திங்கள், 6 ஜனவரி, 2020

'திங்க'க்கிழமை : ப்ரோக்கோலி, பேபி கார்ன் சூப் - கீதா ரெங்கன் ரெஸிப்பி 



ப்ரோக்கோலி, பேபி கார்ன் சூப்


வணக்கம் வணக்கம் எபி கிச்சன் பிரியர்களுக்கு!.  எபி கிச்சனுக்கு வந்து பல நாட்கள் ஆகிவிட்டது.  புதிய கணினி மாற்ற வேண்டிய சூழல் என்பதால் நான் மீண்டும் முழுமையாகத் தளம் வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.  இப்போதைக்கு எபி கிச்சன் வழியாக இந்தப் பதிவு. 

இது சொல்லும் அளவிற்கான பெரிய ரெசிப்பியும் இல்லைதான். இருந்தாலும் நான் இப்படி சும்மா ஏதேனும் செய்வதுண்டு. 

சென்னையில் 4 நாட்கள் இருக்கும் சமயத்தில் மைத்துனரின் வீட்டில் இருக்கும் கணினியில் பதிவை எழுதுவதால் வழக்கமாக நான் பயன்படுத்தும் சில பயன்பாடுகள் இல்லாததாலும்- குறிப்பாகத் தமிழ் செயலி, வெளியிட இருந்த அப்கானி நாண், கார்லிக் நாண், பனீர் அப்கானி, ஆப்பிள் டார்ட்போன்ற கொஞ்சம் ப்ராஸஸ் செய்முறைகள் பழுதான கணினி ஹார்ட் டிஸ்கில் மாட்டிக் கொண்டிருப்பதாலும் தர இயலவில்லை. வெளியூர் சென்றிருக்கும் கனினி டாக்டர் என் மற்றொரு மைத்துனர் ஊர் திரும்பிய பிறகுதான் அவற்றை காப்பி செய்ய முடியும் என்பதால் இப்போதைக்கு என் மொபைலில் எடுத்த சில படங்களுடன் - ஸ்டெப் பை ஸ்டெப்  இல்லை என்றாலும் - பதிவை ஸ்ரீராமுக்கு அனுப்பி இதோ எபி கிச்சனில் தலை காட்டியாச்சு. 

எனவே யாரையும் வம்புக்கு இழுக்காமல் குறிப்பாக பனியில் குவில்டில் புதைந்து கொண்டு ஒற்றைக் கண் போட்டு இங்கு எட்டிப் பார்க்கும் தியாகத் திலகம் அவர்களை வம்புக்கு இழுக்காமல் நல்ல பிள்ளையாகச் சொல்லிவிட்டுப் போகிறேன். (ஆமா தியாகத் திலகம்னு பட்டம் யாரு கொடுத்தாங்க? என்ன தியாகம் செய்தாங்க?!! ஏஞ்சல் விளக்கம் ப்ளீஸ்!!!!!!!! ஹா ஹா ஹா)

சரி செய்முறைக்குச் செல்வோம்.  வந்த விருந்தினரின் விருப்பத்திற்குச்  செய்யப்பட்டது. அதாவது சூப் ரொம்ப லைட்டாக இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக  இருக்க விருப்பம் தெரிவித்ததால்  சோள மாவு எதுவும் கரைத்து விடாமலேயே கொஞ்சம் 'திக்'காக செய்யப்பட்ட சூப்.

மிகச்  சிறிய ப்ரோக்கோலி  1
5, 6 பேபி கார்ன் 
4 ரொட்டிகள்
2 பிரிஞ்சி இலை
சிறிய துண்டு பட்டை (படத்தில் உள்ளது போல்)
இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணை
தக்காளி 2
பெரிய வெங்காயம் ஒன்று
பூண்டுப் பற்கள் 4, 5
மிளகுத் தூள் சுவைக்கேற்ப 
உப்பு தேவையான அளவு

பொதுவாக, சில சூப்பிற்கு, குறிப்பாகத் தக்காளி சூப்பிற்கு ரொட்டித் துண்டுகளை எண்ணெயில்/வெண்ணையில்  வறுத்து, பரிமாறும் போது மேலே போட்டுக் கொடுப்பது வழக்கம்.  இப்படியான காய்கறிகளில் செய்யும் சூப்பிற்குத் தேவை இல்லை என்றாலும் வந்தவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பொரிக்காமல் ரொட்டி வாட்டும் கல்லில் போட்டு கொஞ்சமே கொஞ்சம் வெண்ணை போட்டு மொறு மொறுப்பாக வாட்டி துண்டுகளாக்கி வைத்துக் கொண்டேன். 

