வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

வெள்ளி வீடியோ : கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு காலத்தின் பரிசே கவிதையின் சிறப்புரவிச்சந்திரன்.

அந்தக்கால கனவு நாயகன் என்று சொல்லலாமா?  காதலிக்க நேரமில்லை வெளியானபிறகு என்று நினைக்கிறேன்.  ரவிச்சந்திரன் ஒருமுறை நாகை வந்திருந்தாராம்.  அப்போது அவருக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்ததாம்.  ஆண்களுட்பட பலர் அவரை ஒருமுறை தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டார்களாம்!சில சமயங்களில் ரவிச்சந்திரனின் ஹேர்ஸ்டைலும் சரி, பாவங்களும் சரி சிவாஜியை நினைவு படுத்தும்.  நாட்டியத்தில் வடநாட்டு நடிகர்கள் பாணியை-குறிப்பாக ஷம்மி கபூர், ஜிதேந்திரா பாணி - பின்பற்றி ஆடுவதாகத் தோன்றும்.

1970 இல் வெளியான படம் ஏன்?.  ஈ வி சரோஜா அவர்களின் சகோதரர் ஈ வி ராஜன் தயாரிப்பு.  ஈ வி சரோஜா கணவர் டி ஆர் ராமண்ணா இயக்கத்தில் ஏ வி எம் ராஜன், ரவிச்சந்திரன், லட்சுமி நடித்த திரைப்படம்.   இந்தப் படத்துக்கு கதை வசனம் எழுதி இருந்தவர் வில்லுப்பாட்டுக் கலைஞர் கவிஞர் சுப்பு ஆறுமுகமாம்.  70 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படமாம்.

டி ஆர் பாப்பா இசை. பாடல்கள் கண்ணதாசன்.  இந்தப்படத்தில் எனக்குத் தெரிந்த இரண்டு எஸ் பி பாலசுப்ரமணியம் பாடல்கள்.  ஒரு பாடலுக்கு ஒரிஜினல் இசை ஆர் டி பர்மன்! அந்தப் பாடல் "வருவாயா வேல்முருகா..."

பகிர்ந்திருக்கும் பாடல் தத்துவப்பாடல் .. 

இறைவன் என்றொரு கவிஞன் 
அவன் படைத்த கவிதை மனிதன் 
அதில் அறிஞரும் மூடரும் உண்டு 
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று 

கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு 
காந்தியைப் போலவே காவியம் உண்டு 
முடிவு விளங்காத தொடர்கதை உண்டு 
முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு 

கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான் 
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான் 
மண்ணிலே பிறந்ததை மண்ணுக்கே கொடுத்தான் 
வானத்தில் இருந்தே கவிதையை முடித்தான் 

கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு 
காலத்தின் பரிசே கவிதையின் சிறப்பு 
கற்பனை என்பது கடவுளின் படைப்பு 
கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு 

இன்று இன்னொரு பாடல்.  இந்தப் பாடலுக்குப் பின்னால் ஒரு புதிர் உண்டு.  ஏன் என்கிற படத்திலிருந்து பாடல் கேட்டீர்கள்.  கீழே உள்ள இந்தப் பாடல் இன்று ஏன்?  
இதிலும் ரவிச்சந்திரன் உண்டு!  முன்னர் பகிர்ந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் ஏன்?  இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் நான்! என்ன ஒரு ரைமிங்!

அதே டி ஆர் ராமண்ணா இயக்கத்தில் டி கே ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடலைப் பாடியிருப்பவர் எல் ஆர் ஈஸ்வரி.  ரவிச்சந்திரன், ஜெயலலிதா நடித்த திரைப்படம். 1967 இல் வெளிவந்த திரைப்படம்.வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே 
நீ மறந்தால் நான் வரவா

செம்பட்டு பூவில் வண்டு 
எனைக்கண்டதும் சிரிக்கின்றது 
அழைக்கின்றதம்மா...ஆஹா...

