி நடந்தவள்,  லேசாக ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சலின் பக்கம் வந்து திரும்பினாள்.  "ஏன் மாமி,  'அவர்' இல்லே?"

"எவர்  இல்லே?"

"அதான் மாமி,  மோகன்.  ராஜ்மோகன்."

தன் கணவனுடைய பெயரை இன்னொரு பெண் உரிமையோடு சொல்லும் பொழுது ராஜிக்கு கொஞ்சம் அருவருப்பாகவும்,  ஆத்திரமாகவும் இருந்தது.  இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டு, "இல்லை.  ஆபிஸுக்குப் போயிருக்கிறார்.." என்றாள்.

"இவ்வளவு சீக்கிரமாகவா?.." என்று தனது கரிய பெரிய விழிகளை விரித்த சித்ரா, "பார்த்தேளா, மாமி?  கேட்கவே மறந்துட்டேனே!  உங்க பேர் என்ன மாமி?" என்று கேட்டாள். 

"ராஜம்.  ராஜி.."

"ரெண்டு பேரா?.."

"இல்லே.. வைச்ச பேர் ராஜம்.  கூப்பிடற பேர் ராஜி.. ரெண்டு பேரும் ஒண்ணு தானே?"

"ஆமாம்.  இது கூட எனக்குத்  தெரியலையே!  மறந்து போய்ட்டேன்" என்று தன்  தலையில் இரண்டு தடவை குட்டிக் கொண்டாள்.

"என்ன மறந்து போயிட்டே?"

"மொதல்லேயே தலைலே குட்டிக்க மறந்து  போயிட்டேன்.  அசட்டுத்தனமா ஏதாவது நா உளறிட்டா தலைலே குட்டிக்கணுமாம்..  எல்லாம் 'அவர்'  கற்றுக் கொடுத்த பழக்கம்!."

"எவர்?.."

"அதான் மாமி,  மோகன்.  ராஜ்மோகன்.."

ராஜிக்கு  எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.  கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள்.

மூட்டையிலிருந்து அரைகுறையாக எடுத்துப் போட்டிருந்த  சாமான்கள் வேறு ஒரேயடியாகக் களேபரமாகக் காட்சியளித்தன.  சாயந்தரம் அவர் வரும் போது வீடு 'நீட்'டாக காட்சியளிக்க வேண்டாமா?..  முதல் 
வேலையாக சரஸ்வதி படத்தையும்,  லஷ்மி படத்தையும் எடுத்துத் துடைத்து இரண்டு ஆணிகள் அடித்து மாட்ட வேண்டும்.  பூக்காரி வந்தால் இரண்டு முழம் கதம்பச் சுருள் வாங்கிச் சாற்றினால் கூட தேவலை.

சுவாமி படங்களைப் பெட்டியிலிருந்து எடுத்துத் துடைக்கும் பொழுது சித்ரா அவளாகவே ராஜியின் அருகில் வந்து, "நானும் உங்களுக்குக்  கூடமாட ஒத்தாசையா 'ஹெல்ப்' பண்ணட்டுமா?" என்று கேட்டாள்.

ராஜி ஒரு 'உம்' கொட்டியதோடு  நிறுத்திக் கொண்டாள்.

சித்ரா மூலையில் கிடந்த ஒரு கிழிசல் துணியை எடுத்து அங்கு பரப்பப்பட்டிருந்த படக் குவியல்களிலிருந்து சொல்லி வைத்தாற்போல்  'என்லார்ஜ்' செய்யப்பட்ட பெரிய சைஸ் ராஜ் மோகனின் போட்டோவை எடுத்துத் துடைக்க ஆரம்பித்தாள்.

ராஜிக்கு என்னவோ போலிருந்தது.  சொல்லப் போனால் அழுகை கூட வரும் போல் ஆகிவிட்டது.  இருந்தாலும் கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டு, மெல்ல சித்ராவுக்குத் தெரியாமல் அவளை நோட்டமிட்டாள்.

அழகாக நெளிநெளியாக வாரி விடப்பட்டிருந்த கூந்தல்; கூரிய கண்களுக்கு பாந்தமான அழகான நெற்றி;  எடுப்பான மூக்கு;  முத்துச் சிப்பியொன்றை அளவாக உடைத்துத் திறந்து வைத்தாற்போன்ற வாய்;  அதனுள்ளே டாலடிக்கும் வெள்ளை வெளேரென்ற பற்கள்--  'அது சரி, அதோ அந்த கண்களுக்குள்ளே அலாதியாய் ஜொலிப்பது வெகுளித்தனமா, இல்லே, விஷமத்தனமா?'

"சாயந்தரம்  பூக்காரி வருவாளா, சித்ரா?"

"ஓ..." என்று அவள் உதடைக் குவித்த விதமே அழகாக இருந்தது.   "அசட்டு அம்மாமியா இருக்கேளே!  இந்தத் தெரு பேர் என்ன தெரியுமா?..  பூக்கார தெரு.  தஞ்சாவூர் பூக்கார தெருன்னா  சென்னை  ஸ்டேட்லேயே பிரசித்தம்.  'டாண், டாண்'ன்னு கடிகாரத்திலே மணி நாலடிக்க வேண்டியது தான், 'பூ வாங்கலையோ,  பூ'ன்னு  இடுப்பை ஆட்டிண்டே அவ வந்திடுவா.."

"அப்படியா?.."

"என்ன அப்படி சுவாரஸ்யம்  இல்லாமக் கேட்டுட்டேள்?.. நம்ம பொன்னுத்தாயி வரான்னாலே தெருவெல்லாம்..."

"அது யாரு பொன்னுத்தாயி?.."

"ஐயையே!  அவ தான் மாமி,  பூக்காரி.  அவ பூ தான் ஒசத்தி. தெருக்குள்ளாற நுழைச்சான்னா,  அடுத்த பத்து நிமிஷத்லே கூடைலாம் காலியாயிடாதோ?"

ஓரு வழியாகப் பாத்திரங்களையெல்லாம் எடுத்து அடுக்கியாகி விட்டது.  சித்ரா விளக்குமாற்றை எடுத்து அழகாகப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.  ஸ்டவ்வை எடுத்துப் பற்ற வைத்து காப்பி போடத்  துவங்கினாள் ராஜி.

"பூ  வாங்கலையோ, பூ?"

"மாமி,  பொன்னுத்தாயி வந்துட்டா, மாமி!  நான் சொல்லலையா?  மணியைப் பாருங்கோ.. என்ன, பாத்தேளா?.. கரெக்டா நாலு ஆகலை?"

"அது சரி, சித்ரா..  பூக்காரியைக் கூப்பிடு.. பூ வாங்கலாம்.."

"சரி,  மாமி..." என்று துள்ளிக் குதித்தபடியே வாசலுக்கு  ஓடினாள் சித்ரா.

ராஜி தன்னையறிமல் பெருமூச்சு விட்டாள்.  வந்து  ஒரு நாள் கூட முழுசாக ஆகவில்லை;  அதற்குள் இந்த ஊர் அவளுக்கு வெறுத்து  விட்டது.   ஜன சந்தடியே இல்லாத ஏதாவது ஒரு வனாந்திரப் பிரதேசத்திற்கு அவளுடைய ராஜ்மோகனோடு ஓடிப் போய் விட்டால் கூட தேவலை போலிருந்தது.  என்ன தான் முன்னாடியே பழக்கமிருந்தாலும் இப்படியா?.. அவளுக்கே மட்டுமே சொந்தமான ராஜ்மோகனோடு மற்றவர்கள் உரிமை கொண்டாடிப் பழகுவதை அவளால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை..

தான் செய்வது அசட்டுத்தனமாகப் பட்டாலும் வாசல் பக்கம் தான் சித்ரா இருக்கிறாள் என்பதை நிச்சயம் பண்ணிக் கொண்டு,  சுவாமி படத்தருகே சென்று, மாங்கல்யச் சரடை வெளியே எடுத்து இரு கண்களிலேயும் மாறி மாறி ஒற்றிக் கொண்டாள் ராஜி.  'அம்மா, தாயே!  என்னோட 'இவரை' எங்கிட்டேயிருந்து மட்டும் பிரிச்சுடாதே!  அந்த அதிர்ச்சியை என்னாலே தாங்க முடியாது' என்று தனக்குள்ளேயே சொல்லியும் கொண்டாள்.

வெளிக் கதவு  பக்கம் நிழல் தட்டியது.  அவசர அவசரமாகத் தாலிச் சரட்டை ராஜி ரவிக்கைக்குள் திணித்துக் கொள்வதற்கும் சித்ரா குதித்துக் கொண்டே உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.

