புதன், 28 ஆகஸ்ட், 2019

புதன் 190828:: உணவுக்கு போடுங்க ஓ(ட்டு!)


சென்ற வாரத்தில் non fiction வகைப் புத்தகங்களில் கவர்ந்த புத்தகம் குறித்து எழுதிய எல்லோருக்கும் எங்கள் நன்றி!


கீதா சாம்பசிவம் :

தொலைக்காட்சியில் வரும் இப்போதைய பட்டிமன்றங்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன? பார்க்கும் வழக்கம் உண்டா?



& ஒரு காலத்தில் சன் டி வி பட்டிமன்றங்கள் பார்த்தது உண்டு. இப்போது என் டாடா ஸ்கை பட்டியலில் மாதாந்திர கட்டணம் செலுத்தவேண்டிய எந்த சானலையும் சேர்க்கவில்லை. ஓ சி சானல்களில் வரும் பட்டிமன்றங்களைப் பார்க்கும் அளவுக்கு பொறுமையும் இல்லை. 

அவற்றில் ஆக்கபூர்வமான சிந்தனைகளை ஏற்படுத்தும் வண்ணம் தலைப்புக்களில் வாதாடுகிறார்களா?


$ பட்டிமன்றங்களுக்கு எப்படி தலைப்பு வைக்கலாம் என்பது பற்றி ஒரு பட்டிமன்றம் வைக்கலாம்.
பொழுபோக்கு என்பதற்கு மேல் அதில் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள்.

& நல்ல பட்டிமன்றம் என்று எனக்கு இதுவரை தோன்றிய சிலவற்றைப் பட்டியலிட்டால், டாக்டர் அறிவொளி ஷண்முகம் வாதிட்ட வழக்காடு மன்றம் நினைவுக்கு வருகின்றது. ரேடியோ நாட்களில், கம்பராமாயண பட்டிமன்றங்கள் நன்றாக இருந்தன. 

பட்டிமன்றங்களில் சொல்லும் ஹாஸ்யங்கள் உங்களுக்குச் சிரிப்பை ஏற்படுத்துமா? எரிச்சலை ஏற்படுத்துமா?


$ ஒரு பட்டிமன்ற பேச்சாளர் இதுதான் பேசுவார் என்று நமக்குப் பழகி விடுவதால் ஹாஸ்யங்கள் ரசிப்பதில்லை என்பதுடன் ரசனைக்குறைவான விவரணங்களும் ஒரு காரணம்.


தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்க்கும் வழக்கம் உண்டா?
அவற்றைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?


$ நெடுந்தொடர்களோ இல்லையோ பார்ப்பதுண்டு.

& எந்தக் கொடுந்தொடர்களும் பார்ப்பதில்லை. குடும்ப சீரியல்கள் என்று போடப்படும் சில கண்றாவிகளின் கிளிப்புகள் அவ்வப்போது கண்ணில் படும். ஒரு மூஞ்சியாவது சிரித்தபடி இருக்குமா என்று பார்த்தால் --- ஊஹூம் எல்லாமே இஞ்சி தின்ன குரங்கு மூஞ்சிகள். 


தொடர்கள் எல்லாமே தற்கால மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறதா?
$ வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் தொடர்கள் சில சேனல்களால் கைவிடப்பட்டு.....

& இல்லை, இல்லை, இல்லை. 

15 வயதுப் பெண் தன் காதலனுடன் அலைபேசியில் பேசுவதைத் தந்தை தடை செய்ததால் அவருக்குத் தூக்க மருந்து கொடுத்துப் பின்னர் காதலனுடன் சேர்ந்து குத்திக் கொன்று பின்னர் உடலைக் குளியலறையில் எரித்திருக்கிறாள். இத்தகைய நிகழ்ச்சிகள் தற்காலங்களில் அதிகம் நடக்கின்றன. நேற்று ஒரு காவல்துறை அதிகாரி பேசும்போது இப்படியான நிகழ்வுகளுக்குத் தொலைக்காட்சிகளும், திரைப்படங்களும் காரணம் என்று சொல்லும்போதே அதை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சானல் பாதியில் நிறுத்திவிட்டது.

என் கேள்வி:  இத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால் உண்மையிலேயே மனித குணம் மாறுமா? அதுவும் பெற்ற தகப்பனையே கொல்லும் அளவுக்கு?

$ நேற்று சன் tv யில் சொல்லிட்டாங்க சார் என்று அதுதான் உண்மை என்று வாதிடும் நெல்லைக்காரர்கள் சிலரை நான் அறிவேன்.

& இப்படி நெருங்கிய சொந்தங்களைக் கொலை செய்து, கல்யாணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தையின் ஜீன்ஸ் (பேண்ட் அல்ல) அதே போன்று அந்தத் தம்பதிகளைக் கொன்று குழி வெட்டிப் புதைத்துவிட்டு, காதலனுடன் எஸ்கேப் ஆகச் சொல்லாதா! 


முன்னெல்லாம் பெண்கள் வீட்டு வேலைகளைச் சரியாகச் செய்யவில்லை எனில் அவள் பெற்றோரைக் குறை சொல்வதோடு அவர்களிடம் புகாரும் சொல்லுவார்கள். இப்போ அதுவே மாறி விட்டது. கணவனைப் பற்றி மனைவி அவன் பெற்றோரிடம் குறை கூறும் அளவுக்கு மாறிவிட்டது. வீட்டு வேலையில் கட்டாயமாகக் கணவன் பங்கு எடுக்கவேண்டும் என்றே எல்லாப் பெண்களும் விரும்புகின்றனர். அதில் குறை கண்டால் கணவனின் பெற்றோரிடம் சண்டை போடுகின்றனர்.

இந்நிலை விரும்பத் தக்கதா? இது மாறுமா? முன்னெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்பட்டது இப்போது அநேகமாகப் பலரும் சொல்ல ஆரம்பித்து விட்டனர்! இது சரியா?
$ குறையோ நிறையோ சரி சமம் என்றெல்லாம் பேசாமல் வேலைகளைப்பங்கு போட்டுக்கொள்வது நல்லது.

& குறை கூறுபவர்கள் ஆணோ / பெண்ணோ, அந்தக்காலமோ / இந்தக்காலமோ - மாமியாரோ / மருமகளோ குறை கூறிக்கொண்டுதான் இருப்பார்கள். அது ஒரு டிசைன். அவ்வளவுதான். 
கோபம், பாபம், சண்டாளம் என்பார்கள். உங்களால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பது அறிந்ததே! ஆனாலும் சில அக்கிரமங்களைக் கண்டால் வரும் கோபத்தை (அறச்சீற்றம்னு சொல்லலாம்) எப்படிக் கட்டுப்படுத்துவது?

& கண்ணை மூடி தியானம் செய்யவேண்டியதுதான். மாறி வரும் விஞ்ஞான யுகத்தில் தனி மனித யத்தனங்கள் எவ்வளவு பிரயாசைப்பட்டாலும் சமூக மாற்றங்களைக் கொண்டுவர இயலாது என்கிறார் மேல் நாட்டு அறிஞர் சிலிவா மாக்கியாட்டா. 

