1) இயற்கை விஞ்ஞானி. பஸ், லாரியின் கண்ணாடிகளில் விழும் மழை நீரை, துடைக்கப் பயன்படும் வைப்பர் மோட்டாரில், வேகத்தை கட்டுப்படுத்த, ரெகுலேட்டரை இணைத்து, சுவிட்ச் வைக்கப்பட்டு உள்ளது.தொட்டில் கயிற்றை, வைப்பர் மோட்டாரில் உள்ள வளையத்தில் மாட்டிய பின், தொட்டிலில்குழந்தையை படுக்க வைத்து, சுவிட்சை போட்டு, தொட்டிலை மெதுவாக தள்ளி விட்டால், தொட்டில், 2 அடி வரை, முன்னும், பின்னுமாக ஆடும். ரெகுலேட்டரில் வேகத்தை அதிகப்படுத்தினால், வேகமாக தொட்டில் இயங்கும். இதை, 3,000 ரூபாயில் வீரமணி தயாரித்துள்ளார்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎன்ன ஒரு ஐடியா. பெரியவர்களுக்கு ஒரு ஹாம்மக்
செய்யக் கூடாதோ இவர். மிக மிக அருமை ஸ்ரீராம்.
குழந்தைகள் மிகவும் சமத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன். செய்தவருக்கு வாழ்த்துகள்..
இனிய காலை வணக்கம் வல்லிம்மா....
நீக்குநன்றி.
எல்லோரும் உடல் நலனுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஎங்கள் பிரார்த்தனைகளும்.
நீக்குவீரமணி இத்தனைக் கஷ்டப்பட்டிருக்கவே வேண்டாம். சுருள் கம்பிகள் (ஸ்ப்ரிங்) இதற்கெனவேத் தனியாகத் தயாரிக்கப்பட்டு விற்கின்றன பல்லாண்டுகளாய். எங்கள் குழந்தைகளுக்கு எல்லாம் அந்த ஸ்ப்ரிங் தான். தூளியை ஸ்ப்ரிங்கில் மாட்டிக் கட்டிவிட்டால் குழந்தை புரண்டு படுக்கும்போதெல்லாம் இதமாகத் தூளி மேலும் கீழும் அல்லது பக்கவாட்டில் லேசாய்க் குலுங்கிக் கொடுக்கும்.நாங்க தூளியை இப்படி எல்லாம் ஆட்டினதே இல்லை. கடைசியாய்த் தூளி ஆட்டினது அறுபதுகளில் என் சித்தி பிள்ளைகளுக்காக. அதன் பின்னர் எங்க குழந்தைகளில் இருந்து இந்த ஸ்ப்ரிங் தான். அதையே சென்னையிலும், எங்க புக்ககத்திலும், ராஜஸ்தானிலும் அதிசயமாப் பார்த்தாங்க!
பதிலளிநீக்குஅதானே.. அவர் மனைவி கூட சொல்லவில்லையே...
நீக்குஹூம், அப்போக் கூட எங்க பையருக்குத் தூளியை நான் தான் தொடுகிறேன் என்பது தெரிந்து விடும். வேறே யாரானும் என்றால் ஒரே அலறல் தான். தூளியைத் தொட்டவர்கள் பயந்து அவங்களுக்குக் கொழுமோர் காய்ச்சிக் கொடுக்கும்படி ஆகும்.
நீக்குஇதை எழுதும் மும்முரத்தில் யாருக்கும் நல்வரவு சொல்லவில்லை. வந்திருக்கும் வல்லிக்கும் இனி வரவிருக்கும் அனைவருக்கும் வணக்கம், வாழ்த்துகள், நல்வரவு, பிரார்த்தனைகள். தி/கீதா உடல் நலம் தேறி வரவும் பிரார்த்தனைகள். விரைவில் கணினியை இயக்கும் அளவுக்கு அவர் வலக்கை திடமாக ஆகவும் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஆகஸ்ட் நிறையேருக்கு கஷ்டங்கள் கொண்டு வந்திடுச்சு போலிருக்கு. செப்டம்பர் எல்லாக் கஷ்டங்களுக்கும் தீர்வு கிடைக்கும. மாதமாக அமையும், அமையட்டும்.
நீக்குபொதுவாகவே எல்லோருக்கும் கஷ்டம்தான் கண்ணில்பட்ட மாதம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது... ம்ம்ம்ம்...