பொன் பட்டு மின்னும் கன்னம் 
சிவக்கின்றது கொதிக்கின்றது 
துடிக்கின்றதம்மா...  
உன் கண்பட்டதோ கைபட்டதோ 
பெண்ணுள்ளமே புண்பட்டதே

பூஞ்சிட்டு ஒன்றை ஒன்று அழைக்கின்றது 
அணைக்கின்றது மிதிக்கின்றதம்மா...ஆஹா...

நான் மட்டும் அங்கும் இங்கும் 
இருக்கின்றதும் தவிக்கின்றதும் 
சுகமில்லையம்மா... 
என் பாதைக்கு வா பக்கத்தில் வா 
பள்ளிக்கு வா பாடத்தை தா...

48 கருத்துகள்:

 1. வந்திருக்கும் (?) அனைவருக்கும் இனி வரவிருக்கும் அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோருமே இனி வரவிருக்கும்தான்...

   ஹா.. ஹா.. ஹா...

   வாங்க கீதாக்கா.. நல்வரவும், வணக்கமும்.

   நீக்கு
 2. யாரும் வரலையா இன்னமும்? ஸ்ரீராம் கூடவா? பாடல்களைப் பிரித்து மேய தி/கீதா தான் வரணும். துரையை எங்கே இன்னமும் காணோம்? குவெய்த் போய்ச் சேர்ந்துட்டாரா இல்லையா? முகநூலிலும் பார்க்க முடியலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் வந்துவிட்டேனே...

   துரை ஸார் காணோம்... திருச்செந்தூரிலிருந்து எங்கு சென்றிருக்கிறாரோ..

   காத்திருப்போம்!

   நீக்கு
  2. நேற்று உங்களை மாதிரிதான் அல்லாடினேன் கீதாமா.
   இனிய காலை வணக்கம்.
   எல்லோரும் மெதுவாக வருவார்கள்.

   நீக்கு
 3. ஏன் படம் பார்த்ததில்லை. ஆனால் அர்த்தமுள்ள
  பாடல். ரவிச்சந்திரன் நடனத்துக்கு ஆங்கிலப்
  படங்களை நினைவூட்டும்.
  நடிப்பு ...ஆமாம் சிவாஜியை நினைவு படுத்தும் நடை அவருக்கு உண்டு.

  முதல் படத்திலியே அனைவரையும் கவரும்படி நடிக்க வைத்த
  பெருமை ஸ்ரீதரைச் சேரூம்.
  முக்கால் வாசிப் படங்களில்,துடிப்பான காதல், சண்டை இவையே
  அவருக்கு கை கொடுத்தது.
  நான் படத்தில் தானே போதுமோ இந்த இடம்
  பாடல் வரும்.

  Come september padaththin theme song வந்தாய் என்னோடு இங்கே வா தென்றலே.
  ஜெயலலிதாவின் அழகான நடனம்.
  மிக அருமை. நான் ஏன் பிறந்தேன் .என்று தொடர வைக்கிறது படங்களின் தலைப்பு.
  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா....

   ரவிச்சந்திரனுக்கு "அவருக்கென்ன... அழகிய முகம்...!"

   அவருடைய இன்னு சில படங்கள் சுவாரஸ்யமான கதை, காட்சி அமைப்பு கொண்டவை.

   நீக்கு
  2. //ஏன் படம் பார்த்ததில்லை.// - ஏன் படம் பார்க்கவில்லை?

   நீக்கு
 4. ரவிச்சந்திரன் - ஜெயலலிதா ஜோடியும் ஜெய்சங்கர்-எல்.விஜயலக்ஷ்மி ஜோடியும் அந்தக் கால கட்டங்களில் பிரபலம். ரவிச்சந்திரன் கே.ஆர்.விஜயா, காஞ்சனா ஆகியோருடன் நடித்த படங்களும் வெற்றி பெற்ற படங்களே. ரவிச்சந்திரனைக் காதலிக்க நேரமில்லை வந்த சமயம் படத்தைப் பார்க்காமலேயே அவரை நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு சில ரவிச்சந்திரன் - ஜெயலலிதா படங்களைத் தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். சில பாஸ் வாங்கி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் டூரிங் டாக்கீஸில் பார்த்து ரசித்த இன்னொரு ரவிச்சந்திரன் படம் சபதம். அதிலுமோரு அருமையான எஸ் பி பி பாடல் உண்டு. (தொடுவதென்ன தென்றலோ மலர்களோ..) கொஞ்சம் பொய்க்குரலில்பாடுவார்!