துளசிதரன் :

கொசுக்கடியிலிருந்து தப்புவது எப்படி? (குட்நைட் போன்ற விரட்டிகள் இல்லாமல்) இயற்கை முறையில் ஏதேனும் இருக்கிறதா? 


& காந்தி உடம்பில் மண்ணெண்ணெய் பூசிக்கொண்டு கொசுக்கடியிலிருந்து தப்பித்தார் என்று காந்தி நூற்றாண்டு வெளியீடு ஒன்றில் படித்தேன். 
என்னைக் கேட்டால், கொசுவைப் பிடித்து, அதன் வாயை ஊசி நூல் கொண்டு தைத்துவிட்டால், அது வாயைத் திறந்து கடிக்க  இயலாமல் செய்யலாம். 
இன்னும் எவ்வளவோ சூப்பர் ஐடியாக்கள் உள்ளன. சந்தர்ப்பம் கிடைத்தால் பிறகு சொல்கிறேன்!  




கோயில்களில் பூசாரிகள் தட்டை நீட்டுவது (நாம் பணம் போடுவோம் என்ற எதிர்பார்ப்பில்), அல்லது முகத்தில் ஒருவித எதிர்பார்ப்புடன் நம்மைப் பார்ப்பது சரியா? 


& சரியோ தவறோ தெரியாது. அது அவர்களின் GST (God Service Toll) ஆனால் கொடுத்தே தீரவேண்டும் என்று நியதி இல்லை. கொடுப்பவருக்கு மனநிறைவு, கொடுக்கப்பட்டவருக்கு மகிழ்ச்சி. 

கோயில் வாசல்களில் யாசிப்பவர்கள் அதிகமாக இருப்பது ஏன்? காரணங்கள் ஏழ்மையா? உழைப்பின்மையா, அவர்களுக்கு ஏற்ற வேலை கிடைக்காமையா? கோயில் வாசல்களில் யாசித்தால் கண்டிப்பாக ஏதேனும் கிடைக்கும் என்ற எண்ணமா?

& கோயில் வாசல்களில் யாசித்தால் கண்டிப்பாக ஏதேனும் கிடைக்கும் என்ற எண்ணம்தான் அதிகம் இருக்கும். 

கோயில் வாசலில் பிச்சை எடுப்பவர்கள் பெரும்பாலும் சுத்தமாகக் குளித்து, திருநீறு குங்குமம் இட்டு சாந்தமாக அமர்ந்து இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது அவர்களுடைய தொழில்.
'தர்மம் பண்ணுங்க சாமி' என்று அவ்வப்போது உரத்த குரலில் கூவி, மனிதர்களை தர்மத்தைக் கடைபிடிக்கச் சொல்லும் பிச்சைக்காரர்கள் மனித குலத்துக்கு நன்மை செய்பவர்கள்தானே!  

கீதா ரெங்கன் :


பிச்சை புகினும் கற்கை நன்றே என்பதன் விளக்கம்? இங்கு பிச்சை எடுத்தேனும் கல்வி பயில வேண்டும் என்பது இப்படி யாசிப்பதா அல்லது கடன் வாங்கியேனும் அல்லது செல்வந்தர்களின் உதவி பெற்றேனும் கல்வி கற்க வேண்டும் என்பதான பொருளா?


& கற்கை நன்று என்று சொல்லவந்த அ வீ ரா பா அவர்கள், பிச்சை எடுக்கின்ற நிலை வந்தாலும் கல்வி கற்பதை நிறுத்தாமல் தொடரவேண்டும் என்ற அர்த்தத்தில்தான் அதைச் சொல்லியிருக்கிறார். பிச்சை எடுத்துதான் கல்வி கற்கவேண்டும் என்று சொல்லவில்லை! 
பல கல்லூரிகளில் இன்று படிக்க வரும் மாணவர்கள் பிச்சை கொடுத்துதான் கற்கிறார்கள். (பிச்சை = fees)

பொது இடங்களில் யாசிப்பவர்கள் யாரேனும் அப்படி யாசித்து அப்பணத்தைக் கொண்டு கல்வி பயின்றவர்கள் உள்ளனரா? அல்லது பெற்றோர் அப்படி யாசித்துத்தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்தவர்கள் என்று அறிந்ததுண்டா?



$ கடலூரில் பஸ் ஸ்டாண்ட் சமீபம் ஒரு பையன் குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கூறி முறுக்கு விற்றுப் படிப்பதாகக் கூறுவதைக் கேட்டு ஒரு சபாஷ் போட்டு பணத்தைக் கொடுத்து முறுக்கு கேட்டதும், பின் அவன் கை அழுக்கு பார்த்து முறுக்கு வேண்டாம் என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது.

மௌண்ட் ரோட்டில் பூ விற்பவர் வாங்குபவரிடம் உதவி கேட்டுப் பெற்று பீஸ் கட்டிய ரசீதின் xerox அனுப்பினார்

காலை எழுந்து 10 வீட்டுக்கு பாலூற்றிப் படித்த நண்பர் கான் பூர் iit யில் இன்று professor.


நெல்லைத்தமிழன்.


1. நாவல் எழுதறவங்க, கதை எழுதறவங்க - வாழ்க்கைல என்னதான் சாதிக்கிறார்கள்?          

# நாவல் எழுதுபவர்கள் அல்லது கதை எழுதுபவர்கள்எதுவும் சாதித்ததில்லை  அல்லது சாதிக்கவில்லை என்று சொல்வது தவறு என்று நான் நினைக்கிறேன்.   ஒரு நல்ல நாவல் அல்லது ஒரு நல்ல கதை படித்த பின் நம் மனதில் ஏற்படும் உணர்ச்சிகளை வைத்து பார்த்தால் - அட, தத்ரூபமாகச் சித்தரித்திருக்கிறார் - அட, நமக்கும் இப்படித்தானே நடந்தது-     ஆஹா என்ன ஒரு தமாஷ்  - என்று நினைப்பதில்லையா ? இப்படியான உணர்ச்சிகளைத் தூண்டுவது அந்த கதையின் சிறப்பு என்றுதானே சொல்லவேண்டும் .  வால்டேர் ரூசோ போன்றவர்களின் எழுத்தால் தான்  பிரெஞ்சு புரட்சியே ஏற்பட்டது என்று சொல்கிறார்கள்.  கல்கி பொன்னியின் செல்வன் எழுதாவிட்டால் தமிழ்நாட்டின் பண்டைய கால சிறப்பைப் பற்றி எத்தனை பேர் ஆர்வம் காட்டி அறிந்துகொள்ள போகிறார்கள்  ?
                                                                  
2.  எழுத்தாளர்கள் (நான் சொல்றது கதைகள் எழுதறவங்க) சமூகத்தில் கொண்டாடப்பட வேண்டியவர்களா? இதுல முற்போக்கு பிற்போக்குன்னு அவங்களே ஏதோ வாழ்க்கைல பெருசா சாதிச்ச மாதிரி சொல்லிக்கிறாங்களே. உங்கள் கருத்து என்ன?         