நீக்குநெல்லைத்தமிழரே, நானெல்லாம் கால்வலியால் வருடக்கணக்காக அவதி! :))))) இந்த மருத்துவர் தயவில் இப்போத் தான் கொஞ்சம் ஓய்வு! :)))))
நீக்கு//நானெல்லாம் கால்வலியால் வருடக்கணக்காக அவதி! :)))))// - பெரியவங்க வாழ்த்து மட்டும்தான் சொல்லணும். நான் என் கால்வலி, 7 1/2 சனி 2021ல் போகும்போது போயிடும்னு நம்பிக்கையா இருக்கேன். நீங்க, வந்த சனி போகாதுன்னு சொல்றீங்க. நியாயமா?
நீக்குநெல்லைத் தமிழரே, உங்களுடைய calcaneal spur வேறே, என்னோட பிரச்னை வேறே. நான் சொல்லி இருப்பது என்னுடைய பிரச்னையை மட்டுமே! உங்களைப் பற்றியோ, உங்கள் கால்வலி பற்றியோ ஓர் எழுத்துக் கூடச் சொல்லவில்லை. விரைவில் உங்கள் பிரச்னை சரியாகும். ஆயுர்வேத மருத்துவம் செய்து கொள்ளுங்கள். எக்ஸ்ரே எடுத்திருந்தால் அதையும் கொண்டு காட்டுங்கள். நாகர்கோயில் தெரிசனங்கோப்பில் இருந்து டாக்டர் எல்.மஹாதேவன், மாதா மாதம் சென்னை வருகிறார். இரண்டு, மூன்று குடியிருப்புப் பகுதிகளில் அவரைப் பார்க்க முன் கூட்டியே அனுமதி பெற்றுச் செல்லலாம். கடைசியா நாங்க போனப்போ ஆழ்வார்ப்பேட்டைப் பகுதியில் வந்து கொண்டிருந்தார். என்னுடைய leg thrombosis அவர் மருத்துவத்தில் கொஞ்சம் சரியானது. ஆங்கில மருத்துவமும் எடுத்துக் கொண்டிருந்தேன்.
நீக்குநன்றி கீசா மேடம். இப்போ நாகர்கோவில் மருத்துவரை பிடிக்கப் பார்க்கிறேன். கால்கனீல் ஸ்பர்ஆ என்று தெரியலை. எக்ஸ் ரே இருக்கு. சில நாட்கள் முன்பு நினைத்தேன். சாம்பு மாமாட்ட கேட்கலாமா இல்லை இது சரியானா 7 1/2 ல இன்னொண்ணு வருமோன்னு யோசித்தேன்.
நீக்குவித்தியாசமான சிந்தனை.
பதிலளிநீக்குநன்றி ஸார். கொஞ்சம் தலையை சுத்தி மூக்கைத் தொட்டிருக்கார் போல...
நீக்குPower Cut ஆனால் என்ன ஆகும்!?..
நீக்குபாவம் குழந்தை!...
அதே, அதே, நானும் நினைச்சேன். அதைச் சொல்வதற்குள் பால்காரர் வந்துட்டார். பெண்ணிடம் இருந்து தொலைபேசி அழைப்பும் வந்து விட்டது.
நீக்குவீரமணிக்கு அடுத்து மூன்று குழந்தைகள் பிறக்கட்டும். வேறு சிந்தனைகள் பிறக்ககூடும்.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா...
நீக்குஎன்ன செய்ய.. வேறு செய்திகள் கண்ணில் படவில்லை.
அனைவருக்கும் வணக்கம்!...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குவாங்க வாங்க...
என்ன செய்வது!..
பதிலளிநீக்குகாலத்தைக் கலியின் கையில் ஒப்புவித்தாயிற்று..
குழந்தையைப் பெற்றுத் தொட்டிலில் இட்டு ஆட்டித்
தூங்க வைப்பதற்கும் இயலாது போயிற்று போல....
//காலத்தைக் கலியின் கையில் ஒப்புவித்தாயிற்று..//
நீக்குகடவுள் செய்த குற்றமடி!
@ Geetha Sambasivam Said
பதிலளிநீக்கு>>> தி/கீதா உடல் நலம் தேறி வரவும் பிரார்த்தனைகள். விரைவில் கணினியை இயக்கும் அளவுக்கு அவர் வலக்கை திடமாக ஆகவும் பிரார்த்திக்கிறேன்..<<<
என்ன ஆயிற்று அவர்களுக்கு?...