கொலாஜ் 1

ப்ரோக்கோலியை உதிர்த்து கொஞ்சம் சூடு தண்ணீரில் போட்டு கன்றாகக் கழுவிக் கொள்ளவும். புழுக்கள் இருந்தாலும் வந்துவிடும். கவனமாக ஆய்ந்து விடவும். பூக்களைச் சிறியதாகக் கட் செய்து கொள்ளவும்.

பேபி கார்னை சிறிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். (கொலாஜ் 1ல் படம் 1)

இவ்விரண்டையும் அடி கனமான பாத்திரத்தில் அல்லது வாணலியில் சிறிது வதக்கி விட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வேக வைக்கவும். (இதற்கான படம் இல்லை) இல்லை என்றால் குக்கரில் ஆவியில் அவித்தும் செய்யலாம். உங்கள் விருப்பம். அப்படிச் செய்தால் பின்னர் சூப்பிற்குத் தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீருடன் கொதிக்க வைத்தால் அப்படியே சூப்பில் சேர்த்துவிடலாம். 

வெங்காயத்தைப் பெரிய துண்டுகளாக கட் செய்து தக்காளி வெங்காயம் பூண்டு இவற்றையும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்தால் போதும். (கொலாஜ் 1ல் இரண்டாவது படம் )

கொலாஜ் 2
ஆறியதும் ப்ரிஞ்சி இலை, பட்டை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். (கொலாஜ் 2ல் பிரெட் துண்டுகளுடன் பிரிஞ்சி இலையும், பட்டைத் துண்டுகளும். படம் 1. நடுவில் உள்ள படத்தில் மேலே இருப்பது தக்காளி, பூண்டு, வெங்காயம் வைத்தது. கீழே இருப்பது வெந்த ப்ரோக்கோலி, பேபி கார்ன்) 

வாணலியில்  அரை  ஸ்பூன் வெண்ணை போட்டு அதில் அரைத்ததை போட்டு கொஞ்சமே கொஞ்சம் புரட்டிவிட்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் (கொலாஜ் 2ல் படங்கள் 3, 4, 5)  


கொலாஜ் 3
வெந்து, எடுத்து வைத்திருக்கும் ப்ரோக்கோலி, பேபிகார்ன் அதே தண்ணீருடன் சேர்த்து மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சிம்மில் வைத்து சூடு செய்ய வேண்டும். தேவையான உப்பைச் சேர்க்கவும். (கொலாஜ் 3ல் படம் 1, 2, 3.)  ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணை மற்றும் மிளகுத் தூளைச் சேர்த்து சிம்மில் வைத்துச் சூடு செய்ய வேண்டும். குழம்பு போல் கொதிக்க விட வேண்டாம். சூப் ரெடி.  (கொலாஜ் 3ல் படம் 4.)

பரிமாறும் போது சில ப்ரெட் துண்டுகள், விரும்பினால், மேலே  போட்டு பரிமாறலாம்.  இங்கு படத்தில் அதிகம் ப்ரெட் துண்டுகள் உள்ளன. இது வந்தவர்கள் விரும்பியதால். (கொலாஜ் 3ல் படம் 5) (ஆ!! இது ரயிலில் கிடைக்கும் சூப்பில் போடப்படும் ப்ரெட் துண்டுகள் போல இருக்கேன்னு தோணுதுதானே உங்களுக்கு?!!!!!!!ஹிஹிஹி.....மீ எஸ்கேப்.)

படத்தில் சூப் கொஞ்சம் கெட்டியாக இருப்பது போல் இருக்கலாம். பொதுவாக ஹோட்டல்களில் கிடைக்கும் சூப்பில் காய் சூப்பில் கூட காய்களை மைக்ரோஸ்கோப் கொண்டு தேட வேண்டும்.  சோள மாவு அதிகம் கரைத்து விட்டுச் செய்வார்கள். அதுதான் அதில் பெரும்பான்மையாக இருக்கும். 

நம் வீட்டில் காய்கள் அதிகம்  சேர்ப்பதால் குழம்பு போல படத்தில் தோன்றலாம். ஆனால் எடுத்துச் சாப்பிடும் போது சரியான பதத்தில்தான் இருக்கும். நல்ல சுவையாகவும் இருக்கும். இப்படி நிறைய வகை சூப் நம் கற்பனைக்கேற்ப செய்யலாம். க்ளியர் சூப்பும் செய்யலாம். இதையே தால் சூப் அதாவது பருப்பு சேர்த்த  சூப்பாகவும் செய்யலாம்...பருப்புத் தண்ணீர் மட்டும் விட்டு. வேறு காய்களிலும் செய்யலாம். விதம் விதமாக. க்ரீம் போட்டும் செய்யலாம். )



