புதன், 8 ஜனவரி, 2020

புதன் 200108 : கர்நாடக சங்கீதத்திற்கும், கர்நாடகத்திற்கும் என்ன சம்பந்தம்?


பானுமதி வெங்கடேஸ்வரன் : 

ஜனவரி ஒன்றாம் தேதியை புத்தாண்டு என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


$ உலகத்துடன் ஒத்துப் போகாமல் எம் வழி. தனி வழி என்பவர்கள். 

# ஆங்கிலத்தில் கில்ஜாய்ஸ் என்று ஒரு பிரயோகம் இருக்கிறது. தமிழில் அழுமூஞ்சி எனச் சொல்லலாமோ ?

&  யாருக்குப் புத்தாண்டு என்பதுதான் பிரச்னை. Jan 1 ஆங்கிலப் புத்தாண்டு. ஆனால் இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு  மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்தான் புத்தாண்டு ஆரம்பம் ஆகிறது. சேட்ஜிகள் தீபாவளி நாளை, புதுக்கணக்குத் துவங்கி புத்தாண்டாகக் கொண்டாடுவார்கள். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் சமூகம், பூமியின் சுழற்சியில் சூரியனுக்கு அருகே பூமியின் மத்தியரேகை வருகின்ற நாளில் (அதாவது சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் முதல் நாளை) புத்தாண்டு எனக் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். எல்லாம் ஏதோ ஒரு கணக்கு அவ்வளவுதான். 
                   
சென்ற ஆண்டின் சிறந்த நிகழ்வு(உலக அளவில்,இந்திய அளவில்) என்று எதை கருதுகிறீர்கள்? 

$ உலக அளவில் கிணற்றுத்தவளையால் என்ன சொல்ல முடியும்?

# இந்திய அளவில் அயோத்தியா பிரச்சினைக்கு கிட்டத்தட்ட சுமுகமாக தீர்வு காணப்பட்டது.

உலகளவில் ஜனாதிபதியைக்கூட தலையில் குட்ட முடியும் என நிரூபித்த அமெரிக்க ஆட்சிமுறை, எலக்டிரிக் கார் அறிமுகம்.
          
இந்த ஆண்டின் முதல் கேள்வியை கேட்ட வாசகி நான்தானே?

$  ..கலாம்!

# "மணி என்ன ஆச்சு" என்று யாரோ கேட்டதே நான் எதிர்கொண்ட முதல் கேள்வி.

& ஆமாம், ஆமாம். அதுமட்டுமல்ல, இந்த வருடத்தின் முதல் கேள்வி பதில் பகுதியில் இடம்பெற்றுள்ள (பதிவு + வாட்ஸ் அப் ) எல்லாக் கேள்விகளையும் கேட்டவர் நீங்கதான்!
       
பள்ளி, கல்லூரி நண்பர்கள் ரீயூனியனில் கலந்து கொண்டிருக்கிறீர்களா?
   
# ஆசை உண்டு அதிர்ஷ்டம் இல்லை. பள்ளி நண்பர்களோடு தொடர்பற்றுப் போனது ஒரு பெரிய இழப்பு.

& எனக்கும் ஆசை உண்டு. ஆனால் பள்ளித் தோழர்கள் யாரையும் வலை வீசித் தேடியும் யாரும் கிடைக்கவில்லை. 
      
கர்நாடக சங்கீதத்திற்கும், கர்நாடகத்திற்கும் என்ன சம்பந்தம்?
             
# சங்கீதத்துக்கு பீஷ்ம பிதாமகர் எனப் போற்றப் படுபவர் புரந்தரதாசர். அவர் வாழ்ந்த பிரதேசம் கர்நாடிக் ப்ளெயின் என ஆங்கிலேயர்களால் பெயரிடப் பட்ட கன்னட தேசம். பெயருக்கு இது காரணமாகச் சொல்வோருண்டு.

& சென்ற வாரம் அதிராவுக்கு அளித்திருந்த கர்ண விளக்கத்துக்கும் கர்நாடக சங்கீதத்துக்கும் தொடர்பு உண்டு. அந்தக் காலத்தில் music notations மூலம் சங்கீதத்தை யாரும் ஆவணப்படுத்தியதில்லை. 
கர்நாடக என்பதை கர்ண + ஆடக என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும். 
(கர்ண )காதுக்கு இனிமையான சங்கீதத்தை அளிக்கின்ற (आटक ஆடக)பயணி (Traveler / wanderer) . 
அந்தக் காலத்தில் தென் இந்தியாவில் ஊர் ஊராக சுற்றித் திரிந்த தேசாந்திரிகள், கிருஷ்ணா நதிக்கும் காவிரி நதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில், அவர்களின் குருவிடமிருந்து செவி வழியாகக் கற்ற பாடல்களையும் சங்கீதத்தையும் இனிமையாகப் பாடி, சிற்றரசர்களிடமும், பேரரசர்களிடமும்  பரிசு பெற்று வாழ்ந்து வந்தார்கள். செவிக்கு இனிமையாக அந்த தேசாந்திரிகள் பாடிய சங்கீதம்தான் பிற்காலத்தில் கர்ண ஆடக சங்கீதம் என்று வழங்கலாயிற்று. 

