திங்கள், 25 அக்டோபர், 2021

"திங்க"க்கிழமை : பாசிப்பருப்பு/பயத்தம்பருப்பு இட்லி - கீதா ரெங்கன் ரெஸிப்பி

 எபி வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். மறுபடியும் மகிழ்வுடனே உங்களை எபி அடுக்களையில், நல்ல சத்தான ஒரு காலை உணவுடன் சந்திக்கிறேன். பயத்தம் பருப்பு/பாசிப்பருப்பு இட்லி. சில மாதங்கள் முன் ஒரு முறை இதைச் செய்த போது நம் ஸ்ரீராமின் பாஸிடம் வாட்சப் வழி பேசிக் கொண்டிருந்த போது

“பாசிப்பருப்பு இட்லியா? எப்படிச் செய்வீங்க குறிப்பு ப்ளீஸ்” என்று கேட்கவும்,

“திங்க' வுக்கு அனுப்ப குறிப்புகள் அனுப்பறப்ப படங்களோடு உங்களுக்கும் அனுப்புகிறேன்”

என்று சொல்லி அடுத்த முறை செய்த போது நினைவாகப் படங்கள் எடுத்துக் குறிப்பும் எழுதி பெட்டி போட்டாச்சு. உடனே படங்களை மட்டும் பாஸுக்கு வாட்சப்பில் அனுப்பினேன் (உங்க வீட்டுல எல்லாருக்கும் இது பிடிக்குமான்னு தெரியலை என்ற குறிப்புடன்!!!!!) ஆனால் பதிவு எழுதாமல் வழக்கம் போல் அப்படியே கிடப்பில் இருந்தது. நமக்குத்தான் சுட சுட அனுப்பிப் பழக்கமே இல்லையே!!!

அதன் பின் அனுப்ப முடியாமல் சில சூழல்கள். இப்போது மீண்டும் கணினியில் உட்கார்ந்த போதுதான் நினைவு வர உடனே அனுப்பிவிட்டேன். ஆனால் திங்க வில் வரும் போது இன்னும் தாமதமாகலாம்!!!!!!

பெட்டியில் எல்லா குறிப்புகளும் இருப்பதால் இங்கு அதிகம் சொல்லவில்லை காரணம் அடுத்து ஒரு வித்தியாசமான உணவுக் குறிப்பு. அதற்குக் கொஞ்சம் பதிவில் சில சொல்ல வேண்டும் என்பதால்.எபி ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி! கருத்திடும் நட்புகள், அமைதியாகக் கடந்து செல்லும் அனைவருக்கும் அன்புடன் நன்றி! அடுத்து ஒரு வித்தியாசமான உணவுக் குறிப்புடன் சந்திப்போம்.

30 கருத்துகள்:

 1. காலை வணக்கம் அனைவருக்கும்.

  பாசிப்பருப்பு இட்லி எங்க வீட்டில் மகனுக்காகச் செய்வார்கள். நானும் படங்கள் எடுத்து வைக்கச் சொல்லியிருந்தேன்.

  இட்லி தட்டிலேயே வார்த்து எடுத்துவிடுவோம்.

  நல்ல செய்முறை.

  பதிலளிநீக்கு
 2. எங்க வீட்டில் மிளகு சுக்குப்பொடி சீரகம் கோட்ட நினைவு இல்லை. ஒருவேளை கீதா ரங்கன், காஞ்சீபுரம் இட்லிக்கும் பாசிப்பருப்பு இட்லிக்கும் ஃப்யூஷன் செய்யறேன்னு கன்ஃப்யூஷன் ஆயிட்டாங்களா?

  பதிலளிநீக்கு
 3. இதுக்கு சட்னி, மி பொடி இவற்றில் எது சரிப்படும்? பையனுக்கு பாசிப்பருப்பு பிடிக்கும் என்பதால் இது போணியாகும். நான் சாப்பிட்டதில்லை.

  தட்டே இட்லி தட்டில் இட்லி வார்த்தபோது அதே சாஃப்ட்னெஸ் வரவில்லை. பா பருப்பு இட்லியும் தட்டில் வார்த்தால் சரியா வராதோ?

