வெள்ளி, 17 ஜனவரி, 2020

வெள்ளி வீடியோ : ஆடையின் வனப்பை நீ எழுத.. ஆசையின் அழகை நான் எழுத


ஜீவி ஸாரின் விருப்பத்தில் இன்றைய நேயர் விருப்பம். பாக்யலக்ஷ்மி படத்திலிருந்து 'கல்லூரி ராணிகாள் பொன்னான மேனிகாள் சிங்காரச் சோலையே உல்லாச வேளையே' பாடல்...ஜீவி ஸார் கேட்ட இந்தப் பாடல் முதலில் எனக்குப் புதிதாக, கேட்காததாக இருந்தது.  அப்புறம் பார்த்தால் நான் இதை கல்லூரி ராணிகாளாக கேட்டிருக்கிறேன் என்று நினைவுக்கு வந்தது.  சென்ஸார் போர்டின் ஆட்சேபத்தால் இந்த வரிகள் மாற்றப்பட்டிருப்பதாய்ப் படித்தேன்.  என்ன, எதற்கு ஆட்சேபமோ அந்த வரிகளில்...!

எத்தனை வரிகள் இது போல பல்வேறு பாடல்களில் மாற்றப்பட்டிருக்கின்றன!  

இந்தப் பாடலை எழுதியவர் கண்ணதாசன்.  இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்.  முக்தா ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளியான படம்.


ஜெமினி, சௌகார், ஈ வி சரோஜா நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் மிக மிக மிக இனிமையான, புகழ்பெற்ற பாடல் ஒன்று உண்டு.  "மாலைப்பொழுதின் மயக்கத்திலே..."  

இனி பாடலுக்குப் போவோமா...

சிங்காரச் சோலையே உல்லாச வேளையே 
பொன்னான இந்த மாலை நேரமே 
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம் 
நில்லாமல் செல்வதே நல்லதா  

காதல் மன்னன் என்று எண்ணிக் கொண்டு வந்தாயோ 
நெஞ்சில் மானம் வெட்கம் ரோஷம் கூட இல்லையோ  
காதல் மன்னன் என்று எண்ணிக் கொண்டு வந்தாயோ 
நெஞ்சில் மானம் வெட்கம் ரோஷம் கூட இல்லையோ  
இது கல்வி கூடமா இங்கே காதல் பாடமா  
பெண்ணை கிள்ளு கீரை போல எண்ணி ஓடி வந்தாயோ   
உம்மை எண்ணி எண்ணி தூக்கம் கூட வல்லையே 
இன்று கல்வி கூடம் செல்ல ஆசை இல்லையே  
உம்மை எண்ணி எண்ணி தூக்கம் கூட வல்லையே 
இன்று கல்வி கூடம் செல்ல ஆசை இல்லையே  
உங்கள் கண்கள் பேசிடும் இன்ப காதல் நாடகம் ஆண்கள் : 
கண்டு போதை கொண்டு மூளை கூட மாறிப் போனதே  

சும்மா கோட்டும் சூட்டும் போட்டால் மட்டும் போதுமா 
இங்கே காட்டுக் கூச்சல் போட்டால் காதல் தோன்றுமா  
சும்மா கோட்டும் சூட்டும் போட்டால் மட்டும் போதுமா 
இங்கே காட்டுக் கூச்சல் போட்டால் காதல் தோன்றுமா  
உம்மை பாவம் என்பதா இல்லை கோபம் கொள்வதா 
பெண்கள் : பெண்ணைக் கட்டி காக்கும் சக்தி இல்லை காதல் வேண்டுமா  

அந்த வானவில்லை கையில் கொண்டு காட்டவா 
இந்த மண்ணைக் கூட பொன்னைப் போல மாற்றவா  
தாலி செய்து போடவா காரில் கொண்டு போகவா 

தென்றல் காற்றில் ஏறி பறவை போல தூக்கி செல்லவா   சிங்காரச் சோலையே உல்லாச வேளையே பொன்னான இந்த மாலை நேரமே எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம் நில்லாமல் செல்வதே நல்லதா=======================================================================================================இப்போது இன்றைய என் விருப்பப் பாடல்...