# எழுத்தாளர்கள் கதாசிரியர்கள் தங்களை தாங்களே பாராட்டி கொள்ளக்கூடாது. மாறாக , ரசிகர் என்ற தளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் வேறு யாரை வேண்டுமானாலும் பாராட்டலாம்  பிற்போக்கு புரட்சி இப்படி எழுத்தாளர்களுக்கு அடைமொழி கொடுத்துக் கொள்வது வருத்தமாகத்தான் இருக்கிறது.  அது பொருளற்றது கூட.  ஆனால் அதைக் குறித்து நாம் என்ன செய்ய முடியும் ? அரசு , வசதி படைத்த செல்வந்தர்கள் இவர்கள் எழுத்தாளர்களை - கலைஞர்களை - ஆதரிப்பது, பாராட்டுவது, ஊக்குவிப்பது, மேலும்  பரிசளிப்பது என்பது சமூகத்திற்கு மிகவும் நல்லது என்பது என் கருத்து.
                                                                                                       
3. ஜெனெரேஷன் போக போக, நம்ம ரசனை மலிந்துகொண்டே வருகிறதா?  1950கள்ல வந்த பத்திரிகைகளுக்கும் இப்போ அதே பத்திரிகைகளுக்கும் தரத்தில் ரொம்பவும் வேறுபாடு இருப்பதால் கேட்கிறேன்.

# தனிமனித அடிப்படையில் வயது ஏற ஏற ரசனை நுணுக்கமான மாறுதலுக்கு உட்படும் .
 ஆனால், ஒரு பத்து இருபது ஆண்டுகள் சென்றபின் மக்கள் ரசனை எப்படி  இருக்கிறது என்று பார்த்தால், அதன் அடிப்படையே மாறி இருப்பதைப் பார்க்கிறோம்.   இது தவிர்க்க இயலாதது. இதைப்பற்றி அபிப்ராயம் சொல்லலாம்- ஆனால் செய்வதற்கு ஏதுமில்லை.

4. வயது ஏற ஏற பக்தி அதிகமாவது, கோவில்களில் நம்பிக்கை ஏற்படுவது எதனால்?    

# வயது ஏற ஏற எல்லாருக்கும் பக்தி அதிகம் ஆகுமா என்று தெரியவில்லை பலருக்கு ஆகும் என்றே தோன்றுகிறது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியை கடந்த பின்னர் இறைவன், வாழ்வின் லட்சியம், மேலும் பல தத்துவங்கள் இவற்றில் ஆர்வம் ஏற்படுவது இயற்கை தான்.
                                                             

5. மறுபிறப்பு என்று ஒன்று இருந்தால் நீங்கள் எதுவாக, யாராக பிறக்க ஆசை?

# மறு பிறப்பு  என்பது  இருந்தால் ஒரு சுமாரான வசதியான குடும்பத்தில் பிறந்து சவால்களைத் திறம்பட சமாளித்து மேன்மையடைய வேண்டும் என்பதே என் ஆசை.    நடக்குமா ?
முன்னெல்லாம் 30 ரூபாய்குள்ள பிரேக்ஃபாஸ்ட் என்பதுபோல படிக்கறவங்க கலந்துகொள்வதுபோல ஏதேனும் டாஸ்க் கொடுப்பீங்க. இப்போ ஏன் அதுமாதிரி செய்வதில்லை? (இது புதன் கேள்வி இல்லை)


# படிக்கிறவர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்ற புதுப்புது அம்சங்களை  யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தத் தயாராக  இருக்கிறோம். (இது கேள்விக்கான பதில்தான்!) 

& யோசிப்போம். புது ஐடியா கிடைத்தால் உடனே செய்வோம். 


====================================

எங்கள் கேள்வி :

உங்கள் வோட்டு எதற்கு ? ஏன்? 

1) வீட்டில் சமைத்த உணவுக்கு 

2) ***** ( 5 star) ஹோட்டல் உணவுக்கு 

3) அம்மா உணவக வகை உணவுகளுக்கு 

4) கையேந்தி பவன் உணவுகளுக்கு 

5) வீடு தேடி வரும் swiggy zomato வகை உணவுகளுக்கு 

6) இவை தவிர வேறு ஏதாவது? 

========================================
 

102 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் அனைவருக்கும் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் சூப்பர். ஆங்காங்கே படித்தேன்.
    முமுவதும் பொறுமையாக படித்துப் பின் வருகிறேன்.

    கொசு கடியிலிருந்து தப்பிப்பது எப்படி என்ற கேள்விக்கு பதில்கள் நன்றாக உள்ளது.
    கொசுவை பிடித்து அதன் வாயை தைப்பது என்ற பதில் நகைச்சுவையாக உள்ளது. அதனிடம் கடி வாங்கிய பிறகும், அவ்வளவு பொறுமை நமக்கு உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. ஹா. ஹா. ஹா.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா அக்கா...

      வாங்க... வாங்க...

      நீக்கு
    2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

      கேள்விகள் எல்லாமே சுவாரஸ்யம்.
      பதில்களும் சுவாரஸ்யம்.
      பட்டிமன்றம், தொலைக்காட்சித் தொடர்கள்
      நல்ல வேளையாக இங்கே இல்லை.
      இங்கே வரும் Soap DRAMA க்களையும் பார்ப்பதில்லை.
      பழைய படங்கள் பழைய பாடல்கள் போதும்.

      முற்போக்கு எழுத்தாளர்கள் என்றால் புரியாமல் எழுதுபவர்களா.

      கொசுப்படங்களும் ,கடிகளும் சூப்பர்.

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா....

      இனிய காலை வணக்கம்.

      நீக்கு
    4. காலை வணக்கம் சகோதரிகளே !

      நீக்கு
  2. வீட்டு சாப்பாடுதான் உயர்த்தி.
    நம்மூர் க்ராண்ட் ஸ்னாக்ஸ் உணவகம் முன்பு பிடிக்கும்.
    இப்பொழுது எப்படி இருக்கிறதோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே விலை உயர்வு + தரம் கம்மியாகி வருகின்றனவோ என்ற ஓர் ஐயம்!

      நீக்கு
    2. வல்லிம்மா... நீங்க எதையும் மிஸ் பண்ணலை. கிராண்ட் ஸ்நாக்ஸ் - எட்டிவிடும் தூரத்தில் இருந்தும் நான் அங்கு சாப்பிட்டு 2 வருடங்களாகிறது. நம்ம வீட்டு தயிர் சாதம், 1 ஸ்பூன் ஊறுகாய்... இது போதுமே

      நீக்கு
    3. எங்களுக்கு யாரானும் வாங்கிக் கொடுத்தால் தான் அடையார் ஆனந்தபவன், க்ரான்ட் ஸ்நாக்ஸ், அகர்வால் எல்லாம். ஆனால் அங்கே எல்லாம் வாங்கியதைச் சாப்பிட்டிருக்கோம். அப்படி ஒண்ணும் உயர்த்தியாகத் தெரியலை. இப்போத் தான் சில காலமாக இங்கே அஸ்வினில் வாங்குகிறோம். இல்லைனா நான் பண்ணுவது தான்!

      நீக்கு
    4. கீசா மேடம்... அஸ்வின்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. பி.ஜி. நாயுடு கடையைவிட, அஸ்வின்ஸ்ல இனிப்புகளும், அவங்க விற்கும் கலந்த சாத வகைகளும் எனக்குப் பிடித்திருந்தன.