==========================================

எதிர்காலத்தில் ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்புப் படையிலும் இராணுவ வீரர்களுக்கு பதிலாக சின்னஞ்சிறு துரோன்கள்தான் இருக்கும். 

Mini Drone! (சின்னஞ்சிறு ஆண் தேனீ ...... drone என்றால் சோம்பேறி என்றும் ஓர் அர்த்தம் உண்டு!) 


=====================================================

மீண்டும் சந்திப்போம். 

=====================================================


75 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. //FIRSTTTTTTTTTTTTTTTTTTTT//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது அலாபியாட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்:) மீ ஒத்துக்க மாட்டேன்ன்ன்ன்.. அதிரா நித்திரை என்பதைக் கொன்ஃபோம் பண்ணிக்கொண்டு ஜம்ப் ஆகியிருக்கிறா கர்:))

   நீக்கு
  2. அப்போ நான் உங்க காதுக்குள்ள ஊ ன்னு கத்தினது உங்க காலை கடிச்சது எறும்பு புடிச்சி தலைல விட்டது எதுவுமே உங்களுக்கு தெரியலை அதான் ஓடி வந்தேன் :)

   நீக்கு
  3. //அப்போ நான் உங்க காதுக்குள்ள ஊ ன்னு கத்தினது உங்க காலை கடிச்சது எறும்பு புடிச்சி தலைல விட்டது எதுவுமே உங்களுக்கு தெரியலை அதான் ஓடி வந்தேன் :)//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அங்கின தாத்தா பாட்டிக்குப் பண்ணிய அநியாயத்தை எல்laam enakkup panni paarthirukirinka:) tamil font ai damal ena computer antie:) thookkidda karrrrrrrrrrr:))

   நீக்கு
 2. ///ஜனவரி ஒன்றாம் தேதியை புத்தாண்டு என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?//

  இதெல்லாம் நடக்குதா ?? எங்கே எப்போ எப்படி ?? 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது ரொம்ப காலமாய் இருக்கே...

   நீக்கு
  2. நமக்குத்தான் எல்லாம் மறந்துபோச்சோ :)) அவ்வுலகிலிருந்து இவுலகு வந்திருக்கேன் கொஞ்சம் பிரஷ் அப் செய்யணும் :)

   நீக்கு
  3. இது சம்பந்தமாய் என் பழைய பேஸ்புக் பதிவு ஒன்று எடுத்து வைச்சிருக்கேன்.   மெதுவா ஒரு வியாழனில் போடவேண்டும்!

   நீக்கு
  4. ஓகே ஓகே போடுங்க :) இப்போதைக்கு குட்நைட் நாளை எங்க டைமில்  பகல் வருவேன் 

   நீக்கு
  5. வாங்க, வாங்க, வணக்கம்!

   நீக்கு
 3. ஹாஹாஆ :) DRONE ஆச்சார்யா ரசித்தேன் :)

  பதிலளிநீக்கு
 4. சரி இந்தாங்க என்னோட கேள்விகள் :)

  1, பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாதுங்கறாங்க அப்படீன்னா ஒரு பணமில்லாம அவங்க வாழ முடியுமா ?