"மாமி.. மாமி.. குண்டு மல்லிகையைப் பார்த்தேளா?  வாசனை எப்படித் தூக்கறதுங்கறேள்?..  கொள்ளை மலிவாக்கும்!  இத்தனையும் அஞ்சு ரூபா தான்.." என்று முகமெல்லாம் மலரச் சிரித்தாள் சித்ரா.

"இதோ.. காசு எடுத்திண்டு வரேன்.." என்று காமரா அறைப் பக்கம் திரும்பினாள் ராஜி.

"வேண்டாம், மாமி..  நானே பூக்காரிக்குக் கொடுத்துட்டேன்.."

"என்ன, நீயே  கொடுத்துட்டயா?"

"ஏன், கொடுக்கக் கூடாதா?  கல்யணமாகி புதுசாக் குடித்தனம் வைச்சிருக்கேள்;  இன்னிக்கு வெள்ளிக்கிழமை வேறே.  நான் தான்  இன்னிக்குப் பூ வாங்கித் தந்ததா இருக்கட்டுமே.."

"சரி..சரி.. பெரிய அத்தை பாட்டி மாதிரி பேசாதே..  உனக்கேது காசுன்னு சொல்ல வந்தேன்.."

"எல்லாம் 'அவர்' தந்தது தான்.  ஒரு சாக்லேட் டப்பா நெறையா சேர்த்து வைச்சிருக்கேனாக்கும்.."

தீயை மிதித்த மாதிரி  இருந்தது  ராஜிக்கு.

"ஏன்னடி, சொல்றே?.. யாரு தந்தா?"

"எல்லாம் அவர்  தான்.  ராஜ்மோகன் தான்.."

"இனிமே எனக்கு நேரே அவர் பேரைச் சொல்லாதேடீ; அசிங்கமா இருக்கு.."

"ஐயையோ,  அவர் பேரா அசிங்கமா இருக்கு!  என்ன மாமி இது?  ராஜ்மோகன் -  'ஜம்'ன்னு பேர் இல்லே?"

"பேர் நன்னாத் தான் இருக்கு.. அதை நீ  சொல்றது  தான் அசிங்கமா இருக்கு!  பெரியவர்களைப் பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாதுன்னு உனக்குத்  தெரியாது?.."

"இதென்ன புதுசா இருக்கு?.. நீங்க இங்கே வரறதுக்கு முன்னாடியெல்லாம் அவர் மட்டும் தான் இங்கே இருப்பார்; இந்த ஆத்திலேதான் பழியா நான் கிடப்பேன்.. அப்போல்லாம் 'ராஜ் மோகன்.. ராஜ்மோகன்'ன்னு தான் அடிக்கடி அவரைக் கூப்பிட்டு.."

"கூப்பிட்டு?"  என்றுஆத்திரத்தோடு ராஜியால் கேட்காமல் இருக்க முடியவில்லை.  புருஷன் மீதே அவளுக்கு எரிச்சலாக வந்தது.

"கூப்பிட்டுக் கூப்பிட்டு அவரைப் படாத பாடு படுத்தி விடுவேன்.  நான் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறேனா?.. தினம் இவர் தான்  எனக்குப் பாடம் சொல்லித் தருவார்.  சூரியா, சுப்ரான்னு நாலைந்து நோட்ஸ்களை வைத்துக் கொண்டு-- சும்மா சொல்லக் கூடாது..  இவர் சம்மரி தயாரித்துக் கொடுத்தால் அபாரமா இருக்கும்.  அவர் எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் பண்ணி, கரெக்டா ஒப்பிச்சா,  காசு கூட தருவாராக்கும்!  அதான் அப்பப்போ காசு வாங்கிச் சேர்த்து வைச்சிருக்கேன்..  அத்லேந்து தான் இன்னிக்கு பூவுக்கு..."

"அடப்பாவி!.. " வெடித்தே விட்டாள் ராஜி.

"என்ன மாமி, என்ன?"  பழைய சாமான்களெல்லாம் கிடக்கே-- தேள் கீள் கொட்டிடுத்தா?"

"பாவி... உன் வாய் தாண்டி கொட்டிடுத்து.." என்று சீறி விழுந்த ராஜி,  வேகமாக வந்து, சித்ராவின் துப்பட்டாவைப் பிடித்து இழுத்து கையை ஓங்கியே விட்டாள்.

"மா...மி...." என்று தொண்டையடைக்கக் கேவிய சிதரா அழுதே விட்டாள்.

"மாமி,  எங்க அப்பா கூட என்னைக் கை நீட்டி அடிச்சதில்லே,  மாமி... அம்மா இல்லாத நான், அப்பாக்கு செல்லக் குழந்தை, மாமி.  ராஜ்மோகன்-- தப்பு, தப்பு-- அந்த அவர் கூட என்னைக் கை நீட்டி..."

"அவர் என்னடி அவர் வேண்டிக் கிடக்கு?.. இனிமே அவர்-- அவர்ன்னு என் எதிர்க்கே சொல்லாதே!  என்னோட 'அவர்' என்ன உனக்குத் தாலி கட்டின புருஷரா, அப்படி பாத்யதைக் கொண்டாட?..."

கண்ணில் நீர் மலக,  "மாமி, நீங்க என்ன சொல்றேள்?" என்று தடுமாறினாள் சித்ரா.

"என்னோட 'அவர்',  அவர்தான்னு சொல்றேன்.." என்று ராஜி சொல்லி முடிக்கக் கூட  இல்லை,  வாசலில் பூட்ஸ் சப்தம்  கேட்டது.

சடாரென்று கண்கலைத் துடைத்துக் கொண்ட சித்ரா, "இப்போதான் எனக்குப் புரியறது, மாமி..  என்னை மன்னிச்சிடுங்கோ..  உங்களோட அவர் வந்துட்டார் போலிருக்கு..  நா வர்றேன்.." என்று வேகமாக வெளியே ஓடி விட்டாள்.

உள்ளே நுழைந்த ராஜ்மோகன், "எங்க ராஜின்னா என்ன கொக்கோன்னான்!.. அதுக்குள்ளாற சித்ராவை பிரன்ட்ஷிப் பிடிச்சாச்சா?..  அது  சரி,  அவ ஏன் நான் கூப்பிடக் கூப்பிடப் பதில் பேசாம ஓடறா?" என்று திகைத்தான்.

"வெட்கமா இருக்கும்.." என்று சொல்லி விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ராஜி.

"என் ராஜி கண்ணுக்கும் அதே கதை தான் போலிருக்கு.." என்று அவள் கன்னத்தைத் தொட்டுத் திருப்பினான் ராஜ் மோகன்.

"க்குங்... சும்மா இருங்கோன்னா..."

ராஜிக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.

அன்று இரவு.

சோபாவில் அமர்ந்திருந்த  ராஜ்மோகன்,  ராஜி மடித்துத் தந்த வெற்றிலைச் சுருளாய் வாங்கிக் கொண்டே சொன்னான்.

"ராஜி,  நம்ம சித்ரா இல்லே, சித்ரா..  சாயந்தரம் வந்தாளே-- அவள் எவ்வளவு சூட்டிகையான பெண் பார்த்தாயா?  அவளைப் போலவே எனக்கொரு தங்கை இருந்தாள்.  நான் கொடுத்து வைக்காத பாவி, ராஜி.." கண்களிலிருந்து வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டான் ராஜ்மோகன். 

"அவள் போய்ச் சேர்ந்தாள்.  இந்த சித்ரா இருக்கிறாளே இவள், அதே அச்சு. அதனால் தானோ  என்னவோ என்னோட ப்ரீதியெல்லாம் இவள் மீது வர்ஷிக்கிறேன்.  என் கூடப் பிறவாத தங்கை இவள்....." 

ராஜ்மோகன் ஒரு  நிமிடம் நிதானித்துத் தொடர்ந்தான்.  "ராஜி!  சித்ரா தாயில்லாத பெண். அவள்  அப்பா  மறுமணம் கூட செய்து கொள்ளாமல்
தன் பெண்ணின் எதிர்காலத்தை நல்லபடி அமைக்க வேண்டும் என்ற சிந்தனையிலேயே வாழும் நல்ல மனுஷர்.  சித்ரா ஒரு பெண் துணையில்லாத வீட்டில் வாழும் பெண்.... உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்..." 

"புரியறது,.." என்றாள் ராஜி.

