வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

வெள்ளி வீடியோ : அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா

ஜெமினி கணேசன் நாள் கொண்டாடி விடுங்களேன் என்று ஜீவி ஸார் சொன்னதால் அவர் சொன்ன பாட்டை விட்டு விட்டு, நான் எனக்குப் பிடித்த ஜெமினி பாடல் ஒன்றை பகிர்கிறேன்.  அதாவது அவர் நடித்த காட்சி.   அந்த வகையில் இந்தப் பாடலும் நேயர்விருப்பமே!



சில குரல்கள் சிலருக்கு வெகுவாகப் பொருந்திவிடும்.​  ஜெமினிக்கு ஏ எம் ராஜா குரல் ரொம்பப் பொருத்தம்.    சிவாஜிக்கு எம் ஜி ஆருக்கு டி எம் எஸ் குரல்.



என்னதான் எம்ஜி ஆர் தான் தமிழில் எஸ்பி பியை அறிமுகப் படுத்தியிருந்தாலும் அவருக்கு எஸ் பி பி குரல் சுமாராய்த்தான் பொருந்தும்.



யார் யாருக்கு எந்தெந்த குரல் பொருத்தம் என்பது தனி ஆராய்ச்சி. ஜெமினிக்கு ஏ எம் ராஜா குரல் போல, பிபி ஸ்ரீனிவாஸ் குரலும் பொருந்தும்.இன்று வாழ்க்கைப்படகு படத்திலிருந்து ஒரு ஜெமினி பாடல்போட்டு ஜீவி ஸார் விருப்பத்தை(யும்) நிறைவேற்றுவதுபோல காட்டி விடலாம் என்று நினைக்கிறேன்!



1964 இல் ஹிந்தியிலஜெமினி தயாரிப்பில் எஸ் எஸ் வாசன் தயாரித்து ராமானந்த சாகர் இயக்கிய 'ஜிந்தகி' என்கிற ஹிந்திப் படத்தை 1965 இல் எஸ் எஸ் வாசனே தமிழில் ஜெமினி கணேசனை வைத்து தயாரித்தார்.  ஸ்ரீநிவாசன் இயக்கம்.  விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை.  பாடல்கள்?  வேறு யார்?  எல்லாப் பாடல்களும் கவியரசர்தான். 



இந்தப்படத்தின் எல்லாப்பாடல்களும் தேன் என்றாலும் இங்கு (மனமில்லாமல் ) ஒன்றே ஒன்றைமட்டும் பகிர்கிறேன்.  பகிரப்போகும் பாடல் "சின்னச்சின்ன கண்ணனுக்கு" 

"நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ.."  "ஆயிரம் பெண்மை மலரட்டுமே" "உன்னைத்தான் நான் அறிவேன்..  மன்னவனை யார் அறிவார்" போன்றவை மற்ற சூப்பர் ஹிட் பாடல்கள்.

ஜெமினி, தேவிகா, முத்துராமன், பாலாஜி ஆகியோர் நடித்திருக்கும் சுவாரஸ்யமான கதை கொண்ட படம்.  தேவிகா மாயா ஓவியம் போல இருப்பார்!  அல்லது மாயாவின் ஓவியங்கள் தேவிகா போல இருக்கும்!

மனைவி தனக்கு துரோகம் செய்ததாய் நினைத்து மருகும் நாயகன் தன் குழந்தையையே யாரோ போல கொஞ்சிப் பாடும் பாடல்.

சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ..
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா 

பால் மணக்கும் பருவத்திலே உன்னைப்போல் நானிருந்தேன் 
பட்டாடைத் தொட்டிலிலே சிட்டுப்போல் படுத்திருந்தேன் 
அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா 
உன்னுடன் ஆடிவர உள்ளமே தாவுதடா 
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா 

ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா 
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா 
ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளைமொழி 
கள்ளமற்ற வெள்ளைமொழி தேவன் தந்த தெய்வமொழி 
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா   

பூப்போன்ற நெஞ்சினில் முள்ளிருக்கும் பூமியடா  
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா 
நன்றிகெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா 
பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு துன்பமடா 
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா  



=========================================================================================




நேர் விருப்ம் 



நேயர் விருப்பம் பாடலை வெளியிடும் நேரம் ஜி எம் பி ஸார் கேட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. இங்கு கேக்கும் நேரம் நாமே கேட்டு விடலாமே என்று கேட்டிருந்த நினைவு.  கிருஷ் ஸாரும் ஒரு ஹிந்திப் பாடலுக்கு அங்கேயே உடனே லிங்க் கொடுத்திருந்தார்.



நண்பர்கள் யாரும் விரும்பிய பாடலைஅப்போதே கேட்காமலா இருக்கிறார்கள்?   சும்மா..  இதெல்லாம் ஒரு சுவாரஸ்யம்! அவ்வளவுதான்.



வல்லிம்மா சொன்ன பாடலை இந்த வார நேயர் விருப்பமாக மலர வைக்கிறேன்!  பீம்சிங் இயக்கத்தில் வந்த 'ப' வரிசை சிவாஜி கணேசன் படம் பந்த பாசம்.  1962இல் வெளியான படம். 



தெலுங்கு மூலம்.   இதிலும் ஜெமினி, தேவிகா உண்டு.  நாயக நாயகியராய் சிவாஜியும் தேவிகாவும்  நடித்திருக்கிறார்கள்.  இசை அதே இரட்டையர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.  

ஒரு பாடல் தவிர, பகிரப்பட்டிருக்கும் பாடலையும் சேர்த்து மற்ற பாடல்கள் எழுதியவர் கவிஞர் மாயவனாதன். 




இவர் பெயரைக் கேட்கும் போது எனக்கு உடல் பொருள் ஆனந்தி நினைவுக்கு வரும்!

காட்சியில் சிவாஜியும், ஜெமினியும்.  குரல் கொடுத்திருப்பவர்கள் டி எம் எஸ்ஸும், பிபி ஸ்ரீநிவாஸும்.

