Ilaiyaraja லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Ilaiyaraja லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8.1.21

வெள்ளி வீடியோ : நீர் கொண்டு போகின்ற கார்மேகமே, தூரல்கள் நீ போட தாகம் தீரும்...

 மகுடி!  

இதை வாசித்து பாம்பைப் பிடித்து விடுவார்கள் என்று நம்பி இருக்கிறேன்.  இதை வாசித்தால் எங்கிருந்தும் ஒளிந்திருக்கும் பாம்புகள் வந்துவிடும் என்று நம்பி இருக்கிறேன்.  ஆனால் சுவாரஸ்யமான வாத்தியம்தான் மகுடி.  அதை எப்படி செய்கிறார்கள் என்று பாருங்கள்.

1.6.12

இளையராஜா....

     
சமீபத்தில் (விகடனில் என்று நினைவு...) ஒரு சிறுகதை படித்தேன். இளையராஜாவும் வைரமுத்துவும் மீண்டும் இணையாதது ரசிகர்களுக்குச் செய்யும் துரோகம் என்ற கருவில். புதுமையாக, நன்றாக இருந்தது. சில பழைய பாடல்களைக் கேட்கும்போது, எனக்கும் அப்படித் தோன்றியதுண்டு. அவர்கள் படைப்பில் வெளிவந்த அந்தப் பாடல்களை அவர்களே கேட்கும்போது ஒருவரைப் பற்றி இன்னொருவர் நினைக்காமலா இருப்பார்கள் என்று அந்தக் கதையில் கேட்டிருந்தார்கள்..... ராஜமோகம், வாலிபதாகம்... மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனைப் பூசுகிறேன்.....
            
"அண்ணே... என்ன அண்ணே டைப் அடிச்சிகிட்டு இருக்கீங்க..."
               
"இளையராஜா பாட்டு பத்தி எழுதிட்டு நாலஞ்சு பாட்டுப் போடலாம்னுதாண்டா..."
                
"ஏண்ணே.. இங்க வந்து யார்ணே பா(ட்டு கே)க்கப் போறாங்க ...  வேணும்னா அவிங்கவிங்க வூட்லையே ரேடியோப் பொட்டி, பாட்டு மெஷினு வச்சிருக்காய்ங்க... அவிங்களுக்குப் பிடிச்ச பாட்ட அதுல கேப்பாய்ங்களா... அத விட்டுப் போட்டு இங்க வந்து கேப்பாய்ங்களா..."
                
"உன்ன எவண்டா இப்போ இங்கே கூப்பிட்டது...ச்சே... எழுதற மூடே ஸ்பாயில் பண்ணிட்டியே... நமக்குப் பிடிச்சுதுன்னு சொன்னா, இங்க வந்து கேக்கறாங்களோ இல்லையோ... என்ன பாட்டு பத்தி கதையளந்துருக்கோம்னு பாத்துட்டு அவங்களுக்குத் தோணினதைச் சொல்லிட்டுப் போவாங்கடா... நமக்குப் பிடிச்ச பாட்டு ஷேர் பண்ணினோம்னு ஒரு ஆத்ம திருப்திதாண்டா.... "
                   
"என்ன திருப்திண்ணே..."
                   
"ஆத்ம திருப்தி... ஏன் கேக்கறே?"
                
"ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல...சரி எழுதுங்கண்ணே...என்ன பாட்டுண்ணே மொதல்ல..?"
               
"நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்..."
           
"ஓ.. பாட்டுல ஒங்களக் கவர்ந்த வரி சொல்றீங்களாக்கும்.... தெரியும்ணே இந்தப் பாட்டு.... அந்தப் பெண்குரல் சுசீலாம்மாவோ, ஜானகியம்மாவோ  பாடியிருந்தா எப்படியிருக்கும்னு நினைச்சுப்பேன்..."
                   