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1969 இல் வெளியான நகைச்சுவை த்ரில்லர் வகைத் திரைப்படம் நான்கு கில்லாடிகள்.  ஜெய்சங்கர், பாரதி, மனோகர், தேங்காய், குமாரி பத்மினி ஆகியோர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத, இசையமைத்திருப்பவர் வேதா.படத்தில் இடம்பெற்றிருக்கும் நான்கு பாடல்களில் இதில் மட்டும் டி எம் எஸ் குரல்!   சுசீலாம்மா குரல் வெகு இனிமையாக ஒலிப்பதுதான் இந்தப் பாடலின் முதல் சிறப்பு.  அன்பையும் ப்ரியத்தையும் காதலையும் அந்தக் குரலே வெளிப்படுத்த, டி எம் எஸ் குரல் எந்த உணர்ச்சியும் இல்லாமல் விட்டேத்தியாய் பதில் சொல்வது போல பாடுவார்.  ஆடம்பரமான செட், ஜிகுஜிகு ட்ரெஸ் என்று ஜெய்யும், பாரதியும்..

ஒரு குதி குதித்து ஜெய் ஆடும் ஆட்டத்தைச் சொல்லவேண்டும்!  மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம் 1935 லேயே படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.  மாடர்ன் கேர்ள், மாடர்ன் யூத்,  மாடர்ன் லேடி ஆகியவை அவரின் சில ஆரம்ப காலப் படங்களின் தலைப்புகள்.  இனி பாடல்....

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் 
சிரித்தது என்னைப்பார்த்து 
என் சிவந்த உடலா இதழா மனமா 
சிரித்தது எதைப்பார்த்து? 

ஆடையின் வனப்பை நீ எழுத 
ஆசையின் அழகை நான் எழுத 
நாடகம் என்றே நான் நினைக்க 
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க? 

உறவுக்கு என்றும் இரண்டு பக்கம் - அதை 
உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம் 
உறவின் மறுபக்கம் நீ அறிவாய் - இந்த 


நிலவின் மறுபக்கம் யார் அறிவார்? 


97 கருத்துகள்:

 1. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 3. இன்றைய பாடல்கள் இரண்டுமே அருமையானவை...இனிமையானவை...

  பதிலளிநீக்கு
 4. செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்....

  இதைப் போல நெஞ்சை அள்ளும் பாடல் இன்னொன்று -

  நான் மலரோடு தனியாக
  ஏன் இங்கு நின்றேன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நான் மலரோடு தனியாக
   ஏன் இங்கு நின்றேன்!..//

   ஹிந்தியிலிருந்து இறக்குமதி!

   நீக்கு
  2. பாடலின் மெட்டு தான் ஹிந்தியே தவிர

   பாடலின் வரிகள் அகத்திணை அல்லவா!.

   என் கருங் கூந்தல்
   கலைந்தோடி மேகங்களாக
   நான் பயந்தோடி வந்தேன்
   உன் இடம் உண்மை கூற!...

   ஆகா..
   அருந்தமிழே உன்னால் மகிழ்ந்தேன்...

   நீக்கு
  3. கவிதை மழையாக சினிமாப்பாட்டு அப்போதெல்லாம். அந்த -
   வஸந்த காலம்.. வருமோ... நிலை மாறுமோ..

   நீக்கு
  4. வீணை இருந்தும் பயனேது - வந்து
   மீட்டும் வரைய்ல் இசையேது
   குயில் பாடுமோ மழை நாளிலே..
   கயல் நீந்துமோ சுடும் நீரிலே!...

   பொன் வீணையாகத் தமிழ் இருந்தும்
   புரிந்து எழுத ஆளில்லாமல் போனது!..

   நீக்கு
  5. //என் கருங் கூந்தல்
   கலைந்தோடி மேகங்களாக//

   நானும் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இந்த வரிகளை மிகவும் ரசிப்பேன்.  அதில் வண்டொன்று பறந்து என்றும் வரும்.

   நீக்கு
  6. //வஸந்த காலம்.. வருமோ... நிலை மாறுமோ..//

   மறக்க முடியுமா?!!!!    இந்தப் பாடலில் யேசுதாஸ் குரல் பின்னணியில் ஹம்மிங்காக ஒலிக்கும்.  நான் இந்தப் பாடலை ஒரு ராகத்துக்கு அடையாள பாடலாக வைத்திருந்தேன்.   ராகத்தின் பெயர் மறந்து விட்டது!  ஆ...    வலஜி ராகம்!

   நீக்கு
  7. பழைய பாடல்களைப்பற்றி இவ்வளவு பேசுகிறோம் இங்கே. ராக மாஸ்டரினியைக் காணோமே!

