வெள்ளி, 5 மார்ச், 2021

வெள்ளி வீடியோ : உன் பேரச் சொல்லி பாடி வச்சா ஊறுதம்மா தேனே...

 படம் வெளியான ஆண்டு 1989.  ராமராஜன் கௌதமி நடித்த திரைப்படம்.  பெயர் பொங்கி வரும் காவேரி.

பாடல்கள் கங்கை அமரன். பிறைசூடன்.  இசை இளையராஜா.

அருண்மொழியும் சித்ராவும் பாடியிருக்கும் பாடல்.  அருண்மொழிக்கு அழகான குரல்.  அவர் பாடிய எபெரும்பாலான பாடல்கள் ஹிட்.  ஆனால் அவர் பாடுவதைவிட புல்லாங்குழல் இசைப்பதையே விரும்புபவர்.  இளையராஜா ட்ரூப்பில் பல வருடங்களாய் இருப்பவர்.    இளையராஜாவின் இசையில் பல பாடல்களிலும் வரும்  வரும் புல்லாங்குழல் இசைக்கு சொந்தக்காரர் இவர்தான்.

ராமராஜன் பாடல்கள் பெரும்பாலும் இளையராஜா இசையில் பிரபலம் அடைந்தவை.  மதுரையில் ஜெயவிலாஸ் பஸ்ஸிலும் பி வி ஆர் பஸ்ஸிலும் அலுவலகம் சென்று வரும்போது தரமான ஸ்பீக்கர் பெட்டிகள் வைத்து அலறலாக இல்லாமல் அழகாக பாடல்கள் ஒலிபரப்பபப்டும்.  அப்போது கேட்டு மனதுக்குள் நுழைந்த பாடல்கள் பல.  அதில் இந்தப் பாடலும் ஒன்று. 

கிராமத்துச் சூழ்நிலையில் மென்மையான இசையுடன்  இனிமையான பாடல்.  அழகான மனதில் பதியும் குரல்கள்.

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன

பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சி சேர்த்ததென்ன

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்ததென்ன

துள்ளிக் குதிக்கும் பொன்னி நதிதான்
மெல்ல மெல்ல வந்து அணைக்கும்
மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச
கொஞ்சிக் கொஞ்சி அரவணைக்கும்

பொன்னி நதி போல நானும் உன்ன
பொத்திப் பொத்தி எடுக்கட்டுமா
கண்ணு வழி பேசும் சின்னப் பொண்ண
கட்டிக் கட்டி கொடுக்கட்டுமா

காத்து காத்து நானும் பூத்து பூத்து போனேன்
சேர்ந்து பாடும் போது தேரில் ஏறலானேன்

உன் பேரச் சொல்லி பாடி வச்சா ஊறுதம்மா தேனே

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன

பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சி சேர்த்ததென்ன

கண்ணத் தொறந்தேன்
நெஞ்சில் விழுந்தே
உள்ளுக்குள்ள இன்ப சுகந்தான்
எண்ணம் முழுதும் பொங்கி வழியும்
வாங்கினது நல்ல வரந்தான்

கண்ண தொறக்காம மூடிக்கிட்டேன்
நெஞ்சில் வச்சு அணைச்சுபுட்டேன்
பூட்டு ஒண்ண போட்டு பூட்டிபுட்டேன்
சாவியத்தான் தொலைச்சுபுட்டேன்

உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு
மெழுகு போல நானும் உருகி போனேன் கேட்டு

காலமெல்லாம் கேட்டிடத்தான்
காத்திருக்கேன் பாட்டு

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன

பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சி சேர்த்ததென்ன

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன



= = = = = 

என் தெரிவு (KGG) 

கீழே உள்ள பாடல் சரண வரிகளை எழுதியுள்ளவர், என்னுடைய நண்பர், என்னுடன் அசோக் லேலண்டில் பணி புரிந்தவர், பாலா சிவசங்கரன். 
முன்னொரு காலத்தில் வலைப்பூ பக்கங்களும் எழுதிக் கொண்டிருந்தார். 


= = = = 

46 கருத்துகள்:

  1. வெள்ளி கொலுசு மணி - நிறைய தடவை கேட்ட அருமையான பாடல். அடுத்த பாடலை பிறகுதான் கேட்கணும்.

    பாடுவதைவிட புல்லாங்குழல் - இசையமைப்பாளர் தீனா சொல்கிறார்.. ஒரு ஷிஃப்டுக்கு 1500 ரூபாய் இசைக்குழுவில் உள்ளவர்களுக்கு. அவர் பல நாட்களில் மூணு ஷிஃப்ட் வேலை பார்த்து நாளுக்கு ஐயாயிரம் சம்பாதித்தாராம் (80-90கள்ல). அதை விட்டுவிட்டு இசையமைப்பாளராவது என்று முயற்சி செய்ததில் இரு வருடங்கள் வேலையில்லாமல் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டேன் என்கிறார். இருக்கற வேலையை விட்டுவிட்டு எதுக்கு பாடகராகி, பிறகு உள்ள வேலையும் போய்.. என்று நினைத்திருப்பாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  எனக்கு இந்தப் படத்தில் இன்னொரு பாடலும் பிடிக்கும்..   தினமும் சிரிச்சு மயக்கி..   அந்த ஆரம்ப இசையும் குரலும் பாடலும் பிடிக்கும்.  ஆனால் அந்தப் பாடலில் சிறுக்கி என்று வருவதால் பகிரத்தோன்றவில்லை!  ஆனால் பிடிக்கும்.


      நீங்கள் சொல்வதுபோல இருக்கலாம்.  ஆனால் பணத்தைவிட புகழ்..  அது கிடைக்குமே.  அவர் மனத்திருப்தியைப் பார்த்திருக்கிறார்.

