ஞாயிறு, 10 அக்டோபர், 2021

கீரிப்பாறை எஸ்டேட் பயணம் - 03

 

இன்று கீரிப்பாறை போவது என்று தீர்மானம் ஒருமுறை சுற்றுமுற்றும் கீரிப்பாறை இருக்கும் திசையிலும் அழகிய பாண்டிபுரம் சாலை 

அழகிய பாண்டிபுரம் சாலையின் மேலே வாய்க்கால் அங்கங்கு ஒரு கிராம தேவதை 


 

தொடர்ச்சி - அடுத்த வாரம். 

= = = = =

28 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோரும் என்றும் இறைவன் அருளால்
  ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையில் ஆரோக்கியம் மேலோங்கி மன அமைதி நிறையட்டும்.

  பதிலளிநீக்கு
 3. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. பசுமை இன்னமும் அங்கே அதிக அளவில் காண முடிவது சந்தோஷமாக உள்ளது. சாலை மேலே வாய்க்கால்? ஆச்சரியம் தான். எல்லாப் படங்களும் சுந்தரபாண்டியபுரம் சாலையும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா எங்க ஊர்ப்பக்கம் கட்டுமானங்கள் வரத் தொடங்கிவிட்டன இன்னும் அடர்த்தியான மலை இருந்தது நாங்கள் இருந்தப்ப. இப்ப நிறைய தனியார்க்கல்லூரிகள் தக்கலை அருகில் வந்துவிட்டன...சில மலைகளுக்கு நடுவில்.

   இருந்தாலும் பசுமை இருக்கு கீரிப்பாறை சைட் அழகியபாண்டிபுரம் சைட் எல்லாம் அதிகம் கைவைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்...

   சுந்தரபாண்டியபுரம்!!! கீதாக்கா ஹாஹாஹா .... நிஜம் தான் அழகிதான்!!!

   கீதா

   நீக்கு
  2. ஆமாம் சாலை மேலே வாய்க்கால் உண்டு...தக்கலை அருகில், வில்லுக்குறியிலும் ....தக்கலை திருவனந்தபுரம் சாலையில் வலப்புறம் பிரியும் ரோட் வழி உள்ளார போனா....பசுமை பசுமை பசுமை...பத்மநாபபுரம் செல்லும் பாதையும் சரி அப்படியே திற்பரப்பு அருவி, மாத்தூர் பாலம், குலசேகரம், பறளி ஆற்றின் குறுக்கே பெருஞ்சாணி டேம், கோதையாற்றின் குறுக்கே பேச்சிப்பாறை டேம், கோதையார் லோயர் எல்லாம் போகும் வழிகள் அசாத்தியமாக இருக்கும். மனம் அங்கேயே செட்டில் ஆகிவிடலாமா என்று ஈர்த்துவிடும். அத்தனை அழகான இடம். நிறைய அருவிகள் உண்டு.

   கீதா

   நீக்கு
  3. பத்மநாபபுரம் சாலையின் அழகைக் கண்ணாரக் கண்டோம். 3 நாட்கள் தங்கி இருந்தோம். ஆனாலும் தொட்டிப்பாலமும்/தெரிசனங்கோப்பும் போக முடியலை. ஆங்காங்கே மலைகளில் வெள்ளிக்கோடாகத் தெரிந்த அருவிகளையும் பார்த்தோம். நீர் வளம் அதிகம்.

   நீக்கு
 4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!!

  பதிலளிநீக்கு
 6. படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன! அழகிய பாண்டிபுரம், கீரிப்பாறை !! இந்த இடங்கள் எங்கே இருக்கின்றன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கே இருக்கின்றன என்று சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் பதிவாசிரியர்தான் சொல்லவேண்டும்.

   நீக்கு
  2. நாகர்கோவிலில் இருந்து வடக்கே திசையன் விளை நோக்கி சென்றால் இரைச்சகுளம்,திசையன் விலை,தரிசனம் கோப்பு,அழகிய பாண்டிபுரம்,வழியாக குணசேகரம் செல்லும் சாலையில் கீரிப்பாறை எஸ்டேட் இருக்கிறது.

   நீக்கு
  3. இங்ஙன ஒரு நாரோயில்காரி இருக்கா!!!!!!!

   மறந்திடாதீங்க!!!!! ஹாஹாஹா

   கீதா

   நீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 8. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  "பாதை தெரியுது பார்" பாதைகள் படம் அருமை. இரு புறமும் ஓங்கி உயர்ந்த மரங்கள் அழகு.

  பழைய வீடு படம் அருமை.

  பதிலளிநீக்கு
 9. படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன. அழகியபாண்டிபுரம் மேலே உள்ள வாய்க்கால் வில்லுக்குறியிலும் கன்னியாகுமரி திருவனந்தபுரம் நெடுஞ்சாலயின் மேலே உண்டு. அழகான வாய்க்கால். படிகள் உண்டு ஏறிச் சென்று வாய்க்கால் போகும் இடங்களில் படித்துறை இருக்கும் அதில் மக்கள் துணி துவைத்துக் குளிப்பதும் உண்டு. மஹேந்திரகிரியில் உற்பத்தியாகும் பஹ்ரலி ஆறு வறட்சி ஏற்பட்ட சமயம் இடையில் உள்ள ஊர்களின் விவசயாத்திற்குப் பயன்படும் வகையில் உயரத்தில் மாத்தூர் தொட்டிப் பாலம் அமைக்கப்பட்டு ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்குத் தண்ணீர் கொண்டு செல்ல கட்டப்பட்டது குறிப்பாக நீர்ப்பாசனத்திற்கு...

  அப்படி அது தேங்காபட்டணம் வரை..

  அழகான ஊர் எங்கள் ஊர். மாத்தூர் தொட்டிப் பாலம் மிக் மிக இயற்கையுடன் எந்தவித கூடுதல் கட்டுமானங்களும் இல்லாமல் இருந்தது நாங்கள் இருந்தப்ப இப்போ சுற்றுலாத் தளம் என்ற பெயரில் பல கட்டுமானங்கள அதைச் சுற்றி அருகே என்று...அப்போதும் நன்றாகவே ஏற முடிந்த்து. எதற்காக இப்படி ஒரு கூடுதல் கட்டுமானம் என்று தெரியவில்லை. என்றாலும் நல்லகாலம் ரப்பர் தோட்டங்களும் தென்னைகளும் வயல்களும் இருக்கின்றன. அவை அழியாமல் இருந்தால் சரி.

  கீதா

  பதிலளிநீக்கு
 10. இயற்கையின் படைப்பில் அழகிய இடங்கள்.

  பதிலளிநீக்கு
 11. இயற்கை எழிலைப் பிரதிபலிக்கும் அழகிய படங்கள்..

  அழகின் காலடியில்
  அமைதி காண வந்தேன்..

  - என்று சத்தமாகப் பாடலாம்..

  வாழ்க வையகம்..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!