  பதிலளிநீக்கு
 4. பாசிப்பருப்பில் தோசை செய்து இருக்கின்றேன் ஆனால் இட்லி செய்தது இல்லை... நேரம் கிடைக்கும் போது செய்து மாமிக்கு தரணும்.. ஹெல்தி இட்லி என்று சொன்னால் ஒருவேலை நல்லா இல்லையென்றாலும் சத்தம்மில்லாமல் சாப்பிட்டுவிடுவார்கள் ஹீஹீ சமையல் குறிப்புக்கு நன்றி கீதா ரெங்கன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செங்கோட்டை துரை பலப் பல வருடங்களுக்குப் பின் பார்ப்பதுபோலத் தோணுது

   நீக்கு
  2. வேலையில் பிஸி அதுமட்டுமல்ல போன வாரம் பெண்ணை அவர் வசிக்கும் மாநிலத்திற்கு போய் கூட்டி வந்து திரும்பி போனேன் இந்த வார இறுதியில் மனைவியின் சகோதரி வீட்டிற்கு வந்து இருக்கின்றேன் அதனால்தான் இணையத்திற்கு அதிகம் வரவில்லை

   நீக்கு
 5. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 6. பாசிப்பருப்பு இடலி நன்றாக இருக்கிறது.
  செய்முறை படங்கள் அருமை.
  குறிப்புகள் நன்றாக இருக்கிறது. புளித்த தயிர் இருக்கும் போது செய்யலாம்.

  மாமியார் அவர்கள் செய்முறையும்,உறவினர் செய்முறையும் நன்றாக இருக்கிறது.
  ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு செய்முறையில் செய்யலாம்.

  நன்றி கீதா ரெங்கன்.


  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  என்றும் எல்லோரும் நோய் இல்லாத ஆரோக்கிய வாழ்வு பெற
  இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. புளிப்புத் தயிரில் ஊறவைத்த பாசிப்பருப்பு இட்லி
  புதிதாக இருக்கிறது.
  மீண்டும் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. எல்லா ஆப்ஷனும் கொடுத்து கீதா ரங்கன் செய்திருக்கும் முறை நன்றாக இருக்கிறது.

  முதல் நாள் இரவே ஊற வைத்து
  அடுத்த நாள் அரைக்கலாமோ.

  கூடவே நெய் சேர்ப்பதுதான் மிகவும் பிடித்திருக்கிறது.

  நல்ல வாசனையோடு இருக்கும்.இஞ்சி, சுக்கு, தயிர்,நெய்
  பெருங்காயம், தேங்காய் என்று
  ஏகப்பட்ட சுவையான சமாசாரங்கள்.

  படிக்கவே நன்றாக இருக்கிறது. மீண்டும் வரப் பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் கீதாரெங்கன் சகோதரி

  இன்றைய திங்களில் தங்கள் செய்முறையான பாசிப்பருப்பு இட்லி நன்றாக உள்ளது. விளக்கமாய் ருசிகரமான செய்முறைகளுடன், படங்களும் தந்துள்ளீர்கள். அம்மா, மாமியார், உறவினர் என அனைவரின் பக்குவங்களையும் அளவுகளின் துல்லியத்தோடு குறிப்பிட்டு சொன்னது அருமை. முழு கருப்பு உளுந்து போட்டு செய்வோம். இட்லி கொஞ்சம் கருப்பு கலரில் வரும். ஆனால் உடம்புக்கு நல்லது. அதுபோல் சக்தி தரும் பயத்தம் பருப்பு இட்லியும் உடம்புக்கு நல்லதுதான். இதுவரை செய்ததில்லை. இனி இந்த முறையில் செய்து பார்க்கிறேன். அத்தனை பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் நாட்கள் அமைதியாகவும் மன மகிழ்வோடும் இருக்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 13. பாசிப்பருப்பு இட்லி நிறையச் செய்தாச்சு. அரிசி+உளுந்து சேர்த்தும்/சேர்க்காமலும். தனிப்பாசிப்பருப்போடு வெந்தயத்தைச் சேர்த்து ஊற வைத்து முதல்நாளே அரைத்துப் புளிக்க வைத்தும் செய்திருக்கேன். காரட், கொத்துமல்லி, தேங்காய்த் துருவல், மிளகு, ஜீரகப் பொடி, இஞ்சி, பச்சைமிளகாய் தாளித்துச் செய்திருக்கேன். அநேகமாகத் தொட்டுக்க வெங்காய கொத்சு தான் பண்ணுவேன். முன்னே எல்லாம் போணி ஆகிக் கொண்டிருந்தது. இப்போல்லாம் போணி ஆவதில்லை. அதே போல் பாசிப்பருப்பு தோசையும். தோசையாகவும் வார்த்திருக்கேன். அடைக்கு அரைக்கிறாப்போல் அரைச்சும் பண்ணி இருக்கேன். தோசை/அடை போணி ஆயிடும். இட்லி அவ்வளவாப் பிடிக்கலைனு சொல்லிடுவார். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கீதா ரங்கன்(க்கா) பாசிப்பருப்பு இட்லி செய்யப் போயிருக்காங்களா இல்லை இன்னும் ரெண்டு ரெசிப்பிக்கள் செய்து, படங்களை கொலாஜ் செய்து அனுப்பறதுல பிஸியா இருக்காங்களா? ஆளையே காணோமே..

