புதன், 20 அக்டோபர், 2021

கணவன், தன் மனைவிக்குச் செய்யும் மிகப் பெரிய உதவி என்ன?

 

நெல்லைத்தமிழன் :

1. எனக்குத் தெரிந்து, இரண்டு ஜெயித்தவர்களிடையே நடக்கும் திருமணம் அவர்களின் புகழை மங்கச் செய்கிறது அல்லது பிரிவு, கசப்புணர்வை வளர்க்கிறது. அதற்கு என்ன காரணமாக இருக்கும்? (உதாரணம் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, அமிதாப் போன்றோரின் குழந்தைகள், கோஹ்லி-அனுஷ்கா... என்று பெரிய லிஸ்ட்)   

$ மிகப் புகழ் பெற்றவர்களின் குழந்தைகள் திறமையோ அல்லது புகழுக்கு அருகதை அற்றவர்களாகவோ  வளர்வது இயல்பே.

சாதாரண குடும்பத்திலிருந்து காமராஜ், கலாம், கோபாலனோ புகழ் பெற்றதை கண்டிருக்கிறோம்.

# ஓரளவு சரியாக இருக்கும்.  முற்றிலும் அல்ல என்று சொல்லலாம். ஈகோ என்றறியப்படும் மனப்பாங்கு வசதி ஏராளமாக உள்ள வீட்டுக் குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட இயல்பாக வந்து விடும்.  கல்யாணம் என்பது ஆற்றல் மிக்க துணை கணவனானாலும் மனைவி ஆனாலும் விட்டுக்கொடுத்து அடுத்தவர் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போனால் வெற்றி பெறும்.  அதற்கு அந்த கேப்டன் ஓரளவு புரிதலுடன் இருப்பது அவசியம். "நீ என்ன பெரிய பிஸ்தாவா ? உங்க அப்பா பெருமைய அளவோட வச்சுக்க" எனும் சந்தர்ப்பம் வர இடம் தரலாகாது.  இது செயலளவில் கடினம்.

இதெல்லாம் வெறும் ஊகம்தான்.  உண்மை நிலை மாறுபாடாகவும் இருக்கலாம்.

2. ஒரு கணவன், தன் மனைவிக்குச் செய்யும் மிகப் பெரிய உதவி என்ன?

$ காலத்தில் செய்யும் எவ்வுதவியும்.

# மனைவியின் பெருமைகளை மங்கச் செய்யாமல் இருப்பது.  குறைகளை வெளியில் தெரியாமல் காப்பது.  குறைந்த பட்சம் குடும்ப அளவிலாவது மனைவியின் நற்பெயருக்கு ஊறு வராமல் காப்பது.  அவளது அன்றாடப் பணிகளில் குறைந்த அளவாவது உதவி செய்வது.

= = = = =

எங்கள் கேள்விகள் :

1) நீங்கள் கொண்டாடும் எல்லா பண்டிகைகளையும் - அவற்றுக்கான முறைப்படி சற்றும் மாறாமல், முன்னோர்கள் சொன்ன வழியிலேயே கொண்டாடுவீர்களா? அல்லது, சௌகரியத்திற்கேற்ப / வசதிக்கேற்றபடி மாற்றங்களோடு கொண்டாடுவீர்களா?

2) வீட்டு உபயோகப் பொருட்களில், குழந்தைகளுக்கு நன்மை விளைவிப்பது எது? தீமை விளைவிப்பது எது?

3) சப்பாத்தி / பூரி - (அப்பளமிடும்) உருளை : stainless ஸ்டீல் / மரம் / பிளாஸ்டிக் / வேறு உலோகங்கள் - உங்கள் சாய்ஸ் என்ன? 

4) " சாரி - இதிலெல்லாம் நான் ரிஸ்க் எடுக்கமாட்டேன் " இது உங்கள் பதிலாக அமையவேண்டும் என்றால், கேள்வி எதுவாக இருக்கும்? 

5) மேற்கண்ட கேள்விகளில் உங்களை அதிகம் யோசிக்கவைத்த கேள்வி எது? 

= = = = =

படம் பார்த்துக் கருத்துரையுங்கள் :

1) 

2) 

3) 102 கருத்துகள்:

 1. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோரும் என்றும் ஆரோக்கியம், அமைதி ,ஆனந்தத்தோடு
  இருக்க இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. கணவன் தன் மனைவிக்கு செய்யும் மரியாதையை எப்பொழுதும்
  மறக்கக் கூடாது.
  மனைவியும் அதே மரியாதையைக்
  கணவனிடம் வைத்திருக்க வேண்டும்

  இந்த வாழ்க்கை இனியதாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 3. எங்களின் கேள்வின் 1,
  பண்டிகைககள் பழைய பிரகாரமே செய்வது கொஞ்சம்
  கடினம்.
  அன்ன ஆகாரம் இல்லாமல் பக்ஷணம் செய்வது
  ,பிறகு சாப்பிடுவது என்னால் முடியாத காரியம்'

  மகள் ,மருமகன் அவர்களது முன்னோருக்கு செய்யும்
  காரியங்களில் சாங்கோபாங்கமாகப்
  பின்பற்றுவார்கள்.