      நீக்கு
    5. அஸ்வினில் சுட்ட எண்ணெயில் திரும்பத் திரும்பப் பண்ணுவதில்லை என்பதற்கு உத்தரவாதம் கொடுக்கின்றார்கள்.அதனால் தான் அஸ்வின் தவிர்த்து வேறு எங்கும் வாங்குவதில்லை.ஆனால் இனிப்பு வகைகள் சுமார் தான், ஜாங்கிரி தவிர்த்து. பாதுஷா, சோன்பப்டி வாங்கவே கூடாது! எங்க வீட்டில் நான் எண்ணெய் வைக்கும்போதே கொஞ்சமாக வைத்துப் பண்ணுவேன். மிச்சம் ஒரு கரண்டி எண்ணெய் மட்டும் வரும்படி பார்த்துப்பேன். அதை மறுநாள் காலையே சமையலில் செலவு செய்யும்படி வைச்சுடுவேன். இல்லை எனில் நிறைய எண்ணெய் மிஞ்சினால் வேலை செய்யும் பெண் எடுத்துச் செல்கிறேன் என்றால் கொடுத்துடுவேன், இல்லை என்றால் கண்ணைத் திறந்து கொண்டு கொட்டி விடுவேன். திரும்பச் சூடு செய்து பயன்படுத்துவது இல்லை.

      நீக்கு
  3. காலை வணக்கம். கேள்வி பதில்களை ரசித்தேன். பிறகு எழுதறேன்.

    //குழிவெட்டிப் புதைத்துவிட்டு// - நாளை அதன் வாரிசுகளோ மற்றவர்களோ, எ.பி பிளாக்தான் இந்தமாதிரி ஐடியா கொடுத்தது, நாட்டில் நடக்கும் உறவுக் கொலையில் பாதி இணையதளங்களால் என்று சொல்லாமல் இருந்தால் சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ ஆ ஆ நம்மளை மாட்டிவிட்டுவிடுவார் போலிருக்கே!

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.

    என் ஓட்டு வீட்டு உணவுக்கு தான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம்.
      // என் ஓட்டு வீட்டு உணவுக்கு தான்....// ஆம். அதுதான் நல்லது.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  5. வந்திருக்கும் நண்பர்களுக்கும், வரவிருக்கும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எ.பி. நண்பர்களான பதிவர்களின் கணவன்மார், மூத்த பதிவர் காமாட்சி அம்மா ஆகியோருக்குச் சிறப்புப்பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. என்னோட கேள்விகளுக்கான பதில்களுக்கு மெதுவா வரேன். இம்முறை # நெல்லைக்கு மட்டும் பதில் சொல்லி இருக்கிறார். $ சில கேள்விகளும்மும் & அநேகமாய் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருக்கின்றனர். எந்த உணவு பிடிக்கும் என்ற கடைசிக் கேள்விக்குச் சந்தேகமே இல்லாமல் என் பதில் ரசம் சாதம், அப்பளமாக இருந்தாலும் வீட்டு உணவுக்குத் தான். நாங்க அம்மா உணவகத்திலோ, கையேந்தி பவன்களிலோ, ஸ்விகி, ஜொமோட்டோவிலோ மற்ற எதிலுமே உணவுகள் வாங்கியதும் இல்லை. சாப்பிட்டதும் இல்லை. *ஸ்டார் ஓட்டல்கள்னு போனதில்லை என்றாலும் குறைந்த பட்சமாக 3ஸ்டார், 4 ஸ்டார் ஓட்டல்கள் போயிருக்கோம். அங்கேயும் அப்படி ஒண்ணும் பெரிசா சிறப்பு உணவெல்லாம் இருந்து பார்க்கலை. சுவையாக வாய்க்கும் சுத்தமாக கண்ணுக்கும் தெரியும்.

    பதிலளிநீக்கு
  7. முன்பெல்லாம் சா.கணேசன் அவர்களால் நடத்தப்படும் கம்பராமாயணப் பட்டிமன்றங்கள் வானொலியில் ஒலிபரப்புச் செய்யப்படும். குன்றக்குடி அடிகளாரும் நடத்தி இருக்கிறார்கள். டாக்டர் அறிவொளி அதன் பின்னர் வந்தார். மேலே சொன்ன பட்டிமன்றங்களில் நீதிபதி இஸ்மயில் அவர்கள், நீதிபதி மகாராஜன் அவர்கள் ஆகியோரெல்லாம் கலந்து கொள்வார்கள். கோவையைச் சேர்ந்த கிரிதாரி பிரசாத் என்னும் வடநாட்டவர் அருமையாகப் பேசுவார். அதை எல்லாம் கேட்டுவிட்டு இப்போதைய பட்டிமன்றங்கள் பாடாவதி மன்றங்களாகவே தெரிகின்றன. இத்தனைக்கும் நான் எதையும் கேட்டதில்லை/பார்ப்பதில்லை. விழாக்கால விடுமுறை தினப்பட்டி மன்றங்கள் தொலைக்காட்சியில் வந்தால் அன்று தொலைக்காட்சியே போடுவதில்லை, பொதிகை தவிர்த்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராமாயண தலைப்புல இலங்கை கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் பட்டிமன்றங்கள் சில சமயம் தொலைக்காட்சில போடுவாங்க. அவர் ரொம்ப நல்லா பேசுவார். இணையத்திலும் நிறைய காணொளிகள் உண்டு.

      நீக்கு
    2. நான் கேட்டதில்லை. பட்டிமன்றங்கள் கேட்பது என்பது தூர்தர்ஷன் மட்டும் நமக்குக் கிடைத்துக் கொண்டிருந்தப்போ! அதன் பின்னர் சில சமயங்களில் மக்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கேன்.

      நீக்கு
    3. ஊரிலே முன்பு கோயில் திருவிளா எனில் கம்பன் கழகம் ஜெயராஜ் அங்கிளின் ஸ்பீச் முழுநாளும் வைப்பார்கள்.. பூசை எல்லாம் முடிஞ்சு சுவாமி சுற்றியபின் ஒரு 9 மணிபோல நிலவொளியில் ஆரம்பமாகும்.. சனக்கூட்டமோ சொல்லி வேலையில.. அதில நாங்களும் இடிபட்டு இருந்து கேட்போம்..
      அது ஒரு அழகிய நிலாக் காலம்.. தினம் தினம் மேடையில் ஸ்பீச் போகும்:))

      நீக்கு
  8. //எழுத்தாளர்கள் (நான் சொல்றது கதைகள் எழுதறவங்க) சமூகத்தில் கொண்டாடப்பட வேண்டியவர்களா? //

    சுஜாதா காலத்திற்குப் பின்னரே எழுத்தாளர்கள் அதிகமாய்க் கொண்டாடப்படுவதாய் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. பதிவை ரசித்தேன் ஜி
    எனது ஓட்டு வீட்டில் சமைத்த உணவுக்கு...

    பதிலளிநீக்கு
  10. ஆஆஆஇன்னும் நுளம்புப் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்குதோ:)... மனிசர் இருக்கும்வரை நுளம்பை ஒளிக்க முடியாது:)... நுளம்பின் வாயைத் தைப்பதுக்குப் பதிலாக நாங்க தேம்ஸ்ல குதிப்பது பெட்டர் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நுளம்பும், " எங்கே நீ சென்றாலும் விடுவேனோ " என்று பாடிக்கொண்டு தேம்ஸுக்கு வராதா! தேம்ஸைக் கண்டு நுளம்பு பயந்துவிடுமா!