   நீக்கு
 5. மைக் மோகன் நடிகரைப் போல் இவர் நடித்த படங்களும் வெள்ளி விழாக் கொண்டாடியவை. ஆனால் ஏனோ அதிகம் சோபிக்கவில்லை. ஷீலாவுடன் ஆன திருமணத்தின் பின்னர் அவருக்கு இறங்குமுகமாகவே போய் விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஷீலாவுடன் ஆன திருமணத்தின் பின்னர் // - அது மனைவி குழந்தைகள் இருக்கும்போதே ஆன இரண்டாவது திருமணமல்லவா?

   நீக்கு
  2. ஆமாம், ஆனால் முதல் திருமணமே திடீரெனச் செய்து வைக்கப்பட்டது தானே! அவர் ஜெயலலிதாவைக் காதலித்தாரோ என்னமோ தெரியாது. ஆனால் ஜெயலலிதா ஜெய்சங்கரைத் தான் உருகி உருகிக் காதலித்துக் கொண்டிருந்தார். பாவம்!

   நீக்கு
  3. ஆஹா! மேற்கொண்டு இங்கே தொடர, பானுமதி அவர்களைக் காணோமே..

   நீக்கு
  4. அதானே... மேலதிகத் தகவல் ஏதும் கிடைத்திருக்கும்! ஷீலாவுக்கு அப்புறமும் அவர் ஒரு திருமணம் செய்துகொண்டார் போலும். அவர் மகன் நடித்து சில படங்கள் வந்திருக்கின்றன. (இளவேனில்... இது வைகாசி மாதம்" எனும் எஸ் பி பி பாடல் ஒன்று அவர் நடித்த படம் ஒன்றில் வரும். படம் பெயர் காதல் ரோஜாவே என்று நினைக்கிறேன்.)

   நீக்கு
  5. ஷீலாவுக்குப் பின்னர் திருமணம் ஏதும் செய்து கொண்டதாய்த் தெரியவில்லை. குடும்பத்துடன் சேர்ந்து விட்டார் என்றே படித்த நினைவு.. மகன் அவரைப் போல் சோபிக்கவில்லை.

   நீக்கு
  6. பானுமதியின் கணவர் இன்னமும் மருத்துவமனையில் தான். தினம் தினம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கோம். தொலைபேசியில் அழைக்கவில்லை. அவங்க என்னமாதிரியான சூழ்நிலையில் இருக்காங்களோனு தோணும். ஆகவே அதிகம் அழைத்துத் தொந்திரவு கொடுப்பதில்லை. தி/கீதா கேட்டுச் சொல்லுவார் அன்றாடம்.

   நீக்கு
 6. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 7. பாலசுப்பிரமணியன் பழைய குரலில் பாட்டு நன்றாக இருக்கும் அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.
  இப்போதும் கேட்டேன். படம் சோகமான படமோ? பார்த்த நினைவு இருக்கிறது.

  ஜெயலலிதா பாட்டு அடிக்கடி ஜெயா தொலைக்காட்சியில் பழைய பாடல் நிகழ்ச்சியில் இடம் பெறும்.
  கேட்டு இருக்கிறேன்.

  ஜெயலலிதாவிற்கு நிறைய பாடல்கள் எல் ஆர் ஈஸ்வரி தான் பாடி இருப்பார். முதல் பாடலில் செயற்கை இயற்கை காட்சி, இரண்டாவது பாடலில் உண்மையான இயற்கை காட்சி ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதி அக்கா. இது காதலித்தது ஒருவரை, மனம் புரிந்தது ஒரு வயதானவரை, மீண்டும் காதலனுடன் சேர்வது என்கிற கதையமைப்பு கொண்ட படம் என்று விக்கியில் பார்த்தேன்!

   நீக்கு
 8. கண்ணதாசனின் (அல்லது அவரது உதவியாளர்களின்) ஏனோ தானோ பாடல் வரிகள்.