ஹூம் சாம்பார் போல செஞ்சுட்டு சூப்னு சொல்றாங்களே எங்க அம்மான்னு எங்கள் வீட்டு அழகிகள் கலாய்க்கறாங்கப்பா! (பூசார் - எங்கள் வீட்டு க்ளோயி. அடுத்து இருப்பவள் உங்கள் எல்லோருக்கும் தெரியுமே. எங்கள் கண்ணழகி!  ஆ!!!! நானே சாம்பார் போலன்னு சொல்லி எல்லார்ட்டயும் மாட்டிக்கிட்டேனோ!!!!!! ஸ்ரீராம் ஏதாவது சொல்லி என்னைக் காப்பாத்துங்க!! நீங்கதானே எபி கிச்சன் டைரக்டர்!!) ஸ்ரீராம்  மற்றும் எபி ஆசிரியர்கள், நட்புகள், பார்வையாளர்கள்  அனைவருக்கும் மிக்க நன்றி.

82 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்று வைகுண்ட ஏகாதசித் திருநாளில் விரதம் இருக்கும் அனைவருக்கும் உடல் பலமும் மனோபலமும் கொடுக்கும்படி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்8க்க நன்றி ஸ்ரீராம்....இன்னிக்கு திங்க மறந்தே போச்சு.... வல்லிம்மா நன்றி...அவங்க சொன்னதும் தான் நினைவு வந்துச்சு...

      கீதா

      நீக்கு
  3. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  4. ஆகா..
    வெகு நாட்களுக்குப் பிறகு கீதா அவர்களது சமையற் குறிப்பு...

    பதிலளிநீக்கு
  5. சூப்புக்கு வெள்ளை சாஸ் சேர்க்க மாட்டீங்களா? நான் சோள மாவெல்லாம் விட்டதில்லை. வெஜிடபுள் ஸ்டாக் எடுத்துக் கொண்டு (சூப்பில்காய்கள் தெரியாது) அதோடு வெள்ளை சாஸ் சேர்த்து க்ரீம் போட்டு ப்ரெட் துண்டுகள் போட்டுப் பரிமாறுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளை சாஸ்லாம் என்னன்னே தெரியாது. மகளுக்குத் தெரியுமாயிருக்கும்

      நீக்கு
    2. கீதாக்கா வெள்ளை சாஸ், சோள மாவு எல்லாம் கிட்டத்தட்ட ஒண்ணுதான்....நான் பெரும்பாலும் ரெண்டுமே சேர்க்காம நம் வீட்டில் சாதம் வடித்த செய்வதால் அந்தக் கஞி கூட சேர்ப்பதுண்டு. கஞ்சி யிலும் சூப் செய்யலாம். செமையா இருக்கும்...வெள்ளை சாஸ் மைதா , பால், வெண்ணெய் வெ மிளகு.பொடி.உப்பு....கொஞ்சம்.....சோள மாவிலும் அப்படி செய்யலாம்...சுவை வித்தியாசம் இல்லை.

      க்ரீம் சேர்க்கலாம்..ரிச் சூப். ராயல் சூப் முந்திரி பாதாம் பொடித்தோ துண்டாகவோ...சூப் ஸ்டிக் கூட கடித்துக் கொள்ளலாம்..நீங்க சொல்லிருப்பது போல வெஜ் ஸ்டா க் எடுத்தும் செய்யலாம்....அவரவர் விருப்பம்....ப்ளஸ் அவரவர் கற்பனைக்கேற்ப புகுந்து விளையாடலாம்...

      மிக்க நன்றி கீதாக்கா..

      கீதா

      நீக்கு
    3. @தி/கீதா, நான் ஆல் பர்பஸ் மாவில் ஒயிட் சாஸ் பண்ணி ஒரு பாட்டிலில் வைச்சுப்பேன். எந்தக் காய் சமைச்சாலும் வேக வைத்த நீரைத் தனியாக எடுத்துக் கொண்டு அதில் ஒயிட் சாஸ், மிளகு பொடி, வெண்ணெய், உப்புச் சேர்த்துக் குடிக்கக் கொடுப்பேன். க்ரீம் எப்போதும் வீட்டில் இருக்கும். பால் புதுசாகவே வாங்குவதால் புது க்ரீமாகவே கிடைச்சுடும். இப்போத் தான் அதெல்லாம் நின்னிருக்கு.