  பதிலளிநீக்கு
 4. வீட்டு உபயோகப் பொருட்களில் கவனமாக இருக்க வேண்டியவை மிக்சி, மேஜை ஃபான்,
  மற்றும் மின்சார பொருட்கள்.

  பதிலளிநீக்கு
 5. சப்பாத்தி இட, நான் வைத்திருந்தது,
  தில்லியிலிருந்து 55 வருடங்களுக்கு முன்
  தந்தை வாங்கி வந்த சலவைக்கல் தான்.

  அவசரத்துக்கு மரப்பலகையும் உண்டு.

  பதிலளிநீக்கு
 6. " சாரி - இதிலெல்லாம் நான் ரிஸ்க் எடுக்கமாட்டேன் " இது உங்கள் பதிலாக அமையவேண்டும் என்றால், கேள்வி எதுவாக இருக்கும்? ???????????/////////////////மெண்ட்டலாகப் பாதிக்கும் சில நிலமைகள்
  வேண்டாமே என்று தோன்றும்.

  உடல் ரீதியாக என்றால்
  சில சாப்பாடு,
  தெரியாத இடங்களுக்குத் தனியாகப்
  போவது இதற்கெல்லாம் ரிஸ்க் எடுக்க வேண்டாம்
  என்று தோன்றும்.

  பதிலளிநீக்கு
 7. 2) வீட்டு உபயோகப் பொருட்களில், குழந்தைகளுக்கு நன்மை விளைவிப்பது எது? தீமை விளைவிப்பது எது?//////


  இந்தக் கேள்விதான் என்னை யோசிக்க வைத்தது மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிம்மா... இதில் யோசிக்க என்ன இருக்கிறது? வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்துமே நாம் சிறிது கவனக் குறைவாக இருந்தால் குழந்தைக்கு ஆபத்துதான். குழந்தை கொஞ்சம் வளர்ந்தபிறகுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்க முடியும். (அப்படியுமே கமலா ஹரிஹரன் மேடத்தின் சமீப அனுபவம் எனக்கு நினைவுக்கு வருது)

   தீமை என்று என்னைக் கேட்டால் கம்ப்யூட்டர் கேம்ஸ் சம்பந்தமான அனைத்தும்.

   நீக்கு
  2. முரளிமா,
   சரியா சொல்லணுமே என்று தான் யோசித்தேன்,.
   நமக்கு உபயோகம் . குழந்தைகளுக்கு
   ஆபத்து ஆகும் பொருட்களே நினைவுக்கு வந்தன.

   எல்லாவற்றையும் வாயில போட்டுக் கொண்டு விடுமே!!

   நீக்கு
 8. முதல் படம்,
  அம்மா , எனக்கு ஐஸ்க்ரீம் வேண்டும்:)

  இரண்டாவது படம்,
  மேரி ஹாட் டூ லிட்டில் லாம்ப்ஸ்:)

  மூன்றாவது படம்,
  என்னை விடுங்க. நானும் அவனோட தூங்கறேன்.

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கி நிம்மதியும் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 10. போன வாரம் நெல்லையைத் தவிர்த்து வேறே யாருமே கேள்வி கேட்கலை போல! பல பிரபலங்களின் குழந்தைகள் வாழ்க்கையில் தோல்வியைத் தான் சந்திக்கின்றனர். இதற்கு வாழ்க்கை முறை காரணமா? வளர்ப்பு காரணமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 2.முதிர்கன்னர்கள் இருக்கும் இந்தக் காலத்தில் இன்னமும் ஜாதகம்/ பெண்ணின் நக்ஷத்திரம் போன்றவற்றைப் பார்ப்பது சரியா?

   3. இப்போதெல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆனதுமே அந்தப் பெண்ணும்/பையரும் தாங்கள் வசிக்கப் போகும் வீட்டை இருவருமாகச் சேர்ந்து பார்த்து முடிவு செய்து விடுகிறார்கள். சாமான்கள் எல்லாமும் கல்யாணத்துக்கு முன்பிருந்தே அங்கே போய்விடுகின்றன. இது சரியா?