   நீக்கு
 5. இரண்டாவது பாடல் அடிக்கடி கேட்டது நல்ல பாடல்.

  பதிலளிநீக்கு
 6. நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன!..

  நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன!..

  - பாக்யலக்ஷ்மி...

  படப்பாடல்களில் தனி ராஜாங்கமே நடத்தியிருப்பார் கவியரசர்...

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பாக்யலக்ஷ்மி படம் வங்காளக் கதையின் தழுவல். ஆனால் பாடல்கள் நன்றாக இருக்கும். இதைப் போலவே ஜெமினி, சாவித்திரி(இரட்டை வேடம்) நடித்த ஓர் படமும் வங்காளக் கதை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதி. அப்படியே வங்காள சாயல்
   அடிக்கும். ஓடம் நதியினிலே பாடலில் வரும் படகு
   கல்கத்தா நதிப் படகு.

   நீக்கு
  2. சாவித்ரி இரட்டை இடத்தில் நடித்த ஒரே படம் காத்திருந்த கண்கள்தானா?  வாங்க கோமதி அக்கா...    வணக்கம்.

   நீக்கு
  3. ஆமாம், காத்திருந்த கண்கள் தான் என நினைக்கிறேன். அதில் குழந்தையை வைத்துக்கொண்டு ஜெமினி - சாவித்திரி பாடும் பாடல் ரொம்பப் பிரபலம். வளர்ந்த கதை/அல்லது வளர்ந்த கலை மறந்துவிட்டாள் எனப் பாடல் வரும். ஜெமினி காதலித்த சாவித்திரி ஓவியம் வரைபவர். ஆனால் சந்தர்ப்பவசத்தாலோ என்னமோ/சரியா நினைவில்லை. அவர் திருமணம் செய்து கொள்வது ஏதும் தெரியாத சாவித்திரியை! அப்போ இந்தப் பாடல் வரும். கதை படித்த நினைவும் மங்கலாகத் தான் இருக்கிறது. த.நா.குமாரசாமி மொழி பெயர்த்ததுனு நினைவு.

   நீக்கு
 8. "செவ்வானத்தில்" பாடலும், "நான் மலரோடு" பாடலும் ரொம்பப்பிடித்தவை. அதன் மூலமான ஹிந்திப் பாடல் உட்பட!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா...   செவ்வானத்தில் பாடலுக்கு ஹிந்தி மூலம் கிடையாது!!!   நான் மலரோடு தனியாக பாடலுக்குஉண்டு!

   நீக்கு
 9. செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்... அப்போது கவர்ந்த பாடல்களில் ஒன்று. பாரதி, ஜெய்ஷங்கர் என்பது தெரியாது. சுசீலாவின் குரலே போதுமானதாக இருந்தது.

  ’நான்கு கில்லாடிகள்’ பக்கம் நெருங்கமுடியாததால்தான், ’மூன்று இடியட்ஸ்’ என்று பிற்காலத்தில் நிறுத்திக்கொண்டார்களோ ஹிந்திக்காரர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏகாந்தன் ஸார்...  மூன்று தெய்வங்கள் வந்தே அப்போதே...   ஹிந்தியிலும், தமிழிலும்!

   நீக்கு
  2. ஹிந்தியில் அதற்கு என்ன பெயர் ?

   நீக்கு
 10. செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் — மிக அருமையான பாடல் பல முறை கேட்டிருக்கிறேன். தெரிந்த பாடலை வெளியிட்டிருக்கிறீர்களே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். இப்போது கொஞ்ச நாட்களாக அப்படிதான் வெளியிடுகிறேன்...   கவனிப்பதில்லையா நெல்லை?  பாடல் சுசீலாம்மாவின் இனிய குரலாலேயே பிரபலம்.

   நீக்கு
 11. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 12. முதல் பாடலை அவ்வப்பொழுது டி.வி.யில் பார்த்திருக்கிறேன். இரண்டாம் பாடலை கேட்டிருக்கிறேன். பாரதி சொந்த குரலில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாரதி சொந்தக்குரலில் பாடியிருக்கிறாரா?   எனக்குத் தெரியாது.  

   நீக்கு
  2. சொந்தக் குரலில் பாரதியா?..
   அந்தப் பெண்ணின் குரல் சற்றே அழுத்தமாக இருக்குமே!...