      நீக்கு
  6. இங்கே ப்ராக்கோலி வாரா வாரம் உண்டு. சப்பாத்திக்கு அல்லது சாப்பாட்டுக்கு அதோடு உ.கி. சேர்த்து வதக்கிச் சாப்பிடுகிறோம். பச்சையாக சாலடில் போட்டு ஃப்ளைட்டில் கொடுப்பாங்க. அதை விட இந்த வதக்கிச் சாப்பிடுவது நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் புருக்கோலியை உப்பு நீரில் நன்றாக அலசி விட்டு சிறு துண்டுகளாக ஆக்கி முக்கால் அவியலாக அவித்துக் கொள்ளவும்..

      சிறிது மிளகு சீரகத்தைப் பொடி செய்து Salted Butter ல் சற்றே வதக்கி சாப்பிட்டுப் பார்க்கவும்...

      Sweet Corn சேர்க்க வேண்டியதில்லை...

      நீக்கு
    2. ப்ரோக்கோலி மிகவும் நல்லது ஆனால் தைய்ராய்டு உள்ளவர்கள் அதை சாப்பிடுவதை தவிர்த்துவிடவும்

      நீக்கு
    3. கீதாக்கா இப்ப இங்கு சந்தையில் ப்ராக்கோலி நன்றாகக் கிடைக்கிறது. நீங்க சொன்னாப்ல செய்வதுண்டு..நம் வீட்டில் காய் எதுவும் பிடிக்காது என்பது இல்லை..

      ஆம் துரை அண்ணா நல்லா கழுவிட்டு, வெண்ணெய் மிளகு தூள் சேர்த்து செஞ்சா..ஆஹா...பிரெட் சான்விச், சப்பாத்தி ரோல்...

      மதுரை...இது மட்டுமில்ல கோஸ், காலிப்ளவர் உம் லிஸ்டில் உண்டு.

      மிக்க நன்றி கீதாக்கா, துரை அண்ணா, மதுரை..

      கீதா

      நீக்கு
    4. ஆமாம், மருமகள் காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், ப்ராக்கோலி சாப்பிடுவதில்லை! :( இத்தனைக்கும் ஒரு முன்னெச்சரிக்கை தான்.

      நீக்கு
  7. ஒரு முறை ஒருவார டயட்டிங்கைக் கடைப்பிடித்தப்போ ஒரு நாள் மதிய ஆகாரத்துக்கு சூப் தான் உணவு. அதில் சுமார் அரைக்கிலோ காய்கள் போட வேண்டி இருந்தது! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டயட்டுங்கறீங்க. அரைக்கிலோ காய்கறின்றீங்க. ஒன்னும் புர்யல கீசா மேடம்.

      மாலை வணக்கம். ஹா ஹா ஹா

      நீக்கு
    2. கீதாக்கா ஆம் அதே. நாங்களும் சூப் மட்டும் சாப்பிடுவதுண்டு...இரவில்...அல்லது மதியம்...இப்ப மகன் அங்கு அப்படித்தான்....

      நெல்லை கற்ற்ற்ற்ற்றரர்...டயட்டில் காய் பிரச்சினை இல்லையே...அதுதானே அதில்...

      கீதா

      நீக்கு
    3. ஆமாம், நெல்லைத்தமிழரே, அரைக்கிலோ காய்களையும் வேக வைத்து சூப் எடுக்கணும். இது இயல்பாகவே கெட்டியாக வரும். அன்றைக்கு அதான் சாப்பாடு.

      நீக்கு
  8. சூப்பையே மதிய ஆகாரமாகப் பிள்ளை, மாட்டுப்பெண் இருவரும் சாப்பிடுவார்கள். நாங்க எங்களுக்குத் தனியாச் சமைச்சுப்போம். நீங்க இதிலே பூண்டு போடலைனு நினைக்கிறேன். இருங்க மேலே போய்ப் பார்த்துட்டு வரேன். போட்டிருக்கீங்க கொஞ்சமா! இங்கே இவங்க பூண்டு நிறையச் சேர்ப்பாங்க. எங்களுக்கு ஒத்துக்கறதில்லை. அதனாலும் சூப் அதிகம் சாப்பிடுவதில்லை.

    பதிலளிநீக்கு
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் DD.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்கறேன்

      நீக்கு
    2. டிடி எல்லா நலமும் பெற்று மகிழ்வோடு வாழ்ந்திட இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

      கீதா

      நீக்கு
    3. ஓ இன்று டிடி க்குப் பிறந்தநாளோ...

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

      நீக்கு
    4. நானும் வாழ்த்துகின்றேன் .இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ டிடி 

      நீக்கு
  10. இவ்வருடத்தின் முதல் சமையல் குறிப்பு...

    சத்து மிகுந்து நன்மையளிக்கட்டும்...
    ஹரி நாராயண...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? எனக்கு ப்ராக்கோலி பிடிக்காது. பட்டை சோம்பு பிடிக்காது. பொரிக்காத ப்ரெட் பிடிக்காது. பூண்டு பிடிக்காது. இன்னும் பல மசாலாக்கள் பிடிக்காது.