   நீக்கு
  2. 4.முன்னெல்லாம் ஐந்து நாட்கள் கல்யாணம்/பின்னர் நான்கு நாட்கள்/பின்னர் வந்த நாட்களில் மூன்று நாட்கள் என இருந்தது இப்போது ஒன்றரை நாளில் முடிந்து விடுகிறது. இது சரியா?
   நீங்கள் உங்கள் கேள்விகளில் கேட்ட பாரம்பரியத்தில் மாற்றங்கள் இங்கேயும் இருக்கின்றன. இது வசதிக்கேற்ப ஏற்பட்ட மாற்றமா?
   5.முன்னெல்லாம் வைதிக காரியங்கள் தொடர்ந்து இருக்கும் கல்யாணங்களில். ஐந்து நாட்களுக்கும் பெண்/பிள்ளைக்கு அக்னியின் முன் அமர்ந்து செய்ய வேண்டியவை இருக்கும். அவற்றை இப்போதெல்லாம் கல்யாணத்தன்று காலை 2,3 மணி நேரங்களிலேயே முடிக்கிறார்களே! இது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

   நீக்கு
  3. //சாமான்கள் எல்லாமும் கல்யாணத்துக்கு முன்பிருந்தே அங்கே போய்விடுகின்றன// - படுக்கை முதலிலேயே போகாமல் இருக்கும்வரை சரிதான். இருந்தாலும், சப்தபதி முடியும் வரை பொறுத்திருப்பது எல்லோருக்கும் நல்லதுதான்.

   நீக்கு
 11. கணவன், மனைவியை விட்டுக்கொடுக்காமல் இருந்தால் போதும். எந்த நிலையிலும் மனைவியை விட்டுக் கொடுக்கவே கூடாது/யார் முன்னிலையிலும்.

  பதிலளிநீக்கு
 12. கூடியவரை வீட்டில் கடைப்பிடிக்கும் வழிமுறைகளை/பாரம்பரியத்தை மாற்றுவதில்லை. ஆனால் இது என்னோடு முடிந்து போகலாம். பெண்/பிள்ளை எல்லாம் எங்கெங்கோ இருப்பதால் அவர்களைப் பொறுத்தவரை அந்த அந்தப் பண்டிகைகளைக் கொண்டாடுவதே பெரிய விஷயம்! :) நாங்களும் வற்புறுத்துவது இல்லை.

  பதிலளிநீக்கு
 13. வீட்டு உபயோகப் பொருட்களில் குழந்தைக்கு நன்மை விளைவிப்பது ஹார்லிக்ஸ் மிக்சர். அதில் குழந்தையின் பால் பவுடரைப் போட்டு வெந்நீரை விட்டு நன்கு அடித்தால் கட்டிகள் இல்லாமல் கரையும். ஆனால் இப்போதெல்லாம் அம்பேரிக்காவில் இருப்பது போல் திரவ வடிவிலேயே பாதுகாக்கப்பட்ட/கெட்டுப் போகாதக் குழந்தை உணவு வந்திருக்கிறது. மற்றபடி குழந்தையின் பாட்டில்களைச்சுத்தம் செய்யப் பயன்படும் பாத்திரங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு நன்மை தரும் பாத்திரங்களே! மற்ற கத்தி, கபடா, போன்ற சாமான்களால் குழந்தைக்குத் தீங்கே விளையும்.

  பதிலளிநீக்கு
 14. எவர்சில்வரில் அப்பளக்குழவி இருக்கு என்றாலும் என்னிடம் இருப்பது மரக்குழவியே/ பலகை எல்லாம் வைச்சுக்கலை. கல்யாணம் ஆன புதுசில் கடப்பைக்கல்லில் மாவை உருட்டிச் சப்பாத்தி இடுவேன். பின்னாட்களில் ராஜஸ்தானில் வெறும் 5 ரூபாய்க்கு அப்போ வாங்கிய சலவைக்கல் தான். இன்னமும் வைச்சிருக்கேன். அநேகமாகத் தெரிந்தவர்களுக்கெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கோம்.

  பதிலளிநீக்கு
 15. நான்கு, ஐந்து இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில். யோசிக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிலைக்கீழே சொல்லிட்டேன். பானுமதியின் கருத்துரைக்குக் கீழே! இதைத் தவிரவும் திருமண விஷயங்களிலும் பெண்/பிள்ளை இவர்கள் விருப்பத்துக்கு மாறாக நாமாக ஏதேனும் முடிவெடுத்துச் செய்வதும் பயங்கர ரிஸ்க்.