அவரது துயர் தீர்ந்து நலம் பெறுவதற்கு வேண்டிக் கொள்கிறேன்...
வலது கையை உயர்த்த முடியவில்லை. வலி. மருத்துவர் இருபது நாட்களுக்கு கணிணிப் பக்கம் செல்லாதே என்று சொல்லி இருக்கிறாராம்.
நீக்குமருத்துவர்களுக்குத் தெரியாது... இவங்கள்லாம் ஸ்ரீஜெயந்தி கொண்டாடறவங்கன்னு. தெரிஞ்சிருந்தால், உப்புச் சீடை, வெல்லச் சீடை, சீயன் இவைகளை அடுத்த ஆறு மாதத்துக்குப் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருப்பார். அவங்க அவங்க என்ன என்ன வேலைகள் செய்யறாங்கன்னு பார்த்து இந்த மருத்துவர்கள் ஆலோசனை சொல்ல மாட்டார்களோ?
நீக்குஇந்த வருஷம் தான் கிச்சாப்பயலுக்கு எதுவுமே பண்ணலையே! :(
நீக்குஒருவருக்கு உடல் நலம் சரியில்லையென்றால் லேசாக விவரங்களைக் கோடி காட்டி தெரியப் படுத்தலாம். விவரங்கள் அற்ற செய்திகள் கவலை கொள்ளச் செய்கிறது அதனால் தான்.
பதிலளிநீக்குஆமாம் ஜீவி ஸார்.. மனதுக்கு கஷ்டமாய்த்தான் இருக்கிறது.
நீக்குவலக்கை வலி என்ற அளவிலே தான் எனக்குத் தெரியும். அதை மட்டும் சொன்னேன். ஸ்பான்டிலிடிஸ் வலி என்றார். மற்ற விபரங்கள் ஏதும் தெரியாது. :)
நீக்குவீரமணியின் அன்பிற்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி DD
நீக்குஅனைவருக்கும் வணக்கங்கள் வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குபுதுமாதிரி தன் குழந்தைக்கு தொட்டில் அமைத்து தன் குழந்தையை தூங்க வைத்து இருக்கிறார்.
பதிலளிநீக்குசில குழந்தைகள் தன் அம்மாவின் முகம் பார்த்துக் கொண்டு தான் தூங்கும். அம்மா ஆட்டும் முறைக்கும் வேறு யாரும் ஆட்டும் முறைக்கும் தெரிந்து வைத்து இருக்கும். என் தங்கை பேரன் என் தங்கை ஆட்டினால்தான் தூங்குவான். வேறு யாரும் ஆட்டினால் விழித்துக் கொண்டு அழுவான்.
குழந்தை பிறந்தவுடன் பழக்கி இருந்தால் வீரமணிஅவர்களுக்கு தொட்டில் ஆட்டும் வேலை மிச்சம்.
என் இளைய மகனும் அம்மா தூளி ஆட்டினால்தான் தூங்குவான். பாஸுக்கு கை ஓய்ந்துபோகும். அசைவு மாறாமல் மெதுவாய் நான் வாங்குவேன். ஆனால் எப்படியோ தெரிந்து கொண்டு தூளியை விலக்கிப்பார்த்து துள்ளித் துள்ளி அழுவான்!
நீக்குஅதே, அதே, நம்ம வீட்டிலும்! எங்க அப்புவுக்கு முகம் பார்க்கும் முன்னரே என் கை பட்டால் அழுகை நிற்கும். அவ அம்மாவால் கூட சமாதானம் செய்ய முடியாமல் இருக்கையில் நான் போய்த் தொட்டால் போதும். அழுகையை நிறுத்துவாள். :) எங்க பையரும் என்னைத் தவிர யாரும் அவரைத் தொட விட மாட்டார். அவங்க அப்பாவிடம் கூட விபரம் தெரிந்து தான் போக ஆரம்பித்தார். அதுவும் நம்ம ரங்க்ஸ் அதுக்காகவே சைகிளில் வைத்துச் சுற்றிக் காட்டி அழைத்துச் செல்வார்.