"ராஜி! நான் உங்கிட்டே ஒண்ணு கேட்பேன்.  அது நீ சரின்னு சொன்னால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.  அந்தத் தாயில்லாத பெண்னுக்கு நீ ஒரு சகோதரியாக இருக்க வேண்டும்.  அந்தப் பாசத்திற்காகத் தான் அவள் ஏங்குகிறாள்.  அவள் ஏதாவது தப்பித் தவறி தவறு செய்து விட்டாலும் முகம் சுளிக்காமல் அவள் மேல் அன்பு செலுத்துவாயா, ராஜீ?.." என்று கேட்ட பொழுது ராஜ்மோகனின்  குரல் உடைந்திருந்தது.  

"சரின்னா.." என்று ஸ்பெஷ்டமாகச் சொன்னாள் ராஜி.  "நானும்  எங்க அப்பாவுக்கு ஒரே பெண்.  கூடப் பிறந்த சகோதர பாசத்திற்காக நானும் ஏங்கியவள் தான்.  எனக்கானும் அம்மா இருந்தா.  பாவம், சித்ராவுக்கு  அந்த பாக்யமும்  இல்லாமப் போயிடுத்து..  சித்ராவின் நிலைமை எனக்கு நன்னாப் புரியறது...    நீங்கள் கவலையே பட வேண்டாம்.. இனி அவள் என் தங்கை..." என்று தெளிவாக வார்த்தைகளில் எந்த பிசிறும் இல்லாது ராஜி சொன்ன பொழுது ராஜ்மோகன் உருகிப் போனான்.

மழை விட்டு வானம் வெளிறியிருந்தது.  வெள்ளை மேகக் கூட்டங்களினூடே சந்திரன்  'பகபக'வென்று  சிரித்துக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் மத்தியானம் கதவு தட்டப்பட்ட பொழுது சித்ரா தான் என்று ராஜிக்கு நன்றாகவே தெரிந்து விட்டது.

வாசல் வெளிக்கதவை உடனே திறக்காமல் வேண்டுமென்றே  கதவுக்குப் பின் பக்கம் நின்று ராஜி எதற்கோ தாமதித்தாள்.

" மாமி.... மாம்மி... "  சித்ராவே தான்.

டக்கென்று கதவைத்  திறந்தாள் ராஜி.  லேசாக சிரித்தபடி நின்றிருந்த சித்ரா உள்பக்கம் வரட்டும் என்று ஒரு நிமிடம் தாமதித்தாள்.  

அவள் உள்ளே வந்ததும் சித்ராவே எதிர்பார்காத அதிசயமாய் அவளை இறுகத் தழுவினாள் ராஜி.  "மாமி என்ன மாமி?.. எனக்கு என்ன அவ்வளவு  வயசா ஆயிடுத்து?  இனிமே நீ என்னை அக்கான்னு தான் கூப்பிடணும்.. சரியா?" என்றாள்.

"சரிக்கா.." என்று சித்ரா சொன்ன போது அவள் மனசே குழைந்து போயிருந்தது. 

99 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

  அட ஜீவி அண்ணா கதையா...

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம்..
  கீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழிமொழிகிறேன். வரவேற்கிறேன் உங்களையும்.

   நீக்கு
  2. வரவேற்ற துரைக்கும், ஸ்ரீராம், தி/கீதா மற்றும் பானுமதிக்கும் ஜீவி அவர்களுக்கும் நல்வரவு, வணக்கம் வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

   நீக்கு
  3. இனி வரப்போகும் நண்பர்களுக்கும் நல்வரவு, வாழ்த்துகள், வணக்கம், பிரார்த்தனைகள்.

   நீக்கு
  4. காலை வணக்கம் கீதா அக்கா... நல்வரவும், நன்றியும்...

   நீக்கு
 3. ஒவ்வொரு கருத்தும் போக ஒரு நிமிடம் எடுக்கிறது பாருங்க...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

  ஒவ்வொரு செவ்வாய் இங்கு கதை வாசிக்கும் போதும் மனதுள் ஒரு உத்வேகம் பிறக்கும். நாம் எழுதி வைத்திருக்கும் பாதியில் நிற்கும் கதைகளை முடித்து, திருத்தம் செய்து மேம்படுத்தி அனுப்ப வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் அப்புறம் பல பணிகள் வந்து துரத்தும் போது மனதில் தோன்றிய கதைகள், நல்ல உரையாடல்கள் அனைத்தும் போய்விடும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதா... நேற்று நீண்ட நாட்களாக உபயோகத்தில் இல்லாத தளங்களை நீக்கிப்பார்த்தேன். அப்படியும் நேரம் எடுக்கிறது.

   நீக்கு
 4. விறுவிறுப்பான நடை...

  காதுக்கு அருகில் நிகழ்வது போல உரையாடல்கள்....

  ஐயா ஜீவி அவர்களது கைவண்ணம்...

  வெல்லக் கட்டியில்
  எந்தப் பக்கம் இனிப்பு!..

  நெளிவு சுழிவுகளுடன்
  தெளிவு - மிகத் தெளிவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வெல்லக் கட்டியில்
   எந்தப் பக்கம் இனிப்பு!..​//

   ஆஹா... என்ன ரசனை...​

   நீக்கு
  2. //வெல்லக் கட்டியில் எந்தப் பக்கம் இனிப்பு!..//

   உப்புக்கரிக்காத வெல்லமாக தித்திக்கும் வரிகள். மிகவும் ரஸித்தேன், பிரதர். :)

   நீக்கு
 5. "ஆமாம். இது கூட எனக்குத் தெரியலையே! மறந்து போய்ட்டேன்" என்று தன் தலையில் இரண்டு தடவை குட்டிக் கொண்டாள்.

  "மொதல்லேயே தலைலே குட்டிக்க மறந்து போயிட்டேன். அசட்டுத்தனமா ஏதாவது நா உளறிட்டா தலைலே குட்டிக்கணுமாம்.. எல்லாம் 'அவர்' கற்றுக் கொடுத்த பழக்கம்!."

  மிகவும் ரசித்த வரிகள்....

  பாலச்சந்தரின் படத்தில் வரும் கதாநாயகி போலத் தோன்றியது. ஜீவி அண்ணா கோச்சுக்காதீங்க. இப்படிக் கம்பேர் செஞ்சதுக்கு...டக்கென்று எனக்குத் தோன்றியது அதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
 6. கதை போகும் விதம் செம...இப்படித்தான் ஒவ்வொரு முறை வீடு மாறிய போதும் அம்மாவின் பாத்திரங்கள், என் நெருங்கிய உறவுகள் கொடுத்தவை என்று பல நினைவுகள் பொங்கி வரும். அது போல் சில பொருட்களில் மகனைக் காண்பது. இப்போது கூட பங்களூருக்கு வரும் போது பொருட்களைக் கட்டிய போது பல பொருட்கள் மகன் எப்படிப் பயன்படுத்தினான் என்று சிரிப்பு, பாசம் என்று பொங்கியது..

  ஃபோட்டோக்கள்...என் மகனின் சின்ன வயது மற்றும் என் கசின்ஸ் ஃபோட்டோ எல்லாம் பல ..அது இன்னும் இனிமையானவை. இதை வைத்துத்தான் சமீபத்தில மாற்றம் போது மனதில் எழுந்ததை எழுதி எழுதி.....ஹிஹிஹிஹி...அப்படியே இருக்கிறது...

  ரொம்ப அருமையா இயல்பா யதார்த்தமா சொல்லியிருக்கீங்க...ஜீவி அண்ணா...

  இந்த விஷயங்கள் இங்கு வாசிக்கும் பலருக்கும் பல நினைவுகளை எழுப்பும். மட்டுமல்ல கதைகள் கூடப் பிறக்கலாம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. வணக்கம். காலை வணக்கம். பலமுறை சொன்னேன். சபையினர் முன்னே. தமிழ்க் கலைஞர்கள் முன்னே.

  பதிலளிநீக்கு
 8. 'அது சரி, அதோ அந்த கண்களுக்குள்ளே அலாதியாய் ஜொலிப்பது வெகுளித்தனமா, இல்லே, விஷமத்தனமா?'//

  இந்த வரியையும் ரசித்தேன். எப்படி அழகாக ஒரு பெண்ணின் மனதுள் தோன்றும் எண்ணத்தின் பிரதிபலிப்பாய் அமைந்த வரி.

  முடிவு நன்றாக தெளிவாக இருக்கிறது. சூப்பர். மிகவும் ரசித்தேன் கதையையும் எழுதிய விதத்தையும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 9. வெல்லக்கட்டிக்கு எந்தப் பக்கம் இனிப்பு? குட்டி ஒற்றை
  வரி தான். எவ்வளவு பொருள் பொதிந்த சொல்லாற்றல்?..

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  அருமையான கதை. சிறப்பான முடிவு.