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு 
காரியம் நடக்கட்டும் துணிந்து விடு 
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ  
இருக்குது நீதி சிரித்துவிடு

நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் 
நெருங்கிடும்போதே சுடும் என்பார் 
நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் 
நெருங்கிடும்போதே சுடும் என்பார் 
யாரையும், எதுவும் சுடவில்லை 
என்னையும் பழியோ விடவில்லை

சுட்டதும் தங்கத்தின் நிறம் போமோ 
தொட்டதும் மலர்களின், மணம் போமோ
கற்றவன் கலங்குதல் அழகாமோ 
சட்டமும் கற்பனை கதையாமோ 


நாவுக்கும் மனதித்கும் உள்ள வழி 
நான்கு விரல் கடை தூரவழி 
நாவுக்கும் மனதித்கும் உள்ள வழி
நான்கு விரல் கடை தூரவழி 
சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி 
துக்கமும் சுகமும் வேறு வழி

வந்ததில் எல்லாம் பொருளுண்டு 
வருவதில் வெற்றியும் நமக்குண்டு 
நிச்சயம் இரவுக்குப் பகலுண்டு 
நீதியின் கண்களில் ஒளியுண்டு

அண்ணனில் ஆயிரம் பேருண்டு 
ஆயினும் உன்..போல் யாருண்டு
பழிகளில் ஆயிரம் வகையுண்டு
பார்ப்போம் இதற்கோர் முடிவுண்டு
பழிகளில் ஆயிரம் வ..கையுண்டு 
பார்ப்போம், இதற்கோர் முடிவுண்டு


வந்ததில் எல்லாம் பொருளுண்டு 
வருவதில் வெற்றியும் நமக்குண்டு 
நிச்சயம் இரவுக்குப் பகலுண்டு
நீதியின் கண்களில் ஒளி உண்டு


99 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்..

    டி எம் எஸ் பாடலோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிமொழிந்து வரவேற்கிறேன்.

      நீக்கு
    2. அன்பு ஸ்ரீராம், அன்பு துரை செல்வ ராஜு,அன்பு கீதா அனைவருக்கும் இனிய ஆடி வெள்ளி வழக்கம்.
      வாழ்க்கைப் படகு , பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். தேவிகா
      சற்றே மாறு பட்ட தலை அலங்காரத்துடன் ,இரட்டைப் பின்னல்
      விட்டு ஒற்றைப் பின்னலுக்கு மாறிய நேரம்.

      நீக்கு
    3. வணக்கம் வழக்கமாகிவிட்டது.

      நீக்கு
    4. வழக்கமே வணக்கம்..

      வாழ்க நலம்!..

      நீக்கு
    5. வாங்க வல்லிம்மா...

      இனிய காலை வணக்கம்.

      அந்த மாறுதல்கள் நீங்கள்சொன்னால் நாங்கள் கேட்டுக்கொள்வோம். நாங்கள் குழந்தைகள். எங்களுக்கு அனுஷையும், தமன்ஸ்ஸையும்தான் தெரியும்!

      நீக்கு
    6. மாயா, தேவிகாவைப் படங்களாகத் தேர்ந்தெடுத்தார்,.
      சின்னச்சின்னக் கண்ணன் பாடல் வெகு வெகு இனிமையான பாடல்.
      பாடலும் அதற்கு நடிக்கும் ஜெமினி, தேவிகா ,அந்தப் பாப்பா
      எல்லாமே சூப்பர்.
      பால் மணக்கும் பருவத்திலே
      உன்னைப் போல் நானிருந்தேன்
      அன்னாளை நினைக்கையிலே
      என் மனசு ஆடுதுடா என்று பாடும்போது ஜெமினியின் முக பாவம்
      அவ்வளவு சிறப்பாக இருக்கும்.
      அதே போல
      //பூப்போன்ற நெஞ்சினில் முள்ளிருக்கும் பூமியடா
      பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா
      நன்றிகெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா //
      என்ற வரிகள் வரும்போது தேவிகாவின் வருத்தம் அளவில்லாமல்
      இருக்கும்.
      நல்ல பாடல் தேர்வுமா. மிக மிக நன்றி.

      நீக்கு
    7. வரவேற்ற துரை மற்றும் நண்பர்களுக்கும், இனி வரப்போகும் நண்பர்களுக்கும் இனிய நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
    8. //என்ற வரிகள் வரும்போது தேவிகாவின் வருத்தம் அளவில்லாமல்
      இருக்கும்.

      ஆமாம். காட்சியிலேயே வரும். நமக்கே காட்சியின் பின்னணி படம் பார்க்கா விட்டாலும் புரிந்து விடும்.


      //நல்ல பாடல் தேர்வுமா. மிக மிக நன்றி.//

      நன்றிம்மா.

      நீக்கு
  3. ஆமாம் ஸ்ரீராம் ஜெமினிக்கு ஏ எம் ராஜா குரல் அப்படியே பொருந்தும்....

    அவர் அதிகம் கிமிக்ஸ் கொடுத்துப் பாடி நான் கேட்டதில்லை ப்ளெய்ன் தான் இருந்தாலும் குரல் நன்றாக இருக்கும்.

    ஜெமினிக்கு பி பி எஸ், ஏ எம் ராஜாவுக்கு அடுத்துதான். ஏ எம் ராஜா தான் அப்படியே...

    சிவாஜிக்கு டி எம் எஸ் தான்...எம் ஜி ஆருக்கும்..உங்கள் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாகேஷுக்கு ஏ எல் ராகவன் குரல் பொருந்தும். உதாரணத்துக்கு "எல்லாமே வயத்துக்குதாண்டா" பாடல்! இதைப் பதிவில் சொல்ல மறந்து விட்டேன்!

      நீக்கு
    2. காலையும் நீயே.. மாலையும் நீயே..
      காற்றும் நீயே.. கடலும் நீயே!..

      ஆலய மணிவாய் ஓசையும் நீயே..
      அருள் வடிவாகிய தெய்வமும் நீயே!...

      = = = = = = = =

      சின்னச் சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்...
      அங்கும் இங்கும் யார் வரவைத் தேடுது?...

      ஆகா!...