   நீக்கு
  3. ஜெயபாரதி, ராஜ்குமார் பாரதி என்று ஏகப்பட்ட பாரதிகள் உண்டே ‘காந்தி’ என்பதுபோல

   நீக்கு
 13. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பிடித்த பாடல் இரண்டும். கேட்டு மகிழ்ந்தேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 14. "மாலைப்பொழுதின் மயக்கத்திலே..."

  நன்றாக இருக்கும் இந்த பாடலும்.
  பாக்கியலக்ஷ்மியில் பாட்டுக்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.
  "கண்ணே ! பாப்பா கவலை வேண்டாம் அப்பா வருவார் தூங்கு" பாடலும் நன்றாக இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாக்யலக்ஷ்மி படத்தில் பாடல்கள் எல்லாம் இனிமையானவை..

   கண்ணே ! ராஜா கவலை வேண்டாம் அப்பா வருவார் தூங்கு .. - என்று நம்பிக்கையோடு பாடல் இருந்தாலும் அந்தக் கால வழக்கப்படி ஒரு கதாநாயகியை முடித்து வைத்திருப்பார்கள்...

   நீக்கு
  2. கண்ணே பாப்பா பாடல் கேட்ட நினைவில்லை.  அந்த வரிகளில் கனிமுத்து பாப்பா பாடல்தான் கேட்டிருக்கிறேன்.

   நீக்கு
  3. கண்ணே ! ராஜா வா?
   அம்மா சொன்னமாதிரி அப்பா வந்து விடுவார் அம்மாவை முடித்து வைத்து விடுவார்கள்

   நீக்கு
 15. முதல் பாடல் அப்போது மிகப் பிரபலம்.
  அந்தக் காலத்தில் ராணிகள் என்பதற்கு வேறு அர்த்தம் பூசி இருந்தார்கள்.
  மேலும் ராணி மேரிக்கல்லூரியை குறிப்பிடுவதாகவும் நீக்கி விட்டார்கள் என்று நினைவு.

  பாக்ய லக்ஷ்மி பாடல்கள் எல்லாமே இனிமை கலந்திருக்கும்.
  வெள்ளி நிலவே பாடல் வெண்மை ஆடை உடுத்திய சௌக்கார் ஜானகியைக்
  குறிப்பிடுவதாக பக்கத்து வீட்டு அக்கா சொல்லித் தெரிந்து கொண்டேன்:)
  பாடல்களை அவ்வளவு ஆராய்வோம். நன்றி ஸ்ரீராம், ஜீவீ சார்.

  செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் பாடல் மிக இனிமை.
  சுசீலா அம்மாவின் குரல் போல் வேறு உண்டா.
  பாடல்கள் மாடர்ன் தியேட்டர்ஸ்க்குக் கரும்பு போல.
  இசையில் மேற்கத்திய ஜாஸ், இந்திப்பட டியூன் எல்லாம்
  இறக்குமதியாகும்.
  சில பாடல்கள் வரிகள் கூட இந்திப்
  பாடலை அப்படியே மொழி மாற்றம் என்று தெரிந்தாலும்
  மிகப் பொருத்தமாக அழகு தமிழில் மாறி இருக்கும்.
  இனிய பாடல்களைதேர்ந்தெடுத்துக் கொடுப்பதற்கு மிகவும் நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நீக்கி விட்டார்கள் என்று நினைவு.//

   வல்லிம்மா.. கரெக்ட்.. உங்களுக்குத் தான் எவ்வளவு நினைவாற்றல்!..

   நீக்கு
  2. வாங்க வல்லிம்மா...

   ஓ..   ராணிகாள் வரிகளில் இவ்வளவு மறைபொருளிருக்கிறதா?  சௌகார் ஜானகிக்கு இப்படி ஒருபெயர் இருக்கிறதா?   நாங்கள் அழுமூஞ்சி கேரக்டருக்காகவே பிறந்தவர் என்று சொல்வோம்!  

   நீக்கு
 16. காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே...

  காட்சியும் பாடலும் இசையும் நடிப்பும்... அடடா...

  காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா
  கன்னி நெஞ்சம் உனக்கிருந்தும் நாணமில்லையா
  உன் மோக நிலை மறந்து விடு வெள்ளி நிலாவே
  வந்த மேகத்திலே மறைந்துவிடு வெள்ளி நிலாவே...