  2,நல்ல நட்பின் அடையாளம் என்ன ?
  3,நம்ம வாழ்க்கையை எது வரை நம்மால் அடக்கி கட்டுப்பாட்டில் வைக்க இயலும் ?
  4, பிறரால் மதிக்கப்படுதல் அல்லது விரும்பப்படுதல் இவற்றில் எது சிறந்தது ?
  5,குழந்தை ,சிறுவர் சிறுமியர் ,இளையோர் ,முதியோர் இவர்களின் வயதை எண்ணில்  சொல்லவும் ?   ஈஸியா சொல்லணும்னா ஒருவரை முதியோர்ன்னு சொல்வது எந்த வயதில் ? 
  6, கடவுள் உங்க முன்னாடி தோன்றி சில வரம் கொடுக்கிறார் அது ஒரு வாரம் இவர்களாக மாறலாம்                a , ரஜினி அங்கிள்                b ,கமல் அங்கிள்                c , நித்தி அங்கிள்                d , ட்ரம்ப் அங்கிள் 
  இந்த நால்வரில் யாராக மாற விரும்புவீர்கள் ஏன் ? மற்ற மூவரை நிராகரித்ததன் காரணத்தையும் விள்ளக்கமா :)சொல்லணும் ?
  7,நம்ம மனுஷங்க கண்டுபிடிப்பில் மிக சிறப்பானது எது ?ஏன் ?
  8,வஞ்சப்புகழ்ச்சி என்றால் புகழ்வது போலெ இகழ்வதா இல்லை உள்குத்து வைத்து பேசுவதா ?
  9, சமீபத்தில் நீங்கள் பார்த்து ரசித்த சினிமா ட்ரெய்லர் ?    நான் ரசித்தது கடைசி விவசாயி பட ட்ரெய்லர் 

  10, ரகசியம் சரி ..அது என்ன பரம ரகசியம் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மாடி...   கேள்விகளைத் தயாராய் வைத்துக்கொண்டுதான் வந்திருக்கிறீர்களா?  ஹா...   ஹா...  ஹா...    நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் கேள்விக்கணைகள்!  வரவேற்புகள்.

   நீக்கு
  2. நன்றி. பதில்கள் அளிப்போம்.

   நீக்கு
  3. //ஈஸியா சொல்லணும்னா ஒருவரை முதியோர்ன்னு சொல்வது எந்த வயதில் ? //

   ம்ஹூம்ம்.. இதென்ன பெரிய ஜிதம்பட டகசியம்:)). அஞ்சுவின் இப்போதைய வயதில் தான்:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
 5. இன்னிக்கு புதன்கிழமை என்பதே மறந்து போச்சு! இணையத்துக்கு வந்து பாதிப் பதிவு எழுதும்போது தான் நினைவே வந்தது. அதுக்குள்ளே அதிரடியா உள்ளே நுழைஞ்சுட்டாங்க அதிரா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. HAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA
   கீதாக்கா :) கன்பியூஸ் ஆகிட்டீங்க 

   நீக்கு
  2. OMG... அது அதிரா இல்லை, ஏஞ்சல்...!  தோழிகளை பிரித்துப் பார்ப்பதே இல்லை போல நீங்கள்!

   நீக்கு
  3. அட! ஆமாம், அதிரடி தான் பொசுக்குப் பொசுக்குனு உள்ளே நுழைவாங்களா! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! "அ"ங்க முதல் எழுத்தை மட்டும் பார்த்துட்டு அதிரடினு நினைச்சுட்டேன். அ.வ.சி.

   நீக்கு
  4. விஷயம் என்னன்னா நீங்க எப்போவுமே வேலை மும்முரத்தில் இருப்பீங்களா, உங்களை இங்கே எதிர்பார்க்கலை! :)))))))))))))

   நீக்கு
  5. இப்போ ரெண்டு மாச ட்ரெயினிங் முடிஞ்சு மீண்டும் மென்டல் ஹெல்த்துக்கு செல்கிறேன் அதான் கொஞ்சம் ரிலாக்சிங் :)

   நீக்கு
  6. //மீண்டும் மென்டல் ஹெல்த்துக்கு செல்கிறேன்//   இதை மட்டும் படித்தால் கொஞ்சம் பகீரென்கிறது. ஹாஹா!

   நீக்கு
  7. நானும் சொல்லநினைத்தேன். ஆனால் ....

   நீக்கு
 6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கேள்விகளும் பதில்களும் அருமை என்றாலும் கொஞ்சமாய் இருக்கு! எனக்குக் கேட்கணும்னு போன வாரம் நினைச்சு வைச்சிருந்த கேள்விகளைக் கேட்கவே மறந்து போச்சு! இந்தத் தரம் யாரையாவது மாட்டி விட முடியுமானு பார்க்கிறேன். இப்போப்போயிட்டுக் காலம்பர வரேன். இல்லைனா ஏழரைக்கப்புறமா வரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா..     நல்வரவு, வணக்கம், நன்றி!

   நீக்கு
  2. // இல்லைனா ஏழரைக்கப்புறமா வரேன்// எனக்கு ஏழரை முடிய இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கின்றனவே!

   நீக்கு
 7. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 9. கனியோ பாகோ கற்கண்டோ...
  காதில் பாயும் மதுர மொழி....