      A.M. ராஜா அவர்கள் ஜெமினி அவர்களுக்குப் பாடிய பாடல்கள் எத்தனையோ இருந்தாலும்
      சும்மா நினைவுக்காக இரண்டு!...

      நீக்கு
    3. ஜெமினிக்கு ஏ எம் ராஜா குரல் ரொம்பவே பொருத்தம். மிஸ்ஸியம்மா பாடல்கள், தேனிலவு பாடல்கள்... குறிப்பக 'பாட்டு பாடவா...'

      நீக்கு
    4. பிபிஎஸ் இங்கே தலையில் அவரோட ட்ரேட் மார்க் தொப்பியில்லாமல் காட்சி அளிக்கிறார். சென்னையில் மயிலை உட்லண்ட்ஸில் தினமும் மாலைஅவரைக் குறிப்பிட்ட டேபிளில் பார்க்கலாம். அருகே அமர்ந்து அவரோடு பேசிக் கொண்டே சாப்பிடலாம். கையெழுத்து வாங்கலாம். நாங்க 2.3 முறை பார்த்துப் பேசி இருக்கோம்.

      நீக்கு
    5. ஆம். நானும் என் அண்ணனும் நாகை நண்பர்கள் எல்லோரும் ஒருநாள் டிரைவ் இன் வுட்லாண்ட்ஸ் ஹோட்டலில் மாலை அவரைப் பார்த்து, சந்தோஷமாக உரையாடிக்கொண்டிருந்தோம். என் அண்ணன் அவருடைய பாடல் ஒன்றை அவரிடம் பாடி, பாராட்டைப் பெற்றார். (மே 23 ல் பிறந்த அண்ணன்! )

      நீக்கு
    6. ஓஓ, அந்த அண்ணாவா? ஓகே! அநேகமா உங்க வீட்டில் எல்லோருமே பாடுவார்கள் என நினைக்கிறேன். ரத்தத்திலேயே உண்டு போல! உங்க தம்பி பாடி அதை ஃபேஸ்புக்கில் போட்டிருக்கார். கேட்டிருக்கேன். தியாகராஜ ஸ்வாமிகளுக்குச் சொந்தமோ? அம்பத்தூரில் ஒருத்தர் இருந்தார். தியாகராஜ ஸ்வாமிகளின் குடும்பக் கிளை என்பார். இன்னொரு இளம் நண்பர் வீட்டில் ஸ்வாமிகள் பயன்படுத்திய தம்புரா/வீணை (?) எதுவென்று நினைவில் இல்லை. பூஜையில் வைச்சிருக்காங்க. செனடாஃப் ரோடில் வீடு. கூட்டுக்குடும்பம் தான்! அவர் பெயர் ஜெ.சந்திரசேகரன்! கோயில்களின் பழமை மாறாமல் திருப்பணி செய்து வரும் திரு சத்தியமூர்த்தி அவர்களின் சீடர்! ஒருவேளை தெரிந்திருக்கலாம்.

      நீக்கு
    7. //பிபிஎஸ் இங்கே தலையில் அவரோட ட்ரேட் மார்க் தொப்பியில்லாமல் காட்சி அளிக்கிறார்.//

      ஆமாம்.. தேடி எடுத்துப் போட்டேன்!

      //சென்னையில் மயிலை உட்லண்ட்ஸில் தினமும் மாலைஅவரைக் குறிப்பிட்ட டேபிளில் பார்க்கலாம்.//

      கேள்விப்பட்டிருக்கிறேன்.

      நீக்கு
    8. கௌ அண்ணா கீதா அக்கா சொன்னது போல் உங்க குடும்பமே பாட்டுக் குடும்பம் தான். இதோ இப்போதுள்ள ஸ்ரீராம் வரை! ஸ்ரீராமின் பையர்கள் பாடுவார்களான்னு தெரியலையே!! ஸ்ரீராம் அவர்கள் பாட்டுக் கற்ற வேண்டும் என்று விரும்பியதா சொல்லியிருந்த நினைவு..

      கீதா

      நீக்கு
    9. தியாகய்யர் தெலுங்கு பேசும் முலகநாடு பிரிவை சேர்ந்தவர். நாங்கள் வெலநாடு (வேழநாடு என்றும் குறிப்பிடப்படுகிறது) பிரிவு. ஆனால், முலகநாடு சம்பந்தம் நிறைய உண்டு. எங்கள் மன்னி ஒருவர் கூட தியாகைய்யரின் ஊரிலிருந்து வந்தவர், முலகநாடு பிரிவு. ஆனால், தியாகையருக்கு ஒரு மகள் இருந்தபோதும், அந்த மகளின் சந்ததியினர் யாரும் கிடையாது என்று படித்திருக்கிறேன். தியாகையரின் சகோதரர்களுக்கு சந்ததியினர் இருக்கலாம்.

      நீக்கு
  4. இன்று வழங்கப்பட்டுள்ள பாடல்கள் இரண்டுமே -
    எல்லாவற்றிலும் விஞ்சி நிற்பவை...

    எப்போதாவது மனம் தளர்வுற்றிருக்கும் வேளைகளில்
    உற்சாகம் விளைவிப்பது - பந்தபாசம் படப்பாடலான

    கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு என்பதே!...


    வந்ததில் எல்லாம் பொருளுண்டு
    வருவதில் வெற்றியும் நமக்குண்டு
    நிச்சயம் இரவுக்குப் பகலுண்டு
    நீதியின் கண்களில் ஒளியுண்டு...

    இவை சாதாரணமான வரிகளே அல்ல!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாயவனாதன் வரிகள்! நான் பந்தபாசம் பாடலை அவ்வளவாக விரும்பிக் கேட்டதில்லை. பதிவுக்காக வரிகள் சேர்த்தபோது கவர்ந்தன.

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் இனிய காலை வணக்கங்களுடன் இந்நாள் நலமுடன் இனிதாக மலரவும் பிரார்த்திக்கிறேன்.

    முதல் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. இன்னமும் விரிவாக படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா அக்கா...

      அன்பின் பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      முதல் பாடலை விரும்பாதவர் யார்? இல்லை?