  E.V.சரோஜா ஒருபுறம் ஆனந்தக் களியாட்டம்.. சௌகார் மறுபுறம் சோகத்தில் தள்ளாட்டம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். துரை,
   எத்தனை அர்த்தம் அந்தப் பாடலில்!!!!
   ஜெமினிக்கும் எப்பொதும் இரண்டு கதா நாயகிகள் வாய்ப்பார்கள். சௌகார் ஜானகி
   நிச்சயமாக அவர்களில் ஒன்றாக இருப்பார். ஜெனிவா போய் விடுவார், ரெட் க்ராஸ் சேர்ந்து விடுவார்,
   இல்லை மரணித்து விடுவார்.நாலு படங்கள் உடனே சொல்ல முடியும்:)

   இளமையெல்லாம் வெறும் கனவு மயம்.
   இதில் மறைந்தது சிலகாலம்
   தெளிவும் அறியாமல் முடிவும் தெரியாமல்
   மயங்குது எதிர்காலம்.

   நீக்கு
  2. //காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே...//

   துரை ஸார்...    இந்தப் பாடலின் சரணம் கேட்கும்போது எனக்கு 'சொன்ன சொல்லை மறந்திடலாமோ' பாடல்  நினைவுக்கு வரும்!

   நீக்கு
  3. 50 ஆண்டுகளுக்குப் பின்னும் இத்தனை தூரத்துக்கு இந்தப் பாடல்கள் மகிழ்ச்சி பொங்கப் பேசப்படுகின்றன என்றால் என்னே பெருமை...

   நீக்கு
  4. சொன்ன சொல்லை மறந்திடலாமோ...

   அதுவும் அழகான இனிமையான பாடல் தான்..

   நீக்கு
 17. நான் விரும்பிக் கேட்ட பாடலை ஒளிப்பரப்பியத்திற்கு நன்றி, ஸ்ரீராம்.

  இந்தப் பாடலில் நான் மிகவும் ரசித்தது பாடலின் இசை வேகத்திற்கு ஏற்ப ஜெமினியின் துள்ளல் நடிப்பைத் தான்.

  எம்.ஜி.ஆர்.-- சிவாஜி -- ஜெமினி இந்த மூவரும் காதல் காட்சியில் நடிப்பதில் ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. முதல் இருவரும் காதலி பின்னால் அவ்வளவாக ஓட மாட்டார்கள். இவர்களை நோக்கி காதலி -- என்ற கோணத்தில் இருக்கும்.

  இளமைக் காதலின் யதார்த்த சூழல் என்னவென்றால் காதலன் தான்
  காதலியிடம் 'கிறங்கி'ப் போவான். சுற்றிச் சுழல்வான். அதை மிகப் பிரமாதமாக செய்து காட்டியவர் ஜெமினி.

  சினிமா தான். இருந்தாலும் ----

  'காதல் மன்னன் என்று எண்ணிக் கொண்டு வந்தாயோ
  நெஞ்சில் மானம் வெட்கம் ரோஷம் கூட இல்லையோ.'..

  -- இந்த வரிகள் எல்லாம் மற்ற இருவரை நோக்கி ஒரு பெண் சொல்வதான காட்சி அமைப்பை நினைத்துக் கூட பார்க்க முடியாது.
  ஆனால் ஜெமினியோ எல்லாமே நடிப்புக்காகத் தான் என்ற பிரக்ஞையில் தெளிவாக இருந்திருக்கிறார்.

  உடற்பயிற்சியிலும் கவனமாக இருந்தவர். கர்லாக்கட்டை சுழற்றுவது அவருக்கு மிகப் பிடித்தமான உடற்பயிற்சி. கர்லாக்கட்டையும் ஜெமினியுமாய் அந்தாட்களில் சினிமா பத்திரிகைகளில் நிறைய புகைப்படங்கள் வந்ததுண்டு.

  இன்று பிரபல வார இதழ்கள் எல்லாமுமே சினிமாப் பத்திரிகைகளாக மாறி விட்டன. அன்றைக்கோ சினிமாவுக்கென்றே தத்தம் செய்யப்பட்ட சில இதழ்கள் சினிமாச் செய்திகளை மட்டுமே தாங்கி வந்தன.

  கேள்வி: அக்காலத்திய சினிமா இதழ்களின் சிலவற்றின் பெயர்களைச் சொல்லுங்களேன்.

  பதில்..?