      எல்லாத்தையும் விலக்கிவிட்டுச் செய்து பார்த்தால் வெந்நீர் மட்டும்தானே மிஞ்சும்?

      நீக்கு
    2. ஹை துரை அண்ணா....ஆமாம் ல...சந்தோஷம் பொயிங்கு தே...

      மிக்க நன்றி அண்ணா

      நெல்லை கற்றற்றற்றற்றரர்...கண்ணை மூடிட்டு சாப்பிடுப் பாருங்க...ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    3. நெல்லை மசாலா பூடு இல்லாமலும் செய்யலாம்...இது விருப்பத்திற்கேற்ப செய்யப்பது...தக்காளி வெங்காயம் வெண்ணைல வதக்கி சூப் டேஸ்ட் எப்படி இருக்கும் தெரியுமா....ஹூம்...
      ஹிஹிஹி
      மிக்க நன்றி நெல்லை...

      Geethaa

      நீக்கு
  11. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  12. நீண்ட நாட்களுக்குப்பிறகு கீதா ரங்கன் வருகை. வருக வருக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க வந்தாங்க கீதா ரங்கன்? போஸ்ட்ல செய்முறை அனுப்பியிருக்காங்க. கணிணி சரியாக சில பல மாதங்களாகுமாமே!

      இனிமே மாதம் ஒருதடவை பிரயாணம் செய்து எங்க வீட்டு கணிணில எழுதி அனுப்பச் சொல்ல வேண்டியதுதான்

      நீக்கு
    2. வந்திட்டேன் பானுக்கா...பதில் சொல்ல...

      நெல்லை ஹாஹாஹாஹா..செமையா சிரிச்சுட்டேன்...வந்துட்டா போச்சு...உக வீட்டுக்கு....நான் சொல்றது மெனுதான் சமைக்கணும் ஒகேயா...ஹாஹாஹா...
      நன்றி நெல்லை..

      கீதா

      நீக்கு
    3. ///இனிமே மாதம் ஒருதடவை பிரயாணம் செய்து எங்க வீட்டு கணிணில எழுதி அனுப்பச் சொல்ல வேண்டியதுதான்////

      கர்ர்ர்ர்ர்ர் என்னுடைய லப்ரொப்பை வச்சிருங்கோ எனச் சொல்லாமல்... வீட்டுக்கு வரச்சொல்றார், இனி வரும்போது விதம் விதமான பாயாசமும் கொண்டுவரச் சொல்லுவார் கீதா உஷாராகிடுங்கோ ஜொல்லிட்டேன்:)...

      நீக்கு
    4. //நான் சொல்றது மெனுதான் சமைக்கணும் //- ஏதோ..என்னையும் சமையல் நிபுணன்(ஹாஹா) என்று கனவு கண்டுகொண்டிருப்பவர்களையும், உண்மையைச் சொல்லி என் பேரிஅக் கெடுக்கவா? இனி ஜாக்கிரதையாத்தான் இருப்பேன்.

      அதிரா - 'இனி வரும்போது வித விதமான பாயசம்' - அட இது நல்ல யோசனையாயிருக்கே. கீதா ரங்கன் வந்தாங்கன்னா, நமக்கு பாயசம் வரவு... எதுக்கு ஒவ்வொரு தடவையும் மெனெக்கெட்டு இனிப்பு செய்துகொண்டு போகணும்னு நினைச்சாங்கன்னா வருவதை நிறுத்திடுவாங்க.

      நீக்கு
  13. பூவை புஸ்பம்னு சொல்லலாம், பூன்னும் சொல்லலாம்.

    சூப்பா இருந்தால் என்ன சாம்பாரா இருந்தால் என்ன.. எபில வந்துட்டீங்களே அது போதாதா?

    என்ன ஒண்ணு.. பட்டை சோம்பு பூண்டோட சாம்பார் நினைப்புதான் பிடிக்கலை ஹா ஹா

    பதிலளிநீக்கு
  14. OS : Windows 10 - வரும் 14 தேதிக்குள் மாற்றுவது நல்லது...

    https://www.microsoft.com/en-in/windows/windows-7-end-of-life-support-information

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறந்த நாள் வாழ்த்துகள் அன்பு தனபாலன்.
      நீங்க சொல்லி இருப்பது கணினிக்கா.
      மகனிடம் கேட்டுக் கொள்கிறேன்.