      நீக்கு
  6. அன்பின் ஸ்ரீராம் ..

    தங்களது மின்னஞ்சலைக் கவனிக்கவும்... மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் விரும்பிய பாடலை இன்று பதிவிட்டதுக்கு மிக நன்றி.

      என் 14 வயதில் பார்த்த படம் பந்த பாசம்.
      கறுப்பு வெள்ளையில்,
      பாசம்,நேசம், குடும்பம், கட்டுப்பாடு தியாகம் எல்லாம்
      வரும்.
      அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே நன்றாக இருக்கும்.
      இந்தப் பாடலைக் கேட்பதில் என் மனதுக்கு ஒரு\
      ஆறுதல்.
      மிக மிக நன்றி மா.

      நீக்கு
    2. சொல்லுக்கும் செயலுக்கும் காதல் வழின்னு ப்ரிண்ட்
      செய்துட்டாங்க போலிருக்கு. ஹாஹ்ஹா.
      அது காத வழி

      அன்பு துரை செல்வராஜின் ரசிப்புக்கு மிக மிக நன்றி மா.

      நீக்கு
    3. >>> சொல்லுக்கும் செயலுக்கும் காதல் வழி
      துக்கமும் சுகமும் வேறு வழி.. <<<

      ஆகா..

      வல்லியம்மா அவர்களின் ரசனையே தனி...

      சொல்லும் செயலும் காதல் வழியினால் ஒன்றாயிருந்ததெல்லாம் அந்தக் காலம்...
      இன்றைக்கு அப்படியில்லை!..

      ஆனாலும்

      காத வழி என்றால் இன்று எத்தனை பேருக்குத் தெரியும்!..

      (அதைத் தெரிஞ்சுக்கிட்டு என்னய்யா பண்றது?..)

      நீக்கு
    4. காதவழி என்று சொன்னால், காது வலி என்று வாட்ஸப்பில் போட்டு ஃபார்வர்டு செய்துவிடுவான்கள். அப்படி ஒரு தமிழ்ப்பித்து இப்பல்லாம்..!

      நீக்கு
    5. /அது காத வழி/

      உடனே அப்போதே திருத்தி விட்டேன்மா.

      நீக்கு
  7. மாயவநாதன்// இப்போதுதான் அறிகிறேன் ஸ்ரீராம். பாடலாசிரியர் என்று..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகம் படித்திராத கவிஞர் மாயவநாதனின் பாடல் வரிகளில் இலக்கிய நயமிகு சொல்லாட்சி எப்போதும் சிறப்பாக இருக்கும்...

      அவரின் செந்தமிழ்ப் பிரயோகம் சிந்தித்து பார்த்தாலே இனிக்கும்...

      வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, நேர்த்தியாய் வார்த்தைப் பூஞ்சரம் தொடுப்பதில் வல்லவர்...

      உதாரணமாக இரண்டு :-

      1) தண்ணிலவு தேனிறைக்க... தாழை மரம் நீர் தெளிக்க... (படித்தால் மட்டும் போதுமா...?)

      "தண்மை” என்னும் வார்த்தை...!

      2) காவிரிப் பெண்ணே வாழ்க... உந்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க... (பூம்புகார்)

      நதியின் பெருமையை பாடல் வரிகளில் நினைத்தால், காவிரியின் பெருமையும், சோழ நாட்டின் நெற்களஞ்சியத்தின் செழுமையும் அறியலாம்...

      நீக்கு
    2. ஆம். DD சொல்லியிருப்பதுபோல பெயர்பெற்ற கவிஞர்.

      நீக்கு
  8. சின்னச் சின்னக் கண்ணனுக்கு .. இளம் வயதில் மனதைக் கரைத்த பாடல்களில் ஒன்று. எத்தனையோ மயக்கும் பாடல்கள். பாடல்களிலும், கனவுகளிலுமாய்க் கழிந்த காலமது. மாயவநாதனின் வரிகளை இப்போதுதான் பார்க்கிறேன்.
    ஏ.எம். ராஜாவும், பி.பி.ஸ்ரீனிவாஸும், கண்ணதாசன், விஸ்வனாதன், ராமமூர்த்தி போன்ற கலைஞர்களும் அந்தப் பொற்காலத்தின் இன்னும் மின்னும் சுவடுகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நாளைப்போல இந்த நாள் இல்லை. அந்நாளை நினைக்கையில் என் மனது ஆடுதய்யா என்று மாற்றி பாடலாம்! பொற்காலம்!

      இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே... அது ஏன்..ஏன்... ஏன் நண்பரே!

      நீக்கு
    2. //அது ஏன்..ஏன்... ஏன் நண்பரே// - ஸ்ரீராம்... அப்போ நமக்கு பொறுப்பு கிடையாது. அதை ஹேண்டில் பண்ண பெரியவங்க இருந்தாங்க. அதுனால நாம் ஜாலியா பொறுப்பில்லாமல் இருந்தோம். இப்போ பொறுப்புகள், குடும்பச் சுமைகள் மன அழுத்தத்தை நமக்குத்தானே தருகிறது.

      நீக்கு
  9. எல்லோரும் எப்போ நேயர் விருப்பம் கேட்டாங்கனு நினைவில் வரலை! ஆனால் "வாழ்க்கைப் படகு" படம் பார்த்த நினைவு இருக்கு. என் தாத்தா ஜெமினி ஸ்டுடியோக்காரர்களின் நண்பர், வக்கீல். ஆகவே இந்தப் படத்துக்கு மதுரையில் அப்போது ஆனந்த விகடன் ஏஜென்சி எடுத்திருந்த ஜெமினி நாயுடு என்பவர் மூலமாக எங்களுக்குப் பாஸ் கிடைத்தது. பார்த்தோம். ஒரு கூட்டமாகப் போனோம். தாத்தாவும் வந்தார். டூயட் பாடலையும், காட்சிகளையும் பார்த்துவிட்டு அவர் ஏன் இப்படி எல்லாம் பண்ணறாங்க? என்று கேட்டதும், நாங்கல்லாம் சிரித்ததும் இன்னமும் நினைவில் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> ஒரு கூட்டமாகப் போனோம். .. <<<

      ஆகா!...