  புதன் கேள்வி - பதில் பகுதியில் 'கெள' அண்ணன் என்ன அனாயசமாக பதில் சொல்லப் போகிறார் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்குத் தெரிந்தவரை பொம்மை... இது தான் அந்தக் காலத்திலேயே வண்ணப் படங்களைத் தாங்கி வந்தது..

   நடிகர் திலகம், மக்கள் திலகம் மற்றும் நடிக நடிகையரின் பிரத்யேக படங்களுடன் வந்து மக்கள் மனதில் இடம் பெற்றது...

   பின்னாளில் ஏதேதோ.. நடுப்பக்கப் படங்கள் என்று கடை விரித்தன..

   எனது கருத்துரையை அதிகப் பிரசங்கித் தனம் என்று கொள்ள வேண்டாம்..

   ஜீவி அவர்களது கேள்விக்கு கௌ அண்ணன் தனது பதிலால் எல்லாரையும் திணறடிக்காப் போகிறார்...

   நீக்கு
  2. கௌ + அண்ணன்கள்தான் திணறப்போகிறார்கள்!

   நீக்கு
  3. சார்.. எம்ஜிஆரும் துள்ளலா ஓடுவார். சிவாஜி ஓடி வந்தார்னா கதாநாயகிகள் பயந்துக்க மாட்டாங்களா பாவம்?

   நீக்கு
  4. லட்சுமி காந்தன், பேசும் படம்லாம் கௌதமன் சாரின் பதிலில் வருமா இல்லை அவர் பாவனா காலத்துக்கு முன்னால் செல்ல மாட்டாரா?

   நீக்கு
  5. பாடல் வரிகளைப் படித்துப் பார்த்து ஓகே சொல்வது எம்ஜிஆர் மட்டுமே.

   நீக்கு
  6. பாடல் வரிகளைப் படித்துப் பார்த்து -- இது வேறே விஷயம். நாம் பேசுவதற்கு சம்பந்தப்படாதது.

   நீக்கு
  7. லட்சுமி காந்தன் என்ற பெயரில் பத்திரிகை ஏதும் இருந்ததில்லை.

   நீக்கு
  8. கெள அண்ணன் - பெயர் உபயம் செய்த மூன்றெழுத்துக்காரர் வாழ்க!
   அழைக்கத் தான் எவ்வளவு பாந்தமாய், பொருத்தமாய், அழகாய் இருக்கிறது!..

   நீக்கு
  9. வாங்க ஜீவி ஸார்...   நீங்கள் ஜெமினி ரசிகர்.  அவரின் ஸ்பெஷல்களை நினைவு வைத்திருக்கிறீர்கள்.    சினிமா இதழ் கேள்வியில் குறிப்பாக எதையோ எதிர்பார்க்கிறீர்கள் போல!

   நீக்கு
  10. பேசும்படம் பத்திரிகையில் அப்போது வெளியாகி சில நாட்கள் ஆகியிருக்கும் படங்களின் கதை வசனம் காட்சி வாரியாக வரும்.  ஆங்காங்கே இருக்கும் வண்ணப்படங்கள் ஸ்பெஷல்!

   நீக்கு
  11. /லட்சுமி காந்தன் என்ற பெயரில் பத்திரிகை ஏதும் இருந்ததில்லை//

   இந்துநேசன்!

   நீக்கு
  12. பேசும் படம் , பொம்மை .பிலிமலையா எல்லாம் எல்லாம் சினிமா இதழ்கள்

   நீக்கு
  13. கோமதி மா,இன்னோரு பத்திரிகை பேசும் படம் போலவே வந்தது. பயர் மறந்து விட்டது.

   நீக்கு
  14. ஶ்ரீராம்... கரெக்டா புரிஞ்சுக்கிட்டீங்க

   ஜீவி சார் - நீங்க பாடல் வருகளைப் பற்றி கமென்ட் பண்ணுனீங்க. எம்ஜிஆர் ஓகே சொன்னால்தான் படப்பிடிப்புக்கு போவார்கள் என்பதால் எக்குதப்பான வரிகள் இருக்க முடியாது. சிவாஜி இதைப்பற்றிக் கவலை கொள்வதுல்லை. ஜெமினி எப்போதும் காதல் மன்னன் இமேஜ்

   நீக்கு
 18. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் 'பர்மா ராணி' என்ற படத்தில் நடித்தும் இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 19. துரை சார்!

