திங்கள், 18 அக்டோபர், 2021

சில்லி பனீர் - சியாமளா வெங்கட்ராமன்

 

சில்லி பன்னீர்சில்லி பன்னீர் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று .

ரெ ஸ்ட்ராரென்ட்  சென்றால் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சில்லி பன்னீர் ஆர்டர் செய்வார்கள் .  வீட்டில் ஏதாவது விசேஷம்பிறந்தநாள் பார்ட்டி மற்றும் நியூயர்ஸ் பார்ட்டி ஆகியவற்றிற்கு விருந்துகளில் முதலிடம் வகிப்பது சில்லி பன்னீர் தான்   இதை செய்வதில் என் மருமகள் expert .அவளிடம் இதை கற்றுக்கொண்டேன்   இங்கிலாந்தில் இது இல்லாமல் ஒரு பார்ட்டியும் இல்லை ..இதை சுலபமாக வீட்டில் செய்யும் முறையை கூறுகிறேன் .  நீங்களும் செய்து விருந்தினர்களை அசத்துங்கள். 


தேவையான பொருட்கள்: 


பன்னீர் --------------------------------------------------------- முன்னூறு கிராம்

cornflour ----------------------------------------------------------இரண்டு டேபிள் ஸ்பூன்

குடைமிளகாய் பச்சை,மஞ்சள் ,சிகப்பு -----------தலா ஒன்று ஆக மூன்று

பெரிய வெங்காயம் ----------------------------------------நான்கு

இஞ்சி -------------------------------------------------------------இரண்டு அங்குல நீளம்

பூண்டு --------------------------------------------------------------பத்து பல்

பச்சைமிளகாய் ---------------------------------------------------இரண்டு

எண்ணெய் -----------------------------------------------------------இரெண்டு டேபிள் ஸ்பூன்


செய்முறை : 

கார்ன் flour மாவை ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.

பன்னீரை இரண்டு சென்டிமீட்டர் அளவு cube சதுரமாக நறுக்கவும்.

கால் ஸ்பூன் மிளகு பொடி போடவும்.

கார்ன் மாவு ,மிளகுப்பொடி சேர்த்து பன்னீர் துண்டுகளை பிசறி பத் து  நிமிடம்

ஊற வைக்கவும் 

பின் எண்ணெய்யில் வறுத்து எடுக்கவும் 

இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் மூன்றையும் நன்றாக மசியஇடித்து  எடுக்கவும் 

வெங்காயம் குடைமிளகாய் இவைகளை ஒரு சென்டிமீட்டர் நீள அகலம்

உள்ள துண்டுகளாக நறுக்கவும்.

இஞ்சி ,பூண்டு மிளகாய் கலவையை எண்ணெய் விட்டு வதக்கவும்.

அத்துடன் கறிகாய் துண்டுகளை போட்டு முக்கால் வேக்காட்டில் வதக்கி எடுக்கவும்.

அதில் டொமட்டோ சாஸ் (tomatto sauce) , சில்லி சாஸ் (chilli sauce) ,சோயா சாஸ் (soya sauce) மூன்றும் தலா  ஒரு டேபிள் ஸ்பூன்

ஊற்றி கலந்து பின் வறுத்த பன் னீரைசேர் நன்றாக கலந்து வைக்கவும்.

அத்துடன் கொத்தமல்லி தழையை தூவவும்.

அழகான நிறத்துடன் சில்லி பன்னீர் ரெடி

= = = = =

25 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோரும் எல்லா நாட்களும்
  ஆரோக்கியம், அமைதி,ஆனந்தம் அடைந்து
  நலமாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. மிக நல்ல ரெசிபி.
  அருமையான முறையில் விளக்கி இருக்கிறார் திருமதி ஸ்யாமளா
  வெங்கடராமன்.

  பன்னீர் சுவையான பண்டம்.
  அதை இத்தனை அருமையாக மசாலா சேர்த்து செய்யும் போது
  அருமையாகத்தான் இருக்கும்.
  நன்றியும் வாழ்த்துகளும் மா.
  நன்றி கௌதமன் ஜி.

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்

  ஆஹா அருமையான டிஷ் இன்று. நன்றாக இருக்கிறது சொன்ன விதமும்.