      நீக்கு
    2. அவரோட (தாத்தா) நல்ல நேரம்... சமீபகாலங்களில் வந்த படங்களை, அதிலும் பாடல் காட்சியைப் பார்க்கக் கொடுத்து வைக்கலை. பார்த்திருந்தால் என்ன சொல்லியிருப்பாரோ! ஒரு வேளை உங்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஆபத்து வந்திருக்குமோ?

      நீக்கு
    3. தாத்தாவுக்குப் படங்கள் பார்ப்பதே பிடிக்காது. இத்தனைக்கும் பெரிய மாமா திரைப்படக் கம்பெனியில் தான் வேலை செய்தார்! :))))) அந்தப் படத்திற்கு நாங்க அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றோம். தாத்தா, கடைசிச் சித்தி, மாமா பெண், பெரியம்மா குழந்தைகள், நாங்க நாலு பேர்(அம்மா, நாங்க மூவர்) என எல்லோருமாகப் போனோம். மதுரை கல்பனா தியேட்டர் என நினைவு! தாத்தா என் கல்யாணத்துக்கு முன்னாடியே காலம் ஆகிவிட்டார்.

      நீக்கு
    4. பின்னூட்டத்திலேயே நேயர் விருப்பம் கேட்டிருந்தார்கள் அக்கா.

      தாத்தாக்கள் எப்போதுமே குறும்பானவர்கள்.

      நீக்கு
  10. சென்ற டிசம்பரின் கடைசி வாரத்தில்
    நானே விலை கொடுத்து வாங்கிய வில்லங்கம் ஒன்று...

    எல்லா .... பசங்களும் குடிக்கிறானுங்க... சிகரெட் பிடிக்கிறானுங்க...
    நிம்மதியா தொழுவுறதுக்கு முடியலை..

    என்று வருந்தியதைக் கேட்டு மனமிரங்கி -
    என்னுடன் தங்கிக் கொள்ளுங்கள்.. என்னால் எந்த தொந்தரவு இருக்காது..
    என்று அழைத்து வந்தேன்...

    அதன்பின் தான் சுய ரூபம் வெளிப்பட்டது...

    ஆறுமாதங்களாக (ஒரு மாதம் விடுமுறை நீங்கலாக)
    அந்த வில்லங்கத்தினால் நானடைந்த இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல...

    சின்னஞ்சிறு அறைக்குள் இட்லி அவிப்பது ,நிலக்கடலை அவிப்பது, மீன் குழம்பு வைப்பது
    சாலையோர சர்பத் கடை மாதிரி கண்ணாடிக் குவளையில் ஸ்பூனைப் போட்டு
    கனகனகன.. - என்று கலக்கியடிப்பது - என்றெல்லாம்...

    ஓய்வு நாளின் பகலில் கூட சற்று படுத்து உறங்க விடாமல்
    You Tube ன் பிரச்னைகளுக்குரிய காணொலிகளைச் சத்தமாகக் கேட்பது - என்றெல்லாம்!...

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவன் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொருவனைப் பற்றி
    மேலிடத்தில் குறை சொல்லக்கூடாது.. என்பதனால் பொறுமையை அடைகாத்தேன்...

    தேவீ!.. காப்பாற்று!... - என்றிருந்தேன்..

    நேற்றைக்கு முன் தினம் புதன்கிழமையோடு வில்லங்கத்தின் ஆட்டங்கள் எல்லாம் முடிந்தன...

    அறையிலிருந்து வில்லங்கம் வெளியேறி விட்டது..

    வேறு தளத்திற்கு வேலை மாற்றிக் கொடுத்து
    இருப்பிடத்தையும் மாற்றி விட்டார்கள்...

    அடுத்த ஆள் வரும்வரை அறைக்குள் நிம்மதி... நிம்மதி...

    வந்ததில் எல்லாம் பொருளுண்டு
    வருவதில் வெற்றியும் நமக்குண்டு
    நிச்சயம் இரவுக்குப் பகலுண்டு
    நீதியின் கண்களில் ஒளியுண்டு...

    நிச்சயம் இரவுக்குப் பகலுண்டு
    நீதியின் கண்களில் ஒளியுண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு சார்... அந்நாளில் நீங்கள் சொன்னதிலிருந்து இந்தப் பிரச்சனைகள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. சும்மா நம் அரசு "அவரை" உள்ளே வரவிடாமல் செய்யவில்லை.

      இனியாவது உருப்படியானவர்்அறைக்கு வரட்டும்.

      நீக்கு
    2. அன்பின் நெல்லை..
      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    3. ஆஹா... வேலியில போன ஓணானா? எப்படியோ இப்போதாவது விடுதலை கிடைத்ததே!

      நீக்கு
    4. //சும்மா நம் அரசு "அவரை" உள்ளே வரவிடாமல் செய்யவில்லை. //

      அபுரி நெல்லை. அரசா? அவரையா?

      நீக்கு
    5. துரை அண்ணா நல்லதாகப் போச்சு! இப்போதாவது நிம்மதி கிடைத்ததே. இனி வருபவரும் நல்லவராக அமைந்திடட்டும்

      கீதா

      நீக்கு
    6. துரை சார் உங்கள் அனுபவத்தை படிக்கும் பொழுது எதுவும் கடந்து போகும் என்று புரிந்தது.

      நீக்கு
    7. நல்லபடியாகக் கடந்து விட்டீர்கள் என்பது தெரிகிறது. இனி யாரையேனும் கூட வைத்துக்கொள்ளும் முன்னர் யோசிக்கணும். வயிற்றுப் பாடுக்காக எவ்வளவெல்லாம் கஷ்டங்களை அனுபவிக்கிறீர்கள்! இனியாவது நிம்மதியாக இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்.