நீக்குகீதா ரெங்கன் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய செய்தி சிறப்பாக இருந்தது. வீரமணி அவர்களின் கண்டு பிடிப்பு பாராடுதற்குரியது. அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவருக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசகோதரி கீதா ரெங்கன் அவர்களுக்கு என்னவாயிற்று? ஏதோ பயணத்தில் இருப்பதாக மூன்று நாட்களுக்கு முன்பு இங்கு படித்தேன். இன்று வலக்கை வலி.. தூக்க இயலவில்லை என்றதும், மனதுக்கு கஸ்டமாக உள்ளது. என்னவாயிற்று? அவர் விரைவில் பூரண நலம் பெற்று வர இறைவனை பிரார்த்திக்கிறேன். அவருடன் வாட்சப் பயன்பாடு உள்ளவர்கள் அவரை நான் மிகவும் கேட்டதாகக் கூறவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அவரே பார்ப்பார் என்று நம்புகிறேன் கமலா அக்கா... பின்னூட்டங்கள்தான் கொடுப்பதில்லை. எனினும் நானும் அவரிடம் சொல்கிறேன்.
நீக்குஅவரிடமும் நான் மிகவும் கேட்டதாக சொல்வதை "சொல்கிறேன் என்றமைக்கு" மிக்க நன்றிகள் சகோதரரே.
நீக்குகுழந்தைகளைத் தூளியில் தூங்க்ச் வைப்பதைத் தவிர்க்கலாம். தூளியில் ஒடுங்கித் தூங்கும் பழக்கம் கொள்வதால் கால்-கை வளர்ச்சி குன்றலாம்.
பதிலளிநீக்குஅப்படியா... அந்தக்காலத்தில் தூளியில்தானே பழக்கப்பட்டார்கள் குழந்தைகள் எல்லோருமே?
நீக்குதாய் வயிற்றில் இருக்கும் உணர்வு போல் தெரியும் என்பார்கள் தூளியில் போடுவதை! எங்க பெரிய பேத்தியை அம்பேரிக்காவில் குழந்தைகளுக்கென இருக்கும் க்ரிப் எனப்படும் மரத் தொட்டிலில் தான் படுக்க வைத்திருந்து பழக்கி இருந்தார்கள். இங்கே இந்தியா வந்ததும் தூளி கட்டிப் போட்டு அதற்குள் தூங்க வைத்தோம். குழந்தை ஆறு மணி நேரம் இடைவிடாமல் தூங்கினாள். எங்க பெண்ணுக்கும் அவள் மாமியாருக்கும் ஆச்சரியம்! அதன் பின்னரும் இங்கே இருக்கும்வரை தூளியில் நன்றாகத் தூங்குவாள். குளிருக்கும் அடக்கம். வெயிலுக்கும் சுகம். தூளி முண்டு என அதற்கென வெள்ளைத் துணியே விற்கும். அதைத் தான் எங்க குழந்தைகளுக்கெல்லாம் தூளியாகக் கட்டி இருந்தோம். மேலே வண்ணக்கட்டைகள் போட்டு அதிலிருந்து தொங்கும் சக்கரவட்டமாய்ச் சுழலும் பொம்மைகள். எல்லாம் மர பொம்மைகள். ப்ளாஸ்டிக்கோ, உலோகமோ கிடையாது. பலூனெல்லாம் கட்ட மாட்டோம்.
நீக்குஎங்க பையர் உயரம் பார்த்தீங்க இல்லையா ஶ்ரீராம்? தூளியில் தான் 2 வயது வரை தூங்கினார். பின்னர் அவராகவே கீழே இறங்கி வந்து பக்கத்தில் படுத்துப்பார்.:))))
நீக்குதமிழ்நாட்டில் இன்னமும் இந்தப் பழக்கம் வரலைனு நினைக்கிறேன்,.வடமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பிறந்த குழந்தையைத் தலை மட்டும் தெரியும்படி வைத்துவிட்டுக் கைகள், கால்கள் எல்லாவற்றையும் சேர்த்துச் சுருட்டித் துணியால் மூடிக் கொண்டு வந்து கொடுப்பார்கள். பிறந்த குழந்தையை நாம் நேரடியாகத் தொடக் கூடாது என்னும் காரணம் மட்டுமின்றி அதற்குத் தாய் வயிற்றை விட்டு வெளியே வந்து வெளி உலகைப் பார்ப்பது புதுசாக இருக்கும் என்பதால் தாய் மடி போன்ற உணர்வையும் அது தருமாம்.