   என்னை அதிகம் யோசிக்க வைத்ததும் நான்காம் கேள்வி தான். பல விஷயங்கள் தோன்றின. என்றாலும் இரண்டை மட்டும் பகிர்ந்திருக்கேன்.

   நீக்கு
 16. ஹாஹாஹா, குட்டிக்குரங்கு அம்மாவுடன் இப்படி விளையாடுவதை நிறையப் பார்த்திருக்கேன்.
  ரேவதி சொன்னது தான். மேரி ஹாட் ய லிட்டில் லாம்ப், லிட்டில் லாம்ப்

  குழந்தை தூங்கறச்சே இது வந்து எழுப்பறதே!

  பதிலளிநீக்கு
 17. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 18. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 19. 1) நீங்கள் கொண்டாடும் எல்லா பண்டிகைகளையும் - அவற்றுக்கான முறைப்படி சற்றும் மாறாமல், முன்னோர்கள் சொன்ன வழியிலேயே கொண்டாடுவீர்களா? அல்லது, சௌகரியத்திற்கேற்ப / வசதிக்கேற்றபடி மாற்றங்களோடு கொண்டாடுவீர்களா?

  பண்டிகைகள் கொண்டாடுவது அவர் அவர் வசதியை பொறுத்தது. முறை என்பதோ, விதிகள் என்பதோ வரையறுக்கப் படவில்லை. அது தானாக நிகழ்ந்தது. ஆகவே பண்டிகைகளை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடுவோம். கொண்டாடாமல் இருக்கவும் செய்வோம்.


  2) வீட்டு உபயோகப் பொருட்களில், குழந்தைகளுக்கு நன்மை விளைவிப்பது எது? தீமை விளைவிப்பது எது?  உபயோகப் பொருட்கள் என்றபோதே உபயோகம் அற்றவை இல்லை என்று அர்த்தம் ஆகிறது. தீமை நன்மை என்பது பயன்படுத்தும் விதத்தில்தான். குழைந்தைகள் கையாளத்

  ​தெரி​யாத பொருட்களை அவர்கள் கைக்கு ​ எட்டாதவாறு வைக்கலாம். ​

  ​3) சப்பாத்தி / பூரி - (அப்பளமிடும்) உருளை : stainless ஸ்டீல் / மரம் / பிளாஸ்டிக் / வேறு உலோகங்கள் - உங்கள் சாய்ஸ் என்ன? ​

  மரம்தான். அளவான அழுத்தம். எடை குறைவு, மனைவியின் ஆயுதம். தற்போது இருவர் மட்டும் தான் என்பதால் ready to cook சப்பாத்தி தான்.


  4) " சாரி - இதிலெல்லாம் நான் ரிஸ்க் எடுக்கமாட்டேன் " இது உங்கள் பதிலாக அமையவேண்டும் என்றால், கேள்வி எதுவாக இருக்கும்?  ​பாங்குச் சந்தை தான். சுட்டுக் கொண்ட அனுபவம் உண்டு.  5) மேற்கண்ட கேள்விகளில் உங்களை அதிகம் யோசிக்கவைத்த கேள்வி எது?

  சந்தேகம் இல்லாமல் 4 தான்.

  பதிலளிநீக்கு
 20. பதிவு நன்று. கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 21. ஒரு கணவன், தன் மனைவிக்குச் செய்யும் மிகப் பெரிய உதவி என்ன?//

  மனைவியின் உணர்வுகளை, விருப்பங்களை கருத்துகளை, அவளது உறவினர்களை மதித்து நடப்பது. (வைஸ்வெர்சா)

  கீதா

  பதிலளிநீக்கு
 22. 1) நீங்கள் கொண்டாடும் எல்லா பண்டிகைகளையும் - அவற்றுக்கான முறைப்படி சற்றும் மாறாமல், முன்னோர்கள் சொன்ன வழியிலேயே கொண்டாடுவீர்களா? அல்லது, சௌகரியத்திற்கேற்ப / வசதிக்கேற்றபடி மாற்றங்களோடு கொண்டாடுவீர்களா?//

  இல்லை அப்படியே என்பது இப்போது காலம் மாறி வரும் நிலையில் கடினம் எனவே கூடியவரை விட்டுத் தராமல் கொண்டாடுவதுதான். ஆனால் எல்லாமே நம் மனதில் தான் இருக்கிறது. அப்படியே கொண்டாடுவதற்கான வசதிகள் சூழல்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