      நீக்கு
  11. என் வோட் எதுக்கெனில்... ஒரு நாளைக்கு மட்டும் கேட்டால் வீட்டுச் சாப்பாடு... ஒரு கிழமைக்கு எனக் கேட்டால்... 6 க்கும் வோட் பண்ணுவேன்.... டெய்லி மாத்தி மாத்தி சாப்பிட நல்லா இருக்கும்.

    ஆனா இந்த யூ ருயூப்பில்... ஏசிய நாடுகளின் ரோட்டோரக் கடைகள் பின்னேரங்களில் ஆரம்பித்து நடத்துகிறார்களே அதில் வாங்கிச் சாப்பிட ஆசை:)...

    இலங்கையில் இருந்தபோது அப்பா விடவே மாட்டார்ர் , ஆனா கல்யாணத்தின் பின் கணவர்... கொழும்பு கோல்பேஸ் கடைகளில் சுடச்சுட கொத்துரொட்டி வாங்கித் தருவார்:)... அதன் சுவையே தனி:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆ தெரியாமல் சொல்லிட்டேன் அப்பாக்குப் போட்டுக் குடுத்திடாதீங்கோ:)

      நீக்கு
    2. அப்பா அட்ரஸ் கொடுங்க. அவர் கிட்ட சொல்லாம ஜாக்கிரதையா இருக்கேன்.

      நீக்கு
    3. @ Gowthaman sir :)))haaaaaaa haaaaaaa i am ROFL ROFL

      நீக்கு
    4. //ஆஆஆ தெரியாமல் சொல்லிட்டேன் அப்பாக்குப் போட்டுக் குடுத்திடாதீங்கோ:)//

      இதோ இருங்க ட்ரங்கால் போட்டு சொல்லிடறேன்


      நீக்கு
    5. நாம ஆரு 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்...

      https://i.redd.it/r78ytk8h9so11.jpg

      நீக்கு
  12. நானும் இம்முறை கிளவி ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே:)... கேய்க்கப்போறேனே ஆனா லேட்டா நொட் நவ்:)

    பதிலளிநீக்கு
  13. // 6) இவை தவிர வேறு ஏதாவது...? //

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

    பதிலளிநீக்கு
  14. ''மேல் நாட்டு அறிஞர் சிலிவா மாக்கியாட்டா. //

    அவர் பெயர் சொல்லிவா மொக்கியோட்டோ இல்லையோ?..

    பதிலளிநீக்கு
  15. //நேற்று சன் tv யில் சொல்லிட்டாங்க சார் என்று அதுதான் உண்மை என்று வாதிடும் நெல்லைக்காரர்கள் சிலரை நான் அறிவேன்... //

    ஹஹ்ஹஹ்ஹா... அதே.. அதே!

    பதிலளிநீக்கு
  16. //கோயில்களில் பூசாரிகள்.. //

    Service Provider--கள் அவர்கள். (உபயம்.. எனக்குத் தெரிந்த ஒரு நெல்லைக்காரர்..)

    பதிலளிநீக்கு
  17. //அ வீ ரா பா... //

    65-வது கலைக்கு அற்புதமான அனுபவப் பாடங்கள் எழுதிய அ.வீ.ரா.பா.--வா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட அப்படியும் ஒன்று இருக்கா! நான் அதெல்லாம் படித்ததில்லை.

      நீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  19. கேள்விகளும் , அதற்கு அளித்த பதில்களும் நன்றாக இருக்கிறது.
    கொசுக்கடியை போக்க சொன்ன குறிப்பு சிரிப்பை வரவழைத்து விட்டது.

    கொசு நகைச்சுவை காட்சியும் அருமை.

    வெளியூரில் ஓட்டல்களில் இரண்டு நாள் சாப்பிட்டால்
    வீட்டுக்கு வந்து தயிர்சாதம் சாப்பிட்டால் போதும் என்று இருக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. ஆம், உண்மைதான் வெயிலில் தெரியும் நிழலின் அருமை!

      நீக்கு
  20. //எதிர்பார்ப்புடன் நம்மைப் பார்ப்பது சரியா?

    & சரியோ தவறோ தெரியாது//

    இது என்ன மாதிரி பதில்? நிறைய கோவில்கள்ல, 70 ரூபாய் மாத சம்பளம். பிரைவேட்டா சிலர், அந்தக் கோவில்கள்ல 500 ரூபாய் மாதச் சம்பளம் கொடுப்பதற்கு ஆவன செய்திருக்காங்க. கோவிலை விட்டுவிட முடியாது, ஆனால் அவங்க வாழ்க்கையையும் பார்க்கணும்-கொஞ்சமாவது இல்லையா? இப்போ வட நாட்டு, மற்றும் தமிழ்நாட்டின் சில கிராமத்துக் கோவில்களுக்கு மாதம் 15,000 சம்பளம் கொடுக்க தயாரா இருக்காங்க, தங்குவதற்கான வீட்டுடன்.

    கர்நாடகாவில் இந்தப் பிரச்சனை குமாரசாமி அரசில் வந்தபோது, அவர் சொன்னது, சம்பளம் 18,000 என்று நிர்ணயிக்க அரசு தயார், தட்டில் என்ன பணம் வந்தாலும் அதனை அரசுக்கணக்கில் வைக்கணும் என்றார். அதற்கு நிறைய பக்தர்கள் வரும் கோவில்களில் பணிபுரிபவர்களின் எதிர்ப்பு இருந்ததால், முடிவு எட்டப்படவில்லை. அதுபோன்ற நிலைதான் தமிழகக் கோவில்களிலும் என்பது என் அனுமானம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி வருமானம் வரும் கோயில்கள் நூற்றுக்கு ஒன்று இருந்தால் அதிகம்.

      நீக்கு
    2. தமிழக அரசின் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வரும் அரசுக் கோயில்களின் அர்ச்சகர்கள்/பூசாரிகளுக்குக் கோயில் வருமானம், அதன் தரம் ஆகியவற்றைப் பொறுத்து 10,000/- ரூ முதல் டெபாசிட் கட்டினால் அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை மாத வருமானமாகக் கொடுக்கிறது. எங்க மாமனார் ஊரான பரவாக்கரையில் நாங்கள் முனைந்து திருப்பணி செய்து கட்டிய பெருமாள் கோயில் பட்டாசாரியாருக்கு அப்படித் தான் வருமானத்துக்கு வழி செய்துவிட்டு மேற்கொண்டு செலவுக்கு நாங்கள் கையிலிருந்து கொடுத்து வருகிறோம். அதே போல் மாரியம்மன் கோயில் பூசாரிக்கும் கிடைக்கிறது. அவர் குடும்பத்திற்கு மேற்கொண்டு ஆகும் செலவுகளுக்கு நாங்கள் அவர் பிள்ளைகளுக்கான படிப்புச் செலவுக்குப் பணமாகக் கொடுத்து விடுகிறோம். இதே போல அந்த ஊர் சிவன் கோயிலிலும் நடக்கிறது. கருவிலி கோயிலுக்கும் திரு கிருஷ்ணமூர்த்தி பொறுப்பு ஏற்றுக் கொண்டு அர்ச்சகர்/குருக்களுக்கு வீடு கொடுத்துச் சம்பளமும் கொடுத்து வருகிறார். அவரவர் சொந்த ஊரிலே உள்ள கோயில்களுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டாலே பல கிராமத்துக் கோயில்கள் மீண்டும் உயிர் பெறும். அதே போல் எங்கள் உறவினர்கள் இரட்டைக்குடி, காக்கழனி ஆகிய ஊர்களில் அவரவர் குலதெய்வக் கோயில்கள் மற்றும் சிவன், பெருமாள் கோயில்களின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தாயாதிக்காரர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். சிலர் பூர்விக வீட்டைச் சரி செய்து செம்மைப் படுத்திப் போனால் தங்கும்படி செய்து வைத்திருக்கின்றனர். இப்படி எல்லாம் செய்தால் கிராமமும் மேம்படும். கோயில்களில் வழிபாடு செய்பவர்களின் குழந்தைகளுக்கும் ஓர் நல்வழி கிடைக்கும். கருவிலி கோயில் குருக்களின் மனைவி கணினி கற்றுக் கொண்டு சொல்லிக் கொடுக்கிறார். மகள் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்யப் போகிறார். மகன் நன்கு படிக்கிறார்.