நீக்குகுழந்தைகளுக்குத் தொட்டில் தான் மாமியார் வீட்டில். தூளி
நீக்குஅனுமதி கிடையாது. அம்மா வீட்டில் குழந்தைகள் நிம்மதியாகத் தூங்கும்.
மாமியாரும் குழந்தைகளை இந்த ஊரில் இருப்பது போல நன்றாகதுணியில் சுற்றி
பக்கத்தில் திண்டு வைத்து விடுவார் ஆறு மாதம் வரை.
பின்னாட்களில் குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு இரண்டு மரத்துக்கு நடுவில் பெட்ஷீட்டால் ஹாம்மக் செய்து விளையாடச் சொல்வேன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநானும் மூன்று நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை அன்று புதன் கேள்வி பதிலில் கொசுவின் அட்டகாசங்கள் பற்றி பதிலிட்டு விட்டு போனவள்தான். அந்த கொசுக்களின் உபத்திரவத்தாலோ என்னவோ, என் மகளின் குழந்தைக்கு (என் பேத்தி) மூன்று நாட்களாக நல்ல ஜுரம். குழந்தை ரொம்ப சிரமப்பட்டு விட்டாள். இன்றுதான் ஜுரம் குறைந்துள்ளது. மூன்று நாட்களாக அன்ன ஆகாரம் எதுவும் பிடிக்கவில்லை. அதனால் நானும் பின்னூட்டங்கள் எவருக்கும் தர இயலவில்லை. இப்போதுதான் சற்று மன நிம்மதியுடன் வலைப்பக்கம் வருகிறேன்.
தாங்கள் கூறியபடி இந்த மாதம் அனைவரையும் படுத்தும் மாதமாக இருந்து விட்டது.அனைவரும் நலமுடன் நோய் நொடியின்றி உடம்பு படுத்தாமல் ஆரோக்கியமாக இருந்தாலே அதுவே பெரிய செல்வம். அதற்கு அனைவருக்காகவும் கடவுளிடம் மனமாற பிரார்த்திக்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலா ஹரிஹரன், உங்கள் பேத்தி மற்றும் உங்கள் குடும்பத்தார் அனைவரின் உடல் நலனுக்காகவும் பிரார்த்திக்கிறோம்.
நீக்குநன்றி சகோதரி.
நீக்குபேத்தி உடல் நலம் பெற்று இருப்பாள் என்று நினைக்கிறேன். காய்ச்சல் இருந்தால் வாய்க்கு எல்லாம் கசப்பாய் இருக்கும் சாப்பிட பிடிக்காது. உடல் நலத்திற்கு வாழ்த்துக்கள். எனக்கும், என் கணவருக்கும் ஊருக்கு போய் வந்த நாள் முதல் உடம்பு முடியவில்லை. இன்று தான் கொஞ்சம் தேவலை. மழையில் நனைந்து விட்டோம் கும்பகோணத்தில்.
நீக்குஅன்பு கமலா, குழந்தைக்கு உடம்பு என்றால் குடும்பமே அவதியுறும்.
நீக்குஇப்பொது குணம் என்றதும் நிம்மதி.
வளமுடன் வாழ்க.
வணக்கம் கோமதி அரசு சகோதரி
நீக்குதற்சமயம் பேத்தி ஜுரம் குறைந்து உடல் நலம் பெற்று விட்டாள். சளி தொந்தரவு தான் அவளுக்கு நிறைய உள்ளது. பருவநிலை மாற்றங்கள், மழை, குளிர் காற்று இதெல்லாம் ஒத்துக் கொள்வதில்லை.
தற்சமயம் தாங்களும் நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். என் பேத்தியின் நலம் பற்றி அன்புடன் விசாரித்தமைக்கு மிகவும் நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் வல்லி சிம்ஹன் சகோதரி
நீக்குஆமாம் சகோதரி. வீட்டில் குழந்தைகளுக்கு உடம்பு முடியவில்லையெனில், நமக்கு வேறு வேலையே ஓட மாட்டேன் என்கிறது. அவர்கள் நலமாக பழையபடி ஆடி ஓடினால்தான் மனதிற்கு நிம்மதியாக உள்ளது. தற்சமயம் ஜுரம் குறைந்து நல்லபடியாகி விட்டாள். தங்கள் அன்புடன் வந்து நலம் விசாரித்தமைக்கு நன்றிகள். எனக்குத்தான் பதிலளிக்க தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநல்ல ஐடியா தான்.