  பதிலளிநீக்கு
 11. சகோதரி.. பழைய இனிய நினைவுகள் கிளர்வதில் அலாதியான ஓர் இன்பம் உண்டு. ரசித்துப் பார்த்ததற்கும் இனி ரசித்து அதைச் சொல்லப் போகிறகிறவர்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. தெரிந்த கதைக்கரு என்றாலும் அதைச் சொல்லி இருக்கும் விதமும் சரளமான நடையும் ஜீவி அவர்கள் தேர்ந்த எழுத்தாளர் என்பதைச் சொல்லி விடுகிறது. நல்லதொரு கதையைப் பகிர்ந்த ஸ்ரீராமுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 14. கதை மிக அருமை.
  முன்பு சாரின் சிறு கதை தொகுப்பில் வந்த கதையா?
  படித்த நினைவு.

  அன்பு, பாசம், நெகிழ்வு, தனக்கு மட்டுமே என்ற உணர்வு எல்லாம் கலந்த அருமையான கதை.

  //அதுக்குள்ளாற உனக்கு எப்படி வேர்த்துப் போய்விட்டது பார்த்தையா?' என்று டவல் எடுத்து, அவள் நெற்றியில் பனி முத்துக்களாய் துளிர்த்திருந்த வேர்வைத் துளிகளை அவன் துடைத்து விட்டதை நினைத்துப் பார்க்க ராஜிக்கு பெருமிதமாகத்தான் இருந்தது.//

  அன்பும், பரிவும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே, அதே, கோமதி. ஏற்கெனவே படித்த நினைவு எனக்கும். அதான் தெரிந்த கதைக்கரு என்று மட்டும் சொன்னேன். கொஞ்சம் சந்தேகமாயும் இருந்தது!

   நீக்கு
 15. பெண்களின் உள்ளார்ந்த உணர்வுகள் எழுத்தாளர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம். அவர்களின் ஆழ் மன சிருஷ்டி ரகசியங்கள் அத்தனையும் அள்ள அள்ளக் குறையாத
  செல்வக் களஞ்சியங்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே ஜீவி அண்ணா ஆனால் அந்த உணர்வுகளை ஒரு சிலரால் மட்டுமே வடிக்க முடிகிறது. அதுவும் மிகவும் அழகான வார்த்தைகளீல், உணர்வு ததும்ப கொண்டு வர இயலுகிறது. நீங்கள் தேர்ந்த எழுத்தாளர் என்பதால் அதை உங்களால் வெகு எளிதாகக் கொண்டு வர முடிகிறது.

   கீதா

   நீக்கு
 16. உணர்வுகள் என்று வரும் பொழுது அது எழுதுபவர்கள் அனைவருக்கும் பொதுவாகிப் போதல் இயல்பே. அந்த தனித்தன்மையான உணர்வுகளை எழுதிச் சொல்லும் பொழுது தான் அவை புதுசு போலத் தோற்ற மயக்கம் கொடுக்கின்றன.

  பதிலளிநீக்கு
 17. அழகான கதை. மனைவிகளுக்கே உரிய பொறாமை உணர்வும், சொந்தப்படுத்திக்கொள்ளும் உரிமையும் கதையில் வெளிப்படுகின்றது. அசட்டுத்தனமும் வெகுளித்தனமும் கொண்ட 'ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ'யில் இதில் வரும் பெண்ணும் அடக்கம். இம்மாதிரியெல்லாம் இன்றைய இளம் எழுத்தாளர்களால் எழுதவே முடியாது.

  பதிலளிநீக்கு
 18. தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்...
  தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்...
  சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்...
  தானே நம்பாதது சந்தேகம்...

  மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும்...
  வீணான யோசனைக்கே இடமாக்கும்...
  வீணான யோசனைக்கே இடமாக்கும் - பல
  விபரீத செயல்களை விளைவாக்கும்...

  தன்னைத் தானே தன்னைத் தானே
  தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்...


  முடிவில் சந்தேகமும் குழைந்து காணாமல் போனது சந்தோசம்...!

  பதிலளிநீக்கு
 19. அக்கா, தங்கை என்று இல்லாமல் தனித்து வளரும் ஆண் மகன்,
  சகோதர சகோதரிகளுடன் வளரும் ஆண் மகன், அக்காக்கள், தங்கைகள், தம்பிமார்கள், அண்ணன்மார்கள் என்ற நெரிசலில் வளரும் பெண் மக்கள், குடும்பத்தில் பெண்துணையே இல்லாமல் தந்தை மட்டுமான பராமரிப்பில் வளரும் பெண்மக்கள் என்ற வளர்ந்து வரும் பருவங்களிலேயே அவர்கள் கொள்ளும் மனநிலை மாற்றங்களில் வித்தியாசம் உண்டு. கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்கிற மாதிரி பெண்ணின் பொஸஸிவ் உணர்வைச் சொல்லும் கதைகள் பல உண்டு எனினும் பெண் துணையே இல்லாமல் வளரும் ஒரு பெண்ணின் மனநிலையை லேசாகக் கோடிகாட்டிய விதத்தில் இந்தக் கதை வித்தியாசப்படுகிறது.

  ஆண் வளர்ப்பு மாதிரி இல்லை பெண் வளர்ப்பு என்பது நமது சகோதரிகளும் அறிந்த ஒன்றே. அதனால் இந்த வித்தியாசப்படுதலை அவர்கள் மிகத் துல்லியமாக நுணுக்கமாக உணர்வார்கள். பெண்ணுக்கான சந்தேகம் என்ற பழைய பாட்டையில் இந்தக் கதையை அணுகாமல் அந்த சித்ரா போன்ற பரிதாபபட்ட பெண்களின் மனநிலையை கோடிகாட்டிய கதை என்று கொள்ள வேண்டுகிறேன்.
  மனத்தத்துவ ஆய்வுகளை மேற்கொண்டாராலும் சகோதரிகளாலுமே இந்த நிலைகளை ஆதரவு மனப்பானமையுடன் அணுகவும் முடியும் என்ற இன்னொரு பக்க பார்வையும் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 20. சரளமான நடையில் எழுதப்பட்டிருக்கும் நல்ல கதை. ராஜியின் மனவோட்டங்களும், ராஜிக்கும், சித்ராவுக்கு நடக்கும் உரையாடல்களும் வெகு யதார்த்தம். கதையோட்டத்தில் ஜி.வீ.சாரின் நிபுணத்துவம் வெளிப்படுகிறது. நன்றியும், வாழ்த்துக்களும்.
  கதை நடந்த காலம் எழுபதுகளோ? (1970s)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு முக்கியமான கேள்வி: இப்படியான கதை நிகழ்வுகளை நிகழ் வாழ்க்கையில் பெண்ணுலகம் கடந்து விட்டதாகவா நினைக்கிறீர்கள்?..

   நீக்கு
  2. உண்மை நிகழ்வுகள் இதை விட மோசமாக இருக்கும் ஜீவி சார். எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்குப் பதினேழு வயதில் அவள் அண்ணாவிற்குத்திருமணம் நடந்தது. நிச்சயதார்த்தத்தில் ஆரம்பித்து இப்போது வரை அந்தப் பெண்ணிற்கு அவள் அண்ணன் மனைவி எதிரியே! அப்படியே பார்த்து வருகிறாள் என்பதோடு இந்தப் பெண் இருந்தால் அண்ணன் மனைவி தன் கணவனுக்கு எதுவும் செய்யக் கூடாது என வெளியே சொல்லப்படாத சட்டமும் உண்டு. இத்தனைக்கும் அந்தப் பெண் அண்ணனோடு வளரவில்லை. இவள் பிறந்து ஏழு மாதங்களுக்குள்ளாக அவர் வெளியூர் படிக்கச் சென்றுவிட்டார்! அண்ணா, தங்கை எனப் பழகியதே இல்லை. அண்ணனை ஓர் விருந்தாளி மாதிரியே (எப்போவானும் விடுமுறையில் தானே வருவார்) பார்த்துப் பழகியவள். திடீரெனத் தன் பதினேழாம் வயதில் தன் சொந்த அண்ணனோடு நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்புள்ள ஓர் பெண் வருகிறாள் என்றதும் அவளால் தாங்க முடியவில்லை இன்று வரை!

   நீக்கு
  3. '70 கதையா என்று சகோ. பானு கேட்டதினால் கேட்டேன். கதைகள், தொடர்கதைகளாய்த் தான் காலம் பூராவும் உலா வந்து கொண்டிருக்கின்றன.

   அந் நாட்களில் அதிகம் இல்லாமல் இருந்த மனக்கோளாறுகள் வேறு இப்பொழுது சேர்ந்து கொண்டிருக்கின்றன.