   அதுக்காக கீதா என்ற பெயர் வைத்தவர்களெல்லாம் எப்போ வருவாங்கன்னே கணிக்க முடியாது என்று எழுதமாட்டேன்..

   நீக்கு
  2. ஹாஹா, முன்னெல்லாம் ஓர் ஒழுங்கோடு எழுந்து கொண்டு வேலைகளை அடுத்தடுத்துப் பார்ப்பேன். இப்போல்லாம் காலையில் எழுந்திருப்பதே கொஞ்சம் முடியறதில்லை. தாமதமாகத் தான் எழுந்துக்கறேன். ஆகவே வீட்டு வேலைகளுக்குத் தான் முன்னுரிமை. அதன் பிறகே நேரம் கிடைக்கையில் இணையத்திற்கு வருகிறேன். தி/கீதாவுக்குக் கணினி மறுபடியும் பிரச்னை என்றார்.

   நீக்கு
 14. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 15. சிறு தானியங்களிலேயும் இட்லி இந்த மாதிரியும் செய்யலாம். சாதாரணமாய் இட்லிக்கு அரைப்பது போல் அரைத்தும் செய்யலாம். சில ஆண்டுகள் முன்னர் சிறுதானிய இட்லிக்குப் பதிவும் போட்டிருந்தேன். இப்போ நம்ம வீட்டில் கஞ்சி சீசன்! ஆகவே நோ சிறு தானியம்!

  பதிலளிநீக்கு
 16. தி/கீதா சொல்லி இருக்கும் அனைத்து முறைகளிலும் பண்ணினால் நன்றாகவே இருக்கும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்பப் பண்ணிக்கலாம். சுவையான குறிப்பைக் கொடுத்த தி/கீதாவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. ஒவ்வொன்றாக விளக்கத்துடன் செய்முறை படங்களுடன் சொன்னது அருமை... பாராட்டுகள்...

  பதிலளிநீக்கு
 18. படங்களும் விளக்கங்களும் நன்று.

  பதிலளிநீக்கு
 19. அனைவரது கருத்திற்கும் மிக்க மிக்க நன்றி. கணினி மீண்டும் வேலை செய்யவில்லை.அதனால் பதிவுகளுக்கு வர இயலவில்லை.

  நெல்லை இந்த ரெசிப்பியை இட்லி தட்டிலும் செய்யலாம். நீங்கள் கடைசி வரை பார்க்கலியோ ஹிஹிஹிஹி..

  வல்லிம்மா முதல் நாளே ஊற வைத்தும் அரைக்கலாம் ஆனால் புளித்தால் நல்லது. குறிப்பாக உளுந்து அரிசி பா ப சேர்த்து செய்வது நார்மல் இட்லி செய்வது போலச் செய்யலாம்.

  நெல்லை, தட்டே இட்லி மிக நன்றாக வரும் மென்மையாக அதற்கு நீங்கள் வழக்கமாகச் செய்யும் இட்லி மாவல்ல. தட்டே இட்லி செய்ய தனி குறிப்பு. மேலும், கொஞ்சம் ஈஸ்ட், சோடா உப்பு போட்டால்தான் ஹோட்டலில் கிடைப்பது போல டெக்சரோடு வரும்.

  மீண்டும் அனைவருக்கும் உங்கள் கருத்திற்கும் மிக்க மிக்க நன்றி. ஒவ்வொருவருக்கும் தனி தனியாகக் கொடுக்க முடியவில்லை...பொருத்துக்கோங்க ப்ளீஸ்

  கீதா

  பதிலளிநீக்கு
 20. அருமையான விளக்கங்கள்.. செய்முறை குறிப்புகள்..
  அழகான படங்கள்..
  அருமை.. அருமை..

  நல்வாழ்த்துகள்...

  வாழ்க நலமுடன்..

  பதிலளிநீக்கு
 21. பெசரெட் தோசை மாவை இட்லியாக பார்ப்பதைத் தான் சொல்லப் போகிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் வித்தியாசமான ரெசிபியாக இருக்கிறது. ஆனால் எங்கள் வீட்டில் இட்டிலிக்கு ஆதரவு குறைச்சல். பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 22. என்ன 26 கருத்துரைகள் மட்டுமே? பாசிப்பருப்பு இட்லி யாருக்கும் பிடிக்கலையா என்ன? !!!!!!!!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி இல்லை.  கீதா ரெங்கனால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாய் பதில் சொல்ல முடியாமல் அவர் கணினி கடுப்பேற்றுகிறது.

   நீக்கு
  2. நான் சொல்லுவது எங்கள் ப்ளாக் ரசிகப் பெருமக்களை ஶ்ரீராம்!

   நீக்கு
 23. சிறப்பான குறிப்பு. பாசிப்பருப்பு இட்லி சுவைத்ததுண்டு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!