நல்ல ஐடியா தான். புதியதாக முயற்சி செய்திருக்கிறார்... பாராட்டலாம்.
பதிலளிநீக்குமனதில் மிகுந்த பாரத்துடன் இந்தச் செய்தியைப் பகிர்கிறேன். நம் அருமைத் தோழியும் என் உடன் பிறவாத் தங்கையும் ஆன பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் கணவர் திரு வெங்கடேஸ்வரன் மிகுந்த போராட்டத்துக்குப் பின்னர் இன்று மதியம் காலம் ஆனார் என்னும் செய்தி சற்றுமுன் கிடைக்கப் பெற்றேன். பானுமதி அவர் கணவரிடம் எவ்வளவு நெருக்கம் என்பதை நான் பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். பொருத்தமான தம்பதிகள்! பானுமதி விரைவில் தன் இந்த இழப்பில் இருந்து மீண்டு வெளி வர எங்கள் பிரார்த்தனைகளும்.
பதிலளிநீக்குஐயோ சகோதரி.. படிக்கும் போதே மனதை என்னமோ செய்கிறதே. துக்கம் மிகுந்து கண்களில் கண்ணீருடன் படிக்கிறேன். சகோதரி பானுமதி அவர்களுக்கு ஏன் இத்தனை சோதனை? எப்படி தேறுதல்கள் சொல்வது என்று கூட தெரியவில்லையே!
நீக்குஇப்போதான் இந்தச் செய்தியை இங்கு பார்க்கிறேன். பானுமதி வெங்கடேச்வரன் மேடத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
நீக்குஇந்த சோகச் செய்தியை கீதா சாம்பசிவம் அவர்களின் பக்கங்களில் பார்த்துவிட்டு இங்கே வருகிறேன். திருமதி பானுமதி அவர்களுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் துக்கத்தைத் தாங்கிக்கொண்டு மீண்டுவரும் சக்தியை இறைவன் அருள்வானாக.
நீக்குதிரு. வெங்கடேஸ்வரன் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும் அவனருள் கிட்டட்டும்.
செய்தி படித்து மிகவும் வேதனை அடைந்தேன்.
பதிலளிநீக்குஅவர்களிடம் வாட்ஸ் அப்பில் பேசிக் கொண்டு இருந்தேன்.
ஒரு வாரமாய் பேசவில்லை. அவர் உடல் நலம் பெற்று வந்து விடுவார் மருத்துவமனையிலிருந்து என்று நினைத்து இருந்தேண்.
இப்படி ஆகி விட்டதே.
இறைவன் அவர்கள் குடும்பத்தினருக்கும் பானுமதிக்கும் மன ஆறுதலை தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
பத்து நாட்கள் படாத பாடு பட்டு விட்டார் திரு வெங்கடேஸ்வரன். பானு மாவை நினைக்கையில் கலக்கமாகத் தான் இருக்கிறது. மிக அன்பான பெண்மணி.
பதிலளிநீக்குஇறைவன் தான் தேற்ற வேண்டும்.பிரார்த்தனைகள்.
மிகவும் வருத்தமும் அதிர்ச்சியுமான செய்தி :(
பதிலளிநீக்குஇக்கட்டான இச்சூழலில் இறைவன் துணை இருக்கவும் பானுக்காவிற்காகவும் பிரார்த்தனைகள் ஏறெடுக்கின்றேன்
மிகவும் வருத்தமான செய்தி. எவ்வளவோ நம்பிக்கையுடன் இருந்தோம். இந்த சோதனையான நேரத்தைத் தாங்கும் வலிமையை பானு அக்காவுக்கும் மற்றும் அவர் குடும்பத்துக்கு இறைவன் அருளவேண்டும். மறைந்த திரு வெங்கடேஸ்வரன் அவர்கள் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஅதிர்ச்சியான செய்தி...
பதிலளிநீக்குமிகவும் வருந்துகிறேன் அம்மா...
இந்த வேதனையைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும் மற்றும் அவர் குடும்பத்தினருக்கும் இறைவன் தந்தருளவேண்டும்.
பதிலளிநீக்குஸ்ரீ வெங்கடேஸ்வரன் அவர்கள் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் கலந்திருப்பதாக..
அருமையான கண்டுபிடிப்பு
பதிலளிநீக்குபாராட்டுகள்