  இங்கே மதுரமொழி என்பது இனிய விடைகள்..

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 11. பதில்கள் சுவாரஸ்யம் ஜி ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவருக்கும் காலை வணக்கம். வாராமல் வந்து ஜோதியில் இணைந்த ஏஞ்சலுக்கும் அவரது கேள்விக்கணைகளுக்கும் நல்வரவு.
   கேள்விகள் எழும் காலம் ஒன்று. தெம்புடன் பதில் சொல்லும் காலமும் உண்டு.

   பொதுவாகவே இணைய போக்கில் ஒரு மெத்தனம் காணப்படுகிறது.
   முக நூல் ஓட்டம் கூடக் குறைந்திருக்கிறதோ.
   பலவிதக் குழுக்கள்.
   பலவிதப் பார்வைகள்.
   ஒரு நிச்சய பந்தமாக எங்கள்ப்ளாக் இருப்பதும்
   மகிழ்ச்சியே.இனிய நாளுக்கான வாழ்த்துகள்.

   நீக்கு
  2. //ஒரு நிச்சய பந்தமாக எங்கள்ப்ளாக் இருப்பதும்
   மகிழ்ச்சியே.இனிய நாளுக்கான வாழ்த்துகள்.//
   நன்றி.

   நீக்கு
  3. //பொதுவாகவே இணைய போக்கில் ஒரு மெத்தனம் காணப்படுகிறது.முக நூல் ஓட்டம் கூடக் குறைந்திருக்கிறதோ.//இது சகஜம்தானே அக்கா. புதிதாக  ஒன்று வரும் பொழுது அதற்கு கிடைக்கும் வரவேற்பு, அதற்கு இணையாக, இன்னும் சுலபமாக வேறொன்று  கிடைக்கும் பொழுது குன்றுவது இயல்புதானே.  ஃபேஸ்புக் வந்து ஆர்குட்டை ஓரம் கட்டவில்லையா? இப்பொழுது ஏகப்பட்ட செயலிகள்... இது வளர் சிதை மாற்றம். 

   நீக்கு
  4. உண்மைதான் பானு மா. நான் சார்ந்த குழுக்கள் கூட காற்றாடுகிறது:)

   நீக்கு
  5. தாங்க்ஸ் வல்லிமா :) மீண்டும் தொடர்ந்து வலைப்பக்கம் வர முயல்கிறேன் 

   நீக்கு
 12. ட்ரோன் ஆச்சார்யார் சூப்பர். ஹாஹா.

  பதிலளிநீக்கு
 13. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 14. அனைத்து கேள்விகளும் பதில்களும் அருமை.
  ஏஞ்சலின் கேள்விகள் அருமை.
  DRONE ஆச்சார்யா வில்வித்தை வாத்தியார் !

  அருமை.

  பதிலளிநீக்கு
 15. பதில்கள்
  1. ஆம், உண்மைதான். ஆனால் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம். தீபத்தை வைத்துக்கொண்டு திருக்குறளும் படிக்கலாம்; தீயையும் மூட்டலாம். பயன்படுத்துபவரின் கையிலும் நெஞ்சிலும்தான் உள்ளது யாவுமே.

   நீக்கு
 16. //ஆமாம், ஆமாம். அதுமட்டுமல்ல, இந்த வருடத்தின் முதல் கேள்வி பதில் பகுதியில் இடம்பெற்றுள்ள (பதிவு + வாட்ஸ் அப் ) எல்லாக் கேள்விகளையும் கேட்டவர் நீங்கதான்!//இது நான் எதிர்பார்க்காதது. ஆமை முயல்களை வென்று விட்டது போலிருக்கிறதே!!??

  பதிலளிநீக்கு
 17. Mini drone அச்சுறுத்துகிறது. Drone ஆச்சார்யா ரசிக்க வைக்கிறது. 

  பதிலளிநீக்கு
 18. ஆஆஆ இம்முறை அதிராவின் கிளவிகள் சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே:)) கேள்விகள் இல்லாததாலயோ என்னமோ:).. மூன்றாவது ஹெட் உம்:) தெரியுதே பதில்களில்:))..

  முதலாவது பதில்களின் சொந்தக்காரரோ, ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப்போய் வந்து படங்கள் போடுபவர்??

  பதிலளிநீக்கு
 19. 2,3 நாட்கள் முன்பு இந்த ட்ரோன் ஆச்சாரியார்:) பற்றியும் ஒரு கேள்வி கேட்கலாமே என நினைச்சேன், ரேடியோவில் ஒரு பகுதி போச்சுது அவர்பற்றி.. இன்று அதை நினைவுபடுத்திட்டீங்க..