  ஏனென்றால் சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டால் ஒரு வேளை அதைக்கடைப்பிக்காமல் போனால் மனம் ஓ அதனால் பாவம் வந்துவிடுமோ தவறோ என்று நினைத்து அது மன உளைச்சலுக்கும் தள்ளும். இறைவனிடம் ஆத்மார்த்தமான அன்பு கொண்டு கொண்டாடினால் நல்லது என்று என் தனிப்பட்டக் கருத்து. பிரார்த்தனை என்பதுதான் மிக மிக முக்கியம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 23. 3) சப்பாத்தி / பூரி - (அப்பளமிடும்) உருளை : stainless ஸ்டீல் / மரம் / பிளாஸ்டிக் / வேறு உலோகங்கள் - உங்கள் சாய்ஸ் என்ன? //

  மரம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 24. 4. பண விஷயங்களில். ஆனால் ஃபினான்ஸ் மினிஸ்ட்ரி என் கீழ் இல்லையே!!!!!!!!!!!!

  2) வீட்டு உபயோகப் பொருட்களில், குழந்தைகளுக்கு நன்மை விளைவிப்பது எது? தீமை விளைவிப்பது எது?

  உயபோகப்பொருட்கள் என்றால் எல்லாமே குழந்தைகளுக்கு ரிஸ்க்தான். கவனமாகக் கையாள வேண்டும் என்பதால். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் நிறைய இருந்தாலும் ஸ்க்ரூ பின் எலக்ட்ரிக் சாதனங்கள், ஷாம்பூ, மருந்து, சோப்பு போன்ற பொருட்கள் அவர்கள் கைக்கு எட்டாமல் இருப்பது நல்லது. அது போல ஸ்விட்ச் ப்ளக் பாயின்ட்கள் கீழே அவர்கள் எட்டும்படி இருக்கக் கூடாது. கூடியவரை அடுக்களையில் அவர்களை அனுமதிக்காமல் இருப்பது அல்லது பெரியவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

  கண்டிப்பாக மொபைல், வீடியொ கேம்ஸ் அவர்களுக்குப் பழக்கக் கூடாது புரிந்துகொள்ளும் விவரம் வரும் வரையில்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா தி/கீதா, எங்க வீட்டிலே நான் தான் எல்லாவற்றுக்கும் ஆமோதிப்பு/கையெழுத்துப் போடணும். அப்புறம் தான் விஷயமே நகரும். ஆனால் இவற்றை எல்லாம் யோசித்து என் கையெழுத்துக்குக் கொண்டு வருவது நம்ம ரங்க்ஸின் வேலை. நான் வெறும் குடியரசுத் தலைவி தான்! அவர் தான் பிரதமர்/நிதி மந்திரி/வெளிநாட்டு/உள்நாட்டு மந்திரி/சுகாதார மந்திரி/போக்குவரத்து மந்திரினு எல்லாப் பதவிகளையும் சுமக்க முடியாமல் சுமந்துட்டு இருக்கார். கையெழுத்துப் போடுவதோடு என் வேலை முடிஞ்சுடும்! :)))))))

   நீக்கு
 25. மூன்று படங்களும் செம ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 26. ஐந்தாவது கேள்வி மிகவும் மிகவும் யோசிக்க வைத்தது...(!)

  பதிலளிநீக்கு
 27. இந்த வாரம் நெல்லையின் சோலோ கச்சேரியா? பிரபலங்கள் மண வாழ்க்கை சிக்கலுக்கு #  கூறியிருந்த பதில் ரொம்ப சரி. அந்த கேள்விக்கு பதிலாக ஒரு பதிவே எழுதலாம். அதைப்போலவே இரண்டாவது கேள்விக்கும் சரியான பதிலைக் கூறி தான் ஒரு சிறந்த கணவர் என்று நிரூபித்திருக்கிறார். 