"பாத்தியா.... இதாண்டா... உனக்கே ஏதோ சொல்லணும்னு தோணுது பாரு..."
              
"அடுத்துண்ணே....?"
              
"என்னில் நீயடி.... உன்னில் நானடி..."
               
"என்ன பாட்டுண்ணே..."
               
"பாரேன்..."

"யார்ணே அந்தப் பொண்ணு.... அப்புறம் வேற படத்துல ஒண்ணும் நடிக்கலையோ.... பாட்டு எஸ் பி பி குரலுக்காகவே கேக்கலாம்ணே... கார்த்திக் பாட்டு இன்னொன்னு கூட போடுங்கண்ணே..."
                  
"பூ பூ ன்னே வர்றா மாதிரி ஒரு பாட்டுடா.... கேளேன்... இளையராஜா என்ன போடு போட்டிருக்கார் பாரு.."

"சூப்பர்ணே.... அடுத்து..."
              
"பெண் குரல்ல ஒரு மெலடிடா.... "  
            
"மாலையில் யாரோ மனதோடு பேச..."

"அடுத்த பாட்டு... வேணும்னு செய்யாம பாட்டுக்காகப் போட்டா அதுவும் கார்த்திக்..  ஜேசுதாஸ் குரலும் ஜானகியம்மா குரலும் இளையராஜா டியூனும்.... செமப் பாட்டுடா... கேளேன்..."
       
"காற்று வான்கூறும் கருணையின் கவிதை..."

"அடுத்த பாட்டு.... "காலடி ஓசையிலே... யாழிசை கேட்டு வந்தேன்.. எஸ் பி பி குரலும் ஜானகியம்மா குரலும் இணைந்து.... அந்த ஆரம்ப ஆலாபனை இழையலைக் கேளேன்.... என்ன இனிமையான பாட்டு தெரியுமாடா.... என்னடா படிக்கிறே..."
          
"இங்களிஷ்ல பாட்டுக்கு நடுவுல எழுதிருக்காங்கண்ணே.... அது என்ன வரின்னு புரியுதான்னு பார்க்கறேன்..." "YOUR BODY IS SOFT AND IT IS IN GOLDEN COLOR! , "WHEN MEGALA DANCED IN THAT PLACE!..."   
              
"அண்ணே... ஆறு பாட்டாச்சுண்ணே..."
                  
"இருடா இன்னும் இருக்கு.."  
   
"அம்மாடி...   ஊரெல்லாம் போலி வேஷம்..."சோகமாவா முடிக்கறது... ஜாலியா ஒரு பாட்டு...  
     
."காதல் பாட்டுதான் பாடிக்கோ ...பாடிக்கோ..."
    
"போறும்ணே... அலுத்துடும்....பதிவு வேற ரொம்ப நீளமாப் போகுதுண்ணே... "
      
"டேய்...  இன்னும் நாலஞ்சு எடுத்து வச்சிருக்கேண்டா..."
     
"ஐயோ... போறும்ணே...  அலுத்துடும்... "
    
"இன்னும் ஒண்ணே ஒண்ணுடா.."
    
"போண்ணே... கேக்கறவங்களை நினைச்சிப் பாருண்ணே... உன்னப் பத்தியே யோசிக்கிறே..."
    
"............................................................"
   
"விடுண்ணே... இன்னொரு சந்தர்ப்பத்துல பார்க்கலாம்....அப்புறம் இன்னொண்ணு வழக்கமா சொல்வியே அத்தச் சொல்லி முடிண்ணே"
                     
"என்னடா...."
            
"அதான் காட்சி முக்கியம் இல்லை கானம்தான் முக்கியம்... அபபடி இப்படிம்பியே...."
                   
"அதான் நீயே சொல்லிட்டியே... சரி விடு அப்புறம் பார்க்கலாம்..."
               
"விடுண்ணே... இன்னொரு சந்தர்ப்பத்துல பார்க்கலாம்...."