      நீக்கு
    3. சுவையான தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
    4. @ கீதா சாம்பசிவம்: ஏழைக்குடும்பங்களுக்கு உதவியதுபற்றிய நிறைவான செய்திகளைத் தெளித்ததற்கு நன்றி. எபி-யின் சனிக்கிழமைக்கு இவற்றில் ஏதாவது வரலாமா! ஒருவேளை, அர்ச்சகர், குருக்கள் என்றெல்லாம் வருமாதலால் அது taboo-வா ! யான் ஒன்றும் அறிந்திலேன்..!

      நீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம் :) ரொம்ப நாள் கழிச்சி புதன்கிழமையில் வந்திருக்கேன் :)


    //உங்கள் வோட்டு எதற்கு ? ஏன்?

    1) வீட்டில் சமைத்த உணவுக்கு //
    சத்தமா சொல்வேன் அடிச்சி சொல்வேன் என் ஓட்டு வாக்கு எல்லாம் வீட்டில் சமைத்த உணவிற்கே

    ஏனென்றால் எவ்வளவு பணம் கொடுத்து சாப்பிட்டாலும் அது எத்தனை வகை வெளியில் கிடைச்சாலும் .அந்த கை மணம் திருப்தி
    அப்புறம் உடலுக்கு தீங்கே தராதது வீட்டு சமையலே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சத்தமா சொல்வேன் அடிச்சி சொல்வேன்// - பாவம்.... சமையலும் பண்ணி, உங்ககிட்ட 'அடியும்' வாங்கிக்கணுமா அவர்? ஹா ஹா

      நீக்கு
    2. இன்றைக்கு மகா ஆச்சரியம்! காணாமல் போயிருந்த அ, ஏ எல்லோரும் திரும்பக் கிடைத்துவிட்டார்கள்!

      நீக்கு
    3. @நெல்லை தமிழன் :))))))))))) என்னா பாசம் :)

      ஒரு விஷயம் சொல்லணும் நானும் திருமணம் ஆன அடுத்த வாரத்தில் இருந்து இவருக்கு ரசம் செய்ய ட்ரெயினிங் கொடுத்தேன் ஆனா இது வரைக்கும் ஒழுங்கா செஞ்சதே இல்லை .அதுவே என் குட்டி பெண்ணுக்கு போன வாரம் தான் சொல்லித்தந்தேன் மிக்சி கூட யூஸ் செய்யாம குட்டி உரலில் இடிச்சி கொக்கம் மிளகு ரசம் செய்தா தெரியுமோ :))
      அநேகமா நீங்க சொன்ன மாதிரி அடிச்சி சொல்லி தரலாம்னு யோசிக்கிறேன் :))

      நீக்கு
    4. நன்றி கௌதமன் சார் .நிறைய வேலை மகள் மேற்படிப்பு இப்படி டைம் ஓடுது

      நீக்கு
    5. //.. அ, ஏ எல்லோரும் திரும்ப..//

      புதன் செய்த புண்ணியம் !

      நீக்கு
    6. ஆஆஆஆ கிளவிகளின் டலைவி ஹையோ நாக்கு ருவிஸ்ட்டாகுதே கர்ர்ர்ர்ர் கேள்விகளின் நாயகி லாண்டட்ட்ட்ட்ட்ட்ட்:)... எல்லோரும் ஓடுங்கோ ஓடிப்போய் மேசைக்குக் கீழ ஒளிங்கோ:)...

      நீக்கு
    7. ////சத்தமா சொல்வேன் அடிச்சி சொல்வேன் என் ஓட்டு வாக்கு எல்லாம் வீட்டில் சமைத்த உணவிற்கே

      ஏனென்றால் எவ்வளவு பணம் கொடுத்து சாப்பிட்டாலும் அது எத்தனை வகை வெளியில் கிடைச்சாலும் .அந்த கை மணம் திருப்தி
      அப்புறம் உடலுக்கு தீங்கே தராதது வீட்டு சமையலே///
      ம்ஹூம்ம்ம்ம் இந்த ரகசியம்தான் எனக்கு தெரியுமே:)... எதுக்காக வீட்டுச் சமையல் என:) ஹையோ என் வாய் ச்ச்சும்மா இருக்காதாமே:)

      நீக்கு
    8. /////பாவம்.... சமையலும் பண்ணி, உங்ககிட்ட 'அடியும்' வாங்கிக்கணுமா அவர்? ஹா ஹா////

      ஹா ஹா ஹா நெல்லைத் தனிழன் கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வரமுடியுமோ?:)... எதுக்கோ?:)... கை குடுத்து ஊக்குவிக்க:)... ஹையோ எதுக்கும் கொஞ்சம் பொறுங்கோ என் காப்பைக் கழட்டி ஒளிச்சுப்போட்டு வ்ந்திடுறேன்ன்ன்ன்:)

      நீக்கு
  22. எனது கேள்வி கணைகளை தொடுக்கின்றேன் :)
    1, உங்க காதுக்குள் சின்ன குட்டி எறும்பு போன அனுபவம் உண்டா ? அப்படி போன எறும்பை எப்படி வெளியே எடுத்தாங்க ?
    2,, உண்மைக்கு ஆதாரம் தேவையா ?
    3, Law Of Attraction என்பதை கண்டவுடன் காதல் தவிர்த்து வேறெதற்கு ஒப்பிடலாம் ?


    4,, ரகசியம் என்றால் என்ன ? அது எதுவரைக்கும் ரகசியமா இருக்கும் ?

    5,,சமீபத்தில் நீங்கள் பார்த்த கேள்விப்பட்ட முரண் /முரணான விஷயம் எது ?

    6,, பிரவுன் நிறத்தில் இருக்கும் பால் சேர்க்காத காபி மற்றும் தேநீரை எதுக்கு கருப்பு காபி கருப்பு தேநீர்னு சொல்றாங்க ?