  பதிலளிநீக்கு
 28. நவராத்திரிக்கு கொலு வைக்கிறேன் , சுண்டல் செய்கிறேன். சரஸ்வதி பூஜையன்று என் புகுந்த வீட்டின் வழக்கத்தின்படி புத்தகங்களை பாட்டில் சுற்றி வைத்துதான் பூஜை செய்வேன். தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து புதுசு உடுத்திக் கொள்கிறோம், பட்சணங்கள் அம்மா செய்தது போல் நிறைய வெரைட்டி கிடையாது. கோகுலாஷ்டமி அன்று பூஜை முடியும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்த காலம் போய் இப்போது காலையில் உப்பில்லாமல் சாப்பிடுகிறேன், கார்த்திகை அன்று மாலை விளக்கேற்றும் வரை சாப்பிட மாட்டேன். வெளிநாட்டில் இருந்த வரை காலையிலேயே பொங்கல் வைத்து விடுவேன். இங்கு வந்த பிறகு தை மாதம் பிறக்கும் பொழுதுதான் பொங்கல் வைக்கிறேன். வருடப் பிறப்புக்கு வேப்பம்பூ மாங்காய் பச்சடி கண்டிப்பாக உண்டு. கனி வைப்பேன்.  பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டையும், ஆவணி அவிட்டதிற்கு போளி வடையும் கண்டிப்பாக உண்டு. இருந்தாலும், பெரியவர்கள் செய்த முறைப்படி செய்கிறோமா/ என்று அவ்வப்பொழுது சந்தேகம் வரும். ஆசாரம் கொஞ்சம் குறைவுதான். என்னால் முடிந்த வரை மரபுச் சங்கிலி அறுந்து விடாமல் பார்ததுக்கொள்கிறேன் என்று நினைக்கிறேன். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @பானுமதி, இவை எல்லாம் நானும் தொடர்ந்து செய்து வருகிறேன். அதிலும் நவராத்திரிக்கு தினம் தினம் ஒரு நிவேதனம்/முக்கியமாகச் சுண்டல் செய்வதைப் பற்றி இந்த வருஷம் ஒரு பட்டி மன்றமே நடத்தினாங்க. அதே போல் தினம் தினம் மஞ்சள், குங்குமம்வாங்கிக்கக் கூப்பிட்டதற்கும்! ஒரு சிலர் இதனால் என்னைக் கூப்பிடவே இல்லை. :)))))) மனிதர்களின் பல்வேறு விதமான மனநிலைகள் விசித்திரமாக இருக்கின்றன.

   நீக்கு
  2. மற்றபடி போளி பண்ணுவதெல்லாம் நிறுத்திச் சில வருஷங்கள் ஆகிவிட்டன. அவருக்குக் கொஞ்சம் இனிப்புச் சேர்த்தாலும் சர்க்கரை அளவு எகிறுவதால் வீட்டில் தித்திப்பே பண்ணுவதில்லை. அவரோட பிறந்த நாளைக்கு மட்டும் கொஞ்சமா சேமியாப் பாயசம் வைப்பேன்/இந்த வருஷமும் வைத்தேன். விரதம்னு இருந்தது எல்லாம் சுமார் 20,25 வருடங்கள் முன்னர். அப்போ ஒரு தரம் செவ்வாய்க்கிழமை விரதம், கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் என அடுத்தடுத்து வர உடல்நிலை மோசமானதில் மருத்துவர் எச்சரிக்கையின் பேரில் விரதங்களைக் கைவிட்டாச்சு. ஏகாதசி அன்று கூடக் காலை ஹார்லிக்ஸ் குடிச்சுட்டு மத்தியானம் சாப்பாடு/ராத்திரி ஏதேனும் டிஃபன்/அநேகமாய்ச் சப்பாத்தி. உணவில்லாமல் வயிற்றைக் காயப்போடுவதில்லை. இல்லைனா பழங்கள் எடுத்துப்போம். அன்னாசி, கொய்யா, பப்பாளி, மாதுளை, ஆரஞ்சுப் பழம் போன்றவை தான்

   நீக்கு
  3. கருத்துப் பரிமாற்றங்களுக்கு இருவருக்கும் நன்றி.

   நீக்கு
 29. குழந்தைகளை பொறுத்த வரை எல்லா வீட்டு உபயோகப் பொருளையும் சற்று கவனமாகத்தான் பயன்படுத்த வேண்டும். தலைகாணி, மெத்தை அதிகம் பயன்படும். ஷார்ப்பான பொருள்கள்,மி உபகரணங்கள், செல்போன் போன்றவை  ஆபத்தானவை. 

  பதிலளிநீக்கு
 30. மரத்தால் ஆன குழவிதான் என் சாய்ஸ்! மஸ்கட்டில் ஒரு மர குழவி கிடைக்கும். அது நடுவில் இருக்கும் பாகம் உருளும்,எனவே நாம் தேய்க்க வேண்டாம். மாவின் மீது வைத்து இரண்டு பக்கங்களையும் அசைத்தால், நடு பாகம் உருண்டு, சப்பாத்தியை பரத்தி விடும்.   

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு சப்பாத்தி பண்ணுவதற்காக மஸ்கட்டுக்குப் போகச் சொல்லும் தைரியம் இந்த பானுமதி வெங்கடேச்வரன் மேடத்திற்குத்தான் உண்டு. நல்லவேளை பாகிஸ்தான் மாவில், மஸ்கட் குழவியில், பிரேசில் gக்ரானைட் கல்ல என்று சொல்லாமல் போனாங்களே

   நீக்கு
  2. தகவலுக்கு நன்றி பா வெ மேடம்.
   நெ த : :)))))

   நீக்கு
 31. வீட்டில் யாருக்கோ உடல் நலம் குன்றியிருக்கும் பொழுது, புதிய மருத்துவ முறைகளை யாரவது சிபாரிசு செய்யும் பொழுது..சாரி ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை என்பேன். 