   நீக்கு
  4. மனக்கோளாறெல்லாம் இல்லை. அந்தப் பெண்ணிற்கு இப்போது 65 வயது. அவள் அண்ணாவுக்குக் கல்யாணம் ஆகி 50 வருடங்கள் ஆகப் போகின்றன. ஆனாலும் அவள் வந்தால் முக்கியத்துவம் அவளுக்கே கொடுக்கப்படவேண்டும். அவள் அண்ணன் மனைவி விலகியே இருக்கணும்! இது ஓர் எழுதாத சட்டம்!

   நீக்கு
  5. அந்தப் பெண்ணைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? மனக்கோளாறு என்பது பொதுவாகச் சொன்னது.

   நீக்கு
 21. அழகிய கதை பெண்களுக்கு சட்டென பற்றிக்கொள்ளும் சந்தேகம் ராஜியும் விதிவிலக்கல்ல! இனியெனும் உறவுகள் தொடரட்டும் அழகாக...

  பதிலளிநீக்கு
 22. //வெள்ளை மேகக் கூட்டங்களினூடே சந்திரன் 'பகபக'வென்று சிரித்துக் கொண்டிருந்தான்.//

  சந்தேக மேகம் கலைந்து பூரண சந்திரன் வந்து விட்டான், இனி தெளிந்த நீரோடையாக வாழ்க்கை செல்லும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஜிக்கு அன்பான தங்கையும் கிடைத்து விட்டாள்.

   நீக்கு
  2. சரியாகச் சொல்லி விட்டீர்கள், கோமதிம்மா. அதுவும் ஒரே ஒரு அக்காவாக ராஜி.

   நீக்கு
 23. // ஒவ்வொரு கருத்தும் போக ஒரு நிமிடம் எடுக்கிறது பாருங்க...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... //

  சகோதரி கீதா அவர்களுக்கும், மற்ற அனைத்து வாசகர்களுக்கும் :

  சில நாட்களாக நீங்கள் தான் அதிகம் இதைப்பற்றி கருத்துரையில் சொல்லி வருகிறீர்கள்...

  கைபேசியில் இந்த தளத்தை வாசிப்பவர்களுக்கு, இந்தப் பிரச்சனை தெரிய வாய்ப்பில்லை... கணினியில் (Desktop) இந்த தளம் திறக்க வெகு நேரம் தான் ஆகிறது... அது ஏன் என்று இனிமேல் தான் ஆராய வேண்டும்... ஆனால் எப்போதும் கணினியில் கூட நான், கைபேசியில் திறப்பது போல செய்வதுண்டு...

  கணினியில் (Desktop) தளங்களை வாசிப்பவர்களுக்கு :- தேவை ?m=1

  இன்றைய பதிவின் முகவரியையே எடுத்துக் கொள்வோம்...

  இணைப்பு 1http://engalblog.blogspot.com/2019/08/blog-post_13.html

  இணைப்பு 2http://engalblog.blogspot.com/2019/08/blog-post_13.html?m=1

  இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் ?m=1

  சுட்டியை, இணைப்பு 2 என்று கொடுத்துள்ளதற்கு அருகில் உள்ள இணைப்பு (→ ←) மேல் கொண்டு சென்று, right click செய்து "open link in new tab" என்பதை சொடுக்கவும்... சில நொடியில் இந்தப் பதிவு அடுத்த tab-ல் திறக்கும்... நன்றி...

  அவ்வளவு தான் பிரச்சனை... இதில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா...?

  பதிலளிநீக்கு
 24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 25. @ இராய. செ.

  சமீபத்தில் என் பார்வையில் பட்ட முக நூல் கவிதை ஒன்றை வாசித்த தருணத்தில் அதற்கான ஆக்ரோஷ மறுவினையாய் இந்தக் கதையை வாசகர்களின் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் முகிழ்த்தது.

  சென்ற காலத்தில் மன உணர்வுகளின் ஆக்கிரமிப்புகள் தாம் சிறுகதை, நாவல்களின் வெளிப்பாடாக இருந்தமையால் வாசகர்களுக்கு மிக நெருக்கமாக அவை இருந்தன. மன வெளிப்பாடுகளுக்கு வாகாக கதாப்பாத்திரங்களுக்குள்ளான பேச்சு உரையாடல்களின் வாயிலாக கதைப் போக்கை அமைத்து வாசகர்களை கதையோடு நெருங்க வைத்தார்கள். இப்பொழுதோ கதாசிரியர் கதையைச் சொல்லும் போக்கில் அல்லது எதையாவது விவரிக்கும் பாங்கில் கதையை நகர்த்தும் காலம். அதனால் தானோ என்னவோ எழுத்தாளர் என்ற பெயர் மாதிரி அது கதைசொல்லி ஆயிற்று.

  அந்த பொற்காலத்தை மீட்டெடுக்கவே உரையாடல் மூலம் கதையை நகர்த்தும் இந்த முயற்சிகள் என்று புரிந்து கொள்கிறேன் ஐயா.

  பதிலளிநீக்கு
 26. (1) https://gtmetrix.com/
  (2) https://tools.pingdom.com/
  (3) https://developers.google.com/speed/pagespeed/insights/

  மேலே உள்ளவை ஒவ்வொரு தளத்தின் வேகத்தையும் அறிந்து கொள்ளும் சில தளங்கள்...

  முதலாவதில் (1) :- கீழ்கண்டவாறு வருகிறது :
  Analysis Error - The page took too long to load - GTmetrix tried to analyze the page, but it took longer than 2 minutes to finish loading. Please login to try testing from a test location closer to your server

  இரண்டாவதில் (2) :- Your Results:என்பதில் ஒரு வரைபடம் வர வேண்டும்... அது வரவேயில்லை... அதே சமயம் Load time: -0.00 s சரியாக ஆய்வு செய்யவில்லை...

  மூன்றாவதில் (3) :- ம்ஹிம்... ஆய்வு செய்வதற்கே இன்னும் திணறிக் கொண்டே இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 27. // ஆமாம் கீதா... நேற்று நீண்ட நாட்களாக உபயோகத்தில் இல்லாத தளங்களை நீக்கிப்பார்த்தேன். அப்படியும் நேரம் எடுக்கிறது. //

  ஸ்ரீராம் சார்... அவைகள் மட்டும் காரணம் இல்லை... https://engalblog.blogspot.com/2019/08/blog-post_13.html-இவ்வாறே கணினி (Desktop) மற்றும் கைபேசியில் பதிவை திறந்து பார்த்தேன்... இரண்டிலும் நேரம் ஆகிறது... கணினியில் திறக்கும் போது ஒரு சின்ன க்ளூ கிடைத்தது...

  waiting for facebook
  waiting for facebook
  waiting for facebook

  Facebook Badge - என்று ஒரு gadget இருக்கிறதல்லவா...? இதில் தான் சிறு பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கிறேன்...

  இங்கு http://www.facebook.com/engalblog என்று உள்ளது... ஆனால் அங்கு முகநூலில் "எங்கள் ப்ளாக்" என்று தமிழில் உள்ளது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டி.டி.!

   செவ்வாய்க் கிழமை பிரைம் டைம் இல்லையோ?..

   இந்த மாதிரி தொழில் நுட்ப உதவிகளுக்கு எங்கள் பிளாக்கில்
   ஆசிரியர் குழுவிடம் கேட்டு ஒரு தனிப் பதிவே போட்டு விடுங்களேன்.. வாசகர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளியவும் வசதியாக இருக்கும். :))

   நீக்கு
  2. மன்னிக்கவும் ஐயா... இதுநாள் வரை கணினியில் ?m=1 இல்லாமல் தளங்களை வாசித்ததில்லை... நாளை இதை சொல்லி இருக்கலாம்...

   'ராஜி' அவசரக் குடுக்கை... நான் ஆர்வக் குடுக்கை... ஹா... ஹா...

   'சித்ரா' பற்றி பிறகு...

   நீக்கு
  3. ஆஹா.. சித்ராவைப் பற்றியா? படைத்தவன் பார்வையை விட்டு விலகியா, ஒட்டியா/..

   வரவேற்கிறேன்..

   நீக்கு
 28. பாசத்திற்காக ஏங்குவோருக்கு மிகவும் பிடித்த கதை. மனதை அதிகமாகவே உலுக்கிவிட்டுள்ளார் கதாசிரியர். அவருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வளரும் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு தாய் ஒரு அவசியமான உறவு. ஆண் குழந்தைகளுக்கும் தான். அந்தக் குழந்தைகளின் தந்தைக்கும் தான்! எதற்கு?.. அவனை நெறிப்படுத்த! மொத்தத்தில், தாயாய், தாரமாய், குடும்பத் தலைவியாய்-- என்று எல்லாம் அந்தத் தாயில் தான் போய் முடிகிறது!