      நீக்கு
    2. யெஸ் டிடி... நம்ம வீட்டுல எல்லார்ட்டையும் ஏற்கனவே வி 10 தான்
      வைச்சுறுக்கங்க..நானும் சமீபத்துல சென்னை போனப்ப அதுலதான் இந்த குறிப்பை அடிச்சு...பெயின்ட் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்...நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  15. பிறந்த நாள் வாழ்த்துக்கள் டி.டி. உங்களுக்கு நிறைந்த ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், வெற்றியையும் தர ஈறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. சூப் நன்றாக இருக்கிறது. இதே முறையில் காலிஃப்ளவரை (காலிப்பூ என்றால் நன்றாக இல்லை)வைத்தும் செய்யலாம் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானுக்கா

      சிலது எல்லாம் அந்தந்த மொழியில் சொல்றதுதான் அழகு இல்லையக்கா.

      காலிஃளவர், கோஸ்..இங்கிலீஷ் காய்களில் செய்யலாம் அக்கா. மசாலா சேர்க்காமல், தக்காளி, வெங்காயம் ஸ்தீம் செய்து தக்காளி தோல் எடுத்து விட்டு வெண்ணையில் வதக்கி அரைத்து செய்யலாம் அக்கா..

      Gethaa

      நீக்கு
  17. @கீதா அமெரிக்காவில் இந்தியன் ஹோட்டல்களில் அதுவும் நார்த் இண்டியண் ஹோட்டல்களில் பல நேரங்களில் சூப்பு என்று ஃப்பேயில் வைத்திருப்பது சூப்பு அல்ல நாம் வைக்கும் ரசம்தான் அது.... அவர்களிடம் உங்களுடைய இன்றைய சாம்பாரை அறிமுகப் படுத்தினால் அதையும் சூப்பு என்று பிரபலபடுத்திவிடுவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா செமையா சிரிச்சுட்டேன் மதுரை...ப்ளீஸ் பிரபலாப்படுத்துங்க...மார்க்கெட்டிங் கு தேம்ஸ் காரங்ககிட்ட கமிஷன் வாங்கிக்கோங்க...😊😊😊😊

      இங்கும் கூட சில இடங்களில் விருந்துகளில் அப்படித்தான்..

      Nantri மதுரை..

      கீதா

      நீக்கு
  18. இது நெல்லைத்தமிழன் அவர்களுக்கு. அரிசி வடித்த கஞ்சி கொஞ்சம் நீர்க்க எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் ketchup அல்லது தக்காளி சாஸ் கொஞ்சம் கரைத்துக்கொள்ளுங்கள். வேண்டுமென்றால் இஞ்சி விழுது சேர்த்துக்கொள்ளுங்கள். வெண்ணை இருந்தால் 2 ஸ்பூன், அல்லது நெய் கொஞ்சம் விட்டு சூடு செய்து கொஞ்சம் மிளகுத்தூள் உப்பு தூவி பரிமாறுங்கள். சுவைக்கு gheerusk உடைத்து சேர்க்கலாம். அல்லது பிரெட் துண்டங்கள் நெய்யில் பொரித்து சேர்க்கலாம். இந்த கஞ்சியில் கெட்சப் தான் ட்ரெயினில் சூப் என்று கொடுக்கிறார்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட.. இது கன்வின்சிங் ஆக இருக்கே. செய்துவிடுகிறேன். நன்றி ஜெயக்குமார் சார். நான் எங்குமே சூப் சாப்பிடுவதில்லை. முன்பெல்லாம் பிஸினெஸ் மீட்டிங்கில் சாப்பிடுவது போல நடிப்பேன்.

      அது சரி.. கஞ்சி எங்க வடிக்கிறேன்.. குக்கர் சாதம் வந்த பிறகு கஞ்சி வடிப்பதுபோல அரிசியை ஜலத்தில் கொதிக்க வைத்து சாதமாக்குவது மிக மிக அபூர்வமே

      நீக்கு
    2. ஜெகே அண்ணா...அதே அதே...நான் மேலே கீதாக்கா vukku சொல்லிட்டு vanthaa நீங்களும் சொல்லிருக்கீங்க..

      இந்த கஞ்சிய உப்பு ஜீரகம் நெய் ல தாளிச்சு கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு சாப்பிடலாம் டேஸ்ட் செமையா இருக்கும்...சர்க்கரை அல்லது வெல்லாம் அல்லடு கருppatti சேர்த்து பாட்டி எங்களுக்கு தந்திருக்கங்க..