  நான்காவது கேள்வி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். இப்போக் கூட நான் கால் வீக்கத்துடன் படுத்திருக்கையில் ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சிபாரிசு செய்தார்கள். ஆர்த்தோ/நரம்பு மருத்துவம்/ரெய்க்கி/அக்குபங்க்சர்/வாஸ்குலர் சர்ஜன்/ஹோமியோபதி என எல்லாமும் சொன்னார்கள். ஒரு சிலர் ரெய்க்கிக்கும் அக்குபங்க்சருக்கும் வற்புறுத்தினார்கள். நான் ரிஸ்க் எடுக்கத் தயாராய் இல்லை. :(

   நீக்கு
  2. ஆம், உடல் நல விஷயத்தில் ரிஸ்க் எடுக்கமுடியாதுதான். நம் உடல் நிலை பற்றி நமக்குத்தான் தெரியும் - மற்றவர்களுக்கு அதை உணர முடியாது.

   நீக்கு
 32. முதல் படம்: "டேய்! வாலாட்டாத, உதை படுவ.."
  இரண்டாவது படம்: என் பின்னாலேயே வாங்க, நமக்குத் தேவையானது அங்க இருக்கு.."
  மூன்றாவது படம்: "எங்கேயோ பால் வாசனை அடிக்குதே.."

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் சகோதரரே

  நான் இன்று வீட்டில் கொஞ்சம் வேலைகள் அதிகமானதால் தாமதம். (அனைவரின் பதிவுகளுக்குமே.. ) மன்னிக்கவும்.

  இன்றைய கேள்வி பதில்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. திருமணமானதிலிருந்து கணவன் மனைவியின் அன்பை புரிந்து கொண்டு அதற்கு ஈடாக அவளிடம் அன்பு செலுத்தி வந்தாலே, அதே போல், மனைவியும் கணவனை புரிந்து கொண்டு எந்த காலகட்டத்திலும் அன்புடன் நடத்தி வந்தாலே பரஸ்பரம்,விட்டுக் கொடுக்கும் உணர்வுகளும், நாலு பேர் மத்தியில் புரிந்து நடந்து கொள்ளுதலும் தானாகவே வந்து விடும்.

  எங்களிடம் கேட்ட கேள்விகளும் அருமை.

  1.பண்டிகைகளை இதுவரை கற்றுத்தந்த பெரியவர்களின் ஆலோசனைகளின்படிதான் கொண்டாடி வருகிறேன்.குழந்தைகளையும் அப்படியே வளர்த்தாகி விட்டது. இப்போது சில காலமாக இளைய தலைமுறைகளின் சில சந்தர்பங்களுக்கு அவர்களையாவது கட்டுப்படுத்தாமலும் இருக்க கற்றுக் கொள்கிறேன். சமயத்தில் நாம் நாணலாக வளைவது யாருக்கும் சிரமம் தராமல் இருக்குமில்லையா?

  2.சப்பாத்தி இடுவதற்கு மரக்குழவிதான் சிறந்தது.

  3.குழந்தைகளுக்கு நன்மை தரும் பாத்திரங்களை அவர்களுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

  4.வெளியில் எங்கும் தனியாகச் செல்வது அம்மா வீட்டில் இருக்கும் போதிலிருந்தே பழக்கமாகவில்லை. இப்போதும் ரிஸ்க் எடுக்க முடியாமல் காலம் கடக்கிறது.

  5.நாலாவது கேள்விதான் இன்னமும் யோசிக்க வைக்கிறது "ஒருநாள் தனியாகத்தானே செல்ல வேண்டும். என்ன பயம் உனக்கு..?" என அது கேள்வியை எப்போதுமே தொடுத்து யோசிக்க வைக்கிறது.

  குந்தைகளின் படங்கள் அழகு.

  1.குட்டிக்குரங்கு சேட்டையில் படு கில்லாடி போலிருக்கிறது.

  2.ஆட்டுக்குட்டிகள் குழந்தையை தங்களது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு விட்டன.

  3.நான் தூங்கும் போது நீயும் தூங்க கூடாதா? இப்போது என்னுடன் விளையாட யார் இருக்கிறார்கள? சரி நீ தூக்கம் கலைந்து கண் விழித்து வரும் வரை நான் கண் கொட்டாமல் காத்திருக்கிறேன் என்கிறது பூனையார்.