  போனால் போகட்டும். மற்ற பத்திரிகைகளின் பெயர்களையும் 'பொம்மை' பத்திரிகைக்கு ஆசிரியர் யார் என்றும் கெள அண்ணன் பதில் சொல்வார். சரியா? :)

  பதிலளிநீக்கு
 20. முதல் பாடலும் நல்லாத்தான் இருக்கு. கேட்ட நினைவு வருது

  பதிலளிநீக்கு
 21. காதலியோடு இழைந்து போணதில் ஜெமினிக்கு அடுத்து ரொம்ப காலம் கழித்து... மைக் மோகன் தான்!

  பதிலளிநீக்கு
 22. பைஜாமா, ஜிப்பாவோடு வளைய வந்ததையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!..

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல் இரண்டுமே இனிமையான பாடல்கள்தான். முதல் பாடல் நானும் "கல்லூரி ராணிகள்" என்றுதான் கேட்டிருக்கிறேன். இன்றுதான் அந்த முதலிரண்டு வரிகளும் மாறியதை தெரிந்து கொண்டேன்.

  இதைப் போல் சந்திரபாபுவுடன் இணைந்து ஜெமினி கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து பாடுவது போல் ஒரு பாட்டு வரும். அதில் அவருக்கு ஜோடி சாவித்திரி என நினைக்கிறேன்." காதல் என்பது எது வரை"என்ற அந்த பாடலும் நன்றாக இருக்கும்." என்ன வேகம் நில்லு பாமா" என்ற ஜெய்சங்கர் கல்லூரி பாட்டும் அன்று பிரசித்தம். இது போல் பாட்டுக்களுக்காக அன்றைய கல்லூரி மாணவர்கள் படங்களுக்கு விரும்பிச் சென்றார்கள்.

  இரண்டாவது பாடலும் அருமை. படம் பார்த்ததில்லை. இரண்டுமே அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். இப்போதும் கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 24. இயக்குனர் ஸ்ரீதர் சித்ராலயா என்று ஒரு சினிமா பத்திரிகை ஆரம்பித்ததாக நினைவு. சினிமா எக்ஸ்பிரஸ் என்று ஒன்று உண்டு. இப்போது வரும் பல வார இதழ்களில் சினிமா செய்திகள்தான் பிரதான இடம் பிடிக்கின்றன. 
  இந்து நேசன் மஞ்சள் பத்திரிகை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் எம்.கே.டியைப் பற்றியும், என்.எஸ்.கேயைப்  பற்றியும் லட்சுமிகாந்தன் எழுதியதால்தான் கொலை செய்யப் பட்டார். 

  பதிலளிநீக்கு
 25. "தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா?..நீயில்லாமல் எந்தன் வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா." என்பது டி.எம்.ஸோடு நடிகை பாரதி இணைந்து பாடிய பாடல். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜெமினி ,பாரதி, அவளுக்கென்று ஒரு மனம்னு நினைக்கிறேன்.

   நீக்கு
  2. அவளுக்கென்று ஒரு மனம்...

   உன்னிடத்தில்
   என்னைக் கொடுத்தேன்..- உன்னை
   உள்ளம் எங்கும்
   அள்ளித் தெளித்தேன்..

   இதிலும் நல்ல பாடல்கள்...

   நீக்கு
  3. இதே படத்தில் எஸ் பி பியின் இரண்டு பாடல்கள் உண்டு. ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு, அடுத்து மங்கையரில் மகராணி.. பாடல்..

   நீக்கு
  4. தங்க நிலவே பாடல் கேட்டிருக்கிறேன். அது அவளுக்கென்றோர் மனம் படத்தில் அல்ல...

   நீக்கு
 26. ஓ...
  இந்தப் பாடல் தானா!...
  எத்தனை எத்தனை தகவல் களஞ்சியங்கள்...

  பதிலளிநீக்கு
 27. இரண்டு பாடல்களும் கேட்டேன். ரசித்தேன் என்று சொல்ல முடியவில்லை! :)

  தேடித் தேடிப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 28. முதற் பாடல் கேட்டதுபோலவும் இல்லை, பெரிதாகக் கவரவில்லை.

  2ம் பாடல் சூப்பர் மிகப் பிடிச்ச பாடல்.

  பதிலளிநீக்கு
 29. சினிமா அறிவு நிறைந்தவர்கள் நடுவே நான்ப்பாட்டைக் கேட்டதில்லை என்று சொன்னால்,,,,,,,?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!