   தங்கள் வருகைக்கு நன்றி, ஐயா.

   நீக்கு
  2. தாயில்லாமல் வளர்ந்த பெண்கள் மிகுந்த மனமுதிர்ச்சியோடு தன் தம்பி, தங்கைகளை அரவணைத்துக் கொண்டு குடும்பத்துடன் ஒட்டி உறவாடிக் கொண்டு வாழ்ந்ததையும் பார்த்திருக்கிறேன். பள்ளியில் படிக்கும் நாட்களில் உடன் படித்த மாணவிகள் இருவருக்குத் தாய் இல்லை. அவள் அக்கா தான் குடும்ப நிர்வாகம். அதே போல் நாங்க இருந்த மேலாவணி மூலவீதியிலும் ஒரு குடும்பம். தாயில்லாமல்! மூத்த பெண் தான் குடும்ப நிர்வாகம் செய்தாள். தம்பிகள் படித்து வேலைக்கு வந்து அந்தப் பெண்ணிற்குக் கல்யாணம் ஆகும்போது அந்தக் காலத்திலேயே 27 வயது ஆகி விட்டது.

   நீக்கு
  3. சென்ற காலத்துக்காரர்களுக்கு இதெல்லாம் பழக்கப்பட்டது தான்.

   ஒரு பெண் பிறவி வீட்டில் இருந்தால் போதும். தாய் இல்லையே என்ற குறை இருக்காது. நியாயம் தான்.

   நீக்கு
 29. வணக்கம் சகோதரரே

  மிக அழகான கதை. படிக்கும் சுவாரஸ்யம் குன்றாமல் கைப்பற்றி அழைத்துச்சென்ற கதை.

  பெண்களுக்கே இயல்பாக வரும் தான். தனது என்ற எண்ணத்தை (அதுவும் தன் கணவர் என்ற வாழ்வாதார விஷயத்தில்) வெளிக்காட்ட இயலாமல் பொறுமையாக மனதுள் புழுங்கி, இறுதியில் கோபப்படும் போது ராஜியின் பாசம் மிகுந்த மனது புரிகிறது என்றால், குழந்தைத்தனமாக அன்னை, சகோதரிகள் என யாரும் இல்லாத சூழ்நிலையில் வளர்ந்து, மோகனிடம் சகோதர பாசத்தை கண்டுணர்ந்து, தன்னை போலவே வந்தவளும் இருப்பாள் என்ற எண்ணத்தில், அதுவும் தன்னைப் போலவே எதையும் இயல்பாக எடுத்துக்கொள்ளளும் அன்பான மனதுடன் இருப்பாள் என்ற நம்பிக்கையில் பேசிப் பழகும் சித்ராவின் வெகுளி மனப்பான்மையும் புரிகிறது. இறுதியில் இதனால்தான் இருவருமே ராஜ் மோகனிடம் தங்களுடைய பிரச்சனையை உணர்த்தாமல், அவன் வரை கொண்டு செல்லாமல், சுலபமாக, சகோதரி பாசத்தை காட்டி ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளவும் முடிந்தது.

  என்றுமே பெண்களுக்குள் அனுசரிப்புகளும், விட்டுத்தரும் மனோ நிலைமைகளும் நிரந்தரமாக உண்டு என்பதை அழுத்தமாக காட்டிய கதை.

  எந்தவிடத்திலும்,நெருடல் தட்டாமல் கதையை அருமையாக எழுதிய சிறந்த எழுத்தாளரான ஜீவி சகோதரருக்கு என் பணிவான நன்றி கலந்த வணக்கங்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறுங்கதையாய் சொல்லி தெளிவாக விளக்கியமைக்கு நன்றி, சகோதரி!


   நீக்கு
 30. //சந்திரன் 'பகபக'வென்று சிரித்துக் கொண்டிருந்தான்.// இந்த "பகபக"வெனச் சிரித்தான். என்பதில் உள்ள "பகபக" எழுத்தாளர் லக்ஷ்மியை நினைவூட்டியது. அவர் நாவல்களில் இந்த வார்த்தை அடிக்கடி வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், தான்! 'பகபக' டாக்டர் திரிபுரசுந்தரிக்கே வாய்த்த அடுக்குத் தொடர்!

   அந்த நாளைய எழுத்தின் அழகை மீட்டெடுக்க என்ன தான் வழி?.. சொல்லுங்களேன். இது எனக்கு ஒரு பேரிழப்பாக இருக்கிறது!..

   நீக்கு
 31. // ஆண் வளர்ப்பு மாதிரி இல்லை பெண் வளர்ப்பு டாட்... டாட்... பெண்ணுக்கான சந்தேகம் என்ற பழைய பாட்டையில் டாட்... டாட்... கோடிகாட்டிய கதை //

  இது எனக்கான மறுமொழி என்று நினைக்கிறேன்... தாங்கள் "பதிலளி" என்பதை சொடுக்காமல், தனியாக கருத்துரை சொன்னாலும்...

  "ஐயோ... மறுபடியும் தொழிற்நுட்ப விசயமா DD...?"

  இல்லை ஐயா... அந்தப் பாடலில் மேலும் சில வரிகள் உண்டு... "தெய்வப்பிறவி" பாடலின் காட்சிகளும் மனதில் வருவதுண்டு...

  ஞானோதயம் குறைந்தால் தொற்றும் ரோகம்
  நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் – சுத்த
  ஞானோதயம் குறைந்தால் தொற்றும் ரோகம்
  நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - அது
  ஆணோடு பெண்ணிடம் வரும் போகும்
  ஆணோடு பெண்ணிடம் வரும் போகும் - அதற்கு
  ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்...
  ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்...

  இனி "தெய்வப்பிறவி" சித்ரா பற்றி... கண்டிப்பாக பல பாடல்கள் மனதில் எழுந்தாலும் இங்கு சொல்லப்போவதில்லை ஐயா...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதான் உங்களுக்கான மறுமொழி:

   ஆஹா.. சித்ராவைப் பற்றியா? படைத்தவன் பார்வையை விட்டு விலகியா, ஒட்டியா/..

   வரவேற்கிறேன்..

   நீக்கு
  2. சரி.. ஒலி வடிவில் தான் ஒரு பாடலை நினைவு கொள்வீர்களா?

   //ஆணோடு பெண்ணிடம் வரும் போகும்
   ஆணோடு பெண்ணிடம் வரும் போகும் - அதற்கு
   ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்...
   ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்...//

   --இப்படி ஓரே வரியை இரண்டு தடவை நினைவு கொள்வதால் கேட்கிறேன்..

   நீக்கு
  3. பாடலில் அவ்வாறு உள்ளதாக ஒரு நினைவில் சொன்னேன்... சரி பார்க்க : https://www.youtube.com/watch?v=eSA7JW6BpnI

   நீக்கு
 32. DD...

  நீங்கள் கொடுத்துள்ள இணைப்பைச் சொடுக்கினால் தளம் சற்றே வித்தியாசமாக இடதுபுறமாக திறக்கிறது. நான் அந்த இணைப்பில் m=1 கொடுத்தால் இந்தப் பதிவு வராமல் முகப்பு என்று வருகிறது. ஆனால் உடனே திறக்கிறது.பேஸ்புக் காட்ஜெட்டை நீக்கிப்பார்க்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே தான் நானும் சொல்ல வேண்டும் நினைத்தேன்... நீக்கிப் பாருங்கள்...

   // m=1 கொடுத்தால் இந்தப் பதிவு வராமல் முகப்பு என்று வருகிறது //

   இதில் ? என்பதை விட்டு விட்டீர்கள்...! (?m=1) is correct...

   http://engalblog.blogspot.com/?m=1
   இதன் பின், திறக்கும் பக்கத்தில் (page) முதலில் உள்ள இன்றைய பதிவின் இணைப்பையும் சொடுக்கினால்...

   http://engalblog.blogspot.com/2019/08/blog-post_13.html?m=1

   இவ்வாறு திறக்கும்...

   ஜீவி ஐயா அவர்களுக்கு வரும் கோபத்திற்கு நான் இல்லை... me escape...!

   நீக்கு
  2. புராணத்தில் இலக்குவன் தான் கோடு வரைந்தான். அதனால் ஸ்ரீராமே வரையும் கோட்டை ஸ்ரீராமே தாண்டும் பொழுது பார்வையாளர்களாகவே இருப்போம்.! சரியா?..