  எப்போதேனும்தான் செய்கிறேன் இப்போதெல்லாம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம் அனைவருக்கும்.

  சில்லிபனீர் செய்முறை அருமை. சுலபமும்கூட.

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 6. சில்லி பனீர்/கடாய் பனீர் என்னும் பெயரில் முன்னெல்லாம் அடிக்கடி பண்ணி இருக்கேன். ஆனால் என்னிடம் இந்த சாஸ் வகையறா எல்லாமும் இருக்காது. அதிலும் சோயா சாஸ் வாங்கினதே இல்லை. :) மற்றபடி இதே செய்முறை தான். இப்போப் பனீரே வாங்குவது இல்லை.

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான இனிய காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  இன்றைய ரெசிபி சில்லி பனீர் செய்முறை விளக்கமாக நன்றாக உள்ளது. சில பொருட்கள் என்னிடம் இல்லாவிட்டாலும்,(சாஸ் வகையறா) இதைப்போல் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. அருமையான ரெசிபியை பகிர்ந்த சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள். உங்களது பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 10. நார்மலாக நாம் ரிசிப்பி போடும் போது நறுக்குங்கள் வதக்குங்கள் கட் செய்து கொள்ளுங்கள் என்றுதான் எழுதுவோம் ஆனால் சியாமளா வெங்கட்ராமன் அவர்களின் குறிப்பில்


  கரைத்து கொள்

  சதுரமாக நறுக்கு

  போடு

  ஊற வை

  வறுத்து எடு என்று வீட்டில் உள்ள சின்னம் சிறுசுகளுக்கு சொல்வது போல சொல்லி இருக்கிறார். ஒரு வேளை இங்கு வரும் அனைவரையும் சின்னம் சிறுசுகள் என்று நினைத்து எழுதி இருக்கிறாரோ என்னவோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலையில் இருந்து யோசித்துக் கொண்டிருந்தேன்...

   நீங்கள் சொல்லி விட்டீர்கள்..

   பதிப்பித்தவர்களாவது இதனைக் கவனித்து சரி செய்திருக்கலாம்!..

   நீக்கு
  2. நானும் கவனித்தேன். ஆனால் சொல்லலாமா எனத் தயக்கம். இப்போதெல்லாம் முன்போல் சட்ட்னு எதையும் சொல்லத் தயக்கமாக இருக்கிறது. ஆகையால் தான் நானும் சொல்லவில்லை. :(

   நீக்கு
  3. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்திருக்கலாமோ என்னமோ!

   நீக்கு
  4. ஹா..  ஹா..  ஹா...   அவர் தலைமை ஆசிரியையாக இருந்தவர் என்று கேள்விப்பட்ட நினைவு!  எனவே அப்படி எழுதி விட்டார் போலும்.   பதிப்பித்தவர் இப்போது திருத்தியாச்....!

   நீக்கு
  5. வாசகர்கள் அனுப்புகின்ற சமையல் பதிவுகளில் நான் திருத்தங்கள் எதுவும் செய்வதில்லை. அப்படி அப்படியே விட்டுவிடுவேன். எது அவர்களுக்குத் தோன்றியதோ அதை அவர்கள் பாஷையிலேயே சொல்லட்டும் என்று இருந்துவிடுவேன். (இன்னும் பார்க்கப்போனால் - நான் அவற்றைப் படித்துப் பார்ப்பதுகூட இல்லை! - கதைகளை மட்டும்தான் படித்து, படம் வரைவதற்கு ஏற்ற காட்சி எதுவும் சொல்லப்பட்டிருக்கிறதா என்று ஆராய்வேன். சில சொற்களை திருத்த வேண்டும் என்றால், திருத்துவேன். அவ்வளவுதான்!)

   நீக்கு
 11. நல்ல செய்முறை.

  குடமிளகாய் சேர்த்ததில்லை. செய்து பார்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. நன்றாக இருக்கிறது,
  சில்லி பனீர் படமும், செய்முறையும்.

  பதிலளிநீக்கு
 13. சுவையான குறிப்பு. வீட்டில் செய்வதில்லை என்றாலும் நிகழ்ச்சிகளில் இங்கே சுவைத்தது உண்டு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!