      நீக்கு
    8. //அபுரி நெல்லை. அரசா? அவரையா?// - நம்ம துரை செல்வராஜு சார் எழுதினதிலிருந்து அவருடைய முன்னாள் ரூம்மேட் கேட்டது சாகிர் நாயக்கின் உரைகளை. இவர்தான் மற்ற மதங்களைத் தாழ்த்தி காணொளிகள் வெளியிட்டு, தீவிரவாதத்தை வளர்த்துவருபவர் என்று பங்களாதேஷ் அரசு மற்றும் இந்திய அரசினால் குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்வதற்கு முன்பு சவுதிக்கு ஓடி, பிறகு மலேஷிய அரசு அடைக்கலம் கொடுத்து அங்கேயே இருப்பவர். அவரது சொத்துக்கள்கூட பாஜக அரசால் முடக்கிவைக்கப்பட்டிருக்கின்றன.

      நீக்கு
    9. அன்பு துரை, உங்கள் மனக்கிலேசங்கள் விலக அன்னையே துணை இருந்தாள்.
      இந்தப் பாட்டு நம்பிக்கை தரும் பாட்டு.
      மிகவும் பிடித்தது.
      ஒவ்வொரு வரியும் நமக்கு இழைக்கப்படும் அனீதிகள்
      எப்படியாவது விலகும் என்ற நேர்மறை எண்ணத்தை விதைக்கும்.
      வெளியிட்ட ஸ்ரீராமுக்கு மிக நன்றி.

      நீக்கு
  11. கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
    காரியம் நடக்கட்டும் துணிந்து விடு //

    நம்ம நேரத்திற்கு, வாழ்க்கைக்கு
    மிகவும் பொருத்தமான வரிகள்!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே? பாடினால் வரிகளே அழுகையில்தான் முடியும் போல...!

      நீக்கு
    2. அதுவும் சரிதான் ஸ்ரீராம் சில பாடல்களைக் கேட்க முடிவதில்லை. அதுவும் சோகப் பாடல்கள் அறவே வேண்டாம் என்றே தோன்றுகிறது.

      கீதா

      நீக்கு
  12. குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் இருப்பதால் எங்கள் ப்ளாக் குடும்பத்தை மறந்து விட்டேன். அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானு அக்கா.. விழாக்கால மகிழ்ச்சியா? கொண்டாடுங்க.

      நீக்கு
  13. காலை வணக்கம் அனைவருக்கும்.

    தலைப்பைப் பார்த்த உடனே எனக்கு பாடல் நினைவு வந்துவிட்டது. அருமையான பாடல்.

    இரண்டாவது பாடலை கேட்ட நினைவு இல்லை. காணொளி போட்டுப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. 'சின்ன சின்ன கண்ணனுக்கு..'பாடல் மிகவும் பிடிக்கும். காதல்,குறும்பு, நெகிழ்வு எல்லாவற்றையும் அழகாக வெளிப்படுத்தும் அபூர்வ, இனிய குரல்
    பி.பி.எஸ்.க்கு.

    பதிலளிநீக்கு
  15. கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு....சற்றே மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் இந்தப்பாடலை நான் நினைத்து ஆறுதல் அடைவதுண்டு.

    பதிலளிநீக்கு
  16. உங்களிடம் அலேக்சா இருக்கிறதா கேட்கும்பாட்டை உடனே பாடுகிறது நமக்குத் தேடும் வேலை இல்லை

    பதிலளிநீக்கு
  17. அற்புதமான பாடல்கள்

    பிபி ஸ்ரீனிவாஸ் அவர்கள்மீது நான் சுமார் 35 வருடங்கள் முன்பு பொறாமை கொண்டேன் என்பதை வெட்கமின்றி ஒத்துக்கொள்கிறேன்.

    வேறு யார்மீதும், எதன் மீதும் நான் இதுவரை பொறாமை கொண்டதில்லை.

    அவர்மீது கொண்ட பொறாமைதான் பின்நாளில் என்னை மொழிகள் பல பயில்வதற்கு காரணமாக இருந்தது.

    அவரை நேரில் சந்திக்வேண்டும் என்ற எனது ஆசையும் நிறைவேறாமல் போய்விட்டது.

    அந்தப்பொறாமைக்கு காரணம் பிபி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் 12 மொழிகள் பேசுவார், படிப்பார், சில மொழிகள் எழுதுவார் இதுவே காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வந்ததில் எல்லாம் பொருளுண்டு
      வருவதில் வெற்றியும் நமக்குண்டு
      நிச்சயம் இரவுக்குப் பகலுண்டு
      நீதியின் கண்களில் ஒளியுண்டு//

      ஜி உங்களின் சமீபத்திய பதிவில் எழுத நினைத்த வரிகள்...!

      நீக்கு
    2. @ திண்டுக்கல் தனபாலன். , இந்தப் படம் வெளியிடப் படும்போது நீங்கள் எல்லாம் பிறந்திருக்க வாய்ப்பில்லை.
      நீங்கள் குறிப்பிட்ட அத்தனை பாடல்களையும்
      கேட்டு ரசிப்பேன். அவ்வளவு கவித்துவமான வரிகள்.
      எடுத்துக் கொடுத்ததற்கு மிக நன்றி.
      அந்த இன்னோரு பாடல் எனக்குத் தெரியும்
      சொல்ல மாட்டேன்.

      நீக்கு
    3. நன்றி அம்மா... நெசவு நெய்து கொண்டிருக்கும் போதும், அப்பா பல இனிய பாடல்களை பாடுவாராம்... எனது அம்மா பக்கத்தில் புட்டா (புடவை முந்தியில் வரும் டிசைன்) எடுப்பார்களாம்... வயிற்றில் நான்...

      பிறகென்ன பாடல் வரிகளை சொல்வதற்கு...! பாடல் பைத்தியம் நான்..

      நீக்கு
  18. ──╔═══╗─────╔╗────────
    ──║╔╦╗║─╔═╦╦╬║╔═╦╦╗║╔╗
    ╔═║╚╝╬═╗╠╗║║║║╠╗║║║║║║
    ╚═╩══╩═╝╚╝╚╝║║╚╝╚╝║╚╩╝
    ──────────────────────

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது யாரு, க்ராஃபிக் ஆர்ட்டிஸ்ட் !