   நீக்கு
  3. அபுரி ஜீவி ஸார். நான் என்ன கோட்டைத் தாண்டினேன் என்று சுத்தமாக அபுரி!!

   நீக்கு
  4. //ஜீவி ஐயா அவர்களுக்கு வரும் கோபத்திற்கு நான் இல்லை... me escape...!//

   அது டி.டி. பாடு, உங்கள் பாடு!

   நீக்கு
 33. // வெள்ளை மேகக் கூட்டங்களினூடே சந்திரன் 'பகபக'வென்று சிரித்துக் கொண்டிருந்தான்...//

  அதற்கு முன் 'பகபக'வென்று எரிந்த ராஜியின் மனது...?

  "இது அந்தக்காலத்து பெண்..." என்று ஒதுக்கி விட முடியாது... "எந்தக்காலத்து பெண் கூட அப்படித்தான்" என்றும் கூட சொல்ல முடியாது...!

  பெண்களின் மனதை அறிந்து தெரிந்து புரிந்து கொண்டவர்கள், யாராவது உண்டா ஐயா...?

  பதிலளிநீக்கு
 34. சித்ரா...

  எவ்வளவு அழகான பெயர்... சித்திரம் போல...

  என் வாழ்விலும் ஒரு ஜெயமான சித்திரம்... ஆனால் என் மனைவி ராஜி போல் அல்ல...

  ஸ்ரீராம் சார்... போகிற போக்கை பார்த்தால், ஜீவி ஐயா என் கதையை முழுவதும் சொல்ல வைத்து விடுவார் போலிருக்கே...! இன்று காலையிலேயே நிறைய சிந்திக்க வைத்து விட்டார்... ஆனால் பெண்கள் அனைவரும் "weak" என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடிவியவில்லை என்பதே உண்மை...

  குறிப்பு : சித்ரா - எனது இரண்டாவது அக்காவின் பெயர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிடி, நீங்கள் சொல்லுவது மிகச் சரி. பெண்களின் மனோபலம் ஆண்களிடம் நிச்சயம் கிடையாது. உடல் பலம் மட்டும்!

   நீக்கு
  2. பெண்மனம் வாய்த்த ஆண்களுக்கு?..

   நீக்கு
 35. அருமை, டிடி, அருமை.

  பாசமலர் சொரியட்டும்!..

  பதிலளிநீக்கு
 36. இன்று என்னமோ நேரம் கிடைத்தது... அதனால் தான் எனது பல கருத்துரைகள்... யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... முக்கியமாக ஜீவி ஐயா...

  அப்புறம் இன்றைய கதையில் ஒரு ட்விஸ்ட் : சும்மா ஜாலிக்காக...!

  // "ராஜி, நம்ம சித்ரா இல்லே, சித்ரா.. சாயந்தரம் வந்தாளே-- அவள் எவ்வளவு சூட்டிகையான பெண் பார்த்தாயா? அவளைப் போலவே எனக்கொரு தங்கை இருந்தாள். நான் கொடுத்து வைக்காத பாவி, ராஜி.." //

  "ராஜி, நம்ம சித்ரா இல்லே, சித்ரா.. சாயந்தரம் வந்தாளே-- அவள் எவ்வளவு சூட்டிகையான பெண் பார்த்தாயா? அவளைப் போலவே உனக்கொரு தங்கை இருந்தால், நான் கொடுத்து வைக்காத பாவி, ராஜி.."

  எனக்கொரு / உனக்கொரு
  இருந்தாள். / இருந்தால்,

  மேலும் கதையை தொடர கீழுள்ள இருவருக்குமே திறமை உள்ளது என்று நினைக்கிறேன்...

  1) சகோதரி கீதா அவர்கள்...
  2) நெல்லைத்தமிழன் ஐயா வரிகள்...

  எனது மைண்ட் வாய்ஸ் :- கொளுத்திப் போட்டாச்சி... அய்யய்யோ... gmb ஐயா மாதிரி ஒரு கருத்துரை சொல்லிட்டேனே... இதை படித்தால் அவர் என்ன நினைப்பாரோ...? இருந்தாலும் தொலைபேசியில் பேசி சரி பண்ணுவோம்...!

  பதிலளிநீக்கு
 37. //உனக்கொரு தங்கை இருந்தால், நான் கொடுத்து வைக்காத பாவி, ராஜி.."//

  வார்த்தை அமைப்பு சரியாக வரவில்லை! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய (பாலசந்தர்) ஆண்களின் மைண்ட் வாய்ஸ் + weakness...! காலத்தின் கோலம்...?

   நீக்கு
 38. இம்மாதிரியான நிகழ்வுகள் எல்லா காலத்திலும் இருக்கும். நான் கேட்டதற்கு காரணம், கதை சொல்லப்பட்ட விதம்.
  இப்போதெல்லாம் திருமணத்தில் யாரும் மணமகனின் அங்கவஸ்திரத்தையும், பெண்ணின் புடவை தலைப்பையும் முடித்துப் போடுவதில்லை. திருமணத்திற்கு முன்பே விதம் விதமான போஸ்களில் கேண்டிட் போட்டோகிராபி எடுத்துக் கொள்ளும் காலம் இது. எனவே,//அம்மி மிதித்து, அருந்ததி காட்ட எழுந்திருக்கும் போது, கொஞ்சம் முன்னால் சடாரென்று ராஜ்மோகன் எழுந்திருக்க நழுவி விட்ட அங்கவஸ்திரம் இவள் மடியிலேயே விழுந்து விட்டது. ஆஹா! அப்பொழுது எழுந்த சிரிப்பு இருக்கிறதே! ராஜிக்கு ஒரே வெட்கமாகப் போய் விட்டது. உடனே அவள் தோழி கோமளம் சும்மாவா இருந்தாள்? குனிந்து கொண்ட அவளது தலையை நிமிர்த்தி வேடிக்கை செய்யவில்லை?...// இதற்கெல்லாம் சான்ஸே இல்லை. மேலும் இப்போது யார் கணவனை 'அவர்' என்று குறிப்பிடுகிறார்கள்?

  பதிலளிநீக்கு
 39. ஆமாம். இதற்கும் மேலே. அந்த முக நூல் கவிதையைப் படிக்கவில்லை, போலிருக்கு நீங்கள்!

  பதிலளிநீக்கு
 40. கதையென்றால் கருத்துக்கு தான் போக வேண்டும்.
  கணவன் இன்னொரு பெண்ணுடன் நெருக்கமாக பழகுவது பற்றி தவறாக எடுத்துக் கொள்ளாத காலம் இது. இந்தக் காலத் இல் போய் இப்படிப் பட்ட கதையா? - என்று கேட்டீர்கள் என்றால் நியாயம். பெண்களின் மன நிலை அப்படி மாறியிருக்கிறதா, சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பெண்களின் மன நிலை அப்படி மாறியிருக்கிறதா, சொல்லுங்கள்.//இப்போது நட்பாக பழகுவதில் பல மாற்றங்கள் வந்திருக்கின்றன. நண்பனின் மனைவியை, கணவனின் தோழனை பெயரிட்டு அழைப்பது, தொட்டு பேசுவது போன்ற பழக்கங்கள் வந்தாலும், சில அடிப்படை உணர்வுகள் எந்த காலத்திலும் மாறாது. தன் கணவனிடம் இன்னொரு பெண் அதீத உரிமை எடுத்துக் கொள்வதை எந்தப் பெண்ணும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள்.

   நீக்கு
 41. இப்பொழுது கூட காசி யாத்திரை, ஊஞ்சலில் இருந்து அத்தனையும் தான் உண்டே! மணையில் அமர்ந்திருக்கும் மணமகனின் ஓரப்பார்வை, மணமகளில் தலை கவிழ்ப்பு, சுற்றியிருக்கும் சுற்றத்தார் தோழி, தோழார்களின் கலகலப்பு எல்லாம் தான் உண்டே?.. எதை மிச்சம் வைத்தோம் நாம்? முன்னாலேயே பழகிய ஜோடிகள் என்றாலும்
  பந்துக்கள், கூட்டத்தினரிடையே அதைக் காட்டிக் கொள்வார்களா, என்ன? மணமகன் எப்படியோ அப்படியே; மணமகள் எப்படியோ அப்படியே.. சினிமா கல்யாணங்களில் கூட அத்தனை நாண நளினங்களையும் காட்டுகிறார்களே! எதில் குறை வைத்தோம் நாம்?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் இப்போவும் இருக்கு ஜீவி சார். ஆனால் மணமகள் தலை கவிழ்ப்பு? மணமகனின் ஓரப்பார்வை? சுத்தம், அப்படி எல்லாம் நடக்கிறதா என்ன?