      மோர் விட்டும் சாப்பிடலாம்...என் அப்பா பிரிட்ஜில் வைத்து சில்லுன்னு சாப்பிடுவார்...
      நன்றி
      கீதா

      நீக்கு
    3. மோரில் சின்ன வெங்காயம் நறுக்கிப் போட்டு வெந்தயத்தை ஊற வைச்சுச் சேர்த்துக் கஞ்சியில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் குடிப்போம். குக்கரில் வைத்த சாதம், பருப்பு நாங்க பயன்படுத்துவதில்லை நெல்லைத்தமிழரே, சாதமோ, பருப்போ நேரடியாக வைப்பது தான். காய்களும் குக்கரில் வைப்பதில்லை. நேரடியாக வேக விடுவது தான். இப்போப் ப்ரெஸ்டிஜ் கம்பெனிக்காரங்க கஞ்சி வடிக்கும் குக்கரை அறிமுகம் செய்திருக்காங்க!

      நீக்கு
  19. அனைவருக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகள். கீதாவின் சூப் குறிப்பு
    அதி சுவை. கீதா மா,
    பல மாதங்களாகுமா வலைப்பக்கம் வர. நெல்லைத் தமிழன் சொல்லும்படி செய்து விடுங்கள்.
    ப்ரோக்கலி இங்கே எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    செய்முறையும் படங்களும் சூப்பரோ சூப்பர்.
    நானும் பல காலங்களுக்கு முன்னால் எங்கள் மக்களுக்கு செய்து கொடுத்திருக்கிறேன். மார்கழிக் குளிருக்கு ஏற்ற உணவு.
    வெங்காயம் பூண்டு இங்கே செல்லுபடியாகாது.
    காய்கறிகள் சேர்ப்பது பலன் தரும்.
    அருமையான ரெசிப்பி. நன்றி கீதா ரெங்கன். வாழ்த்துகள்.
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா மிக்க நன்றி...

      வெ.. பூ இல்லாமலும் செய்யலாமே...உங்களுக்குத் தெரியாததா...அம்மா..

      நெல்லை நான் கேக்கும் மெனு செஞ்சா போலாம்..ஹாஹஹாஹா...

      நம் வீட்டிலும் ப்ராக்கோலி விரும்பி சாப்பிடுவாங்க...இங்க நல்லா கிடைக்குது...சந்தைல...

      நன்றி mmaa

      Geethaa

      நீக்கு
  20. @ Nellaiththamizhan MuraLi ma,
    white sauce is easy to make . all purpose flour sauted in butter, and boiled in milk.afterwards add pepper powder and salt to taste.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிம்மா.. நான் சாதம் சாத்துமது சாம்பார் ஜாதி.. இருந்தாலும் இன்னைக்கு எல்லாம் தெரிந்தவனைப் போல என் பெண்ணிடம் ஒயிட் சாஸ் செய்முறை கேட்கிறேன். என் உணவில் ஒயிட் சாஸுக்கு எங்க இடம் இருக்கு ஹா ஹா

      நீக்கு
    2. வொயிட் சாசுக்கு வேலை இருக்கு.நான் சொல்லிக்கொடுத்த கஞ்சி சூப்பில் கஞ்சிக்கு பதில் வொயிட் சாஸ் உபயோகப்படுத்தலாம்

      நீக்கு
    3. நெல்லை வொயிட் சாஸ் நல்லாருக்கும் பிரெஞ்ச் இத்தாலி டிஷஸ்..வெஸ்டர்ன் நாடுகளிலும்.இடம் பெறும்....

      ஜேகே அண்ணா சொல்லிருப்பது போல செஞ்சு பாருங்க...நல்லாருக்கும்ம

      Gee

      கீதா

      நீக்கு
    4. சொல்லிட்டாங்களே, ஒயிட் சாஸ் எப்படிச் செய்யறதுனு! வெண்ணெயில் மாவைப் போட்டு பிஸ்கட் வாசனை வரும் வரை வறுக்கணும். பாலும் நல்ல பாலாக இருக்கணும்.

      நீக்கு
  21. சூப் மிக அருமை.
    செய்முறை படங்கள் அழகு கீதா.

    ப்ரோக்கலி நல்லதாக கிடைக்காது . கிடைத்தால் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா...நல்லதா கிடைச்சா senju paarunga...

      Geethaa

      நீக்கு
  22. உங்களிடமிருந்து பன்னீர் பாயசம் அல்லவா நெத எதிர்பார்த்தார் ப்ரிக்கோலி என்றால் என்ன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா பெங்களூரில் இருந்துகொண்டு பிராக்கோலி என்ன என்று கேட்கிறீர்களே! காலிப்ளவ்ர் மாதிரி பச்சை கலரில் இருக்கும். குறைத்த விலை கிலோ 60ரூ. கூகுளை இமேஜில் பாருங்கள். 

      நீக்கு
    2. ப்ருக்கோலி என்பது காலிஃப்ளவர் மாதிரியே இருக்கும் பச்சை நிறத்தில்...