    7,, பள்ளி நாட்களில் இம்போசிஷன் எழுதிய அனுபவம் உண்டா ?
    8, இப்போ இருக்கும் ஆசிரியர்கள் ஐ மீன் எங்கள் பிளாக் டீச்சர்ஸ் ஹெட் டீச்சர்ஸ்கள் இப்போதிலிருந்து 10 வருடம் முன்னும் 10 வருடம் பின்னும் எப்படி இருந்தார்கள் எப்படி இருப்பார்கள் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ////எனது கேள்வி கணைகளை தொடுக்கின்றேன் :)////
      ஆஆஆஆ ரொரண்டோமோனிங்சைட் மேரி மாதாவே பீஸ்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் செவ் மீஈஈ:)...
      எங்கேயோ எப்பவோ கேட்ட குரலா இருக்கே:)... அஞ்சு கமோன் ஸ்ராட் மூசிக்க்க்க்:).. இனி கெள அண்ணனை விரட்டுவோம் கேள்வி கேட்டே:)

      நீக்கு
    2. ///3, Law Of Attraction என்பதை கண்டவுடன் காதல் தவிர்த்து வேறெதற்கு ஒப்பிடலாம் ?///
      அதாவது அஞ்சூஊஊ அதிராவைப் பார்த்ததும் பயப்பிடுறீங்க இல்ல:)... அதுக்கு ஒப்பிடலாம்:)

      நீக்கு
    3. /// பிரவுன் நிறத்தில் இருக்கும் பால் சேர்க்காத காபி ///
      அது பிரவுணாவாஆஆஆஆ தெரியுதூஊஊஊஉ?:)

      நீக்கு
    4. ///எப்படி இருந்தார்கள் எப்படி இருப்பார்கள் ?///
      அதேதான் அஞ்சு... இப்போ இருந்து எழும்புவதைப்போலத்தான் இனியும் மெதுவா முழங்காலை மடிச்சு கையை ஊன்றி இருப்பினம் .... ஹையொ ஹையோ:)... இந்தப்பதிலுக்கு இனி மீ வெனிஸ்கிழமை வரை வெயிட் பண்ணோணும்:)...

      நீக்கு
    5. ///White house அதிரா:)28 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 8:14
      /// பிரவுன் நிறத்தில் இருக்கும் பால் சேர்க்காத காபி ///
      அது பிரவுணாவாஆஆஆஆ தெரியுதூஊஊஊஉ?:)//

      https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcStAMGgnT6GERCvpgXw5_dxzsw0-7JF5XU3e51yMYlnVlpm3fAF

      நீக்கு
    6. ////இனியும் மெதுவா முழங்காலை மடிச்சு கையை ஊன்றி இருப்பினம் .... //

      haahaaaaaaa :))) நான் வரப்புயர ( இது பூசாரிடம் களவாடிய சொற்றொடர் ) மட்டும்தான் சொன்னேன் ..மக்களே நல்லா கவனிங்க நானா ஒண்ணுமே சொல்லலை சொல்லவில்லை

      நீக்கு
    7. https://pics.awwmemes.com/tamil-comedy-memes-vadivelu-memes-images-vadivelu-comedy-memes-50022322.png

      நீக்கு
  23. எங்கள் பதில்கள் அடுத்த புதன் கிழமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆ இதைச் சொல்லிட்டுப் போகவா ... பாதி நித்திரைத் தூக்கத்தில் எழும்பி வந்தார் கெள அண்ணன்:).....

      அஞ்சூஊஊஊஊ பாருங்கோ இப்போ நீங்க ஜத்தம் போட்டதால, கெள அண்ணனின் கனவு கலைஞ்சிடுச்சூஉ பாதியில கர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா

      நீக்கு
    2. தொலைக்காட்சியில் தேர்த் திருவிழா என்ற ஒரு அபத்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எம்ஜியார் முதலில் ஒரு பரிசல் ஓட்டுகிறார். பிறகு கை ரிக்க்ஷா இழுக்கிறார். பிறகு திடீரென்று போலீஸ் ஆகிறார். பிறகு டாக்சி ஓட்டினாரோ - கார் ஓட்டினாரோ அப்புறம் திடீரென்று சினிமாவில் நடிக்கிறார். உட்டாலக்கடி ஜூம்தலக்கா பாடும் ஜெயலலிதாவை அவர் கூலிங் கிளாஸ் அணிந்திருந்தால் அடையாளம் தெரியாமல் பார்க்கிறார். இதெல்லாம் ஒரு படம் என்று எந்த தைரியத்தில் எடுத்தாரோ MMACT!

      நீக்கு
  24. அஞ்சூஊஊஊஊஊ வந்து இந்தக் கூடையைக் கொஞ்சம் இறக்குங்கோ.. கொண்டு வந்திருக்கிறேன் நிறம்ப:)) ஹா ஹா ஹா.

    ச்சும்மா சும்மா நேரத்தில எல்லாம் கேள்வியா வருது, கேட்க வந்தால் மறந்து போயிடுது.. இனி எழுதி வைக்கோணும் டக்குப் பக்கென.

    1. இந்தக் கேள்விக்கு எனக்கு ஒரு விடை தெரியும், ஆனா உங்களிடமிருந்தும் சுவாரஷ்யமான பதிலை எதிர்பார்க்கிறேன்.

    மனிதர்களுக்கு மட்டும் உயர்திணை எனும் பெயர் ஏன் வந்தது?

    2. இது கொஞ்சம் நம் சமயம் சார்ந்தது. கோயிலுக்குப் போனால் முன்னைய காலங்களில் விழுந்து கும்பிடாமல் வரமாட்டார்கள். ஆனா இப்போ பெரும்பாலானோர் கோயிலில் விழுந்து கும்பிடுவதில்லை [நான் விழுந்து கும்பிடுவேன்] ஆனா இப்போ அதுக்கு ஒரு முறை சொல்கிறார்கள், விழுந்து கும்பிடாவிட்டாலும், கோயிலைச் சுற்றிக் கும்பிட்டபின், கால்களை மடிச்சு கொஞ்ச நேரம் நிலத்தில் இருந்துவிட்டு வாங்கோ அப்போதான் பலன் கிடைக்கும் என... இது எந்தளவு தூரம் உண்மை?

    3.இப்போ பிக்பொஸ் பார்க்கிறனீங்களோ? அதில் பிடிச்ச ஒருவர்? பிடிக்காத ஒருவர்?[மொத்தக் கணக்கில் சொல்லலாம்]. [ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அமைதி பிளீஸ்ஸ்ஸ்:) யாரும் பொயிங்கக்கூடாது:)].

    4.தமக்கு ஒரு பிரச்சனை வரும்போது மட்டும் அதைப் பெரிய பிரச்சனையாகவும், மற்றவர்களுக்குப் பிரச்சனை வரும்போது அதை .. இதெல்லாம் ஒரு பிரச்சனையா.. என்பதைப்போலவும் பார்ப்பவர்கள் பற்றி உங்கள் கருத்து?..

    5. தான் எப்பவும் கரெக்ட்டானவர், தான் செய்வதெல்லாம் நல்ல விசயங்கள், மற்றவர்கள் தப்பானவர்கள், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது எனும் மனப்பாங்கோடு இருப்பவர் பற்றி என்ன நினைக்கிறீங்க?