  பதிலளிநீக்கு
 9. இரண்டும் கேட்ட பாடல்களே....

  ஜெயலலிதாவை திரையுலகுக்கு கொண்டு வந்த பிரம்மன் இந்த (அன்றைய)கோடீஸ்வரன்தான்.
  ரவி இல்லையெனில் ஜெயா இல்லை.

  எல்லா வகையிலும் உதவியாக இருந்தது ரவி. பின்பு எம்ஜார் லவட்டிக்கொண்டு போய் விட்டது தமிழ் நாட்டின் சாபக்கேடு.

  ஜெயாவின் காட்சிகளை கண்ட எனக்கு தோன்றியது இப்படி அணு அணுவாய் வாய் பிளந்து ரசித்தவங்கே வாய் கூசாமல் "அம்மா" என்று சொல்லி அந்த உன்னதமான வார்த்தையை களங்கப்படுத்தி விட்டாய்ங்களே... என்று.

  ஷீலாவை கைப்பிடித்தவுடன் சீப்பட்டு போனது ரவியின் வாழ்க்கை.

  பிற்காலத்தில் ரவியின் மருத்துவ உதவிக்காக ஜெயாவை நெருங்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஜெயலலிதாவை திரையுலகுக்கு கொண்டு வந்த பிரம்மன் // - என்ன கில்லர்ஜி... ஜெயலலிதாவின் முதல் படம் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்தது. இந்த ரவியே மலேஷியாவிலிருந்து வந்து நடிக்க வந்தவன். இவனுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன சம்பந்தம்? ஜெ நிறைய எம்.ஜி.ஆர் படங்களில்தான் நடித்திருக்கிறார்.

   //வாய் கூசாமல் "அம்மா" என்று சொல்லி// - இது நியாயமா? ஒண்ணும் தெரியாதவங்களை பேரறிஞர், பேராசிரியர், கலைஞர் (புரட்சிக் கலைஞர், எழுச்சிக் கலைஞர், கலைஞானி என்று ஏகப்பட்டபேர்) என்று விகுதி போட்டு கூப்பிடும் அரசியல் உலகத்தில் இது தவறா?

   நீக்கு
  2. ரவி ஒரு ஜோக்கு பேர்வழி, ஊர்சுற்றி, ஊதாரி காரணம் பரம்பரை பணக்காரன்.

   அவ்வகையில் ஜெ... பெங்களூருவிலிருந்து கொண்டு வந்தது ரவியே...

   ராணி வார இதழில் தொடராக வந்த விடயங்கள்.

   எல்லாப்பயலுக்கும் கொடுத்த பட்டங்கள் அருகதையற்றவையே....

   ஆனால் அம்மா என்பது புனிதமான வார்த்தை இல்லையா...

   நீக்கு
  3. என்ன கில்லர்ஜி... இதற்கெல்லாம் கோவிச்சிகிட்டு...

   சாக்கடை நாதாரி ஜந்து தூ துக்ளக் குருமூர்த்தி சமீபத்திய பேச்சை கேட்டால்...?

   நீக்கு
  4. அந்த ஜந்தை விட கேவலமானவன், தனது வகையறாக்களை (எச்ச, நாய் சேகர் உட்பட) சொல்கிறான் என்பதாக எடுத்துக் கொண்டால், கோபத்தை குறைக்கலாம்...

   நீக்கு
  5. ஆமாம் ஜி குருமூர்த்தி சொன்னதை மாதர் சங்கங்கள் படிக்கவில்லையோ...

   நீக்கு
  6. ஸ்ரீராம்! என்னாதிது? எங்கள் blog இல் நீங்கள் அரசியல் விஷயங்களை அனுமதிப்பதில்லை என்று நான்தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறேனா? DD பாட்டுக்கு வரம்பு மீறிப் பேசிக் கொண்டிருக்கிறாரே! பதிலுக்கு இங்கேயே காய்ச்சி எடுக்கலாமா? கொஞ்சம் சொல்லுங்களேன்!