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. ─────o────╔╗
      ╔╦─╔═╦╦╦╔╦╣║
      ║╬╗╠╗║║║║║║║
      ║║║╚╝╚╝║╚║║║
      ─╔╝──────╔╝─

      நீக்கு
    4. இதோ நானும் எழுதுறேன்.

      நன்றி

      நீக்கு
    5. எல்லாப்புகழும் இனிய நண்பர் ராஜாராமனுக்கே... → நீச்சல்காரன் வலைத்தளம்

      நீக்கு
    6. நன்றி DD. இரண்டு நாட்களுக்கு முன் உங்கள் பதிவில் இந்த முயற்சியை வெள்ளோட்டம் விட்டுக்கொண்டிருந்தீர்கள் போல... வந்து பார்த்தால் பதிவில் காணோம்!

      நீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  20. "சின்னச்சின்ன கண்ணனுக்கு"
    பாடல் வரிகள் மட்டும் தான் காணொளி இல்லையா?
    இரண்டாவது பாட்டு வருகிறது, கேட்டேன்.
    இரண்டுமே பிடித்த பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  21. வாழ்க்கை படகு பாடல்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கும்.
    தொலைக்காட்சியில் அந்த படம் போட்டால் பார்ப்பேன்.
    ஹிந்தி படமும் நன்றாக இருக்கும் அதுவும் பார்த்து இருக்கிறேன்.

    பந்த பாசம் படம் சிறு வயதில் பார்த்தது நினைவில் இல்லை, தொலைக்காட்சியில் பார்த்த நினைவு இருக்கிறது.இதிலும் பாடல்கள் நன்றாக இருக்கும்.

    //நிச்சயம் இரவுக்குப் பகலுண்டு//
    ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை கொடுக்ககூடிய வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பந்த பாசம் எனக்கும் நினைவில்லை, பார்த்ததும் இல்லை அக்கா.

      நீக்கு
  22. இரண்டாவது பாடலுக்கு ஏற்ற பாடல்கள் :

    கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால் - கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு...
    காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால் - கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு...
    கோட்டுக்குத் தேவை சிலசாட்சி -குணத்துக்கு தேவை மனசாட்சி - உன்
    குணத்துக்கு தேவை மனசாட்சி...
    உலகம் ஆயிரம் சொல்லட்டுமே - உனக்கு நீதான் நீதிபதி...
    மனிதன் எதையோ பேசட்டுமே -
    மனசை பார்த்துக்க நல்லபடி - உன்
    மனசை பார்த்துக்க நல்லபடி...
    அருணோதயம் / கவிஞர் கண்ணதாசன்

    மனதுக்கு மட்டும் பயந்துவிடு - மானத்தை உடலில் கலந்துவிடு...
    இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு - இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
    இரண்டினில் ஒன்று பார்த்துவிடு...
    ஹே...! என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    - இருட்டினில் நீதி மறையட்டுமே...
    தன்னாலே வெளிவரும் தயங்காதே...தலைவன் இருக்கிறான் மயங்காதே
    ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
    பணத்தோட்டம் / கவிஞர் கண்ணதாசன்

    பதிலளிநீக்கு
  23. //உங்கள் பதிவில் இந்த முயற்சியை வெள்ளோட்டம் விட்டுக்கொண்டிருந்தீர்கள் போல...//

    ஆம் உண்மை... எது சரியாக வருகிறது என்பதற்கான சோதனை முயற்சி... போன வருடம் தெரியும்... ஆனால், சோதனை செய்து பார்க்கவில்லை... நேரமும் இல்லை... ஆனால் இப்போது ஃப்ரீ, ஏனெனில் :-

    ஆடி என்றால் வியாபாரத்தை கூடவா பிரிப்பார்கள்...?

    ஸ்ரீராம் சார்... உங்கள் வெள்ளோட்ட மறுமொழியை வாசித்தவுடன்...

    ஹா...ஹங்... ங்... ஞெ... - இது ஆச்சரியம் கலந்த சிரிப்பு...!

    ஒன்று மட்டும் புரிந்தது... நீங்கள் வாசித்து கருத்துரை சொல்லும் அனைத்து பதிவுகளிலும், (அதாவது அனைத்து வலைத்தளத்திலும்) எனக்குத் தெரிவி (Notify me) என்பதில், டிக் மார்க் செய்து விட்டு, அதன்பின் வெளியீடு செய்கிறீர்கள்... சரி தானே...?

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீராமிற்கு நன்றி. கோரிக்கையை நிறைவேற்றியதற்கு.

    இக்கால திரைப்படப் பாடல்கள் என் ரசனைக்கு அன்னியப்பட்டவையாக இருக்கின்றன. இடையிடையே எனக்குப் புரிந்திடாத இந்தி திரைப்படங்களின் பாடல்கள் வேறு இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டன.
    தொடர்ந்து இப்படியே வெளி வந்த பொழுது, ஒரு மாற்றத்திற்காக அந்நாளைய மனத்தை மயக்கும் பாடல்களை, அவறிற்கு என்று அமைந்த இசையுடன்-- நாம் எல்லோரும் சேர்ந்து கேட்க ஆவல் கொண்டேன். 'சின்னச் சின்ன கண்ணனுக்கு' பாடலும் எனக்கும் மிகவும் பிடித்த பாடல் தான்.

    இந்தப் பாடலின் சிறப்பான அம்சம், கவியரசர் இந்தப் பாடலில் தன்னையே வெளிப்படுத்திக் கொண்டிருப்பார். (அண்ணன் காட்டிய வழியம்மா..' போல அப்படி நிறைய பாடல்கள்) 'நன்றி கெட்ட மாந்தரடா! நானறிந்த பாடமடா..' என்று ஓடி வந்து அவர் கற்பனையில் விழுந்த வரிகள் அந்நாளில் அவர் எதிர்கொண்ட மனத் துன்பங்களை வெளிப்படுத்தும் வரிகள்.

    இப்படி மாதத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் பழைய பாடல்களை நினைவு கொண்டால் என்னைப் போன்ற வயதான எங்கள் பிளாக் ரசிகர்களுக்கு அந்நாள் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பது நிச்சயம். நன்றி, எங்கள் பிளாக் குழுவினருக்கு.