    6. “தன்னைப்போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டும்” என்பினம், ஆனா இந்தத் தன்மை இல்லாதவர்கள் பற்றி உங்கள் பார்வையில் ஏதும் சொல்லுங்கோ. அதாவது நாம் எதிர்பார்ப்பதுபோல, விரும்புவது போலத்தானே மற்றவர்களும் நினைப்பார்கள் என எண்ணாமல், தன் விருப்பம் நிறைவேறிட்டால் போதும் என எண்ணுவோர்.

    7. இந்த தலைமுறை இடைவெளி [generation gap] என அடிக்கடி பேசுகிறார்கள், ஆனா இதன் சரியான விளக்கம் என்ன?.. தலைமுறை என்பது எப்படிக் கணக்கெடுக்கப் படுகிறது.. அப்பா, அம்மா - பிள்ளைகள் - பேரப்பிள்ளைகள்.. இப்படியா இல்லை குறிப்பிட்ட வருடங்களை வைத்தா?.. குட்டிக் குட்டிக் இடைவெளிக்குள், எப்படி பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விகள் 4,5,6 பார்க்கும்போது :) பூனை யாரையோ கீற பிராண்ட தயாராகிறாப்ல இருக்கே :)

      நீக்கு
    2. // பிக்பொஸ் பார்க்கிறனீங்களோ? அதில் பிடிச்ச ஒருவர்? பிடிக்காத ஒருவர்?[மொத்தக் கணக்கில் //

      அதென்ன மொத்த கணக்கு ??? எனக்கு ஒரே கணக்குதான் பிடிச்சது கமல்ஹாசன் அங்கிள் மட்டுமே :)

      நீக்கு
    3. ////கேள்விகள் 4,5,6 பார்க்கும்போது :) பூனை யாரையோ கீற பிராண்ட தயாராகிறாப்ல இருக்கே :)//// நான் ஜொன்னனே எனக்கு எதிரி வெளியில இல்ல:) வீட்டுக்குள்ளயேதேன்ன்ன்ன்ன்ன்

      ஆஆஆஆ இது 90 ஆவது கொமெண்ட்டூஊஊஊஊ

      நீக்கு
    4. ///அதென்ன மொத்த கணக்கு ???///
      மொத்தப் போட்டியாளர்களில்....

      கமல் அங்கிள், அவர்கள் படத்தில் வரும் கைப்பொம்மை போல, குடுக்கும் வைன் க்கு ஏற்ப பேசி விட்டுப் போகிறார்....
      அவர் இதில் சேர்ப்பில்லை:)..

      நீக்கு
    5. //மனிதர்களுக்கு மட்டும் உயர்திணை எனும் பெயர் ஏன் வந்தது?// - நான் எத்தனை தடவை சொல்றது. ஆண்களுக்கு ஆறறிவு உண்டு. அதனால் அவங்க 'உயர்திணை'. மனுஷிகளுக்கு அப்படிக் கிடையாது என்பதால் அவங்க அப்படி இல்லை. நீங்களே 'மனிதர்களுக்கு' என்று கேட்டிருக்கீங்களே. இதுலேர்ந்தே புரியலையா அதிரா?

      நீக்கு
    6. ஆஆஆஆஆஆஆஆ இந்தக் கொடுமை ஆரிண்ட கண்ணுக்கும் தெரியேல்லையோ.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதைத்தட்டிக் கேய்க்க இங்கு ஆருக்கும் துணிவு வரேல்லைப்போலும்.. அதிரா வந்துட்டேன்ன்ன் மீ தட்டிக்:) கேய்ப்பேன்ன்ன்ன்ன்ன்ன்:)).. கடவுளே இண்டைக்கு கிச்சின் ஸ்ரைக்:)) எல்லோரும் 5 ரார் ஹோட்டல்ல வாங்கி வரட்டும்:)).. நாங்க போராடப்போறோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))..

      ///நான் எத்தனை தடவை சொல்றது. ஆண்களுக்கு ஆறறிவு உண்டு///
      ஹையோ ஹையோ ஹையோ இந்த ஆறாவது அறிவு ஆண்களுக்கு எந்தப்பக்கம் இருக்குதெண்டுதானே நான் தேடிக்கொண்டிருக்கிறேன்ன்ன்ன்ன்...:))..

      ////மனுஷிகளுக்கு அப்படிக் கிடையாது///
      ஆஆஆஆஆஆஆஆஆ என்னை ஆரும் தடுக்காதீங்கோ.. மீ லக்ஸ்மி மடத்திடம் போகப்போகிறேன்ன்ன்.. “சொல்வதெல்லாம் உண்மை பர்ட் 3” ஆரம்பிக்கப் பொகிறேன்ன்.. இதுக்கொரு முடிவு கட்டாமல் இந்த ஸ்கொட் புயல் ஓயாதூஊஊஊஊஊஊஊ:)) ஆஆஆஆஆஆ அஞ்சூஊஊஊஊ ரொம்ப தொண்டை நோகுது ஒரு “பிரவுண் கொஃபி” பிளீஸ்ஸ்ஸ்:)).. நில்லுங்கோ குடிச்சிட்டு தொடர்வேன்ன்ன்ன்:))


      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதுக்கே இப்பூடி மூச்சு வாங்குதே:)).

      //நீங்களே 'மனிதர்களுக்கு' என்று கேட்டிருக்கீங்களே. இதுலேர்ந்தே புரியலையா அதிரா?///
      ஆஆஆஆஆஆஆ இப்போ எங்கட சிமியோன் றீச்சர் உயிர் பெற்று எழும்பி வந்திடப்போறாவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹையோ ஆண்டவா.. “மனிதர்கள்” எனில் அது பொதுப்பாலாக்கும்:))... சே..சே.. தெரியாம டமில்ல டி எடுத்ததால:) என்னால பொறுத்திருக்கவே முடியுதில்ல வைரவா...:))

      எனக்கு நோட்டிபிகேசன்ஸ் காட்ட்டுதில்லை கர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    7. வியாழக்கிழமையிலும் இங்கே கும்மி நடக்குதா! நடத்துங்க, நடத்துங்க!

      நீக்கு
    8. @ அதிரா - நான் சும்மா கலாய்ப்பதற்காக அப்படி எழுதினேன்.

      மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ - என்ற பாரதி பாடலிலும் இருபாலாரைத்தான் சொல்லியிருப்பார் (னு உங்களுக்காகச் சொல்றேன்)

      நீக்கு
    9. ///@ அதிரா - நான் சும்மா கலாய்ப்பதற்காக அப்படி எழுதினேன்./////
      அதெனக்குத் தெரியாதோ:).. அதனாலதான் மீ பொயிங்கினேன்:)... இல்லை எனில் ஓடித் தப்பியிருப்பேன் ஹா ஹா ஹா:)

      கும்மிக்கு குறையில்லை கெள அண்ணன்.... எனக்கு நோட்டிபிகேஷன் கிடைக்குதில்லை கர்ர்ர்ர்ர்:)...

      நீக்கு
  25. @athiraaa miyaaw white house :)

    ///மீ லக்ஸ்மி மடத்திடம் போகப்போகிறேன்ன்ன்.. “சொல்வதெல்லாம் உண்மை பர்ட் 3” //

    i would suggest chinchin :)maye instead of laksmi mam

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!