   நீக்கு
  7. இங்கு பேசுவதில்லை என்று தெரிந்தேதான் பேசுகிறார்கள். என்ன செய்ய கிருஷ் ஸார்? அவர்கள் ஆத்திரத்தை இங்கு தீர்த்துக் கொள்ள நினைக்கிறார்கள். பதில் சொன்னால் அவர்கள் மகிழ்வார்கள்! அதைத்தானே எதிர்பார்க்கிறார்கள்! சில கருத்துகளை பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

   நீக்கு
 10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  இரண்டுமே நான் கேட்காத பாடல்கள்! கேட்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம். வாங்க வெங்கட்.

   பாடல்களை ரசித்ததற்கு நன்றி.

   நீக்கு
 11. இரண்டு பாடல்களும் கேட்டவை... முதல் பாடல் ஒரு பதிவிற்காக...!

  பதிலளிநீக்கு
 12. இறைவன் என்றொரு கவிஞன் - பாடல் வரிகளை வைத்து கேட்டமாதிரியே இல்லையே என்று நினைத்தேன். காணொளி கண்டதும் கேட்ட நினைவு வந்துவிட்டது. அருமையான பாடல். யார் பாடியது என்று கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 13. வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே என்ற பாடல் come september என்ற பிரபல மெட்டில் அமைந்தது. இதுவும் hatari மெட்டும் அந்தக் காலத்தில் பிரபலமானவை.
  Jayakumar

  பதிலளிநீக்கு
 14. அலட்டலில்லாத எஸ்பிபி பாடல். கேட்ட நினைவு திரும்பியது. நன்றாக இருக்கிறது.

  டி.கே.ராமமூர்த்தியின் fast-paced music ஈஸ்வரிக்குத்தான் எப்படிப் பொருந்திவருகிறது. ஆஹா..! ஆனால் கடைசியில் சூட்கேஸ் போச்சே !
  ராமமூர்த்தி இன்னும் கொஞ்சம் படங்களுக்கு மியூஸிக் போட்டிருக்கலாம். சண்டைபோட்டுக் கெடுத்துக்கொண்டாரே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> சண்டைபோட்டுக் கெடுத்துக்கொண்டாரே..<<<

   அவரது தலையெழுத்து அவ்வளவு தான்!..

   நீக்கு
  2. இந்தப்பாடலில் எஸ் பி பி குரலை நீங்களும் ரசித்தீர்கள் என்பதில் மகிழ்ச்சி ஏகாந்தன் ஸார்.

   நீக்கு
 15. இதோ நானும் வந்துட்டேன்!..
  அனைவருக்கும் (காலை) வணக்கம்!..

  நாளையில் இருந்து நமது தளத்தில் ஆட்டம் ஆரம்பம்!.. எல்லாரும் வந்துடுங்கோ!..

  பத்து நாள் நிம்மதியா(!) இருந்துருப்பீங்க!..
  ஆனாலும் ஒருத்தரையும் விடறதில்லை!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க துரை செல்வராஜூ ஸார்...

   காணோமேன்னு பார்த்தேன். ஊர் திரும்பியாச்சா?

   பதிவுக்காக காத்திருக்கிறோம்.

   நீக்கு
 16. மீ இன்று ரொம்ப லேட்டாயிட்டேன்ன் போல, ரைம் கிடைக்கவே இல்லை...

  //970 இல் வெளியான படம் ஏன்?. //
  ஆஆஆஆஆ பொருட்பிழை இருக்கே என ஓடியாந்தேன்.. ஓ படத்தின் பெயரே “ஏன்”.. தானோ ஹா ஹா ஹா நீங்க கேள்விக்குறி போட்டமையால் மீ குழம்பிட்டேன் ஸ்ரீராம்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... கேள்விக்குறி போட்டிருக்கக் கூடாதோ அதிரா... பழக்கதோஷம்!

   நீக்கு
 17. இம்முறை இரு பாடல்களும் சூப்பர். முதல் பாட்டு அடிக்கடி கேட்ட பாட்டு.. மிகவும் பிடிச்ச பாட்டு.. அதனால என் வோட் முதல் பாட்டுக்கே:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் பாட்டை ரசித்து வாக்களித்தமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் அதிரா!

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!