    பதிலளிநீக்கு
  25. கோமதி அரசு அம்மா :// பந்த பாசம் படம் சிறு வயதில் பார்த்தது நினைவில் இல்லை, தொலைக்காட்சியில் பார்த்த நினைவு இருக்கிறது.இதிலும் பாடல்கள் நன்றாக இருக்கும். //

    ஸ்ரீராம் சார் : // பந்த பாசம் எனக்கும் நினைவில்லை... //

    பந்த பாசம் படத்தில் சில பாடல்கள்...

    அந்த வள்ளுவன் குறள் போலே...அவள் வகைக்கொரு சுவையாவாள்...
    தரும் கள்ளினில் மணமாமோ...? என்னை கண்டதும் இளகாதோ...?
    அவர் கண்களும் சிறையாமோ...?அதில் கன்னியர் இரையாமோ...?
    இழை கல்லிலும் எடுப்பாரோ...? அதை பின்னியும் முடிப்பாரோ...?
    அன்பு தழைக்கிற இடமென்ன மனமோ... விதை தெளிக்கிற இடமென்ன விழியோ...
    நெஞ்சில் நினைத்ததும் இனிப்பது எதுவோ...? கொஞ்சம் நெருங்கிட நெருங்கிட துணிவோ...?

    இணைப்பு :- இதழ் மொட்டு விரிந்திட...

    நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்... நிலைமையும் அதனை மறைத்திருக்கும்...
    காலம் வந்தால் காய் பழுக்கும்... காத்து நின்றால் கனி கிடைக்கும்...
    பந்தல் இருந்தால் கொடி படரும்... பாலம் அமைந்தால் வழி தொடரும்...
    கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்... இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்...

    இணைப்பு :- → பந்தல் இருந்தால் கொடி படரும்...

    இன்னொரு அருமையான பாடல் இருக்கிறது... அதை சொல்ல மாட்டேனாக்கும்... ஏனெனில் வரும் எனது பதிவில், அந்த பாடல் உள்ளதாக்கும்...!

    பதிலளிநீக்கு
  26. ─────o────╔╗
    ╔╦─╔═╦╦╦╔╦╣║
    ║╬╗╠╗║║║║║║║
    ║║║╚╝╚╝║╚║║║
    ─╔╝──────╔╝─
    தனபாலன்.

    பாடல் பகிர்வுக்கு. இதழ் மொட்டு விரிந்திட பாடல் ஆங்கில பாடலின் தழுவல் என்று என் அப்பா சொல்வார்கள்.
    என் அம்மா எத்தனை பேர் ஆங்கில பாடல் உங்களை போல் கேட்கிறார்கள் . இந்த பாட்டு கேட்க ந்ல்லா இருக்கிறது
    என்பார்கள்.

    இரு பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தேன்.


    பதிலளிநீக்கு
  27. வாழ்க்கைப்படகு பாடல் இணைக்கப்படவில்லையா? கீதா கேட்டுதான் தெரிந்தது. இப்போதுதான் நானும் பார்த்தேன். நேற்று இணைத்திருந்தேன். என்ன ஆச்சோ? இப்போது இணைத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் பாடல் இணைத்தமைக்கு!!

      பாடல் அருமையான பாடல்!!! பல முறை கேட்டிருக்கிறேன். முன்பு. அதன் பின் இப்போதுதான் கேட்கிறேன் ஸ்ரீராம் கிட்டத்தட்ட 31 வருடங்களுக்குப் பிறகு!!!!!!!!!!!!

      மிகவும் ரசித்தேன் பாட்டை.

      இரண்டாவது பாடல் இப்போதுதான் கேட்கிறேன் ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
    2. இல்லை இல்லை கருத்தை மாற்றிக் கொள்கிறேன். வரிகளைப் பார்த்து இப்போதுதான் கேட்கிறேன் என்று போட்டுவிட்டேன்...பாடல் கேட்டதும் தெரிந்தது கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம்.

      இரு பாடல்களுமே மிக மிக அருமையான பாடல்கள்! மிகவும் ரசித்தேன்.

      வரிகள் தான் எத்தனை அழகு!!

      இரு அருமையான பாடல்களைப் பகிர்ந்து கேட்க வைத்தமைக்கு மிக்க மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    3. இல்லை இல்லை கருத்தை மாற்றிக் கொள்கிறேன். வரிகளைப் பார்த்து இப்போதுதான் கேட்கிறேன் என்று போட்டுவிட்டேன்...பாடல் கேட்டதும் தெரிந்தது கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம்.

      இரு பாடல்களுமே மிக மிக அருமையான பாடல்கள்! மிகவும் ரசித்தேன்.

      வரிகள் தான் எத்தனை அழகு!!

      இரு அருமையான பாடல்களைப் பகிர்ந்து கேட்க வைத்தமைக்கு மிக்க மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    4. ஆடி வெள்ளி தேடி உன்னை - இந்தப் பாட்டுல்லாம் ஆடி வெள்ளில நினைவுக்கு வரலையா ஸ்ரீராம்?

      நீக்கு
    5. நான் நேற்றே சொன்னேன் எனக்கு மட்டும்தான் வாழ்க்கை படகு பாடல் வரவில்லையோ என்று நான் கேட்ட கேள்விக்கும் நீங்கள் வேறு சிந்தனையில் இருந்தீகள் போலும் அதனால் பதில் சொல்லவில்லை.
      இன்று கேட்டேன் பாடலை. நன்றி.

      நீக்கு
  28. ஜெமினிக்கு பி.பி.எஸ் குரல் பொருத்தம். ஒரு சமயம் PBS பாடல்களைத் தேடித் தேடி காசெட்டில் பதிவு செய்து கேட்டதுண்டு. இப்போது எல்லாம் இணையத்திலேயே பலவும் கிடைத்து விடுகிறது என்பது ஒரு வசதி.

    இந்தப் பதிவில் பகிர்ந்து கொண்ட பாடல்களும் இனிமை. நிறைய முறை கேட்ட பாடல்கள்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!