  1). துரோணாச்சாரியார் ஒரு பெரிய வில்வித்தை ஆசிரியர், அப்போ ஆசிரியர் எனில் நடுநிலையாகத்தானே இருக்கோணும், ஆனா அவர் அப்படி இருக்கவில்லையே.. அர்ச்சுனன் வெல்லோணும் எனும் நோக்கத்தாலேயே, ஏகலைவனிடம் பெருவிரலைக் கட் பண்ணித்தரச் சொன்னாராமே.. அப்போ இது எவ்ளோ பெரிய தப்பு? துரோகம், வஞ்சகமான செயல்.. ஆனாலும் அவரை பெரிய அளவில் மதிப்புக் கொடுத்து கொண்டாடுகிறொமே அது சரியோ?.

  2.ஒரு பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது என்பது பார்த்தாலே புரியும் [நம் நாட்டைப்பற்றிக் கதைக்கிறேன்], அல்லது பெயரைக் கேட்டால் புரிஞ்சிடும்.. மிஸிஸ்/மிஸ் என்பதை வச்சு ஆனா ஆண்களிடம் நேரிடையாகக் கேட்டால் மட்டும்தானே தெரியும், இதனாலேயே சில ஆண்கள் திருமணமாகவில்லை எனச் சொல்லி ஏமாற்றுகின்றனர் ஊர்கள்.
  ஒரு ஆணுக்குத் திருமணமாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டு கொள்வது?

  3. பவுசு, ரவுசு, சொகுசு.. இவற்றுக்கு விளக்கம் சொல்லவும் பிளீஸ்..

  4. உங்களை வீட்டு வேலை செய்யச் சொன்னால், எந்த வேலை செய்யப் பிடிக்கும்?.. அதாவது சமைப்பது அல்லது உடுப்பை மடிச்சு அயன்பண்ணி அந்தந்த இடத்தில் வைபது, தூசு தட்டிக் கூட்டுவது, மொப் பண்ணுவது.. பாத்திரங்கள் கழுவி கிச்சினைக் கிளீன் பண்ணுவது இப்படியானவற்றில்.. ஏன் பிடிக்கும் எனவும் சொல்லவும்.. சரியான விளக்கம் இல்லை எனில் தேம்ஸ்ல குதிக்க வேண்டிவரும்... ஹையோ இது என்னைச் சொன்னேன்:)).. சரி சரி இவ்ளோவும்தான் இப்போதைக்கு ரெடியாக இருந்தவை:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேள்விகள் கேட்டதற்கு நன்றி. பதில்(கள்) அளிப்போம்.

   நீக்கு
 20. இந்த வாரம் கேள்விகள் வந்து குவிந்து விட்டன. நான் கொஞ்சம் ஓய்வெடுக்கிறேன். ஆ...வ்..!

  பதிலளிநீக்கு
 21. ///ஒரு ஆணுக்குத் திருமணமாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டு கொள்வது?//

  இதுஇப்போஉங்களுக்கு எதுக்கு ????????????????? grrrrrrrr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது(வும்) ஒரு கேள்வியா?

   நீக்கு
  2. ///இதுஇப்போஉங்களுக்கு எதுக்கு ????????????????? grrrrrrrr//

   அது வந்து அஞ்சு.. ஸ்ரீராம் நெல்லைத்தமிழன் எல்லோரும் சென்னையில யங்கா:) சுற்றுகினமாம்:)) அதனாலதான் நம்பாலாரை உஷார்ப்படுத்தோணுமிலையோ எல்லோரும் திருமணமாகி ஓல்ட் ஆகிட்டினம் என்பதனை:)) ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சு அந்த ரெயின் டண்டவாலத்தில:)) க்குக் கீழ போட்டிடுங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

   நீக்கு
  3. //கௌதமன்8 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 6:28
   இது(வும்) ஒரு கேள்வியா?//

   ம்ஹூம்ம்ம்.. இப்பூடி எல்லாம் கேட்டு எஸ்கேப் ஆக விட்டிடமாட்டோம்ம்:)) பதில் தேவை எங்களுக்கு:)..

   நீக்கு
  4. பதில்தான் நீங்களே சொல்லிட்டீங்களே!

   நீக்கு
 22. இந்தப்பதிவு ஓரளவுக்கு வாசகர்களை புரிந்து கொள்ள வைக்கிறது

  பதிலளிநீக்கு
 23. கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம். ட்ரோன் - எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள். நல்லவிதமாக மட்டுமே பயன்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!