      நீர்ச்சத்து மிகவும் உடையது..
      சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது என்கிறார்கள்..

      தற்போது மிகவும் பிரபலமாகி வருகிற்து..

      நீக்கு
    3. ஹாஹாஹா ஜி எம் பி சார் நெல்லைக்கு paneer பாயாசம் பிடிக்காது...(இப்படி சொல்லி வம்புக்கிழுக்கணும்..அவரை)...

      ப்ராக்கோலி க்கு இரு அண்ணாக்களும் சொல்லிட்டாங்க..

      மிக்க nantriசார்...

      Geethaa


      நீக்கு
    4. இந்த ப்ராக்கோலி பிஸினெசை நான் பஹ்ரைனில் அருந்தபோது அவங்க வரும்போது பசங்க, மனைவி விருப்பத்துக்காக வாங்கிக் கொடுத்திருக்கேன். நான் சாப்பிட்டதே இல்லை.

      இங்க சென்னைல சென்ற ஜனவரி 1ம் தேதி பார்த்தசாரதி சபா ஸ்பெஷல் லஞ்ச் 850 ரூ கொடுத்ததால் அவங்க போட்ட ப்ராக்கோலி சாம்பாரைச் சாப்பிட்டேன்.

      நமக்கெதுக்கு ப்ராக்கோலிலாம்.. ஹா ஹா ஹா

      நீக்கு
    5. இரண்டு நாட்களுக்கு முன் திருவல்லிக்கேணி நல்லதம்பி தெரு பஜ்ஜி கடைல இருந்து இளநீர் பாயசம் என் பெண் வாங்கிக்கொண்டுவந்து தந்தா. வெகு வெகு சூப்பர்.

      இதுல எங்க அக்கா பன்னீர்ப் பாயசம் பண்ணாங்களாம். செய்முறை எபில வரலையே. எங்களைப் பார்க்க வந்தால் மறந்துபோய் ஸ்வீட் ஐட்டம் கொண்டுவராம வந்துடப் போறீங்க ஹா ஹா ஹா

      நீக்கு
  23. இந்த வருடம் கீதாவின் யூப் உடன் திறக்கப்பட்டிருக்குது எங்கள்புளொக் கிச்சின்:)... இவ்வருடம் யூப் வருடமாக அமைய என் வாழ்த்துக்கள்:)... அப்போதான் இந்த வருடமாவது ஆளாளுக்கு 5 கிலோ வெயிட் குறைப்பினம்:)

    பதிலளிநீக்கு
  24. சூப் நல்லாயிருக்குது கீதா, வாசனைப் பொருட்களும் சேர்த்திருக்கிறீங்கள்.

    அதாரது க்ளோயி?:) உங்கள் வீட்டுப் புது வரவோ?.. ரிவி பார்க்கிறாபோலும்:)..

    கண்ணளகி தன் கண்ணைக் காட்டுறா:)

    பதிலளிநீக்கு
  25. கீதா உங்கள் சூப் செய்யமுறையை எழுதிக் கொள்ளும்பொழுதுதான் கவனித்தேன் ப்ரோக்கோலியை சுடுநீரில் கழுவச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், காலி பிளவர், ப்ரோக்கோலி போன்றவற்றை சுடுநீரில் கழுவக் கூடாது. உள்ளே புழு இருந்தால் இறந்து விடும். சாதாரண தண்ணீரில் உப்பை சேர்த்து அதில் காலி பிளவர், அல்லது ப்ரோக்கோலியை அமிழ்த்தி வைத்தால் புழு வெளியே வந்து விடும். 

    பதிலளிநீக்கு
  26. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கீதாஜி அவர்களின் பதிவு. மகிழ்ச்சி.

    ப்ராக்கோலி சூப் செய்முறை சிறப்பு. இங்கே இப்போது நல்ல ப்ராக்கோலி கிடைக்கிறது - முடிந்தால் செய்து பார்க்கிறேன்.

    நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  27. ப்ரோக்கோலி, பேபி கார்ன் சூப்...சூப்பரா இருக்கு கீதா அக்கா ...

    ப்ருக்கோலி இதுவரை சமைச்சதும் இல்ல சாப்பிட்டதும் இல்ல ...அதை விடுத்து இந்த சூப் செஞ்சு பார்க்குறேன் ..

    பதிலளிநீக்கு
  28. சூப் நல்லா இருக்கு கீதா .எனக்கு ப்ரோக்கலி பிடிக்காஆஆஅது :) ஆனா ட்ரை பண்றேன் இப்போ தியாகம் அமேதி ஆகி பின்னே இப்போ பசும்பொன் ஆகியாச்சு :))

    பதிலளிநீக்கு
  29. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!