      நீக்கு
    2. பல சொற்கள் தப்பான பொருளில் புழங்குவது போல் இந்தச் "சிறுக்கி"யும் கெட்ட வார்த்தை ஆகிவிட்டது சித்தர்கள் பலர் பயன்படுத்தியது. அம்பிகையைக் குறிப்பது. குறிப்பாக வாலையை! இதே போல் தான் "நாற்றம்" இப்போதெல்லாம் தவறான பொருளில் சொல்லப்படுகிறது. திருஞானசம்பந்தர் பயன்படுத்திய "மயிர்" திருவள்ளுவர் பயன்படுத்திய "மயிர்" இப்போது தப்பான பொருளில் ஓர் கெட்டவார்த்தை ஆகிவிட்டது.

      நீக்கு
  2. இரண்டாவது பாடல் கேட்க நல்லாருக்கு... தேடித் தேடி என் பெண்மை இழந்தேன் என்றால் என்ன அர்த்தம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் நண்பரை வாட்ஸ் அப் மூலமாக கேட்கிறேன்.

      நீக்கு
    2. நெல்லைத்தமிழன் அவர்களே, வல்லிசிம்ஹன் கூறியுள்ளது போல், தேடுதல் பெண்மையின் குணமல்ல என்ற பொருளிலேயே இவ்வரியை எழுதினேன்

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    என்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. வெள்ளிக் கொலுசு மணி மிக மிக இனிமை.
    அருண்மொழி குரலும் மனோ அவர்களின் குரலும் எப்பொழுதும் பிடிக்கும்.
    குறிப்பாக அருண்மொழியின் தமிழ் உச்சரிப்பு மிகச் சிறப்பாக
    இருக்கும்.
    ராமராஜன் படங்களில் பாடல்கள் எல்லாமே மிக அருமையாக
    இருக்கும். அது ஒரு பொற்காலம்.
    இந்தப் படத்தில் தான் அந்த இன்னோரு பாட்டு வருமோ.
    ஆசையில பாத்திகட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
    பாட்டோ.??

    கௌதமி எத்தனை இளமையாக இருக்கிறார்!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு மனோ குரலைவிட அருண்மொழி குரல் பிடிக்கும்மா. "ஆசையில பாத்திகட்டி" வேறு படம். ராமராஜனும் கௌதமியும் ஏழு படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்களாம்.

      நீக்கு
    2. அடேங்கப்பா!!! நிஜமாவா. எல்லாம் ஒரே மாதிரி இருப்பதால்

      குழம்பி விட்டேன்:)
      சொர்க்கமே என்றாலும் பாட்டுக்கூட இவர்கள் தானே!!
      அருமை மா.

      நீக்கு
    3. ஆமாம். பாடும் குரல் இளையராஜா!

      நீக்கு
    4. ☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺

      நீக்கு
  5. எல்லா வரிகளும் தனியாகப் பார்க்கையில்
    இருக்கிற அழகை விடப் பாட்டாகக் கேட்கும்போது
    மிக மிக இனிமை
    நன்றி ஸ்ரீராம் ,.இதமான பாடல்.

    கௌதமன் ஜி பாடலும் நன்றாக இருக்கிறது.
    இந்தக் காலத்துப் பாட்டு.

    இது வரை கேட்டதில்லை.
    @ நெல்லைத்தமிழன்

    பெண்மையின் குணம் தேடிப்போவது கிடையாது.
    இவள் தேடியதால் என் பெண்ணுக்கான இலக்கணத்தையே'
    தொலைத்தேன் என்கிறாளோ?

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை வணக்கம். தலைப்பை பார்த்தவுடனேயெ தெரிந்து விட்டது ராமராஜன் பாடல் என்று. கேட்டதில்லை. இனிமேல்தான் கேட்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    வாழ்க நலம் எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  8. ஆசையில பாத்தி கட்டி..

    அந்தப் பாடல் தான் மிகவும் பிடித்தமானது...

    பதிலளிநீக்கு
  9. அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது ஜி

    பதிலளிநீக்கு
  10. இந்த பாடல் பிடிக்கும். கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  11. அன்பு கௌதமன் சார், எனது முதல் திரைப்படப் பாடலை இங்கு பதிந்ததற்கு மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி. நண்பர்கள் கேட்டு பின்னூட்டங்கள் இட்டிருப்பது மகிழ்வைத் தருகிறது ������

    பதிலளிநீக்கு
  12. வெள்ளிக்கொலுசுமணிப் பாடலைப் பிடிக்காதோரும் இருப்பினமோ.. மறக்க முடியாத பாடல்...
    புதுப்பாடலும் நன்று.

    பதிலளிநீக்கு
  13. (கி)ராமராஜன் படப் பாடல்கள் பெரும்பாலானவை கேட்க இனிமையானவை. இந்தப் பாடலும் மிகவும் ரசித்த பாடலே.

    கேஜிஜியின் நண்பர் எழுதிய பாடலும் கேட்டு ரசித்தேன். அவருக்கு பாராட்டுகள். திரைத்துறையில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலா சிவசங்கரன் அவர்களை வாழ்த்துவோம்.

      நீக்கு
    2. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வெங்கட் நாகராஜ், கௌதமன், கீதா சாம்பசிவம்

      நீக்கு
  14. எனக்கெல்லாம் இப்படிப் படங்கள் வந்ததோ, பாடல்கள் இருப்பதோ தெரியாதது. பொதுவாகப் பட்டி, தொட்டியெல்லாம் பாடும் பாடல்களையே பெரும்பாலும் கேட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!