   //முன்னாலேயே பழகிய ஜோடிகள் என்றாலும் பந்துக்கள், கூட்டத்தினரிடையே அதைக் காட்டிக் கொள்வார்களா, என்ன?// சரியாப் போச்சு போங்க! மேடையிலேயே கணவனைப் பெயர் சொல்லியோ அல்லது, "என்னடா இது?" என்றோ கேட்கும் மணமகளைப் பார்த்ததில்லை போலும்! அதிலும் இப்போல்லாம் ரிசப்ஷனில் இந்த நடனம் ஒண்ணு வைச்சிருக்காங்களே! அதிலே பார்க்கணும்! :( அந்த மாதிரிக் கல்யாணங்களுக்கு எல்லாம் போனதில்லைனு நினைக்கிறேன். புரோகிதர் பாட்டுக்கு மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க மணமகனும், மணமகளும் அவர்களுக்குள் விடாமல் பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்ததில்லை போல!

   நீக்கு
 42. கதையைப் படிக்கும்போது எனக்கு எஸ்.வி.சேகரின் நாடகம்தான் நினைவுக்கு வந்தது. அதிலும் இதேபோன்ற சிச்சுவேஷன், வசனங்கள். அதில் அந்தப் பெண்ணுக்கு முன்னாள் காதலன் இருப்பான், அதே போன்றே இந்தப் பெண்ணின் கணவனும் இருப்பாள்.

  என்னதான் வெகுளியாக இருந்தாலும், புது மனைவி வந்தபோது, பழக்கம் இல்லாமல் சித்ரா அப்படி நடந்துகொள்வாளா?

  உரையாடல்கள் உயிரோட்டமாக இருந்தன.

  பதிலளிநீக்கு
 43. @ நெல்லைத் தமிழன்

  //என்னதான் வெகுளியாக இருந்தாலும், புது மனைவி வந்தபோது, பழக்கம் இல்லாமல் சித்ரா அப்படி நடந்துகொள்வாளா?..//

  இப்படியெல்லாம் கேள்விகள் கேட்பது தான் எனக்குப் புரியவில்லை.
  கதையை இப்படித்தான் கொண்டு போக வேண்டுமென்று தீர்மானிக்கிறோம்.. அதற்கேற்றவாறு எப்படியெல்லாம் எழுத வேண்டுமோ அப்படி எழுதுகிறோம் அவ்வளவு தானே?..

  இப்படியெல்லாம் நூற்று நூற்று பார்த்துக் கொண்டிருந்தால் அது கதையாக இருக்காது.. facts and figures எழுதிய அறிக்கை மாதிரி தான் இருக்கும்.

  நீங்களும் அப்படியெல்லாம் யோசித்து யோசித்து எழுத முயற்சிக்கக் கூடாது என்பதற்காகத் தான் சொல்கிறேன். புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. நன்றி, நெல்லை.


  பதிலளிநீக்கு
 44. (இன்று மட்டும்) 9 மணிக்கு கடை மூடும் முன்பு இங்கு எட்டிப் பார்த்தேன்... அதனால் இந்த கருத்துரை...

  // மெல்ல சித்ராவுக்குத் தெரியாமல் அவளை நோட்டமிட்டாள்.// என்னவொரு வர்ணனை... // மாங்கல்யச் சரடை வெளியே எடுத்து // தங்களின் தவிப்பும்...

  இதையெல்லாம் தங்களுக்கே உரித்தான கலை...! ஆனால்...

  //உங்களோட அவர் வந்துட்டார் போலிருக்கு.. நா வர்றேன்...// தெளிவான பெண் // அடுத்த நாள் மத்தியானம் கதவு தட்டப்பட்ட பொழுது...//

  சித்ராவின் மனதில் ? :-

  "யார் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம்... எனது அண்ணனுடன் பேச பழக எனக்கு முழு உரிமையும் உண்டு..."

  // மாமி.... மாம்மி... " சித்ராவே தான்.//

  அண்ணி.... அண்ணீ..." சித்ராவே தான்...

  எனது தெளிவு

  நன்றி ஐயா...

  பிற்சேர்க்கை :-

  யாருடைய கருத்துரையும் படித்து விடாதே... உன்னுடைய கருத்து மாறி விடும்... ஓடிடு டிடி...!

  பதிலளிநீக்கு
 45. மன்னியை (அண்ணியை) விட அக்கா தான் நெருக்கம் ஜாஸ்தி. சித்ராவுக்கும் தேவை அன்பு செலுத்த ஒரு அக்கா தான் டி.டி.
  பெண்களில் சகோதர பாசத்திற்கு ஈடு இணை கிடையாது. கூடப் பிறந்த ஒவ்வொரு அக்கா--தங்கையும் பிரிந்து வெவ்வேறு வீடுகளில் வாழ்க்கைப்பட்டு.. இதே ஜோரில் இன்னொரு கதையையும் நீங்கள் தொடங்கலாம். :)

  பதிலளிநீக்கு
 46. சிறுகதை என்பது எழுதுபவர் கற்பனையில் உதிப்பது சரி தவறு என்று ஏதும்கிடையாதுஎழுதுபவரின் உணர்வுள் அங்கே பிரதிபலிக்கும்

  பதிலளிநீக்கு
 47. பதில்கள்
  1. மிகத் தாமதமாகப் பின்னூட்டம் இடுகிறேன்.
   புதுமணப் பெண்ணின் மனத்தாபத்தை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஜீவி சார்.
   திருமணமான புதிதில் அப்படித்தான் இருக்கும் மனது. என் புருஷன் எனக்கு மட்டும் என்கிற மனப்பான்மை.
   பெரிய குடும்பங்களில் வாழ்க்கைப் படும்போது முதிர்ச்சி தானே வரும்.

   அந்தச் சித்ரா மட்டும் ஒரு அழகான அண்ணா போட்டு அழைத்திருந்தால் நிலைமை
   சுருக்கச் சரியாகிவிடும்.
   மிக மிக அருமையாகச் சொல்லிச் சென்றிருக்கிறீர்கள்.
   மனம் நிறை வாழ்த்துகள்.

   நீக்கு
 48. ஒரு ஆண் பெண் மனத்திற்குள் புகுந்து கொண்டு எழுதிய கதை. இந்தக் கதை அரு. ராமநாதனின் காதல் பத்திரிகையில் பிரசுரமான போது எனக்கு வயது 21. பாண்டிச்சேரியில் இருந்த பொழுது.

  சமூகக் கதைகளில் சமகாலக் கதையைத்தான் எழுத வேண்டுமென்று ஏதாவது சட்டமா, என்ன?..

  இந்தக் கதையில் உறையாடலை சங்கிலிக் கோர்வையாய் கோர்த்தது தான் அழகு. ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்திற்கு தாவுவது தெரியாதது மாதிரி உரையாடல் அமைந்திருக்கும். உரையாடலிலேயே உணர்வுகளைப் பொத்தி வைத்து கதையை நடத்திச் சென்றதினால் இதற்கு மேல் எழுதுவதற்கும் ஒன்றுமில்லை. There the matter ends என்ற நிலை.

  -- கடைசி பின்னூட்டம் என்பதினால் பொதுவான பதிலாகச் சொல்லியிருக்கிறேன்.

  உங்களுக்கானது:

  //அந்தச் சித்ரா மட்டும் ஒரு அழகான அண்ணா போட்டு அழைத்திருந்தால் நிலைமை
  சுருக்கச் சரியாகிவிடும். //

  ஹஹ்ஹஹஹா..

  நிறைவான விமரிசனத்திற்கு நன்றி, வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 49. மிகவும் சுவாரஸ்யமான சம்பவங்கள் கதையாகி பரிமாறப்பட்டு உள்ளதால் படிக்க நல்ல டேஸ்ட் ஆக உள்ளது.

  கதாபாத்திரங்களான புதுமணப்பெண் ராஜி தொக்கு மாங்காயாகக் காட்சியளிக்க, அந்தப் பருவப் பெண் சித்ரா, பச்சரிசி வடுமாங்காயாக .... ஜோர் ஜோர்.

  எழுத்து நடை படிக்க மிகவும் ருசியாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 50. தங்களின் இளம் (21) வயதில், அதுவும் பாண்டிச்சேரியிலிருந்து எழுதியுள்ளதால், எழுத்தைப் படிக்கும் போதே நல்ல ‘கிக்’கை ஏற்படுத்துகிறது. :)

  பதிலளிநீக்கு
 51. வாசித்து ரசித்தமைக்கு நன்றி,வை.கோ. சார்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!