  இன்றைய பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தட்டச்சில் தவறு வந்து விட்டது. திருத்தம்.
   குழந்தைகளின் படங்கள் அழகு. நன்றி.

   நீக்கு
  2. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 34. கேள்விகளும் பதில்களும் அருமை.


  திருமணம் ஆகி விட்டால் பெண்கள் புகுந்த வீட்டு வழக்கபடிதான் பண்டிகை விழாக்களை கொண்டாட வேண்டும் என்று சொல்வார்கள். அது போல்தான் எங்கள் வீட்டில் கொண்டாடி வந்து இருக்கிறோம்.

  குழந்தைகளுக்கு வளரும் வரை அவர்களை கவனித்து கொண்டு தான் இருக்க வேண்டும். எங்கள் பக்கம் குத்துவிளக்கு இருக்கும் மாடத்திற்கு கதவு போட்டு இருப்பார்கள். விளக்கு கனமாக வெண்கலத்தில் இருக்கும் குழந்தை தவழும் போது அதை பிடித்து கொண்டு நின்றால் குழந்தைக்கு ஆபத்து.

  தவழும் குழந்தை எல்லா வற்றையும் வாயில் வைக்கும், இழுத்து போடும். தரையில் எந்த பொருளும் இல்லாமல் தவழும் வதை பார்த்து கொள்ள வேண்டும்.
  ஒவ்வொரு பருவத்திலும் கவனிப்பு அவசியம் ஆகிறது. நல்லது , கெட்டது தெரியும் வரை.

  மாமியார் ஆக்ராவிலிருந்து வாங்கி வந்த வெள்ளை சலவைகல் சப்பத்திக்கல், குழவி மரக்குழவி இரண்டும் இன்னும் வைத்து இருக்கிறேன். ஐந்து மருமகளுக்கும் அத்தை அவர்கள் வாங்கி தந்தார்கள். (கூடுதல் தகவல் அத்தை ஆக்ரா போன போது மூன்று மகனுக்கு தான் திருமணம் ஆகி இருந்தது.)


  பதிலளிநீக்கு
 35. "ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல்" என்று வடிவேலு சொல்வது போல முடியுமா நம்மால்?

  முதல் கேள்விதான் யோசிக்க வைக்கிறது. இப்போது பண்டிகை, விழாக்கள் எல்லாம் நிறைய மாற்றங்களை பெற்று வருகிறது. வயதானவர்கள் பழைய மாதிரி செய்ய முடியாமலும், புதுமையை ஏற்றுக் கொள்ள முடியாமலும் இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 36. "அம்மா உன் வாலைபிடித்து கொண்டு ஏறுகிறேன்"

  ஆட்டுக்குட்டிகள் தொடர்கின்றன செல்லக்குட்டியை

  கண்மணி தூங்க தாலாட்டும் வளர்ப்பு செல்லபூனைக்குட்டி.

  பதிலளிநீக்கு
 37. 1)பண்டிகைகள் எமது வசதிப்படிதான்.
  2)சப்பாத்திக்கு மரம்தான்.
  3) குழந்தைகள் பாதிப்பானவை அவர்கள் விளையாடும் பொருட்களை அவமானமாக தெரிந்து வாங்கவேண்டும். வீட்டுப் பொருட்கள் ஆபத்தானவையை அவர்கள் கைக்கு எட்டாத இடத்தில் இருக்க வேண்டும் .எந்நேரமும் குழந்தையை கண்காணித்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
  4) வங்கி லோன் வாங்குவோருக்கு கைஎழுத்துவைத்துக் கொடுப்பது. சுட்டுக்கொண்ட அனுபவம் உண்டு.
  5)நாலுதான் யோசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
 38. விளையாடும் பொருட்கள் அவதானம் என்று வரவேண்டும்.
  வாயில் கடித்து உள்ளே முழுங்காமல் இருக்கவேண்டும். உடல் நலத்துக்கு ஏற்றபொருளாகவும் இருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளக்கம் அளித்ததற்கு நன்றி. அவமானம் என்பதைப் படித்து குழம்பியிருந்தேன்.

   நீக்கு
 39. கேள்வி பதில்கள் நன்றாக இருந்தன.

  படங்களை ரசித்தேன்

  4. எதிலுமே ரிஸ்க் எடுகக்த்தயங்குவேன். ரொம்ப யோசிப்பேன். என்பதால் இந்தக் கேள்வியே யோசிக்க வைத்தது எனலாம்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 40. கருத்து பதிவு செய்தவர்கள், கேள்வி கேட்டவர்கள், கருத்துகளுக்கு மறு கருத்துப் பதிந்தவர்கள், எல்லோருக்கும் எங்கள் நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!